- வி.சே என்ற நடிகர் எப்போ எனக்கு தெரிய வந்தார். "thuru" குறும்படம் பார்த்த போது, எனக்குள் தோன்றியது "அட இவர் ரொம்ப நடிக்குறார் பா!"
அன்று சொன்னது போல் தான், முதலில் அவர் சிரிப்பு! புன்னகை.
ஏதோ ஒன்னு பண்ணது!
- மக்களுக்கு பிடிச்ச மாதிரி....சரி சரி....எனக்கு பிடிச்ச மாதிரி திரையில் வரும் விஜய் சேதுபதி. நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் அவர் நடிக்கும் விதம் ஏதோ ஒன்னு பண்ணது!
- அவர் கொடுக்கும் பேட்டிகளிலும் சரி, அவரை பற்றி மற்றவர் பேசும்போதும் சரி, வி.சே ரொம்ப 'shy type' ஆளு. ஆனா, அந்த பழக்கத்தை மாற்ற தான் நடிக்க வந்ததாக சொன்னார்கள். இதுவும் இன்னொரு காரணம். basically i am a shy type girl என்பதால் வி.சே போன்றவர்களை ரொம்ப பிடிக்கும்.
- வித்தியாசமான முக பாவனைகள். சமீபத்தில் வந்த காதலும் கடந்து போகும் படத்தில், இரண்டு காட்சிகளில் இதை பார்த்தேன்.
"நாயா?" என்று பதில் சொன்ன விதமும்.......ப்பா!!!!!!!!!
- கூட மேல கூட வச்சு பாடல்: இப்பாடல் யூடியுப்ல மட்டும் கிட்டதட்ட 55 லட்சம் வீயுஸ் கிடைச்சுருக்கு. அதில் பாதி என்னால தான் இருக்கும்னு நினைக்குறேன். ஏனா, இப்பாடலை எடிட்டு செய்தவரைவிட, நான் இப்பாடலை அதிக முறை பார்த்து இருப்பேன். இப்பாடலும் இன்னொரு காரணம்.
வி.சே பிறந்த நாளுக்கு கவிதை கூட எழுதியிருக்கேன் பாருங்க....காட்டு தாடி உன் அழகில்லைசேட்டு பையன் கலர் இல்லைஇருந்தும் கனவுகள் முழுதும்நீ வராத நாள் இல்லை.நீ ம்ம் என்று சொல்லி பார்உன் கூடவே வருவேன்.என் எடை ஒத்துழைத்தால்அந்த கூடலூர்கூடையில்கூடவருவேன்!
1 comment:
Post a Comment