May 14, 2016

ஜஸ்ட் சும்மா: 24, சரவணா ஸ்டோர்ஸ், பக்கோடா, மருது வருது!

"24" படத்தை ரெண்டு தடவ பார்க்கும் வாய்ப்பு (பணப்பைக்கு ஆப்பு) கிடைத்தது. சிங்கையில் ஒரு டிக்கெட் விலை S$17. சாதரணாமாக 10,12 தான் இருக்கும். இப்படி விலைவாசி ஏகுறும் நேரமோ என்னமோ தெரியல, படம் பார்ப்பது எல்லாம்  மக்களுக்கு கிடைக்காத ஒன்றாக போய் கொண்டிருக்கிறது.

சரி, கதைக்கு வருவோம். 24 படம், ஒரு தடவ தோழிகளுடனும், இன்னொரு தடவ குடும்பத்துடனும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரெண்டாவது முறை பார்த்தாலும், சலிப்பு தட்டவில்லை. சூர்யாவின் உண்மையான 'ஒன்றை டன் வேட்-டு" படம் இது தான்.

ஆத்ரயா இன்னும் கொஞ்சம் காலத்துக்கு meme ராஜாவாக இருப்பார் (கபாலி வரும் வரை). அப்படி ஒரு கதாபாத்திரம்!

ஆத்ரயா கூட வரும் மித்ரன் கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு என் அம்மா, திரைப்படம் பார்த்து கொண்டிருக்கும்போது காதோரமாய், "இந்த மித்ரனும் சூர்யா தானே" என்று கேட்க, சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தை பார்த்த ஷாக்.

மித்ரன் வேற ஆளு மா! என்று சொல்லி புரிய வைக்க வேண்டியதாய் போச்சு. இப்படி நிறைய கதாபாத்திரங்கள் ஒரே படத்தில் செய்யும் போது ஏற்படும் சிக்கல் இது தான்! சமாந்தாவின்  'imaginoromansophilia" மாதிரி நமக்கும் எல்லாருமே சூர்யாவாக தெரிகிறார்.

********************************************************

அட எனக்கு சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வருபவர்கூட அடுத்த சூர்யாவாக தான் தெரிகிறார்.




இவர் கடையில் ஊழியர்களை நடத்தும் விதத்தை படித்த பிறகு, இவரை டிசைன் டிசைனாக கிண்டல் செய்வதில் தவறே இல்லை என்று தோன்றியது.

தமன்னா ஒரு பக்கம், ஹன்சிகா இன்னொரு பக்கம் என்று நிற்கையில், பல கோடி பேருக்கு வயித்தெறிச்சல் வந்தாலும் பல்லு இருப்பவனுக்கே பக்கோடா கிடைக்கிறது என்பதில் எள்ளு அளவும் சந்தேகமில்லை.

இன்று காலையில் ஒரு கனவு,

"காயத்ரி ஸ்டோர்ஸ்" என்று 8 மாடி கட்டடம். விளம்பரத்தில் நிவினும், துல்கரும் வருகிறார்கள். நடுவில் நான்,




மலையாளம் கலந்த தமிழில், அவர்கள்,
"காயத்ரிக்கு வாங்க,
கவலைய மறந்து போங்க" 


என்கிறார்கள்.


********************************************

விஷால் படத்தை இந்த அளவுக்கு எதிர்பார்த்ததில்லை. என்னமோ தெரியில, ரொம்ப நாள் ஆச்சு, செம்ம கிண்டலா ஒரு பதிவு எழுதி, அதற்கு சரியான திணி வந்து விட்டது என்ற மகிழ்ச்சி! (கபாலி குரலில் இச்சொல்லை உச்சரிக்கவும்!)


No comments: