May 1, 2016

கபாலி டீசர்- சொல்லுங்க சொல்லுங்க நீங்க மலேசியாவில் என்னவா இருந்தீங்க?


இனி "மகிழ்ச்சி" என்று சொல்லும்போது, தலைவனை நினைத்து கொள்ளலாம் சொல்லவே முடியாது! இந்த சொல்லை உச்சரித்ததால், "மகிழ்ச்சி"க்கே மகிழ்ச்சி போங்க!!

டீசர் வெளியிட அரை மணி நேரத்துக்கு முன்னாடியிலிருந்து ஒரு சின்ன பரபரப்பு, சின்ன டென்ஷன்! தேர்வு முடிவுகளை காண ஒரு பயம் வருமே, அந்த மாதிரி கொஞ்சம் பயம் கலந்த ஒரு உணர்வு (டீசர் நல்ல வரவேண்டுமே என பயம் தான்)

சரியாக மணி 1.25 (சிங்கையில்)

கலைப்புலி ஸ் தானு யூடியுப் சேனலை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.

1.27 ஆனது. மனசு பரபரப்பின் உச்சத்தை அடைந்தது.

1.30- டீசர் வெளியானது. பார்க்காமலேயே முதலில் பேஸ்புக்கில் ஷேர் செய்தேன் "தலைவா வந்துட்டாரு!!" என்று.

அதற்கு பிறகு தான் பார்த்தேன்.  ஒரு முறை பார்த்தேன். பிறகு இன்னொரு தடவ பார்த்தேன். மூன்றாவது முறையாக பார்த்தேன். தொடர்ந்து 7, 8 முறை பார்த்து இருப்பேன்.

ஒவ்வொரு முறை பார்க்கும்போது goosebumps!!
65 வயது ஆனபிறகும் எப்படி, இப்படி வசீக்கரிக்க முடியும்??



நான் நடந்தால் ஒரு அணுவும் அசையாது! அது ரஜினிக்கு அப்படியே பொருந்தும்! என்னை சுற்றி எதுவுமே அசையவில்லை. வாய் பிளந்து அசந்து பார்த்த முதல் ஷாட்-டே மெய்சிலிர்க்க வைத்தது.

தமிழ் சினிமா ஹீரோக்களுக்கான heroism காட்டும் சில ஷாட்கள் உண்டு- நடக்கும்போது கால் close up shot, சிரிப்பது! வில்லன்களை அடிப்பது, "நான் யார் தெரியுமா?" என்பது.  இது அனைத்துமே டீசரில் உண்டு. எத்தனையோ படங்களில் பார்த்து இருந்தாலும், சலிக்கவில்லை!!

அது தான் ரஜினி!!

"சொல்லுங்க சொல்லுங்க நீங்க பம்பாயில என்னவா இருந்தீங்க" என்ற பாட்ஷா பட வசனம் போலவே இந்த டீசரில் பத்திரிக்கையாளர் ஒருவர் "நீங்க ஏன் gangsterரா ஆவுனீங்க?" என்பதற்கு, தலைவர் சிரிப்பாரு பாருங்க!!!



சும்மா, அந்த ஷாட் மட்டும் freeze பண்ணிட்டு பார்த்துகிட்டே இருக்கலாம் போல!



எனக்கு பிடிச்ச இன்னொரு அம்சம் இந்த டீசரில்- அனல் பறக்கும் இசை!
"புது இயக்குனர்களுக்கும் புது கதைக்களத்துக்கும் மட்டும் இசை அமைக்கும் சந்தோஷ் நாரயணனா நான்?? ரஜினிக்கும் பட்டைய கிளப்பும் இசை போட தெரிஞ்ச சந்தோஷ் நாரயணன் டா!" என சொல்லாமல் சொல்லி இருக்கிறார். பிண்ணனி இசை, மரண மாஸ்!

இரண்டே இரண்டு படங்கள் இயக்கிய ரஞ்சித், கொடுக்க போகும் அடுத்த வெற்றி படம் "கபாலி" என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் நான்!!

"கபாலி டா" என்று ரஜினி கம்பீரமாய் கர்ஜிக்கும் வசனம் என் கைபேசி அலாரமாய் மாறிட,

உழைப்பாளர் தினம் அன்று அதிகம் உழைத்த யூடியுப்-க்கு நன்றி!!


No comments: