Feb 12, 2017

சிங்கம் 3-ஓரளவுக்கு தான் பொறுமை காக்க முடியும்

சீ.டி வித்த சசிகலாவா இருந்தாலும் சரி
சிங்கம் பார்த்த ரசிகர்களாக இருந்தாலும் சரி,

"ஓரளவுக்கு தான் பொறுமை காக்க முடியும்!"

238 பக்க டயலாக் கொண்ட 2.5 மணி நேரம் படம். அதில் கிட்டதட்ட 237 பக்கத்துக்கு சிங்கம் மட்டுமே கத்திகிட்டு இருக்கு. சிட்னி போய் வில்லன சுடுவதற்குள், பதில் இங்க சுட்ட தோசைக்கு சட்னி அரைச்சு இருந்திருக்கலாம். #dosachallenge


தாலி செண்டிமெண்ட் காட்சி ஒன்னு விமான நிலையத்தில். இவ்வளவு சீக்கிரமா ஆர்போர்ட்-ல செக் பண்ணிவிட்டுடுவாங்களா? அதுவும் சிட்னி போறத்துக்கு. ஆஸ்திரேலியா சமீபத்தில் தான் போயிட்டு வந்தேன். பெட்டிக்குள்ள இருக்கும் சாப்பாட்டு பொருட்களை ஒவ்வொன்றாய் செக் பண்ணுவாங்க. அப்படியும் ஒன்னும் இல்லை என்று சொன்னாலும், தனி வழியில் செல்ல வேண்டும். அங்கேயும் மறுபடியும் செக், காவல் நாய் ஒன்னு வந்து பெட்டிகளை மொப்பம் பிடிக்கும்.

இது போக, தாலிய எடுக்க முடியாதுனு சொல்லும் அனுஷ்கா, அதுக்கு ஒரு செண்டிமெண்ட் டயலாக், பின்னாடி ஓஓஓஓ ஒரு மியுசிக் வேற. கலாச்சாரத்த காப்பாத்திட்டாங்களாம்! படத்தின் முதல் பாடல், அதுவும் ஐட்டம் சாங், இந்த பாட்டு எந்த விதத்தில் கலாச்சாரத்தை காப்பாத்தியதுனு சொல்லுங்க, சிங்கத்தின் சிங்கங்களே!!

சூரி, வில்லன், ஸ்ருதி- இதில் யார் சிறந்த காமெடியன் என்ற பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி ஒரு நடிப்பு. சும்மா வெட்டியா பேஸ்புக்ல இருக்கறவனே செம்ம காமெடியா எழுதுகிட்டு இருக்கான்! இன்னும் ரைமிங் வசனம் தான் காமெடினு நினைச்சு....ச்சே!

ஸ்ருதி- சரி விடுங்க! நான் எதும் சொல்றதுக்கு இல்ல.

வில்லன்- பாதி நேரம் உடற்பயிற்சி பண்ணிகிட்டு இருக்கு. அதுக்கு பின்னாடி, ஜூஸ் கொடுக்கும் பெண்கள். எங்க தலைவர் செய்த காமெடி காட்சியை அப்படியே உள்ள வாங்கி செய்து இருக்கார்.



இயக்குனர் ஹரி- அடுத்த சிங்கம் 4 எடுப்பார் என்ற தகவல். சூர்யாவ நிஜம் சிங்கமா ஆக்காம விட மாட்டார் போல.





2 comments:

Anonymous said...

லிங்காவை விட பல மடங்கு பரவாயில்லை

FunScribbler said...

அதுவும் உண்மை தான் பாஸ்!