Mar 5, 2017
தமிழ் படம் (குற்றம் 23) ஈரானிய படம் (the salesman)
குற்றம் 23:
கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணனையை போல் விஜயகுமார் appointment order கடிதத்துடன் பிறந்தவர் போல. எந்த காவல் அதிகாரி வந்தாலும், கடிதத்தை நீட்டி, "நீங்க தான் இந்த கேஸ எடுக்கனும்." என சொல்கிறார்.
என்ன சம்பவம்? ஏன் இந்த கொலை நடக்குது? சொந்த அண்ணியே இதில் பாதிக்கபட்டு இருக்கிறார் என்றால்? என்ன நடந்து இருக்கும் என்பதையெல்லாம் காவல் அதிகாரி அருண்விஜய் கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பதே medical crime thriller 'குற்றம் 23' படத்தின் கதை.
பேய் படங்கள் சீசன் முடிஞ்சு இப்போ crime thriller படங்கள் சீசன் மாதிரி தெரியுது. வரிசையாய் நல்ல படங்கள்- தனி ஒருவன், துருவங்கள் 16. அந்த வரிசையில் ஒரு நல்ல படம். பயங்கரமான திருப்பங்கள் இல்லை என்றாலும், விறுவிறுப்பா நகர்கிறது படம்.
கிரைம் திரில்லர் வல்லுநர் ராஜேஷ் குமாரின் கைவண்ணத்தில் வந்தது. இப்போதான் கூகல் செய்து பார்த்தேன். 1700 கதைகள் எழுதி இருக்காராம். 450 கதைகள் மட்டும் பாக்கெட் நாவல்களாம். 'குற்றம் 23' படம் பார்க்கும்போது படித்தால் கிடைக்கும் சுவாரஸ்சியம் அப்படியே தெரிந்தது. கதையை, திரைக்கதையாக மாற்றிய இயக்குனர் அறிவழகனுக்கு சபாஷ்! இப்படத்தை 'decent film' என்ற பிரிவில் வகைப்படுத்தலாம். அதிகம் யூகிக்க வேண்டிய காட்சிகள் இல்லை என்றாலும் அவ்வபோது 'அட' என்ற போட வைத்துள்ளார்.
அருண் விஜய் ஒரு மொட்டை மாடி காட்சியில் கோபத்துடன் ஒரு மாதிரியா கண்கலங்கி நிப்பார் பாருங்க. அருண் விஜய்க்கு இனியாவது நல்ல படம் வரட்டும், வெற்றி வரனும். கதாநாயகி, காக்க காக்க மாயா போல் இருந்தாலும் (இங்கயும் ஆசிரியர் தான், ஹீரோவிடம் லவ் சொல்வார் ஜீப் பக்கத்தில் நின்று கொண்டு)
அமித், அமிநயா நடிப்பெல்லாம் பிரமாதம். எந்த குறையுமே சொல்ல முடியாத அளவுக்கு நடிகர்களின் தேர்வு.
பொதுவா லூசு ஹீரோயின்களை தான் தமிழ் படங்களில் பார்ப்போம். லூசு போலீஸ் என்று ஒரு பிரிவு இருக்குதுனா அதுக்கு காரணம் தம்பி ராமய்யா! நகைச்சுவை என்ற பெயரில் முடிந்தவரை சிரிக்க வைக்கிறார்.
கிளைமெக்ஸ் நெருங்கும்போது வரும் 'evidence evidence சொல்லிதான் இவனுங்களையெல்லாம் விட்டு வைக்குறோம். எதுக்கு?"னு கத்தி ஆவேசப்படும்போது, செம்மயா இருந்துச்சு. ஆனா, வில்லன் ஏன் கொலை பண்றான்னு இன்னும் அழுத்தமா சொல்லியிருக்கலாம். அப்பரம் சில இடத்துல நிறைய 'telling'. கதை எழுதும்போது வாசகர்களுக்கும் சரி, படம் பார்ப்பவர்களுக்கும் 'don't tell. show!' அப்படினு ஒரு விஷயம் இருக்கு.
'குற்றம் 23' என்னதான் சில இடங்களில் பிரமாதமாய் 'show' இருந்தாலும், பாதி நேரம் விசாரணை என்ற பெயரில் வசனம் பேசி கொண்டே இருப்பதால், சற்று சலிப்பு வருவதை தடுக்க முடியவில்லை.
இருப்பினும், 'குற்றம் 23'- படத்தை பார்த்தால், நிச்சயம் ரசிப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை.
அப்பர்ம, இந்த படத்தின் promo.
************************************************************************
The salesman:
வேறு மொழிகள் திரைப்படங்கள் பிரிவில் இவ்வருடத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்ற ஈரானி படம் தான் 'The salesman.' எழுத்து இயக்கம்- Asghar Farhadi. மொத்தமே 11 படங்கள் தான் எடுத்து இருக்கிறார். அதில் இரண்டு படங்கள் ஆஸ்கர் விருது பெற்றவை (விருது பெற்ற இன்னொரு படம் separation- 2011)
குற்றம் 23 போலவே இதிலும் ஹீரோ குற்றவாளியை தேடி போகிறார். ஹீரோ அவ்வூரில் ஒரு ஆசிரியர். பகுதி நேரமாக மேடை நாடக நடிகராக இருப்பார். அவரது மனைவி ஒரு மேடை நாடக நடிகை. இருவரும் புது வாடகை வீட்டுக்கு செல்வார்கள். ஒரு நாள், ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துவிடும்.
ஹீரோ வெளியே சென்றுவிடுவார். கதவு ஒலி கேட்கும். கணவன் தான் வந்துவிட்டார் என கதவை லேசாக திறந்துவிட்டு, குளிக்க போவார். யாரோ ஒருவர் வீடு புகுந்துவிட்டு, அந்த நபர் குளியலறைக்கு சென்றுவிடுவார்.
என்ன நடந்தது என்பதை கொடூரமான காட்சிகளால் காட்டாமல்விட்ட இயக்குனருக்கு ஆஸ்கர் விருது கொடுத்ததில் எந்த ஆச்சிரியமும் இல்லை. 'she was assaulted' என்று தான் குற்றவாளியை கண்டுபிடிக்கும்வரை இருக்கும். பாதிக்கப்பட்டவருக்கு தலையிலும் அடி. அதற்கு பிறகு வரும் காட்சிகளில், இவருக்கு என்ன தான் உண்மையில் நடந்து இருக்கும் என படம் பார்ப்பவர்களுக்கு தெரியும். கதாபாத்திரங்களுக்கும் தெரியும். ஆனா, அதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அந்த ஒரு உணர்வு பாலம்- அற்புதமான திரைக்கதை.
ஈரானிய படங்கள், பல, ரொம்ப மெதுவா நகரும். பிண்ணனி இசை எதுவுமே இல்லாமல் இருக்கும்.
இந்திய படங்களை பார்த்து கெட்டு போன மனசும் புத்தியும், இந்த இடத்துல பிண்ணனி இசையை போட்டிருக்கும்னு வேதாந்தம் பேசியது. 'queen' இந்தி படத்தில் Kangana Ranaut Parisல் இருக்கும்போது இத்தாலிய உணவில் மிளகாய் காரம் சேர்ப்பார். அதற்கு கடைக்காரர் கத்துவார்- எல்லாத்தை இந்திய உணவாய் மாற்றுவது ஏன்?
அப்படி தான் எனக்கு இருந்துச்சு. இசையில்லாமல் படம் எடுப்பது ஈரானிய படம் பாணி. அப்படி இசையே இல்லாம இருந்ததது தான் 'the salesman' படத்தின் வெற்றி. காட்சிகள் பலவும் மனதை பதைபதைக்க வைத்தது. கடைசியில் குற்றவாளியை கண்டு பிடித்துவிடுவார் கணவர். அதில் ஒரு சின்ன திருப்பம்.
இவரா குற்றவாளி என தெரிந்தது எந்த கூச்சலும் இல்லை கத்தலும் இல்லை. ஆனா, படம் பார்ப்பவர்களுக்கும் கட்டாயம் கோபம் வரும் குற்றவாளி மேல். கூடவே பரிதாபம் ஏற்படும்.
இப்படிதான் நடிப்பு, கதையமைப்பு, காட்சிகள், முக்கியமா வசனங்கள் (subtitles) அனைத்தும் உலக சினிமா வரலாற்று பக்கத்தில் கட்டாயம் இடம்பெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment