Dec 10, 2017

கொடிவீரன்- மசாலாவ அரைக்க சொல்லுமா!!

இதுக்கு முன்னாடி வனமகன் படத்துல தான் பிண்ணனி இசையைக் கேட்டு வயிறு வெடிக்கிற அளவுக்கு விழுந்து சிரிச்சேன். அந்த 'அலுக்கி குலுக்கி சிறுக்கி சிம்ல சிம்மா ஏஏஏஏஏஏஏ' பிண்ணனி இசை இன்னும் காதுல ஒலிச்சிகிட்டு இருக்க. ஹாரிஸ் ஜெய்ராஜ மிஞ்ச இன்னொருத்தன் பொறந்து வரனும்னு  நம்பிக்கையோட வாழ்க்கைய நடத்திக்கிட்டு இருக்கும்போது தான் 'கொடிவீரன்' கொடிகம்பத்துல வந்து சிக்கினான். இல்ல, நம்மதான் அவங்கிட்ட சிக்கிட்டோம்.



வில்லன், ஒரு அப்பாவிய அடிச்சி வீசுறான். இது எம்.ஜி.ஆர் தாத்தா காலத்து ஹீரோ introduction ஆச்ஜேனு நீங்க நினைக்ககூடாது. அந்த நினைப்ப வேரோடு வெட்டி எறியவும். ஹீரோவின் தங்கச்சி அடிதடி நடக்கும் இடத்துல நிக்குது.

"உன் முன்னாடி பறந்து வந்த tyre ஒன்னும் சும்மா வரல. எங்க அண்ணன்       சூடாயி வந்துச்சு."

"சண்டை நடக்கிற இடத்துல கண்ணன் வருவானோ இல்லையோ எங்க அண்ணன் வருவான்."

"இந்த ஊரே எங்க அண்ணன் ஆடி பாத்துருக்க. அடிச்சு பாத்தது இல்ல. இப்ப பார்ப்ப."

ஒரு படத்துல இத்தன பஞ் இருக்கலாம். ஆனா ஒரு சீன் முழுக்க இது தான்.

அடுத்த ஷாட்- தாடி வச்ச சசிகுமார் லாரி பின்னாடியிலிருந்து முன்னாடி வரார். slow motionல நெத்தியில பட்டையோட. இவரு பட்டையோட வரல. பட்டைய கிளப்ப வந்திருக்காரு.

(அட ச்சே.... என்ன எனக்கும் இந்த வியாதி தொத்திகிச்சு. )

சசிகுமாரின் நெத்திய close upல காட்ட
 "ரகள ரகள ரகள டா. இவன் ரகளையோட சகல டா!" னு பிண்ணனி வாசிக்கும்போது, சிரிச்ச ஆளுதான் நான் அடுத்த 10 நிமிஷத்துக்கு படத்தில எந்த காட்சிய மிஸ் பண்ணேனே தெரியல.

நானே சத்தம் போட்டு, 'மசாலா அரைக்க சொல்லுமா' னு கத்திடலாமானு தோணுச்சு.

சசிகுமார் தன் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்குமா இல்லையானு தெரிஞ்சிக்க கோயிலுக்கு போவார். அங்க கல்லுல வட்டம் போடும் காட்சி ஒன்னு. இப்படி  நம்மள திட்டம் போட்டு   தூக்கும் காட்சியெல்லாம் ஏகப்பட்டது இருக்கு.

முறை மாமன் படத்துல பேதி மாத்திரை காமெடியில எத்தன மாத்திரை டா போட்டீங்கனு கவுண்டமணி கேட்க அதுக்கு ஜெய்ராமும் செந்திலும், "ஒன்னு போட்டோம். அதுக்கு அப்பரம் ரெண்டு. அப்பரம் மூனு" என்று எத்தன மாத்திரய கலந்தாங்கனு தெரியாம குழம்பிபோய் நிப்பாங்க.

அந்த மாதிரி இந்த படத்துல எத்தன தங்கச்சி கதாபாத்திரம் இருக்குனு யாருக்குமே சத்தியமா தெரியாது.

இந்த படத்துல சசிகுமாருக்கு ஒரு தங்கச்சி.
அப்பரம் வில்லன் பசுபதிக்கு ஒரு தங்கச்சி.
அதுக்கு அப்பரம் வித்தார்த்துக்கு ஒரு தங்கச்சி.

லைட்மேன், கேமிராமேன், tea-boy, stunt master, editor, இப்படி எல்லாருக்கும் இப்படத்துல தங்கச்சி இருக்காங்க.

உங்க வீட்டில ஒருத்தர தண்ணி கொண்டு வர சொல்றீங்க, அதுக்கு அவர்,

"தண்ணி கொண்டு வர சொல்றீயா இல்ல தனியா கொண்டு வர சொல்றீயா?"

நீ: சீக்கிரம் கொண்டு வா.

அவர்: சீக்கிரம் வரட்டா இல்ல விக்ரமோட வரட்டா?

இப்படி உலறும் கதாபாத்திரங்களோட பேசினா எப்படி மண்டை வலிக்குமோ அப்படியான ஒரு படம் தான் 'கொடிவீரன்'.

வசனம் என்னும் பெயர்ல வச்சு செஞ்சிருக்காங்க.

பசுபதியின் மச்சான் அவருக்கு ஒரு மோதிரத்தை போடுவான். அதுக்கு பசுபதி, "என்ன.....நம்ம இனத்தோட அடையாளமா?"

மச்சான், "இல்ல மாமா. உங்க குணத்தோட அடையாளம்."

இன்னொரு காட்சில, "எத்தன நாளைக்கு தான் வில்லங்கமா இருப்ப. கொஞ்ச நாளைக்கு வெள்ளக்காரனா இரேன்."

"அப்போ அதுல நம்ம காரியமும் இருக்குது. வீரியமும் இருக்குது."

"இந்த ஊர் என்னைய ஆடியும் பார்த்திருக்கு. அடிச்சும் பாத்திருக்கு.
நார் நாரா கிழிச்சு பாத்தது இல்லையே!"

இதுபோன்ற வசனங்கள back-to-back பேசி பேசி, நம்ம ஒரு வழிபண்ணாரு இயக்குனர் முத்தையா.

இயக்குனர், சமீபத்தில் ஒரு பேட்டியில், "நம்மெல்லாம் அடையாளத்த இழந்துகிட்டு வரோம். அத காட்ட தான் கிராமத்து படங்கள எடுக்குறேன்."

நம்மகிட்ட பல்லு இருக்கறதனால அதயே காட்டிகிட்டு இருந்தா, முட்டாள்தனமா இருக்கும். தெரியும். அதே மாதிரி தான் அடையாளம். தேவையான நேரத்தில், கொஞ்சம் புத்திசாலித்தனாகவும் உலக நடப்பு தெரிந்து காட்ட வேண்டும்.

பசுபதி தங்கச்சி விதவையான பிறகு, அவளை ஊர் மக்கள் முன்னிலையில் உட்கார வைத்து மொட்டை அடிப்பது, அதுக்கு அப்பரம் அவருக்கு சேலை கொடுக்கும் காட்சியெல்லாம், என்ன அடையாளம்னு தெரியல? அழிக்கப்பட வேண்டியவை.

"ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பளைக்கு லவ் லட்டர் கொடுத்தா தான் தப்பு, ஒரு ஆம்பள பொண்ணுக்கு கொடுத்தா தப்பு இல்ல." என்னும் வசனங்களிலிருந்தே தெரிகிறது பின்னோக்கிய சிந்தனைகளின் உச்சம்.

வாழ்க்கையில் எவ்வளவோ போராடி, ஓரினசேர்க்கை ஆண்களும் பெண்களும், திருநங்கைகளும் பலவற்றில் சாதித்து கொண்டிருக்கும் இச்சூழலில் இதுபோன்ற வசனங்கள் மிகப் பெரிய கொடூரம்.

இதைவிட கொடூரம்- சசிகுமாரின் romance காட்சிகள்.

நாடி நரம்பெல்லாம் 'சசிகுமார் சசிகுமார்'னு ஊறிபோன ரசிகர்களால்கூட ஜீரணிக்க முடியாத காதல் காட்சிகள்.


No comments: