படம் இடைவேள விட்டபோதே இந்த படத்த பத்தி ஷேர் செய்யனும்னு துடிச்சது மனசு. ஆனா, வருங்கால CM விஷால் ஐயா ஒரு படத்த பாத்தா, 3 நாளைக்கு அப்பரம் தான் அத பத்தி பேசனும்னு சொல்லிட்டார். அதனால மனசு கட்டுப்படுத்திகிட்டேன்.
இடைவேள போதே கிட்டதட்ட ஒரு கதை முடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு. இதுக்கு அப்பரம் எப்படி படம் நகரும்? நிஜ அருவிய பாக்க சில தூரம் பயணித்து ஒரு மல உச்சிக்கு நடந்து போய் ஒரு இடத்துல நின்னா, நம்ம மேல சாரல் பட்டு ஒரு பிரமிப்பு அடைவோம்ல அந்த மாதிரி இந்த படம். பல வருட காலம் தமிழ் சினிமா உருண்டு ஓடி வந்து நமக்கு அளித்த அதிசயம் "அருவி"
இயக்குனர் அருண ஒத்த வார்த்தல வாழ்த்துகள்னு சொல்லி முடிச்சிட முடியாத அளவுக்கு தன் எழுத்தால் வசீகரம் பண்ணியிருக்கிறார். கே ஸ் ரவிகுமார்கிட்ட assistantஆ இருந்த அருண் தான் இப்படத்த எடுத்தார்னு நினைக்கும்போது ஆச்சிரியமா இருக்கு! நல்ல படம் எடுக்க நல்ல கதையவிட நல்ல மனசு தேவை. அது அருண்கிட்ட நிறையவே இருக்கு. படத்துல பல இடத்துல அத கண்கூடா பாக்க முடியுது. அருவி கதாபாத்திரத்துக்கு இணையா எனக்கு பிடிச்ச இன்னொரு கதாபாத்திரம்- Emily.
panasonic GH4 cameraல தான் முழு படத்தையும் எடுத்தாங்களாம். மூனு மாசம் ஒத்திகை. அனைத்து கதாபாத்திரங்களும் முழு படத்தையும் stage play போல நடித்து காட்டிவிடும் அளவுக்கு ஒத்திகை நடந்திருக்கு. இப்படி அருண் மற்றும் குழுவின் உழைப்பு மெய்சிலிர்க்க வைக்குது.

இடைவேளை முடிஞ்சு ஒரு காட்சில அருவி அந்த முதலாளிய பாத்து கேட்கும், "நீ எப்ப எதுக்கு கடைசியா அழுதேனு." அதுக்கு அவன் தனது ஊரில் இருக்கும் பனியாரம் சுடும் பாட்டிய பத்தி ஒரு கதை சொல்வான். சொல்லிமுடித்தவிட்டு தேம்பி தேம்பி அழுவான். எனக்கு பொசுக்கென எட்டிபாத்துச்சு கண்ணீர். ஒரு கெட்டவனுக்காக நான் ஏன் இவ்வளவு feel பண்ணுறேன்? அது தான் 'அருவி'. இப்படி நம்மள ஒரு mixed emotional rollercoaster பயணத்தில அமர வைச்சு கூட பழகும் மனிதர்கள வேற மாதிரி பாருங்கடானு சொல்லுது.
கென்யாவோ இல்ல வேற ஒரு நாடானு தெரியல. அங்க மலைவாசி மக்களின் பழக்கம் ஒன்னு இருக்கு. தப்பு செஞ்சவன ஊர்மக்கள் நடுவுல உட்கார வச்சு அவன் பண்ண நல்ல விஷயங்கள எடுத்து சொல்லி அவன் நல்லவனு அவனுக்கே புரிய வைப்பாங்களாம். அருவி படத்துல வந்த பனியாரம் பாட்டி காட்சிய பாத்தபோது எனக்கு இது தான் நினைவுக்கு வந்துச்சு.

'liberty song'னு ஒரு பாட்டு. பள்ளி பருவத்தில் வரும் அருவி தனது ஆசிரியரால் அடிவாங்கும் காட்சி ஒன்னு ஆரம்பத்துல வரும். கொஞ்ச நாள் கழிச்சு, அந்த ஆசிரியரை பாக்க நேரிடும். அவரிடம் சென்று, "வணக்கம் சார் நான் தான் அருவி" என்று சொல்லிவிட்டு கல்லை தூக்கி அவரது கார் கண்ணாடியில் வீசிவிட்டு ஓடுவார் அருவி. அதுக்கு அருவி, "எத்தன தடவ கீறி இருப்பான் தெரியுமா?" என்று தோழியிடம் சொல்வாள்.
மனசு கனத்திடுச்சு. எவ்வளவு பெரிய விஷயத்த ரொம்ப ஆழமா சொல்லிட்டு போய்கிட்டே இருக்கும் திரைக்கதை, 'அருவி'ய எல்லாரும் தூக்கிவச்சு கொண்டாட காரணம்னு அது தான்னு நினைக்கிறேன். டிவிட்டர் பக்கத்துல சிலர் தூக்கிவச்சு கொண்டாடும் அளவுக்கு இதல என்ன இருக்குனு ஒரு கேள்வி கேட்குறாங்க.
பரவாயில்ல சார். தூக்கி வச்சு கொண்டாட வேணாம். atleast தூக்கிவச்சுபோம். 'அருவி' இந்த உலகத்த பார்க்கட்டும். இந்த உலகம் 'அருவி'ய பார்க்கட்டும். இல்லேனா, ஹிந்தில ரீமேக் பண்றேன் தெலுங்குல ரீமேக் பண்றேனு ஒரு குரூப் கிளம்பும். அவங்ககிட்டலேந்து காப்பாத்தறத்துக்காவது, 'அருவி'யை தூக்கி வச்சிபோம். கடைசி வரைக்கும் 'அருவி' நம்ம புள்ளையா நம்ம படமா இருக்கட்டும்.

"விஜய் நடிச்ச படம்ங்கற. நல்ல படம்ங்கற...எப்படி டா கண்டுபிடிக்கறது?"
"கை வை டா பாப்போம்."
"எனக்கு பயம் இல்ல. ஏனா எனக்கு இழக்கறதுக்கு எதுவும் இல்ல."
"எனக்கு பயம் இல்ல. ஏனா எனக்கு இழக்கறதுக்கு எதுவும் இல்ல."
"நான் உண்டு என் ஜட்டி உண்டுனு இருப்பேன்."
"120 ரூபாய் கொடுத்து குப்ப படத்த பாக்குறோம்."
இப்படி படம் முழக்க ரசிக்கும் வண்ணம் வசனங்கள அள்ளி தெறிக்கவிட்டு இருக்காங்க.
இசை- beautifully unconventional. sweetly haunting. பிந்துமாலினி மற்றும் வேதாந்தின் பாடல்காள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லுது.
இசை- beautifully unconventional. sweetly haunting. பிந்துமாலினி மற்றும் வேதாந்தின் பாடல்காள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லுது.
No comments:
Post a Comment