Dec 20, 2017

சிம்பு கலந்து கொண்ட workshopல் நடந்தது என்ன?

கதவை திறந்தால், ஏசி குளிர் சுளீர் என்று முகத்தில் படர, சிம்பு உள்ளே நுழைந்தார். இருட்டாக இருந்த அறையில் switch எங்கே என தேடி அழுத்தியபோது, அரவிந்த்சாமி அறை ஓரத்தில் உட்கார்ந்து கையிலிருந்த fidget spinnerரோடு விளையாடி கொண்டிருந்தார்.



சிம்பு (பற்களை கடித்து கொண்டு, வாயை பாதிக்கு மேல் திறந்தும் திறக்காமலும்): சார், என்ன... சார்? இரு...ட்டு...லே இர்ர்ர்ர்கீ...ங்கா?

அரவிந்த்சாமி: வாங்க சிம்பு. என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?

சிம்பு: நானும் சீக்கிரம் வரும் ஆளு தான் சார்.

அரவிந்த்சாமி தொடர்ந்து fidget spinnerல் விளையாடி கொண்டிருக்கிறார் வேறு எதுவும் பேசாமல்.

சிம்பு (முணுமுணுத்தபடி, தாடியை சொரிந்தவாறு): இப்ப புரியுது ஏன் காஜோல் இவர வேண்டாம்னு பிரபுதேவாகூட போனாங்கனு.

அப்போது உள்ளே நுழைந்தார் மணிரத்னமும் சுஹாசினியும். சுஹாசினி வலது கையில் மருந்து மாத்திரைகளும், இடது கையில் வசனங்கள் அடங்கிய தாட்களும் இருந்தன. மணிரத்னம் சிம்பு மற்றும் அரவிந்த் கைகளை குலுக்கி வரவேற்றார்.

மணி: i am happy you came.

சிம்பு: சார், i am happy you casted me in this film.

மணி ஒரு செண்டிமீட்டர் புன்னகையை வீசினார்.

சிம்பு: மேடம், அது என்ன மருந்து?

சுஹாசினி: நீ எப்போ மேடைல "மணி சாரும் என் fanஆ இருப்போரோ'னு சொன்னீயோ அப்போவே எனக்கு பயம் வந்துச்சு. அதான் for precaution. மணிக்கு ஏற்கனவே உடம்ப சரியில்ல.

சிம்பு: சார் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்தோம் சார்.

மணி: ஒகே.

சிம்பு: நன்றி சார்.

மணி: யாருக்கு அனுப்புறீங்க.

சிம்பு: என் ரசிகர்களுகிட்ட சொல்லி, இத மீடியாவுல போட சொல்றேன் சார். அப்ப தான் நம்புவாங்க எனக்கு வேலை கிடைச்சுருக்குனு.

மணி: ரசிகரா?

சிம்பு: அது ஒரு 10,15 பேர் இருக்காங்க. என் தீவிர ரசிகர்கூட்டம். அவங்க இல்லாம நான் இல்ல....

கைவிரல்களையும் கைகளையும் ஆட்டி பேசி கொண்டிருக்கையில் ஜோதிகா உள்ளே வந்தார். சுஹாசினியை கட்டிபிடித்து ஹாய் சொல்லிவிட்டு மணியிடம் வணக்கம் கூறினார்.

சிம்பு: ஹாய் ஜோ எப்படி இருக்கீங்க?

ஜோ: ஹாய் சிம்பு. am fine. நீங்க எப்படி இருக்கீங்க?

சிம்பு: நாச்சியார் டெர்ல்லர் பாத்தேன். செம்மங்க.... எனக்கே போட்டியா வருவீங்கனு நினைக்கல.  பீப் சாங் மாதிரி இந்த படத்துலயும் ஒன்னு இருக்கனும்னு கேட்போங்க. மணி சார் கண்டிப்பா ஒத்துப்பாரு. ஏனா அவர் என் fanங்க.

சின்ன பையன் ஆகாயத்தில் பட்டத்தை பறக்கவிட்டு அனாந்து பார்த்து சந்தோஷம்படுவதுபோல் குதித்தான் சிம்பு. எதுவும் பேசாமல் ஜோ சுஹாசினியிடம் சென்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் வந்தார்.

சிம்பு: ஹாய் ஐஸ்.

ஐஸ்வரியா: என் பெயர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சிம்பு: கூட கொண்டு வரலயா?

ஐய்வரியா: மொக்க ஜோக்.

சிம்பு: உங்க பெயர் சொன்னா, எனக்கு பழைய ஞாபகமெல்லாம் வருது. but பர்ர்வால adjust பண்ணிக்கிறேன்.

மணி: ok ladies and gentlemen, எல்லாரும் செண்டர்ல உட்காருங்க.

சிம்பு: கீழயா?

சுஹாசினி: ஆமா.

சிம்பு: என்னங்க....நான் எவ்வளவு பெரிய ஸ்டார் தெரியுமா?

மற்றவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்துவிட்டு சிம்புவை பார்த்தனர்.

சிம்பு: ஓ...எல்லாரும் உட்காந்திட்டாங்களா. சரி பர்ர்வால நானும் உட்காரேன்.

மணியும் சுஹாசினியும் அனைவருக்கும் வசனத்தாளை கொடுத்தனர்.

சிம்பு: மணி சார். எங்க விஜய் சேதுபதியும் வாஃட் வசிலும்?

மணி: அவங்க இன்னிக்கு வரமாட்டாங்க.

சிம்பு: அவங்க வர்லனா எப்படி rehearsal பண்றது?
அவங்களுக்கு பதிலா VTV கணேஷம் மொட்டை ராஜேந்தரையும் போடுங்க சார்.

சுஹாசினி மணி காதில் மட்டும் விழும்படி: மணி, do you really want simbu to be in this film?

மணி ஒரு செண்டிமீட்டர் புன்னகையை வீசினார்.

மணி: ok this is scene 12. all characters are in the dense forest area in kashmir.....

அவர் சொல்லி முடிப்பதற்குள், அரவிந்த தரையில் சாய்ந்து புரண்டு, இல்லாத கொடி மேல உருண்டு கொண்டிருக்க, ஜோவும் ஐஸ்வர்யாவும் வாய் பிளந்து ஆச்சிரியம் அடைந்தனர்.

சுஹாசினி: அரவிந்த் எந்திரிங்க. காஷ்மீர்னாவே அது தானா?..... get up arvind. இது ரோஜா பார்ட் 2 இல்ல.

மணி: ok everyone listen. all characters are in the dense forest area in kashmir. you are the forest officers on a mission. you are there for a campfire night. and so this is the scene...சிம்பு நீங்க start பண்ணுங்க.

8 பக்கம் கொண்ட வசனத்தாளை புரட்டி புரட்டி பார்த்துவிட்டு முழித்தார் சிம்பு.

சிம்பு: எனக்கு என்ன பிரச்சனை-னா..... சார் ஒன்னுமே புரியல சார்.

சுஹாசினி: இது பாரதியார் கவித, சிம்பு. படிங்க.....

சிம்பு: காவென்று கத்திடுங் காக்கை......முட்டை 

ஜஸ்வர்யா: மேடம், என்னய கிண்டல் பண்றான் மேடம்.

சுஹாசினி: சிம்பு...ப்ளீஸ்.

சிம்பு: ஒகே ஒகே...  காவென்று கத்திடுங் காக்கை என்றன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை.


தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார் ஜோ.

ஜஸ்வர்யா: ஏன் அலறீங்க?

ஜோ: வீட்டுல ராமாயணம் தொல்ல தாங்க முடியலனு தான் இந்த படத்த ஒத்துக்கிட்டேன். இங்கயும் புரியாத மொழில கவித அது இதுனா....... 

Dec 18, 2017

அருவி- இன்னும் hangoverல Rolling Sir!

படம் இடைவேள விட்டபோதே இந்த படத்த பத்தி ஷேர் செய்யனும்னு துடிச்சது மனசு. ஆனா, வருங்கால CM விஷால் ஐயா ஒரு படத்த பாத்தா, 3 நாளைக்கு அப்பரம் தான் அத பத்தி பேசனும்னு சொல்லிட்டார். அதனால மனசு கட்டுப்படுத்திகிட்டேன்.


இடைவேள போதே கிட்டதட்ட ஒரு கதை முடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு. இதுக்கு அப்பரம் எப்படி படம் நகரும்? நிஜ அருவிய பாக்க சில தூரம் பயணித்து ஒரு மல உச்சிக்கு நடந்து போய் ஒரு இடத்துல நின்னா, நம்ம மேல சாரல் பட்டு ஒரு பிரமிப்பு அடைவோம்ல அந்த மாதிரி இந்த படம். பல வருட காலம் தமிழ் சினிமா உருண்டு ஓடி வந்து நமக்கு அளித்த அதிசயம் "அருவி"

இயக்குனர் அருண ஒத்த வார்த்தல வாழ்த்துகள்னு சொல்லி முடிச்சிட முடியாத அளவுக்கு தன் எழுத்தால் வசீகரம் பண்ணியிருக்கிறார். கே ஸ் ரவிகுமார்கிட்ட assistantஆ இருந்த அருண் தான் இப்படத்த எடுத்தார்னு நினைக்கும்போது ஆச்சிரியமா இருக்கு! நல்ல படம் எடுக்க நல்ல கதையவிட நல்ல மனசு தேவை. அது அருண்கிட்ட நிறையவே இருக்கு. படத்துல பல இடத்துல அத கண்கூடா பாக்க முடியுது. அருவி கதாபாத்திரத்துக்கு இணையா எனக்கு பிடிச்ச இன்னொரு கதாபாத்திரம்- Emily. 



panasonic GH4 cameraல தான் முழு படத்தையும் எடுத்தாங்களாம். மூனு மாசம் ஒத்திகை. அனைத்து கதாபாத்திரங்களும் முழு படத்தையும் stage play போல நடித்து காட்டிவிடும் அளவுக்கு ஒத்திகை நடந்திருக்கு. இப்படி அருண் மற்றும் குழுவின் உழைப்பு மெய்சிலிர்க்க வைக்குது.

இடைவேளை முடிஞ்சு ஒரு காட்சில அருவி அந்த முதலாளிய பாத்து கேட்கும், "நீ எப்ப எதுக்கு கடைசியா அழுதேனு." அதுக்கு அவன் தனது ஊரில் இருக்கும் பனியாரம் சுடும் பாட்டிய பத்தி ஒரு கதை சொல்வான். சொல்லிமுடித்தவிட்டு தேம்பி தேம்பி அழுவான். எனக்கு பொசுக்கென எட்டிபாத்துச்சு கண்ணீர். ஒரு கெட்டவனுக்காக நான் ஏன் இவ்வளவு feel பண்ணுறேன்? அது தான் 'அருவி'. இப்படி நம்மள ஒரு mixed emotional rollercoaster பயணத்தில அமர வைச்சு கூட பழகும் மனிதர்கள வேற மாதிரி பாருங்கடானு சொல்லுது.

கென்யாவோ இல்ல வேற ஒரு நாடானு தெரியல. அங்க மலைவாசி மக்களின் பழக்கம் ஒன்னு இருக்கு. தப்பு செஞ்சவன ஊர்மக்கள் நடுவுல உட்கார வச்சு அவன் பண்ண நல்ல விஷயங்கள எடுத்து சொல்லி அவன் நல்லவனு அவனுக்கே புரிய வைப்பாங்களாம். அருவி படத்துல வந்த பனியாரம் பாட்டி காட்சிய பாத்தபோது எனக்கு இது தான் நினைவுக்கு வந்துச்சு.

'liberty song'னு ஒரு பாட்டு. பள்ளி பருவத்தில் வரும் அருவி தனது ஆசிரியரால் அடிவாங்கும் காட்சி ஒன்னு ஆரம்பத்துல வரும். கொஞ்ச நாள் கழிச்சு, அந்த ஆசிரியரை பாக்க நேரிடும். அவரிடம் சென்று, "வணக்கம் சார் நான் தான் அருவி" என்று சொல்லிவிட்டு கல்லை தூக்கி அவரது கார் கண்ணாடியில் வீசிவிட்டு ஓடுவார் அருவி. அதுக்கு அருவி, "எத்தன தடவ கீறி இருப்பான் தெரியுமா?" என்று தோழியிடம் சொல்வாள். 

மனசு கனத்திடுச்சு. எவ்வளவு பெரிய விஷயத்த ரொம்ப ஆழமா சொல்லிட்டு போய்கிட்டே இருக்கும் திரைக்கதை, 'அருவி'ய எல்லாரும் தூக்கிவச்சு கொண்டாட காரணம்னு அது தான்னு நினைக்கிறேன். டிவிட்டர் பக்கத்துல சிலர் தூக்கிவச்சு கொண்டாடும் அளவுக்கு இதல என்ன இருக்குனு ஒரு கேள்வி கேட்குறாங்க.

பரவாயில்ல சார். தூக்கி வச்சு கொண்டாட வேணாம். atleast தூக்கிவச்சுபோம். 'அருவி' இந்த உலகத்த பார்க்கட்டும். இந்த உலகம் 'அருவி'ய பார்க்கட்டும். இல்லேனா, ஹிந்தில ரீமேக் பண்றேன் தெலுங்குல ரீமேக் பண்றேனு ஒரு குரூப் கிளம்பும். அவங்ககிட்டலேந்து காப்பாத்தறத்துக்காவது, 'அருவி'யை தூக்கி வச்சிபோம். கடைசி வரைக்கும் 'அருவி' நம்ம புள்ளையா நம்ம படமா இருக்கட்டும்.


"விஜய் நடிச்ச படம்ங்கற. நல்ல படம்ங்கற...எப்படி டா கண்டுபிடிக்கறது?"

"கை வை டா பாப்போம்."

"எனக்கு பயம் இல்ல. ஏனா எனக்கு இழக்கறதுக்கு எதுவும் இல்ல."

"நான் உண்டு என் ஜட்டி உண்டுனு இருப்பேன்."

"120 ரூபாய் கொடுத்து குப்ப படத்த பாக்குறோம்."

இப்படி படம் முழக்க ரசிக்கும் வண்ணம் வசனங்கள அள்ளி தெறிக்கவிட்டு இருக்காங்க.

இசை- beautifully unconventional. sweetly haunting. பிந்துமாலினி மற்றும் வேதாந்தின் பாடல்காள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லுது. 

என்ன டா படத்தில் நடித்த அதீத்தி பாலன் பத்தி ஒன்னும் சொல்லலையேனு நினைக்க வேண்டாம். அந்த புள்ளய பத்தி தனியா ஒரு போஸ்ட் போட்டால் கூட எல்லாத்தையும் சொல்லிட முடியுமானு தெரியல. இப்போதைக்கு அந்த புள்ளகிட்ட ஒன்னே ஒன்னு தான் சொல்ல தோணுது.

"இறுக்கி அணைச்சு ஒரு உம்மா" தரணும்.



Dec 10, 2017

கொடிவீரன்- மசாலாவ அரைக்க சொல்லுமா!!

இதுக்கு முன்னாடி வனமகன் படத்துல தான் பிண்ணனி இசையைக் கேட்டு வயிறு வெடிக்கிற அளவுக்கு விழுந்து சிரிச்சேன். அந்த 'அலுக்கி குலுக்கி சிறுக்கி சிம்ல சிம்மா ஏஏஏஏஏஏஏ' பிண்ணனி இசை இன்னும் காதுல ஒலிச்சிகிட்டு இருக்க. ஹாரிஸ் ஜெய்ராஜ மிஞ்ச இன்னொருத்தன் பொறந்து வரனும்னு  நம்பிக்கையோட வாழ்க்கைய நடத்திக்கிட்டு இருக்கும்போது தான் 'கொடிவீரன்' கொடிகம்பத்துல வந்து சிக்கினான். இல்ல, நம்மதான் அவங்கிட்ட சிக்கிட்டோம்.



வில்லன், ஒரு அப்பாவிய அடிச்சி வீசுறான். இது எம்.ஜி.ஆர் தாத்தா காலத்து ஹீரோ introduction ஆச்ஜேனு நீங்க நினைக்ககூடாது. அந்த நினைப்ப வேரோடு வெட்டி எறியவும். ஹீரோவின் தங்கச்சி அடிதடி நடக்கும் இடத்துல நிக்குது.

"உன் முன்னாடி பறந்து வந்த tyre ஒன்னும் சும்மா வரல. எங்க அண்ணன்       சூடாயி வந்துச்சு."

"சண்டை நடக்கிற இடத்துல கண்ணன் வருவானோ இல்லையோ எங்க அண்ணன் வருவான்."

"இந்த ஊரே எங்க அண்ணன் ஆடி பாத்துருக்க. அடிச்சு பாத்தது இல்ல. இப்ப பார்ப்ப."

ஒரு படத்துல இத்தன பஞ் இருக்கலாம். ஆனா ஒரு சீன் முழுக்க இது தான்.

அடுத்த ஷாட்- தாடி வச்ச சசிகுமார் லாரி பின்னாடியிலிருந்து முன்னாடி வரார். slow motionல நெத்தியில பட்டையோட. இவரு பட்டையோட வரல. பட்டைய கிளப்ப வந்திருக்காரு.

(அட ச்சே.... என்ன எனக்கும் இந்த வியாதி தொத்திகிச்சு. )

சசிகுமாரின் நெத்திய close upல காட்ட
 "ரகள ரகள ரகள டா. இவன் ரகளையோட சகல டா!" னு பிண்ணனி வாசிக்கும்போது, சிரிச்ச ஆளுதான் நான் அடுத்த 10 நிமிஷத்துக்கு படத்தில எந்த காட்சிய மிஸ் பண்ணேனே தெரியல.

நானே சத்தம் போட்டு, 'மசாலா அரைக்க சொல்லுமா' னு கத்திடலாமானு தோணுச்சு.

சசிகுமார் தன் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்குமா இல்லையானு தெரிஞ்சிக்க கோயிலுக்கு போவார். அங்க கல்லுல வட்டம் போடும் காட்சி ஒன்னு. இப்படி  நம்மள திட்டம் போட்டு   தூக்கும் காட்சியெல்லாம் ஏகப்பட்டது இருக்கு.

முறை மாமன் படத்துல பேதி மாத்திரை காமெடியில எத்தன மாத்திரை டா போட்டீங்கனு கவுண்டமணி கேட்க அதுக்கு ஜெய்ராமும் செந்திலும், "ஒன்னு போட்டோம். அதுக்கு அப்பரம் ரெண்டு. அப்பரம் மூனு" என்று எத்தன மாத்திரய கலந்தாங்கனு தெரியாம குழம்பிபோய் நிப்பாங்க.

அந்த மாதிரி இந்த படத்துல எத்தன தங்கச்சி கதாபாத்திரம் இருக்குனு யாருக்குமே சத்தியமா தெரியாது.

இந்த படத்துல சசிகுமாருக்கு ஒரு தங்கச்சி.
அப்பரம் வில்லன் பசுபதிக்கு ஒரு தங்கச்சி.
அதுக்கு அப்பரம் வித்தார்த்துக்கு ஒரு தங்கச்சி.

லைட்மேன், கேமிராமேன், tea-boy, stunt master, editor, இப்படி எல்லாருக்கும் இப்படத்துல தங்கச்சி இருக்காங்க.

உங்க வீட்டில ஒருத்தர தண்ணி கொண்டு வர சொல்றீங்க, அதுக்கு அவர்,

"தண்ணி கொண்டு வர சொல்றீயா இல்ல தனியா கொண்டு வர சொல்றீயா?"

நீ: சீக்கிரம் கொண்டு வா.

அவர்: சீக்கிரம் வரட்டா இல்ல விக்ரமோட வரட்டா?

இப்படி உலறும் கதாபாத்திரங்களோட பேசினா எப்படி மண்டை வலிக்குமோ அப்படியான ஒரு படம் தான் 'கொடிவீரன்'.

வசனம் என்னும் பெயர்ல வச்சு செஞ்சிருக்காங்க.

பசுபதியின் மச்சான் அவருக்கு ஒரு மோதிரத்தை போடுவான். அதுக்கு பசுபதி, "என்ன.....நம்ம இனத்தோட அடையாளமா?"

மச்சான், "இல்ல மாமா. உங்க குணத்தோட அடையாளம்."

இன்னொரு காட்சில, "எத்தன நாளைக்கு தான் வில்லங்கமா இருப்ப. கொஞ்ச நாளைக்கு வெள்ளக்காரனா இரேன்."

"அப்போ அதுல நம்ம காரியமும் இருக்குது. வீரியமும் இருக்குது."

"இந்த ஊர் என்னைய ஆடியும் பார்த்திருக்கு. அடிச்சும் பாத்திருக்கு.
நார் நாரா கிழிச்சு பாத்தது இல்லையே!"

இதுபோன்ற வசனங்கள back-to-back பேசி பேசி, நம்ம ஒரு வழிபண்ணாரு இயக்குனர் முத்தையா.

இயக்குனர், சமீபத்தில் ஒரு பேட்டியில், "நம்மெல்லாம் அடையாளத்த இழந்துகிட்டு வரோம். அத காட்ட தான் கிராமத்து படங்கள எடுக்குறேன்."

நம்மகிட்ட பல்லு இருக்கறதனால அதயே காட்டிகிட்டு இருந்தா, முட்டாள்தனமா இருக்கும். தெரியும். அதே மாதிரி தான் அடையாளம். தேவையான நேரத்தில், கொஞ்சம் புத்திசாலித்தனாகவும் உலக நடப்பு தெரிந்து காட்ட வேண்டும்.

பசுபதி தங்கச்சி விதவையான பிறகு, அவளை ஊர் மக்கள் முன்னிலையில் உட்கார வைத்து மொட்டை அடிப்பது, அதுக்கு அப்பரம் அவருக்கு சேலை கொடுக்கும் காட்சியெல்லாம், என்ன அடையாளம்னு தெரியல? அழிக்கப்பட வேண்டியவை.

"ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பளைக்கு லவ் லட்டர் கொடுத்தா தான் தப்பு, ஒரு ஆம்பள பொண்ணுக்கு கொடுத்தா தப்பு இல்ல." என்னும் வசனங்களிலிருந்தே தெரிகிறது பின்னோக்கிய சிந்தனைகளின் உச்சம்.

வாழ்க்கையில் எவ்வளவோ போராடி, ஓரினசேர்க்கை ஆண்களும் பெண்களும், திருநங்கைகளும் பலவற்றில் சாதித்து கொண்டிருக்கும் இச்சூழலில் இதுபோன்ற வசனங்கள் மிகப் பெரிய கொடூரம்.

இதைவிட கொடூரம்- சசிகுமாரின் romance காட்சிகள்.

நாடி நரம்பெல்லாம் 'சசிகுமார் சசிகுமார்'னு ஊறிபோன ரசிகர்களால்கூட ஜீரணிக்க முடியாத காதல் காட்சிகள்.


Oct 15, 2017

அர்ஜுன் ரெட்டி பதிலாய் அனிதா ரெட்டியாக இருந்திருந்தால்...

facebook முழுக்க 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு சினிமாவ புரட்டி போட போற படம். படத்துல நாலு சீன்ல சட்டைய கழட்டினாலே  அது 'cult film'னு             
நினைக்கிற  இக்காலத்தில் இது எந்தளவுக்கு உண்மை என்று புரியாமல் தான் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.


கூகலில் தேடினேன் இதன் அர்த்ததை- cult film is often revolutionary or ironically enjoyed. ஆஹா ஆமாப்பா! அதே தான்! இப்படம் ஒரு அனுபவம். சமீப காலங்களில் இப்படி ஒரு அனுபவம் கிடைத்ததில்லை. அந்த அனுபவத்தை தர தமிழ் படங்களும் கொடுக்க முற்பட்டதில்லை.   அர்ஜுன் ரெட்டி- ரொம்பவே ரசித்து பார்த்தேன். கதையின் பல அம்சங்கள் பிடிக்கவில்லை. (அதை பற்றி அப்பரம் சொல்கிறேன்)

இருந்தாலும், 'cult' film தான். தான் சொல்லவந்ததை  இயல்பாக, யாருக்கும் பயப்படாமல், மூன்று மணி நேரத்தில் கதையை தோய்வு இல்லாமல் எழுதி இயக்கிய புது இயக்குனர் சந்தீப்புக்கு, 'you're a fucking awesome talented film-maker, man!"


in-dept characterisation- அர்ஜுன் ரெட்டி. இவன் எப்படிப்பட்டவன் என்பதை முதல் இரண்டு மூன்று காட்சிகளிலே நமக்கு புரிந்துவிடுகிறது. அதுவும் அழத பழசான காட்சி அமைப்புகள் இல்லை. இப்படிப்பட்ட குடிகாரனா ஒரு மருத்துவர் என்று ஆச்சிரியப்பட வைக்கிறார் இயக்குனர். அப்படி ஆச்சிரியப்பட வைக்கும் தருணத்தில் நம்மை 'flashback'க்கு அழைத்து செல்கிறார். சரியான இடங்களில், மிக பொருத்தமான அளவில் flashbackகள் நிறைந்த திரைக்கதையில் பாதி வெற்றியை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சந்தீப்.

மூன்று மணி நேரத்தில் ஒரு நவீன தேவதாஸின் வாழ்க்கையை சித்தரித்ததை தாண்டி, நம்மையும் அவ்வாழ்க்கைக்குள் கைபிடித்து நடக்க வைத்துள்ள படம் இந்த அர்ஜுன் ரெட்டி. கதாபாத்திரங்களின் உணர்வுகளைத் திரிக்காமல் ஒளிக்காமல் உண்மைக்கு மிக நெருக்கமாகத் திரையில் துணிவுடன் காட்டியிருப்பது ஓர் அசலான சினிமாவுக்கான அடிப்படைத் தேவை என்பதை ‘அர்ஜுன் ரெட்டி’ உணர்த்திவிடுகிறது.



குழந்தைத்தனம் நிரம்பி வழியும் முகம் ப்ரீத்தியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டேவுக்கு. எந்த உணர்ச்சியையும் எளிதில் காட்டிவிடாதவர், வீட்டில் நடக்கும் பிரச்னைக்குப் பிறகு, விஜயைக் கட்டிப்பிடித்து சமாதானப்படுத்த முற்படும் காட்சி, பூங்காவில் மீண்டும் அர்ஜுனைச் சந்திக்கும்போது அழுதுகொண்டே கோபமாகத் திட்டும் காட்சி போன்றவற்றில் மிரட்டுகிறார்.

"women have restrictions at home, arjun" என்று ஷாலினி சொல்ல, எவ்வளவு தான் படித்து இருந்தாலும், பெரிய இடத்தில் இருந்தாலும், பல பெண்களின் நிலைமை, இயலாமை அது தான். அதை ஒற்றை வரியில் சொன்ன விதம், சபாஷ்!  




ஷாலினி அர்ஜுன் வீட்டுக்கு சென்று அவனை சமாதானப்படுத்தும்போது, அவனது அறையை சுற்றி பார்த்துவிட்டு, "இங்க தான் நமக்கு first night நடக்க போகுதா?" என்று கேட்க, அதுக்கு அவன் எரிச்சலாய், "bloody 549th night?" என்பதெல்லாம் தமிழுக்கும் சரி, தெலுங்கு சினிமாவுக்கு சரி ரொம்பவே புதுசு. கொச்சையாக இருக்கே என்று சிந்திக்கவிடாமல், நம்மையும் தலையாட்டி புன்னகை செய்ய வைத்திருக்கிறது கதையோட்டமும், அவர்கள் காதலின் ஆழமும். 

இப்படி வெற்றி கொடிகளை பல இடங்களில் நட்ட படத்தில் எனக்கு நெருடல்களாக தெரிந்தன பல விஷயங்கள்.

1) அர்ஜுன் என்பவன்  யார் என்றே தெரியவில்லை என்ற போதிலும், மருத்தவம் படிக்கும் ஷாலினி, எப்படி ஒரு பையன் திடீரென்று கூப்பிட்டு, முத்தம் கொடுத்தால் ஏற்றகொள்கிறாள், செருப்பை கழட்டி அடிக்காமல்?

2) அர்ஜுன் is a male chauvinist. கல்லூரி வகுப்பில், ஒரு குண்டான பெண்மணியுடன் ஷாலினியை உட்கார வைத்து, அவளை தோழி ஆக்கிக்கோ, " one fat chick and a beautiful chick make a good combo." என்று வசனம் பேசிய சிகரெட் நாத்தம் பிடிச்ச பய, சிறிது காலம் கழித்து, நண்பனின் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை, பெண்களை பத்தி இழிவா பேசியதற்கு சண்டை பிடிக்கிறான்! எப்படி, பாஸ்?


அப்படியே அர்ஜுன் இடைப்பட்ட காலத்தில் மாறியிருந்தாலும், எப்படி மாறினான் என்பதை எந்த ஒரு காட்சியிலும் காட்டவில்லையே, பாஸ்.

3) அர்ஜுன் கோபக்காரன். படம் முழுக்க எதுக்கு எடுத்தாலும் கோபம். குடிபோதை வேற. வேலையை இழக்கிறான். ஷாலினியை விட்டு பிரிகிறான்.

ஆனா, கடைசில அவனுக்கு எல்லாமே கிடைத்துவிடுகிறது. அப்போ என்ன பண்ணாலும், யாரை அடித்தாலும் சரி, கடைசியில எந்த தண்டனையும் இல்லாமல் வெற்றியும் சந்தோஷமும் கிடைத்துவிடுகிறது. அவன் தேவதாசாக தனியாக வீட்டில் வாழ்ந்த நாட்களில் கூட அவன் அவ்வளவு பெரிய கஷ்டத்தை ஒன்றும் சுமக்கவில்லை. கர்ப்பனி பெண்ணாக தனியாக இருந்த ஷாலினியை விடவா இவன் கஷ்டப்பட்டு இருப்பான்?

4) climax காட்சியில் பூங்கா பெஞ்சில் அமர்ந்து, ஷாலினி அர்ஜுனிடம், " கல்யாணம் ஆன மூனாவது நாளே வீட்ட விட்டு வெளியே வந்துட்டேன். உன் புள்ள இது. என் புருஷம் சுண்டுவிரல்கூட பட்டத்தில்ல" என்று சொல்லும்போது, அட ச்சை! என்ன டா இது. சந்தீப் மிகப்பெரிய எழுத்தாளன் சிந்தனையாளன் என்று நினைத்தோமே, கடைசில இவனும் ஒரு சினிமாக்காரன் தானா என்று தோன்றியது.

5) அர்ஜுன் ரெட்டியின் அர்த்தமில்லாத ஆத்திரத்தை தேவையில்லாமல் கொண்டாடிய படமோ இது?

இப்படி நினைச்சு பாருங்க.

அனிதா ரெட்டி என்று ஒரு கோபக்கார புள்ள.


அனிதா மொட்டைமாடியில் காலையில் படுத்துகிடக்க, அங்கு காயந்த துணியை எடுக்க வந்த, ஆண்ட்டி "என்ன என் நைட்டிய போத்தி இருக்க" என்று கூற, அதற்கு அனிதா போத்திய நைட்டிய கழுட்டி, ஆண்ட்டி தன் கையில் வைத்திருந்த அங்கிள் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு, தண்ணீர் டேங்கில் பியர் பாட்டிலை மொண்டு குடிக்கிறாள்,

'அர்ஜுன் ரெட்டி' ஒரு cult movie என்பவர்கள் 'அனிதா ரெட்டி' என்றிருந்தால் அதையும் கொண்டாடி இருப்பார்களா?

இப்படி தான் எனக்கு படம் முழுக்க சிந்தனை ஓடியது.

இப்படி தானே நிலம்பரி கோபம் அடைந்தாள், கடைசில அவங்கள கொன்றது.

இப்படி தானே திமிர் படத்தில் நடித்த கோபக்கார ஷரேயாவையும் கொன்றார்கள்.

'கொடி' படத்தில் நடித்த திரிஷாவுக்கு இதே நிலைமை தான்.

பொண்ணுங்க பண்ணா ரத்த காவா.
பசங்க பண்ணா தக்காளி தொக்கா?

அட போங்கய்யா!

************************************

அகோரி இல்ல, சுடுகாடு இல்ல, டீ தோட்டம் இல்ல, பீச் ஹாவ்ஸ் இருக்கு. ஏகப்பட்ட ஜலபுலஜங்ஸ் சீன்னு இருக்கு. அதுல ஒரு 12 lip-to-lip சீன் இருக்கு. 37 தடவ படத்துல நிறைய பேரு பேச்சு வார்த்தைல 'fuck' வார்த்தைய ரொம்பவும் யதார்த்தமா பயன்படுத்துறாங்க.

இப்போ இந்த படத்துல எது புரிஞ்சுதுனு இயக்குனர் பாலா, இத தமிழ்ல ரீமேக் பண்ண கிளம்பிட்டாரு??


அப்பா விக்ரம் தன் மகன் துருவ தமிழ்ல அறிமுகப்படுத்த போறாரம் பாலாவ வச்சு.

தம்பி துருவ், என் அனுபவுத்துல சொல்றேன். எப்படி பெத்தவங்கள புரிஞ்சுகிறது கஷ்டமோ அத மாதிரி, பிள்ளைங்க நமக்கு எது புடிக்கும் புடிக்காதுனு கடைசி வரைக்கும அவங்களுக்கு புரியாது.
இது தான் நல்லதுனு நமக்கிட்ட வந்து சொல்வாங்க. அதயெல்லாம் கேட்கனும்னு அவசியமில்ல.

பிடிக்காத கல்யாணத்துல பொண்ணோ மாப்பிளையோ முதல் நாள் ஓடி போறது இல்லையா? அந்த மாதிரி படம் shooting முதல் நாள் எங்கயாச்சும் ஓடி போய்டு தம்பி!

இல்ல, இல்ல, அப்பா சொன்ன சரி தான். நான் பாலா கையில அடி வாங்கினா தான் சினிமாவுல சீமாசானத்துல உட்காந்து ரசிகர் மன்ற 6 அடி மாலை போடுவாங்கனு நீ நினைச்சினா, கடைசில எலும்புகூடு மாலைகூட கிடைக்காது தம்பி.