Jan 1, 2016

blog எழுத விரும்பு!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!!

புத்தாண்டு முதல் நாள் அன்று என்ன செய்கிறோமோ அதை தான், வருடம் முழுக்க நம்மை சுற்றி, நம்மை கவ்வி, நம்மை பின் தொடர்ந்தே வரும்! இப்படி ஒரு பழைய ஐதிகம் எனக்கு. அது உண்மை தான் போலும். 2015 வருடம் அன்று, என்ன செய்தேனே அதை தான் 2015 வருடம் முழுக்க நேர்ந்தது.

ஒரு தனிப்பட்ட பிரச்சனை காரணமாய் 2015 ஆண்டு முதல் நாளே அழுதேன். மன உளைச்சல் அன்று. அவ்வாண்டு முழுதம் அழுகை, மன உளைச்சல், நிம்மதி இல்லாத வாழ்க்கை, என சனி பகவான் நம்மை போட்டு வாட்டி எடுத்து விட்டது. சனிஸ்வரன் நமக்கு தான் பக்கத்திலேயே பாய் விரிச்சு படுத்து இருக்கே என்று மனதை சமாதானப்படுத்தி கொண்டால், அவ்வபோது அது என் மீது கால்களை தூக்கி போட்டு நிம்மதியாய் தூங்க, நான் தான் தூக்கமின்றி தவித்தேன். ஆனால் எல்லாவற்றிலிருந்து மீண்டு வந்தேன், 2015 கடைசியில் பல நல்ல விஷயங்கள் நடந்தது. (எனது குறும்படம் வெளிவந்தது https://www.youtube.com/watch?v=Wygbavhuge8


ஆக 2016 முதல் நாள் அன்று நல்லதே செய்ய வேண்டும் என்ற ஆசை.

1) உடற்பயிற்சி செய்.

காலையில் 6 மணிக்கே உடற்பயிற்சி. இது இந்த ஆண்டு முழுதும் நடக்க வேண்டும்.





2) பிடித்ததை சாப்பிடு!

நல்ல உடற்பயிற்சி செய்யனும். அதே சமயம் பிடித்ததை அளவோடு சாப்பிட வேண்டும்.

இந்த டயட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.

இன்று வெள்ளிக்கிழமை என்றாலும், எனக்கு பிடித்த நண்டு ரசம் என் கையில்




3) பளாக் எழுத விரும்பு.

இன்று ஒரு போஸ்ட் போட்டால், வருடம் முழுக்க எழுத அந்த சிவன் பெருமாள் துணை புரிவார்....

ஏன் சிவன் பெருமாளா??
அவர் தான் படிப்பு/எழுத்து department  in charge. 

என்னது?

அவர் இல்லை??

ஓ சாரி சாரி.......

சரஸ்வதி i mean.


(நான் இந்த subjectல் கொஞ்சம் weak!)

4) குறும்படம் பார்!




நான் பார்த்து ரசித்து வியந்த ஒரு குறும்படம். அதிக பொருட்செலவில் இப்படி ஒரு பிரம்மாண்ட குறும்படம்!

துர்க்கி நாட்டில் ஒரு தமிழ் குறும்படம்!!! ச்சே chanceless man!

Dec 30, 2015

Romantic Suspense Tamil Short Film- கண நேர நினைவுகள்




இது நான் இயக்கிய மூன்றாவது குறும்படம். உங்களது விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து.....

Dec 24, 2015

பசங்க 2 விம்ரசனம்- இந்த வருடத்தின்.....

இனி இந்த வருடத்தில் வேறு எந்த படங்களையும் பார்க்க கூடாது-னு முடிவு எடுத்துட்டேன். ஏனா இந்த வருடத்தின் சிறந்த படத்தை பார்த்து விட்டேன்.

பசங்க 2.

குழந்தைகள் நடித்து, பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் பாடம் கற்று கொடுக்கும் படம் இது. அறிவுரை கூறும் படமாக இருந்திருக்கலாம். ஆனால், இயக்குனர் பாண்டிராஜ் அந்த அபத்தத்தை செய்யாமல் அனைவரும் ரசிக்கும்படி படத்தை தந்துள்ளார். குழந்தைகள் நடிப்பாக இருக்கட்டும், சூர்யா, அமலா பால் நடிப்பாக இருக்கட்டும், கட்சிதமாக உள்ளது படத்துக்கு.

படத்தின் வண்ணம் இக்கதைக்கு இன்னொரு பலம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது, வசனங்கள் தான்.

1) குழந்தை ஒன்று கேட்கும், tamil mediumக்கும் english mediumக்கும் என்ன வித்தியாசம்.

"தமிழ் மிடியத்துல படிச்சவன் தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவான்.
இங்கிலீஷ் மிடியத்துல படிச்சவன் இங்கிலீஷ்ல கெட்ட வார்த்தை பேசுவான்."

2) குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது அது கதை ஒன்று சொல்லும். தலைமையாசிரியர் சிரிப்பார், ஆனால் பெற்றோர்கள் சிரிக்க மாட்டார்கள்.

அதற்கு தலைமையாசிரியர்: ஏன் நீங்க சிரிக்க மாட்டேங்கிறீங்க?"

குழந்தை: நான் பேசினா, அவங்களுக்கு சிரிப்பு வராது. வெறுப்பு தான் வரும்.

3) 70கிலோ உள்ளவங்க 17கிலோ உள்ள குழந்தைய அடிக்கறது எவ்வளவு பெரிய வன்முறை

இப்படி நச்- என்ற வசனங்கள் படம் முழுக்க உண்டு.

இப்படத்தில் நடித்த குழந்தைகளை பாராட்டாமல் இருக்க முடியாது. ஆண் குழந்தை நட்சித்தரம் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். குறிப்பா, தன் அப்பாவிடம் "வீட்லேந்து கிளம்பும்போது, சாவி இருக்கா. பர்ஸு இருக்கானு செக் பண்றீயே? எப்பாவாச்சு  மூளை இருக்கா-னு செக் பண்ணி இருக்கீயாப்பா?" என்று சொல்லும் போது சிரிப்பு வெடி சத்தம் அரங்கம் முழுதும் ஒலிக்கிறது.

பெண் குழந்தை நட்சித்தரம் மேடை ஏறி கதை சொல்லும்போது, கண் கலங்காதவர் யாரும் இருக்க முடியாது.

இப்படி காட்சிக்கு காட்சிக்கு படம் சுவாரஸ்சியம்.

2015 வருடத்தை சந்தோஷமாய் நிறைவு பெற, இப்படத்தை கண்டிப்பாக பார்க்கவும். மன நிறைவு, சந்தோஷமும் தரகூடிய தரமான படம்.

நன்றி பாண்டிராஜ், சூர்யா!

Dec 19, 2015

தங்கமகன் நல்லா இருக்கு! thanks to ஷாருக் ஜி!

dilwale படம் பார்த்துட்டு நீங்க, புலி படம் பாருங்க, புலி படம் சூப்பர்-னு சொல்வீங்க.

dilwale படம் பார்த்துட்டு நீங்க, சுறா படம் பாருங்க! அட என்னமே செதுக்கி இருக்காரு அப்படினு சொல்வீங்க!

அப்படி தான் ஆசையோடு போனேன் dilwale படம் பார்க்க! அதுக்கு அப்பரம் என் மேலயே எனக்கு கோபம். கோபம் தணிக்க தான் தங்கமகன் பார்க்க சென்றேன். அப்பரம் தான் கொஞ்சம் சமாதானம் அடைந்தேன். 


தங்கமகன் படத்தில் பிடித்தவை:
+ ஏமிக்கும் தனுஷ்க்கும் உள்ள கெமிஸ்ட்ரி.

+சமந்தாவுக்கும் தனுஷ்க்கும் உள்ள மகா மெகா கெமிஸ்ட்ரி (படம் பார்த்த அனைவருக்கும் தனுஷ் மேல லைட்டா பொறாமை வந்திருக்கும். பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறா-னு நம்ம ஒதுங்கி போக வேண்டியது தான்)


+ சமந்தா தனுஷ் நடித்த சில காதல் காட்சிகளில் அமுதம் போல் வழிந்த விரசம் இல்லாத காதல்.

+கே ஸ் ரவிகுமார்!! சார்!! பின்னிட்டீங்க! இப்போது உங்களுக்கு பொற்காலம் நடிப்பதில்! இதையே தொடர்ந்து செய்யலாம்! இயக்குனர்கள் நடித்தால் பார்க்க சாயிக்காது என்பதை உடைத்து விட்டீர்கள்!

+ புதிய முகம் ஆதித் அருண் (குறும்படங்கள் பலவற்றில் நடித்து இருக்கிறார். காதலில் சொதப்புவது எப்படி குறும்படத்தின் ஹீரோ இவர் தான்). இவரது நடிப்பும் அருமை. 

+பாடல்களும் அது படத்தில் வரும் இடங்களும் ரொம்ப பொருத்தமா இருக்கு.

+முக்கியமா எனக்கு பிடிச்சது. படத்தில் நீளம். இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் தான்.

+ஆண்ட்ரியாவின் குரல், ஏமிக்கு கச்சிதமாய் பொருந்திய வண்ணம்.

+சமந்தாவும் பிரமாதமாய் அவரே அவருக்கு செய்த டப்பிங். குறிப்பா, தனஷை பார்த்து "யப்பா யப்பா...ஐயோ ஐயோ...ம்ம்ம்...லவ் யூ லவ் யூ!" என சொல்லும் போது....

என் மனதில் தோன்றியது "இந்த நடிப்ப இத்தன நாளா எங்கம்மா ஒலிச்சு வச்சு இருந்த?" 

*******************************

ஆக இது இன்னொரு VIPஆ?

அப்படியும் இல்லை.

- முதல் பாதியில், காதல், இளமை என்று திரைக்கதை ஜாலியாக இருந்தாலும், வலு இல்லாமல் இருந்தது. இரண்டாம் பாதி கதைக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. ஆக, ஏதோ இரண்டு கதைகளை பார்த்த எண்ணம் தோன்றுகிறது. 

- வில்லன் இருந்தாலும் இல்லாத மாதிரி இருக்கு. 

- தனஷ் ஏற்கனவே நடித்த '3' படத்தின் சாயல் நிறைய தெரிந்தது. 

- பஞ்ச் டயலாக் என்ற பெயரில் சில நீளமான வசனங்கள் நல்லா இல்லை.

- ராதிகாவின் நடிப்புக்கு தீனி போடவில்லை என்று தோன்றுகிறது. அவரை இன்னும் நல்லா பயன்படுத்தி இருந்திருக்கலாம்.

- சதீஷின் காமெடி பெரிய பலம் சேர்க்கவில்லை.


தங்கமகன்:

வைரமகன் என்று இல்லாமல் இருந்தாலும், ஓரளவுக்கு வெள்ளிமகன் இடத்தை பிடித்துவிட்டான்!