Sep 25, 2007

அத்தை மகன் சிவா (part 1)

சீதாவிற்கு மழை ரொம்ப பிடிக்கும், சின்னசிறு நாய்க்குட்டிகளுடன் விளையாடுவது பிடிக்கும், பாலில் தேன் கலந்து குடிப்பது பிடிக்கும், இரவில் தனிமையாக பாட்டு கேட்பது பிடிக்கும், ஆளில்லாத பேருந்து பிடிக்கும், வானவில் பிடிக்கும், பூக்களின் மீது இருக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கும், இதை எல்லாம்விட அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அவள் அத்தை மகன் சிவா! சிவா என்ற பெயரை கேட்டாலே போதும் சீதாவிற்கு உலகமெல்லாம் ஒரு முறை பறந்துவந்ததுபோல் திரிவாள்.

சீதா சிங்கப்பூரிலே பிறந்து வளர்ந்தவள். அவளின் தந்தையின் தங்கை மகன் தான் சிவா. அத்தை குடும்பம் எல்லாம் திருச்சியில் உள்ளனர். பலமுறை சீதா இந்தியாவிற்கு சென்று வருவதால் அவளுக்கு அந்த ஊரும் அதைவிட சிவாவையும் ரொம்ப பிடித்துவிட்டது. முறை பையன் வேற.. கேட்கவா வேண்டும்! வருடத்திற்கு ஒரு முறை இந்தியா சென்று வருவதை சீதாவின் குடும்பம் ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். சீதாவிற்கு அப்போது 19 வயது இருக்கும், சிவாவிற்கு 21 வயது!

பல வருடம் பழகி இருந்தபோதிலும், சீதாவிற்கு அவ்வயதிலிருந்துதான் சிவா மீது காதல். இதுவரைக்கும் அவனிடம் சொன்னதில்லை. சிவாவிற்கும் தன் மீது அதே ஆசை உண்டா? என்பதும் தெரியாது. அதற்கு பிறகு சீதா இந்தியா போவதே சிவாவை பார்க்கதான். எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும்போது பழாபோன பயம் தடுத்துவிடும். சிங்கப்பூரிலிருந்து சொந்தம் வந்தால்தான் போதுமே...ஊரே திரண்டு வரும். இந்த கூட்ட நேரிசலில் வேற என்னத்த சொல்ல. குல தெய்வ கோயிலுக்கு பேருந்தில் சென்றபோது, வேண்டும் என்றே அவன் இருக்கை அருகே உட்கார்ந்து கொள்வாள். தூங்கி விழுவதுபோல் நடித்து அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். சிங்கையில் வேறும் ஜீன்ஸ்-டி ஷர்ட் போட்டு திரியும் சீதா இந்தியாவிற்கு போனவுடன் அப்படியே குடும்ப குத்துவிளக்குதான் போங்க! மாமனுக்கு பிடித்த கலரில் தாவணி போட்டு கொள்வதும், சமையலே தெரியாமல் இருந்தாலும் சமையலறையில் போய் அத்தைக்கு உதவி செய்வதும்...அப்பப்பா... சீதாவின் அட்டகாசம் ஒரு ரகளை ஆயிடும்!

இந்த கிறுக்குத்தனத்திற்கு காரணம் சீதா சிவாவின் மீது வைத்திருக்கும் அளவுகடந்த காதலே ஆகும்! சிவா ரொம்ப ரொம்ப அமைதியானவன். பெண்களை அதட்டிகூட பேசமாட்டடன். விரிந்த கண்கள், அதுக்கு ஏற்ற கண்ணாடி. அளவு எடுத்து செய்ததுபோல் மூக்கு. அதுக்கு கீழே கச்சிதமான மீசை. சிரிக்கும்போது அழகாய் வளையும் மேல் உதடு, கன்னத்தில் விழும் குழி! அதைவிட ரொம்ப ரொம்ப கெட்டிக்காரன். அவங்க ஊரிலே +2 தேர்வில் முதல் மாணவன். பொறியியல் படிப்பு படிக்க சென்றான்.

நான்கு வருடங்கள் உருண்டோடின. சிங்கையில் சீதா பிஸ்சி கணிதம் கடைசி ஆண்டு படித்து கொண்டிருந்தாள். சிவா நல்ல தேர்ச்சியுடன் பட்டபடிப்பு முடித்து சிங்கப்பூரில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

"ஹலோ மாமா, நான் தான் சிவா பேசுறேன். அங்க ITTA technologies கம்பெனியில் வேலை கிடைச்சுருக்கு மாமா. அடுத்த வாரம் அங்க வரேன். ஒரு வாரத்துக்கு அப்பரம் தான் கம்பெனியில் புதுசா தங்க..இடம் கொடுப்பாங்களாம்... அதனால.. நான் நம்ம வீரபாண்டி அண்ணன் மகன் வீட்டுல கொஞ்ச நாளைக்கு தங்கிகிறேன் மாமா..."என்றான் சிவா சீதாவின் தந்தையிடம்.

அதற்கு அவர், "அப்படியே சிவா, ரொம்ப சந்தோஷம் வேலை கிடைச்சதுல. என்னிக்கு வரேனு சொல்லு. நான் வந்து அழைச்சுகிட்டு போறேன். சரியாப்பா." என்று மனமகிழ்ச்சியுடன் கூறி விவரங்களை பெற்று கொண்டார். இதை கேட்டபடி சோபாவில் செய்திதாளை படித்து கொண்டு இருந்தாள் சீதா. சமையலறையிலிருந்து காபியை குடித்தபடியே வெளியே வந்த சீதாவின் அம்மா கேட்டார் "யாருது?". சீதாவின் தந்தை சிவா கூறியதை சொன்னனர். கேட்டவுடன் சீதாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. அதற்கு அப்பரம் செய்திதாள் படித்தாளா இல்லை படிப்பதுபோல் நடித்தாளா என்பதை அவள் மனசை கேட்டுதான் சொல்ல வேண்டும்.

சீதாவின் அம்மா, "என்னங்க நீங்க... சிவா போய் மத்தவங்க வீட்டுல தங்கினால் என்ன அர்த்தம். நம்ம வீட்டுலையே தங்க சொல்லுங்க. உங்க தங்கச்சி நமக்கு எத்தனையோ செஞ்சிருக்கா... நாம இதகூட செயலையினா எப்படி... நம்ம சீதாவும் இருக்கா... எதாச்சு உதவி வேணுமுனாகூட சீதா செய்வா.." என்று காபியை குடித்தவாறு கூறினார். இதை கேட்டவுடன் சீதாவுக்குள் ஒரு ஐஸ்பெட்டியை வைத்ததுபோல் குளிர்விட்டு குதுகலமாகினாள். எனினும் எதையும் காட்டி கொள்ளமால் செய்தித்தாளை படித்து கொண்டிருந்தாள். செய்திதாளில் எழுத்துகளா தெரிந்தது.... சிவா முகம் தானே ஆயிரம் முறை வந்துவந்து சென்றது! சீதாவின் தந்தை உடனே சிவாவிற்கு தகவல் சொல்லி தனது வீட்டுலையே தங்குமாறு கேட்டு கொண்டான். சிவா முதலில் வேண்டாம் என்று நினைத்திருந்தான் இருப்பினும் அவர் கேட்டு கொண்டதால் மறுக்க முடியாமல் ஒப்புகொண்டான்.

சீதாவிற்கு தான் கையும் ஓடல காலும் ஓடல. வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து அலங்காரம் படுத்தும்வரை எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்தாள். மாமனுக்கு புதுசு புதுசா சட்டை வாங்கி வைத்தாள், அவருக்கு பிடித்த மாதிரி அவர் அறையை அலங்கரித்துவிட்டாள்.

சிவா காலை 6 மணி விமானத்தில் வந்து இறங்குவதால்... அவள் அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிட்டாள். அன்று சீதாவின் தந்தைக்கு வேலை இருப்பதால், சீதா தான் சிவாவை அழைத்துகொண்டு வருமாறு சொல்லிவிட்டார்கள். அதுவும் அவளே தனது டோயோட்டா காரில் அழைத்து கொண்டு வரவேண்டும்... அட கரும்பு திண்ண கூலியா! 5 மணிக்கே விமான நிலையத்திற்கு சென்றுவிட்டாள். ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்தபடியே உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் துடித்தாள். விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பு - " 6 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் சற்று தாமதமாகும்" என்று! ஆஹா... எரிகின்ற நெருப்பில் ஆசிட்டை ஊத்திட்டாங்கய்யா!! விமான நிலையத்தில் மக்கள் இருந்ததால் தப்பித்தோம்... இல்லையென்றால் பத்தரக்காளி ஆட்டமே ஆடி இருப்பாள்!

கொஞ்ச நேரம் கழித்து ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. பயணிகள் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். மின்னல் வேகத்தில் சீதாவின் பார்வை அங்கும் இங்கும் ஓடியது தன் மாமனை தேடி....

(நாளை பூக்கும்- தொடரும் என்பதைதான் வித்தியாசமாக சொன்னேன்)

அத்தை மகன் (part 2)

9 comments:

....$Vignesh said...

1ஸ்ட் பார்ட் நல்லாயிருக்கு
என்னங்க 2ன்ட் பார்ட் போட டைம் இல்லையா?

FunScribbler said...

ஆமாங்க விக்கி, நேரம் இல்ல. எனினும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி! ரொம்ப சந்தோஷம்! இப்ப பரிட்சை வேற நடுக்குது.. முடிச்ச உடனே, தொடர்ந்து எழுதுறேன் கதைய.

Divya said...

\\ சிவா ரொம்ப ரொம்ப அமைதியானவன். பெண்களை அதட்டிகூட பேசமாட்டடன். விரிந்த கண்கள், அதுக்கு ஏற்ற கண்ணாடி. அளவு எடுத்து செய்ததுபோல் மூக்கு. அதுக்கு கீழே கச்சிதமான மீசை. சிரிக்கும்போது அழகாய் வளையும் மேல் உதடு, கன்னத்தில் விழும் குழி! அதைவிட ரொம்ப ரொம்ப கெட்டிக்காரன்.\\

வர்னனை சூப்பர்!!

ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறீங்க!

மிகவும் ரசித்தேன்.

காதல் அரும்பிய ஒரு பெண்ணின் உணர்வுகளை அழகாக வெளிப்படுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்!!

அடுத்த பாகம் போடலீங்களா?

FunScribbler said...

படித்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றி திவ்யா... ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுனேன் இந்த முதல் பாகத்தை.. அதுக்கு அப்பரம்.. நேரம் கிடைக்கல.. நாளைக்கு பரிட்சை முடியுது.. உடனே எழுதி முடிஞ்சுறேன். (கொஞ்சம் உட்கார்ந்து யோசிக்கனும்.. மிச்ச கதைய..ஹிஹிஹி)

ஜே கே | J K said...

நல்லா இருக்கு.

அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க.

மங்களூர் சிவா said...

//
இதை எல்லாம்விட அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அவள் அத்தை மகன் சிவா! சிவா என்ற பெயரை கேட்டாலே போதும் சீதாவிற்கு உலகமெல்லாம் ஒரு முறை பறந்துவந்ததுபோல் திரிவாள்.
//

Siva Perai kEttale chumma adhirudhulla.

hi Seetha darling!!

FunScribbler said...

ஹாஹா... சிவா.. இது உங்களுக்கே கொஞ்சம்.. :)) பரவாயில்ல... தொடர்ந்து படிங்க.. கதையில 'சிவா' என்ன பண்ண போறாருனு!!

குட்டிபிசாசு said...

சிவா வந்தோடனே ஒரு டூயட் வச்சிடுங்க. (கதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!!)

FunScribbler said...

நன்றி குட்டி பிசாசு