முந்தைய பாகத்தை படிக்க இங்க கிளிக் செய்க
அத்தை மகன் சிவா(part 1)
(தொடர்ச்சி...)
கூட்டம் கூட்டமா வெளியே வந்து கொண்டிருந்த மக்களை பார்த்து கொண்டிருந்தாள். பின்னாடியிலிருந்து யாரோ ஒருவரின் கை தன் வலது தோள்பட்டையில் பட்டது. யார் என்று திரும்பி பார்த்தாள். தனது பள்ளி தோழி லீனா!
"என்னடி பார்த்து ரொம்ப நாளாச்சு... இங்க என்ன பண்ணுறே" என்று அந்த தோழி, சீதாவின் அவஸ்தை புரியாமல் கேட்டாள். "ஓ.. ஒன்னுமில்ல... அப்பாவோட கம்பெனி பார்ட்னர் வரார். அதான் அவர அழைச்சுகிட்டு போக வந்து இருக்கேன்." என்று ஒரு 'பிட்'டை போட்டாள். அத்தை மகனுக்காக நிற்கிறேன் என்று சொன்னால், அதை வைத்து லீனா ஒரு மெகா சீரியல் அமைத்து தேவையில்லாதவர்களிடம், ஊர் முழுக்க சொல்லிவிடவாள் என்பதால் அந்த பிட். அவசர அவசரமாக பேசி லீனாவை போகவைத்தாள்.
திரும்பி சீதா கூட்டத்தை நோக்கி தன் பார்வையை வைத்தாள். மறுபடியும் ஒரு கை பின்னால் தன் முதுகை தட்டியது. 'இந்த லீனாவுக்கு வேற வேலையே கிடையாது.. சரியான.. irritating pest' என்று மனதிற்குள் திட்டி கொண்டே திரும்பி,கோபத்துடன் கத்தினாள் " ஏய் லீனா உனக்கு இப்ப என்னதான் வேணும்?"
"வீட்டுக்கு போனும்" என்று களைப்புடனும் ஆச்சரியத்துடனும் சத்தமில்லாமல் சொன்னான் சிவா!!
அட அது லீனா இல்ல.. சிவா!! சற்று அவமானமாக போயிற்று.அசடு வழிய "சிவா, சாரி.. என் தோழி..ம்ம்..லீனானு..தான் நினைச்சு... i am extremely sorry." என்று ஆங்கிலமும் முட்ட தமிழும் திணற, பேசினாள் சீதா. பரவாயில்ல என்பது போல் தலையை லேசாக ஆட்டினான் கிளைப்புடன் இருந்த சிவா.
சீதாவின் கார் டிக்கியில் பெட்டிகளை வைத்துவிட்டு கிளம்பினார்கள் இருவரும். என்னென்னமோ பேசவேண்டும் என்று நினைத்த சீதா, லீனா செய்த குழப்பத்தால் ஒன்றுமே சொல்லாமல் வந்தாள். கோபம் ஒரு புரம், அவமானம் ஒரு புரம்.. அழுகை ஒரு புரம் என்று எல்லாம் உணர்ச்சிகளும் சீதாவுக்குள் இருந்த 'மன கிரைண்டரில்' அரைத்து கொண்டிருந்தன. சீதா மனசுக்குள் விட்ட சாபங்களால் இனி லீனாவின் அடுத்த 7 தலைமுறைகளும் காலி!!
சிவாவுக்கு இது புது ஊர் என்பதால்.. கார் பயணத்தில் சாலைகளையும் மரங்களையும் ஊர் சுத்தமாக இருப்பதையும் பார்த்து ரசித்து கொண்டு வந்தான். 20 நிமிடங்களில், வீட்டை அடைந்தனர். அந்த பெரிய அடுக்குமாடி கட்டடத்தை பார்த்து வியந்து நின்றான் சிவா.
'ஆறாவது மாடி நம்ம வீடு' என்றாள் சீதா. சிவா தன்னை பற்றி ஒன்றும் கேட்கவில்லையே என்ற வருத்தத்தோடு பெட்டிகளை மின்தூக்கியில் ஒன்று ஒன்றாக வைத்தாள்.
"வா சிவா... வா, எப்படி இருந்துச்சு பயணம்,.!" என்று சீதாவின் அம்மா ஆரத்தி தட்டோடு வீட்டின் வாசலில் நின்று வரவேறுத்தார்.
"அட என்ன அத்தை, இதுக்கு போய் ஆரத்தி எல்லாம் எடுத்துகிட்டு" என்றான் சிவா.
"நீ சும்மா இருப்பா... எத்தன பேரு கண்ணு பட்டு இருக்கும்? நீ நில்லுப்பா அப்படியே" என்று மாமியார் தன் மருமகனுக்கு ஆரத்தி எடுப்பதை ரசித்தவளாய் வீட்டினுள் சென்றாள். பெட்டிகளை சிவாவிற்காக அவள் ஏற்பாடு செய்து இருந்த அறையில் வைத்தாள். சிவாவின் அறையை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். பின்னர், வீட்டையும் வெளியே இருக்கும் சின்ன தோட்டத்தையும் காட்டினாள்.
"இந்த மாதிரி வீடுகளுக்கு பேரு condominium. இங்க எல்லாம் வசதியும் இருக்கு. swimming pool, spa, tennis courts, party halls..." என்று ஏதோ வீட்டு சேல்ஸ் ஏஜண்டு போல பேசினாள்.என்ன பேசுவது என்று தெரியவில்லையாம்!! ஆனால், சிவாவிடம் பேச பேச அவளுக்குள் கொப்பளித்த கோபம் குறைந்தது. சிவா தன்னுடன் இருக்கிறான் என்ற சந்தோஷமே அவளை கிறுக்கடித்தது.
தோட்டத்தில் இருக்கும்போது ரோஜா பூவை பறிக்க நினைத்தவள் பக்கத்தில் இருக்கும்போது, என்ன செய்வாளோ? சிவா அப்படியேதான் இருந்தான். தன் குணம் மாறாதவனாய், அமைதியானவனாய்...இப்படி அவனது மாறாத குணம் தான் அவளின் காதலை அதிகப்படுத்தியது. நாட்கள் ஓடின, வாரங்கள் பறந்தன. சிவா ஊரில் இருக்கும்போதே சீதா இங்கே கனவில் டூயட் எல்லாம் பாடுவாள். இப்போது, ஓரே வீட்டில்..கேட்கவா வேண்டும்!!
சிவா வந்த நாள் முதல் சீதா, ஜெர்மனி, ஸ்விர்சிலேந், மோஸ்கோ என்று ஒவ்வொரு நாள் கனவில் ஒவ்வொரு நாடு சென்றுவந்தாள்.இப்படி ஒரு பக்கம் போக, ஏதோ ஒன்று அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது. என்னதான் அத்தை மகனாக இருந்தாலும் காதல் ஒத்து வருமா? சிவா ஏற்று கொள்வாரா? இது சரி வருமா? என்று 1000 கேள்விகள் மனதிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து மனதிற்கும் தண்டவாளம் இல்லாத இரயிலில் உருண்டோடின.
மனதிற்குள் இனிமேல் அவதிப்படமுடியாது என்று தீர்மானித்த சீதா தன் காதலை சொல்லிவிடலாம் என முடிவெடுத்தாள்.என்னதான் கராத்தேவில் பிளாக் பெல்ட் வைத்திருந்த தைரியமான பெண்ணாக இருந்தாலும், காதல் என்று வந்துவிடும்போது அத்தனை தைரியமும் அப்பீட்டு!!
எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று போராடினாள். சிங்கைக்கு வந்து 2 வாரங்கள் தான் ஆகின்றன. இப்போதான் புது வேலை, சூற்றுசூழல், புது இடம் என்று ஒவ்வொன்றாக பார்த்து வருகிறான் சிவா. இந்த நிலையில் காதலை சொல்ல உகந்த நேரமில்லை. அதனால் இன்னும் ஒரு மாதம் போகட்டும் என்று தீர்மானித்தாள். ஆனால் ,அதுவரை சும்மா இல்லை சீதா. காதலை வெளிப்படையாக சொல்லவில்லை தவிர, தன் அன்பை எவ்வளவுக்கு எவ்வளவு வெளிக்காட்ட முடியுமா அத்தனையும் செய்தாள் சீதா. இப்படியாவது, சிவாவிற்கு புரியாதா என்று நோக்கத்தில்.
வெள்ளிக்கிழமை கோயிலுக்கு செல்வது, தனது கல்லூரியை சுற்றி காண்பிப்பது, சமையலே தெரியாத சீதா சிவாவின் விருப்பமான உணவுகளை சமைக்க கற்று கொள்வது, எவ்வளவு வேலை பளு இருந்தாலும் சிவா தூங்கும்போக முன் ஒரு அரை மணி நேரமாவது அவனுடைய வேலை பற்றியும் அந்த நாள் நடந்தவற்றை பற்றி பேசுவது என்று சீதா செய்து கொண்டிருந்தாள்.
இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஒரு சனிக்கிழமை மாலை சீதா, அவள் பெற்றோர்கள் மற்றும் சிவா suntec cityயில் இருக்கும் muthu's curry உணவகத்திற்கு சென்றனர்.
"என்னபா சிவா... இந்த ஊரு பத்தி என்ன நினைக்குறே, வேலையெல்லாம் பிடிச்சுருக்கா.." என்று கேட்டார் சீதாவின் அப்பா.
"நல்லா போகுது மாமா.. வேலை பரவாயில்ல.. ஆனா நம்ம வீட்டுலேந்து ரொம்ப தூரமா இருக்கு. office quarters ஆப்பீஸ் பக்கத்துல இருக்கு. இன்னும் நாலு அஞ்சு நாள்ல அங்க போயிடலாம்னு இருக்கேன் மாமா." என்றான் சிவா.
சீதாவிற்கு இதில் உடன்பாடு இல்லை. (இருக்காதபின்னே) இருந்தாலும் சிவா சொல்வதை கேட்டு கொண்டிருந்தாள்.
"என்ன சிவா நீ.. நம்ம வீடு இருக்கும்போது..." என்று சீதாவின் அம்மா சொன்னாள்.
"அது இல்ல அத்தை. பக்கத்துல இருந்தா வசதியா இருக்கும்." என்றான் சிவா.
"அதுவும் சரி தான் சிவா. உன்னோட விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம். ஆனா.. அடிக்கடி வீட்டுக்கு வந்து போகனும் சொல்லிட்டேன்.. சனிக்கிழமையில வேலை இல்லேனே.. வெள்ளிக்கிழமை ராத்திரியே வீட்டுக்கு வந்துடு. சனி, ஞாயிறு வீட்டுல இருந்துட்டுதான் போகனும்." என்று சீதாவின் அம்மா சொன்னதற்கு சரி என்று ஒரு புன்னகையினால் காட்டினான் சிவா.
"அப்பரம் சிவா.. நல்ல வேலை கிடைச்சாச்சு.. இனி அடுத்து என்ன.. கல்யாணம் தானே." என்று சிரித்தபடியே சிவாவின் முதுகில் செல்லமாய் தட்டினார் சீதாவின் அப்பா.
"ஆமாங்க.. சட்டுபுட்டுனு கல்யாணத்த பண்ணி வைக்கனும் சிவாவுக்கு.. இப்பலாம் நல்ல பொண்ணுங்க கிடைக்குறது ரொம்ப கஷ்டமா போச்சு. நம்ம ஊருல படிச்ச பொண்ணுங்க இரண்டு மூனு பேரு தானுபா?" என்று சீதாவின் அம்மா சிவாவை பார்த்து கேட்டவுடன் சிவாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
சீதாவுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் சிலையாய் உட்கார்ந்து இருந்தாள்.
"இங்க பாருடா.. சிவாவுக்கு வெட்கத்த. ஏன்ப்பா நம்ம மேலேதெருவுல இருக்கும் பாண்டிராசு தங்கச்சி கோமதி சென்னையில்தானே வேலை பாக்குது.." என்று சீதாவின் அப்பா சொல்லி முடிப்பதற்குள் சீதாவின் மனசாட்சி அவளுக்குள்
' எங்கப்பாரு சீதா, உனக்கு எதிரி உங்க அப்பா உருவத்துல உட்கார்ந்து இருக்கு' என்றது.
"இல்ல மாமா.... கோமதி பெங்களூருல வேலை பாக்குது. கனடா நாட்டு mnc அது, அங்க senior executive officer வேலைனு கேள்விப்பட்டேன்." என்றான் சிவா.
"கேள்விப்பட்டியா? கேட்டு தெரிஞ்சுகிட்டியா?" என்று சீதாவின் அம்மா சிவாவை கிண்டல் அடிக்க, " ம்ம்.. அப்ப சரி தான் கல்யாண பேச்ச ஆரம்பிச்சுட வேண்டியதுதான்" என்று மேலும் சிவாவிடம் சொல்ல, அவன் கண்ணம் சிவக்க " அட போகங்க அத்தை" என்று சொல்லிகொண்டே கை கழுவ சென்றான்.
மறுபடியும் சீதாவின் மனசாட்சி அவளுக்குள் 'இந்தா சீதா, உனக்கு மூனு எதிரிங்க இப்ப.. உங்க அப்பா, உங்க அம்மா, அந்த கோமதி!! உஷார்!! உஷார்!!'
சீதாவுக்கு கை கால் ஓடவில்லை. சிவாவை இழந்துவிடுவோமோ என்று பயம் அதிகரித்தது. பேனா உடைந்தால் அதை வைத்து எழுத முடியாது. கண்ணாடி உடைந்தால் அதை வைத்து பார்க்க முடியாது. ஆனா முட்டை உடைந்தால்தான் ஆம்லட் போடமுடியும். அதுபோல, சீதா தன் காதலை சிவாவிடம் உடைத்துவிடலாம் என்று அதிரடி முடிவு எடுத்தாள்.
அடுத்த நாள் காலையில் சீதா தன் அறையில் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருந்தாள். எப்படி சொல்வது, எங்க சொல்வது என்று யோசித்தாள். அப்போது, சிவா அறையினுள் வந்தான் " சீதா, busyயா? பேசலாமா?" என்றான். சிவா இதுபோல் ஒருநாளும் பேசியதில்லை. ஆச்சிரியமாக இருந்தது அவளுக்கு. "வா சிவா.. வா.. சிட்." என்றாள் சீதா.
"ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும், சீதா. அதான்.. " என்று இழுத்தான் சிவா.
"என்ன சொல்லு சிவா" என்று புரியாதவளாய் சீதா.
" இங்க வேணாம். நான் அப்பரம் சொல்லுறேன். நம்ம வெளியே போவோம். singapore flyerக்கு போவோம். நான் போனதில்லை. இன்னிக்கு 5 pm ஓகே?" என்று சிவா கேட்டான்.
ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் "ஒகே" என்றாள் சீதா. அவன் அறையிலிருந்து சென்றுபிறகு தான் சுயநினைவுக்கு வந்தாள். ஏன் நான் சரி சொன்னேன்? எதுக்கு திடீரென்று வெளியே கூப்பிடுகிறான்? என்று சீதாவிற்குள் grandmaster கேட்கும் கேள்விகளைவிட பயங்கரமான கேள்விகள் எல்லாம் இடியுடன் கூடிய மழைபோல் பெய்தது.
5 மணி ஆகியது. இருவரும் singapore flyerக்கு சென்றனர். இது பெரிய ராட்டினம். இதில் பல பெட்டிகள் உள்ளன. இதில் ஒரு பெட்டியில் உட்கார்ந்து அப்படியே சிங்கப்பூரையே சுற்றி பார்க்கலாம். 42 நிமிடங்கள் சுற்றிவரலாம். சீதாவும் சிவாவும் ஒரு பெட்டியில் ஏறினர். அந்த பெட்டியில் வேறு யாருமில்ல...
(தொடரும்)
அத்தை மகன் சிவா (part 3)
49 comments:
தொடரவும். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
- விழியன்
ஹீரோ 'சிவா'வின் அழகை பற்றி விவரிக்கவில்லையே!?!?!
ஏன்???
//
கோபம் ஒரு புரம், அவமானம் ஒரு புரம்.. அழுகை ஒரு புரம் என்று எல்லாம் உணர்ச்சிகளும் சீதாவுக்குள் இருந்த 'மன கிரைண்டரில்' அரைத்து கொண்டிருந்தன.
//
சாதா கிரைண்டரா? டேபிள் டாப் கிரைண்டரா? டில்டிங் கிரைண்டரா????
//
'ஆறாவது மாடி நம்ம வீடு' என்றாள் சீதா. சிவா தன்னை பற்றி ஒன்றும் கேட்கவில்லையே என்ற வருத்தத்தோடு பெட்டிகளை மின்தூக்கியில் ஒன்று ஒன்றாக வைத்தாள்.
//
ஏன் கேட்கவில்லை!!
இதனால் கதையின் சுவாரஸ்யத்தில் பயங்கர தொய்வு ஏற்பட்டுவிட்டதே :(
//
"வா சிவா... வா, எப்படி இருந்துச்சு பயணம்,.!" என்று சீதாவின் அம்மா ஆரத்தி தட்டோடு வீட்டின் வாசலில் நின்று வரவேறுத்தார்.
//
அந்த ஆரத்தி தட்டில் சிவா போட்ட 100 ரூபாயை ஏன் குறிப்பிடவில்லை!?!?!
//
சிவா தன்னுடன் இருக்கிறான் என்ற சந்தோஷமே அவளை கிறுக்கடித்தது.
//
சாதாரணமானவர்களுக்கு கிறங்கடிக்கும்
இவளுக்கு 'கிறுக்கடி'த்திருக்கிறது என்ன காரணமோ!?!?!
//
சிவா வந்த நாள் முதல் சீதா, ஜெர்மனி, ஸ்விர்சிலேந், மோஸ்கோ என்று ஒவ்வொரு நாள் கனவில் ஒவ்வொரு நாடு சென்றுவந்தாள்.
//
விசா , ஏர்டிக்கட் எந்த செலவும் இல்லை!!!!!
:(((((
//
"இங்க பாருடா.. சிவாவுக்கு வெட்கத்த.
//
சிவா வெக்கப்பட்டு பாத்ததில்லயே நீங்க!!
ஹும்
//
"இல்ல மாமா.... கோமதி பெங்களூருல வேலை பாக்குது. கனடா நாட்டு mnc அது, அங்க senior executive officer வேலைனு கேள்விப்பட்டேன்." என்றான் சிவா
//
அந்த கோமதி பாவனாவைவிட அழகா செவப்பா இருக்கும் என்ற தகவலும் மிஸ்ஸிங் :(((
//
சீதாவுக்கு கை கால் ஓடவில்லை. சிவாவை இழந்துவிடுவோமோ என்று பயம் அதிகரித்தது.
//
கால் ஓடும் கை எப்பிடி ஓடும்?????
//
(தொடரும்)
//
இந்த பதிவிலேயே மிகவும் ரசித்து படித்த வரி இதுதான்.
(நன்றி குசும்பன்)
//
(தொடரும்)
//
இந்த பதிவிலேயே மிகவும் ரசித்து படித்த வரி இதுதான்.
(நன்றி குசும்பன்)
இதை ஏன் நீங்கள் முதல் பாரா முடிந்தவுடன் எழுதியிருக்க கூடாது!!!!
ச்சும்மா டமாஸு நோ டென்சன் ப்ளீஸ்
நல்லாப் போகுது!
அழகா எழுதறீங்க பாராட்டுக்கள்!
-சுரேஷ்பாபு
//தொடரவும். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்//
repeatu!
மிக மிக ரசித்து படித்தேன் தமிழ், அவ்வளவு அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீங்க, உங்கள் எழுத்தில் ஒரு எழுச்சியும், தேர்ச்சியும் தெரிகிறது, வாழ்த்துக்கள்!
\\"இந்த மாதிரி வீடுகளுக்கு பேரு condominium. இங்க எல்லாம் வசதியும் இருக்கு. swimming pool, spa, tennis courts, party halls..." என்று ஏதோ வீட்டு சேல்ஸ் ஏஜண்டு போல பேசினாள்.என்ன பேசுவது என்று தெரியவில்லையாம்!! \\
ரொம்ப அழகாக இருக்கு இந்த வரிகள்!
\\பேனா உடைந்தால் அதை வைத்து எழுத முடியாது. கண்ணாடி உடைந்தால் அதை வைத்து பார்க்க முடியாது. ஆனா முட்டை உடைந்தால்தான் ஆம்லட் போடமுடியும். அதுபோல, சீதா தன் காதலை சிவாவிடம் உடைத்துவிடலாம் என்று அதிரடி முடிவு எடுத்தாள்.\\
வாவ், தமிழ்!!
அட்டகாசமாக இருக்கிறது! hatsoff my friend!
சிவா ஊருல யாரையும் லவ் பண்றாரோ?? அதை சொல்லத்தான் சீதாவை தனியா அழைச்சுட்டுபோறாரோ??
என்ன சொல்ல போறார்.......
ஹலோ தமிழ் மேடம், சஸ்பன்ஸ் தாங்கல, ஸோ சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!!
நன்றி விழியன் அண்ணா!
//ஹீரோ 'சிவா'வின் அழகை பற்றி விவரிக்கவில்லையே!?!?!
ஏன்???//
முதல் பாகத்தில் விவரித்துவிட்டேன்.
/சாதா கிரைண்டரா? டேபிள் டாப் கிரைண்டரா? டில்டிங் கிரைண்டரா????//
எல்லாம் சேர்ந்து ஒரு கலவை கிரைண்டர்
//ஏன் கேட்கவில்லை!!
இதனால் கதையின் சுவாரஸ்யத்தில் பயங்கர தொய்வு ஏற்பட்டுவிட்டதே :(//
சிவா எப்போதுமே அமைதி தான் இருந்தாலும். தன்னிடம் பேசவில்லை என்ற வருத்தம். ஆனால் சிவாவை பொருத்தவரை அவன் அப்படி தான். அதிகம் பேச மாட்டேன்.
//விசா , ஏர்டிக்கட் எந்த செலவும் இல்லை!!!!!//
ஏன் சிவா நீங்களும் இப்படி கனவு கண்டு பாருங்களேன்.. விசா இல்லாமல் பறக்கலாம்.
//அந்த கோமதி பாவனாவைவிட அழகா செவப்பா இருக்கும் என்ற தகவலும் மிஸ்ஸிங் :(((//
விடமாட்டீங்களே.. வருது வருது மூன்றாம் பகுதியில்...
நன்றி சுவீட் சுரேஷ், dreamz!
//
Divya said...
சிவா ஊருல யாரையும் லவ் பண்றாரோ?? அதை சொல்லத்தான் சீதாவை தனியா அழைச்சுட்டுபோறாரோ??
என்ன சொல்ல போறார்.......
ஹலோ தமிழ் மேடம், சஸ்பன்ஸ் தாங்கல, ஸோ சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!!
//
திவ்யாஆஆஆ
நீ எவ்வளவு கேட்டாலும் உன் 'கைல' சொல்லா மாட்டேன்!!
சீதா 'கைல' தான் சொல்லுவேன்.
சிவா
//அவ்வளவு அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீங்க, உங்கள் எழுத்தில் ஒரு எழுச்சியும், தேர்ச்சியும் தெரிகிறது, வாழ்த்துக்கள்!//
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் திவ்ஸ்!
//வாவ், தமிழ்!!
அட்டகாசமாக இருக்கிறது! hatsoff my friend!//
நன்றி திவ்ஸ்... உங்க கருத்துகள் மேலும் என்னை உற்சாகபடுத்திவிட்டது. விரைவில் நீங்கள் எதிர்பார்த்தது போல் மூன்றாம் பகுதி...
//நீ எவ்வளவு கேட்டாலும் உன் 'கைல' சொல்லா மாட்டேன்!!
சீதா 'கைல' தான் சொல்லுவேன்.//
கிளம்பிட்டாருய்யா.. கிளம்பிட்டாரு! நான் அப்பீட்டு!!
//பேனா உடைந்தால் அதை வைத்து எழுத முடியாது. கண்ணாடி உடைந்தால் அதை வைத்து பார்க்க முடியாது. ஆனா முட்டை உடைந்தால்தான் ஆம்லட் போடமுடியும். அதுபோல, சீதா தன் காதலை சிவாவிடம் உடைத்துவிடலாம் என்று அதிரடி முடிவு எடுத்தாள//
அடடா.. ஆம்லெட்டுக்கும்,காதலுக்கும் கனைக்ஷன் கலக்கல். ஆனா கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆம்லெட் மேட்டர்ல ஹஸ்பண்ட கத்தியால குத்திட்டாங்கலாம்ல்ல..
அத படிச்சதுலருந்து , பயம்ம்ம்ம்மா இருக்குதுங்கோவ்வ்வ்வ்வ்வ்:)))))))))))
கதை நல்லாயிருக்குங்க... தொடருங்க..
ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்.. :)
//கூட்டம் கூட்டமா வெளியே வந்து கொண்டிருந்த மக்களை பார்த்து கொண்டிருந்தாள். பின்னாடியிலிருந்து யாரோ ஒருவரின் கை தன் வலது தோள்பட்டையில் பட்டது. யார் என்று திரும்பி பார்த்தாள். தனது பள்ளி தோழி லீனா!//
டீ ஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும் போட்டிருந்த தால யாரோ பையன்னு நெனச்சி தோள்ல கை வச்சேன். உன் மூஞ்சிய பாக்க வேண்டி இருக்கும்னு யாருக்கு தெரியும்? :(
//
"என்னடி பார்த்து ரொம்ப நாளாச்சு... இங்க என்ன பண்ணுறே" என்று அந்த தோழி, சீதாவின் அவஸ்தை புரியாமல் கேட்டாள். "ஓ.. ஒன்னுமில்ல... அப்பாவோட கம்பெனி பார்ட்னர் வரார். அதான் அவர அழைச்சுகிட்டு போக வந்து இருக்கேன்." என்று ஒரு 'பிட்'டை போட்டாள். அத்தை மகனுக்காக நிற்கிறேன் என்று சொன்னால், அதை வைத்து லீனா ஒரு மெகா சீரியல் அமைத்து தேவையில்லாதவர்களிடம், ஊர் முழுக்க சொல்லிவிடவாள் என்பதால் அந்த பிட். அவசர அவசரமாக பேசி லீனாவை போகவைத்தாள்.//
யேம்மா சீதா( சிவாஜி மாதிரி படிக்கவும்)... நான் தான் கெடைச்சேனா உனக்கு? :((
//திரும்பி சீதா கூட்டத்தை நோக்கி தன் பார்வையை வைத்தாள். மறுபடியும் ஒரு கை பின்னால் தன் முதுகை தட்டியது. 'இந்த லீனாவுக்கு வேற வேலையே கிடையாது.. சரியான.. irritating pest' என்று மனதிற்குள் திட்டி கொண்டே திரும்பி,கோபத்துடன் கத்தினாள் " ஏய் லீனா உனக்கு இப்ப என்னதான் வேணும்?"//
நான் கைமாத்தா 1000 ரூபாய் தான கேட்டேன். அத குடுத்தா நான் அப்போவே போயிருப்பேன்ல?
//வீட்டுக்கு போனும்" என்று களைப்புடனும் ஆச்சரியத்துடனும் சத்தமில்லாமல் சொன்னான் சிவா!//
சத்தம் போட்டு வாய தெறந்து சொன்னா என்ன சரக்குனு கண்டுபிடிச்சி உனக்கும் வாங்கி தர சொல்லுவ இல்ல. அதான் அப்டி சொன்னென்.
//அட அது லீனா இல்ல.. சிவா!! சற்று அவமானமாக போயிற்று.அசடு வழிய "சிவா, சாரி.. என் தோழி..ம்ம்..லீனானு..தான் நினைச்சு... i am extremely sorry." என்று ஆங்கிலமும் முட்ட தமிழும் திணற, பேசினாள் சீதா. பரவாயில்ல என்பது போல் தலையை லேசாக ஆட்டினான் கிளைப்புடன் இருந்த சிவ//
களைப்பு தெரியும்.. அதென்ன கிளைப்பு?... ஸொ சிவா முதுகை தொட்டது அவமானமா போச்சி.. அப்டி தான? :)
//சிவாவுக்கு இது புது ஊர் என்பதால்.. கார் பயணத்தில் சாலைகளையும் மரங்களையும் ஊர் சுத்தமாக இருப்பதையும் பார்த்து ரசித்து கொண்டு வந்தான். 20 நிமிடங்களில், வீட்டை அடைந்தனர். அந்த பெரிய அடுக்குமாடி கட்டடத்தை பார்த்து வியந்து நின்றான் சிவா.//
பாவி.. நீ வந்தப்புறம் தான் இந்த ஊரே குப்பையாச்சி.
//ஆறாவது மாடி நம்ம வீடு' என்றாள் சீதா. சிவா தன்னை பற்றி ஒன்றும் கேட்கவில்லையே என்ற வருத்தத்தோடு பெட்டிகளை மின்தூக்கியில் ஒன்று ஒன்றாக வைத்தாள்.
//
நீங்க இந்த மாடிக்கு குடி வந்தாலும் வந்திங்க. உங்க அராஜகம் தாங்க முடியலைடி யம்மா.
//"நீ சும்மா இருப்பா... எத்தன பேரு கண்ணு பட்டு இருக்கும்? நீ நில்லுப்பா அப்படியே" என்று மாமியார் தன் மருமகனுக்கு ஆரத்தி எடுப்பதை ரசித்தவளாய் வீட்டினுள் சென்றாள்.//
அடப் பாவிகளா .. உங்களை பார்த்து என்ன மாதிரி எத்தனை பேருக்கு கண்ணு போச்சினு தெரியுமா? மனசாட்ச்சியே இல்லையா உங்களுக்கெல்லாம்?
//சிவா வந்த நாள் முதல் சீதா, ஜெர்மனி, ஸ்விர்சிலேந், மோஸ்கோ என்று ஒவ்வொரு நாள் கனவில் ஒவ்வொரு நாடு சென்றுவந்தாள்//
ஓ.. நீ தானா அது.. உன்னை தான் தேடிட்டிருக்கோம். ஓசியில அந்த நாடுகள பாக்க போனதும் இல்லாம ஒவ்வொரு தெருவா போய் எல்லார் வீட்டு கதவையும் தட்டினியாமே.
//(தொடரும்)//
அற்புதமான திருப்பம்.
அட என்ன கொடுமை சஞ்சய் இது.. நோ கம்மேன்ஸ்னு சொல்லி.. இத்தன கருத்துகள் சொன்ன கருத்து கந்தசாமியாக மாறிவிட்டீர்கள்!! இது நியாயமா??
// Thamizhmaagani said...
அட என்ன கொடுமை சஞ்சய் இது.. நோ கம்மேன்ஸ்னு சொல்லி.. இத்தன கருத்துகள் சொன்ன கருத்து கந்தசாமியாக மாறிவிட்டீர்கள்!! இது நியாயமா??//
யக்கா.. இன்னா சொல்ல வறிங்க.. ஒன்னும் பிரியலையே. :(
சஞ்சய் ரொம்பா நன்றிப்பா.
//மங்களூர் சிவா said...
சஞ்சய் ரொம்பா நன்றிப்பா.//
நீங்க தான அந்த எட்டப்பன்?
கவனிக்கிறென். :(((
//யக்கா.. இன்னா சொல்ல வறிங்க.. ஒன்னும் பிரியலையே. :(//
சாரி சஞ்சய், இந்த மங்களூர் சிவா செய்யும் வேலை!!
//நீங்க தான அந்த எட்டப்பன்?
கவனிக்கிறென். :(((//
சஞ்சய், அந்த மங்களூரை சிவாவை கவனிக்கும்போது என்னையும் கூப்பிடுங்க... நானும் வந்து ஒரு காட்டு காட்டனும்!!
//
SanJai said...
//மங்களூர் சிவா said...
சஞ்சய் ரொம்பா நன்றிப்பா.//
நீங்க தான அந்த எட்டப்பன்?
கவனிக்கிறென். :(((
//
நான் 8 அப்பனும் இல்ல 10 அப்பனும் இல்ல ச்சின்ன பையன் :)
நல்லா கவனிப்பா ஏப்ரல் 14 காலைல உன் வீட்டுக்குதான் வரேன்.
//
Thamizhmaagani said...
சஞ்சய், அந்த மங்களூரை சிவாவை கவனிக்கும்போது என்னையும் கூப்பிடுங்க... நானும் வந்து ஒரு காட்டு காட்டனும்!!
//
ஏன் ஏன் இந்த ரத்த வெறி ஒரு ச்சின்ன பையன் மேல!?!?!?
ஹாஹா..
எதயோ சாதித்டுவிட்ட சந்தோஷத்துடன்
:P
... சிவா மாம்ஸ்.. உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு....:P
//
SanJai said...
ஹாஹா..
எதயோ சாதித்டுவிட்ட சந்தோஷத்துடன்
:P
... சிவா மாம்ஸ்.. உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு....:P
//
எதுக்கய்யா பாவம்??
நீங்க ரெண்டு பேரும் என்னைய நல்லா கவனிச்சிக்க போறீங்க!! இதுக்கு நான் சந்தோஷமில்ல படணும்.
// Thamizhmaagani said...
//யக்கா.. இன்னா சொல்ல வறிங்க.. ஒன்னும் பிரியலையே. :(//
சாரி சஞ்சய், இந்த மங்களூர் சிவா செய்யும் வேலை!!
//நீங்க தான அந்த எட்டப்பன்?
கவனிக்கிறென். :(((//
சஞ்சய், அந்த மங்களூரை சிவாவை கவனிக்கும்போது என்னையும் கூப்பிடுங்க... நானும் வந்து ஒரு காட்டு காட்டனும்!!//
சிவா மாம்ஸ்.. இதுக்கு தான். கும்மி அடிச்சது நீங்க தான் என்ற "உண்மை" தெரிஞ்சி போச்சி :P
Post a Comment