Dec 31, 2008
சந்தோஷமா இருந்துச்சுப்பா....
தோழி: ஏய் காயு, 27th அன்னிக்கு ஒரு mini bthday celebration வச்சுருக்கேன். வந்துடு தெரியுமா. அப்பரம் ஒரு small request. நீ எதாச்சு performance போடனும்.
நான்: performanceஆ??? என்ன செய்யனும்?
தோழி: ஏதாச்சு பண்ணு.
நான்: ஏதாச்சுன்னு, கோழி பிரியாணி எப்படி செய்யனும்னு காட்டவா?
தோழி: ஆண்டவா!! இந்த புள்ளைக்கு நல்ல புத்திய குடு!
நான்: சரி சரி, அதலாம் இப்ப stockல இல்ல....
தோழி: டேய், உன் கவிதைய ஒன்னு வாசி. super performanceaa இருக்கும்!
அவள் சொன்னது முதல் எனக்கு வயிறு கலக்கல்ஸ் ஆரம்பித்துவிட்டது. எழுத சொன்னால் எழுதிவிடுவேன். ஆனா அதை பல பேர் முன்னிலையில் படித்து காட்டுவது எல்லாம் வாழ்க்கையில் செய்யாத ஒன்று. சரி முயற்சி செஞ்சு பார்ப்போம் என்று கிளம்பினேன் 27th அன்று. முதல் நிகழ்ச்சியே என்னுடையது தான். அதற்கு பிறகு தான் மத்த நண்பர்களின் பாடல், ஆடல்.
குரல் சற்று தயக்கத்துடனும், கைகால் ஒருவித படபடப்புடனும் மைக்கை பிடித்தேன். 50 மக்களின் பார்வைபட தொடங்கினேன்,
அழகான கவிதை ஒன்று
எழுத சொன்னால்
எழுதியிருப்பேன்
அழுகுக்கு ஒரு கவிதை
எழுத சொன்னால்
என்ன எழுதுவேன்?
உன்னை பற்றி எழுத தமிழில்
வார்த்தைகள் பஞ்சம்
எனினும் இயற்றுகிறேன்
என்னால் இயன்ற கொஞ்சம்.
சூர்யா ஜோதிகாவுக்கு
நீ எத்தனையாவது
ரசிகை என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உன்னுடைய முதல் ரசிகை
நான்!
நான் தூளாக துவண்டிருந்தபோது
எனக்கு தூணாக துணையாயிருந்தாய்
இந்த தேவதையை உலகிற்கு அனுப்பிய
இறைவனுக்கு
பல கோடி நன்றிகள்
வள்ளுவன் இருந்திருந்தால்
உன்னை பார்த்தபிறகு
1330 குறட்களையும் உதறிவிட்டு
உன்னை பற்றியே பல லட்சம்
குறட்களை எழுதியிருப்பான்
கம்பன் இருந்திருந்தால்
உன்னை கண்ட பிறகு
பல்லாயிரம் காவியங்களை
படைத்திருப்பான்.
அவர்கள் பாவம் செய்தவர்கள்
உன்னை பற்றி எழுதமுடியவில்லை.
நான் புண்ணியம் செய்தவள்
இங்கு உன்னை பற்றி மட்டுமே
எழுதுகிறேன்.
நண்பர்கள் டாப் 10 வரிசையில் இனி
உனக்கும் எனக்கும் மட்டுமே
முதல் இடம்!
நட்பின் ஆஸ்கார் விருது உனக்கே
உனக்கு!
தளபதி ரஜினி மம்மூட்டி
நட்புக்காக விஜயகுமார் சரத்குமார்
காதல் தேசம் அப்பாஸ் வினித்
பட்டியல் ஆர்யா பரத்,
இப்படி நட்புக்காக வாழ்ந்தவர்கள்
வரிசையில்
உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து கொள்வோம்!
அம்மா அடித்தால் வலிக்கும்
அப்பா அடித்தால் வலிக்கும்
அண்ணன் அடித்தாலும் வலிக்கும்
‘சைட்’ அடித்தால் வலிக்காது
என்ற தாரக மந்திரத்தை
எனக்கு கற்றுகொடுத்த
குருவே,
நீ வாழ்க!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
சொல்லிமுடிப்பதற்குள் எல்லாரும் கைதட்டி விசில் எல்லாம் அடிச்சாங்கப்பா! தோழியின் அம்மா ஓடி வந்து கட்டிபிடித்து பாராட்டி தள்ளிட்டாங்க! வாழ்க்கையில என் கவிதைக்கு இப்படி ஒரு நேரடி பாராட்டு கிடைத்தது இதுவே முதல் முறை. வலைஉலகில் மட்டுமே திரிந்து கொண்டிருந்த என் கவிதைக்கு இந்த பாராட்டுகளுக்கு என்னை பிரமிக்க வைத்தது!
Dec 29, 2008
என்னை ஏமாத்திய கஜினி
என்னை ஏமாத்திவிட்டார் அமீர் கான். படம் சுத்த bore! தமிழில் ஏற்கனவே பார்த்துவிட்டதால் என்னவோ, படம் கொஞ்ச நேரத்திலேயே எனக்கு போர் அடித்தது. பாடல்கள் சும்மார் ரகம். ஏ ஆர், kya? என்ன ஆச்சு? ஒரே ஒரு பாடல் மட்டும் தான் நல்லா இருக்கு.
அமீர் கானுக்கும் அசினுக்கும் chemistryயே இல்ல!! அசின் இனி பாலிவுட்டில் பெயர் போடுவது கஷ்டம்! இன்னும் நிறையவே எதிர்பார்த்தேன். காமெடி சீன்களில் அதிகபடியாக நடித்து இருக்கலாம்! என்னமோ போங்க... இந்த வருஷத்த ஒரு நல்ல படம் பார்த்து முடிக்கலாம்னு பார்த்தா இப்படி போச்சு.
ஹிந்தி தெரிந்த ஒரு இயக்குனர் படத்தை இயக்கி இருந்தால், நல்ல இருந்திருக்கும் என்பது எங்கள் கருத்து(தோழிகளும் நானும்). நயன் ரோலில் ஜியா கான்...ஐயோ... நயனே பரவாயில்ல! இயக்குனர், கேமிராமேன், ஹீரோயின், இசையமைப்பாளர் என்று தமிழர்கள் சேர்ந்து ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்திருக்க வேண்டாமா!
தமிழிலுள்ள லாஜிக் இடித்தல்களை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்து திரைக்கதையை சற்று மாற்றி, மெதுவாக நகர்த்திவிட்டார். இந்த படத்தை தான் 2 வருடமா எடுத்தாரா என்று கேள்விகுறியுடன் தியெட்டரிலிருந்து வெளியேறினோம். கிளைமெக்ஸை மாற்றி அமைத்து, கதைக்கு வலுபெறாமல் போனது.
அமீர் கான் 8 pack மட்டுமே பிரமிக்க வைக்கிறது. அதுகூட கதைக்கு எந்த வகையிலும் வலு சேர்க்கவில்லை. தன் கதாபாத்திரத்தை இன்னுமே உள்வாங்கி நடித்துஇருக்காலம் அமீர்! ஆனா, அவர் ஆத்திரத்தில் அழும்போது ரொம்பவே பாவமா இருந்துச்சு!
தோழி தெலுங்கு பொண்ணு. ஆக, இந்த படத்த தெலுங்கில் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை பாதி படத்திலிருந்து discuss பண்ணி காமெடி செய்து கொண்டிருந்தோம்!
கஜினி- கொல்றீங்க எல்லாரையும்!
Dec 28, 2008
சிலம்பாட்டம் Vs பூ
என்னால முடியலடா, ரீலு அந்து போச்சுடா சாமி!
சென்னைக்கு போயிட்டு வந்த அம்மாவும் அப்பாவும் அங்க இந்த படத்த பாத்து இருக்காங்க. 'யப்படி இருந்துச்சும்மா'ன்னு கேட்டேன்.
"காயத்ரி, this is simbu's best movie. சிம்பு அவ்வளவு அருமையா நடிச்சுருக்கான். தசாவதாரம் மாதிரி இருக்கு'ன்னு சொன்னாங்க. சிம்புவே பிடிக்காத எங்க அம்மா இப்படி சொல்லிட்டாங்களேன்னு நம்பி போனேன்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்..
என்னைய மறுபடியும் கொஞ்ச நேரம் அழுக விடுங்க....அவ்வ்வ்வ்....
ஏன் எப்படி எதனால அம்மா அப்படி சொன்னாங்கன்னு இது வரைக்கும் தெரியல? படத்த போய் நானும் பார்த்தேன். கொலைவெறிய ஏத்திவிட்டார் சிம்பு! ஒன்னுமே இல்லாத படத்திற்கு எங்க அம்மா போன்றவர்கள் கொடுக்கும் ceritificate என்னால தாங்க முடியல...
இந்த படத்துக்கு censor board என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னு தெரியல.
கடைசியில் ஹீரோவின் மனைவி ஒரு ஊனமுற்றவராகவோ, அல்லது அவர்களின் குழந்தைக்கு ஏதேனும் ஒரு நோய் என்று காட்டியிருந்து, அதை கண்டு மாரி அழுது இருந்தால்..படம் கண்டிப்பா என்னை உருக வைத்து இருக்கும். இப்படி எதுவுமே இல்லாமல் போனது!
பூ- எதிர்பார்த்ததைவிட குறைவு!
சிலம்பாட்டம்- யப்பா சாமி...இப்படி நான் எதிர்பாக்கவே இல்லபா! மிஞ்சியது மனதில் தளும்பாட்டம் தான்!
Dec 23, 2008
rab ne bana di jodi- அனுபவிக்கனும்!
காரணங்கள்- ஷாருக்கானின் subtle way of acting. புதுமுகம் அனுஷ்கா, பாடல்கள், கதையிலிருந்து சொல்ல வந்த கருத்து. வசனங்கள். ஷாருக்கான் hairstyle மாற்றியுடன் மனைவிக்கே அடையாளம் காணமுடியவில்லை என்பதில் லாஜிக் இடித்தாலும் படம் போக போக அது ஒன்னும் பெரிதாக தெரியவில்லை. படம் எல்லாம் நாடுகளில் சக்கை போடு போடுகிறது!
நமக்குள் ஒருவித போராட்டம் இருக்கு.
"the person that we are." Vs "the person that we want to be."
இந்த இரண்டுக்கும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. கடைசியில் ஜெயிப்பது முதல் வகை தான்! படத்தில் மட்டும் இல்லை, நிஜ வாழ்க்கையிலும் அது தான் ஜெயிக்கும். படத்தின் இரண்டாம் பாதியில் நிறைய emotions, யதார்த்தமான வசனங்கள். i could easily relate with the film என்று ஒரு வரியில் சொல்லலாம்.
கதையாக இருந்தாலும் சரி, நிஜத்தில் இருந்தாலும் சரி, in every ordinary love jodi, there is always an extraordinary love story. படம் பார்க்கும்போது அது புரியும்.
என்னை பிரமிக்க வைத்தது ஷாருக்கானின் தைரியம். அவருக்கு இருக்கும் பெரிய stardom, market value ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு படத்தில் நடிக்க முன் வந்தது படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் என்றே கூறலாம். அப்பரம், girl-next-door போன்ற முக அமைப்பில் இருக்கும் புதுமுகம் அனுஷ்கா.
படத்தில் இன்னும் காமெடி அளவை கூட்டியிருக்கலாம். ஆனா, படத்துக்கு ஒரு serious tone maintain பண்ண வேண்டும் என்ற காரணத்தால் என்னவோ, காமெடி சில இடங்களில் மட்டுமே இருக்கிறது. இருந்தாலும், என்னை பொருத்தவரை
rab ne bana di jodi- every couple's mirror!
Dec 18, 2008
அலைபாயுதே-(2)
“விமல் வந்த பிறகு, i was totally stunned. ஒன்னுமே புரியல. i was totally confused. அவர்கிட்டையும் பேச முடியல.... உன்கிட்டையும் எப்படி சொல்றதுன்னு....என்னால முடியலடா....” என்றவள் தன் நெற்றியில் அடித்துகொண்டாள்.
மழையில் நனைந்த பூனைக்குட்டி போல் நடுங்கிய அவளை பார்த்து ‘குபீர்’ என்று சிரித்துவிட்டான் ரோஹித்.
“ஹாஹா... பயந்துட்டீயா? ஹாஹா....oh my god இதுக்கு தான் இந்த mood outஆ? crazy girl...." என்று கைதட்டி சிரிப்பை தொடர்ந்தான்.
என்ன நடக்குமா என்று பயந்து கொண்டிருந்த ஷீலாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம் என்று மனம் சற்று அமைதியடைந்தாலும் ஒரு பக்கம் குழப்பமாகவே இருந்தது.
“ரோஹித்...aren't u angry with me?"
"angry? எதுக்கு இதுக்கா....hey u mad woman...college love எல்லாம் ரொம்ப natural. இப்பலாம் 3 லவ் பண்ணிட்டு, கடைசில 4வது பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க...நம்ம ஆட்டோகராப் படம் பாத்தது இல்ல...அந்த மாதிரி!” என்றவன் அவள் மடியில் கைவைத்து
“இங்க பாருமா...i understand your situation. காலேஜ்ன்னா அப்படி தான் இருக்கும்.one side-love, love letters, sight அடிக்குறது.... இப்படி எத்தனையோ...அதலாம் enjoy பண்ணாதான் life! கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாருக்கும் ஒரு past இருக்கும். அது ஒரு sweet memoryயா மனசுல வச்சுக்கனும். போட்டு குழப்பிக்க கூடாது.”
ரோஹித் பேசியது ஷீலாவின் குழப்பத்திற்கு ஒரு புற்றுபுள்ளி வைத்தது. மனம் நிம்மதி அடைந்தது. அவன்மீது அதிகம் மரியாதை எழுந்தது.
“கல்யாணத்துக்கு அப்பரம் வாழ்க்கைய எப்படி lead பண்றோம்.. அது தான் முக்கியம். i know you really love me lots...எனக்கு தெரியும். அது போதும்.”
ஷீலா “இருந்தாலும்....” என்றாள்.
“ஷீலா, இதலாம் part and parcel of life. என்கிட்ட இதலாம் முன்னாடி share பண்ணியிருக்கலாம்.. அதுக்கு போய் எத்தன டென்ஷன்...எத்தன சோகம்... யப்பா.... ஆனா என் ஷீலாவுக்கு லவ் பண்ண தெரியும்னு நினைக்கும்போது... மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது” என்று அவளை கிண்டல் செய்தான். சிரித்த ஷீலா அவன் கையில் செல்லமாக அடித்தாள்.
“ஷீலா...சொல்லுமா...எப்படி ஆரம்பிச்சுது உங்க love story.” என்று ஆர்வமாய் வினாவிய ரோஹித்திடம் ஷீலா தன் காதல் கதையை சொன்னாள். அவள் சொன்னதை கேட்டுகொண்டிருந்தான். நடந்ததை ஒவ்வொன்றையும் கேட்ட ரோஹித்
“oh my god... you were such a sweet angel... பாவம் விமலுக்கு தான் கொடுத்து வைக்கல...” என்று புன்னகையுடன் கண் சிமிட்டினான்.
“ஒகே ஷீலா, hope u r completely relieved now...let's go out for dinner tonight" என்று சொல்லியபடி hyaat உணவகத்தில் இரண்டு சீட் புக் பண்ண ஃபோன் செய்ய போனான்.
எழுந்தவனின் கையை பிடித்து “thanks dear!" என்றாள் ஷீலா.
“you are most welcome. by the way உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்....next week நம்ம வீட்டுல ஒரு small gathering பண்ணலாம்னு இருக்குறேன். let it be a mini christmas celebration too. ரொம்ப நாளாச்சு நம்ம வீட்டுல gathering வச்சுல.... உன் friends, colleagues எல்லாரையும் invite பண்ணு.... and don't forget to invite விமல்!” என்றான் ரோஹித்.
அவன் அசைவுகளை கண்கொட்டாமல் பார்த்த ஷீலா தனக்குள்ளே சொல்லி கொண்டாள், “i love this crazy fellow."
*முற்றும்*
அலைபாயுதே-(1)
படத்தில் ரோஹித்தும் அவன் அன்பு மனைவி ஷீலாவும்!
"i miss you sheela" என்று சொல்லிகொண்டே ஷீலாவின் படத்திற்கு முத்தமிட்டான்.
திடிக்கிட்டு எழுந்தான் இடி சத்தத்தை கேட்டு. ஜன்னல் அருகே வந்து மழையின் அட்டகாசத்தை கண்டான். தன் சட்டையில் இருந்த கைபேசியை எடுத்து ஷீலாவுக்கு ஸ் எம் ஸ் அனுப்பினான்.
hi ma, ரொம்ப மழையா இருக்கு. பத்திரமா வா. நான் வேணும்னா வந்து pickup பண்ணட்டா?
வேணாம் என்று பதில் வந்தது. குளித்து முடித்துவிட்டு ரோஹித் தன் லேப்டாப் பையில் இருந்த receipe புத்தகத்தை எடுத்தான். பக்கம் 26க்கு திருப்பி ஜெய்பூர் கோழியும் மிளகு ரசமும் வைக்க ஆரம்பித்தான். ஷீலாவுக்கு மிளகு ரசம் ரொம்ப பிடிக்கும்.
மணி 745 ஆகிவிட்டது. ஒலித்தது வீட்டின் அழைப்பு மணி . வாசலில் ஷீலா.
ஷீலாவின் லேப்டாப் பையை வாங்கி கொண்ட ரோஹித், “என்னமா, நனைஞ்சுட்டீயா?”
ஷீலாவின் பதில் “friend lift கொடுத்தா.”
சமையலைறையிலிருந்து வந்த வாசத்தை நுகர்ந்த ஷீலா “மிளகு ரசமா?” என்றாள்.
“ஆமா ஷீலா. இன்னிக்கு ஆபிஸ்ல பிரியா ஒரு புது receipe புக் கொடுத்தா. அத பாத்து செஞ்சேன். வாசம்லாம் ஒகே. சாப்ட்டு பாத்தா தான் தெரியும்.” என்று சிரித்து கொண்டு மேசையில் தான் சமைத்ததை எடுத்து வைத்தான்.
ஷீலா எதற்குமே ஆர்வம் காட்டாமல் இருந்தாள்.
“சரி மா, போய் குளிச்சுட்டு வா. சேந்து சாப்பிடலாம். தனியா சாப்பிட பயமா இருக்கு” என்று புன்னகையத்தபடி தன் சமையலை தானே கிண்டலடித்து கொண்டான்.
ரோஹித்தின் பொழுது போக்கு என்றால் பலவித உணவுகளை சமைப்பதுதான். நன்றாக சமைப்பான். இருந்தாலும் எப்போதுமே தன் சமையலை பற்றி கிண்டலடிப்பது அவன் வழக்கம். கொஞ்சம் தன்னடக்கம் என்றே சொல்லலாம். இந்த மாதிரி பல முறை வித்தியாசமாக சமைத்து ஷீலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறான். அவள் ரசித்து உண்டு மகிழ்ந்திருக்கிறாள்.
“ரோஹித்.......ம்ம்ம்...எனக்கு பசிக்கல... நீ சாப்பிடு.” என்றாள் ஷீலா. ஷீலா ஆபிஸ் முடிந்து வந்தபிறகு அதிகமாய் பேசாததை கவனித்தான் ரோஹித். எப்போதுமே கலகலப்பாகவும், கிண்டல் அடித்து கொண்டு, ஆபிஸில் நடந்ததை ஒவ்வொன்றையும் நடித்தே காட்டுவாள். ஆனால் ஒரு வாரமாக அவள் அவளாகவே இல்லை.
ஏதோ வேலை டென்ஷன் என்று ரோஹித் அதை பற்றி கேட்காமல் இருந்தான். ‘இந்த இரண்டு வருட கல்யாண வாழ்க்கையில் ஷீலா இப்படி நடந்து கொண்டதே இல்லையே. இப்ப என்ன ஆச்சு. shall i ask her’ என்று ஒரு பக்கம் குழப்பத்திலும் இன்னொரு பக்கம் அவள்மீது கொண்ட அக்கறையிலும் மனம் பந்தாடி கொண்டிருந்தது.
“இல்ல மா, கொஞ்சமா...சாப்பிடு. ஒன்னுமே சாப்பிடாம....” என்று தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஷீலா
“ரோஹித், am not a child to be nagged at. எனக்கு வேண்டாம்ன்னா விட்டுடேன்...எதுக்கு torture பண்ணுறே!” என்று கத்தினாள். அறை கதவை ‘படார்’ன்னு சாத்திவிட்டு தூங்க சென்றாள்.
ரோஹித்துக்கு தூக்கம் போனது. செஞ்ச சாப்பாடும் வேஸ்ட்டா போனது. அவனும் சாப்பிடவில்லை. அவன் மனம் குழப்பமாக இருக்கும்போதெல்லாம் டைரி எழுதுவான்.
அன்று டைரிக்கும் பேனாவுக்கும் வேலை வந்தது. எழுத தொடங்கினான்,
ஷீலாவுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. அது மட்டும் புரியது. அவ என்னிக்குமே சத்தம் போட்டது கிடையாது. எனக்கு அவ மேல கோபம் வரது. சத்தம் போட்டதுக்காக இல்ல... ஆனா அவ பிரச்சனைய ஏன் என்கிட்ட share பண்ணிக்காம இருக்கா, அதுக்கு தான். எனக்கு ஆபிஸ்ல எத்தனையோ கஷ்டம் வந்தப்போ, எனக்காக பக்கபலமா இருந்தா. such a bold woman she is. ஆனா அந்த தைரியமெல்லாம் இப்போ எங்க போச்சு?
no, whatever it is, i need to help her. i hav to help her. god, pls be my support!
i love you sheela.
மறுநாள் காலையில் அவனுக்கு முன்பே அவள் கிளம்பி வேலைக்கு சென்றுவிட்டாள்.
இன்று எப்படியும் பேசிவிட வேண்டும் என்று ரோஹித் lunch break நேரத்தில் ஷீலாவின் ஆபிஸ் பக்கத்திலுள்ள காபி ஷாப் கடையிலிருந்து ஃபோன் செய்தான் அவளுக்கு.
நம்பரை பார்த்ததும் அவள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து 10 முறை ஃபோன் செய்தான். 11வது முறை தான் எடுத்தாள் ஷீலா.
மறுமுனையில் “ஷீலா, listen to me. don't cut the line. sorry to disturb u. நீ பிஸியா இருப்பேன்னு தெரியும். but i have to talk to you. கொஞ்சம் காபி ஷாப்புக்கு வர முடியுமா? உன் ஆபிஸ் பக்கத்துல உள்ள கடையில தான் வேட் பண்ணுறேன். i won't take much of your time. just 5 mins. 5 mins only. pleaseee......" என்று கெஞ்சி கேட்டான் ரோஹித்.
போலாமா வேண்டாமா என்ற குழப்பத்தை தவிர்த்து 20 நிமிடம் கழித்து சென்றாள்.
புன்னகை மாறாத அவன் முகத்தில் அப்போது தெரிந்த சோகம் அவளை அதிகம் காயப்படுத்தியது.
”காபி ஏதேச்சு வேணுமா? sorry to disturb u. but இத உன்கிட்ட பேசியே ஆகனும்.” ரோஹித் தொடங்கினான்.
“ஒரு வாரமா ஆச்சு. என் ஷீலாவ பாத்து! ஏதோ...something....something has been disturbing you. அது என்னன்னு கேட்டு நான் தொல்லை பண்ண மாட்டேன். உனக்குன்ன ஒரு personal space கண்டிப்பா இருக்கு. இருக்கனும். நீ என்கிட்ட share பண்ணனும்னு அவசியமில்ல.... உன் office colleauges, friends....பக்கத்துவீட்டு மீனாட்சி ஆண்ட்டி, இல்ல உன் அம்மா, sister....இப்படி யாருக்கிட்டையாவது சொல்லி உன் மனசுல இருக்குற பாரத்த இரக்கி வை மா. problems வந்துட்டாலே அதுக்கு கண்டிப்பா solutions இருக்கும். நீ யாருக்கிட்டையும் சொல்லாம இருந்தா... உனக்கு தான் பாதிப்பு வரும். இப்படி சாப்பிடாம, யாருக்கிட்டையும் பேசாம.... ரொம்ப கஷ்டமா இருக்கு உன்னைய இப்படி பாக்க....” என்று தன் மனதில் பட்டதை அவன் கொட்டினான். கண்களில் ஒருவித தவிப்பு, உதடுகளில் ஒருவித படபடப்பு.
“யோசிச்சு பாரு மா....ok...5 mins ஆச்சு.... நான் கிளம்புறேன். take care ma."
" i love u sheela" என்றவன் ஆறுதலாய் அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து மேசையிலிருந்த கைபேசியையும் கார் சாவியையும் எடுத்து கொண்டு சென்றான். வாசலின் கண்ணாடி கதவை திறந்து கொண்டு காரில் ஏறி செல்லும்வரை அவனையே பார்த்து கொண்டிருந்தாள் ஷீலா.
குழப்பம், அவள்மீது அவளுக்கு இருந்த கோபம், கொன்றுகொண்டிருந்த மனசாட்சி, ரோஹித்தின் அன்பு வார்த்தைகள், அவன் காட்டிய பரிவு, சொன்ன சொல், கொடுத்த காதல் முத்தம்-இப்படி அனைத்தும் அவளை பலமுனைகளில் நின்று குத்தியது. கண்களிலிருந்து வழிந்தது கண்ணீர் அருவிகள்.....
(தொடரும்)
Dec 17, 2008
6 வயதில் ’கண்கள் இரண்டால்’....
நேத்திக்கு keyboard வகுப்புக்கு போயிட்டு வந்து ரொம்ப demotivated ஆயிட்டேன். நான் ரொம்ப slow learner தான். ஒத்துக்கிறேன். டீச்சர் உனக்கு "ரிதமே வராது” அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிபோயிட்டாங்க. music pieces எல்லாமே முன்னாலே கத்துகிட்டு வந்து அப்பரம் அவங்கிட்ட வாசிக்கனுமாம். அதுக்கு எதுக்கு டீச்சர்!
சரி அவங்க ஏதோ கோபத்துல பேசிட்டாங்கன்னு நானும் வீட்டுக்கு கிளம்பிவந்து விட்டேன். நான் எனக்கே inspiration தேடி கொள்வது youtube வீடியோக்களை பார்த்து தான்!
அந்த 6 வயசு பாலாஜி வாசிப்பை பார்த்து, எனக்குள்
“ச்சே....நீ கத்துக்கு வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஜன்மத்துக்குள்ள grade 8 வாங்கி ஒரு கலக்கு கலக்குற!” என்றது மனசு.:)
Dec 16, 2008
தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்(2)
அஜ்மல், அஞ்சாதே படத்தில் நரேனின் நண்பராக நடித்தவர். அப்போ ஏதோ ஒன்னும் attract பண்ணவில்லை. படமே இருட்டா இருந்துச்சு. சரி அத விடுங்க... ஆனா அன்னிக்கு ஏதோ ஒரு புது படத்தின் துவக்க விழா புகைப்படங்களை பார்த்து “அட” என்று மனம் சொல்லியது.
Dec 15, 2008
விடுமுறை to நியூசிலந்து (2)
துளசி கோபால், ஹாலோ.....!! நான் அங்க சென்றது 5 ஊர்களுக்கு- auckland, christchurch, queenstown, dunedin and rotoura. நீங்க எங்க இருந்தீங்க? தேடி தேடி பார்த்தேன், ஆள காணும்! (அவ்வ்வ்....escape)
சரி முந்திய பகுதியில் மௌரி கலாச்சாரத்தை பத்தி சொல்லி கொண்டிருந்தேன்ல. ஆமாங்கோ ரொம்ப வித்தியாசமான ஒரு கலாச்சாரம். அதுல எனக்கு பிடிச்சது என்னவென்றால் அங்க உள்ளவர்கள் அந்த கலாச்சாரத்தை அவ்வளவு பெருமையாக எண்ணுகிறார்கள். (நம்மில் பலர் பார்த்து பின்பற்ற வேண்டிய விஷயம்:)
அவர்கள் கலாச்சாரத்தில் வணக்கம் சொல்லும்விதம்- இருவரும் வணக்கம் சொல்லவேண்டும் என்றால், இருவரின் மூக்குகளை உரசி கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று ஒரு வீர நடனம், பாடல். இப்படி வீரம் நிரம்பிய அவர்களது நடனத்தை ஆடுவதற்கு காரணம், காட்டில் வாழும்போது எதிரிகளை துரத்துவதற்காம்.
ஆகவே தான் இன்றைய நிலையிலும்கூட ஒவ்வொரு rugby போட்டி நடக்கும்முன்பு நியூசிலந்து குழுவினர் தங்களது மௌரி நடனத்தை (haka) ஆடுவார்களாம். ஆம், இந்தியாவிற்கு எப்படி கிரிக்கெட்டோ அப்படி தான் rugby நியூசிலந்துக்கு. அந்நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றகூடிய வல்லமை கொண்டது அவ்விளையாட்டு.
lord of the rings, narnia போன்ற படங்கள் நியூசிலந்தில் உள்ள மலைபகுதிகளில் எடுத்ததாம். ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு! sheep shearing farm(agrodome) மற்றும் rabbit shearing இடங்களுக்கு சென்றோம். எப்படி sheep shearing செய்கிறார்கள் என்பதை கண் முன் காட்டினர். அந்த ஆடுகளை மெய்க்க நாய்கள் இருக்கின்றனர். அந்த நாய்கள் ஆடுகளை திடல்களில் மெய்க்க விட்டு திரும்பி கொண்டு வருமாம். அந்த நாய்கள் பாதுகாப்பாக ஆடுகளை கொண்டு வர பல பயற்சிகள் எடுத்துள்ளன. குரைக்காதாம்! ஆனால் கண்களாலே ஆடுகளை மிரட்டுமாம்!!
அங்கு சென்று பார்த்தபிறகு என் மனதில் தோன்றியது “ஆடுகளை/மாடுகளை பார்த்து கொள்வது ஒரு கலை!”. ஆனா நம்ம ஊருல என்ன சொல்றோம்,படிப்பு வரலன்னா ‘மாடு மெய்க்க தான் நீ லைக்கு’. !! :)
பின்னர், mrs jones அவர்களின் பூந்தோட்டத்திற்கும் பழ தோட்டத்திற்கும் சென்றோம். அடேங்கப்பா.... எவ்வளவு பூக்கள்! அங்க போய் வளைச்சு வளைச்சு நானும் அக்காவும், தங்கையும் பல படங்களை எடுத்தோம். jump shot, boys ale ale shot, பூ பக்கத்துல நிக்கிற மாதிரி, பின்னாடி நிக்கிற மாதிரி, அந்த காலத்து பாரதிராஜா படங்களில் வந்த மாதிரி- இப்படி சில பல படங்களை எடுத்து கொண்டோம்.
பிரமாண்டமான இன்னொரு இடம் ‘milford sound' என்ற இடம். நீர்வீழ்ச்சி, மலைகள் என்று இயற்கை அழகு நிரம்பி வழியும் இடம். இந்த இடத்துக்கு செல்ல 5 மணி நேரம் பயணம் செய்ய வேண்டு. காலை உணவு முடித்தவுடனே கிளம்பிவிட்டோம்.
எனக்கு பஸ் பயணம் ஒத்துவராது என்பதை அன்று தான் புரிந்து கொண்டேன். வாந்தி வாந்தியா வர மாதிரி ஒரு உணர்வு. ஆனால் வெளியே வர மாட்டேங்குது! சரி முழிச்சு இருந்தால்தானே இந்த பிரச்சனை, ஆக சட்டென்று தூங்கிவிட்டேன். அதுக்கு அப்பரம் பரவாயில்லை.
இன்னொரு விஷயம். நிறைய நாட்கள், பஸில் தான் அதிக நேரம் பயணம் செய்தோம். தூக்கமா வரும். நானும் என் தங்கையும் ‘பஸில் எப்படி தூங்குவது” அப்படின்னு ஒரு புத்தகம் எழுத போறோம். எங்க அனுபவங்களில், பல varietyயான தூங்கும் techniqueக்களை கண்டுபிடித்துவிட்டோம்ல:)
milford sound இடத்தை அடைந்துவிட்டோம். cruiseலில் சுற்றி பார்க்கலாம். எனக்கு cruiseலில் செல்வது பிடிக்கும். ரொம்ப குளிர் காற்று அடித்தது. ரொம்ப நல்லா இருந்தது!
நியூசிலந்திலில் உள்ளவர்கள் விரும்பி ஈடுபடுவது சாகச விளையாட்டு. அப்படி ஒரு விளையாட்டு தான் jetboat ride. 60km/hr வேகத்தில் போகும் boat. அது 360degree சுற்றும் வேற. இதுக்கு தனியா காசு கட்டனும். NZ$90. milford sound (NZ$225) இடத்துக்கும் தனியா காசு கட்டனும். இரண்டுமே optional tour.
என்பதால். ஏற்கனவே ஏகப்பட்ட செலவு. ஆக நான் போகவில்லை என்றுவிட்டேன்.
jetboat rideக்கு அக்கா, தங்கச்சி மற்ற சுற்றுலா உறுப்பினர்கள் சிலர் சென்றனர். NZ$90 காசுக்கு சிங்கையில் நான் 7 plates of chicken rice அல்லது 8 plates of mutton briyani அல்லது 9 movie tickets வாங்கலாம் என்று மனதில் கணக்கு போட்டு கொண்டிருந்த போது அம்மா என்னிடம் NZ$100 பணத்தை நீட்டி,
“அப்பரம் மேல shopping போக டைம் கொடுப்பாங்களாம். உனக்கு என்ன விருப்பமோ அத வாங்கிக்கோ’ என்றார்.
ஆஹா....!!
இப்படி ஒன்னு நடக்கனும்னு தெரிஞ்சி இருந்தா, அக்காவையும் தங்கச்சியும் போக வேண்டாம்னு சொல்லி NZ$300 collection பண்ணி இருக்கலாமே! அம்மா கொடுத்த NZ$100 சிங்கைக்கு வந்து இங்க பணத்தை மாற்றி இங்கு செலவு பண்ணலாம்னு ப்ளான்.
என் அம்மா என் பொறந்த நாள் அன்னிக்கு பணம் கொடுப்பாங்க. ஆனா மறுநாளே marketல things வாங்கனும், அத வாங்கனும், இத வாங்கனும் சொல்லி பணத்த திருப்பி வாங்கிட்டு போயிடுவாங்க. அந்த மாதிரி இந்த NZ$100 ஆயிவிடுமோன்னு அந்த பணத்தை பத்திரமா வைச்சுருக்கேன் என் கைபையில்.
அக்காவும் தங்கச்சியும் boat ride முடித்துவிட்டு வந்தனர்.
அப்பரம் cadbury chocolate factoryக்கு சென்றோம். எப்படி அதை தயார் செய்கிறார்கள், அதன் வரலாறு பற்றி கூறி factory tourக்கு அழைத்து சென்றனர். ரொம்ப சூப்பரா இருந்துச்சு!! அங்கேயே இருக்கலாம்னு தோணுச்சு. அதில் ஒரு அறை உண்டு- sensory evaluation room. அதில் புதிய சாக்கெலட்களை ருசி பார்ப்பதற்கு ஆட்கள் வருவார்களாம். அது அதன் அவர்கள் முழு நேர வேலையாம்! அந்த வேலைக்கு யாருச்சு போக விரும்புறீங்களா? :)
நியூசிலந்தில் எந்த ஒரு சின்ன town மாதிரி இருந்தாலும், அங்க எப்படியாவது ஒரு north indian உணவகம் இருந்துவிடும்! இந்தியன் உலகம் முழுவதும் இருக்கிறான் என்று நினைக்கையில் பெருமையாக உள்ளது.
நான் பார்த்த இடங்களில் எனக்கு பிடித்த ஊர் -queenstown. சின்ன நகரம் தான். ஆனா குளிர் காற்றும் அந்த மலை சார்ந்த பகுதியும் simply superb! the most romantic place என்றுகூட சொல்லலாம்!:)
வெளியூர் போனாலே souvenirs வாங்க வேண்டும். நெருங்கிய இரண்டு நண்பர்களுக்கு மட்டும் chocolates மற்றும் new zealand cap வாங்கினேன்.
நான் செய்த சாதனை பற்றி சொல்லியே ஆக வேண்டும். dunedin என்ற ஊரில் தான் world's steepest street உண்டு. அது 33 degree அளவில் இருக்கும். அதில் நடக்க வேண்டும். கொஞ்ச கஷ்டமா தான் இருந்துச்சு. சாலையில் இரு பக்கமே வீடுகள். இந்த வீடுகளில் இருப்பவர்கள் எப்படி தான் ஒவ்வொரு நாளும் கீழேயும் மேலேயும் இறங்கிபோறாங்களோ.
அந்த சாலையில் ஏறிமுடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். எனக்கும் ஒன்னு கிடைத்தது.:)
christchurchல் தான் கடைசி நாள் தங்கினோம். ஞாயிற்றுகிழமை என்பதால் தெருக்களில் கூட்டமே இல்லை- ஒரு சில குண்டர் கும்பல்களை தவிர! ஆமாங்கோ! கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்துச்சு. தண்ணி அடித்துவிட்டு ஒரு கும்பல் எங்களை பார்த்து ஏதோ சொல்லிகொண்டு சென்றனர். உங்க ஊர்ல நீங்க ரவுடின்னா, எங்க ஊருல நாங்களும் பெரிய ரவுடி தான் என்ற முகபாவத்தோடு நடந்து சென்றோம்.
சாலையை கடக்கும்போது பேருந்தில் பஸ் ட்ரைவர் ஒருவர் எங்க அப்பாவை பார்த்து சிரித்தார். அருகில் சென்றுபார்த்த போது தெரிந்தது அவரும் ஒரு தமிழர் என்று!
நல்ல பல நினைவுகளுடன் வீடு திரும்பினோம். சிங்கையிலிருந்து வரும்போது விமானத்தில் இருந்த குறை போகும்போது இல்லை. திரும்பி வந்த விமானத்தில் நிறைய ஆண் flight attendant இருந்தாங்க (அதுவும் அழகா..) ஹாஹாஹா....
Dec 13, 2008
விடுமுறை to நியூசிலந்து(1)
நியூசிலந்தின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே....
அட ச்சே ரிமெக்ஸ் பண்ணி பண்ணி எத எழுதுனாலும் அதுவே வருது..:)
ஆமாங்கோ... நியூசிலந்துக்கு 10 நாள் சுற்றுலா பயணம் சென்றேன் குடும்பத்துடன். டூர் குரூப் ஏற்பாடு மூலம் தான் சென்றோம். எனினும் எனக்கு free and easy tour(சொந்தமாக போவது) போல் செல்வது தான் பிடிக்கும். நாமே நம்ம route ப்ளான் பண்ணி செல்லலாம். சொந்தமா டிரைவ் பண்ணி செல்லலாம். ஜாலியா இருக்கும். ஆனா குடும்பத்தோடு செல்லும்போது சரிபட்டு வராது. அப்பா northல போக சொன்னால், அம்மா இல்ல இல்ல southல route போகும் என்பார், நான் நடுவில் நின்று கொண்டு இல்ல இல்ல eastல தான் போகனும் என்று சொல்வேன். ஆக, இது சரிபட்டு வராது.
இந்த டூர் குருப்ல 34 பேர். 10 குடும்பங்கள் மொத்தம். தன் வயதான பெற்றோருடன் வந்தார் ஒரு பெண்மணி. ரொம்ப friendly type. அப்பரம் இன்னொரு குடும்பம்- ஒரு பொண்ணு. அவருக்கு இரட்டை குழந்தைகள(15 வயசு). இன்னும் இரண்டு பஞ்சாபி குடும்பத்தினர்-அண்ணன் குடும்பமும் தம்பி குடும்பமும். இந்த சகோதரர்களின் கடைசி தம்பி எங்க வீட்டு apartmentலில் தான் இருக்கிறார். பேசும்போது தெரிந்து கொண்டோம். அப்பரம் இன்னொரு சீன குடும்பம்- இரண்டு பெண் குழந்தைகளுடன். குடும்ப தலைவர் படுஅமைதி. நானே கேட்டுவிட்டேன் “ஏன் அங்கிள், நீங்க எப்போதுமே இப்படி தானா?” அவர் அமைதி பிடித்திருந்தது. பிறகு இன்னொரு குடும்பம்- 5 வயது பையனுடன். அவன் வாயை திறந்தால் எட்டூருக்கும் பேசுவான்!! இப்படி பலவித மக்கள்.
டூர் சிறப்பாக சென்றதிற்கு முதல் காரணம் எங்களின் அருமையான சுற்றுலா வழிகாட்டி. ரொம்ப ரொம்ப நல்லவர், ரொம்ப friendly, எல்லாருக்கும் எந்த குறையும் வராத அளவுக்கு பார்த்து கொண்டார்.
சிங்கையிலிருந்து நியூசிலந்துக்கு 10 மணி நேரம் விமான பயணம். விமான டிவியில் சமீபத்தில் வந்த ஹிந்தி படங்கள், தமிழ் படங்கள், korean, arabic இப்படி பல படங்களை பார்த்து 10 மணி நேரத்தை ஓட்டினேன். எங்கள் முதல் சுற்றுலா தடம் auckland. மதிய வேளை என்றதால் சற்று வெயிலாக இருந்தது. ஆனால் சொன்ன அளவு “பயங்கரமா குளிரும்” என்பதுபோல் ஒன்றும் இல்லை. அடடே இவங்கள நம்பி நான் 2 சட்டை போட்டிருந்தேன்.
ஆனா, எங்களது சுற்றுலா லீடர் சொன்னது சரி தான். இரவு நேரங்களில் 12degree celsius. சிங்கையில் 32 degree celsiusல் இருந்த எங்களை ஏதோ fridgeக்குள் வைத்தது போல் உணர்ந்தோம். aucklandல் பல இடங்களுக்கு சென்றோம்.
நியூசிலந்தின் சிறப்பு என்றால், இயற்கை தான்! அடேங்கப்பா எத்தன மலைகள், எத்தன ஏரிகள். எத்தன மலர்கள்... தமிழ் சினிமா பாடல்களின் அபிமான பல இடங்கள். சந்தோஷ் சுப்பரமணியம் படத்தில் வந்த சில பாடல்களை அங்குதான் எடுத்தார்களாம்.
சரி சாப்பாடு விஷயத்துக்கு வருவோம். scrambled eggs, bread toast, chips, sausages, becan, hashbrown, tomatoe இப்படி காலை உணவு! முதல் 3 நாள் நல்லா இருந்துச்சு. ஒரு ‘america america london london' feel நம்மளுக்கு இருந்துச்சு. நாலாவது நாளு நாக்கு செத்து போச்சு. அடக்கம் பண்ண முடியாம அல்லோலப்பட்டு கொண்டிருந்தோம். வீட்டுல இட்லி, தோசை சுட்டு வச்சு சாப்பிட சொல்லி அம்மா கெஞ்சி கேட்கும்போது macdonald'sக்கு போய் சாப்பிட்ட வாய் தானே எனது. எனக்கு நல்லா வேணும் என்று நினைத்து கொண்டு மீதி நாட்களை கஷ்டத்துடன் கழித்தேன்! எதுவுமே நம்ம கிட்ட இருக்கும்போது அதோட அருமைய தெரிஞ்சிக்க மாட்டோம்,
காலை உணவாக இருந்தாலும் சரி
காதலா இருந்தாலும் சரி!
(அவ்வ்வ்வ்...ஐயோ காயு என்ன ஒரு philosophy.பின்னிட்டேள், பிச்சிட்டேள்)
ok back to the new zealand trip. நியூசிலந்தில் சில சிறப்புகள் உண்டு.
tip-top ஐஸ்கீரிம், cadbury chocolates, waterfalls, sheeps, rabbit, milford sound, jetboatting, luge ride,sky diving, sky jump, bungee jumping, lakes. இப்படி நிறைய உண்டு.
குறிப்பா சொல்லபோனால் நியூசிலந்து மக்கள் பெருமையாக எண்ணும் அவர்களது maori கலாச்சாரம். அதை பத்தி அடுத்த பகுதியில் சொல்லுறேன்...
kia Ora ( maori மொழியில் goodbye என்று அர்த்தம்)
அடுத்த பகுதி
Dec 11, 2008
all day jolly day
அகக அகக....
என்ன ஒரு சொர்க்கம்!! அம்மா அப்பா ஊருக்கு சென்று இருப்பதால் அடுத்த 10 நாளுக்கு தினம் தினம் “where is the party tonight?" தான். சென்ற வருடம் இவ்வாறு நடந்தது. வீட்டில் ஒரு குட்டி gathering. all gals' party. இதுல என்ன விசேஷம்ன்னா.. இவங்க ஊருக்கு போனால், உலகத்திலேயே சந்தோஷம்படுவது எங்க குரூப் பசங்க தான். அன்னிக்கு தான் ஸ் எம் ஸ் பண்ணேன் தோழிக்கு
நான்: hey my parents are gg for a 10-day trip to india.
தோழி: wen?
நான்: thursday
தோழி: சரி, வெள்ளிக்கிழமை காலையில பெட்டி படுக்கையோட வந்துடுறேன்..
exam hallல தேடி வந்த.....
தன்னானா தன்னானனா தானா!
ஏய்! தன்னானா தன்னானனா தானா!
தன்னானா தன்னானனா தானா!
ஏய்! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!
ஏ! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!
இந்த காலு வழுக்கி chairல் உட்காந்தது மாமி - என்
கண்ணைக் கட்டி hallல விட்டது சாமி சாமி சாமி!
மார்க்க அள்ளி போடு! உங்க புண்ணியத்த கூட்டு!
மார்க்க அள்ளி போடு! உங்க புண்ணியத்த கூட்டு!
ஏய்! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!
ஏ! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!
internet தொட்டதாலே... படிக்க மறந்து போனேன்!
டிவிய கொண்டா... உன்னையும் பாத்துகிறேன்!
அடடா algebra வந்தா அழுகை வரும் நண்பா...!
இதுவும் பத்தாதம்மா ஊத்திக்கோ தெம்பா!
november 14 தேர்வு முடிச்சாச்சு. அதுக்கு அப்பரம் எழுதியதுதான் இது....
Nov 24, 2008
Nov 6, 2008
சும்மா அரட்டை 2
நண்பன்: ஏ, எப்படி இருக்கே? ஒரு ஃபோன காணும். லெட்டர காணும். ஸ் எம் ஸ காணும்...இருக்கீயா? இல்லையா?
நான்: ஹாய் i am fine. how r u? sorry was busy for quite some time. என்ன திடீரென்னு?
நண்பன்: ஒன்னுமில்ல. சும்மா தான்... சரி நாளைக்கு நீ freeya?
நான்: நாளைக்கா? no. am not. y?
நண்பன்: சரி சனிக்கிழம?
நான்: டேய், எனக்கு exam pa... ஏன் கேட்குற?
நண்பன்: ஒன்னுமில்ல.. உன்னைய barber கடைக்கு கூட்டிகிட்டு போனும்!
நான்: என்னையவா? எதுக்கு?
நண்பன்: ஒபாமா ஜெயிச்சாருன்னா, உனக்கு மொட்ட போட்டு, நாக்குல வேல் குத்தனும்னு வேண்டியிருந்தேன். அதுக்கு தான்.
நான்: ஹாஹாஹா...லூசு லூசு! இதலாம் நிறைவேறாத வேண்டுதல். அப்பரம்... வாழ்க்கை என்ன சொல்லுது? wen are ur exams?
நண்பன்: இந்த வாரம் தான் பரிட்சை நடக்குது. அன்னிக்கு monday, throat பத்தி ஒரு exam. கேள்விக்கு கேட்டவனையே அலரி அடிச்சுகிட்டு ஓடுற அளவுக்கு என் பதில எழுதிவச்சேன். பதில் படிக்கறவனுக்கும் புரியாது, எழுதின எனக்கும் புரியாத அளவுக்கு பரிட்சைய செஞ்சுகிட்டு வரேன்.
நான்: ஹாஹா.. நீயெல்லாம் எப்படி medicine முடிச்சு, டாக்டரா வந்து...யப்பா... உஸ்ஸ்ஸ்....முடியாதுடா சாமி!
நண்பன்: ஹாஹா.... anywayz wanted to ask u. are u gg for நகுல்'s party?
நான்: நோ, எனக்கு exams. நான் போகல்ல...நீ?
நண்பன்: நானும் போக போறது இல்ல. நம்ம ரவீனுக்கும் பரிட்சை தான். ஆனா அவன் போறானாம். சும்மா 1 hr இருந்துட்டு வந்துடுவானாம். இதலாம் நடக்குற காரியமா?
நான்: நம்ம ஆளுங்கல நம்பி 1 hr வாக்குலாம் கொடுக்க முடியாது.... போனா...4, 5 மணி நேரமாவது wasteஆ போயிடும்.....
நண்பன்: சரியா சொன்னே போ.... 6 மணிக்கு மீட் பண்ண சொன்னா, 7 மணிக்கு தான் வந்து சேருங்க.... நடக்குற காரியம் இல்ல. u heard abt the farewell party in our school for our current batch? are u gg for that?
நான்: ஆமா நான் போறேன். அது 24th தானே... அதுக்குள்ள பரிட்சையலாம் முடிஞ்சுடும். நீ வா..
நண்பன்: இல்ல லா... நான் வரல.... அங்க யாரையும் தெரியாது....
நான்: நான் மட்டும் என்ன தெரிஞ்சுகிட்டா போறேன்... அங்க சூப்பரா சாப்பாடு இருக்கும். நல்ல ஒரு வெட்டு வெட்டிட்டு, அப்படியே ஒரு வாரத்துக்கும் pack பண்ணிட்டு வந்துட வேண்டியது தான்.
நண்பன்:ஹாஹா...நீ திருந்தவே மாட்டே....
நான்: நான் திருந்திட்டா, அடுத்த நிமிஷமே உலகம் அழிஞ்சு போயிடும்...
நண்பன்: ஹாஹா...எப்படி லா இப்படியலாம்? அப்பரம் உன் காதல் வாழ்கையலாம் எப்படி போகுது?
நான்: என்னது? காதல் வாழ்க்கையா? எனக்கு தெரியாம... அப்படி ஒன்னு நடக்குதா....நீ வேற...
நண்பன்: ஆமா லா...இந்த year ஒரு april fool shock கொடுத்து ஏமாத்தினீயே...எப்படி மறக்க முடியும்?
நான்: ஏ, சாரி சாரி. அது சும்மா தான் பா.
நண்பன்: hey ச்சி... i was just kidding too. சரி, நீ போய் நல்லா படி. all the best 4 exams. உனக்கு எப்போ exams முடியுது?
நான்:14th nov. உனக்கு?
நண்பன்:21st nov...நமக்கு exams முடிஞ்ச பிறகு, நீ, ரவீன், நான்....நம்ம எல்லாரும்... அஞ்சப்பர்க்கு சாப்பிட போவோம்...
நான்: அஞ்சப்பரா!!! ஒகே ஒகே, நான் இப்பவே ரெடி.
நண்பன்: ஹாஹா...ஒகே காயத்ரி, u take care and all the best 4 exams.thanks for the comedy time. ஹாஹ...
நான்: u too. gd nitez.
Nov 4, 2008
அஜித்துக்கு பிடிச்ச ஸ் எம் ஸ்
"எந்த துன்பங்கள் வந்தாலும் எந்த தடைகள் வந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. ஏன் என்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் இல்லை. ஆயிரம் முறை தோற்றவன்"
தன் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதால் இதை அழிக்காமல் தன் கைபேசியில் வைத்துள்ளார் தல!
இதை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நண்பர்களுக்கு அனுப்பினேன்! :)
"No matter what type of sorrows hit us hard, do not feel discouraged. We r mentally and physically strong. Not bcos we have met success 100 times, bcos we have struggled thru failures a 1000 times"
Nov 3, 2008
தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்(1)...
Oct 31, 2008
அண்ணாத்தே கொடுத்த 'தல'வலி
main hoon na ஹிந்தி படத்த அப்படியே காபி அடித்திருந்தால் கண்டிப்பா சொல்றேன், படம் ஹிட்டாக இருந்திருக்கும். ஆனா, இப்படி சொதப்பி, கொல்ல பண்ணி, படத்த கதற கதற எடுத்திருக்காங்கய்யா....
ஏன்? ஏன்? ராஜு, ஏன் உங்களுக்கு இந்த கொல வெறி. தம்பி எடுக்குறான்... சரி நம்மலும் எடுக்காலாம்னு நினைச்சு எடுத்தீங்களா?
படத்தின் ஆரம்ப காட்சியில் வில்லன் சுமன் தான் அஜித் என்று நினைத்து தியேட்டரில் ஒரே விசில் சத்தம். கொஞ்சம் close upல பாத்த பிறகு தான் தெரிஞ்சுது அது அஜித் இல்லன்னு. செம்ம காமெடியா போச்சு! போண்டா சாப்பிடனும்னு நினைச்சு, மசாலா தோசைய சாப்பிட்டு, அது சரியா செரிக்காம, ஓம தண்ணி குடிச்ச மாதிரி படம் இருக்கும். நயன் தாரா ஏழைவீட்டு டீச்சரா நடிச்சு இருக்காங்க. ஏன்னா, அவங்களுக்கு ஒரு முழு ஜாக்கெட் வாங்கிபோடகூட காசு இல்ல.
நகைச்சுவை என்ற பெயரில் கோமாளித்தனம். செம்ம மொக்கை. அஜித் காமெடியில் ஆங்காங்கே ராஜுவின் சாயல்! இந்த கதாபாத்திரத்திற்கு 25கிலோ ஏத்தினாராம். ம்ஹும்.... நல்லா இருங்கப்பா!
அண்ணன்(ராஜு) கொடுத்த 'தல'வலி தாங்கா முடியல....
Oct 28, 2008
2 சூர்யா, 1 விஷால், 1 நயன்ஸ்
மதிய வேளையில் அக்கா தோழி வீடு, இன்னொரு 2 family friend வீட்டுக்கும் போய் collection! மொத்தமா சூப்பர் collection. தீபாவளி அன்னிக்கு ரீலிஸ் ஆகும் படங்களுக்கு collection ஆகுதோ இல்லையோ... எங்களுக்கு செம்ம collection!
ஒவ்வொரு வீட்டிலும் செம்ம வெட்டு வெட்டு...சாப்பாட சொன்னேங்க....
2 சுத்து பெருத்து போன மாதிரி இருக்கு. :)
கிடைத்த காச வச்சு தீபாவளி படம்- ஏகன் பாக்க போனோம்.....ஐயோ ஐயோ....அத பத்தி அப்பரம் சொல்றேன்.
எனிவேஸ், அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
Oct 13, 2008
Cனிமா சினிமா, ஸினிமா, Siனிமா..
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
1 வயது இருக்கும்போதே சினிமா பார்க்க ஆரம்பித்தேன். 'பந்தம்' திரைப்படம் மூனு வேளையும் வீட்டில் ஓடுமாம்.. அம்மா சொல்வாங்க... பேபி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக வந்த படம். "big uncle big uncle" என்று சொல்லும் அந்த குரலை எப்படி மறக்க முடியும்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா!:)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
onlineல் சத்யம் படம் பார்த்தேன். தமிழ் படத்தில் பாட்டு, fight, தேவையில்லாதா sentiment சீன், மொக்கையான காமெடி சீன் இவை அனைத்தும் forward செய்துவிட்டேன். படத்தை 45 நிமிடங்களில் பார்த்து முடித்தேன். விஷாலுக்காக மட்டுமே பார்த்தேன். செம்ம cuteஆ இருக்காரு.... ஆனால், ஒரு காக்க காக்க மாதிரி படத்தில் நடித்திருந்தால்...பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்திருக்கும் என்று உணர்ந்தேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
நிறைய உண்டு. இப்ப நினைவுக்கு வருவது 'காதல்' திரைப்படம். படத்தை தோழிகளோடு திரையரங்கில் பார்த்தேன். படம் முடிந்து அரை மணி நேரமாவது அழுது இருப்பேன். எல்லாரும் என்னை சமாதானம் படுத்தியபோதும், என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. ரொம்ப feelingsஆ போச்சு.....
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அப்படி ஏதும் இல்லை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
திரையில் பார்ப்பது வேறு. அதற்கு பின்னால் நடப்பது வேறு. ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் படும் கஷ்டம். யப்பா.... பாவம் தான்! எனக்கு இந்த பின்னால் ஆடும் நடனமணிகளை பார்த்தால், பாவமா இருக்கும். எவ்வளவு கஷ்டம். என்னுடைய ஆங்கிள் ஒருத்தர் என்னிடம் சொன்னார்....வெளிபுர நடனம் ஆடும்போதுகூட, இந்த டான்ஸ்ர்களுக்கு துணி மாற்றகூட சரியான இடம் கிடைக்காதாம். ஹீரோ/ஹீரோயின் பின்னால் முதல் வரிசையில் ஆடுபவர்கள் சீனியர். ஆக பின்னால், ஆடுபவர்கள் புதிது அல்லது சரியாக ஆட தெரியாதவர்களாம். எந்த வரிசையில் இருக்கிறார்களோ, அந்த வரிசைபடி சலுகைகள் கிடைக்குமாம்!...
6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ம்ம்ம்... அதானே வேலையே! indiaglitz.com மற்றும் cinesouth.com தினமும் படிப்பேன்.
7.தமிழ்ச்சினிமா இசை?
புது பாட்டு வந்தால் உடனே கேட்டுவிட்டு, தோழிகளிடம் discussion நடக்கும். இந்த பாட்டு, எந்த பாடலின் தழுவல், யார் எந்த ஆங்கில பாடலை காப்பி அடித்திருக்கிறார் என்பதை பற்றி பேசுவதுண்டு.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலம்- நான் வாழ்க்கையில் முதன் முதலாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு சென்று பார்த்த படம் 'bend it like beckham'. முதன் முதலாக திரையரங்கில் பார்த்த ஆங்கில படம். முதன் முதலாக நண்பர்களுடன் வெளியே சென்ற நாள் அதுவே. இப்படி நிறைய 'முதன் முதலாக' நடந்ததால் இந்த படம் ரொம்ப பிடிக்கும். பல வகையில் மனதை தாக்கிய படமும்கூட.
9ஆம் வகுப்பு படித்த வருடம் அது. அந்த வருடம் தான்,காற்பந்து உலக கிண்ண போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. படத்தை பார்த்து மறுநாளே, பள்ளி திடலில் ஒரே காற்பந்தாட்டம் தான்!
korean movie-the grandmother
thai movie- alone
hindi movie- chak de india, Khabi kushi kabhi kham, kal ho naa ho
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படி ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் அப்படி ஏதேனும் ஒரு ஆள் தெரிந்தால்... ஏதேனும் ஒரு producerர பிடித்து bend it like beckham படத்தை தமிழில் எடுக்க சொல்வேன்...ஹிஹிஹி..:)
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிறைய புதுசா செய்யும் திறமையாளர்கள் உண்டு. ஆக... நல்லா வரும் தமிழ் சினிமா.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அப்படி ஏதேனும் இல்லை என்றால்..ரொம்ப tension ஆயிடுவேன். பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைக்குறேன். ஹாஹா... தமிழர்களுக்கு...என்ன ஆகுமா?ம்ம்ம்ம்.... நல்ல முன்னேறிவிடுவார்கள்... ஹிஹி...:)
அடுத்து அழைப்பது,
கார்த்திக்
நவீன்
கார்த்திகா
இரயில் பயணத்தில் ஒரு காதல் கவிதை!
இனிய இரவு
ஜன்னல் வெளியே மழை
குளிர் காற்று
பக்கத்தில் நீ
உன் மடியில் நான்
இது போதும்டா.
வாழும் போதே
சொர்க்கத்தை
உணர்ந்துவிட்டேன்!
காதல் பார்வையுடன்
என் கை பிடித்து கேட்டாய்
"எத்தனையோ கவிதை
எழுதி இருக்கே
எனக்காக இப்ப
ஒரு கவிதை
சொல்லேன்..ப்ளீஸ்"
உடனே எனக்கு
தோன்றியது
"நான் கொஞ்ச அழுகு
நீ கொஞ்சும் அழுகு"
காதலுக்கு கண் இல்லையாம்.
ச்சே.. அப்படி ஒரு காதல்
வேண்டாம் நமக்கு.
என் காதலுக்கு
கண் வேண்டும்,
இல்லையெனில்
இந்த கருப்பு நிலாவை
எப்படி ரசிப்பது?
ரொம்ப குளிருது.
ஜன்னலை சாத்தவா?
இல்ல
உன்னை போர்வையா
அள்ளி போத்தவா?
சேலை மாற்றவேண்டும்
என்று என்னை
வெளியே அனுப்புகிறாயே.
'compartment'க்கு கிடைத்த பாக்கியம்
இந்த
'companion'க்கு கிடைக்காதா?
என்னை
தனியே விட்டு,
உன் நண்பனிடம்
நீ செல்போனில் பேசிய
அந்த இரண்டு நிமிடங்களில்
என் உயிர் 'செல்'களெல்லாம்
தனிமையில்
தவித்தன!
(இதே concept வச்சு நம்ம காதல் இளவரசன் நவீன் காதல் கவிதைகளை அள்ளி வீசுவார் என்று கூறியுள்ளார். விரைவில் எதிர்பார்க்கலாம்....:)
Oct 7, 2008
Sep 23, 2008
ரொம்ப நாளைக்கு அப்பரம்...
இந்த வருடம்(22nd birthday) அக்கா surprise birthday party organise பண்ணினாள் எனக்கு. புரட்டாசி மாதம் ஆரம்பிக்கும் 3 நாள் முன்னாடி, 14ஆம் செப்டம்பர் அன்று ஞாயிற்றுக்கிழமை, எல்லா கூட்டாளிகளையும் வரவழைத்தாள்.
நான் badminton விளையாட போயிட்டேன் தங்கச்சிகூட. எல்லாரும் ஒரு master planவோட தான் இருந்திருக்காங்க.
என் தங்கச்சிகூட நான் விளையாட சென்றபோது, வீட்டை அலங்காரம் செய்து, கேக் வாங்கி வைத்து....எல்லா ஏற்பாடும் செஞ்சுவச்சுட்டாங்க.
நான் விளையாடி முடிச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்ச போது, தோழிகள் மூன்னு பேரு டிவி
பாத்துகிட்டு இருந்தாங்க. சிலர் ரூம்ல அரட்டை அடித்து கொண்டு இருந்தாங்க.
யோவ் என் வீட்டுல என்னய்யா செய்யுறீங்க! எனக்கு தலையும் புரியல்ல.. வாலும் புரியல்ல...மயக்கமே வந்துடுச்சு! சுயநினைவுக்கு வரவே
கொஞ்சம் காலம் ஆச்சு. இதலாம் உண்மை தானே, இல்ல கனவான்னு நினைச்சு நினைச்சு, தலையே சுத்தி போச்சு. 20 பேர்கிட்ட ஒன்னா வீட்டுல பாத்தா எப்படி இருக்கும் எனக்கு!
அப்பரம் புதுசா சுடிதார் வாங்கி வச்சு இருந்தாங்க. அத போட்டு கொண்டு கேக் வெட்டினேன். அக்காவும் எங்க கிரிக்கெட் தோழி விக்கியும் ஸ்பெஷ் டான்ஸ் ஒன்னு ஆடினாங்க, நாக்க முக்க பாட்டுக்கு. highlight of the day அது தான். செம்மயா enjoy பண்ணோம்.
casurina curry cateringலிருந்து சாப்பாடு வந்துடுச்சு. அத ஒரு வெட்டு வெட்டினோம். இரவ்ய் 9 முதல் 10 வரை 'dance floor'. வீடு ஒரு மணி நேரத்துக்கு குட்டி club மாதிரி மாறிடுச்சு. அன்னிக்கு ஆடாத 4 பேரு- அப்பா, அம்மா, எங்க வீட்டு பணிப்பெண், எங்க கிரிக்கெட் assistant coach.
மத்த எல்லாரும், டான்ஸ் தெரிஞ்சவன், தெரியாதவன் ஆடினாங்களோ இல்லையோ, முடிஞ்ச வரைக்கும் on the spot jogging பண்ணோம்.
பார்ட்டி முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்கு கிளம்பியபோது இரவு மணி 1030. அப்பவும் 2 தோழிகள் உட்கார்ந்து இருந்தாங்க, என்ன ஆச்சுன்னு கேட்ட போது
"இன்னும் கொஞ்சம் நேரம் இருக்குறோம். 2nd session dance floor பண்ணலாம்"னு சொன்னுச்சுங்கோ!
அடங்காத non-stop hits/குத்து ராணிகள்!
Sep 5, 2008
நான் ரொம்ப மோசம்
8 மணிக்கு சென்றோம். பயங்கரமா அலங்கரித்து ரொம்ப பிரமாண்டமா இருந்துச்சு இடம். சாப்பாடு மணம் ஒரு பக்கம் தூக்கலா இருந்துச்சு. கிரிக்கெட் சட்டை, track pants, shortsல தோழியை பார்த்து, நேத்து அவ போட்டிருந்த பச்சை சேலையில் பொண்ணு ரொம்ப அழகாவே இருந்தா.
கிரிக்கெட் நண்பர்கள் நாங்க தான் அங்க dominating gang. கிட்டதட்ட 20 பேரு!! கேக் வெட்டினார்கள். அப்பரம் இரவு உணவு. அதுக்கு அப்பரம் தான் மேட்டரே இருந்துச்சு. எத்தனை லிட்டர் பெப்சி குடித்தேன்னு தெரியல்ல...
போட்டோ எடுக்கனும்னு கூப்பிட்டாள் தோழி. சரி நம்பி போனோம் முன்னாடி. அங்க stageக்கு போனபிறகு, டான்ஸ் ஆடனும்னு சொல்லிட்டா. எங்களில் சிலருக்கு கூச்சமா இருந்துச்சு. ஆக, நாங்கள் சும்மா கைதட்டி கொண்டிருந்தோம். 2, 3 பேரு தான் ஆடினார்கள். அதுவும் ஹிந்திக்கார பொண்ணுங்க...அப்ப ஓம் சாந்தி ஓம் ஹிந்தி பாடல்கள் ஒலித்தன. ஓரத்தில் நின்று கொண்டிருந்த என்னைய இழுத்துகிட்டு மேடைக்கு சென்றன. பங்கரா டான்ஸ் ஆட சொன்னார்கள்.
நான் ஒன்னும் தெரியாத பாப்பா போல முகத்தை வைத்து கொண்டு ' i dun know man' என்றேன். அப்போது ஆடுவதற்கு mood வரவில்லை. இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டேன். என் அக்கா ஏற்கனவே அங்க மத்தவங்க கூட ஆடிகிட்டு இருந்தாள். நான் ரசித்து பார்த்தேன். அப்பரம் திடீரென்னு இரண்டு பேரு என்னைய தூக்கி கொண்டு மேடையில் போட்டனர்!
அந்த நொடி "மொச்சை கொட்ட பல்லழகி, முத்து முத்து சொல்லழகி" என்ற ஒரு செம்ம குத்து பாடலை போட, எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. டப்பாங்குத்து தானா வந்தது. எல்லாருக்கும் ஆச்சிரியம்! அப்படி ஆரம்பித்தேன் காலில் சலங்கையை கட்டி கொண்டு...930 மணிக்கு ஆரம்பித்த ஆட்டம், 1115 மணி வரைக்கும் நிறத்தவில்லை. folk, western, hindi remix, english, salsa, tango என்ன வரதோ, எல்லாத்தை குத்து குத்துன்னு ஆட்டம் போட்டேன்!!
கிரிக்கெட் பயிற்சிகள் போது, கொஞ்ச சீரியஸா இருப்பேன். நானா இப்படி ஆடுவது என்று எல்லாருக்கும் ஷாக்!! எனக்கே அதிர்ச்சியாகா தான் இருந்துச்சு. குடித்த பெப்சியில் எவனோ ecstasy pillsயை போட்டுவிட்டானு நினைக்குறேன்.
அம்மாடி ஆத்தாடி பாடலுக்கு சிம்புகூட இந்த அளவுக்கு வேகமா ஆடி இருக்கமாட்டான். அந்த அளவுக்கு....ஐயோ....இப்ப நினைச்சாகூட... (எனக்கே கொஞ்ச அதிர்ச்சியா இருக்கு...)
ஏற்கனவே கால் வலி. அதையும் மறந்து ஆடினேன். நான் ரொம்ம்ப மோசம்ங்க....
துன்பத்துல சிரிக்கனும்னு திருவள்ளுவர் சொன்னாரே. ஒரு வேளை அப்படி பின்பற்றினேனோ! (யப்பா...என் போதைக்கு, வள்ளுவரை ஊறுகாய் ஆகிட்டேன்ய்யா...அவ்வ்வ்வ்...என்னைய மன்னிச்சிக்கோ ஐயா!)
எங்களை வெளியே தூக்கிபோடாத குறை!! இடத்தை பூட்டிவிட்டு செல்லும் வரை, டான்ஸ் டான்ஸ் டான்ஸ், குத்து, கும்மாங்குத்து தான்! நாங்கள் ஆடுவதை பார்த்துவிட்டு, தோழியின் சித்தப்பாவும், சித்தியும் ஆட ஆரம்பித்துவிட்டார்கள். :)))
வீட்டுக்கு வந்தோம். வரும் வழியில்
நான்: அக்கா, கடந்த 2 மணிநேரம் நடந்த விஷயத்தை நீயும் மறந்துடு. நானும் மறந்துடுறேன்.
அக்கா: ஏ...ஆமா...வீட்டுல கேட்டா என்ன சொல்றது?
வீட்டை அடைந்தோம்.. அம்மா தூங்கிவிட்டார். அப்பா சன் டிவி பார்த்து கொண்டிருந்தார்.
அப்பா: என்ன இவ்வளவு லேட்டு?
நாங்கள்: லேட்டா தான் கேக் வெட்டினாங்க...அதான்...
எங்கள் மனசாட்சி: அநியாயம எங்கள கொன்னுட்டீங்களே!அவ்வ்வ்....
அடித்த போட்ட பன்னி மாதிரி தூங்கினோம். ஓவர் சத்தம், ஆட்டம் உடல் வலியை ஏற்படுத்தியது. ஓவர் பெப்சி, தொண்டை வலியை ஏற்படுத்தியது. தலைவலி வேற..... கால் வலி போய் இப்ப மத்த வலி!!!
யப்பா.....முடியல.... ஆனாலும் ரொம்ப நாளைக்கும் அப்பரம் குஷியாக ஃபீல் பண்ணியது மனசு! அப்பரம் நாங்களும் யூத் என்பதை அடிக்கடி நிருபிக்க வேண்டாமா!
வரும் சனிக்கிழமை இன்னொரு பிறந்தநாள் கொண்டாட்டம் வர போகுது, ஆருயிர் தோழியின் பிறந்த நாள் வேற... அடுத்த ஆட்டத்துக்கு ரெடி!!
Sep 2, 2008
யாருக்குய்யா வேணும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், இங்க பாருங்க அடுத்த சூர்யா ரெடி!
(குறிப்பா நிமிடம் 1.02 கேளுங்க... "he is holding his hands") ஹாஹா....
ஆங்கிலம் இனி மெல்ல சாகும்!
கீழ் உள்ள வீடியோவில் (குறிப்பா நிமிடம் 2.25 கேளுங்க)
Aug 29, 2008
நம்ம(என்) விஷாலுக்கு பிறந்தநாள்
Aug 25, 2008
போ என்ற வார்த்தையில் வா என்கிறாய்-சிறுகதை
"ஒன்னுமில்ல சார், ஆபிஸிலிருந்து வீட்டுக்கு கிளம்பும்போது, பைக்கை
கொஞ்ச வேகமாக ஸ்டார்ட் பண்ணிட்டேன்னு நினைக்குறேன். அதான், muscle pull மாதிரி இருக்கு." என்றேன் நான்.
"cooling spray இருந்தா, கால்ல spray பண்ணிக்குங்க...சரியாயிடும்." என்று பேசி கொண்டு இருவரும் மின் தூக்கியில் ஏறினோம். அவர் குழந்தைகள் எவ்வாறு இருக்கின்றனர், எப்படி படிக்கிறார்கள் என்பதை பற்றி கேட்டேன். பேசி முடிப்பதற்குள் நாங்கள் இறங்கும் இடம் வந்தது.
"sister நல்லா இருக்காங்களா..கேட்டதா சொல்லுங்க" என்று என் மனைவி ரேவதியை பற்றி நலம் விசாரித்தபடி, அவர் வீட்டை நோக்கி நடந்தார். நான் என் வீட்டை நோக்கி நடந்தேன்.
நேத்து எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை. நேத்து 6 மணிக்கு கோயிலுக்கு போலாம்னு சொன்னாள். நானும் ஒகே என்று சொன்னேன். ஆனா, சாய்ந்தரம் 6 மணி வரைக்கும் மீட்டிங். ஆபிஸ் டென்ஷனில் ரேவதி சொன்னதை மறந்துவிட்டேன். செல்போனில் பேட்ரி சுத்தமா போச்சு. 18 மிஸ்ட் கால் கொடுத்திருந்தாள். வீட்டுக்கு வந்து தான் பார்த்தேன்.
அவள் ரொம்ப பாவம்! கோயில் வெளியே ஒரு மணி நேரமா காத்துகிட்டு இருந்தாளாம். எனக்காக காத்திருந்து காத்திருந்து மனம் நொந்து போனவள் வீட்டுக்கு வந்து பெரிய சண்டை போட்டாள்! நானும் என்ன செய்ய? என் மேல தப்பு தான். இருந்தாலும், மறந்துட்டேன். நேற்று ரொம்ப ஸ்பெஷ்ல் தினம். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க இரண்டு பேரும் முதன் முதலா பாத்துகிட்ட நாள், பாத்துகிட்ட இடம்! அம்மா அப்பா நிச்சயிக்கப்பட்ட திருமணம். பொண்ண நாங்க பாத்துட்டோம், நீயும் போய் பாருடான்னு கோயிலுக்கு அனுப்பிவச்சாங்க. பார்த்தோம், பேசினோம், ரொம்ப பிடிச்சுபோச்சு எனக்கு! ரேவதிக்கும் தான்!
இரண்டு வருஷம் அதுக்குள்ள ஓடிபோச்சு. நானும் ரேவதியும் பார்த்துகொண்டு அதே கோயிலில், அதே நாளில் ஒவ்வொரு வருஷமும் போக வேண்டும் என்பது அவளது ஆசை! ஆனா, நேத்திக்கு நான் தான் சொதப்பிட்டேன். நிறைய விஷயங்களை எனக்காக விட்டு கொடுத்தவள். நானாவது நேத்திக்கு சண்ட போடாமல் இருந்திருக்கலாம்.
நான் கோபத்தில் வார்த்தையைவிட, அவளுக்கும் கோபம் வர, அழுதுவிட்டாள். எனக்கு மனசு கஷ்டமா போச்சு. சாப்பிடாமலேயே தூங்கிவிட்டாள். இன்று காலையில் ஆபிஸ்க்கு சென்றுவிட்டு கிட்டதட்ட மூன்னு நாலு 'sorry' ஸ் எம் ஸ் அனுப்பி இருப்பேன். ஆனா, பதில் வரவில்லை. இப்ப இன்னும் கோபத்தில் இருக்கிறாளோ?
வீட்டின் கதவை திறந்தேன். அவள் dining tableலை துடைத்து கொண்டிருந்தாள்.
"hey dear எப்படி இருக்க? are u ok now?" என்று சதாரணமாய் வினாவினேன்.
ஒன்றும் பேசவில்லை ரேவதி. இன்னும் கோபமாய் தான் இருக்கிறாள். நான் மெதுவாய் நடந்து என் அறைக்குள் செல்லும்போது, ரேவதி என் காலையே பார்த்து கொண்டிருந்தாள்.
"என்ன ஆச்சு?" என்பது போல் அவளது கண்கள் பேசின.
நடந்தவற்றை சொன்னேன். அவள் கேட்டுகொண்டே தான் செய்துகொண்டிருந்த வேலையை தொடர்ந்தாள்.
அவள் கோபத்தை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு குளித்து முடித்தேன். காலில் வலி ஏற்பட படுக்கையில் உட்கார்ந்தேன். ரேவதி அறையினுள் நுழைந்தாள் கையில் cooling spray bottleலோடு.
என் கால் அருகே வந்து, spray பண்ணிவிட்டாள் ஏதுவுமே பேசாமல். அவள் கைகளால் தடவி விட்டாள். cooling sprayயைவிட அவளது கைகள் இன்னும் கூலா இருந்துச்சு. அவள் காட்டிய அன்பும் அக்கறையும் நேற்று நான் செய்த முட்டாள்தனத்தை ஞாபகப்படுத்தி, குத்திகாட்டியது!
ரோஜாப்பூ போல் மென்மையான அவளது கைகளை தொட்டேன்,
" மா... சாரி... மா... இன்னும் கோபமா? ஐ எம் ரியலீ சாரி ரேவதி. என் தப்பு தான்... என்கிட்ட ஏதாச்சு பேசேன்.." சொல்லி முடிப்பதற்குள் என் கைகளை வெடுக்கென்று தட்டிவிட்டு சென்றாள்.
"ரேவா...ரேவா...ப்ளீஸ்...சொல்றத கேளு..."
கால் வலி பாதி குறைந்தது; ஆனால், அவள் என்னிடம் பேசமால் இருப்பது, என் மன வலியை அதிகரித்தது. என்ன செய்வது என்று புரியமால் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, மறுபடியும் உள்ளே வந்தாள். மடித்த துணிகளை அலமாரியில் அடுக்கி வைத்து கொண்டிருந்தாள்.
மெதுவாய் அவள் அருகே சென்று, பின்னாடியிலிருந்து அவளை கட்டி அணைத்து,
"டேய் பேசுடா செல்லம்.....என்கிட்ட பேச மாட்டீயா?" என்று அவள் கழுத்தோரமாய் முத்தமிட்டு கெஞ்சினேன். நான் செய்தது பிடிக்காதவளாய் என்னை தள்ளிவிட்டு அலமாரி கதவை ''படார்'ன்னு மூடிவிட்டு சென்றாள்.
"ச்சே, எதுக்குமே பிடி கொடுக்க மாட்டேங்குறா...சரி இனி இந்த கட்டிபிடி வைத்தியமெல்லாம் ஒன்னும் வேலைக்கு ஆகாது...வேற ஏதாச்சு யோசி ராகுல்" என்று என் மனசாட்சி சத்தமாய் சொன்னது.
இரவு சாப்பாட்டை dining tableலில் வைத்தாள். பொதுவா, நான் சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டே சாப்பிடுவேன். அதில் அவளுக்கு இஷ்டம் இருக்காது. dining tableலில் தான் சாப்பிட வேண்டும் என்பது அவளது strict ஆர்டர்!
அந்தெந்த இடத்திற்கும் பொருளுக்கும் கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்கனும்னு அடிக்கடி சொல்வாள். நான் தான் சில நேரத்துல கேட்பதில்லை. இன்னிக்கு அவளுக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டு, அவளை சமாதானம் செய்ய, அவள் இஷ்டப்படியே dining tableலில் அமர்ந்தேன்.
"இன்னிக்கு என்ன டிபன்?" என்று பேச்சு கொடுத்தேன். இரண்டு தோசையை என் தட்டில் போட்டாள்.
"ஓ இட்லியா?" என்று கிண்டலடித்தேன்.
"என்ன நக்கலா?" என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். அப்படியாவது பேசுவாள் என்று நினைத்தேன். ம்ஹும்..ஒன்னும் பேசவில்லை.
ரொம்ப நாளாச்சு, நாங்கள் இப்படி இருவரும் அருகருகே உட்கார்ந்து இருப்பது என்பதை அப்போது தான் உணர்ந்தேன். அவளுக்காக அதிக நேரத்தை ஒதுக்க முடியவில்லையே என்று வேதனை ஒரு புரம் பாய்ந்தது.
விரிந்த கூந்தல், வசீகரிக்கும் கண்கள், கிள்ளிபார்க்க துடிக்கும் கன்னங்கள், காந்தம்போல் ஈர்க்கும் உதடுகள்-அனைத்தையும் ரசித்தேன் அவள் சாப்பிடும் அழகையும் சேர்த்தே. தட்டுக்கு வலிக்காமல் தோசையை பூ போல் மெதுவாய் எடுத்து...வாவ்...எவ்வளவு அழகா சாப்பிட்டாள்! நானும் இருக்கேனே, ஏதோ பயல்வான் மாதிரி 5 தோசையை அப்படியே முழுங்கிட்டு போற ஜன்மம்!
அவளை ரசித்த ஒவ்வொரு நொடியும் எனக்கு புத்துணர்ச்சியை தந்தது.
"ஏய் நீ ரொம்ப அழகா இருக்க" என்று சொல்ல வார்த்தைகள் தொண்டை வரைக்கும் வந்தது. ஆனால், நான் சொல்ல போக, அவள் கண்ணகி கடைசி பேத்தி போல் கண்களாலே என்னை எரித்துவிடுவாளோ என்ற அச்சம் மேலோங்கியது. அவளது கோபத்தை அதிகரிக்க வேண்டாம் என்று தொண்டையில் நின்ற வார்த்தைகள் reverse gear போட்டு பின்னால் சென்றன.
அவளும் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றாள்.
இரவு 930 மணியானது. அவளுக்கு பிடித்த ஹிந்தி சீரியல் ஒன்று போடுவான் 930 அளவில். சீரியல் எனக்கு பிடிக்காது. இருப்பினும் அவளுக்காகவே டிவியை ஆன் செய்து சத்த அளவை அதிகமாய் வைத்து பார்க்க தொடங்கினேன். அறைக்குள் இருந்த அவள் வெளியே வேகமாய் வந்தாள்.
அவளும் உட்கார்ந்து பார்ப்பாள். ஏதாச்சு அப்படியே மெதுவாய் பேசி, அவளை கோபத்தை குறைக்கலாம்னு நினைத்தேன். அவள் வந்தாள், டிவி remoteயை என் கையிலிருந்து வெடுக்கென்று எடுத்தாள், எனக்கு பிடித்த கிரிக்கெட் channelலில் மாற்றிவிட்டு சோபாவில் remoteயை எறிந்துவிட்டு அறையினுள் சென்றாள்.
"உனக்கு பிடிச்சதே நீ பண்ணு!" என்பதுபோல் இருந்தது அவள் செயல். ஒரு குழந்தை கோச்சிக்கிட்டு போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அச்சமயம் அவள் முகத்தில் தெரிந்த கோபம்கூட அழகாய் இருந்தது. அவள்மீது கோபம் வரவில்லை. அவளை புரிந்த கொள்ளாமல் அவளை வேதனைபடுத்தி விட்டோமே என்று என் மேல் தான் எனக்கு கோபம்!
டிவி பார்க்கும் மூட் இல்லை. அறைக்குள் என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். படுத்து இருந்தாள். யாரும் இல்லாத போர்க்களத்தில் நின்று என்ன பயன் என நினைக்க, நானும் படுக்க சென்றேன். என் முகத்தை பார்க்க
பிடிக்காதவளாய், திரும்பி படுத்திருந்தாள். கடைசியா ஒரு தடவ 'சாரி' கேட்டு முயற்சி செய்து பார்ப்போமே என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால், மனசாட்சி" ரேவதிய நிம்மதியா தூங்க விடு. நாளைக்கு பேசிக்கலாம்" என்றது. நானும் ஒப்பு கொண்டு கண் அசர போன போது, திடீரென்று ரேவதி என் பக்கம் திரும்பி என் நெஞ்சில் அவள் முகம் சாய்த்து அழ ஆரம்பித்தாள்.
அவள் விட்ட மூச்சுகாற்று, அவள் சிந்திய கண்ணீர், அவள் கன்னத்தின் ஸ்பரிசம்-மூன்றும் என் நெஞ்சின் வழியாய் உடல் முழுவதும் சென்று, என்னை புதிதாய் பிறக்க செய்தது ஒரு உணர்வு.
"ஐ எம் சாரி ராகுல்... என்னால முடியல. உன்கிட்ட இன்னிக்கு பேசவே கூடாதுன்னு தான் நினைச்சேன்... ஆனா என்னால முடியல... ஐ எம் சாரி ராகுல் for everything." என்று என்னை கட்டி அணைத்து அழுதாள்.
"ஏய்...என்ன ரேவா... நான் தான் நேத்திக்கு கோபத்துல பேசிட்டேன். நான் தான் சாரி கேட்கனும். நீ போய் எதுக்குமா..." என்று அவள் தலை கோதி சமாதானப்படுத்தினேன்.
"இங்க பாரு...look at me.." என்றேன். அவளும் என்னை பார்த்தாள். கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தேன்.
"அழ கூடாது...இனிமே இப்படி நடக்காது. ஒகே.
ஆபிஸ்ல இன்னொரு phone charger வாங்கிவச்சிட்டேன்... இனி battery charge இல்லன்னு சொல்ல மாட்டேன்..."
சண்டை சமாதானத்தில் முடிந்ததது என்பதற்கு முற்றுப்புள்ளியாய் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டாள்.
அக்கறை பார்வையுடன் ரேவதி "ராகுல், இப்ப கால் எப்படி இருக்குடா...next time பார்த்து பைக்க ஸ்டார்ட் பண்ணுடா"
அதுக்கு நான், "முன்பு spray போட்டபோது பாதி வலி போச்சு. இப்ப கொடுத்தியே ரெண்டு கிஸ், அதுல எல்லா வலியும் போச்சு" என்று கண் சிமிட்டினேன்.
"ச்சீ...போடா" என்று என் கன்னத்தில் செல்லமாய் அடித்தாள்.
"நான் ஒன்னு சொல்லவா?" என்றேன்.
"என்னடா?" என்றாள்.
"நீ ரொம்ப அழகா இருக்க.." என்றேன். வெட்கப்பட்டு புன்னகையித்தவளாய் என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
*****முற்றும்*********
Aug 24, 2008
ரொம்ப நாளாச்சு
இந்த 'படிப்பு' என்ற விஷயத்தை கண்டுபிடித்தவனை தீவிரமா தேடிகிட்டு இருக்கேன் கொலைவெறியோட!!
இரண்டு வாரத்துக்கு முன்னாடி, கிரிக்கெட் பயிற்சியின் போது muscle pull ஆச்சு. கொஞ்ச நாள்ல சரியாயிடும் என்று பார்த்தால் வலி அதிகரித்துவிட்டது இரண்டு கால்களிலுமே. டாக்டர்கிட்ட போனேன்.
"your muscle fibre is torn. u should not train for 3 weeks." என்ற பெரிய குண்டை என் தலையில் போட்டார். அதிக நேரம் நடக்க கூடாதாம். நிக்க கூடாதாம். கனமான பொருட்களை தூக்க கூடாதாம். கால்களில் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை icepack வைக்கனுமாம்.
அவர் 'no training' என்ற சொன்னபோது, எனக்கு அழுகையே வந்துச்சு. இப்ப தான் main teamல விளையாட ஆள் select பண்றாங்க. இந்த நேரத்துல இப்படி ஆச்சுன்னு மனசு நொந்துபோச்சு.. அடுத்த வாரம் என் முதல் match விளையாட வேண்டியது....ஆனா போகமுடியாது!!!
கஷ்டம் singleலா வராது. கூட்டமா தான் வரும்! அதுக்கு அப்பரம், கையில ஒரு பெரிய கட்டி மாதிரி வந்து இருக்கு. என்னவென்றே தெரியல! கைய தூக்க முடியல....
கொடுமைக்கு மேல் கொடுமை!
ப்ளாக்ல எழுதும் ஆசையும் உற்சாகமும் இல்லாமல் போய்விட்டது. அதான் இங்க தலைக்காட்ட முடியல.
Aug 15, 2008
காதல் எனப்படுவது....யாதெனில்
காதல் எனப்படுவது
காட்டுத்தீயாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
குளிர்க்காய்வோம்!
காதல் எனப்படுவது
கானல் நீராக இருந்தால்
வா,
நாம் இருவரும்
அதில் மறைந்துபோவோம்!
காதல் எனப்படுவது
கரிசல்காடாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
அதில் நடந்து செல்வோம்!
காதல் எனப்படுவது
புயல் காற்றாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
கைகோர்த்து பறந்து செல்வோம்!
காதல் எனப்படுவது
ஆகாய சந்தையாக இருந்தால்
வா,
உன் கண்களைபோல் இருக்கும்
நட்சத்திரங்களையும்
உன் முகம்போல் இருக்கும்
நிலாவையும்
வாங்கி வருவோம்!
எழுதிமுடிப்பதற்கு,2 கிலோ மீட்டர் ஓடி முடித்ததுபோல் ரொம்ப tiredaa போயிட்டேன். இதை எழுதுவது கஷ்டம், ஆனா, அடுத்து யாரை கூப்பிடலாம் என்பது ரொம்ப ஈசி!! தற்போது கவிதைகளா கொட்டி தீர்க்கும் கார்த்திக் அவர்களை அடுத்து அழைக்கிறேன்... வாங்கப்பா மின்னல்...!!:)
Aug 13, 2008
ஜோ & சூர்யாவின் மகளுக்கு ஒரு வயசு
உலகத்துல 7 பேரு ஒரு மாதிரி இருப்பாங்களாம். அது உண்மை தான் நினைக்குறேன். என் பக்கத்துவீட்டு சீன பையனுக்கு 2 வயசு தான் ஆகுது. அவனும் அசல் தியா மாதிரியே இருக்கான்! ம்ம்ம்...குழந்தைகள் என்றாலே ரொம்ம்பப cute தான் போல.
Aug 12, 2008
அக்காவுக்கு பிடிக்காத நடிகர்
சாப்பாடு வந்துடுச்சு... நான் என் வேலைய ஆரம்பித்தேன். சாப்பிட்டு கொண்டிருந்தபோது, தோழன் திடீரென்னு கேட்டேன் "என்ன காயத்ரி,3 வருஷமா காலேஜ் படிக்குற.. boyfriend எவனாச்சு இருக்கானா?" என்று கேட்டான்.
நான் வாயில் கோழியை அமுக்கி கொண்டே "ஆமா, இருக்கான்" என்றேன். அக்காவுக்கு ஒரே ஷாக்!
"விஷால் தான் என் boyfriend" என்றேன் நான்.
"அட த்தூதூதூ...." என்று ஒரு சத்தம் கேட்க, தட்டில் இருந்த என் பார்வை எதிரில் உட்கார்ந்து இருந்த என் அக்காவிடன் சென்றது. அக்கா தான் துப்பினாள்.
"என்ன ஆச்சு"
"எனக்கு பிடிக்காத ஒரு நடிகன்னா, அது விஷால் தான்" என்றாள் அக்கா! இப்போ எனக்கு ஒரே ஷாக்! விஷால பிடிக்காத ஒரு பொண்ணா???
பிடிக்காததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனாள்.
எனக்கு பிடித்ததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனேன்.
தோழன் எங்க சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.....
Aug 11, 2008
சுப்பரமணியபுர சுவாதி- ஒன்னும் சொல்றதுக்கு இல்ல
இப்போ மேட்டர் என்னன்னா... அந்த புள்ள பேரு என்னா...ஆ..சுவாதி!
என் தோழன் ஏற்கனவே படத்த பாத்துவிட்டு, சுவாதி சுவாதின்னு இரண்டு மூன்னு நாளா உலறிகிட்டு இருந்தான்...புள்ள ஏதோ சூப்பரா பண்ணியிருக்குன்னு நம்பி போனேன்...
ஐயோ ஐயோ ஒன்னும் சொல்றதுக்கு இல்ல! ஏங்க, அதான் வெட்கமா? வெட்கப்படற மாதிரி பாக்க சொன்னா, ஏதோ வெத்தல பெட்டி டப்பாவ திருடிக்கிட்டு போற மாதிரி ஒரு பார்வை. இயக்குனர் சசிகுமார் சொல்லி கொடுத்த மாதிரியே இருந்துச்சு!!!! காதல் படத்துல சந்தியா கிளைமெக்ஸ் சீன்ல அழுத மாதிரியே இருந்துச்சு சுவாதியின் நடிப்பு இப்படத்தின் கிளைமெக்ஸ் சீன்லையும்.
ஆனா என்ன, நல்ல தமிழ் பொண்ணு மாதிரி தெரிஞ்சுச்சு படத்துல. எதிர்காலம் இருக்கு! ஆனா, நடிப்புல இன்னும் தேறனும்! ரொம்ம்பப எதிர்பார்த்துட்டேனு நினைக்கிறேன், அதுனால தான் சுவாதி நடிப்பு அவ்வளவாக ரசிக்க முடியல. காதல் சந்தியா மாதிரி முதல் படத்துல பின்னி எடுத்து இருக்கும்னு நினைச்சேன். ஆனா...ம்ம்ம்...
அது என்ன, பட தலைப்புல சுப்பரமணின்னு வார்த்தை இருந்தா ஹீரோயின்களுக்கு சரியான நடிப்பு வராதா... (என்ன முழிக்கிறீங்க...) இந்த படத்துல இவங்க இப்படி..
சந்தோஷ் சுப்பரமணியம் படத்துல ஜெனிலியா...5 ரூபாய்க்கு நடிக்க சொன்ன 5.50 ரூபாய்க்கு நடிச்சது.சாரி சாரி.. நடிக்கல...பறந்துச்சு! ஏன்னா..முக்காவாசி நேரம் அந்த புள்ள டையலாக் பேசும்போது குதிச்சு குதிச்சு தானே பேசுனுச்சு!:)))))))
(இத படிச்சுபுட்டு, சுவாதி மற்றும் ஜெனிலியாவின் fans, iron boards, tables, washing machines, electric cookers...இப்படி யாரா இருந்தாலும் கோப படகூடாது!)
Aug 9, 2008
நல்லா வேணும் உனக்கு!!
பெருமாள் கோயிலிருந்து ஒரு ஸ் எம் ஸ். இது பெருமாள் சொன்ன விஷயம். இதை அடுத்த 15 நிமிடத்துக்குள் 9 பேருக்கு அனுப்பிவிடனும். அப்படி இப்படின்னு சில நேரங்களில் தேவையில்லாத ஸ் எம் ஸ் அனுப்புவான்! இப்படி ஸ் எம் ஸ் வந்தாலே, நான் செம்ம காண்டாயிடுவேன்!
இப்படிப்பட்டவனாய் நேற்றுக்கு பழி வாங்க சரியான ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது. நேத்திக்கு பையன் ஒரு ஸ் எம் ஸ் அனுப்பினான்...
"என்னைய பத்தி உனக்கு எவ்வளவு தெரியுதுன்னு பாப்போம்?
1) பிறந்ததேதி-
2)நான் அதிகமா பயன்படுத்தும் வார்த்தை-
3) நான் விரும்புவது-
4) நான் வெறுப்பது-
5) என் கெட்ட குணம்-
6) என் நல்ல குணம்-
7)நான் உனக்கு யாரு?-
8)என் திறமை-
9) என்னிடம் உனக்கு பிடிச்சது-
10) பிடிக்காதது-
11) நான் உன்னை காயப்படுத்தி இருக்கேனா?-
12) என்னைய உனக்கு எவ்வளவு பிடிக்கும்?-
13) எனக்காக நீ வேண்டிகொள்வது-
இதுக்கு என் பதில்...என்ன தெரியுமா?
1) பிறந்ததேதி- feb 31st
2)நான் அதிகமா பயன்படுத்தும் வார்த்தை- பண்ணாட
3) நான் விரும்புவது- திரிஷா
4) நான் வெறுப்பது- மும்தாஸ்
5) என் கெட்ட குணம்- கஞ்சா அடிப்பது
6) என் நல்ல குணம்- சிகரெட் பிடிப்பது
7)நான் உனக்கு யாரு?- வெட்டி ஆபிசர்
8)என் திறமை- தண்ணி அடிப்பது
9) என்னிடம் உனக்கு பிடிச்சது- உன் கலரு...
10) பிடிக்காதது- உன் weight...
11) நான் உன்னை காயப்படுத்தி இருக்கேனா?- ஆமா..இப்படி ஸ் எம் ஸ் அனுப்பி...
12) என்னைய உனக்கு எவ்வளவு பிடிக்கும்?- u mean pyaar?? நோ.. நான் உன் எதிரி!
13) எனக்காக நீ வேண்டிகொள்வது- இந்த பதில்களை படிக்கும்போது, அழகூடாதுன்னு!
பழிவாங்கிய சந்தோஷத்தில் நிம்மதியா தூங்கினேன்! பையன் அதுக்கு அப்பரம் காண போயிட்டான்..
நேத்திக்கு அதுவா?
என்ன?
என்ன?
என்ன?(echo effect)
நேத்து, 8/8/08.
எல்லாம் 8!
ஏதோ தெரியல்ல.. பாத்தபோது ஆச்சிரியமா இருந்துச்சு! காரணம் சொல்ல தெரியல்ல...
ஆனால், சீனர்களிடையே இந்த தேதியை அதிர்ஷ்ட தினமாக நினைக்கிறார்கள். சீனர்களின் அதிர்ஷ்ட எண் 8 என்பதால் இந்த பரபரப்பு! நேற்று நிறைய சீனர்களின் திருமணங்கள் நடைபெற்றதாக தகவல்! அதனால் என்னவோ நேற்று தான் சீனாவில் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது!
Aug 4, 2008
மாப்பு, வச்சுட்டாங்கய்யா ஆப்பு!
அப்ப நான் எத்தன மணிக்கு சாப்பிடுறது?? என்ன கொடுமை சார் இது?
வியாழக்கிழமை காலை 1130 முதல் மாலை 530 வரைக்கும் வகுப்புகள்! நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேனோ!! உஷ்.... யப்பா!! முடியல என்னால...