
கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, நான் ஐந்தாவது படிச்சுகிட்டு இருந்தேன்(இதுவரைக்கும் அத தானே படிச்சுருக்கே, என்று மொக்கை போடாமல், சொல்வதை கேளுங்க...) அப்ப தான் சன் டீவியில 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சிய ஆரம்பிச்சாங்க. அப்ப இருந்த anchor நம்ம ஸ்வர்ணமால்யா. ரொம்ம்ம்ம்பபப பிடிக்கும் அந்த பத்தாவது வயதில். சனிக்கிழமை ஒரு மணி ஆனாலே, நான் குஷியாகிவிடுவேன். ஏன்னா ஸ்வர்ணமால்யா டீவில வருவாங்கன்னு. காமெடியா பேசுவாங்க. ரசிச்சு ரசிச்சு, சிரிச்சு சிரிச்சு பார்ப்பேன்.

அப்பரம் அவங்களுக்கு கல்யாணம் ஆகி, அமெரிக்கா போக போறாங்க என்று தெரிந்ததும் ரொம்ப கவலையா போச்சு(அந்த வயதில் என் கவலைய பாத்தீங்களா). சரி இனி இந்த நிகழ்ச்சிய பாக்ககூடாதுன்னு முடிவு செய்தேன். ஆனா, தேவதை போல வந்தாங்க நம்ம அர்ச்சனா.... அதே 'இளமை புதுமை' நிகழ்ச்சிய நடத்த.
பிறகு, ஒரே 'அர்ச்சனா' craze தான்! ஏதோ நம்ம தோழி மாதிரி ஒரு ஃபீலிங் ஏற்படும் அவங்கள பாக்கும்போதெல்லாம். இந்த டைமிங் counter அடிப்பாங்க பாருங்க... ரொம்ம்ப சூப்பர்ர்ர் இருக்கும். காமெடி டைம் நிகழ்ச்சியும் செய்தாங்க. கொஞ்ச நாளல, இவங்களுக்கும் கல்யாணம் நடந்துவிட்டது. அர்ச்சனாவின் காலேஜ் தோழனின் அண்ணன் மீது காதல் ஏற்பட்டு, கல்யாணம் செய்து கொண்டனர். பெயர் வினித். pilotஆக வேலை பாக்குறார். இப்ப அழகான குழந்தை சாராவுக்கு பெற்றோர்களாக சந்தோஷமாக இருக்கிறார்கள்.

சரி நமக்கு பிடிச்சவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு போயிடுறாங்கன்னு நினைச்சுகிட்டு இருந்துட்டேன். அதுக்கு அப்பரம் யாரும் அவ்வளவா impress பண்ணல்ல.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் சிங்கையில், விஜய் டீவி வந்தது. மறுபடியும் craze தொடங்கியது நீயா நானா கோபி நாத் மேல். அட நான் மட்டும் இல்லங்க.. இங்க இருக்கும் நிறைய இளம் பெண்களுக்கு அவரை ரொம்ம்பப பிடிக்கும்! கோபி நாத் பத்தி சொல்லவே தேவையில்லை... அவர் பேசும்விதமே அவருக்கு அடையாளம், அழகு!

DD- ஜோடி நம்பர் ஒன் தொகுப்பாளி. இவர நினைச்சாலே எனக்கு சிரிப்பு வந்துடும். நல்ல நிகழ்ச்சிய வழிநடத்துவார். நல்ல கலாய்ப்பார் மத்தவங்கள. ஆக, இவர் பாணியும் பிடிக்கும்.
விஜய் ஆனந்த்- இவர் ரொம்ம்ம்பப cuteங்க! பாவனாவை ஒரு தடவ பேட்டி எடுத்தார். என்னமா கலாய்த்து இருப்பார் பாவனாவை... அன்று முதல் இவரையும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.(அதாவது இவர் மத்தவங்கள பேட்டி எடுக்கும் விதத்தை சொன்னேங்க...)

14 comments:
தானைத் தலைவி ஹேமா சின்காவை சேர்காததுக்கு கண்டனங்கள். :)
- பெங்களூர் கிளை
ஆனந்த கீதன்னு ஒருத்தர் சன் டிவில வந்தாரே? நியாபகம் இருக்கா?
@அம்பி
ஹேமா சின்கா, ஓகே தான். ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்ல..
@ambi
//ஆனந்த கீதன்னு ஒருத்தர் சன் டிவில வந்தாரே? நியாபகம் இருக்கா?//
யாரு??
தமிழ்நாட்டுத் தத்துப்பிள்ளைகள் மகாலஷ்மி,ஹேமா வை விட்டுட்டீங்களே??
இளமை புதுமை ஜாலியா போச்சு..சுவர்ணமால்யா இருந்தவரைன்ன்னு நினைக்கிறேன்
//தானைத் தலைவி ஹேமா சின்காவை சேர்காததுக்கு கண்டனங்கள். :)
வழிமொழிகிறேன்... :)
மெட்ரோ ப்ரியா பிள்ளை?? ...ஓ! நீங்க அப்போ பிறந்திருக்கவே மாட்டிங்க!!!
@சந்தனமுல்லை
//சுவர்ணமால்யா இருந்தவரைன்ன்னு நினைக்கிறேன்//
அர்ச்சனாவும் நல்லா பண்ணாங்கப்பா!:)
\\ Thamizhmaangani said...
@அம்பி
ஹேமா சின்கா, ஓகே தான். ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்ல..
\\
ரிப்பீட்டு :))
\\கோபி நாத் பத்தி சொல்லவே தேவையில்லை... அவர் பேசும்விதமே அவருக்கு அடையாளம், அழகு!\\
ரிப்பீட்டு :))
\\ Thamizhmaangani said...
@அம்பி
ஹேமா சின்கா, ஓகே தான். ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்ல..
\\
ரிப்பீட்டு :))
\\கோபி நாத் பத்தி சொல்லவே தேவையில்லை... அவர் பேசும்விதமே அவருக்கு அடையாளம், அழகு!\\
ரிப்பீட்டு :))
@ramya ramani
//\கோபி நாத் பத்தி சொல்லவே தேவையில்லை... அவர் பேசும்விதமே அவருக்கு அடையாளம், அழகு!\\
ரிப்பீட்டு :))//
அட நீங்க நம்ம கட்சியா.. ஐ.. ஜாலி!:)
எனக்கு அர்ச்சனா ரொம்ப பிடிக்கும். ஒரு காலத்தில் 'ஆன்டி' என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.
what about hema sinha?????
தானைத் தலைவி ஹேமா சின்காவை சேர்காததுக்கு கண்டனங்கள். :)
- மங்களூர் கிளை
Post a Comment