
நான் கிரிக்கெட் விளையாடுறேனுங்கோ!!!!!!!!!!!!!!!!!
ஒரு மாதமா training போயிகிட்டு இருக்கேன். ரொம்ப நாளா ஒரு குழுவுல சேர்ந்து கிரிக்கெட் விளையாடனும்னு ஆசை! ஆறாவது படிக்கும்போதே, என் மாமா இந்த விளையாட்டை பத்தி என்கிட்ட சொன்னார். அன்று முதல் இந்த விளையாட்டின் மீது அவ்வளவு ஆசை! badminton/shuttle cock விளையாடும்போது, அதை வைத்து கிரிக்கெட் விளையாடி பார்ப்பேன் சரியான பேட் இல்லாமல்.
அதுக்கு அப்பரம் 9வது படிக்கும்போது, காற்பந்து விளையாட மோகம் ஏற்பட்டது. டேவிட் பெக்கம் மீது பயங்கர craze. அப்போது காற்பந்து உலக கோப்பை நடந்தது, bend it like beckham படம் வெளியானது. இப்படி போக, பள்ளியில் எங்க வகுப்பு மாணவிகள் அனைவரும் பள்ளி முடிந்து காற்பந்து விளையாட தொடங்கினோம். அப்போது
சிங்கை பெண்கள் காற்பந்து அணியில் சேர வாய்ப்பு கிடைக்க, என் வகுப்பு மாணவிகள் 5,6 பேர் கிளம்பினோம். கொஞ்ச நாள் தான் போக முடிந்தது. அதுக்கு மேல் தொடர வேண்டாம், படிப்பு கெட்டு போகும் என்று பெற்றோர்கள் நினைக்க, அதை விட்டுவிட்டேன்.
இப்போது, சிங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து ஆடும் ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.கடந்த ஒரு மாதமா training போய்கிட்டு இருக்கேன்.ரொம்ம்ம்பபப சூப்பரா போகுது. அங்கு வந்து பாக்கனுமே, நம்ம இந்திய பெண்கள் எல்லாம் என்னமா அருமையா விளையாடுறாங்க.
முதல் நாள் அங்கு சென்று பிரமித்துபோனேன். பெண்களுக்குள் இப்படிப்பட்ட அற்புதமான திறமையா என்று நினைத்து பெருமைப்பட்டேன். off spinner நான். ஆக அதுக்கு ஏற்றாற்போல் சில பயிற்சிகளை பயிற்சிவிப்பாளர் சொல்லி கொடுத்தார். சக விளையாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கு.

லட்சுமி என்று ஒருவர் இருக்கிறார். இங்கு சிங்கையில் கொஞ்ச காலமாக வேலை பார்த்துவருகிறார்.இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்தவராம். சூப்பர்ர்ர்ர் spin bowler. ரொம்ப நல்ல நுனக்கமான விஷயங்களை அறிந்தவர். எங்களுக்கு சொல்லி கொடுக்கும் விதமும் நல்லா இருக்கும். angela என்பவர் ஒருவர் இருக்கிறார். இவர் part time lecturer. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா! பார்த்தால் அப்படி தெரியாது. ஏதோ காலேஜ் இரண்டாம் ஆண்டு படிக்கும் பொண்ணு மாதிரி இருப்பாங்க. அப்பரம் 14 வயது பொண்ணு, தனம், ரொம்ம்ம்பப innocent. ஆனா fast bowling போடுவா பாருங்க... பயங்கர வேகத்தில் போடுவாள்!
கிரிக்கெட் விளையாடுவது ஒரு பக்கம் இருக்க, நிதானமாக விளையாடும் ஆற்றல் வேண்டும். அதைவிட கிட்டதட்ட 20 ஓவர்களுக்கு fielding செய்யும் உடல்வலிமை தேவை. அதற்கு fitness level அதிகமாக இருக்கவேண்டும். இப்படி பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன். நிறைய சர்வதேச அளவில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் நடக்கின்றன (நிறைய பேருக்கு இது தெரிவது இல்ல)மலேசியாவில், தாய்லாந்தில், சீனாவில் என பல போட்டிகள் நடைபெறுகின்றன.
நானும் நாளைக்கே ஒரு போட்டியில கலந்துகிட்டு hatrick எடுத்து, woman of the match ஜெயிச்சு, டீவி, பேப்பர்ல நம்ம போட்டோ வந்து, 10 பேரு autograph வாங்கும் நிலை வரும். அப்பரம்.. என் பேரும் வரலாற்றுல இடம்பெற வேண்டாமா!
இருந்தாலும்,அம்மாவுக்கு இதுல அவ்வளவா உடன்பாடு இல்ல! training இரண்டு நாள். டைம வேஸ்ட் பண்ணுறே என்றார்கள். காலேஜ், படிப்பு கெட்டுபோயிடும் என்கிறார்கள். "நம்ம இந்திய பிள்ளைகளுக்கு படிப்பையும், விளையாட்டையும் balance பண்ண தெரியாது. விளையாட்டுன்னு போனா, படிப்புல கவனம் இல்லாம போயிடுங்க" என்றார். ம்ம்ம்ம்... என்னத்த சொல்ல,அடுப்பூதும் பெண்களுக்கு கிரிக்கெட் எதுக்கு? என்று நினைக்கிறார்கள் என்னவோ.

12 comments:
மேடம்..வாழ்த்தை பிடிங்க முதல்ல!!
பெண்கள் அதிகம் பிரபலமாகாத துறை..
உங்க ஆர்வத்துக்கும் முயற்சிக்கும்
வாழ்த்துக்கள்
@சந்தனமுல்லை
//மேடம்//
யாருப்பா அது! என்னது என்னைய தான் மேடம்னு கூப்பிட்டீங்களா. அட இப்படி அழைத்த முதல் நபர் நீர் தான்! நீர் வாழ்க! நன்றி!
//வாழ்த்தை பிடிங்க முதல்ல!! //
மிக்க நன்றி
//டேவிட் பெக்கம் மீது பயங்கர craze
Now?
வெற்றி வீராங்கணையாக வாழ்த்துகள் தமிழ்,
-அபுல்
@கார்த்திக்
//Now?//
இப்பவும்தான் இருக்கு. ஆனா என்ன.. அவருக்கு கல்யாணம் ஆகி 2,3 குழந்தைகுட்டின்னு ஆகி போச்சு! இருந்தாலும்.. craze இருக்குது!:)
@அபுல்
//வெற்றி வீராங்கணையாக வாழ்த்துகள் தமிழ்,//
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!:)
hi Gayathri,
so proud of u :))
உங்கள் ஆர்வம் கண்டு வியந்தேன்!!
வாழ்த்துக்கள் :)))
//hi Gayathri,
so proud of u :))//
thanks divz!
That's great! Wish you All the best Tamil :)
@சதீஷ்
வாழ்த்துகளுக்கு நன்றி சதீஷ்!:)
//நானும் நாளைக்கே ஒரு போட்டியில கலந்துகிட்டு hatrick எடுத்து, woman of the match ஜெயிச்சு, டீவி, பேப்பர்ல நம்ம போட்டோ வந்து, 10 பேரு autograph வாங்கும் நிலை வரும். அப்பரம்.. என் பேரும் வரலாற்றுல இடம்பெற வேண்டாமா!//
ஆசிர்வாதங்கள்...
...கோவம் இருக்கு இன்னும்...
@சஞ்சாய் அண்ணாத்த
//...கோவம் இருக்கு இன்னும்...//
ஆஹா..இப்ப எரிய போவது
மதுரையா? கோயமத்தூரா?
:)))
Post a Comment