Jul 1, 2008

விளையாட்டாய் என் ஆடைக்குள்ளே நீ வேண்டும்...

ஆண் கவிதை ஒன்று
பெண் கவிதைக்கு
ஒரு கவிதை
எழுதுகிறது!
மூன்றாம் உலகப்போருக்கு
தயார்
என்கின்றன
உன் உதடுகளும்
என் கன்னங்களும்.

உன் விரல்கள்

என்னை வருடியது போதும்!

employment exchangeல்

காத்திருக்கும்

இளைஞனைப் போல்

பாவமாய் நிற்கும்

உன் இதழ்களுக்கு

அந்த வேலையை

கொடுத்துவிடு, பிளீஸ்!


விரல்கள் விட்டுசென்ற
விரல்தடங்களை
மெதுவாய் கடந்து
செல்கின்றன
உன் உதட்டு ரேகைகள்!


செடியில் கண்டேன்
ரோஜா பூவுக்கு கீழ்
முட்களை
உன்னிடத்தில் உணர்ந்தேன்
முட்களுக்கு கீழ்
ரோஜா பூக்களை!
உன் மீசையையும்
உதடுகளையும் தான்
சொல்கிறேன்!

21 comments:

நவீன் ப்ரகாஷ் said...

காயத்ரி.... கவிதை தலைப்பே
காதலில் மிதக்க வைக்கிறதே... :))))

நவீன் ப்ரகாஷ் said...

//ஆண் கவிதை ஒன்று
பெண் கவிதைக்கு
ஒரு கவிதை
எழுதுகிறது //

கவிதைக்கு கவிதை....
அருமை... :)))

நவீன் ப்ரகாஷ் said...

//பாவமாய் நிற்கும் உன் இதழ்களுக்குஅந்த வேலையைகொடுத்துவிடு, பிளீஸ்!//

//முட்களுக்கு கீழ்
ரோஜா பூக்களை!
உன் மீசையையும்
உதடுகளையும் தான்
சொல்கிறேன்! //

கரும்பான குறும்பு
எப்படி இப்படி..?!!!

அழகான கவிதைகள்
மிக அழகான குறும்புகள்....

இவன் said...

அழகான கவிதைகள் தோழி

FunScribbler said...

@நவீன்,

//கவிதை தலைப்பே
காதலில் மிதக்க வைக்கிறதே...//

inspiration தான்! வசீகரா பாடலை கேட்டு வந்தது!

//கரும்பான குறும்பு
எப்படி இப்படி..?!!!//

அப்படி தான்! :)))

FunScribbler said...

@இவன்,

பாராட்டுகளுக்கு நன்றி இவன்.

முகுந்தன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு, ஆனா அதை படிக்கும்பொழுது தான்
"நான் நானாக இல்ல" அப்படின்னு ஏன் எழுதினீங்கனு புரியுது :-))

ரசிகன் said...

செடியில் கண்டேன்
ரோஜா பூவுக்கு கீழ்
முட்களை

உன்னிடத்தில் உணர்ந்தேன்
முட்களுக்கு கீழ்
ரோஜா பூக்களை!

உன் மீசையையும்
உதடுகளையும் தான்
சொல்கிறேன்!//

கலக்கிப்புட்டிங்க போங்க:))
சூப்பர்.

FunScribbler said...

@முகுந்தன்

//நான் நானாக இல்ல" அப்படின்னு ஏன் எழுதினீங்கனு புரியுது :-))//

ஆஹா.. அங்க switch போட்டா, இங்க light ஏரியுதா! ஆஹா..அவ்வ்வ்...

FunScribbler said...

@ரசிகன்,

வாங்க! எங்க போயிட்டீங்க இவ்வளவு நாளா!! திரும்பி வந்ததில் ரொம்ப சந்தோஷம்.

பாராட்டுகளுக்கு நன்றி ரசிகன்.

Shwetha Robert said...

Luvly poem , SUPER:))

Divya said...

மிக மிக அழகான காதல் ' குறும்பு' கவிதை,

உங்கள் கவித்திறனில் மிகுந்த முன்னேற்றம் தமிழ்மாங்கனி, என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தொடர்ந்து பல கவிதைகள் எழுதிட வாழ்த்துக்கள்!!!!

Divya said...

\\செடியில் கண்டேன்
ரோஜா பூவுக்கு கீழ்
முட்களை
உன்னிடத்தில் உணர்ந்தேன்
முட்களுக்கு கீழ்
ரோஜா பூக்களை!
உன் மீசையையும்
உதடுகளையும் தான்
சொல்கிறேன்!\\

சான்ஸே இல்ல......சிம்பிளி சூப்பர்ப்!!!

FunScribbler said...

@Shewtha,

//Luvly poem , SUPER:))//

நன்றி!:)

FunScribbler said...

@திவ்ஸ்

//உங்கள் கவித்திறனில் மிகுந்த முன்னேற்றம் தமிழ்மாங்கனி//

நன்றி திவ்ஸ்

//சான்ஸே இல்ல......சிம்பிளி சூப்பர்ப்!!!//

பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி:)

Sanjai Gandhi said...

இதெல்லாம் உருப்படறதுகில்ல.. உன்ன கொஞ்சம் கவனிக்கனும்..

FunScribbler said...

@சஞ்சய்

//இதெல்லாம் உருப்படறதுகில்ல.. உன்ன கொஞ்சம் கவனிக்கனும்..//

ஹாஹா...))

priyamudanprabu said...

///////////////
செடியில் கண்டேன்
ரோஜா பூவுக்கு கீழ்
முட்களை
உன்னிடத்தில் உணர்ந்தேன்
முட்களுக்கு கீழ்
ரோஜா பூக்களை!
உன் மீசையையும்
உதடுகளையும் தான்
சொல்கிறேன்!
//////////////
ஆகா அருமை
பெண்களை பாடுவதையே படித்திருக்கிறே..ஒரு ஆணை இவ்வளவு அழகாய் வர்ணித்ததற்க்கு அழகிய ஆண்கள் சங்கம் (அட நான்தாங்க தலைவர்)சார்பாக நன்றி
நீங்க விசால்்அசிகரா??????

FunScribbler said...

@பிரபு

பாராட்டுகளுக்கு நன்றி!

///நீங்க விசால்்அசிகரா??????//

ஆமாங்கோ!! ரொம்ம்ம்பப பிடிக்கும்!:)ஹிஹி...

Known Stranger said...

photo poems are good. yen athu khadalaiyum thandi parka matenguthu

Anonymous said...

எப்ப்பூடி ...இப்ப்பூடி ...

by
mcxmeega