Apr 4, 2010

விண்ணைத் தாண்டி வந்தாளே- 2

(பகுதி 1)
ஆபிஸ் அடைந்ததும், முதல் வேலையாக இமெயிலை பார்த்தேன். என் ஆபிஸ் இமெயிலை. பிறகு, நிறைய வேலைகள் இருந்ததால், என் personal இமெயிலையை திறக்கவில்லை. வீட்டிற்கு செல்லும் போது தான் ஞாபகம் வந்தது. வீட்டிற்கு வந்ததும் பார்த்து கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால், வந்தவுடன் மும்முரமாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். 'அவளை' சுத்தமா மறந்துட்டேன்.

அம்மா, "டேய் அந்த பொண்ணு இமெயில் பண்ணுச்சா?"

பதில் சொல்லாமல் உடனே லெப்டாப்பில் எனது இமெயிலை பார்த்தேன். புதிதாய் ஒரு முகவரி "அஞ்சலி தேவன்".

மனதில் ஒரு முறை எழுதி பார்த்தேன்: அஞ்சலி அஜய்.

"ம்ம்ம்.... பரவாயில்லை." என்று மனம் சொல்லியது. அவளது இமெயிலை படிக்க தொடங்கினேன்,
"ஹாய் மிஸ்டர் அஜய். நான்.. அஞ்சலி. வீட்டுல எல்லாரும் சொல்லியிருப்பாங்கன்னு நினைக்குறேன்.
எனக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவு உடன்பாடு இல்ல. ஐ மின் தப்பா நினைக்காதீங்க. உங்கள சொல்லல.
basically i'm not prepared. I think we should not get stuck in this formula or concept or institution whatever they say just because everyone forces us. நீங்க என்னோட... i don't even keep count on the number of proposals i have gotten so far. ரொம்ப போர் அடிச்சு போச்சு. anyway,நம்ம மீட் பண்ணனுமாம். வீட்டுல தொல்லை தாங்கல. ஒரு தடவ மீட் பண்ணிடுவோம். அப்பரம் பிடிக்கலன்னு சொல்லிடுவோம். ஓகே? hope you understand. thanks mr ajay. i'll be back from my vacation soon . அப்பரம் வந்து ஃபோன் பண்றேன். "

யப்பா! இவ்வளவு straightforward பொண்ணு? கொஞ்சம் ஆச்சிரியமா இருந்துச்சு. அவள் சொன்ன வார்த்தைகளில் அவளுக்குள் இருக்கும் தைரியம் ரொம்ப நல்லாவே தெரிஞ்சுது.

அம்மா என் அறைக்குள் வந்தார். "என்ன அஜய், அவ இமெயில் பார்த்தீயா?"

"ம்ம்..காலையிலே பாத்துட்டேன். vacationல இருக்காளாம். வந்தவுடனே ஃபோன் பண்றேன்னு சொன்னா."

அம்மாவுக்கு இன்னும் தகவல் வேண்டும் என்பதுபோல் முழித்தாள், "அதுக்கு அப்பரம் என்ன சொன்னா? கல்யாணத்த பத்தி..."

"மா!!! யாராச்சும் முதல் தடவ பேசிக்கும் போது இத பத்தி பேசுவாங்களா? ரொம்ப casualஆ தான் இமெயில் இருந்துச்சு. மீட் பண்ணிட்டு முடிவு எடுக்களாம்னு சொன்னா." ரீமோர்ட்டை எடுத்து சத்த அளவை அதிகப்படுத்தினேன்.

"என்னமோ போடா....இந்த காலத்த புள்ளைங்கள..." சலித்து கொண்டார். கையில் கொண்டு வந்த வாழைக்காய் பஜ்ஜியை வாயில் திணித்துவிட்டு சென்றார்.

ஏன் இப்படி செய்தேன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ஆவல். அவள் இமெயில் ஐடியை கொண்டு ஃபேஸ்புக்கில் டைப் அடித்தேன். அவள் எப்படி இருப்பாள் என்ற தெரிந்து கொள்ள ஒரு ஆசை. வயிற்றுக்குள் ஏதோ ஒரு சின்ன அதிர்வு. எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனா அந்த உணர்வு கொஞ்சம் பிடிச்சு இருந்தது.

அஞ்சலி தேவன் படத்தை கிளிக் செய்தேன். பார்த்தவுடனே பிடித்து போவது போல் தாஜ்மகால் அழகு இல்லை. ரொம்ப சாதாரணமான ஒரு பொண்ணு மாதிரி தான் இருந்தாள். அவளுக்கு ஒரு மெசேஜ் எழுதினேன் -

ஹாலோ, நான் தான் அஜய்.

எழுதிவிட்டு ஃபேஸ்புக்கில் மற்றவற்றை செய்து கொண்டிருந்தேன். உடனே அஞ்சலியிடமிருந்து ஒரு பதில் வந்தது-

ஓ மை காட்! you are stalking me! haha.

என்னை 'சேர்த்து' கொண்டேள். அட, ஃபேஸ்புக்கில் add பண்ணினாள்னு சொல்ல வந்தேன். பிறகு கொஞ்சம் நேரம் பேசினோம் chatல். ஃபிரண்ட் போல் ரொம்ப இயல்பாய் பழகினாள். எனக்கு அந்த குணம் பிடித்து இருந்தது. ஒரு வாரம் கழித்து ஒரு காபி ஷாப்பில் சந்தித்து கொண்டோம்.

"ஃபோட்டோவுல இன்னும் smartஆ தெரிஞ்சீங்க...." வெளிப்படையாய் பேசினாள் அஞ்சலி. அப்படியே அம்மா மாதிரி ரொம்ப ஓபன் டைப்.

சிரித்து கொண்டே நான், "நீங்க நேர்ல இன்னும் நல்லா இருக்கீங்க" என்றேன் கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல். சற்று முறைத்தாள்.

"ஐயோ நீங்க சொன்னத்துக்கு நான் திருப்பி சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க."

புன்னகையித்தாள்.

"சரி, உங்களுக்கு ஏன் கல்யாணம் வேண்டாம்னு நினைக்குறீங்க?" என்றேன் நான்.

அஞ்சலி, " தெரியல. ஒரு definite answer இல்ல. ஆனா இப்போதைக்கு வேண்டாம்னு நினைக்குறேன். அது கொஞ்சம் அதிகமான responsibilites கொண்ட விஷயம். பெரிய commitment. இப்ப இருக்குற மாதிரி கல்யாணத்துக்கு அப்பரம் ஜாலியா வெளியே சுத்த முடியாது. ஃபிரண்ட்ஸ்கூட டூர் போக முடியாது. male friendsகூட வெளியே போக முடியாது. ஏதோ நம்மள ஒரு boundaryக்குள்ள பூட்டி வச்ச மாதிரி ஒரு ஃபீல். அப்பரம்.... ஓ yes! காலையில சீக்கிரம் ஏந்திரிச்சு வீட்டு வேலை பாக்கனும். எனக்கு விவரம் தெரிந்த நாள்லேந்து நான் சொந்தமா எந்திரிச்ச பழக்கம் கிடையாது. அம்மா இல்லேன்னா வீட்டுல வேலை பாக்குற ஆயா தான் எழுப்பிவிடுவாங்க..." என்று மனதில் பட்டதை போட்டு உடைத்தாள்.

அவள் சொன்ன விதம் ரொம்ப கியூட். கண்களில் தெரிந்தது ஒரு innocence.

அவள் சொல்ல சொல்ல நான் சிரித்தேன்.

"சமையகட்டு பக்கம் போனா செய்யும் ஒரு காரியம் சமைச்சு வச்சு இருக்குறத எடுத்து சாப்பிடுறது தான். காபிகூட போட தெரியாது. மாசத்துக்கு ஒரு 4 தடவ படம் பார்ப்பேன். every friday night should be spent outside. dinners, lunch outings, medicure, pedicure, threading, spa இப்படினு ஏகப்பட்ட செலவு ஆகும் என்னைய வச்சு maintain பண்ண. வரவன் இதுக்கு எல்லாம் செலவு பண்ண ரெடியா இருக்கனும்." அவள் மேலும் பேசினாள்.

புன்னகையித்தபடி அஞ்சலி, "ஆமா உங்களுக்கு... ஐ மின் உனக்கு ஏன் கல்யாணம் பிடிக்கல."

அவள் உங்களுக்கு என்பதிலிருந்து உனக்கு என்று சொன்னது எனக்கு சற்று ஆச்சிரியமாய் இருந்தது. அவள் உடனே, "சாரி சாரி...உனக்குனு சொன்னா தப்பில்லையே?"

தப்பில்லை என்பதுபோல் தலையாட்டினேன்.

நான், "எனக்கும் அதே ஃபீலிங் தான். ரொம்ப restrictedஆ ஃபீல் இருக்கும். unless the girl is extremely an open-minded girl, then i will consider. if not, no way to marriage man! நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம். வர பொண்ணுக்கும் கிரிக்கெட் பிடிக்கனும்னு எதிர்ப்பார்க்க முடியாது. வீக்கெண்ஸ்ல பார்ட்டிஸ் போவேன். வர பொண்ணு கோயில் குளம்னு சுத்த சொன்னா, செம்ம டென்ஷன் ஆயிடுவேன். ஒரு கெமிஸ்ட்ரி வோர்க் அவுட் ஆகனும். அது இல்லேன்னு ரொம்ப கஷ்டமா போயிடும்."

அவள் தொடர்ந்தாள் "ம்ம்ம்.... ஒகே கூல். வீட்டுல போய் பிடிக்கலைனு சொல்லிடலாம். very simple. காரணம் கேட்டாங்கன்னா?"

நான், "பொண்ணுக்கு காபி போட தெரியாதுனு சொல்லிடுவேன்."

அவள், "அட பாவி!"

நான், "உன்னைய கேட்டா?"

அவள், "பையனுக்கு தண்ணி அடிக்குற பழக்கம் இருக்குனு சொல்லிடுவேன்."

நான், "ஐயோ தண்ணி அடிப்பேன் எப்போ சொன்னேன்?"

அவள், "பார்ட்டிஸ் போய் அப்பரம் என்ன பண்ணுவாங்க? பாத்திரம் கழுவுவாங்களா?"

குபீர்னு சிரித்துவிட்டேன்.

"that's not called தண்ணி அடிக்குறது. social drinkers."

"ஏய் வீட்டுல இது பெரிய விஷயமா நினைப்பாங்க. என்னைய பொருத்தவரைக்கும் அதுல ஒன்னும் தப்பில்ல. நானே நிறைய தடவ drink பண்ணியிருக்கேன்." என்று சிரித்து கொண்டே சொன்னாள்.

"ஆஹா! இது காபி மேட்டரவிட மோசமா இருக்கே." என்றேன்.

"ஏன்? நீங்க அடிக்கலாம். நாங்க அடிக்க கூடாதா? it was just vodka mixed with coke. not at all strong and i didn't go wild drinking it!" புருவங்களை உயர்த்தி சொன்னாள்.

அவளை அவள் வீட்டில் விட சென்றேன். கேட் அருகே அவள் அப்பா நின்று கொண்டிருந்தார்.

அவர், "வாங்க மாப்பிள்ள. வீட்டுக்குள்ள வந்துட்டு போங்க." என்றார். நானும் அஞ்சலியும் முழித்தோம்.

அவர் மாப்பிள்ள என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் வந்த ஆச்சிரியம் அது. மரியாதைக்காக வீட்டிற்குள் நுழைந்தேன். உள்ளே சென்று பார்த்தால், ஒரு பட்டாளமே உட்கார்ந்து இருக்கிறது. அதில் என் அம்மா அப்பா இருந்தனர். என்ன நடக்கிறது என்று எனக்கும் அஞ்சலிக்கும் ஒன்றும் புரியவில்லை.

அம்மா, "சாரி டா அஜய். உனக்கு தெரியமா... இன்னிக்கு உன் நிச்சயதார்த்தம்!"

என்னால் அம்மா சொல்வதை நம்ப முடியவில்லை. அஞ்சலி அவள் அப்பாவிடம், "என்ன பா இது?"

அவள் அப்பா, " actually, நாங்க ஏற்கனவே பேசி வச்சு இருந்தோம். ரெண்டு குடும்பத்துக்கே இந்த சம்மந்தம் பிடிச்சு இருந்தது. அதுனால தான் இந்த ஏற்பாடு. am sure u like ajay. we all like him!" என்று சந்தோஷத்தில் சிரித்தார். அவர் கடைசி பல் கூட தெரிந்தது.

அஞ்சலிக்கு கோபம். எனக்கு அதற்கு மேல். இப்படி குடும்பமே சேர்ந்து விளையாடிவிட்டனர் எங்களது வாழ்க்கையில். கீழே ஒரே பாட்டும் கூத்தும் நடக்க, நானும் அஞ்சலியும் மொட்டை மாடியில். தேர்வில் ஒரு மார்க்கில் failஆன மாணவன் போல் நின்றோம்.

"i hate it!! i hate this!! i hate my family!"கோபம் பொங்கியது அஞ்சலிக்கு.

அவள் கோபம் அழகாய் இருந்தது. அவளை ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை பார்த்தேன்.

"உனக்கு பிடிச்ச மாதிரி தானே இருக்கா? straightforward, great sense of humour." என்று மனசாட்சி என்னிடம் சொல்ல, நான் அதற்கு தலையாட்டினேன். அதுவரை இருந்த கோபம் கொஞ்சம் தணிந்தது.

"பரவாயில்ல அஞ்சலி... என்ன பண்றது?" என்றேன் நான்.

"ஹாலோ, என்ன நீயும் கட்சி மாறீட்டீயா? என்னமோ no way to marriage. one way to marriage. ஆவூனு சொன்னே அப்போ...." அவள் கத்தினாள்.

"ஏய் கூல் கூல்... we shall work out something." என்றேன் நான்.

" என்ன வொர்க் அவுட்? ஜிம்லயா இருக்கோம்!" கோபத்திலும் காமெடியாய் பேசினாள். எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

"சரி plan பண்ணுவோம்!" என்றேன். அவள் தனது தோழிக்கு ஃபோன் செய்து புலம்ப ஆரம்பித்தாள். நான் அவளை ரசிக்க ஆரம்பித்தேன். நாட்கள் செல்ல செல்ல அவள் மேல் உள்ள அன்பு அதிகமானது. ஆனால், இது அவளுக்கு தெரியாது. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு plan பத்தி பேசனும் என்று ஃபோன் செய்து அவளிடம் பேசுவேன். plan தவிர்த்து மற்றவற்றை பற்றி தான் அதிக நேரம் பேசுவோம்.

ஆனால் கடைசிவரைக்கும் அவளுக்கு இதில் விருப்பமில்லை. நானும் விருப்பம் இல்லாததுபோல் நடித்தேன். ஒரு கட்டத்திற்கு பிறகு, உண்மையை சொல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அஞ்சலிக்கு ஃபோன் செய்தேன்

"ஹாலோ அஞ்சலி, இனிக்கு evening freeya? மீட் பண்ணலாமா?"

"ஏன்? ஏதாச்சு பெரிய மாஸ்ட்டர் ப்ளான் வச்சு இருக்கீயா?"

"கிட்டதட்ட அப்படி தான்!"

"oh my god! thank uuuuuu ajay. எப்படியாச்சும் என்னைய காப்பாத்திடு! உனக்கு ஒவ்வொரு தெருவுக்கும் சிலை வைக்க ஏற்பாடு பண்ணிடுறேன்." அஞ்சலி சிரித்தாள். எனக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது. எனக்கு அவளை பிடித்து இருந்தது என்று சொன்னாள் அவள் அதை அப்படி எடுத்து கொள்வாள் என்ற பயம்.


சந்தித்தோம். ஹாலோ கூட சொல்லாமல் அஞ்சலி பேசிய முதல் வார்த்தை, "என்ன ப்ளான்? என்ன ப்ளான்?" அவள் கண்களில் ஒரு படபடப்பு தெரிந்தது.

(பகுதி 3)

9 comments:

Jay said...

அருமையான பதிவு நண்பரே. தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் எழுதுங்கள்.

அப்படியே எனது தலைமுறையை தரிசிக்கும் சந்தோஷம் ;)

Prabhu said...

வோட்கால யாராவது சோடா கலப்பாங்களா? வெவரம் புரியாதவங்களா இருக்கீங்களே! யாராவது எடுத்துச் சொல்லுங்கப்பா!

FunScribbler said...

@pappu,

yes they do mix vodka and coke together! (i've seen pple drinking as such and clubs do offer with that kind of mixture..hehe)

Karthik said...

அடுத்த பாகத்தை கொஞ்சம் சீக்கிரம் போட்டால் உங்களுக்கும் சிலை வெக்க ஏற்பாடு பண்ணலாம். :))

@pappu, thamizh

வோட்கானா என்ன? :P

FunScribbler said...

@karrrrrrthik, u don't know what's vodka? ask pappu, he'll how to mix them correctly

@elairaja, i saw ur comment but I don't think I can publish that comment since you have stated ur contact number. So it's best that u contact me via email: gayaclav1973@gmail.com

thank u!

Elam said...

Waiting for next part.....

gils said...

loved every word of it :D :D chaanceleenga...i was trying to out think each scene as how i wud've reacted in that situation and bingo..ellamay tally aguthu :D :D
pinkurippu: adutha partla ajaya damage panni maanatha vangidatheenga :)

Thilak said...

Could u please post the next part soon!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in