Nov 24, 2011

photo (தொடர்கதை)- 1

அஷ்வின், அஞ்சலி, பிரியா ஆகியோர் பல மாதங்களுக்கு பிறகு ஒன்றாக சந்தித்தனர். மூவரும் KFC கடையில் உட்கார்ந்து அளவளாவி கொண்டிருந்தபோது தான் குகன் வந்து சேர்ந்தான்.

" sorry guys. கொஞ்சம் lateஆயிட்டு." என்றவன் பையை கழட்டிவிட்டு பிரியா பக்கத்தில் உட்கார்ந்தான். பக்கத்தில் உட்கார்ந்தவனை பார்த்து,

"சார், இதுக்கு பெயர் கொஞ்சம் lateஆ?" என்று நக்கலாய் கேட்டாள் பிரியா, தனது கைகடிகாரத்தை காட்டி.

குகன், "oh god, என்ன பிரியா இவ்வளவு வேகமா ஓடுற watch எல்லாம் போடாதே. இல்லாத brain affect ஆயிடும்." பிரியாவின் நக்கலுக்கு பதில் அடி கொடுத்தான். சிரித்தனர் நால்வரும்.

அஷ்வின், "seriously, I miss you guys! எத்தன நாள் ஆச்சு ஒன்னா மீட் பண்ணி. கடைசியா எப்போ பாத்துகிட்டோம்?" என அஷ்வின் கேட்க, அதற்கு,

"ம்ம்... i think about one year ago?" என்றாள் அஞ்சலி.

"நாங்க எல்லாம் அடிக்கடி facebookல updatedஆ தான் இருக்கோம். நீ தான் missing in action. ஆமாடா, நீ ஏன் facebook, twitter எல்லாம் வச்சு இல்ல?" கேள்வி கேட்டான் குகன்.

அஷ்வினின் கைபேசி அலறியது. "sorry guys, excuse me." என்று கூறி கொண்டு கடைக்கு வெளியே சென்று ஃபோன் பேசினான். அதற்குள் சாப்பாட்டை வாங்கி மேசையில் வைத்தனர் குகனும் பிரியாவும். ரொம்ப நேரம் அஷ்வின் பேசி கொண்டு இருப்பதை கடையின் கண்ணாடி கதவு வழி மூவரும் பார்த்து கொண்டிருந்தனர்.

"ஹாலோ ladies, நீங்க வேணும்னா அவனுக்கு வேட் பண்ணுங்க. எனக்கு பசி உயிர் போகுது!" என கூறிய குகன் burgerயை வாயில் 'insert' செய்தான். ஒரு வழியாய் அஷ்வினும் உள்ளே நுழைந்தான்.

"இப்போ தெரியுதாடா ஏன் எனக்கு fb, twitterக்கு எல்லாம் நேரம் இல்லேன்னு?" அவனுக்கு வைத்திருந்த cokeயை எடுத்து குடித்தான்.

குகன் வாயில் ஒழுகிய chilli sauceயை tissue பேப்பரால் துடைத்தபடி, "புரியுது மச்சி. ஒபாமாவுக்கு கூட ஓய்வு இருக்கு. ஆனா உனக்கு இல்லேன்னு நினைக்கும்போது பெத்த வயிறு பத்தி ஏரியுது!" என முகத்தை விளையாட்டாய் வைத்து கொண்டு சொன்னான்.

"டேய்!!!" குகனின் முகத்தில், துடைத்து போட்டிருந்த tissue பேப்பரை, வீசினான். அஷ்வினுக்கு வாங்கி வைத்திருந்த chicken spicy burgerயை பார்த்து, "hey peeps, என்னோட favourite எதுன்னு மறக்காம இருக்கீங்க! very impressive!"

பிரியா, "அஞ்சலி தான் உனக்கு ஆர்டர் பண்ணினா."

அஷ்வின் அஞ்சலியை பார்த்து, "thank you."

புன்னகையுடன் அஞ்சலி, "you're most welcome!"

அவர்கள் அனைவரும் பேசி கொண்டிருக்க, வெளியில் மழை கொட்ட தொடங்கியது. அதை பார்த்த பிரியா, "ஓ காட்! சீக்கிரம் வீட்டுக்கு போனும்னு இருந்தேன். ச்சே...."

குகன், "கவலைப்படாதே மச்சி! நீ ஒரே ஒரு திருக்குறள அழகா தமிழ்ல சொல்லிடு, மழை இந்த ஜென்மத்துல பெய்யாது! try பண்ணி பாரேன்!"

பிரியா குகனின் கையை அடித்தாள்.

சிரித்து கொண்டே அஞ்சலி, "guys! guys! don't worry. வீட்டுள்ள கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்."

அஞ்சலி வீட்டிற்கு சென்றனர். அஞ்சலியின் வீடு அழகாய் சின்னதாய் இருந்தது. நற்மணம் வீசியது! சுவரின் வண்ணம், அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்கள், வரிசையாய் போட்டு வைத்திருந்த cushionகள்- அனைத்தும் அருமையாய் இருக்க, குகன், "செம்ம museum அஞ்சலி!"

அஞ்சலி, "what?!!"

குகன், "இல்ல மச்சி! பார்த்திபன் கனவு ஸ்ரீகாந்த் சொல்லுமே, கலைஞ்சு இருந்தா தான் வீடு. அப்படியே இருந்தா museum. அந்த மாதிரி சொன்னேன்."

பிரியா, "தனியாவே இருக்கீயா? பயம் இல்லையா?" cushionயை மடியில் வைத்து கொண்டாள் அவள்.

குகன், "உன்னையவே friendஆ வச்சு இருக்கும்போது இது எல்லாம் என்ன பயம்?" கிண்டல் செய்தான்.

மடியில் இருந்த cushionயை குகன் மேல் போட்டாள் பிரியா. அப்போது பிரியாவுக்கு கைபேசி அழைப்பு வந்தது.

"ஓ..நோ!really. ok அத்தை..நான் இப்பவே வரேன்." என்று பிரியா கூற, நடந்ததை குகன், அஞ்சலி, அஷ்வினிடம் சொன்னாள். அவள் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது.

"sorry guys, i have to go. he's not in town too...." என்றவள் முகத்தில் சற்று சோகம் படர, அஞ்சலி அவளுக்கு ஆறுதுல் அணைப்பு கொடுத்து வழி அனுப்பி வைத்தாள். call taxi வந்தது. போகும் வழியில், குகனும் அவன் வீட்டில் இறங்கி கொண்டேன்.

அஞ்சலி வீட்டில் அஞ்சலியும் அஷ்வினும்.

மழை நின்றது. ஒரே அமைதி, ஒருவித இருள். ஹாலில் இருந்த aircon காற்று மட்டும் தான் அங்கிருந்த ஒரே சப்தம்! ரொம்ப அமைதியாகவே இருக்க அஷ்வின்,

"so..anjali...how have you been?"

"good." என்று ஒற்ற வார்த்தை பதில். அதற்கு மேல் அவளும் ஒன்னும் கேட்கவில்லை. மறுபடியும் அதே அமைதி. அதை களைக்கும் வகையில் அஞ்சலி,

"ம்ம்... coffee?"

சரி என்பதுபோல் சற்று தலையை ஆட்டினான். அவள் சமையலறைக்குள் செல்ல, அவன் ஹால் முழுவதும் 'scan' செய்தான். எங்கேயும் தென்படுவில்லை!

அஞ்சலி அஷ்வின் விவாகரத்து செய்து கொண்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. அவர்களின் திருமண ஃபோட்டோ எங்கேயும் தென்படுவில்லை ஹாலில்.

(தொடரும்)

7 comments:

Angeline said...

nalla twist..

rajamelaiyur said...

அருமையான தொடர்
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

Bharathiraja said...

NICE, WAITING FOR SECOND PART

FunScribbler said...

angeline: thanks!
ராஜா: நன்றி boss!

பாரதிராஜா: நன்றிங்க:)))

Anonymous said...

wen is the next part??????

vijayroks said...

அஷ்வின், அஞ்சலி, பிரியா ஆகியோர் பல மாதங்களுக்கு பிறகு ஒன்றாக சந்தித்தனர். நால்வரும் KFC கடையில் உட்கார்ந்து

Moonu peru thaane? naalu per enga?


nice one:)

FunScribbler said...

vijay: haha. thanks for highlighting the mistake, i have corrected it. thanks:)