Jan 19, 2015

Ai- ஏன் this soi soi....?

லிங்கா படம் பார்க்கல மக்கா! கேட்ட விம்ரசனங்களும், பார்த்தவர்களின் பலவீனமான உடல் நிலையும் பார்த்து நான் தப்பித்து கொண்டேன் என்று நினைத்த போது 'விடாது கருப்பு' போல் என்னை தாக்கிய படம் தான் 'ஐ'.

இப்பலாம் படம் நல்லா இருக்குனு சொல்ல முடியல, நல்லா இல்லேன்னு சொல்ல முடியல. நம்மலே போட்டு தாக்குறாங்கப்பா!! ஏன் இந்த வீண் வம்புனு நினைச்சுகிட்டு போக முடியல!! கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்  புகை புடிச்சு அழிச்சு, தண்ணி குடிச்சு அழிச்சு வீண் போகும்போது வரும் அதே வலி தான், படம் பார்த்து வீண் அடிக்கும் போது வருகிறது.


இந்தியா- 120 rs ( 1.94 usd)
சிங்கப்பூர்  - S$18 (14.40 usd)
  லண்டன் - 22 pounds (33.34 usd)
 மலேசியா - 17 Rm (4.76 usd)

லண்டன் அடுத்த வரிசையில், அதிக பணம் செலுத்தி படம் பார்த்த என்னை போன்றவர்களுக்கு படம் பற்றி பேச உரிமை இருப்பதால், இத நான் சொல்லியே ஆகனும்....

கப்பு- சூப்பர்
காபி- ரொம்ப சுமார்

யூகிக்க கூடிய கதையவா இவ்வளவு நாளு யோசிச்சீங்க சார்?? அது என்ன சார், ஆஊனு கும்பிபாகம், கம்பிகுபாம், அப்படினு ஆரம்பிச்சுட்டுறீங்க!! நிறைய பார்த்தாச்சு சார்!!! விடுங்க....

 நானே கவலைய மறக்க படம் பார்க்க வந்தா, ஆபிஸ் மூஞ்சிங்கள ஞபாகம் படுத்துற ஒரு பாடல் வேற இதுல. ஏன் சார் ஏன்???

பாடல்கள் கேட்டு ரசித்து அளவுக்கு காட்சியமைப்பும் சரி, படத்தின் பிண்ணனி இசையும் சரி, மறுபடியும் சொய் சொய் தான் போங்க!!!

இதுகூட பரவாயில்ல, காமெடி என்ற பெயரில் திருநங்கைகளை கிண்டல் அடித்ததை தான் ஏற்று கொள்ளமுடியவில்லை. நான் கூட நினைச்சேன், இப்ப கிண்டல் பண்ணிட்டு அதுக்கு அப்பரம் கதையில் ஏதாச்சு வலுவான மெசெஜ் சொல்வாங்கனு நம்பி உட்கார்ந்து இருந்த எனக்கு மறுபடியும் சொய்...சொய் தான்!!

சந்தானம் இருந்ததால் இப்படி தைரியமா வசனம் வைக்கலாம்னு நினைச்சீங்களோ என்னவோனு தெரியல!

உடல் குறைத்து உடல் ஏத்தி நடிப்பது ரொம்ப கஷ்டம். அது தான் சொன்னேன் கப்பு- சூப்பர்

அதுக்கள்ள இருந்த காபி- ரொம்ப சுமார்!

விக்ரம் இனி இந்த 2, 3 வருஷம் படம் எல்லாம் பண்ணாதிங்க! 6 மாசத்துக்குள்ள படம் முடிக்கிற மாதிரி பண்ணுங்க (ஐயோ...அதே தான் ரஜினி லிங்காவுக்கு பண்ணாரு...) ம்ம்ம்...கட்டத்துரைக்களுக்கு எல்லாம் கட்டம் சரியில்லையோ!!!
**************************************************************

முதல் நாள் காலையில் படம் பார்க்க போய் 2 நாள் கழிச்சு தான் வெளியே வந்த மாதிரி ஒரு உணர்வு! தலைப்பு மட்டும் தான் சுருக்கி வச்சியிருக்கீங்க, அதே மாதிரி படத்தின் நீளத்தை கொஞ்சம் அப்படியே செய்து இருக்கலாம்!!

No comments: