Dec 21, 2017

திரி -1 (தொடர்கதை)

வெள்ளை நிற சுவருக்கு பின்னால் செருப்பு வைக்கும் இடத்தில் மழைநீர் தேங்கி கிடந்ததது. அதனால் கோயில் வாசலிலே பல செருப்புகள் குவிந்து கிடந்தன. அங்கு ஒரு அறிவிப்பு பலகை 'இங்கே காலணிகளை வைக்க கூடாது'. அப்பலகையில் இன்னும் சில பிராத்தனை குறிப்புகள் இருந்தன- கோயிலில் யாரும் காலில் விழ கூடாது. கைபேசி சத்தம் கூடாது. காலணிகளை அணிந்து உள்ளே நுழைய கூடாது.

வியாழக்கிழமை காலை நேரம். கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆரஞ்சு வேட்டி யூனிவோமில் மூவர் அடங்கிய துப்பரவு குழு, இரவு முழுதும் எரிந்து தீர்ந்துபோன நெய் விளக்குகளையும் எள்ளு விளக்குகளையும் அகற்றி குப்பை தொட்டியில் போட்டு கொண்டிருந்தனர். கோயிலுக்கு பின்னால் சிறப்பு பூஜைக்காக வைக்கபட்டிருந்த மணல் சாக்குகள், உதிர்ந்து கிடந்த ரோஜா பூக்கள், மஞ்சள் கொத்துகள், பால் பாக்கெட் அட்டைகள், சாம்பிராணி டப்பா, பல வண்ண சேலைகள் அனைத்தையும் வேக வேகமாய் அப்புறப்படுத்தினர்.

கோயிலில் இருக்கும் சாமி சிலைகளைவிட அதிகமான எண்ணிக்கையில் கிடந்த சிவப்பு நிற நாற்காலிகள் கோயில் நுழைவு கதவுக்கு பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து 4 நாற்காலிகளை எடுத்து, விநாயகர் சிலைக்கு முன்னால் போட்டு உட்கார்ந்தனர் சில பாட்டிமார்கள். குருபெயர்ச்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கு கொடுத்திருந்தால், பளிங்கு தரையில் அமர்ந்திருக்கலாம்.

சாமி சிலை ஓரமாய் நின்று பேசிகொண்டிருந்தனர் பூசாரி இருவர். அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினர் ஒரு பெண்மணியும் அவரின் பதின்ம வயது மகளும் . விழுந்து எழுந்த பெண்மணி அர்ச்சனை சீட்டை பூசாரியிடம் நீட்டினார். பூசாரி, "ஹா...jasvin kaur...welcome welcome. good morning." அவரும் புன்னகையித்தபடி அர்ச்சனை சீட்டை வாங்கி மடித்து வைத்து கொண்டார்.
கோயிலை சுற்றி வந்த சீலன், பாட்டி கூட்டத்துக்கு அருகே சென்றான். அவன் பாட்டியிடம்,

அம்மம்மா, உங்களுக்கு வேற எதாச்சும் வேணுமா? பொங்கல் வச்சு இருக்காங்கனு நினைக்குறேன். நான் எடுத்துட்டு வரவா?"
பாட்டி ஆச்சிரியமாக, “அதுக்குள்ள சாமி கும்ட்டீயா?”

“எல்லாரும் நல்லா இருக்கனும். 3 words. இத சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?”

“சீக்கிரம் கல்யாணம் ஆகனும்னு வேண்டிக்கோ,” என்று கூறிய பாட்டி ஒரு புகைப்படத்தை சீலன் கையில் திணித்தார்.

"சீலா, இந்த photo பாரு. அழகா இருக்காளே? பெர் அபி. 25 வயசு தான். உனக்கு ஒகே வா?"

"ப்ச்…..அம்மம்மா, don't do this to me." சற்று வெறுப்படைந்த சீலன் அப்புகைப்படத்தை பாட்டியிடமே திரும்பி கொடுத்தான். கூட்டம் நடுவே நாற்காலியில் உட்கார்ந்து இருந்த பாட்டியின் தோழி, சீலனின் கையை பிடித்து கொண்டார்.

சீலனின் கையை விடாமல், அப்பாட்டி, "உனக்கு வயசு 34 ஆச்சு. your ammama wants to see you get married. you don't do this to her anymore." என்று கண்டிப்புடன் கூற, இன்னொரு சிறுவயது பெண் புகைப்படத்தை எடுத்து கூட்டத்தில் உள்ள அனைவரும் தெரியுமாறு நீட்டினார். பாட்டிகள் அனைவரும், தங்களது உறவினர்களுக்குள் சந்தோஷமாக இருக்கும் கல்யாணம் ஆகாதவரிகளின் photo அல்லது ஜாதக விபரங்களை சேகரித்து ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படி பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். தீவிரவாத ஒருங்கிணைப்புபோல் செயல்படும் இவர்களின் குறிக்கோள், அவர்கள் சுடுகாட்டை சுத்தி பார்ப்பதற்குள், யாருக்காவது சுயம்வரத்தை  செய்து வைத்துவிட வேண்டும் என்பதே.

தனது பாட்டியை கோயிலுக்கு அழைத்து வரவேண்டிய சூழல் ஏற்படும்போதெல்லாம் சீலனுக்கு இதே கதி தான்.

"ammama, I am going to get coffee." என்று சொல்லிவிட்டு தற்காலிகமாக தப்பித்து சென்றான் coffee vending machine அருகே.

அர்ச்சனை சீட்டு ஒன்றை வாங்கி கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார் வெள்ள வேட்டி பச்சை சட்டையுடன் ஜெகன்.

"வணக்கம் ஜெகன் சார். happy birthday." என்றார் பூசாரி.
வலது கையை மட்டும் சற்று தூக்கி  லேசாக அசைத்துவிட்டு ஜெகன் இரு கைகளையும் கூப்பி கண்களை மூடி சாமி கும்பிட, பூசாரி அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். பக்தர்களுக்கு தீர்த்தமும் திருனீரும் கொடுக்கப்பட்டன. பூசாரி, ஜெகன் உள்ளங்கையில் தீர்த்தத்தை ஊற்றினார்.

 அப்போது ஜெகன்,
"வாசல இத்தன செருப்பு கிடக்கு. அப்பரம் எதுக்கு board வச்சுருக்கோம். get the workers to clear them." என்று சற்று கண்டிப்புடன்  ஜெகன் கூற, அதற்கு,

பூசாரி, "அப்படியா? த்தோ எடுக்க சொல்லிடுறேன்." என்றவர் விறுவிறு என்று ஓடி சென்றார் சுத்தம் செய்யும் குழுவிடம் சொல்ல

கோயில் வளாகத்தை சுற்றி வந்த ஜெகன் சிறுகுழந்தையுடன் வந்த பக்தன் ஒருவரிடம், "bro, கோயிலுக்குள்ள shoe போட்டு வரகூடாது. உங்க பொண்ணு காலுல இருக்குற shoe…... அடுத்த தடவ வரும்போது…கொஞ்சம் பாத்துக்குங்க bro"

அப்பக்தன் ஆச்சிரியம் அடைய, "what!!"

மீண்டும் அப்பக்தன்,"குழந்த, bro. ஒரு வயசு தான் ஆகுது. " தூக்கி இடுப்பில் வைத்திருந்த குழந்தையை காட்டி பதில் பேசினான்.

"bro, குழந்தையா இருந்தாலும் நம்ம வீட்டுல இருக்குற சாமி ரூம்க்கு செருப்பு போட்டு போக விடவோமா? அந்த மாதிரி தான் இதுவும்….”

"What nonsense is this? I am going to complain...."

ஜெகன், "sure sir. போய் சொல்லுங்க," என்று சொல்லிவிட்டு புருவங்களை உயர்த்தி, நமட்டு சிரிப்பு சிரித்தான்.

அதற்குள் அங்க வந்த அப்பக்தனின் மனைவி, " just remove the shoes. don't start a fight at the temple?" குழந்தையின் காலணிகளை அவிழ்த்து பையில் போட்டார் மனைவி.

பாட்டிகள் கூட்டம் இன்னும் கலையாமல் மும்முரமாக பேசி கொண்டிருக்க,
ஜெகன் அவ்வழியே சென்றான்.

"hello young ladies. how is everyone today?"  என்றவன் அமர்ந்திருந்த சீலனின் பாட்டியை கட்டி பிடித்தான். எழ முடியாமல் உட்கார்ந்தபடியே சீலனின் பாட்டியும் அவனை கட்டி தழுவினார். மற்ற பாட்டிகளும் அவனுக்கு கை கொடுத்து வணக்கங்களை கூறினர்.

சீலனின் பாட்டி, "என்ன வியாழக்கிழம காலையிலே கோயில் பக்கம்?"
"nothing much, aunty. it's my birthday today and...." என்று முடிப்பதற்கு அனைத்து பாட்டிகளும் அவனது கைகளை குலுக்கி வாழ்த்து சொல்ல துடித்தனர்.

சீலனின் பாட்டி, “அப்பரம் என்ன celebration இன்னிக்கு? நிஷா எங்க?”

" அவங்க Melbourne போய் இருக்காங்க work விஷயமா."

பாட்டி கூட்டத்திலிருந்து ஒருவர், "ஜெகன், உனக்கு மிஸ்டர் அருண் ராஜ் தெரியுமா?"
அவனும் தலையையாட்டி, “ermm…. He has a daughter right? you need her info. Am I right?

வாய் பிளந்து குஷியாக சிரித்த பாட்டி, “இதுக்கு தான் ஜெகன் வேணும்கிறது. கப்புனு புடிச்சுகிட்டான் பாருங்க!” மற்றவர்களிடம் அவன் புகழ் பாடினார்.
அதற்கு ஜெகன் அப்பாட்டியின் வலது தோள்பட்டையோடு வாரி அணைத்தபடி, "anything for you aunty!”

 ஜெகனின் கன்னங்களை தடவி, அவனது கையை பிடித்து கொண்டு நன்றி கூறினார் அப்பாட்டி. ஜெகனின் கைபேசி அலறியது. குறுந்தகவல் வந்த காரணத்தால், அவன், “ok ladies. See you soon.” என்றவன் அவ்விடத்தைவிட்டு விலகினான்.

இரண்டு whatsapp செய்திகள் வந்தன.
From Darling Wife:
Baby, happy birthday! Love you…Muahhh. just reached Melbourne. Going to the hotel now. Will call you later. Missing you already baby.

From Mark Boi:
Boss, Tonight at Dollar Room.
Thai girl. 3k for 2 hours. High Demand. Reply asap.

முதல் குறுந்தகவலுக்கு ‘love you’ என்றும்
இரண்டாவது குறுந்தகவலுக்கு ‘love it’ என்றும் பதில் அனுப்பிவிட்டு coffee-vending machine பக்கம் நடந்தான்.


1 comment:

Anonymous said...

"குருபெயர்ச்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கு கொடுத்திருந்தால்" - Agreed. Thought of saying this to parents. Missed the blog for quite while and Kudos to see your story after long time.