Nov 30, 2011

photo (தொடர்கதை)-2

சமையல் அறையிலிருந்து வந்த அஞ்சலி, "less sugar for you." புன்னகையித்து கொண்டு அஷ்வினுக்கு கலக்கிய காபியை மேசையில் அவன் அருகே வைத்தாள்.

தனது காபியை அருந்தியபடி அஞ்சலி, "அஷ்வின், how's your work? உன் office main buildingகிட்ட புதுசா railway track வர போகுதுனு அன்னிக்கு newspaper படிச்சேன். is that true?"

அவளது கேள்வி அவனது காதுகளில் விழுந்தாலும், அவன் மனதில் ஏறவில்லை. அவள் முகத்தையே பார்த்தான்.


"இந்த டிவி, முன்னாடி இந்த சோபா இருக்கும் இடத்துல தான் இருந்துச்சு?" என்றான் அஷ்வின். இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் இருந்ததை நினைவுகூர்ந்தான். பழையனவற்றை ஞாபகப்படுத்த, அஞ்சலி எதுவும் பேசவில்லை.

"ஏன், பழைய ஞாபகம் வேண்டாம்னு மாத்திட்டீயா?" அவன் கேட்க அதற்கு அஞ்சலி,

"பழைய ஞாபகம் வேண்டாம்னு நினைச்சு இருந்தா, வீட்டையே மாத்தி இருப்பேன்." என்று வார்த்தை சாட்டையால் அடித்தாள். அமைதியாக இருந்த சூழல் இப்போது சற்று சூடாக கிளம்ப ஆரம்பித்தது.

"அப்பரம் ஏன் மாத்தல்ல?" அஷ்வினும் விடவில்லை.

"that's my choice, ashwin." அவன் கேட்ட கேள்விகள் அனைத்தும் அஞ்சலியை வெறுப்பேத்தியது.

"life எல்லாமே உன் choice படி தானே நடக்கனும்னு ஆசைப்படுவ!" அவன் குரலின் சத்தம் சற்று உயர்ந்தது. அவன் பழையதை மனதில் வைத்து கொண்டு கோபமாக பேசுகிறான் என்பதை அறிந்த அஞ்சலி,

"அஷ்வின், காபி ஆறி போயிட போது. drink that first."

"எதையும் மறக்க முடியல அஞ்சலி. i still love you very much." அவன் கோபம் தணிய, குரல் மங்கியது. பெருமூச்சுவிட்ட அஞ்சலி,

"let's not talk about it anymore."

"why? அவ்வளவு தானா நம்ம relationship. இன்னொரு chance கொடு." கோபமாக இருந்தவன் இப்போது கெஞ்சினான்.

"அஷ்வின், சின்ன புள்ள மாதிரி அடம்பிடிக்காத. நமக்கு divorce முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு. it's over! let's move on, அஷ்வின். அது தான் நமக்கு நல்லது." தனது காபியை அருந்தியபடி அஞ்சலி.

"எப்படி அஞ்சலி, உன்னால மட்டும் எல்லாத்தையும் மறந்துட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்க முடியுது?"

"அஷ்வின், mind your words."

அஷ்வின் மறுபடியும் கோபஏணியில் ஏறுகிறான் என்பது தெளிவாக புரிந்தது.

"ok ashwin, நீ நல்ல மூட்ல இல்ல. இன்னிக்கு பேச வேண்டாம். நீ கிளம்பு. i will call you later."

"no. முடியாது. ஒரு வருஷம்....1 year, அஞ்சலி. தினமும் இத நினைச்சு நினைச்சு...வலிக்குது அஞ்சலி!"

அவள் அமைதி காத்தாள்.

அஞ்சலி, "அஷ்வின், நீ கிளம்பு!"

அஷ்வின், "stop chasing me away from your life.” என்றவன் சினம்கொண்டு எழுந்து நின்றான். நின்றவன் தனது ஆள்காட்டி விரலை நீட்டி, “ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ அஞ்சலி, no matter what, I still love you.”

அவன் ‘லவ்’ என்ற வார்த்தையை அடிக்கடி சொல்ல, அஞ்சலிக்கு அறுவறுப்பாய் இருந்தது.

“stop it ashwin. what do you mean by love? சும்மா லவ் லவ்னு சொல்றதுனால நீ செஞ்சது எல்லாம் தப்பு இல்லன்னு ஆகாது.”

அஞ்சலியின் ஆத்திரம் அவன் புருவங்களை சுருங்க வைத்தது.

அஞ்சலி தொடர்ந்தாள், “you can’t just love a person like that. you must love her habits, her interests, her ambitions, her goals….எல்லாமே! கல்யாணத்துக்கு அப்பரம் வேலைக்கு போக கூடாதுனு சொன்னே. ஒகே fine. வீட்டுலேந்து business பண்ணலாம்னு கேட்டேன். அதுக்கும் no. friendsகூட வெளியே போகனும்னா உன்கிட்ட permission கேட்கறது fine. ஆனா, உன் familyகிட்டயே கேட்கனும்னு எதிர்பார்க்குறது….it’s ridiculous, ashwin. எனக்கு பிடிச்ச சுடிதார் போட முடியாது. உனக்கு பிடிச்ச கலர்ல தான் போடனும். எல்லாத்துக்கும், மத்தவங்ககிட்ட கேட்டு கேட்டு….ashwin…it’s hell man!”

அமைதியாக இருந்தான் அஷ்வின்.

அஞ்சலி, “எந்த ஒரு expectations இல்லாம வாழனும் அஷ்வின். அப்படி இல்லன்னா, no point sticking on to that relationship.”

அஷ்வின், “compromises are essential in life. அப்ப தான் சந்தோஷமா இருக்க முடியும்.”

அஞ்சலி, “compromise பண்ண நான் ரெடி. ஆனா, sacrifice பண்ண என்னால முடியாது. நம்ம வாழ்ந்த வாழ்க்கைக்கு பெயரு compromise இல்ல.”

அதற்கு மேல அஷ்வினால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அஞ்சலி, “போதும் அஷ்வின். நிறைய சண்டை. நிறைய அழுகை. உனக்கும் கஷ்டம் தான். leave it. let’s be just good friends.”

அஷ்வின், “இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டீயா?”

அஞ்சலி, “never. that’s not my cup of tea!” என்றவள் தனது காபி குவளையை எடுத்து மீதியிருந்த காபியை குடித்து முடித்தாள். மாலை 6 மணி ஆக, அஞ்சலி தனது யோகா வகுப்பிற்கு கிளம்பினாள்.

“அஷ்வின், I have to leave soon. so….”

புரிந்து கொண்ட அஷ்வின் வாசல்கதவை நோக்கி சென்றான். வழி அனுப்பி வைக்க நின்றாள் அஞ்சலி. அவளை ஒரு முறை பார்த்தவன்,

“வீட்டுல, அம்மா எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் என்ன சொல்ல?”

*முற்றும்*

9 comments:

Anonymous said...

hey enna mudichittinga????????????

ப்ரியமுடன் வசந்த் said...

//எந்த ஒரு expectations இல்லாம வாழனும் அஷ்வின். அப்படி இல்லன்னா, no point sticking on to that relationship.”//

டிஸ்லைக்..

F.NIHAZA said...

naweena kaala thewaiku eytra kadhaima

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான் கதை.தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி..
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

vijayroks said...

nice but I didn't expect this to end so soon :(

Bharathiraja said...

இது உங்க கதைகளில் வரும் முடிவு அல்ல. பாகம் 3 விரைவில் எதிர்பார்க்கிறேன்

viccy said...

Very different from ur usual stories.. nice but ungaloda jolly aana stories than enaku romba pidikum....

viccy said...

very different from ur usual stories.. nice too :-) but enathu viruppam ungalathu jolly aana romantic stories mattumae...

FunScribbler said...

To all: thanks everyone for your words! Yea I always wanted to write different genres!!:))