நான்கு மணிக்கே உள்ளே சென்றுவிட்டோம். வலது காலை எடுத்து வைத்து சென்றபோது தான் உணர்ந்தேன் கப்பல் உலகம் என்பது வேறு ஒரு உலகம் என்று. அப்படி ஒரு பிரம்மாண்டம். கப்பலில் உள்ளவர்களில் 80% இந்தியர்கள். அதில் 79% honeymoon couples. வட இந்தியர்கள் என்பதால் புதுமண பெண்கள் கையில் வளையல்கள் இருந்தன.
கப்பலில் வேலை பார்க்கும் அனைவரும் அவ்வளவு அழகா இருந்தாங்க- அது பெண்களா இருந்தாலும் சரி ஆண்களா இருந்தாலும் சரி. பொங்கலுக்கே வெடி வெடிப்போம், தீபாவளி வந்தா சும்மாவா. பெயர் தெரியாது, ஆனா, எங்களுக்கு (நான், அக்கா, தங்கை, எனது மற்றும் இரண்டு தோழிகள்) பிடித்தவர்களுக்கு நாங்களே பெயர் வைத்தோம்.
housekeeping வேலை பார்த்தவர்- சீனர். அவருக்கு நாங்கள் வச்ச பெயர் 'சிரிச்ச மச்சான்'. அவர் முகத்தில் எப்போதுமே ஒரு புன்னகை இருக்கும். எங்களது அறையில் இருந்த கழிவறையில் சின்ன பிரச்சனை. எத்தனை முறை சொன்னாலும், சலிப்பு இல்லாமல் எங்களுக்கு உதவினார். அவருடன் ஒரு ஃபோட்டோ எடுத்து கொண்டோம். அவருக்கு அம்புட்டு சந்தோஷம் அதில். இதுவரை யாரும் அப்படி செய்தது இல்லை என நினைக்குறேன்!:)
அப்பரம், தோழி ஒருத்திக்கு அங்கிருந்த chef மீது ஒரு கண்ணு. அவர் ஒரு இரவு எல்லாருக்கும் ஐஸ்கீரிம் கொடுத்து கொண்டிருந்தார்- ஆக, அவருக்கு, 'ஐஸ்கீரிம் man' என பெயர் வைத்தோம்.
சாப்பாடு என்று சொல்லும்போது இதை நான் சொல்லியே ஆகனும். buffet styleல் தினமும் ஆறு வேளை சாப்பாடு- காலை உணவு, காலை தேநீர் டைம், மதிய உணவு, மாலை தேநீர் டைம், இரவு சாப்பாடு, late supper டைம். ஒவ்வொரு வேளையும் கிட்டதட்ட 25 வகை உணவு இருக்கும். சைவம் அசைவம் அனைத்தும் இருக்கும். duck, turkey, lamb இது போன்ற அசைவ உணவும் இருந்தது!!:)
இது தவிர dessertம் உண்டு- பல வகை கேக், பாயாசம். ஆமாங்க, இந்திய உணவும் இருந்தது- ரசம், சாம்பார், நாண், தயிர், அட ஊறுகாய் கூட இருந்தது.... இட்லி கூட இருந்தது அதுவும் சதுரவடிவில்!
கப்பலில் மொத்தம் 13 மாடிகள். பல கேளிக்கை நடவடிக்கைகள். எப்போதுமே கப்பலில் பல இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, ஆடல் பாடல் கொண்டாட்டமாக தான் இருக்கும். நீச்சல் இடம் இருந்தது. இரவில் நாங்கள் 13ஆம் மாடியில் இருந்து, காற்று வாங்குவோம். ஒரு இரவு 'celebrity disco' சென்றோம். ஆனால் நினைத்த அளவு கூட்டம் இல்லை. ஆங்கில பாடல்களும் 'chammak challo' பாடலும் போட்டார்கள்.
ஒரு நாள் மலேசியாவில் இருக்கும் penangல் இறக்கினார்கள். 8 மணி நேரம் கப்பல் அங்கு நிற்கும். ஆசைப்பட்டவர்கள் அவ்வூரை சுற்றி பார்க்கலாம். நாங்களும் சரி சும்மா ஒரு ஷாப்பிங் போயிட்டு வரலாம்னு கிளம்பினோம். இறங்கியவுடன் ஈக்கள்போல் எங்களை சுற்றி வளைத்தனர் அங்கிருந்து வாகன ஓட்டுனர்கள்- ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு காசு. அங்கு போகலாம். இந்த மலைய பாக்கலாம்னு ஒரே தொந்தரவு. ஆனால், எங்கள் மனதில் பீதியை கிளப்பியது ஒன்று.
எங்களை பார்த்தவுடன் ஒரு தமிழ் வாகன ஓட்டுனர், "இந்த பொண்ணுங்கள freeயவே ஓட்டிக்கிட்டு போகலாம்' என சொல்ல. என் அக்காவுக்கு கோபம் கொந்தளித்தது. அங்கு நின்று கொண்டிருந்த முக்கால்வாசி வாகன ஓட்டுனர்கள் தமிழர்கள் தான். என்னடா இது இப்படி பேசுறாங்களேன்னு ஒரே வருத்தமா போச்சு.
சரி பேருந்து ஏறி போகலாம்னு பார்த்தா, ஒரு routeம் புரியல. சரி வாகனம் எடுக்கலாம்னு இன்னொரு 'தமிழ் அண்ணன்'கிட்ட போய் கேட்டோம். அவர் $20 ஆகும் என்றார்.
யோவ் யார்கிட்ட. நாங்க பாக்க சின்ன பசங்க. இப்படி ஏமாத்துறதா?- அப்படி சொல்லலாம்னு நினைச்சேன்.
'பரவாயில்ல நாங்க பஸ்ல போறோம்'னு சொல்லிட்டு கிளம்பி வந்தோம். அச்சமயம் ஒரு பெண் வாகன ஓட்டுநர் (கையில் சிகரெட்) வந்தார். $15க்கு ஓகே சொல்லி ஏறினோம். ஆனால் அவர் main roadலில் போகாமல் சந்துகளில் போனார். ஆள் நடமாட்டமே இல்லை அவ்விடத்தில்....
(பகுதி 2)
1 comment:
ஆஹா... இப்படி திகிலா "தொடரும்" போட்டுட்டீங்களே... :((
உங்க பேரு காயத்ரினு பாத்ததும் (ஒரு கமெண்ட்ல), எனக்கு புடிச்ச பேருனு ஆர்வத்துல தான் படிக்க ஆரம்பிச்சேன் உங்க பழைய போஸ்ட் எல்லாம்... கலக்கலா எழுதறீங்க... ஒரு புது தொடர் கதை ஆரம்பிங்க காயத்ரி...:)
Post a Comment