எனக்கு அப்படியே டென்ஷன் ஏறுதுங்க. இன்னிக்கு நடந்த கணக்கு பரிட்சையினால. பொதுவா பரிட்சை என்றால் டென்ஷன் தான்! அதுலயும் இது ரொம்ப ரொம்ப கஷ்டமான module. நரம்பு எல்லாம் நடன ஆடிட்டு நேத்திக்கு ராத்திரி. தூங்க முடியல... படிக்கவும் முடியல. ராத்திரி ஒரு மணி வரைக்கும் படிச்சேன். படிச்சது எல்லாம் மறந்து போன மாதிரியே ஒரு பீலிங். சரி ஒரு ப்ரேக் எடுத்துக்கலானு நினைச்சு, பாட்டு கேட்டா... அதே பாட்டு தான் மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு!! சரி மறுபடியும் வந்து படிக்கலாம்னு பார்த்தா... mind அப்படியே சூடாச்சு!! it was really killing me!! அப்பரம் இன்னிக்கு மதியம் பரிட்சை. ஆனா காலையில 4 மணிக்கு எல்லாம் தூக்கம் ஓடி போச்சு!!
அப்பரம், சாப்பிட முடியல. என்னடா இது... இதான் முதல் தடவ பரிட்சை எழுது போன பொண்ணு மாதிரி பேசுதுனு நினைக்கிறீங்க தானே... எத்தனையோ தடவ பரிட்சை வருது.. ஆனா இரண்டு நாளா செம்ம torture!!! ஏண்டா பரிட்சை எல்லாம் வைக்கிறாங்க? அப்படினு தோனுச்சு!! பரிட்சைய கண்டுபிடிச்சவனை செருப்பால அடிக்குனு என்று என் தோழி ஒருத்தி புலம்பிகிட்டு இருந்தா.. புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆத்துனும், அப்படினு பல 'அறிஞர்கள்' சொல்லி இருக்காங்க... அது போல கஷ்டப்படுற மனச கவிதை எழுதி ஆத்தணும்...
எவண்டா அது?
பரிட்சை என்ன
பசங்களுக்கு கிடைத்த சாபமா?
இல்ல கடவுள்
எங்க மேல காட்டுற கோபமா?
தூங்க முடியல
சாப்பிட முடியல
சிரிக்க முடியல
அழுவகூட முடியல
காதல் அறிகுறியானு பார்த்த
கண்ராவி இது பரிட்சையின்
அறிகுறிகள்!!
பரிட்சை எழுதும்போது
பக்கத்துல பக்கம் பக்கமா
எழுதுறவன பார்த்தா
டென்ஷன்.
பரிட்சை முடிஞ்சு
உடனே எல்லாம் பதில்களையும்
பகிர்ந்து கொள்றவன பார்த்தா
டென்ஷன்.
இரண்டே இரண்டு மார்க்
கோட்டைவிட்டவன்
வருத்தப்படுறத பார்த்தா
மெகா டென்ஷன்!
இப்படி மென்ஷன் பண்ண
முடியாத டென்ஷன்!
இத பார்த்து மனசு
குமறியது,
"பரிட்சைய கண்டுபிடிச்சவன்,
எவண்டா அது?"
14 comments:
பரிச்சைனா செம டென்சன் தான்.
ஹாலுக்கு போறதுக்கு கொஞ்சம் முன்னாடி எல்லாமே மறந்து போனது மாதிரி இருக்குமே அது மஹா டென்சன்.
அப்பாடா என்னைப் போலவே இன்னோரு ஜீவன் இருக்குன்னு நினைக்குற அப்போ சந்தோசமா இருக்கு.அடுத்த வாரத்திலிருந்து எனக்கு சங்கு..அதான் பரிட்சை.ஆனா நாம எல்லாம் போர்க்கு அஞ்சாத போர் வீரர்கள் மாதிரி :D
நானும் போய் படிக்கிற வேலையைப் பார்க்குறேன்..
இன்னும் பரிட்சை இருந்தா best of luck
சரியா சொன்னீங்க ஜேகே.
ரொம்ப நன்றி துர்கா! உங்களுக்கும் என் best wishes!!
ஒரு முழுவருடமும் படித்து, 3 மணி நேரத்தில் வெளியேற்ற வேண்டும் என்று சொன்னால் அவனை செருப்பால் அடிக்கத்தான் வேண்டும்..
இது செவிடன் காதில் ஊதிய சங்கு...
//
"பரிட்சைய கண்டுபிடிச்சவன்,
எவண்டா அது?"
//
//
தூங்க முடியல
சாப்பிட முடியல
சிரிக்க முடியல
அழுவகூட முடியல
காதல் அறிகுறியானு பார்த்த
கண்ராவி இது பரிட்சையின்
அறிகுறிகள்!!
//
:-)))))))
juper juper
Kalakkal
ஹாஹா... ரொம்ப நன்றி சிவா!
"எவண்டா அது?" .....
என்னைத் தான் கூப்பிடிங்களோனு ஓடிவந்தேன். வந்து பார்த்தா?/???
இதெல்லாம் டூமச்!! நானே தேவலாம் போல, விவேக் டயலாக் மாதிரி எதோ எழுதிட்டு கவிதையா?
குட்டிபிசாசு, நான் தான் அப்பவே சொன்னேனே, கஷ்டம்படுற மனச புகைவிட்டு ஆற்றமுடியாது... அதனால இப்படி கவிதை பாடி ஆற்றனுமுனு... அப்படி ஆத்தி.. கொஞ்சம் 'போதை' கொஞ்சம் அதிகமாச்சு!! அதான்.. இப்படி!
\\பரிட்சை எழுதும்போது
பக்கத்துல பக்கம் பக்கமா
எழுதுறவன பார்த்தா
டென்ஷன்.\\
ஏன் உங்களுக்கு காபி அடிக்க ஹெல்ப் பண்ணலியா உங்க பக்கத்துல இருந்த நண்பர்??
சரி பரீட்ச்சை நல்லா எழுதினீங்களா??
//சரி பரீட்ச்சை நல்லா எழுதினீங்களா??//
எதோ எழுதி இருக்கேனுங்க!
//பரிட்சை எழுதும்போது
பக்கத்துல பக்கம் பக்கமா
எழுதுறவன பார்த்தா
டென்ஷன்.
பரிட்சை முடிஞ்சு
உடனே எல்லாம் பதில்களையும்
பகிர்ந்து கொள்றவன பார்த்தா
டென்ஷன்.
இரண்டே இரண்டு மார்க்
கோட்டைவிட்டவன்
வருத்தப்படுறத பார்த்தா
மெகா டென்ஷன்! //
haa..haa... v.v.c
நன்றி ரசிகன்!
//
//பரிட்சை எழுதும்போது
பக்கத்துல பக்கம் பக்கமா
எழுதுறவன பார்த்தா
டென்ஷன்.
பரிட்சை முடிஞ்சு
உடனே எல்லாம் பதில்களையும்
பகிர்ந்து கொள்றவன பார்த்தா
டென்ஷன்.
இரண்டே இரண்டு மார்க்
கோட்டைவிட்டவன்
வருத்தப்படுறத பார்த்தா
மெகா டென்ஷன்! //
really really nice... :))
நன்றி சத்தீஷ்!
Post a Comment