Mar 15, 2009

ஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-4

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கமலத்தை இடித்தது. கையிலும் தலையிலும் காயம்!

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் கமலம். ராமலிங்கம் உடனே கவிதாவிற்கு தகவல் சொன்னார். ஆனால், கவிதா வேறு ஒரு இடத்தில் foreign clients conferenceலில் இருந்தாள், அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல 1 மணி நேரத்திற்கும் மேலே ஆகும். பதற்றமாக இருந்த கவிதா, நிஷாவிற்கும் விலியமிற்கும் தகவல் சொல்லி மருத்துவமனைக்கு போக சொன்னாள்.

"விலியம், நீயும் நீஷாவும் கொஞ்ச அங்க சீக்கிரம் போங்க.. நான் வந்துடுறேன். நீங்க அங்க இருந்தா...அப்பாவுக்கும் கொஞ்ச ஆறுதலா இருக்கும்." ஃபோனில் விலியமிடம் சொன்னாள் கவிதா.

"கவி, கவலைப்படாத. ஒன்னும் ஆகாது ஆண்ட்டிக்கு. you don't get too tensed. we'll reach there soon." விலியம் கூறினான்.

மருத்துவமனைக்கு போகும் வழியில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டுவிட்டது. ஒரு மணி நேரத்தில் வந்து சேர்வதற்கு பதிலாக இரண்டு மணி நேரம் ஆனது. அவசரமாக, பதற்றத்துடன் மருத்தவமனையின் 4 ஆம் மாடிக்கு சென்ற கவிதா, கமலம் இருக்கும் அறையை நோக்கி ஓடினாள்.

கதவை திறந்தவுடன், அவள் கண்களில் தென்ப்பட்டனர்- ராமலிங்கம், நிஷா, கமலம் படுக்கையில். படுக்கை பக்கத்தில் நின்று கொண்டிருந்த விலியமின் கையை பிடித்து கொண்டு இருந்தார் கமலம். ! ஆச்சிரியம் கவிதாவிற்கு! அவளுக்கு அங்கு என்ன நடக்குது என்பது புரிந்து கொள்ள கொஞ்சம் நேரமானது.

"ஆண்ட்டி...உங்களுக்கு ஒன்னுமில்ல. லேசான அடி தான். அதான் விலியம் உங்களுக்கு ரத்தம் கொடுத்து காப்பாத்திட்டாரே. அப்பரம் ஏன் கண் கலங்குறீங்க?" நிஷா கூறியதற்கு, கமலம்

"ரொம்ம்ம்ப தேங்கஸ் விலியம்... நீ மட்டும் எனக்கு...." வார்த்தைகள் முட்ட, கண்களில் கண்ணீர்.

"பரவாயில்ல ஆண்ட்டி... இதுக்கு போய் ஏன் இவ்வளவு ஃவீலிங்ஸ்....everything will be alright. என் அம்மாவுக்கு இப்படி ஒன்னு நடந்தா... நான் செஞ்சு இருந்திருக்க மாட்டேனே." என்று விலியம் ஆதரவாய் பேசினான்.

நின்று கொண்டிருந்த ராமலிங்கம் நிஷாவின் காது அருகே முணுமுணுத்தார், "ஏம்மா நிஷா, feelings of india and chinaவ ஒரே நேரத்துல பாத்து இருக்கீயா?"

"அதான் பாத்துகிட்டு இருக்கேனே...." நிஷா சிரித்தார். ராமலிங்கமும் சேர்ந்து சிரித்தார். எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த கவிதா,

"அம்மா...." என்று ஓடிவந்து கமலத்தை கட்டி பிடித்தாள். எப்படி அடிப்பட்டது, எங்கு அடிப்பட்டது, ரத்தம் தேவைப்பட்ட விஷயம், அதை கொடுத்து உதவியது விலியம் போன்ற தகவல்களை ஒன்னுவிடாமல் கூறிமுடித்தார் கமலம். போன உயிர் திருப்பி வந்ததுபோல் உணர்ந்தாள் கவிதா.

கமலம் ராமலிங்கத்தை கூப்பிட்டு, "ஏங்க.... உடனே கல்யாண வேலைகள ஆரம்பிச்சுடுவோம்....அடுத்த மாசத்திலே கல்யாணம் வச்சுடுவோம்." கமலம் கூறியது அனைவருக்கும் சந்தோஷமான அதிர்ச்சியாக இருந்தது.

"அதுக்கு என்ன..... பேஷா பண்ணிடுவோம்....என்ன கவிதா....மாப்பிள்ள சந்தோஷம் தானே?" ராமலிங்கம் கவிதா தலையை தடவி கொடுத்தவாரே கேட்டார். இப்படி ஒரு சோகம் நடந்தபிறகு, வரும் சந்தோஷத்தை முழுவதாய் உணர முடிந்த கவிதாவுக்கு ஆனந்தமாக இருந்தது.

சிரித்து பேசி கொண்டிருந்த போது, ஒரு தாதி உள்ளே வந்து....

உலகத்திலுள்ள தாதியர்களின் ஆஸ்தான வேலை என்ன என்பதும் அவர்கள் சொல்லும் டையலாக் என்ன என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டுமே! அதே தான்....

"ஏன் எல்லாரும் இப்படி கூச்சல் போட்டுகிட்டு இருக்கீங்க. patientக்கு rest தேவை. நீங்க எல்லாரும் கொஞ்ச வெளியே வேட் பண்ணுறீங்களா. டாக்டர் ரவுண்ஸ் வர நேரமாச்சு..." அவர் சொல்லி முடிக்க, அனைவரும் வெளியே வந்தனர். அறைக்கு வெளியே வந்தபோது,

நன்றியுணர்வுடன் கவிதா விலியமிடம், "தேங்கஸ் விலியம். நீங்க இல்லேன்னா...." அவனின் கையை பிடித்து கொண்டாள்.

"அட எனக்கு தேங்கஸ் சொல்லாத, அங்கிளுக்கு தான் தேங்கஸ் சொல்லனும்." என்றான் விலியம். அவன் சொன்னது கவிதாவிற்கு புரியவில்லை.

ராமலிங்கம், "அட மாப்பிள்ள நீங்க வேற.... அது எல்லாம் ஒன்னுமில்ல கவிதா... எனக்கு தேங்கஸ் சொல்றதுவிட நீ நிஷாவுக்கு தான் நன்றி சொல்லனும்."

அனைவரும் கவிதாவிற்கு புதிர் போட்டு கொண்டே பேசினர். கவிதாவின் குழப்பமான முகத்தை கண்ட நிஷா சிரித்துகொண்டே, " ஏய் கவிதா... actually என்ன ஆச்சுன்னா.... "

நடந்தது என்னவென்றால்- டாக்டர் கமலத்திற்கு அவசரமாக இரத்தம் தேவை என்று கூறியிருக்கிறார். நிஷா இரத்தம் கொடுத்திருக்கிறார். இது தான் தக்க சமயம் என்பதால், விலியம் இரத்தம் கொடுத்ததாக பொய் சொல்லியுள்ளனர் கமலத்திடம். விலியம் மீது நல்ல எண்ணம் ஏற்பட செய்த மாபெரும் master plan இது. இந்த திட்டத்தை தீட்டியவர் ராமலிங்கம். செயல்முறைப்படுத்த உதவியவர் விலியமும் நிஷாவும்.

"இது தாண்டி நடந்துச்சு...." என்று சொல்லி முடித்தாள்.

கவிதாவிற்கு ஆச்சிரியமாக இருந்தாலும், சிரிப்பு தாங்க முடியவில்லை. அறையில் நடித்த நடிப்பை நினைத்து கவிதா மீண்டும் சிரித்தாள்.

"விலியம், உனக்கு... இப்படிகூட நடிக்க வருமா?" கவிதாவின் கேள்விக்கு புன்னகை மன்னன் புன்னகையித்தார்.

பலமுறை கவிதா வீட்டில் சாப்பிட்ட நிஷா 'நண்பன் போட்ட சோறு நிதமும் திண்ண பாரு' என்ற பாடலுக்கு வாழும் உதாரணமாக திகழ்ந்தாள்.

கமலம் சில வாரங்கள் கழித்து வீடு திரும்பினாள். கல்யாண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன. கல்யாண பத்திரிக்கைகளை அடித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தனர். தனது தோழி வசந்தாவிடம் பத்திரிக்கை கொடுக்க சென்றாள் கமலம்.

"என்ன கமலம்... இப்ப எப்படி இருக்கு உடம்பு.... கால் நடக்க முடியுதா?" வசந்தா நலம் விசாரித்தார். நான் நலமாக இருக்கிறேன் என்பதுபோல் தலை அசைத்தார் கமலம். தன் மகள் கவிதாவின் கல்யாண பத்திரிக்கையை நீட்டி,

"அவசியமா வந்துரு..." கமலம் சொன்னார்.

"கண்டிப்பா வந்துடுறேன்.... காபி சாப்பிட்டு போ கமலம்." வசந்தா உபசரித்தாள். அதற்கு கமலம்,

"இல்ல வசந்தா... நான் இன்னொரு நாளைக்கு சாப்பிட்டுக்குறேன்... நேரமாச்சு... இப்பவே 7 மணியாச்சு... 715க்கு language clubல கிளாஸ் இருக்கு. " என்றார்.

"என்ன கிளாஸ்?" வினாவினார் வசந்தா.

"சீன மொழி கத்துகிறேண்டி... அதுக்கு தான் போறேன்... வரேன் வசந்தா." கமலம் சீன மொழி வகுப்பிற்கு விரைந்தார்.

*முற்றும்*
----------------------------------------------------------------------------------------------

கதை உருவான விதம். ஹாஹா... behind the scenes ரேஞ்சுக்கு ஒன்னும் பெரிய விஷயமில்லை. ஆனா, கொஞ்ச சுவாரஸ்சியமான தகவல் தான் நான் சொல்ல போறது. போன வருஷம் ஒரு முறை என் தோழியிடம் பேசி கொண்டிருந்தேன் online chatல். என் பள்ளி தோழி, பத்தாம் வகுப்பு முடிந்த பிறகு, அவள் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிவிட்டாள். கிட்டதட்ட 5 ஆண்டு காலமாக அங்க இருக்கிறாள்.

பேசிகொண்டிருந்த போது, கல்யாணம், boyfriends-girlfriends பத்தி பேச்சு வந்தது.

நான்: அப்பரம் எப்படி நீ.... வெள்ளக்காரன தான் கல்யாணம் பண்ணிப்பே... அப்படியே எனக்கும் ஒன்னு பாரேன்...hahaha...

தோழி: அட நீ வேற வெள்ளக்காரனலாம் சரிப்பட்டு வராது...

நான்: ஏண்டி இப்படி சொல்றே... ஒகே atleast some chinese fellow....

தோழி: ஹாஹா.... நம்ம கருவாட்டு குழம்பு வைக்குற அன்னிக்கு தான் அவனுக்கு fishball noodle soup வேணும்னு கேட்பான்.... அதலாம் சரிப்பட்டு வராது.... i think indian guys are the best... no matter south or north. haha.

இப்படி இவள் சொன்னபோது விழுந்து விழுந்து சிரித்தேன். அந்த கழுவாட்டு குழம்பு உதாரணம் என்னை ரொம்ம்ம்பவே கவர்ந்தது. அவள் negative aspectல் சொன்ன விஷயத்தை positive angleலில் கொண்டு வந்தேன் இக்கதையில். அவ்வளவு தான். :)

15 comments:

mvalarpirai said...

"Indian guys are the best " :) :)

Good Story Tamil ..

அஷ்வின் நாரயணசாமி said...

உங்கள் வழி சற்று வித்தியாசமாக உள்ளது..நல்ல கதை எழுதறிங்க.... சினிமாவில் சேர ஏதாவது வாய்ப்பு.... ஒரு சின்ன பாடல் மட்டும் தான் குறை... இல்லைனா ஒரு முழு படம் பார்த்த effect.
இது சும்மா ஒரு நகைச்சுவையாக சொன்னான்.
வேறு வார்த்தைகளில்....I Like ur way of thinking all the best...keep on writing.These Lines for you
"We don't know who we are until we see what we can do"

Karthik said...

SUPERB!

(recession time..im running short of words.)

Karthik said...

//பேசிகொண்டிருந்த போது, கல்யாணம், boyfriends-girlfriends பத்தி பேச்சு வந்தது.

dont you guys opened the chat with this topic? ;)

FunScribbler said...

@valar

//Good Story Tamil ..//

நன்றி வளர்:)

FunScribbler said...

@அஷ்வின்

//உங்கள் வழி சற்று வித்தியாசமாக உள்ளது..நல்ல கதை எழுதறிங்க.... சினிமாவில் சேர ஏதாவது வாய்ப்பு//

வாய்ப்பு கிடைத்தால் போயிட வேண்டியது தான்! எத்தன காலத்துக்கே, மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர் பெயர்களே ஒலிச்சுகிட்டு இருக்குறது... நம்மளும் போய் ஒரு கலக்கு கலக்கிட வேண்டியது தான்!:)

FunScribbler said...

@அஷ்வின்

//I Like ur way of thinking all the best...keep on writing.These Lines for you
"We don't know who we are until we see what we can do"//

ஹாஹாஹா....:) நன்றி நன்றி:)

so true in saying 'we may not know who we are till we try smthing'. really nice man! thanks

FunScribbler said...

@karthik

//recession time//

i will talk to obama abt that.:)

FunScribbler said...

@karthik

//dont you guys opened the chat with this topic? ;)//

no no.. we talk abt temples and how to put kolam:)

ARV Loshan said...

//எத்தன காலத்துக்கே, மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர் பெயர்களே ஒலிச்சுகிட்டு இருக்குறது... நம்மளும் போய் ஒரு கலக்கு கலக்கிட வேண்டியது தான்!:)//
சொல்லிட்டு போங்க.. (நாங்க எஸ்கேப் ஆகிறதுக்கு.. ;))

//feelings of india and chinaவ ஒரே நேரத்துல பாத்து இருக்கீயா?//
lolzzzzz

//அவள் negative aspectல் சொன்ன விஷயத்தை positive angleலில் கொண்டு வந்தேன் இக்கதையில். அவ்வளவு தான். :)//

நல்லா இருந்தது.. கதை அருமை.. பெண்களின் open minded thoughtsதெரியுது.. ரசிக்கிறோம். தொடர்ந்து same open thoughtsஓடு எழுதுங்க..

புதியவன் said...

கதையை அழகா முடிச்சிருக்கீங்க...
’கதை உருவான விதம்’ - ரொம்ப ரசிக்கும் படியா இருந்தது...

FunScribbler said...

@லோஷன்

//நாங்க எஸ்கேப் ஆகிறதுக்கு.. ;))//

நல்ல வேணும் எனக்கு :)

//நல்லா இருந்தது.. கதை அருமை.. பெண்களின் open minded thoughtsதெரியுது.. ரசிக்கிறோம். தொடர்ந்து same open thoughtsஓடு எழுதுங்க..//

நன்றி நன்றி!:)

FunScribbler said...

@புதியவன்

//கதை உருவான விதம்’ - ரொம்ப ரசிக்கும் படியா இருந்தது..//

மிக்க மகிழ்ச்சி:)

Revathyrkrishnan said...

// "ஏம்மா நிஷா, feelings of india and chinaவ ஒரே நேரத்துல பாத்து இருக்கீயா?"//

சூப்பர் காயத்ரி... இப்படி நவரசத்தையும் பிழிந்து கதை எழுதியிருக்கியேம்மா?!!!! வாழ்த்துக்கள்... நல்ல கதை... அருமையான எழுத்து நடை... நகைச்சுவையுடன் ஒரு க்ளைமாக்ஸ்... கதை உருவான விதம் சொன்ன புதுமை... எங்கயோ போயிட்டீங்க மேடம்...

FunScribbler said...

@ரீனா

//எங்கயோ போயிட்டீங்க மேடம்...//

மேடமா? நான் ரொம்ம்ப சின்ன புள்ளங்க. மேடம் எல்லாம் வேணாம். பெயர சொல்லியே கூப்பிடுங்க.