Mar 13, 2009

ஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-3

பகுதி 1

பகுதி 2

விலியம் தமிழில் பேசியது ராமலிங்கத்திற்கு ஆச்சிரியத்தை தந்தது. கமலத்திற்கு ஆச்சிரியத்தால் மயக்கமே வந்துவிட்டது. இஞ்சியை அப்படியே காம்பளான் மாதிரி விழுங்கியதுபோல் சிலையாய் நின்றுவிட்டார் கமலம். அவர்களின் ஆச்சிரியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் விலியம்,



"எனக்கு தமிழ் தெரியும்... அண்ணனும் அண்ணியும் சென்னையில் தான் இருக்காங்க.. அங்க ஒரு chinese restuarant வச்சு இருக்காரு. அடிக்கடி அங்க போவேன். இங்க வேலை பாக்குறதுக்கு முன்னாடி சென்னை branchல தான் ரெண்டு வருஷமா இருந்தேன்...அப்படியே தமிழ் கத்துக்கிட்டேன். இங்க வந்து கவிதாகிட்ட இன்னும் கொஞ்ச அதிகமா கத்துகிட்டேன்" என்றான் சரளமான ஆங்கிலம் உச்சரிப்பு கலந்த தமிழில்.



"அப்படியா மாப்பிள்ள...வெரி குட் வெரி குட். ரொம்ம்ம்ப சந்தோஷமா இருக்கு... இப்படி தமிழ் மொழிய எல்லாரும் பேசறத பாக்கும்போது" என்றார் ராமலிங்கம்.



அவர் விலியமை மாப்பிள்ளை என்று அழைத்தது நிஷாவுக்கும் கவிதாவுக்கும் பேரானந்தத்தை கொடுத்தது. நிஷா கவிதாவை பார்த்து ஜெயம் நமக்கே என்பதுபோல் கை காட்டினாள் மற்றவர்களுக்கு தெரியாமல் . ஆனால், ராமலிங்கத்தின் வார்த்தைகள் கமலத்தின் கோபத்தை அதிகப்படுத்தியது. கொதிக்கின்ற எண்ணெயில் பனியாரத்தை போட்டதுபோல் ஆகிவிட்டது.



"உங்க அம்மா, அப்பா எங்க இருக்காங்க?"வினாவினார் ராமலிங்கம் ஆர்வத்தோடு.



"அப்பா... முன்பு tourism boardல வேலை பாத்தாரு... அதிக நாட்கள் இந்தியாவுல தான் அவருக்கும் வேலை.டெல்லி ரொம்ப பிடிச்சு போனதுனால. இப்ப retire பண்ணிட்டு டெல்லியில தான் இருக்காரு...." என்றான் விலியம்.



"அட இங்க பாருடா... அடுத்த ஆச்சிரியத்த.... என்ன விலியம் இது ரொம்ப surprisingஆ இருக்கு...." ராமலிங்கத்திற்கு முகத்தில் ஆனந்தம் தாண்டவம் ஆடியது.



"உங்க அம்மா அவர்கூட இருக்காங்களா?" என்று ராமலிங்கம் கேட்டதற்கு விலியமின் முகம் சற்று வாடி போனது. உடனே கவிதா பதில் அளித்தாள்,



"இல்ல அப்பா... அவங்க அம்மா...இறந்துட்டாங்க... விலியம் பொறந்தப்ப, அவங்களுக்கு கொஞ்ச complications ஆயிட்டு... அதான்..." என்று கவிதாவும் சோகமான குரலில் விடை அளித்தாள்.



"ஓ சாரி விலியம்" என்றபடி ராமலிங்கம் விலியமின் தோள்பட்டையில் தட்டிகொடுத்தார். இவை அனைத்தையும் ஒரு ஓரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்த கமலத்திற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. தன்னை ஓரம்கட்டிவிட்டு, இவர்கள் என்ன இப்படி கூத்து அடிக்கிறார்கள் என்பதுபோல் முறைத்து பார்த்தார் மூவரையும்!



"உங்க அப்பா, அண்ணே... நம்பர கொடுங்க...சீக்கிரமாவே பேசிடுவோம்." வாய்விட்டு சிரித்துகொண்டே இலையில் உள்ள வடையை வாயில் திணித்தார் ராமலிங்கம்.



சிறிது நேரத்தில் நிஷாவும் விலியமும் கிளம்பினார்கள். "தேங்கஸ் அங்கிள்... எல்லாத்துக்கும்" புன்னகையித்தார் விலியம் தனது ஷூவை மாட்டியவாறு.



"அப்பரம் ஆண்ட்டிய...." என்று இழுத்தான்.



"don't worry...அவள நான் சமாளிச்சுக்குறேன்" ஆறுதல் வார்த்தைகள் கூறியது கவிதாவிற்கும் விலியமிற்கும் ஆதரவாய் இருந்தது.



அவர்களை வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவர்களை கமலம்,



"எல்லாம் ஒன்னு சேந்துட்டீங்களா? அப்பரம் நான் எதுக்கு... இந்த வீட்டுல...." என்று ஆரம்பித்தார்.



"ஏன்...? அம்மா வீட்டுக்கு போகபோறியாக்கும்...இந்த வயசுல!" என்று கிண்டல் அடித்தார் ராமலிங்கம்.அவரின் கிண்டல் பேச்சு அவளை கோபத்தின் உச்சியின் மேல் உட்கார வைத்தது.

"அவங்க கலாச்சாரம் என்ன, சாப்பாடு பழக்கம் என்ன.... செத்தா கருமாரியலாம் வைப்பாங்களா?" வெறுப்புடன் சீறியவர் முந்தானையால் மூக்கை தொடைத்தார் கமலம்.

"அம்மா... ஏன் மா இப்படி பேசுறீங்க... நான் வாழ போறது பத்தி பேசுறேன்... நீங்க இப்படியலாம் பேசுறீங்க?" அழ ஆரம்பித்தாள் கவிதா.

"இப்படி ஒரு கல்யாணம் நடக்குறதும் கருமாரி பண்றதும் ஒன்னு தான் டி!" தனது ஆத்திரத்தை பாத்திரம் வழிய கொட்டி தீர்த்தாள் கமலம். அழுகை தாங்க முடியாமல் தன் அறைக்குள் சென்று கதவை 'படார்' என்று சாத்திகொண்டாள் கவிதா.

"ஏண்டி... உனக்கு இப்படி புத்தி போகுது... இப்ப விலியம்கிட்ட என்ன குறைய கண்டுபிடிச்சுட்டே.... நல்ல பையன்... தமிழ்ல பேசுறேன்.... வேற என்ன பிரச்சனை உனக்கு. இப்ப காலம் மாறி போச்சு கமலம்.... நம்ம தான் புள்ளைங்கள புரிஞ்சுக்கனும். அவங்க எவ்வளவு டீசண்ட்டா வந்து கேட்குறாங்க... இப்படிப்பட்ட புள்ளைங்கள பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..." என்று பெருமிதம் கொண்ட ராமலிங்கம்,

"சரி... நம்ம பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறவன் இந்தியா தொடர்பு இருக்கனும்னு தானே உன் ஆசை... அதான் நிறைவேறிடுச்சே.....நீ உசலம்பட்டிய தாண்டி வந்து இருக்கீயா... விலியம பாரு... சென்னை, டெல்லின்னு... இந்தியா பத்தி எவ்வளவு சொல்றாரு.... சொல்ல போனால்... தமிழ் பற்றும் இந்தியா நாட்டின் மீது மரியாதையும் நம்மள விட அவருக்கு அதிகமா இருக்கு... அத நீ புரிஞ்சுக்கோ..." கண்டித்தார்.

ராமலிங்கத்தின் பேச்சு பிடிக்காமல் கமலமும் கோபத்துடன் அறைக்கு சென்றார். கவிதாவின் மனகண்ணாடி உடைந்து சுக்குநூறாகி இருக்கும் என்பதை அறிந்தவர், அதை ஒன்று ஒன்றாக ஒட்ட வைக்க முயன்றார். கவிதா அறைக்குள் சென்றார்.

"இங்க பாரு கவிதா... கவலைப்படாதமா... அம்மா கொஞ்ச நாள்ல சரின்னு சொல்லிடுவா...." ராமலிங்கம் அக்கறையுடன் சொன்னது கவிதாவுக்கு கொஞ்சம் தைரியத்தை தந்தது. கண்களை துடைத்தவள்,

"இது நடக்குமாப்பா?"

"நான் நடத்தி காட்டுறேன். காதல்ல தோற்பது எவ்வளவு வலிய கொடுக்கும் என்பது எனக்கு தெரியும்" என்று ராமலிங்கம் கூறிய குரலில் ஒரு வலி தெரிந்தது. இவர்களின் அப்பா-மகள் உறவு நண்பர்கள் போலவே. எல்லாம் விஷயங்களையும், ரகசியங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அவர் சொன்னதற்கு அர்த்தம் அவர் வாலிப வாழ்க்கையிலும் ஒரு முறை 'ஆட்டோக்கரப்' வந்துபோனது. அதை வேறு யாரிடமும் சொன்னதில்லை கவிதாவிடம் தவிர. கமலத்திற்குகூட தெரியாது!

தனது மகளுக்கு 'கவிதா' என்ற பெயர்கூட......

கரக்கெட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.....ராமலிங்கத்தின் காதலியின் பெயர் தான்!

"அப்பா.... ஆனா... அம்மாவ நினைச்சா பயம் இருக்கு..." கவிதாவிற்கு மீண்டும் பயம் கவிகொண்டது.

"இங்க பாரு கவிதா... நீ எப்போதும்போல அவகிட்ட பேசு... ஆபிஸ் போயிட்டு வா.... அவள நம்ம வழிக்கு கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு" புன்னகையித்தார் ராமலிங்கம். 'நன்றி' என்ற வார்த்தையைவிட வேறு ஏதேனும் புனிதமான வார்த்தை இருந்தால் கவிதாவிடம் சொல்லுங்கள். அவளுக்கு அது தேவைப்பட்டது தன் அப்பாவின் பாசத்திற்கு மரியாதை கொடுக்க.

2 வாரங்கள் உருண்டோடின. கமலம் கொஞ்ச நாள் பேசாமல் இருந்தார். பிறகு பேச ஆரம்பித்தார். ஆனால், இந்த விஷயத்தை பற்றி ஒன்றும் பேசவில்லை. ஆனால், பலமுறை சிந்தித்து பார்த்தவர், அவருக்குள்ளே ஒரு மாற்றம் வந்தது. ஆனால், ஏனோ தெரியவில்லை அவரின் ஈகோ சம்மதம் சொல்ல மறுத்தது. பூங்காவில் காலை உடற்பயிற்சிக்கு சென்றபோது, வசந்தாவை பார்த்தாள்.

வசந்தா, "என்ன கமலம், ரொம்ம்ப நாளா ஆள காணும்?" கேட்டார் கமலத்திடம். இருவரும் நடந்துகொண்டே பேசி வந்தனர். கமலம் வீட்டில் நடந்ததை மெகா சீரியல் போல் காட்சியமைப்புடன் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார். எல்லாவற்றையும் கேட்ட வசந்தா வாய்விட்டு சிரித்தார்.

"என்கிட்டயே இத சொல்றீயா... ஹாஹா..." மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தார்.

"இங்க பாரு... என் வீட்டு மருமகள் வெள்ளக்காரி தான்..... நாங்க நல்லா சந்தோஷமா தானே இருக்கோம். எல்லா விஷயங்களயும் கத்துக்குவா என்கிட்ட.... பாத்து பாத்து கவனிச்சுக்குவா எல்லாரையும். பேர புள்ளைங்க நம்ம கலாச்சரத்தையும் அவங்க பண்பாட்டையும் சேர்ந்தே கத்துக்குதுங்க..... போன வருஷம் பாரு.... நாங்க எல்லாரும் அவங்க ஊருக்கு போனோம்.... நம்மள மாதிரியே தான் அவங்களும்...." என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் வசந்தா.

வானவில் மேகங்கள் விலகுவதுபோல், கமலத்தின் மனதில் எழுந்த குழப்பங்கள் சற்று மெதுவாய் ஒவ்வொன்றாய் விலகினாலும் ஈகோ வில்லன் போல் நின்றது.

"அப்படின்னா.... இதுக்கு என்னைய சம்மதிக்க சொல்றீயா...." கமலம் குழப்பத்துடன்.

"அது உன் மனச பொருத்தது..... இங்க பாரு கமலம்... நல்லவங்க யார இருந்தாலும் கட்டிகொடுத்துட வேண்டியது தானே... அப்பரம் என்ன குழப்பம். நான் உன் நிலைமையில இருந்தேனா... சரின்னு தான் சொல்லுவேன். அந்த பையன்கிட்ட திருப்பி பேசி பாருங்க... அவன் அப்பா அண்ணன்கிட்ட பேசுங்க.... எல்லாருக்கும் பிடிச்சுருந்தா... உடனே கல்யாணத்த பண்ணிட வேண்டியது தானே?" என்றார் வசந்தா.

இருவரும் 3 கிலோ மீட்டர் நடந்து முடிந்தபின் வசந்தா, "சரி கமலம்... நான் கிளம்புறேன்... மருமக church போனும்னு சொன்னா... பேர புள்ளைங்கள போய் பாத்துக்கனும்... நான் கிளம்புறேன். சீக்கிரமாவே எனக்கு உன் மக கல்யாண பத்திரிக்கைய கொடு" என்றார்.

யோசித்து கொண்டே வீடு திரும்பிய கமலம் எதிரே வரும் மோட்டார் சைக்கில் வருவதை பார்க்கவில்லை.....
(பகுதி 4)

11 comments:

புதியவன் said...

//தனது மகளுக்கு 'கவிதா' என்ற பெயர்கூட......

கரக்கெட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.....ராமலிங்கத்தின் காதலியின் பெயர் தான்!//

இது ஊரறிந்த ரகசியம் தானே...

புதியவன் said...

//'நன்றி' என்ற வார்த்தையைவிட வேறு ஏதேனும் புனிதமான வார்த்தை இருந்தால் கவிதாவிடம் சொல்லுங்கள். அவளுக்கு அது தேவைப்பட்டது தன் அப்பாவின் பாசத்திற்கு மரியாதை கொடுக்க.//

ம்ம்ம்...நெகிழ்வான வரிகள்...கதையின் அடுத்த
பகுதிக்காக காத்திருக்கிறேன்...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

FunScribbler said...

@புதியவன்

//ம்ம்ம்...நெகிழ்வான வரிகள்//

நன்றி. உங்க பாராட்டுகள் பெரும் ஆதரவாக உள்ளது:)

Anonymous said...

அருமையான கதை... அடுத்த பாகத்துக்கு வைடிங்!!

Karthik said...

//"நான் நடத்தி காட்டுறேன். காதல்ல தோற்பது எவ்வளவு வலிய கொடுக்கும் என்பது எனக்கு தெரியும்"

இந்த கதைக்கு இப்படி ஆங்கிள் நான் எதிர்பார்க்கவே இல்லைங்க. :)

ம்ம், கலக்கலா போய்க்கிட்டிருக்கு. நெக்ஸ்ட்..?

priyamudanprabu said...

///
இஞ்சியை அப்படியே காம்பளான் மாதிரி விழுங்கியதுபோல் சிலையாய் நின்றுவிட்டார் கமலம்.
////

அச்சிச்சோ
இதை எப்படி யோசிச்சிங்க???
நீங்க விழுங்கியதுண்டா??

அஷ்வின் நாரயணசாமி said...

"இப்ப காலம் மாறி போச்சு கமலம்.... நம்ம தான் புள்ளைங்கள புரிஞ்சுக்கனும். அவங்க எவ்வளவு டீசண்ட்டா வந்து கேட்குறாங்க... இப்படிப்பட்ட புள்ளைங்கள பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..." என்று பெருமிதம் கொண்ட ராமலிங்கம்," ரொம்போ நல்லா இருக்கு...வரிகள்....... அடுத்த பகுதி ரெடி ஆயிடுச்ச... ஆர்வம் தாங்கமுடியல்...
வாழ்த்துக்கள்

FunScribbler said...

@புவனேஷ்

//அருமையான கதை... அடுத்த பாகத்துக்கு வைடிங்!//

வருது வருது...:)

FunScribbler said...

@பிரபு

//நீங்க விழுங்கியதுண்டா??//

ஹாஹா... அப்படியலாம் பண்ணது இல்ல.

FunScribbler said...

@அஷ்வின்

//ரொம்போ நல்லா இருக்கு...வரிகள்//

நன்றி அஷ்வின்:)

Revathyrkrishnan said...

//தனது மகளுக்கு 'கவிதா' என்ற பெயர்கூட......

கரக்கெட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.....ராமலிங்கத்தின் காதலியின் பெயர் தான்//

ஹா ஹா ஹா... எல்லா டாடீஸுக்கும் ஒரு ஆட்டோக்ராப் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?