கவிதா தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து, புதிதாக 'வெடி'த்திருக்கும் முகப்பருவிற்கு மருந்து போட்டு கொண்டிருந்தாள். "ச்சே.. இந்த பிம்பல்ஸ் எங்கேருந்து வருதோ தெரியல.. ச்சே.. ஏன் தான் வருது" என்று எரிச்சலுடன் தனக்குதானே பேசி கொண்டதை கேட்டுவிட்டார் கவிதாவின் அம்மா கமலம்.
கவிதாவிற்கும் அவள் அம்மாவிற்கும் எதற்கு எடுத்தாலும் ஒரு கருத்து முரண்பாடு இருக்கும். சில சமயம் கமலம் சொல்வது நியாயமாக இருக்கும். சில சமயம் கவிதா சொல்வது அதைவிட நியாயமாக இருக்கும்.
கவிதா கண்ணாடிமுன் நின்று முனுமுனுத்ததை கேட்ட கமலம் "அதலாம்... கல்யாணத்திற்கு அப்பரம் போயிடும்... உங்க அத்தைக்கும் இப்படிதான் இருந்துச்சு..இப்போ எப்படி நல்லா இருக்கா தெரியுமா?" என்றார் கமலம்.
எங்கே சுற்றி எங்கு வருகிறாள் என்பது கவிதாவிற்கு புரிந்துவிட்டது. மறுபடியும் கல்யாண பேச்சை ஆரம்பித்துவிட்டார் என்பதை அறிந்துகொண்டாள் கவிதா. இதை பற்றி பேசாத நாளே இல்லை. கவிதாவிற்கு வயது கூடிகொண்டே போகிறது, அதற்குள் ஒரு கல்யாணத்தை முடித்து வைக்கவேண்டும் என்பது கமலத்தின் ஆசை.
கவிதாவிற்கு ஒரு நல்ல இடமாக பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிட்டாள் தனது கடமை முடிந்துவிட்டது என்று எண்ணினார் கமலம். ஆனால், கவிதாவிற்கு கல்யாணத்தில் தற்போது நாட்டமில்லை என்பதைதான் அவள் அடிக்கடி கூறி வந்தாள்.
சோபாவில் உட்கார்ந்து செய்திதாள் படித்து கொண்டிருந்தார் கவிதாவின் தந்தை ராமலிங்கம்.
"சரி மா... மறுபடியும் ஆரம்பிக்காதே.. நான் ஆபிஸ்க்கு போறேன். டைம் ஆச்சு" என்று கைபையையும் மடிகணினியையும் எடுத்துகொண்டு அவசரமாக 'போயிட்டு வரேன்ப்பா' என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
அவள் சென்ற பிறகு, "ஏன்னுங்க.. இவ இப்படி பேசிகிட்டு இருக்காளே.. நீங்க ஒன்னும் சொல்ல மாட்டீங்களா... " என்று கோபத்துடன் சொன்னார் கமலம்.
"என்னடி பண்ண சொல்லுறே... விட்டு புடிப்போம்.. ஆடுற மாட்ட ஆடி தான் கறக்கணும்.. பாடுற மாட்ட பாடி தான் கறக்கணும்" என்று சொல்லி கொண்டே செய்தித்தாளின் அடுத்த பக்கத்தை திருப்பினார்.
"ஆமா... இவரு பெரிய ராமராஜன்... " என்று முணுமுணுத்து கொண்டே ராமலிங்கம் குடித்து முடித்த காபிகுவளையை எடுத்து கொண்டு சமையலறை சென்றார் கமலம்.
"ஷெண்மகமே, ஷெண்மகமே..." என்று பாட தொடங்கினார் ராமலிங்கம்.
"இப்ப எதுக்கு தேவையில்லாம பாடுறீங்க?" என்றார் கமலம்.
"நீதான் டி சொன்ன நான் ராமராஜன் மாதிரி!" என்றவர் கண்ணாடியை சரி செய்து கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தார். அவ்வளவு சத்தமாக முணுமுணுத்துள்ளார் கமலம்!
அலுவலகத்தை வந்து அடைந்ததும் அவள் முதலில் பார்ப்பது நிஷாவைதான்! நிஷா அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் கவிதாவின் தோழி. ரொம்ப கலகலப்பாக பேசும் தன்மை கொண்டவள். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவளை பார்த்துவிட்டு தான் தனது வேலையை ஆரம்பிப்பாள் கவிதா. வழக்கம்போல நிஷா காலை உணவு அருந்தும் இடத்தில் ஒரு கையில் காபியும் இன்னொரு கையில் ரொட்டியையும் வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள். அங்கு இருந்த தொலைக்காட்சியில் பிபிசி நியூசை பார்த்து கொண்டே சாப்பிட்டாள்.
"ஹாலோ நிஷி, குட் மார்னிங். என்ன காலையிலே டிவியா?" என்று கவிதா coffee dispenser-லிருந்து சூடான காபியை எடுத்தாள்.
"இல்லடி, காலையில ரொட்டியும் காபியும் தான்!" என்றாள் நிஷா.
நிஷா சொன்னதை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தாள் கவிதா. "சரியான மொக்கை டி நீ..." என்று சொல்லியவாறு நிஷா அருகில் வந்து உட்கார்ந்தாள்.
காலையில் கமலத்தோடு நடந்த சின்ன சண்டையை நிஷாவிடம் கூறினாள். அமைதியாக கேட்ட நிஷா சீரியஸான குரலில், "நீ உன் அம்மாகிட்ட உடனே சொல்லிடனும்.... இல்லேன்னா ரொம்ம்ம்பா கஷ்டமா போயிடும். "
"ஏண்டி நீ வேற வெந்த புண்ணுல ஆசிட் ஊத்துற?" என்றாள் கவிதா சற்று பயம் கலந்த கவலையான குரலில்.
"ஏண்டி, பயப்படுறே...நல்ல பையன், அழகானவன்...நிறைய படித்தவர்...நல்ல வேலை பாக்குறார்... நம்ம எம்.டியை தான் காதலிக்குற...அவரும் நீயும் 3 வருஷமா காதலிக்குறீங்க....நல்ல பாத்துப்பாருன்னு... பட்டுன்னு போட்டு உடைச்சுட்ட வேண்டியது தானே! சோ சிம்பல்..." என்றாள் நிஷா.
"எங்க அம்மா ருத்தர தாண்டவமே ஆடிடுவாங்க..." பயத்துடன் கவிதா.
"ஏன் ஆண்டி, நான் கடவுள் ஆர்யாகிட்ட training போனாங்களா என்ன?" சிரித்துபடி தன் காபியை குடித்தாள்.
"hey be serious nisha. எனக்கு உண்மையாவே பயமா இருக்கு.... என் அப்பாவகூட ஒரு வழிக்கு கொண்டு வந்துடலாம். ஆனா என் அம்மா தான்...ஐயோ நினைச்சாவே உள்ளே இருக்குற கிட்னியலாம் வெளியே வந்துடுற மாதிரி இருக்கு..." சொன்னாள் கவிதா, பக்கத்திலுள்ள டிஷுபேப்பரை எடுத்து விரல்களை துடைத்தார்.
"ஏய் தோடா... என்னைய சீரியஸா இருக்க சொல்லிட்டு, நீ காமெடியா பேசுற" என்ற நிஷா, ஆபிஸுக்குள் நுழைந்த எம்.டியை பார்த்தவுடன்
"ஏய்... உன் ஆளுக்கு ஆயிசு நூறு... சரிடி இனி எனக்கு என்ன இங்க வேலை.. நான் கேபினுக்கு போறேன்" என்று கண் சிமிட்டினாள்.
எம்.டியும் கவிதாவும் ரொம்ப நேரம் இந்த விஷயத்தை பற்றி பேசினர். எம்.டி முகத்தில் கொஞ்சம் சோகம், கல்யாணம் பேச்சு என்பதால் கொஞ்சம் சந்தோஷம், கவிதா மனதில் உள்ளது போலவே கொஞ்சம் பயம், அவன் முகத்தில் மாறி மாறி சென்றன.
இருவரும் பேசி கொண்டிருந்தபோது நிஷா வந்து, "sorry guys..... the clients are waiting at the conference room." என்றாள்.
நான் உடனே வருகிறேன் என்பதுபோல் கையசைத்தான் எம்.டி.
conference roomக்குள் நுழைந்தவன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்,
"hi, I am Mr William Wong."
என்னது wongஆ??
ஆமாங்க, கவிதா காதலிப்பது ஒரு சீனரை!
மதிய உணவு உண்ணும் நேரம் வந்தது. தனது வேலையை மும்முரமாக பார்த்து கொண்டிருந்தாள் நிஷா. அவள் கேபினுக்கு வந்தாள் கவிதா.
"ஏய் நிஷி...என்னய்யா...சாப்பிட போகாமா..இப்படி வேலையே செஞ்சுகிட்டு இருக்கே?" அக்கறையுடன் வந்து நிஷா அருகே காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
ஏதோ ஒன்றை அவசரமாக டைப் செய்து கொண்டிருந்தவள் கவிதாவைப் பார்த்து, "என்ன கவி, ஒன்னுமில்லாம நீ ஊத்துவத்தி ஏத்த மாட்டீயே? சொல்லு... நான் என்ன செய்யனும்?"
கவிதா சிரித்த முகத்துடன் "சோ...ஸ்மார்ட். நீ ஒரு உதவி பண்ணனும்..." என்று இழுத்தாள். தொடர்ந்து சொல்லுமாறு நிஷா கவிதாவின் கை மேல் கை வைத்தாள்.
"நான் அம்மா அப்பாகிட்ட சொல்லிடலாம்னு இருக்கேன்."
(பகுதி 2)
12 comments:
வாவ், எப்பங்க எழுதினீங்க? பார்க்கவே இல்லை.
சரி சரி, கவிதாவை சீக்கிரம் சொல்லச் சொல்லுங்க.
:)
@கார்த்திக்
//வாவ், எப்பங்க எழுதினீங்க?//
நேத்திக்கு தான்..:)
//நான் உடனே வருகிறேன் என்பதுபோல் கையசைத்தான் எம்.டி.
conference roomக்குள் நுழைந்தவன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்,
"hi, I am Mr William Wong."
என்னது wongஆ??
//
எதிர் பாராத திருப்பம்...முதன் முதலாக உங்கள் தளம் வருகிறேன்...எழுத்து நடை அழகு...
//மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)//
என்ன ஒரே மிரட்டலா இருக்கு...?...மிரட்டலுக்கு பயந்து இல்ல...கதை நல்லா இருந்ததால ஓட்டு போட்டுட்டேன்...
@புதியவன்
//எதிர் பாராத திருப்பம்...முதன் முதலாக உங்கள் தளம் வருகிறேன்...எழுத்து நடை அழகு...//
நன்றி புதியவன்.:)
//கதை நல்லா இருந்ததால ஓட்டு போட்டுட்டேன்...//
உங்கள் வீட்டுக்கு ஒரு பொட்டலம் கோழி பிரியாணி வரும்.:)
//Thamizhmaangani said...
@புதியவன்
//கதை நல்லா இருந்ததால ஓட்டு போட்டுட்டேன்...//
உங்கள் வீட்டுக்கு ஒரு பொட்டலம் கோழி பிரியாணி வரும்.:)//
ஐயோ தமிழ்...நான் சுத்த சைவம்...
@புதியவன்
//ஐயோ தமிழ்...நான் சுத்த சைவம்...//
யாருப்பா அங்க, பார்சல் கேன்சல். ஒரு vegetable briyani அனுப்புங்கோ புதியவனுக்கு:)
ஹாய் காயத்ரி...
கல்யாணத்துக்கும் முகப்பருவுக்கும் என்னங்க சம்பந்தம்? எல்லா அம்மாக்களும் ஒரே டயலாக் தான் சொல்றாங்க? கவிதா இதுக்கு ஏதாவது கவுன்ட்டர் கொடுத்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பேன்.......
நல்ல திருப்பம் காயத்ரி....
@ரீனா
//கல்யாணத்துக்கும் முகப்பருவுக்கும் என்னங்க சம்பந்தம்? எல்லா அம்மாக்களும் ஒரே டயலாக் தான் சொல்றாங்க? கவிதா இதுக்கு ஏதாவது கவுன்ட்டர் கொடுத்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பேன்.......//
எல்லாம் அம்மாக்களும் அப்படி தானே! அதுவும் உண்மை தான். கவிதா இப்போ கல்யாண வேலையில பிசி. அவங்க கவுண்ட்டர் கொடுக்குறாங்களோ இல்லையோ... நான் இத பத்தி ஆராய்ச்சி செஞ்சு சொல்லிடுறேன்:) :)
Post a Comment