"ஏய் வெரி குட். நல்ல முடிவு. கவலைப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும்." நிஷா புன்னகையித்தபடி தொடர்ந்து டைப் செய்ய தொடர்ந்தாள்.
"வர ஞாயிற்றுக்கிழம... விலியம வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன்...சோ....நீயும் வரனும்!" என்று ஆர்டர் செய்தாள் கவிதா.
கணினியின் மேல் உள்ள பார்வை கவிதாவின் முகத்திற்கு திருப்பி, ஆச்சிரியத்துடன் வாயை பிளந்தாள் நிஷா. "என்னது நானா???? எதுக்குடி.... ஆண்ட்டி என்னைய போட்டு சாத்து சாத்துன்னு சாத்தவா...."
கவிதா சோகமாக "என்னடி... நீ தானே எனக்கு தைரியம் சொன்னே...."
"அது உனக்கு தைரியம் சொல்றதுக்காக சொன்னேடி... அதுக்கு போய் என்னையும்... ஐயோ ஆண்ட்டிய நினைச்சாவே... எனக்கு பயமா இருக்குதடி... நான் வரலப்பா... நீயாச்சு அவங்களாச்சு... ஆள விடு ஆத்தா." என்றாள் நிஷா.
"ஏய்... நீ ஒன்னும் செய்ய தேவையில்ல. நீ சும்மா வீட்டுக்கு வா. என் ஆபிஸுல வேலை பாக்குறவங்களுக்கு சின்ன lunch gatheringனு சொல்லி இருக்கேன். நீ வா...வந்து சாப்பிடு.... என் பக்கத்துல இரு. மத்தத நான் பாத்துகிறேன். i just need your presence and support." கெஞ்சினாள் கவிதா.
அவள் கெஞ்சலுக்கு முடியாது என்று சொல்ல மனமில்லை நிஷாவுக்கு. ஒரு வழியாக ஒப்புகொண்டாள்.
"நீ என்னைய close friend close friendனு அடிக்கடி சொல்லுவியே... அதுக்கு இப்ப தாண்டி அர்த்தம் புரியது?" நிஷா புதிர் போட்டாள்.
என்ன என்பதுபோல் தலை அசைத்தாள் கவிதா. "என்னைய close பண்ண போற friend நீ தானு.. இப்ப தான் தெரியுது... என் அம்மாவுக்கு நான் ஒரே இரண்டாவது புள்ள டி..... " கிண்டல் செய்தாள் நிஷா. கவிதா அவள் தோளில் செல்லமாக அடித்து நன்றி கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.
ஞாயிற்றுக்கிழமை ஒரு 'சனி' கிழமையாக மாற போவது என்று தெரியாமல் ராமலிங்கம் கவிதாவை அன்று காலையில் கேட்டார், "என்ன கவி, திடீரென்னு lunch gathering வச்சு இருக்கே..."
"ஒன்னுமில்லப்பா சும்மா தான்." என்று பதில் அளித்தார் கவிதா, சோபாவை சுத்தம் செய்தபடி. பெண்கள் ஒன்றும் இல்லை என்று சொன்னால், அதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது எழுதப்படாத சட்டம். அந்த சட்டம் தன் கடமையை செய்தது. ஆம், மணி 1 ஆகிவிட்டது. விலியம் மற்றும் நிஷா வீட்டிற்கு வந்தனர்.
நிஷாவால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. முகத்தில் கொஞ்ச பயம், கவலை. விலியமுக்கும் இந்த ப்ளான் தெரியும். அவனுக்கும் கொஞ்ச பயம் இருந்தது. இருந்தாலும், தைரியமாக இருந்தான். நிஷாவை கவிதாவின் பெற்றோர்களுக்கு நன்கு தெரியும் என்பதால், நிஷா சமையலறைக்குள் புகுந்து கமலத்திடம் நலம் விசாரித்தாள் கொஞ்சம் அரை அடி தள்ளி நின்றவாரே.
விலியம் முதன் முதலாக சந்திக்கிறான் அவனது மாமானர் மாமியாரை. கவிதா அவள் பெற்றோரிடம், " அம்மா, அப்பா... இவர் தான் எங்க எம்.டி....மிஸ்டர் விலியம் வாங்." அறிமுகப்படுத்தினாள். கமலத்திற்கு அவ்வளவு ஆங்கிலம் தெரியாது என்பதால் விலியமிடம் அதிகமாக பேசவில்லை. ராமலிங்கமும் விலியமும் சோபாவில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.
நிஷாவும் கவிதாவும் அறைக்குள் சென்று ஒரு முறை ஒத்திகை பார்த்தனர். கவிதா, "ஏய் நிஷா... நான் இப்ப...சமையலறைக்குள்ள போவேன்...ஹாலில் உள்ள அப்பாவ கூப்பிடுவேன்.. அவர் சமையலறைக்குள்ள வருவார்... நீ போய் அந்த நேரத்துல சோபாவுல உட்கார்ந்து விலியமிடம் பேசிகிட்டு இரு. நான் அவங்ககிட்ட விஷயத்த சொல்லிடுறேன்..." என்று கடகடவென்று ஒப்பித்தாள்.
சாமி பாடல்களை பாடியவாறு நிஷா பிராத்தனை செய்து கொண்டிருந்தாள்.
"ஏய்... நான் இங்க சீரியஸா சொல்லிகிட்டு இருக்கேன்.. நீ என்ன பஜனை பாடிகிட்டு இருக்கே.... " நிஷாவின் முதுகில் அடித்தாள் கவிதா.
"எனக்கே நான் தைரியம் சொல்லிக்கிறேண்டி..." தொடர்ந்து பாடிய நிஷா,
"கவி, சாப்பிட்டு முடிச்ச பிறகு, சொல்லேன்... "மன்றாடினாள் நிஷா.
"நோ....இப்ப தான்... நல்ல நேரம்...." என்று கூறிய கவிதா மறுபடியும் ப்ளானை தனக்குள்ளே ஒப்பித்து கொண்டாள்.
"ச்சே.... இதுக்கு போய் நல்ல நேரமா...." வினாவினாள் நிஷா.
"எனக்காக இல்லடி... அம்மா இதலாம் பாப்பாங்க... அதுக்கு தான்.....பல்லு விளக்கவே எங்க அம்மா சகுனம் பாப்பாங்கடி.... அதனால தான்...முன்னெச்சரிக்கையா..." சிரித்துகொண்டே கவிதா கூறினாள்.
"tragedyல கூட உனக்கு காமெடி வருது....நீ நல்லா இரு!" என்று சலித்து கொண்டாள் நிஷா. நேரம் கிட்ட நெருங்க, நிஷாவுக்கு நரக வாசல் திறப்பதுபோல் காட்சி கண்களில் வந்து வந்து போனது. இந்த ப்ளானுக்கு நீயும் உடந்தயா என்று கமலம் நிஷாவின் கால்களை சூப் வைத்துவிடவாங்களோ என்று நிஷாவிற்கு பயம் எவர்ஸ்ட்டையும் தாண்டி சென்றது.
ப்ளான் ஆரம்பமானது.
ராமலிங்கமும் கமலமும் சமையலறையில். விலியமும் நிஷாவும் சோபாவில். இவர்கள் இருவரும் படபடப்புடன்.
"அம்மா, அப்பா... நான் ஒன்னு சொல்லனும்....." தயங்கினாள் கவிதா.
"அம்மா...அப்பா..... விலியம நான் காதலிக்கிறேன். அவர கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்." என்று போட்டு உடைத்தாள் கவிதா.
நிஷா கண்களை இறுக்க மூடிகொண்டாள். வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத உருண்டை உருளுதடி என்று வைரமுத்து சாதாரணமாக எழுதிவிட்டார். ஆனா, நிஷாவுக்கு அச்சமயம் இரண்டாயிரம் உருண்டைகள் உருளும் உணர்வால் சுருங்கி போனாள்.
ஆச்சிரியம், அதிர்ச்சி, கோபம்!- கமலம் ஒரு நிமிடம் ஆடி போனாள். "என்னடி சொன்னே..." என்று கவிதாவை அறைய கை ஓங்கினாள். கமலத்தை தடுத்து நிறுத்தினார் ராமலிங்கம்.
"இப்போ எதுக்கு நீ ஓவர் ரிஆக்ட்டு பண்ணுற... பொண்னு ஆசைப்பட்டு இருக்கா... நம்மகிட்ட டிசெண்ட்டா சொல்லுறா..." என்றார் ராமலிங்கம். தன் அப்பா இவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்வார் என்பதை சற்றும் எதிர்ப்பார்க்காத கவிதாவிற்கு ஆனந்தம் ஒரு பக்கம். ஆனால், கமலத்தை நினைத்து வருத்தம் ஏற்பட்டது.
"என்னங்க...சொல்றீங்க.... இவ காதல் கத்திரிக்கான்னு பேசுறா... அதுவும்.. ஒரு...ச்சீ..." என்று விலியமை அருவருப்பாய் எண்ணினாள் கமலம். அப்போது கவிதா அடைந்த துயரம் அவளைவிட உயரம். இவர்கள் போடும் கூச்சல் ஏதோ ஓர் அளவுக்கு நிஷா மற்றும் விலியம் காதுகளில் கேட்டது.
கமலத்தின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் விழுந்தது.
"சரி சரி... முதல சாப்பாடு.. போடு.. அப்பரம் பேசிக்கலாம்...." என்று கவிதாவையும் கமலத்தையும் சமாதனப்படுத்தினார் ராமலிங்கம்.
கவிதா, " அப்பரம் இன்னொரு முக்கியமான விஷயம்... அவருக்கு...." என்று தொடர்ந்தவளை,
"சும்மா நிறுத்து...நீ ஒன்னும் சொல்லாத" என்று கவிதாவின் வாயை அடைத்தார் கமலம். தான் சொல்ல வந்ததை மறுபடியும் தொடர ஆரம்பித்தார் கவிதா. ஆனால் ராமலிங்கம்,
"பரவாயில்ல கவிதா....எல்லாம் அப்பரம் பேசிப்போம்...." என்றார். கமலம் கவிதாவை பார்க்க விருப்பம் இல்லாமல் அவளிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சமையலறையிலிருந்து வெளியே வந்தவர்களின் முகத்தில் பலவிதமான உணர்ச்சிகளை பார்த்தனர் நிஷாவும் விலியமும்.
நிஷா கமலத்தை பார்த்து, "ஆண்ட்டி..." என்றாள் மெதுவாக.
"என்ன மா நீயும் என் புள்ளைய இப்படி விட்டுட்டீயே..." என்று வருத்தப்பட்டார் கமலம்.
கமலத்திற்கு உணவு உபசரிக்கவே பிடிக்கவில்லை. விலியம் முகத்தை பார்த்து முறைத்தவாரே சாதத்தை கொட்டினாள் அவனது இலையில். நிஷாவுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது. கவிதாவிற்கும் சாப்பிட மனமில்லை. ராமலிங்கம் மட்டும் எப்போது போலவும் சாப்பிட்டார். விலியமை நிறைய சாப்பிட சொல்லி உபசரித்தார். விலியமுக்கும் ஒரு மாதிரியாய் இருந்தது.
கோபத்தில் விலியமை திட்டவேண்டும் என்று இருந்தது கமலத்திற்கு. என்ன சொல்வது என்று தெரியாமல், விலியமை பார்த்து, "you... know....we...taj mahal...INDIA." என்று இந்தியர் பெருமையை எடுத்து சொல்வதற்காக திடீரென்று உறக்க சொன்னார் கமலம், குறிப்பாக 'இந்தியா' என்ற சொல்லை மட்டும் சத்தமாக சொன்னார்.
திடுக்கிட்டு போன விலியம், இலையில் இருந்த பார்வையை கமலத்தின் பக்கம் திருப்பினார். விலியம்," yes aunty, we have great wall of china too." என்று நெத்தியடி அடித்தான்.
சரியான போட்டி என்பதுபோல் ராமலிங்கம் வாய்விட்டு சிரித்தார். நிஷாவுக்கும் சிரிப்பு அடக்கமுடியவில்லை. கவிதாவும் சிறியதாய் புன்னகையித்தார்.
நெத்தியடியின் வலி தாங்காமல், " இவங்க fishball noodlesக்கும் நம்ம ஊரு கருவாட்டு குழம்புக்கும் சரிப்பட்டு வராதுங்க! " கமலம் சாத சட்டியை மேசையில் போட்டார்.
"எனக்கு கருவாட்டு குழம்பும் பிடிக்கும் ஆண்ட்டி." என்றார் விலியம் தமிழில்!!!!!!!!
(பகுதி 3)
8 comments:
அன்புள்ள நண்பர் / தோழி:
(உங்கள் பெயர் கூட எனக்கு தெரியாது)
நான் உங்கள் வலைபூவை மிகவும் ரசிக்கும் ஒரு தோழன். உங்கள் பதிவுகளை ஒன்று விடமால் படித்திருக்கிறேன். அனைத்தும் சாபஷ் என்று தான் சொல்லுவேன்.இத்தனை நாள் எதோ சில காரணகளால் உங்கள் பதிவுகளுக்கு கருத்து சொல்ல முடியவில்லை. இருந்தாலும் நிங்கள் இப்போழுது எழுதி கொண்டிருக்கும் இந்த கதை சற்று சமிபத்தில் வெளிவந்த "அபியும் , நானும் " திரைப்படம் சாயலாக உள்ளது என்று நான் கருதுகிறேன். இத்தனை நிங்கள் தவறகவும் எடுத்து கொள்ளபடலாம் என்றும் நினைக்கிறேன். அப்படி என்றால் என்னை மன்னிக்கவும்..
என்றும் உங்கள் பதிவுகளை படிக்கும் நண்பன்
அஷ்வின்
@அஷ்வின்
//உங்கள் பெயர் கூட எனக்கு தெரியாது//
profileல போய் பார்த்தா தெரிஞ்சுடுமே!:)
//நான் உங்கள் வலைபூவை மிகவும் ரசிக்கும் ஒரு தோழன். உங்கள் பதிவுகளை ஒன்று விடமால் படித்திருக்கிறேன். அனைத்தும் சாபஷ் என்று தான் சொல்லுவேன்//
ஆஹா...மிக்க மகிழ்ச்சி:)ரொம்ப நன்றி:)
//இத்தனை நாள் எதோ சில காரணகளால் உங்கள் பதிவுகளுக்கு கருத்து சொல்ல முடியவில்லை//
it's ok பரவாயில்ல.
//அபியும் , நானும் " திரைப்படம் சாயலாக உள்ளது என்று நான் கருதுகிறேன். இத்தனை நிங்கள் தவறகவும் எடுத்து கொள்ளபடலாம் என்றும் நினைக்கிறேன். அப்படி என்றால் என்னை மன்னிக்கவும்.//
ச்சே ச்சே, இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்க... no problem. நான் எழுதும்போது அப்படி தோணல. ஆனா அந்த படத்தை பார்த்தபிறகு வந்த பாதிப்பு என்றும் சொல்லமுடியாது. இந்த கதை ஒரு சின்ன சம்பவத்தால் உருவாக்கப்பட்டது. என்ன என்பதை கடைசியில் சொல்கிறேன்.
எனினும் உங்களது ஆதரவுக்கு நன்றிங்கோ:)
Next part plzzz!!
ஆஹா, தலைப்பு ஏன்டா இப்படி இருக்குனு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் புரிஞ்சது. :)
//அப்போது கவிதா அடைந்த துயரம் அவளைவிட உயரம்.
ம்ம், பின்றீங்க. :)
//அப்போது
கவிதா அடைந்த துயரம்
அவளைவிட உயரம்!!//
கவிதை எல்லாம் சூப்பர்ங்க!!
//"நீ என்னைய close friend close friendனு அடிக்கடி சொல்லுவியே... அதுக்கு இப்ப தாண்டி அர்த்தம் புரியது?" நிஷா புதிர் போட்டாள்.
என்ன என்பதுபோல் தலை அசைத்தாள் கவிதா. "என்னைய close பண்ண போற friend நீ தானு.. //
மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது...
@புதியவன்
//உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது...//
ஏதோ அதவச்சு தான் வாழ்க்கை ஓடுது:)
//கவிதா அடைந்த துயரம் அவளைவிட உயரம்.//
காயத்ரி... எப்படிம்மா இதெல்லாம்? எப்படி?(பி.கு:நடிகர் திலகம் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)
@ரீனா
//காயத்ரி... எப்படிம்மா இதெல்லாம்? எப்படி?(பி.கு:நடிகர் திலகம் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்//
தெரியலப்பு! (தேவர் மகன் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்:)
Post a Comment