Jun 24, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 2)- பகுதி 6

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5

"நீங்களாம் பிரச்சனைய பாக்கெட்டுக்குள்ளே வச்சு இருப்பீங்களா? என்ன கொடுமை ஐயப்பா இது!" என்று வானத்தை பார்த்தாள் கலா.

சுதா பரபரப்பாக தேடி கொண்டிருந்தாள் தனது கைபேசியை. "gone! am dead!" என்றாள் சுதா.

"வீட்டுல சங்கு தான் எனக்கு." சுதா சலித்து கொண்டாள்.

"all the best!" என்றாள் விஜி சுதாவை நக்கல் அடிக்க.

"விடு விடு..... அந்த வெத்தல பெட்டி டப்பா மாதிரி இருக்குற ஃபோன் போனா போகுது புதுசா வாங்கிகலாம். " கிண்டல் அடித்தாள் கலா.

"அதுல என் sweetheart surya படமெல்லாம் இருக்குதுய்யா!" சுதா உருகினாள்.

"அடி பாவி.... உங்க அக்கா முதல் மாச சம்பளத்துல வாங்கி கொடுத்த ஃபோன் போச்சேன்னு கவலைப்படாம.....சூர்யா படம் போச்சேன்னு கவலைப்படுற பாத்தீயா? உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறனால...." என்று கலா வாக்கியத்தை முடிக்க முற்பட்டபோது உடனே சசி,

"மோசமான தமிழ்படம் கூட நல்லா ஓடுது! அது தானே சொல்ல வந்தே. பாஸு பாஸுன்னு build-up கொடுப்பீயே....இந்த டயலாக்க மட்டும் மாத்தவே மாட்டீயா?"

"shut up man! உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறனால தான் பன்றி காய்ச்சல் வருதுன்னு சொல்ல வந்தேன்...." என்றாள் கலா!

விஜி, "வெரி குட் சமாளிfications!" சிரித்தாள்.

ஒரு வழியாய் வீட்டிற்குச் சென்றனர் அனைவரும். சனிக்கிழமையும் வந்தது. சசிக்கு வெட்கம் கலந்த பயமும் வந்தது. சித்தார்த்தை பார்க்க தயாரானாள். மற்ற மூவரையும் அவள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் சந்தித்தாள். அவர்கள் சசியின் அலங்காரத்தை பார்த்து,

"மருமகளே மருமகளே வா வா...." என்று கிண்டல் அடித்து பாடினர்.

சசி அவர்கள் பாடுவதை பொருட்படுத்தாமல், " கேர்ள்ஸ்...எல்லாம் நல்லா இருக்கா...லிப்ஸ்டிக் ஓகேவா?" என்று கையிலும் கழுத்திலும் போட்டிருந்த அணிகலன்களை தொட்டு பார்த்து சரி செய்து கொண்டாள்.

"நான் பாத்து வளந்த குழந்தை இப்போ என்னையவே சரி பாக்க சொல்லுது?" என்று பாட்டி போல் பெருமூச்சு விட்டாள் கலா.

"என்ன கலா, சசி dating போறான்னு உனக்கு பொறாமையா? is fire burning in your stomach?" சுதா கேட்டாள்.

"ஐயோ இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா...எந்த ஆஞ்ஜநயா பக்தையும் dating போக மாட்டாள். அதுவும் இல்லாமல் நான் ரொம்ப decent familyய சேந்து பொண்ணு...இப்படிலாம் பண்ண மாட்டேன்." சிரித்து கொண்டே கலா பதில் சொன்னாள்.

"அப்போ சசி கெட்ட பொண்ணா?" விஜி கேட்டாள்.

"ஐயோ சசி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணு. நாட்டிற்கும் வீட்டிற்கும் இப்படிப்பட்ட பொண்ணு இருந்தா போதும்...கலாச்சாரம் ஓகோன்னு போயிடும்." என்றாள் கலா சிரித்தவாறு.

"ப்ளீஸ் மேன்....சசிய கிண்டல் பண்ணாதீங்க...அப்பரம் குழந்தை அழுதிட போகுது!" சுதா சசிக்கு ஆதரவாய் பேசினாள். பேருந்து வந்தது சசியும் புறப்பட்டு சென்றாள்.

"போறாளே பொண்ணு தாயி...." என்று பாரதிராஜா பட பாடலை பாடிய படி கலாவும் மற்றவர்களும் அவர்கள்தம் வீட்டிற்கு சென்றனர்.

மறுநாள் காலையில் அனைவரும் சுதாவின் வீட்டில் ஆஜரானார்கள். சுதாவின் அறையில் உட்கார்ந்து இருந்தார்கள், ஆனால் சசி மட்டும் இன்னும் வரவில்லை.

"என்ன மேன் இந்த சசி இவ்வளவு லேட் பண்ணுறா? நேத்திக்கு என்ன ஆனுச்சுன்னு கேட்க எவ்வளவு interestingஆ இருக்குறோம்..." கலா கூறினாள்.

"ஆமா ஆமா...பச்சை தண்ணிகூட பல்லுல படாம இருக்குறா கலா, பாவம்!" என்றாள் விஜி.

"ஹலோ எனக்கே வா!" என்றாள் கலா அப்போது சசி சுதாவின் அறைக்குள் நுழைந்தாள்.

"என்ன சசி....ரொம்ப tiredஆ இருக்கே?" என்று 'tired' என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி கூறினாள் கலா. விஜியும் சுதாவும் சிரித்தனர்.

"shut up you woman!" கத்தினாள் சசி.

"சரி, சொல்லு என்ன ஆச்சு நேத்திக்கு....எப்படி இருந்துச்சு dating!" கேட்டாள் சுதா ஆர்வத்தோடு.

"dating இல்ல. outing!" என்று சுதா சொன்னதை திருத்தினாள் சசி.

சுதா, "ஐயோ அதவிடு....எப்படி பேசினான் சித்தார்த்?"

விஜி, "any touching touching?"

கலா, "no no.... i think they did something something." கைகளை அகல விரித்து சத்தம் போட்டு சிரித்தாள்.

சசிக்கு கோபம் வர, "வாய மூடுங்க டி.... he is a gem. he is such a gentleman. உங்கள மாதிரிலாம் இல்ல. அவரு ரொம்ப decent!"

"ஐயோ எனக்கு நெஞ்சு வலிக்குதே!" என்று வேடிக்கையாய் நெஞ்சில் கை வைத்து சாய்ந்தாள் கலா.

சுதா, "ஓய்.... எங்களையே நீ கலாய்க்கிறீயா?"

கலா, "ஒரு ராத்திரில சசி இப்படி மாறிடுவான்னு கொஞ்சம் கூட நினைக்கல....போங்கய்யா...நான் Afghanistanக்கு migrate ஆகிட போறேன்...இந்த கொடுமையலாம் என்னால தாங்க முடியாது!"

விஜி, "சசி, என்ன பண்ணீங்க நேத்து? billiards விளையாட கத்து கொடுத்தாரா?"

கலா, "இல்ல இல்ல....அவரு இவ்வளவு பெரிய decent உத்தமரு. சசி ஒரு உத்தமி. ரெண்டு பேரும் உலக பொருளாதாரம், தீவிரவாதம், தண்ணீர் பிரச்சனை, ozone layer ஓட்டை விழாம எப்படி காப்பாத்தலாம் அப்படின்னு அறிவுபூர்வமாண விஷயங்கள மட்டும் தான் பேசி இருந்திருப்பாங்க.... அப்படி தானே சசி?"

ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து இருந்தாள் சசி.

விஜி, "என்ன சசி, ஒன்னுமே சொல்லாம இருக்குற. கலா உன்னைய இப்படி ஓட்டுறா?"

சசி, "இருக்கட்டும் இருக்கட்டும். அடி படுற கல்லு தான் சிற்பமாகும்."

உடனே கலா, "பாத்து டி கர்பமாகிட போது!"

கலாவின் timing comedyயை கேட்டு அனைவரும் சிரித்தனர். சசி பக்கத்தில் இருந்த தலையணையை கலாவின் முகத்தில் அமுக்கினாள் விளையாட்டாய்.

அச்சமயம் சுதாவின் வீட்டு ஃபோன் ஒலி எழுப்பியது. அறையிலிருந்த மேசையில் ஃபோன் இருந்தது. அதை speaker modeல் போட்டாள்.

"ஹாலோ, யாரு பேசுறது?" என்றாள் சுதா.

"ஹாலோ....இந்த moblie no...." என்றவர் காணாமல் போன சுதாவின் கைபேசி எண்களை சொன்னார்.

"ஆமா அது என்னோட ஃபோன் தான். காணாம போச்சு கொஞ்ச நாளைக்கு முன்னாடி....எங்க கிடைச்சது? எப்படி?" தன் கைபேசி மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் சுதா. விளையாடி கொண்டிருந்த மற்றவர்கள் தொலைபேசி அருகே வந்தனர்.

"ஓ....இன்னிக்கு படம் பார்க்க போன போது, என் seat கீழே இருந்துச்சு.... i think you dropped it. ஃபோன்ல....home அப்படின்னு ஒரு contact நம்பர் இருந்துச்சு...சோ...அதான் ஃபோன் பண்ணி பாத்தேன். உங்க வீட்டு address சொன்னீங்கன்னா....நான் வந்து கொடுத்துடுறேன்...." என்றார் அவர்.

"ஓ...இல்ல பரவாயில்ல....நான் வந்து வாங்கிகிறேன்..." என்றாள் சுதா.

"இல்லங்க பரவாயில்ல.... நான் வீட்டுக்கு போற வழில வந்து கொடுத்துடுறேன்..." என்றார். முகவரியை கொடுத்தபிறகு அவர்,

"சாரி...உங்க பெயரு?"

"ஐ எம் சுதா. நீங்க?" என்றாள்.

"மை நேம் இஸ் ரவி!" என்றதும் சுதா, "ரவியா????"

கண்ணாடி கடையில் கலா சொன்னது ஞாபகம் வந்தது- ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ.

அந்த ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர்.

மறுமுனையில் இருந்த ரவி, "ஹாலோ ஹாலோ....என்ன ஒரே சத்தமா இருக்கு?"

"ஒன்னுமில்ல" என்று சுதா வெட்கப்பட்டாள்.

கலா, "அடே மச்சி, வெட்கப்படுறாளே! மறுபடியும் மறுபடியும் சாச்சுபுட்டான் மச்சான். " என்று சொல்லியபடியே மெத்தையில் விழுந்தாள்.

*முற்றும்*

(இத்துடன் இந்த sequel 2/season 2 முடிச்சுட்டு. ஐயப்பா சாமி...தொடர்கதை எழுதுறது ரொம்ப கஷ்டம்ய்யா! உஷ்ஷ்ஷ்......... ஆபிள் ஜுஸ் ப்ளீஸ்.)

13 comments:

gils said...

vadai enakay

gils said...

soooooper flow :D sirpam garpam semma timing :D

gils said...

athukula kathia mudinjirucha... :( inum oru maasam izhupeenga nanechen :D

Divyapriya said...

//நான் Afghanistanக்கு migrate ஆகிட போறேன்...இந்த கொடுமையலாம் என்னால தாங்க முடியாது!"//

rotfl :D

//உடனே கலா, "பாத்து டி கற்பமாகிட போது!"
//

oh my god!!! chanceless timing :)

என்ன இவ்ளோ சீக்கரம் முடிச்சிட்டீங்க? date ல என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லை :( சரி ஓகே, அடுத்து சுதா+ரவியோட கதைய எப்ப ஆரம்பிக்க போறீங்க?

FunScribbler said...

@gils

வாழ்த்துகளுக்கு நன்றி!:)

//inum oru maasam izhupeenga nanechen :D//

இன்னும் ஒரு மாசமா?? உடம்பு தாங்காதுப்பா!:)

FunScribbler said...

@திவ்யாபிரியா

//என்ன இவ்ளோ சீக்கரம் முடிச்சிட்டீங்க?//

அடுத்த வாரம் காலேஜ் ஆரம்பிக்க போது, so அதுக்குள்ள முடிச்சிட்டா, ஒரு self-satisfaction கிடைக்கும். அதான்...

//date ல என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லை :( சரி ஓகே//

மக்களின் கற்பனைக்கே அதை விட்டுவிட்டேன்.:)

//அடுத்து சுதா+ரவியோட கதைய எப்ப ஆரம்பிக்க போறீங்க?//

ஆஹா...இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மூளைய ரனக்களமா மாத்துறாங்கய்யா!அவ்வ்வ்வ்வ்வ்....கூடிய விரைவில் வரலாம்!:)

ivingobi said...

உங்க பெயரு?"

"ஐ எம் சுதா. நீங்க?" என்றாள்.

"மை நேம் இஸ் ரவி!"

Vaanga Ravi sir aduthathu neengala... ?

date la ena nadanthathu epdi sasi sidharth a Gem nu sonna puriyaliyae.... ivlo nalla kondu poana story a ipdi Quick a mudichuttingalae.... Gayu touch illa pa end la....

Prabhu said...

ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ.///

இந்த கதையில வர்ற எல்லாத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்காம விட மாட்டீங்க போல இருக்கே!

Anonymous said...

என்ன இவ்ளோ சீக்கரம் முடிச்சிட்டீங்க? date ல என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லை :( அடுத்து சுதா+ரவியோட கதைய எப்ப ஆரம்பிக்க போறீங்க?

SO disappointed pa.........

VISA said...

//யப்பா சாமி...தொடர்கதை எழுதுறது ரொம்ப கஷ்டம்ய்யா! உஷ்ஷ்ஷ்......... ஆபிள் ஜுஸ் ப்ளீஸ்.)//தொடருலையே இது தாங்க மாஸ்டர் ஸ்ட்ரோக்.

Gajani said...

but I did not think that u 'll finish this soon , waiting for the sutha + Ravi

Anonymous said...

www.kudikaaran.blogspot.com

sri said...

Nalla ezhudhareenga.. attagasamana nadai and kalkkal comedy, waiting for the next season and all the best for college, nalla enjoy pannunga.. :)