பகுதி 1 பகுதி 2 பகுதி 3
கண்ணாடி கடைக்குள் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு contact lensயை எடுத்து பார்த்து கொண்டிருந்தாள். சசி, "ஏண்டி இதலாம். இந்த கண்ணாடியே போட்டு போனால் என்ன?"
சுதா, "சும்மா இரு மேன். contact lens gives you a glamorous look."
சசி, "அடியே நான் என்ன நமீதாவுக்கு போட்டியா போக போறேன். எனக்கு என்னமோ, நீங்களாம் என்னைய வச்சு காமெடி பண்ணுற மாதிரியே இருக்கு."
சசி சொன்னதை கலா கேட்டுவிட்டாள். கையிலிருந்தவற்றை போட்டுவிட்டு கலா,
"சரி வாங்க...போவோம். சசியே பாத்துகிட்டும்." என்றவுடன் சசி,
"ஏய் ஏய்...சரி சரி...." என்று பவ்யிமாக பதுங்கி போனாள்.
விஜி சிரித்து கொண்டே," அப்படி வா வழிக்கு."
சசி, "ஐஸ்வர்யா ராய் கண்ணு கலரு பச்சை தானே. பச்சை கலரு லென்ஸ் எடுக்கலாமா?" என்றாள்.அவள் பேசியதை கேட்டு மற்ற மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
கலா, "ஒரு படத்துல சத்யராஜ் சொல்வாரு நான் வேணும்னா படிச்சு ஒரு டாக்டராவோ எஞ்ஜினியராவோ ஆகிடுவான்னு. அதுக்கு கவுண்டமணி, அது எப்படி மாப்பிள்ள கொஞ்சம்கூட வெட்கப்படமா பேசிட்டேன்னு. அந்த மாதிரி இருக்கு நீ பேசுறது சசி. அது எப்படி உன்னையும் ஐஸ்வர்யாவையும் compare பண்ணி பேசுற?"
அவர்கள் சசிக்கு ஒரு colourless lensயை தேர்ந்தெடுத்தனர்.
சுதா, "நெக்ஸ்ட் என்ன?"
விஜி, "ஆள் பாதி ஆடை பாதி!"
கலா, "அப்போ சசி பாதி டிரஸோட தான் போகுமா?"
சசி, "அடியே!"
நால்வரும் சாரா பேஷன் கடைக்குள் சென்றனர். சசி மூவரையும் தடுத்து நிறுத்தி ஒரு முக்கியமான கேள்வியை கேட்டாள்,
"ஏய்....நான் இதையெல்லாம் வீட்டுக்கு எடுத்துகிட்டு போனா....ஏன் இப்போ இதையெல்லாம் வாங்கினேன்னு கேட்டாங்ளா என்ன சொல்ல?"
இப்படி ஒரு கேள்வியை கேட்டவுடன் சுதாவும் விஜியும் ஆச்சிரியத்தில் நின்றனர். யாரும் இதை யோசிக்கவில்லையே!
சசிக்கு பயம் கவிகொண்டது, முகத்தில் அச்சம் படர, "என்ன மேன் செய்யுறது?" படபடப்புடன் கேட்டாள்.
கலா, "இந்த கலா இருக்க பயம் ஏன்? நம்ம classல படிக்குறான்ல செந்தில். அவனோட wedding receptionக்கு தான் இந்த புது டிரஸ்ன்னு சொல்லு."
சுதா, "எப்ப டி அவனுக்கு கல்யாணம் ஆனுச்சு?"
கலா, "பொய் மச்சி, பொய்! ஹாஹா...."
விஜி, "நம்ம போதைக்கு மத்தவன் ஊறுகாயா? ம்ம்...நடத்துவோம் நடத்துவோம்!"
கடைக்குள் நின்ற ஒரு பொம்மை போட்டிருந்த உடையை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் சுதா. விஜி மற்ற உடைகளை பார்த்து கொண்டிருந்தாள். சுதா,
"இந்த பொம்மை போட்டிருக்கிற டிரஸ் மாதிரி நம்ம சசிக்கு வாங்கி கொடுப்போமா?"
கலா, "அதுக்கு ஏண்டி காசு கொடுத்து வாங்கனும்? சசி குளிச்சிட்டு துண்ட கட்டிகிட்டு அப்படியே போ சொல்லு. ஒரு செலவும் இல்லாமல் போயிடும்!"
பக்கத்தில் நின்று கொண்டிருந்த சசி கலாவின் கையை கிள்ளினாள்.
“first date போகும்போது ரொம்ப revealing clothes போடகூடாது. அதே நேரத்துல இழுத்து போத்திட்டும் போககூடாது. நல்ல பொண்ணு மாதிரி இருக்ககூடாது, அதே நேரத்துல கெட்ட பொண்ணு மாதிரியும் இருக்ககூடாது….” கலா தனக்குள் ஒளிந்திருந்த ஸ் ஜெ சூர்யாவை தட்டி எழுப்பினாள்.
“ஓ மை காட்….என்ன மேன் சொல்ல வர நீ?” சுதாவின் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.
“எல்லாம் பசங்க சைக்காலஜி. அவங்க மனசு நல்லா இருந்தாலும். அவங்க கண்ணு அலைபாயும். சோ, அதுக்கு ஏத்த மாதிரி டிரஸ் இருக்கனும்.” கலா விளக்கினாள்.
“எப்படி?” விஜி கேட்டாள். கலா பேசுவது பிடிக்காதவள் போல் சசி மற்ற உடைகளை பார்த்து கொண்டிருந்தாலும், கலா என்ன சொல்கிறாள் என்பதை கூர்ந்து கவனித்தாள்.
“no spaghetti , no tube top! short-sleeve dress will be the best. கொஞ்ச low neckஆ இருந்தா போதும்!” என்று கண்களை சிமிட்டினாள் கலா. காலில் விழாத குறையா சுதா,
“தலிவா, கலக்குற!”
தேவையான பொருட்களை வாங்கி கொண்டனர். சனிக்கிழமை அன்று தான் வாங்கிய புதிய உடையை போட்டு எப்படி இருப்போம் என்று கற்பனையில் மிதந்தாள் சசி. புதிய உடையில் நடந்து போவதுபோல் கற்பனை செய்தாள், பின்னாடி இளையராஜா பின்னனி இசையுடன்.
தன்னை கிண்டல் செய்வார்கள் என்றும் நினைக்காமல் வெகுளித்தனமாய், “ஏய் கேள்ர்ஸ்….இவ்வளவு தானா?” என்றாள். மற்ற மூவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டனர்.
“வேற என்ன வேணும் செல்லம்?” கலா சசியின் தோளில் கை போட்டாள்.
“இந்த waxing, threading….இதெல்லாம் இல்லையா?” சசி தயக்கத்துடன்.
கலா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். கலா, “சசி, தேரிட்ட மச்சி!”
ஒரு அழகு நிலையத்திற்குள் சென்றனர். அங்கே நின்று கொண்டிருந்தார் ஒரு ஆண்ட்டி. விஜி, “ஆண்ட்டி, இந்த பொண்ணுக்கு…..” என்று ஆரம்பித்தவள் செய்ய வேண்டிய விஷயங்களை விளக்கினாள்.
“ஒரு குரங்க எப்படி கிளியா மாத்துறீங்கன்னு நான் பாக்குறேன்.” என்றாள் கலா. உள்ளே சென்ற சசி வெளியே வந்தாள் ஒரு மணி நேரம் கழித்து.
மற்ற மூவரும், “வாவ்!!!!” என்றனர்.
“என்னை கொஞ்சம் மாற்றி...” என்று பாட தொடங்கினாள் விஜி சசியை பார்த்து. சசிக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. ஆனால், எல்லாரும் பூரிப்பு அடையும் விதத்தில் தான் இருப்பதை நினைத்து சந்தோஷம் அடைந்தாள்.
விஜி தொடர்ந்தாள், "இப்படியே போனே, உன் குடும்பத்துக்கே உன்னைய அடையாளம் தெரியாம போயிடும்! ஹாஹா..."
பிறகு, நால்வரும் வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவு எடுத்தபோது, சுதா கத்தினாள்,
"ஏய் பேப்ஸ்..we forget one important thing!!"
என்ன என்பது போல் மற்றவர்கள் சுதாவை பார்த்தனர்.
"make-up items....eyeliner, lipstick...இதெல்லாம் இருக்கா சசி உன்கிட்ட?" என்றாள் சுதா.
"இருக்கு... சின்ன வயசுல fancy dress competitionக்காக வாங்கி வச்சது" என்றாள் சசி.
" ஏன் உங்க பாட்டி சின்ன வயசா இருந்தபோ வாங்கி வச்சதுன்னு சொல்ல வேண்டியது தானே....வா போய் புதுசா வாங்கலாம்!" என்றாள் சுதா.
"வேண்டாம்ய்யா...i can manage with the ones i have at home. if not i can borrow from you guys." பதில் அளித்தாள் சசி.
"இங்க பாரு...இது என்ன பக்கத்து வீட்டில காபி தூள் வாங்குற மாதிரி நினைச்சீயா? nothing doing....வா மேன்..." என்று வலுகட்டாயமாக இழுத்து கொண்டு சென்றாள் சுதா சசியை.
சசி, " ஐயோ ஏண்டி....விடு... நான் வரேன்." என்று உள்ளே நடந்தாள். விஜியும் கலாவும் சாவகாசமாக நடந்து வந்தனர். சுதாவும் சசியும் முதலில் கடைக்குள் சென்றனர். ஆனால் கடையின் நுழைவாயில் சிறியதாக இருந்ததால், இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளிகொண்டு விளையாடிய படியே நடந்தனர்.
அவர்கள் பக்கத்தில் ஒரு கண்ணாடி பூ தொட்டி இருந்தது 3 அடி உயரத்தில். சுதாவும் சசியும் அதை கவனிக்கவில்லை. சுதாவின் கை அதை லேசாக தான் தொட்டது.
விளையாடிய விளையாட்டு வினையாய் போனது! கண்ணாடி பூ தொட்டி தொப்பென்று விழுந்து நொறுங்கியது.
(பகுதி 5)
15 comments:
ஓட்டுப் போட்டாச்சு, விஜயக் காந்த படப் பேரச் சொன்னதுனால போட்டாம்
superb waiting for the next part
என்னமா கதை எழுதுறீங்க ! ! !
super...chanceless :) waiting for the next part
:)) unga postelaam padichen.. peria loda lodava irupeenga pola :D directa pesara mathiri irukara unga style pudichiruku..kathaiyum pattaya kelaputhu..ithu sequel veraya!! sooper.sekarma adutha parta podunga :)
ravusunga unga postlaam :D esp vijaya oati kalaichi potrukarathelam toppu :D ungala blog roll panika ur parmeeshun reqkosted
@கஜினி, திவ்யாபிரியா, gils
நன்றி உங்களது பாராட்டுகளுக்கு. விரைவில் அடுத்த பகுதியை எழுதுகிறேன். மூளை கொஞ்சம் அடிக்கடி மூட் அவுட் ஆகிவிடுகிறது. அதனால தான் இவ்வளவு லேட்டா கதை வருது. :)
@gils
//ungala blog roll panika ur parmeeshun reqkosted//
permission granted!
நன்றி உங்களது பாராட்டுகளுக்கு. விரைவில் அடுத்த பகுதியை எழுதுகிறேன். மூளை கொஞ்சம் அடிக்கடி மூட் அவுட் ஆகிவிடுகிறது. அதனால தான் இவ்வளவு லேட்டா கதை வருது. :)////
மூட் அவுட்லாம் ஆகாதீங்க. அப்பதான் எங்களுக்கு கதை கிடைக்கும். இந்த எபிசோட விட முந்தினது எல்லாம் பிடிச்சது. இதில மேக்கப்லயே ஓட்டீட்டிங்க. Bt guys like it natural. they dont much about make up la?
அடுத்தது க்ளைமாக்ஸா?
@pappu
//Bt guys like it natural//
இத வச்சு தான் அடுத்த எபிசோட ஓட்டலாம்னு இருந்தேன். நீங்க இப்பவே போட்டு ஒடைச்சுட்டீங்களே!
இன்னும் சில பகுதிகள் ஓடும்! கிளைமெக்ஸ் அவ்வளவு சீக்கிரம் வந்திடுமா என்ன? நான் சீரியல் பார்த்து வளர்ந்தவள்! ஹிஹி:)
nice. :))
“first date போகும்போது ரொம்ப revealing clothes போடகூடாது. அதே நேரத்துல இழுத்து போத்திட்டும் போககூடாது. நல்ல பொண்ணு மாதிரி இருக்ககூடாது, அதே நேரத்துல கெட்ட பொண்ணு மாதிரியும் இருக்ககூடாது…
ada ivlo matters irukka.... ?
super nalla pogudhu.. :)
//எல்லாம் பசங்க சைக்காலஜி. அவங்க மனசு நல்லா இருந்தாலும். அவங்க கண்ணு அலைபாயும்//
நிறைய அனுபவம் போல...எவ்ளோ first date போய் இருக்கீங்க? :)
அழகை ரசிக்க தானே கண்ணு இருக்கு...அதனால அழகா இருக்கிற எல்லா பக்கமும் கண்ணு அலைபாயுரதுல என்ன ஆச்சர்யம்?
Post a Comment