Apr 13, 2009

daddy mummy வீட்டில் இல்ல(series 1) - பகுதி 1

கலாவின் அம்மா, அப்பா அக்கா ஆகியோர் சென்னையில் இருக்கும் சொந்தக்காரர் கல்யாணத்திற்கு கிளம்பினார்கள். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை. கலாவிற்கு தேர்வு என்பதால் அவள் அவர்கள்கூட போகவில்லை. group studiesக்காக கலாவின் தோழிகளான விஜி, சுதா, சசி வீட்டிற்கு வந்தனர். காலை 10 மணிக்கு விமானப்பயணம். அதனால், 8 மணிக்கே கிளம்பிவிட்டார்கள். போகும் நேரம் அம்மா,

"நல்லா படிங்க பசங்களா...டீவி அது இதுன்னு பாக்காம...ஒழுங்கா படிங்க." கண்டித்தார்.

"கவலைப்படாதீங்க...எல்லாம் நல்லா தான் படிப்போம், நீங்க சீக்கிரம் கிளம்புங்க." கலா அவர்களை விரட்டினாள்.

"ஏய், எதுக்கு ஆண்ட்டிய இப்படி விரட்டுற...பாவம் ஆண்ட்டி...உன்னைய விட்டு பிரிஞ்சு போறதுக்கு மனசே இல்லாம இருக்காங்க அவங்கள போய்..." விஜி கொஞ்சம் ஏற்றிவிட்டாள்.

அம்மா கலாவை விட்டு பிரிந்து இருந்தது இல்லை. அப்படி ஒரு நிலைமை இந்நாள் வரை அமைந்ததில்லை. இன்று முதன் முதலாக பிரிந்து 2 நாட்கள் இருக்கவேண்டும் என்பதை எண்ணி ரொம்பவே வேதனைப்பட்டார் அம்மா. கண்கள் கலங்கின அவருக்கு...........இப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா...அது...ஹாஹா....தப்பு!

"யாருக்கு இதவிட்டு பிரிய மனசு வரலைன்னு சொன்னா...நிம்மதியா ரெண்டு நாள் கிடைச்சுருக்குன்னு சந்தோஷமா இருக்கு எனக்கு...." அம்மா சிரித்தார். நல்ல நோஸ் கட் கலாவிற்கு!

"அப்பா இங்க பாருங்க...அம்மா என்னைய கிண்டல் பண்றாங்கப்பா..." கலா அப்பாவின் ஆதரவை தேடினாள். அவர் பெட்டிகளை எண்ணி கொண்டிருந்தார். அச்சமயம் கலா சொன்னது அவர் காதில் விழவில்லை.

"அங்கிள், மூனு பெட்டி தானே இருக்கு. அத எத்தன தடவ எண்ணுவீங்க?" சுதா நக்கலுடன் கேட்டாள். கலா, விஜி, சுதா ஆகியோர் மட்டும் அவர்களை வழி அனுப்பி வைக்க வாசலில் நின்றார்கள். ஆனால், சசி மட்டும் உள்ளே படித்து கொண்டிருந்தாள். கிளம்புவதற்காக நின்ற கலாவின் அக்கா,

"சசி தான் தப்பி தவறி உங்ககூட சேர்ந்துட்டா. எவ்வளவு நல்ல பொண்ணா... வந்ததுலேந்து படிச்சுகிட்டே இருக்கா...நீயும் இருக்கீயே...படிக்குற புள்ள மாதிரியா இருக்கே?"

கலா," ஏய் ஏய் ஹாலோ....ரொம்ப பேசாதே...கிளம்பு சீக்கிரம். அம்மா, சென்னையில இவளுக்கும் ஒரு மாப்பிள்ளைய பாத்து கல்யாணத்த முடிச்சு வச்சுட்டு வந்துருங்க. நிம்மதியா இருக்கும் எனக்கு." கிண்டல் அடித்தாள்.

இருவரும் சண்டை போடம இருக்குமாறு அப்பா சொன்னார். அக்கா பெட்டிகளை எடுத்துகொண்டு டெக்ஸியில் வைத்தாள். கலாவை பார்த்து, "சரி... நல்லா படி. வீட்ட பத்திரமா பாத்துக்கோ...வீட்ட வித்து தொலைச்சுடாதே!" அக்கா சிரித்தார்.

"அடியே, நீயே ஐடியா கொடுப்ப போல இருக்கே?" அம்மாவும் புன்னகையித்தார். அவர்கள் டெக்ஸியில் சென்றார்கள். கலா, விஜி, சுதா மூவரும் வீட்டிற்குள் வந்தனர். சசி 4வது chapterயை படித்துகொண்டிருந்தாள். இவ்வளவு சீக்கிரம் எவ்வாறு படித்துமுடித்தாள் என்பது ஆச்சிரியமாக இருந்தது கலா, விஜி, சுதாவிற்கு.

"ஏய், இவ்வளவு சீக்கிரமா...எப்படி டி?" சுதா சசி அருகே உட்கார்ந்தாள்.

"உண்மையா படிச்சியே... இல்ல சும்மா எங்கள வெறுபேத்தறதுக்காக....4வது chapter திறந்துவச்சிரிக்கீயா?" விஜி மேலும் சீண்டினாள் சசியை. சசி தனது மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு,

"ஏய் stupid fellows... நிஜமா படிச்சுருக்கேன். நீங்க வேணும்னா கேள்வி கேளுங்க..சரியா சொல்றேன்னா பாருங்க?"

"நிஜமா தான் சொல்றீயா?" என்று கலா, கற்றது தமிழ் பட ஹீரோயின் போல பாவனை செய்தாள். சிரிப்பு அலைகள் எதிரொலித்தன! தன்னை கிண்டல் செய்கிறார்கள் என்று கோபம் கொண்ட சசி,

"don't waste time. கொஞ்சம் படிக்குறீங்களா?"

ஒரு மணி நேரமா புத்தகத்தை புரட்டினாள் கலா. மண்டையில் ஒன்றும் ஏறவில்லை. விஜி ஓரளவுக்கு இரண்டாம் பக்கத்தை தாண்டினாள். சுதா ஒரு chapterயை முடித்தாள்.

சில குறிப்புகளை மனப்பாடம் செய்ய முயற்சித்தாள் கலா. "the assumptions of wilcoxon sign rank test are sample differences are randomly selected from...from....from..." அதற்குமேல் அவளுக்கு எதுவும் வரவில்லை. எரிச்சல் கொண்ட கலா, "ஐயோ... படிச்சா ஒன்னுமே புரியலையே." தலையை பிய்த்து கொண்டாள்.

"ஏய் கூல் கூல்... இதலாம் படிச்சவுடனே புரியாது. படிக்க படிக்க தான் புரியும்." விஜி படிக்காதவன் தனஷ் பாணியில் தோரணை செய்தாள்.

"எப்படி சசி, நீ மட்டும் இவ்வளவு வேகமா எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டே?" கலா சசியை பார்த்து கேட்டாள். ஒரு கையில் calculatorரையும் இன்னொரு கையில் பேனாவையும் வைத்து கொண்டு ஒரு கணக்கு கேள்விக்கு பதில் எழுதி கொண்டிருந்தாள் சசி. கலா கேட்ட கேள்விக்கு பதில் அளித்தாள் அந்த கணக்கு பதிலை எழுதி முடித்தவுடனே. அவள் எழுதிய பதில் சரிதானா என்பதை பார்த்துவிட்டு,

"yes...i got it correctly...ஓ கலா என்ன கேட்ட...எப்படி இப்படிலாமா? அதுக்கு மூளை நிறைய வேணும்?" தான் பெரிய ஜோக் அடித்ததுபோல் சிரித்தாள்.

"அதான்...ஆச்சிரியமா இருக்கு. அது இல்லாமலும் எப்படி இப்படின்னு?" கலா கலாய்த்தல் அம்பு ஒன்றை வீசினாள். சசியை கிண்டல் செய்தது கலாவிற்கு விஜிக்கும் உற்சாகம் ஏற்பட, இருவரும் 'high-five' என்று சொல்லி உள்ளங்கைகளால் அடித்து கொண்டனர்.

சசி ரொம்ப நல்ல பெண். அப்பாவிகூட. இந்த செட்ல அவ தான் நிறைய மதிப்பெண்கள் வாங்குவாள். கடவுள் பக்தி அதிகம். ஆனால், இவர்கள் அவளை கேலி செய்வதை சீரியஸாக எடுத்து கொள்வதில்லை. இது தான் சசியின் குணம். மற்ற மூவரும் இவளை சும்மா ஜாலிக்காக கிண்டல் அடிப்பார்கள் ஒழிய எந்த ஒரு உள்நோக்கமும் இருக்காது. இந்த புரிந்துணர்வு தான் இவர்கள் நால்வரையும் ஒன்றாக வைத்திருக்கிறது.

"ரொம்ப பசிக்குது எனக்கு...." சுதா வயிற்றில் கைவைத்து.

"வீட்டுல என்ன இருக்கு சாப்பிட?" சசி வினாவினாள்.

"ரெண்டு நாள் தானேன்னு...அம்மா தயிர் சாதம் சாப்பிட்டு adjust பண்ணிக்க சொன்னாங்க?" கலா படுக்கையில் படுத்துகொண்டு கால் ஆட்டியவாறு பதில் சொன்னாள்.

மற்ற மூவரும், "what!!!" ஆச்சிரியப்பட்டனர்.

"வெறு தயிர் சாதமா? no way man...படிக்குற புள்ளைங்க...நல்லா சாப்பிடனும். milo, complan, boost, horlicksன்னு குடிச்சு தெம்பா படிக்க வேண்டாமா!" சுதா கேட்டாள்.

தனது 'கீச்கீச்' குரலால் சசி, "horlicks குடிக்க நீ என்ன pregnantடாவா இருக்கே?" சத்தம் போட்டு சிரித்தாள். கலாவும் விஜியும் சேர்ந்து சிரித்தனர்.

"இல்ல டி... தயிர் சாதம் சாப்பிட்டுக்கோ..இல்லேன்னா நீயே எதாச்சு சமைச்சு சாப்பிடுன்னு சொன்னாங்க அம்மா." என்றாள் கலா.

"அப்ப சரி...எங்களுக்கு சமைச்சு போடு... எனக்கு சிக்கன் பிரியாணி வேணும். உனக்கு விஜி?" சுதா விஜியிடம் தனது பார்வையை திருப்பி.

"எனக்கு plain rice and mutton fry." விஜியின் பதில்.

"எனக்கு kadai fish fry, egg fried rice...அப்பரம்... ஒரு கப் sweet lassi without ice." சசியின் பதில்.

படுக்கையில் இருந்த தலையணைகளை விஜி, சுதா, சசியின் மீது வீசினாள் கலா. "அடிங்க..., என்னைய பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு. வாய்க்கு ருசியா வக்கனையா கேக்குறீங்க?"

"என்னப்பா...நாளைக்கு போற இடத்துல இதலாம் செய்ய தெரியலைன்னா நம்மள தானே நாலு பேரு கேப்பாங்க?" விஜி சிரிப்பை அடக்கி கொள்ள முடியாமல் கேட்டாள்.

"ஓய்..இது எங்க அம்மா டயலாக் ஆச்சே!" கலா சிரித்தாள்.

"ஏய் எல்லாரும் வீட்டுலையும் இதே டயலாக்க தான் எல்லா அம்மாவும் சொல்றாங்க...." சுதாவும் சேர்ந்து சிரித்தாள்.

"நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு சூப்பரான செட்டிநாட்டு restaurant வச்சுருக்கிறவனா பாத்து கல்யாணம் பண்ணிக்குவேன்...அப்ப நம்ம problem solved. என்ன சொல்ற?" மற்ற மூவரையும் பார்த்து சொன்னாள் கலா.

"அப்ப... ஏதோ ஒரு அண்ணாச்சிக்கு மருமகளா போறதுன்னு முடிவு பண்ணிட்டே?" சசி வினாவினாள்.

"ஐயோ....cut the crap girls. let's order pizza!" சுதா பசி தாங்காமல் கத்தினாள்.

"ஏய் உங்க அப்பாவீட்டு பணமா? பீஸ்சா ஆர்டர் பண்ணலாமான்னு கேக்குறே?" கலா படுத்துகொண்டே கேட்டாள்.

"இல்ல உங்க அப்பாவீட்டு பணம்..." என்று சொல்லிய சுதா, கலாவின் கைபையிலிருந்து பணத்தை எடுத்து காட்டினாள்.

"பணத்துக்கு கணக்கு என்ன காட்டுறது?" கலா கேட்டாள். "ஏய் பொய் சொல்லறதுல நீ ஜக கில்லாடி.... இதுக்கும் ஒரு பொய்ய சொல்லு...இதலாம் உனக்கு என்ன புதுசா?" சுதா சிரித்தாள்.

"சரி...ஒகே... donationக்கு ஆள் வந்தாங்க...அதுக்கு கொடுத்துட்டோம்ன்னு சொல்லிடுறேன். let's order pizza yea!!!" குதுகலமானாள் கலா.

பீஸ்சா சிறிது நேரத்தில் வந்தது. அதை முழுங்கிவிட்ட இந்த நான்கு அனகோண்டாக்கள் ஹாலில் உள்ள சோபாவில் விழுந்துகிடந்தனர்.

"வயிறு நிறைய சாப்பிட்டாச்சு...ரொம்ப ஓவரா enjoy பண்றோம்ல!" சசி கொஞ்ச குற்ற உணர்ச்சியால் தயங்கினாள்.

"யாரடி இவ வேற....இதலாம் ஒரு enjoymentஆ....பரிட்சை முடியட்டும்..அப்பரம் இருக்குது நமக்கு கொண்டாட்டம்." மேசையில் இருந்த கோக்கை முடித்தாள் விஜி.

ரொம்ப நேரம் அமைதியா இருந்த கலா ஏதோ ஒரு யோசனை வந்ததுபோல் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து மற்ற மூவரையும் பார்த்து, "girls, why not we go clubbing tonight?" திருட்டு சிரிப்பு சிரித்தாள்.

சசியின் வாயிலிருந்த பீஸ்சா கீழே விழ, சுதா மயக்கத்திலிருந்து எழு, விஜி குடித்து கொண்டிருந்த கோக்கை துப்ப, மூவரும், "what!!!!!!!" என்று கூச்சலிட்டனர்.

(பகுதி 2)

14 comments:

புதியவன் said...

//"எனக்கு plain rice and mutton fry." விஜியின் பதில்.

"எனக்கு kadai fish fry, egg fried rice...அப்பரம்... ஒரு கப் sweet lassi without ice." சசியின் பதில்.//

சகுந்தலா ரெஸ்டரண்ட் மெனு லிஸ்ட்ல இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கான்னு தெரியலையே...

புதியவன் said...

//"நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு சூப்பரான செட்டிநாட்டு restaurant வச்சுருக்கிறவனா பாத்து கல்யாணம் பண்ணிக்குவேன்...அப்ப நம்ம problem solved. //

ஹா...இது கூட நல்ல ஐடியா தான்...

தோழிகளுக்கு இடையேயான சுவாரசியமான உரையாடல்களுடன் கதை நல்லா இருக்கு தொடருங்க தமிழ்...

Karthik said...

ஓஹோ, இப்படி போகுதா கதை? நீங்க படிச்சிட்டு இருக்கீங்கன்னு நினைச்சேன். ;)

செம காமெடி. அதுவும் 'ஹார்லிக்ஸ் குடிக்க நீ என்ன ப்ரக்னென்ட்டாவா இருக்கே?' கமெண்ட், LOL. :))))

next part plz.

FunScribbler said...

@புதியவன்

//சகுந்தலா ரெஸ்டரண்ட் மெனு லிஸ்ட்ல இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கான்னு தெரியலையே...//

அவங்க ரெஸ்டரண்ட் மெனுவுல இன்னும் நிறைய இருக்கு..

செடிநாட்டு மட்டன்,
மட்டன் fry
prawn omlette
பன்னீர் மசாலா
chilli chicken
chilli crab
plain lassi
lime juice
masala tea...இன்னும் ஏகப்பட்டது இருக்கு...:)

FunScribbler said...

@புதியவன்

//சுவாரசியமான உரையாடல்களுடன் கதை நல்லா இருக்கு தொடருங்க தமிழ்...//

நன்றிங்கோ:)

FunScribbler said...

@கார்த்திக்

//நீங்க படிச்சிட்டு இருக்கீங்கன்னு நினைச்சேன். ;)//

ஆமா ஆமா...எங்க ஊர்ல யார வேணும்னாலும் கேட்டு பாருங்க!:)

sri said...

//"ஏய் கூல் கூல்... இதலாம் படிச்சவுடனே புரியாது. படிக்க படிக்க தான் புரியும்." //

You got the talent to write any incident very funny :)

Thanks for droppin by
Sri

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர்ங்க.. நல்லா கலகலனு காமெடியா போகுது.

FunScribbler said...

@ஸ்ரீ, உழவன்

ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி:)

Divyapriya said...

நல்ல இடமா பாத்து தான் தொடரும் போட்ருக்கீங்க :))

Divya said...

kalakals Gayathri:))

Lootis thodaratum......!

Bhuvanesh said...

நல்லா இருந்துச்சுங்க!! அடுத்த பார்ட்டுக்கு வெயிடிங்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

எழுத்து நடை நல்லா இருக்கு ! நல்லா கொடுக்கறீங்க பிரேக் :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

பெண்ணுரிமை போராளி காயா வால்க :)