Jun 23, 2008

முதல் நாள்..யப்பாடா

இன்னிக்கு முதல் நாள், கல்லூரியின் மூன்றாவது வருடம். நேத்திக்கு ராத்திரி சரியாவே தூங்க முடியல. ஏன்னு தெரியல. கைப்பேசியில் alarm clock நேரத்தை காலை 5.15 வைத்தேன். விடிய காலை 2.15 எழுந்து ரா பிச்சைக்காரன் மாதிரி உட்கார்ந்து கொண்டேன். தூக்கமும் வரல...

மதியம் 2 மணி எப்படா வரும்? காலேஜ் விட்டு எப்படா வீடு செல்வோம் என்று இருந்துச்சு.

சரி வகுப்பு வெளியே எதாச்சு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கான்னு பார்த்தேன்.. எந்த பசங்களையும் காணும்! தூங்கிவிட்டேன்.

(இது எல்லாம் ஒரு பதிவான்னு கேட்காதீங்க. நான் நல்ல தான் இருந்தேன். எப்ப படிப்பு ஆரம்பிச்சாங்களோ, இப்படி ஆகிட்டேன்! எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்....அவ்வ்வ்வ்)

16 comments:

Athisha said...

ச்சே உங்க வாழ்க்கைல எவ்வளோ கஷ்டம்

நாஞ்சில் பிரதாப் said...

சே...எப்படீங்க இது...ஒரு நாளை காலையில் இவ்வளவு சாதனை பண்றீங்களா...கிரேட்...

மங்களூர் சிவா said...

/
நேத்திக்கு ராத்திரி சரியாவே தூங்க முடியல.
/

பகல் முழுசும் கவுந்தடிச்சி தூங்குனா ராத்திரி அப்பிடித்தான் தூக்கம் வராது!!

:)))

மங்களூர் சிவா said...

/
விடிய காலை 2.15 எழுந்து ரா பிச்சைக்காரன் மாதிரி உட்கார்ந்து கொண்டேன்.
/

சாதாரணமா எப்ப எழுந்து உக்காந்தாலும் அப்படித்தானே இருப்பீங்க !!!

:)))))

மங்களூர் சிவா said...

/
மதியம் 2 மணி எப்படா வரும்? காலேஜ் விட்டு எப்படா வீடு செல்வோம் என்று இருந்துச்சு.
/

எல்.கே.ஜி பிள்ளைகள விட இது ரொம்ப மோசம்
:)))))

மங்களூர் சிவா said...

/
சரி வகுப்பு வெளியே எதாச்சு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கான்னு பார்த்தேன்.. எந்த பசங்களையும் காணும்!
/

அய்யோ பாவம்! என்ன கொடுமை காயத்ரி இது

:)))))

மங்களூர் சிவா said...

/
(இது எல்லாம் ஒரு பதிவான்னு கேட்காதீங்க. நான் நல்ல தான் இருந்தேன். எப்ப படிப்பு ஆரம்பிச்சாங்களோ, இப்படி ஆகிட்டேன்! எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்....அவ்வ்வ்வ்)
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நான் எதுக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ் னு கத்துறேனா!?!? உனக்கு கம்பெனிக்கு!!!!

:)))))))))))

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

FunScribbler said...

@அதிஷா,

//ச்சே உங்க வாழ்க்கைல எவ்வளோ கஷ்டம்//

என் கஷ்டத்த புரிஞ்சிகிட்ட உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.. நீங்க நல்லா இருங்க..

FunScribbler said...

@பிரதாப்,

//இவ்வளவு சாதனை பண்றீங்களா...கிரேட்...//

கிரேட் காத்தவராயன் தெரியுமா? தெரியாதா? (யப்பாடா..நல்லா தான் போச்சு)

அவரோட சிஷயன் நான்.. அதான் இது போன்ற பல சாதனைகளை செஞ்சுகிட்டு இருக்கேன்.. விடுங்க, இதலாம் வரலாற்றில் சகஜமப்ப்பா!

FunScribbler said...

@சிவா சித்தப்பு,

//பகல் முழுசும் கவுந்தடிச்சி தூங்குனா//

நான் அப்பவே சொன்னேன் வேணாம் சித்தப்புனு.. இவர் தான் கொஞ்சம் அடி! நல்லா இருக்கும்னாரு!:(((

//எல்.கே.ஜி பிள்ளைகள விட இது ரொம்ப மோசம்
:)))))//

நான் இன்னும் மனதளவில் சிறுமியாகவே தான் இருக்கிறேன் என்று நீங்க சொல்வறது எனக்கு புரியது சித்தப்பு!! :))

FunScribbler said...

@விக்கேனஷ்,

//:)//

நன்றி விக்கி, படித்தமைக்கு! :)

முகுந்தன் said...

//விடிய காலை 2.15 எழுந்து ரா பிச்சைக்காரன் மாதிரி உட்கார்ந்து கொண்டேன். தூக்கமும் வரல...//

அப்பவே உக்காந்து யோசிச்சிட்டீங்களா...?

FunScribbler said...

@முகுந்தன்,

//அப்பவே உக்காந்து யோசிச்சிட்டீங்களா...?//

அவ்வ்!! இதுக்கு பேரு தான் ரூம் போட்டு யோசிப்பது!

தமிழன்-கறுப்பி... said...

சிவாண்ணன் போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் ரிப்பீட்டு போட்டுக்கறேன்:)
போதுமா, ஏதும் கோபமில்லையே...?

FunScribbler said...

@தமிழன்,

//போதுமா, ஏதும் கோபமில்லையே...?//

கோபமா? ச்சே ச்சே.. அப்படிலாம் ஒன்னும் இல்ல..:)