biggest loser நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தபோது, பழைய நினைவுகள் என்னை தீண்டின.
2007 மே மாதம்.
காலேஜ் முதலாம் ஆண்டு முடியும் வேளை. காலேஜ் வாழ்க்கையில் settle ஆக ரொம்ப கஷ்டப்பட்டேன். படிப்பு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நிறைய தேர்வு, assignment. பள்ளி நண்பர்களிடம் பேச கூட நேரம் இல்லை. வெளியே போகவில்லை. கிட்டதட்ட பைத்தியம்போல் இருந்த காலம். அதிகபடியான மன உளைச்சலால் நிறைய சாப்பிட ஆரம்பித்தேன். அதன் விளைவு. obesity பிரச்சனை! என் உயரத்திற்கு நான் 49-52.9 கிலோக்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் 66 கிலோ இடையில் இருந்தேன். மருத்தவர் எச்சரித்தார், "நீங்க இப்படியே போய்கிட்டு இருந்தீங்கன்னா, சின்ன வயசுலே diabetics, heart problem வர வாய்ப்பு இருக்கு."
அப்போதுகூட நான் அதை சீரியஸாக எடுத்துகொள்ளவில்லை. அதற்கு அப்பரம் நடந்த இரண்டு சம்பவங்கள்.
1) என் மாமா மகள், வயது 5 தான் இருக்கும். அவர்கள் வீட்டில் ஃபோட்டா எடுத்தோம் ஒருநாள். ஃபோட்டாவில் நான், அக்கா, அவள். ஃபோட்டாவை பார்த்து அவள் என்னிடம் சொன்னாள், "நீங்க ஏன் இவ்வளவு பெரிசா இருக்கீங்க? ஃபோட்டா முழுசா நீங்க தான்..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள்கூட சேர்ந்து சிரிப்பதா. இல்ல, ஒரு சின்ன புள்ள நம்மள பாத்து சொல்லிட்டேன்னு அழுவதான்னு ஒன்னும் புரியல்ல....மனசுக்குள் ஒரு மணி அடித்தது.
2) இன்னொரு முறை, நானும் என் அப்பாவும் மின்தூக்கிக்காக காத்திருந்தபோது, அவர் என்னை பார்த்து ஒன்று சொன்னார். (ரொம்ப மோசமான கமெண்ட்...அதை இங்கே சொல்ல முடியாது.) என்னடா இது இவர் இப்படி நம்மை பார்த்து சொல்லிட்டாரேன்னு அன்று இரவு முழுசும் ஒரே கவலை. நம்ம என்ன அப்படி குண்டாவா இருக்கிறோம் என்று மனம் நொந்து போனது.
கண்ணாடியில் பார்த்தேன். உண்மை சுட்டது! என்னிடம் ஒரு பத்து சட்டைகள் இருந்தால், அதில் இரண்டு மட்டுமே போட முடியும். அந்த அளவுக்கு நிலைமை இருந்தது. உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு முடிவு எடுத்தேன். உடல் இடை குறைக்கும் ஒரு நிறுவனத்திற்கு சென்றேன். அங்கே ஒரு கணிசமான தொகையை செலுத்தி, இயந்திரங்கள் உதவியால் beltகளை வயிற்று பகுதி, கால் பகுதியில் சுற்றி வைப்பார்கள்.
அரை மணி நேரத்திற்கு அவை உடம்போடு ஒட்டி இருக்கும். ஆனால், அதிலிருந்து சூடு வரும். அந்த சூட்டினால் உடல் இடை குறையுமாம்! நானும் நம்பி போனேன். சொல்ல முடியாத வலி! அரை மணி நேரம் முடியும் முன்னே கத்திவிட்டேன். என்னை விட்டுவிடும்படி சொல்லி கிளம்பிவிட்டேன். அதுக்கு அப்பரம் நடக்கவே முடியல.
வாத்துக்கு piles வந்தா எப்படி நடக்குமோ, அப்படி நடந்தேன். கட்டடத்தின் கீழ் தளத்தில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுது இருப்பேன். சூட்டினால் ஏற்பட்ட வலி, உடல் பருமனாக இருக்கிறேனே என்ற வலி, மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களே என்ற வலி, நமக்கு பிடித்த ஆடைகளை போட முடியவில்லையே என்ற வலி, இந்த சின்ன வயசுல ஏன் எனக்கு இந்த கஷ்டம் என்ற வலி....என்று வலிகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
அழுது முடித்தேன். இந்த இடத்திற்கு மீண்டும் வந்தால் என்னை உயிரோடு சமாதிகட்டிவிடுவார்கள். பணத்தை கட்டிவிட்டோம், அப்பணம் பழனி உண்டியலில் போட்டதாக நினைத்து கொண்டேன். ஆக, சொந்த முயற்சியில் இறங்கினேன். அம்மா என்னை நீச்சல் வகுப்பில் சேர்த்துவிட்டார்.
நீச்சல் வகுப்பில்.....
(பகுதி 2)
4 comments:
இத நீங்க எதுக்காக எழுதினீங்கன்னு தெரியல.. ஆனா, படிச்சதும் மனசுக்கு கஷ்டமா இருக்கு காயத்ரி :((
அச்சச்சோ, அப்புறம்???
@ஸ்ரீமதி
//ஆனா, படிச்சதும் மனசுக்கு கஷ்டமா இருக்கு காயத்ரி :((//
நோ நோ...அழப்பிடாது!:) இல்லங்க...சும்மா தான் நம்ம வாழ்க்கை வரலாறு. நாளைக்கு வரலாறு நம்மை பத்தி பேசட்டுமேன்னு..
Comedya ezhudhinalum, ungay tragedy nalla puriyudhu :(
Post a Comment