மாமா மகன்
என்பதால் அதிக
உரிமை எடுத்து கொள்கிறாள்
என்று நினைக்காதே
உண்மையிலே
நான்
உன்னை..
ச்சீ போடா...
---------******---------
விடுமுறை நாட்களில்
உன் வீட்டில்
தங்கியிருக்கும்
அந்த ஒவ்வொரு
நிமிடத்தை பற்றியும்
என் டைரியில்
எழுதும்போது
வார்த்தைகள்கூட வெட்கப்படுகிறதே!
------****-----------------
என் கன்னத்தில் நான்
மயில் இறகால்
வருடியபோது
உன் மீசைக்கு
எவ்வளவு
கோபம் வந்திருக்கும் ?
9 comments:
வணக்கம்! மாமோய்!! என்றதும் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது! சமீப காலமாக, தொலைபேசி ரிங்டோன் இதுமாதிரி இருக்குங்க...அதை நம்ம நண்பர்கள் வைத்திருக்கிறார்கள்! சமயத்தில் அது நம்மை முகம் சுலிக்க வைக்கிறது என்பதுதான் உண்மை! அதுவும் பொது போக்குவரத்துகளை பயன்படுத்தும் இடங்களில் நம் தமிழின குழந்தைகள் அதுபோன்ற ரிங்டோன் வைத்திருக்கிறார்கள்!
மாமோய்....நீ... எங்க இருக்கிறே!!!!
என்னனன.....அது!!
அதை கேட்கும் அங்கம்பங்கம் இருக்கும் நம் இனபந்துக்கள், அதை நக்கல் செய்து பதில் கூறுவதையும் காதில் கேட்க முடிகிறது! மாமா என்பது எவ்வளவு ரம்மியமான வார்த்தை அதை கொண்டுபோய் எங்கே புட் அப் செய்றாங்க பாருங்க! அட உங்க மாமா கூட...அட அந்த மாமோய் கூட நல்லாயிருக்கு, நீங்க தொடருங்க....வாழ்த்துக்கள்!
ரொம்ப நன்றி உங்க பாராட்டுகளுக்கு பிரேம்.
//என் கன்னத்தில் நான்
மயில் இறகால்
வருடியபோது
உன் மீசைக்கு
எவ்வளவு
கோபம் வந்திருக்கும் ? //
மாமோய்... தலைப்பே காதலாய் இருக்கிறதே ! :))) அழகான கவிச்சரம் !!
சூப்பர் கவிதை!
\\உன்னை இதைவிட
செல்லமாய் கூப்பிட
என்னொரு பெயர்
வைக்கவா?\\
'இன்னொரு ' பெயர் வைக்கவா?
எழுத்துப்பிழை என்று நினைக்கிறேன்!
நன்றி திவ்யா... எழுத்து பிழையை திருத்திவிடுகிறேன்.
//
என் கன்னத்தில் நான்
மயில் இறகால்
வருடியபோது
உன் மீசைக்கு
எவ்வளவு
கோபம் வந்திருக்கும் ?
//
illaya pinna?
good kavithai.
keep writing more.
நன்றி சிவா!!
Well..well..well, Someones' going romantic.
@karthik
//Well..well..well, Someones' going romantic.//
என்னமோ போப்பா... எல்லாரும் இப்படி சொல்லியே உசுப்பேத்துறாங்க...:)))
Post a Comment