May 5, 2008

பச்ச தண்ணி with பறக்கும் 'குருவி' விஜய்

coffee with anu மாதிரி பச்ச தண்ணி with பறக்கும் 'குருவி' விஜய் பேட்டி தான் இந்த வார special. (இது சிரிப்பதற்காக மட்டும் தான். சீரியஸா எடுத்துக்காதீங்க..)

அவர் ஆபிஸுல ஒரு மணி நேரமா காத்திருந்தேன். அங்கு அவரது குழந்தைகளின் படம் எதுவும் இல்ல. இத பத்தி தான் முதல கேட்க வேண்டும் என்று நினைத்தேன். விஜய் உள்ளே நுழைந்தார்..



விஜய்: வணக்கம்-ண்ணா, ரொம்ப நேரமா wait பண்ணிக்கிட்டு இருந்தீங்களா..

நான்: ஐயோ விஜய், நான் அண்ணா இல்ல. உங்களுக்கு தங்கச்சி மாதிரி இருக்குற என்னை பாத்து அண்ணான்னு சொல்லுறீங்க.

விஜய்: ஓ சாரி சாரி, எப்ப பாத்தாலும் அண்ணா அண்ணா சொல்லி சொல்லி பழக்கமா போச்சு. (சிரித்து கொண்டே)

நான்: சரி சரி உங்க முதல் கேள்வி. அது என்ன உங்க ஆபிஸுல உங்க பிள்ளைங்க படமே காணும்.

விஜய்: (ரொம்ப நேரம் யோசிக்கிறார்)...

நான்: இப்ப நான் என்ன கேட்டேன்னு இவ்வளவு நேரமா யோசிக்கிறீங்க..
விஜய்: இளைய தளபதின்னா யோசிச்சு நிதானமா தான் பேசுவாருன்னு ஒரு image இருக்கு. அத தான் maintain பண்ணுறேன்.
நான்: ???? சரி நீங்க யோசிச்சு சொல்லி அனுப்புங்க.. நான் நாளைக்கு வரேன்.

விஜய்: நோ நோ.. வேட்.. சொல்லுறேன். பிள்ளைங்க படத்த வச்சா உங்கள மாதிரி வரவங்க அத எடுத்து பத்திரிக்கையில போட்டுவிடுவாங்க... அத தவிர்க்க தான் இப்படி.



நான்: அதுனால தான் நீங்க public functionக்குகூட உங்க பிள்ளைங்கள அழைச்சுட்டு வருது இல்லையோ..ம்ம்ம்.. ஆனா இப்போ chennai cricket matchல உங்க மகன் சஞ்சய தூக்கிகிட்டு ஆடுன photo எல்லாம் newspaperல பாத்தேனே?

விஜய்: ஓ அப்படியா..(என்று சொல்லி கொண்டே தன் அப்பாவுக்கு phone போட்டு விஷயத்தை சொன்னார்.)

நான்: என்ன விஜய் ஆச்சு?

விஜய்: ஒன்னுமில்ல அந்த படங்களை போட்ட பத்திரிக்கைக்காரங்களை கவனிக்க சொல்லிட்டேன்!!

நான்: ஐயோ...!! சரி சரி நம்ம அடுத்த கேள்விக்கு போயிடுவோம். நீங்க வித்தியாசமான படங்களில் நடிக்காதது ஏன்?

விஜய்: அட ஏங்க நீங்க வேற அடிப்பட்ட இடத்துல ஆசிட் ஊத்துறீங்க.. நான் வித்தியாசமா நடிச்ச படம் தான் 'அழகிய தமிழ் மகன்' ... என்ன பண்ணாங்க மக்கள். படத்த flop ஆகிட்டாங்க. கொஞ்சம் வேற மாதிரி நடிச்சா எங்க ஏத்துக்குறாங்க.

நான்: அழகிய தமிழ் மகன் படத்துல வித்தியாசமான நடிப்பா? எத சொல்லுறீங்க?

விஜய்: கொஞ்சம் mental disorder மாதிரி... அப்படிகூட சொல்லிட முடியாது... ஒரு மாதிரியான அபூர்வ சக்தி கொண்ட ஆள் மாதிரி நடிச்சேனே. அது தான். பைத்தியம் மாதிரி சேது விக்ரம் நடிச்சா ஓகே, லூசு மாதிரி காதல் கொண்டேன் தனுஷ் நடிச்சா ஓகே, எல்லாத்தை மறந்து பண்ண கஜினி சூர்யா ஓகே, ராம் ஜீவாவும் ஓகே... அதுவே நான் பண்ணா not ok!ன்னு சொல்லுறாங்க ஜனங்க. (ரொம்ப அமைதியாக இருந்தார்.) இதுல வேற double hero. வித்தியாசம் தானே இது.
நான்: உங்களுக்குள்ளே இவ்வளவு சோகமா?

விஜய்: சோகம் இல்ல வேகம். இந்த வேகம் தான் அடுத்த படத்த உடனே முடிக்க வச்சுது. குருவி பாத்தீங்களா?

நான்: பாத்தேங்க.. காலையில சன்னல் வழியா இரண்டு குருவிய பாத்தேன்.

விஜய்: அத சொல்லல்ல. என் படம் குருவிய பாத்தீங்களா?



நான்: பாத்தேன் பாத்தேன். especially அந்த poster stillகள் எல்லாம் ஏன் ஒன்னு முதல்வன் அர்ஜுன் மாதிரி சேத்துல விழுந்த மாதிரி, அப்பரம் கார் ரேசர் அஜித் மாதிரி? ஏன் இப்படி?

விஜய்: (அமைதியாகவே இருக்கிறார்) அது ஒன்னும் இல்லங்க... நான் செஞ்ச முந்திய படங்களைவிட இந்த படத்துல வித்தியாசமா இருக்கனும் அப்படின்னு யோசிச்சு நான், director, producer எல்லாரும் எடுத்து முடிவு தான் இது.

நான்:- ஒரு முக்கியமான கேள்வி. இந்த படத்துக்கு குருவின்னு ஏன் தலைப்பு வச்சீங்க?

விஜய்: ஏன் நல்லா இல்லையா?
நான்: இல்ல... இந்த படத்துக்கு 'தாவி'ன்னு வச்சுருக்கலாம்!!
விஜய்: தாவியா? ஏன்?

நான்: பாதி நேரம் நீங்க தாவி தாவி குதிச்சு ஓடிகிட்டுதான் இருக்கீங்க படத்துல.. அதான் சொன்னேன்.
(விஜய் மூன்று முறை தாவி தாவி தாவி என்று சொல்லி பாக்குறார். உடனே phone எடுத்து, அப்பாவுக்கு அழைக்கிறார்.)


விஜய்: அப்பா, 'தாவி' அப்படின்னு என் அடுத்த படத்துக்கு title வச்சா சூப்பரா இருக்கும். வேற யாரும் வைக்கறதுக்கு முன்னாடி இந்த தலைப்ப register பண்ணிடுங்க. (என்று சொல்லி முடிக்கிறார். மறுபடியும் என் பக்கம் திரும்பி..)

நான்: என்ன விஜய்... இப்படி சொன்னதுக்கா உடனே register பண்ணிட்டீங்க.

விஜய்:- actually இந்த குருவி தலைப்பும் இப்படி வந்ததுதான்!

நான்: (ஆச்சிரியத்தில் முழித்தேன்) நீங்களா திருந்தவே மாட்டீங்களா?
விஜய்: உங்களுக்கு குருவி படத்துல ரொம்ப பிடிச்சது?

நான்: உங்க கடமையுணர்வு!

விஜய்: கடமையுணர்வா? யூ மின் அப்பாவை போய் காப்பாத்துறது?

நான்: இல்லங்க.. திரிஷாவை வில்லன்கிட்டருந்து காப்பாத்தி அவங்கள இழுத்துகிட்டு ஓடுறீங்களே, கில்லி படத்திலிருந்து இதே கடமைதான். அத சொன்னேன்.

விஜய்:( லேசாக சிரிக்கிறார்)

நான்: விஜய், இந்த படத்துல நான் நடிச்சு இருந்திருக்கனும்.

விஜய்: நீங்களா? ஏன்? அவ்வளவு பிடிச்சிருக்கா படம்?

நான்: நோ அது இல்ல... நீங்களும் திரிஷாவும் ஓடுன ஓட்டத்துக்கு ஒரு 5 கிலோவாவது உடம்பு குறைஞ்சிருக்கும். நான் நடிச்சிருந்தா, நானும் ஓடி weight குறைச்சிருப்பேன்ல. ரொம்ப நாளா weight குறைக்க try பண்ணறேன். முடியல.
விஜய்:(லேசா முறைக்கிறார்)

நான்:(உஷாராக நான் அடுத்த கேள்விக்கு தாவினேன்.) விஜய், எப்படி இப்படி சூப்பரா ஆடுறீங்க? உங்க intro பாட்டுல விழுந்து விழுந்து ஆடினீங்க. அப்பரம் அந்த மொழ மொழன்னு பாட்டுல கால விசிறி மாதிரி அசைக்குறீங்க.. எப்படி?

விஜய்: எனக்கு நல்லா வரதே அது ஒன்னு தான். அதனால extra effort போட்டு டான்ஸ் விஷயத்த செய்வோம்.

நான்: அப்படியா விஷயம்..ம்ம்ம்.. சரி இந்த ரீமெக் படங்களை பத்தி என்ன நினைக்குறீங்க? நீங்க நடிப்பீங்களா?

விஜய்: (எப்போதும் போல உதடுகளை அவ்வளவாக திறக்காமல்) எனக்கு இத பத்தி சொல்ல ஒன்னும் இல்ல.

நான்: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... சரி தளபதி படத்த ரீமெக் பண்ணுறாங்க. உங்களையும் அஜித்தையும் வச்சு பண்ணலாம்னு நினைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க?


விஜய்: (என்ன சொல்வது என்று புரியாமல் முழிக்கிறார்.) ரசிகர்கள் பொறுத்து தான் எல்லாம் இருக்கு


நான்:- இப்படி நடந்தா உங்க இரண்டு பேர் ரசிகர்கள் சமாதானமா போவாங்களா இல்ல பிரச்சனை ஏதாச்சு வருமா?

விஜய்: நம்ம அடுத்த கேள்விக்கு போலாமா? (சற்று கடுப்புடன்)

நான்: ஓகே ஒகே கூல் கூல்... நீங்க ஏன் multi hero subject படங்கள நடிக்க கூடாது. இப்ப ஹிந்தி படங்கள வர மாதிரி.. ஒரு kabhi kushi kabhi kham படம் மாதிரி நடிச்சா ரொம்ப வித்தியாசமா இருக்கும்ல.

விஜய்: வேற ஈசியான கேள்வி இருக்கா?
நான்: என்னது, நான் என்ன maths examaa நடத்துறேன். ஈசியா கேக்க.. பதில சொல்லுங்க.

( கொஞ்சம் விட்டா அழுதுவிடுவார் போல தெரிந்தது)

நான்: பரவாயில்ல, அடுத்த கேள்வி. body building, health இந்த விஷயத்த பத்தி என்ன நினைக்குறீங்க. இப்ப நம்ம சூர்யாவா பாருங்க. அடையளம் தெரியாத மாதிரி போயிட்டாரு.

விஜய்: health ரொம்ப முக்கியம்ங்க. நான்கூட குருவி படத்துல 2nd halfல ஒரு fightல சட்டைய கழட்டி fight பண்ணிருப்பேனே.. நல்லா இருந்துச்சுல?

(நான் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.)

விஜய்: ஏன் சிரிக்குறீங்க?

நான்: படத்துல அதான் டாப் காமெடி சீன்!! பொல்லாதவன் கிளைமெக்ஸுல வர தனுஷ் மாதிரி செம்ம காமெடிங்க அது!

விஜய்: என்னைய ரொம்ப கலாய்க்கிற நீ?

நான்: இதுக்கே இப்படின்னா, தமிழ்மணத்தில் வந்து பாருங்க, மானம் போகுது! சரி சரி, பீல் பண்ணாதீங்க.

( ரொம்ப பாவமான, பரிதாபமான நிலையில் இருந்தார்...)

நான்: விஜய், கடைசியா ஒரு கேள்வி.

விஜய்: இன்னுமா? சரி, சொல்லுங்க.


நான்: உங்க குருவி படம் முதல் நாள் அன்னிக்கு உங்க ரசிகர்கள் 101 குருவிகள பறக்கவிட்டாங்களாம்.


விஜய்: ஆமா, என்னோட தீவிர ரசிகர்கள் (என்றார் பெருமையுடன்)
நான்: உங்க அடுத்த படம் தலைப்பு 'சிங்கம்'ன்னு கேள்விப்பட்டேன். அப்போ release அன்னிக்கு என்னத்த விடுவாங்கண்ண்ண்ண்ணாணாணா!! அவ்வ்வ்வ்...

(சொல்லி முடிப்பதற்குள் விஜய்க்கு கோபம் வர, நான் இடத்த விட்டு ஒரே escape தான்! ஜூட்!!)

23 comments:

MyFriend said...

கலக்கல்ஸ்.. ச்சும்மா கலாய்ச்சி வருத்து எடுத்துட்டீங்க.. இப்பவாவது புத்தி வருதான்னு பார்ப்போம் இவருக்கு. :-)

MyFriend said...

:-)

FunScribbler said...

@ மை பிரண்ட்,

//கலக்கல்ஸ்//

நன்றிங்கோ!!

TBCD said...

ஒவ்வொரு பதிலையும் விஜய் எப்படி சொல்லுவார் என்று யோசிச்சு, கற்பனை செஞ்சி சிரிச்சிட்டேன்..


நல்ல எழுதியிருக்கீங்க...கலக்குங்க..

puduvaisiva said...

நான்: பாத்தேங்க.. காலையில சன்னல் வழியா இரண்டு குருவிய பாத்தேன்.

it is 2 much

:))))))))

FunScribbler said...

@TBCD,

//நல்ல எழுதியிருக்கீங்க...கலக்குங்க..//

நன்றி:))

FunScribbler said...

@சிவா,

//it is 2 much//

ஹாஹாஹா...:))

Sanjai Gandhi said...

உன் ஜிலேபிய நீயே சாப்டு... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

முரளிகண்ணன் said...

super super super

ரசிகன் said...

இந்த பேட்டியை நம்ம டாக்டர்(?) விஜய் பாத்துட்டாருங்களா? :)))))))

ரசிகன் said...

குருவி தலையில நல்லா பனங்காய் வைச்சிருக்கிங்க:P:))

ரசிகன் said...

/./ SanJai said...

உன் ஜிலேபிய நீயே சாப்டு... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(//

டாக்டரிடம் கண்களை சரிப்பார்க்கவும்:P
எங்களுக்கெல்லாம் எந்த ஜிலேபியும் தெரியலை:))

FunScribbler said...

@சஞ்சய்,

//உன் ஜிலேபிய நீயே சாப்டு... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(//

உன் குத்தமா என் குத்தமா, யார நான் குத்தும் சொல்ல..

FunScribbler said...

@ முரளிகண்ணன்

//super super super//

நன்றி நன்றி நன்றி

FunScribbler said...

@ ரசிகன்,

//இந்த பேட்டியை நம்ம டாக்டர்(?) விஜய் பாத்துட்டாருங்களா? :)))))))//

பார்த்து இருந்தாரு, டாக்டர் பட்டத்த எனக்கு தூக்கி கொடுத்து இருந்திருப்பாரு.

//எங்களுக்கெல்லாம் எந்த ஜிலேபியும் தெரியலை:))//

நல்லா சொல்லுங்க ரசிகன், எனக்கு இப்பலாம் ஜிலேபி சாப்பிட ஈஷ்டமே இல்லாம போச்சு!!

Nilavan said...

akila ulaga vijay rasigargalin saarbaaga vanmaiyaa kandikkirean..... - eppadikku vijay,
akila ulaga vijay rasigargal thalaivar.


( Chummaaaa thaan... no serious.... )

FunScribbler said...

//akila ulaga vijay rasigargalin saarbaaga vanmaiyaa kandikkirean//

ஹாஹா.. என்னைய ஒன்னும் பண்ண முடியாது, எனக்கு பின்னாடி தமிழ்நாடே இருக்கு!!

Anonymous said...

ஏங்க அவரு சீரியஸ் நடிப்ப மம்முட்டியப் பாத்து கத்துக்கிட்டாராம். நீங்க கலாய்க்றதுல கடுப்பாகி அமிதாப்கிட்ட இருந்து கத்துக்க போறார். பாவங்க ப்ளிஸ் விட்டுடுங்க.

Karthik said...

Ha..Ha.
:)

நிஜமா நல்லவன் said...

செம.....கலக்கல்ஸ்.....வரிசையா எல்லா படமும் ப்ளாப் ஆனா கூட திருந்த மாட்டாங்க....:)

Anonymous said...

விஜயை பாத்தா உங்களுக்கு அவ்ளவு கேவலமா இருக்கா அவர்தான் அடுத்த superstar அதுக்கு உங்களுக்கு என்ன குத்துது. குருவியும் விஜய் எப்பயும் super star நான் விஜய் ரசிகன் visit to www.superstarvijay.blogspot.com
ஏகன் வந்தாள் என்ன எவன் வந்தாள் என்ன எமன் வந்தாள் என்ன எஙகள் தளபதியுடன் மோதினா தல இருக்கது இனிமேலாவது விஜயை பற்றி விமர்சண்ம எழுதவேன்டாம் அப்படி எலுதினால் vijay is verry good actor for kollywoood

sri said...

sema kalai he he

Anonymous said...

//நான்: உங்க அடுத்த படம் தலைப்பு 'சிங்கம்'ன்னு கேள்விப்பட்டேன். அப்போ release அன்னிக்கு என்னத்த விடுவாங்கண்ண்ண்ண்ணாணாணா!! அவ்வ்வ்வ்...//

ஆஹா,நல்ல வேளை சிங்கம் ப்ராஜெக்ட் சூர்யா- க்கு போய்டுச்சி. எவ்ளோ பெரிய ஆபத்திலுருந்து தமிழ் நாடு தப்பி இருக்கு .

by
mcxmeega