இது சீசன் 3.
****************************************
கண்ணாடி கடையில் கலா சொன்னது ஞாபகம் வந்தது- ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ.
அந்த ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர்.
மறுமுனையில் இருந்த ரவி, "ஹாலோ ஹாலோ....என்ன ஒரே சத்தமா இருக்கு?"
"ஒன்னுமில்ல" என்று சுதா வெட்கப்பட்டாள்.
கலா, "அடே மச்சி, வெட்கப்படுறாளே! மறுபடியும் மறுபடியும் சாச்சுபுட்டான் மச்சான். " என்று சொல்லியபடியே மெத்தையில் விழுந்தாள்.
சுதா ரவியிடம் தன் வீட்டு முகவரியை கொடுக்கமால் தன் வீட்டு அருகே இருக்கும் இன்னொரு தெருவின் முகவரியை கொடுத்து அங்கு வர சொன்னாள் ரவியை.
விஜி உடனே, "ஏய் வீட்டுக்கு வர சொல்ல வேண்டியது தானே. அப்படியே இரண்டு பேரையும் வச்சு நிச்சயதார்த்தம் முடிச்சு கல்யாண தேதியையும் முடிவு பண்ணிடலாம் பாரு...." கலாவும் சசியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
"ஓய்... என்ன நக்கலா... சும்மா ஃபோன் பண்ணான்...அதுக்குள்ள அநியாயத்துக்கு இப்படி கலாய்க்குறீங்களே. நீங்களாம் உருபுட மாட்டீங்க!!" செல்லகோபத்துடன் சுதா.
"ஏய் தோடா கண்ணகி சாபம் விடுறாங்களாம்! நம்மெல்லாம் எரிஞ்சு போயிடுவோமா!! ஹிஹி..." கிண்டல் செய்தாள் கலா.
"எனிவே, வெட்க கெட்ட பிரபுதேவாவா இருக்குறதவிட விவரமான சிம்புவா இருக்குறது மேல்... யூ சி!" உலக மகா புதுமொழியை ஓதினாள் சுதா.
சசி தன் கண்ணாடியை சரிசெய்தவாறே, "என்னடி.... உனக்கு இப்படி பேச சொல்லி யாரு சொல்லிகொடுக்குறா..."
"ஆமா.... சுதா சொல்றது சரி தான். ரவியின் குரல் வேணும்னா இளமையா இருக்கலாம். ஆனா அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி புள்ளகுட்டியெல்லாம் இருந்துச்சுன்னா.." கலா கூறினாள்.
"ஐயோ அத விடுங்கடி.... அவரு வந்தபிறகு பாத்துக்கலாம். இப்போ நம்ம எதுக்கு இங்க வந்தோம்? சசியோட டேட்டிங் கதைய பத்தி கேட்க தானே!! சொல்லுடி மின்ன்ன்ன்னனல்!! " என்றாள் விஜி சசியை உரசியபடி.
"ஒன்னும் நடக்கல...." என்றாள் சசி.
"நீங்க இரண்டு பேரும் எங்க நடந்தீங்க? அத சொல்லு." சுதா பொறுமையை இழந்தாள்.
சசி தன் டேட்டிங் கதையை தொடர்ந்தாள், "நீங்க என்னைய பஸுல ஏத்திவிட்ட பிறகு....."
----------------------------------------------------
சசி ஒரு மணி நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டாள். இதற்கு பெயர் தான் ஆர்வகோளாறு ப்ளஸ் வயசுகோளாறு! பையன் சித்தார்த்தும் இதே ரகம் தான். அவன் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அங்கு நின்று கொண்டிருந்தான். இருவரின் பார்வைகளும் சந்தித்து கொண்டன. அப்போது 'நம்தனம் நம்தனம் நம்தனம்' என்னும் இளையராஜா பிண்ணனி இசை வரும் என்று எதிர்பார்த்தீங்க என்றால் நீங்கள் ரொம்ப தமிழ் படங்கள் பார்க்குறீர்கள் என்று அர்த்தம். அந்த நேரத்தில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாய்களின் சத்தம் தான் காதுகளை கிழித்தன.
'ஹாய்...' என்றான் சித்தார்த். சிரித்தாள். கண்ணாடியை சரி செய்து கொள்ளவில்லை. ஏன் என்றால் அன்று அவள் போட்டிருந்தாள் contact lens. இருவரும் billiards விளையாட சென்றார்கள். சசிக்கு விளையாட தெரியாது. ஆக அவன் அவளுக்கு சொல்லிகொடுப்பான் என்று சசி எதிர்பார்த்தாள். அச்சமயம் மின்சாரம் தடை ஏற்பட்டது. அந்த இடத்தில் generatorரும் வேலை செய்யவில்லை என்று விளையாட்டு மன்றத்தின் உரிமையாளர் கூற, அங்கிருந்து எல்லாரும் வெளியேறினர் சசி சித்தார்த் உட்பட.
ஆஹா, வடை போச்சே!! என்ற முகத்துடன் சசியும் சித்தார்த்தும் காட்சியளித்தனர். பின்னர், இருவரும் சாப்பிட போக முடிவு எடுத்தனர்.
"fast food or restuarant?" என்று சித்தார்த் கேட்க, சசிக்கு மகிழ்ச்சி.
அவனே முடிவு செய்யாமல் தன் விருப்பத்திற்கும் இடம் கொடுக்கிறானே என்று சசி சந்தோஷப்பட்டாள். 'ஜெண்டில்மேன்ய்யா.' என்றது அவள் மனம்.
இருவரும் ஒரு இத்தாலி உணவகத்திற்குள் சென்று உணவு உண்டனர்.
--------------------------------------------------------------------------------------
"அப்பரம் காச அவன் கட்டுனா... ஜெண்டில்மேன்ய்யா.... வீட்டுக்கு வந்துட்டோம். அவ்வளவு தான்." சசி கதையை முடித்தாள்.
விஜி தூங்கி விழுந்தாள். சுதா முறைத்து கொண்டிருந்தாள். கலாவிற்கு வாயில் நல்லா வந்தது, வாந்தி இல்ல, கெட்ட வார்த்தைகள்.
"ஏண்டி இது தான் உங்க ஊருல கிளுகிளுப்பான டேட்டிங் கதையா? இதுக்கு நான் பாட்டி வடைய சுட்ட கதைய கேட்டுருப்பேனே....உன்னையெல்லாம்...." பக்கத்தில் இருந்த புத்தகத்தை தூக்கி சசியிடம் எறிந்தாள் கலா.
"ஏய், don't misuse them. this is அஷ்ட்ட லட்சுமி!" என்றாள் சசி. தூக்க மயக்கத்திலிருந்த விஜி, "யாரு? ஜோதி லட்சுமியா? எங்க எங்க?"
"பாரு பச்சை குழந்தை டி விஜி..... நீ டேட்டிங் போன கதையை கேட்டு சந்தோஷப்படலாம்னு வந்தா... இப்படி மொக்கை போட்டுடீயேடி... ச்சே.... உனக்கு ஏண்டி இந்த பன்றிகாய்ச்சலெல்லாம் வந்து தொலைய மாட்டேங்குது!!" கலா கத்தினாள் சசியை பார்த்து.
"இங்க பாரு... டேட்டிங் எல்லாம் எங்க personal matter. சித்தார்த் கூட இத பத்தி யாருக்கிட்டயும் சொல்லவேண்டாம்னு தான் சொன்னாரு. ஏதோ பிரண்ட் ஆச்சேன்னு சொன்னா... ரொம்ப தான் உங்களுக்கு...." சிரித்தபடியே சொன்னாள் சசி.
" என்னது personalaa? சித்தார்த் அதுக்குள்ள எப்படி அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனாரு!" விஜி சத்தம் போட்டாள்.
சுதா, " personalaa....பொறு பொறு... இத எப்படி public மேட்டரா ஆக்குறேன்னு பாரு. அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாமா, நம்ம சசி என்ன பண்ணா தெரியுமா? நேத்திக்கு...." என்று சுதா தன் அம்மாவை கூப்பிட்டாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்க, சுதாவின் அம்மா, "தெரியுமே நேத்திக்கு அந்த சித்தார்த்கூட அவ வெளியே போறத நான் பாத்தேனே!" என்றாள்.
கலா, விஜி, சுதா, சசி முகத்தில் ஈயாடவில்லை. சசியின் மண்டையில் சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்குது!!!
(பகுதி 2)
13 comments:
WELCOME BACK. ME THE FIRSTU
superb :)
superb........
நல்லா அடிக்கறாங்கய்யா கூத்து...
Next part u ku waiting :-)
nice
அடடே ஆச்சரிய குறி!
attagaasamana aarambam..adutha part seekrama podungo :)
ஆகா இது ரொம்ப யூத்புல் ஸ்டோரி போல, நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. நன்றி.
தொடருமா ???????????????????
*********
உங்க ஸ்லாங் .. மொழிய நாம பேசுற மாதிரியே உபயோகிக்கும் முறை நல்லா இருக்குங்க..
கதையோட 1 2 படிக்கல,, இத படிச்சாச்சு.. :-)
வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி:)
@கடைக்குட்டி, கண்டிப்பா தொடரும்!
Endha thodara padikka eppo dhaan chance kediachdhu mudhal pagudhiye attagasam ellathiyum padikkaren
Post a Comment