Dec 29, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 3)- பகுதி 2

பகுதி 1

சசி, சித்தார்த்கூட சென்ற விஷயம் சுதாவின் அம்மாவுக்கு தெரிந்துவிட்டது என்றதும் அவளது மனம் வயிற்றுக்குள் சென்று மூச்சு குழாய் வழியாய் மேலே உருண்டு நாவில் நிற்பதுபோல் உணர்ந்தாள். மற்ற மூன்று பெண்களும் விளையாட்டாய் பேசிய பேச்சு பெரிய விபரிதமாய் முடிய போகிறேதே என்ற பயத்தில் கால்கள் 'டான்ஸ் இந்தியா டான்ஸ்' நிகழ்ச்சியை நடத்தின.

அறை கதவை முழுவதுமாய் திறந்தார் சுதாவின் அம்மா, "ஆமா கோகிலா, நான் பார்த்தேனே...நேத்திக்கு அவ அந்த சித்தார்த்கூட வெளியே போறத... அப்போ தான் அவன் மாமியார் பார்த்தா...அதுக்குள்ள தொடரும்னு போட்டான்... பாவிபய.. இனி திங்கட்கிழம வரைக்கும் வேட் பண்ணனுமே..." என்றார் தொலைபேசியில். சுதாவின் அம்மா தன் தோழியிடம் சீரியல் கதையை பற்றிதான் பேசுகிறார் என்று தெரிந்து பிறகு தான் போன உயிர் திரும்பி வந்தது நால்வருக்கும். சாப்பிட கேக் கொண்டு வந்தார் சுதாவின் அம்மா. அதை சுதா கையில் கொடுத்துவிட்டு தொலைபேசியில் மீண்டும் தீவிரமாய் பேச தொடங்கினார்.

அவர் அறையை விட்டு சென்றபிறகு, கலா குபீர் என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அதை தொடர்ந்து, விஜி, சுதா. சசி இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய் உட்கார்ந்து இருந்தாள். அவளை சுயநினைவுக்கு கொண்டு வர கலா, சசியின் கைபேசியை பார்த்து, "ஏய் சித்தார்த் calling you di." என்று பொய் சொன்னாள்.

அதற்கு சசி, "எங்க? எங்க?" என்று அடிச்சு போட்ட கறுப்பான்பூச்சி போல் குதித்தாள். அதை பார்த்து மறுபடியும் சிரித்தனர் மற்ற பெண்கள். கோபம் அடைந்த சசி, "பொறுங்கடி.... நீங்களும் ஒரு நாள் இப்படி மாட்டுவீங்க... அப்ப இருக்குது உங்களுக்கு..."

சுதா கடிகாரத்தை பார்த்தாள். "ஏய் என் ஃபோன கொடுக்க ரவி இப்ப வந்துடுவான்.... வாங்க போவோம்."

"இவ என்னடி வயலுக்கு வேலை பாக்க போற மாதிரி எல்லாரையும் கூப்பிடுறா... நீயே போயிட்டு வா!" விஜி, சுதாவின் படுக்கையில் படுத்து கொண்டே பதில் அளித்தாள். சுதாவின் அம்மா கொண்டு வந்த கேக் துண்டுகளை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் கலா.

"ப்ளீஸ் டி வாங்க போலாம்..." எல்லாரையும் கெஞ்சி அழைத்தாள் சுதா.

"கடவுளே, ஏன் என்னைய இந்த களுசட கூட்டத்தோட சேர வைக்குற." சிரித்துகொண்டே கலா, "சரி சரி வா போவோம்...."

சுதாவின் அம்மாவிடம், "மா, நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வறோம்." நைஸாக ஸ்கேப் ஆனாள் சுதா. சுதா ரவியை பக்கத்து தெருவுக்கு வர சொன்னாள்.

"ஏய் சுதா, ரவி யாருன்னு எப்படி கண்டுபிடிப்ப?" சசி புத்திசாலித்தனமான ஒரு கேள்வியை கேட்டாள். அதற்கு சுதா, "நான் ரவிகிட்ட சொன்னேன் ஒரு அழகான பொண்ணு, 3 அட்ட பிகரோட நிப்பா... அந்த அழகான பொண்ணு தான் சுதான்னு. " புன்னகையித்தாள்.

"அடியே அருந்ததீதீதீதீ!!!" தொதித்து எழுந்தாள் விஜி! அடிக்க வந்த விஜியை தடுத்தாள் சுதா. "ஏய் நான் சும்மா சொன்னேன் டி.... அவர்கிட்ட நான் ஒன்னுமே சொல்லல.... பாத்துக்கலாம் விடு..." என்றாள் சுதா. அனைவரும் ஆளுக்கொரு திசையில் பார்வையை வைத்திருந்தனர்.

காத்திருந்து காத்திருந்து கால்வலி வந்த கலா, "ஏ என்ன மேன் சுதா, அவன பொங்கலுக்கு வர சொன்னா, கிரிஸ்மஸுக்கு தான் வந்து சேருவான் போல.... இவன கல்யாண பண்ணிக்காத... கல்யாணத்துக்கு வர சொன்னா... straightaa honeymoonக்கு தான் வந்து சேரவான்."

விஜி சிரித்தகொண்டே, " சுதாவுக்கு அது தான் ஈஷ்டம்னு நினைக்குறேன்." முறைத்தாள் சுதா. இவர்கள் பார்த்திராத திசையிலிருந்து ரவி வந்தான்.

இந்த பெண்கள் கூட்டத்தை நெருங்கியவன், "ஹாலோ excuse me girls... sorry நான் இந்த ஏரியாவுக்கு புதுசு. இங்க சுதான்னு ஒரு பொண்ணு தங்கியிருக்காங்க. அவங்க ஃபோன தொலைச்சுட்டாங்க. அத கொடுக்க வந்திருக்கேன். அவங்க யாரு...எங்க இருப்பாங்க...actually இந்த இடத்துக்கு தான் வர சொன்னாங்க.... well do you know sutha? are you living in this area?" சிரித்த முகத்துடன் நின்றான் ரவி.

கலா சசியின் முகத்தை பார்த்தாள். சசி விஜியின் முகத்தை பார்த்தாள். மூவரும் சுதாவின் முகத்தை பார்த்தனர். சிரிப்பை அடக்க முடியவில்லை!!

'ஏ ஏ ஏ ஏ....பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலே'

ரவி ஒரு பஞ்சாபி. தலையில் தர்பன் கட்டியிருந்தான். யாரும் எதிர்பாராத வகையாக ரவி காட்சியளித்தது அனைவருக்கும் ஆச்சிரியத்தை தந்தது. எச்சில் முழுங்கிய சுதா, "ஹாய், நீங்க தேடி வந்த... சுதா... நான் தான்." கண்கள் அவன் முகத்தைவிட்டு அகலாமல்.

"ஓ what a surprise!" என்றான்.

"எங்களுக்கும் தான்." சிரிப்பை அடக்கியபடி மற்றவர்கள் கோரஸாக பாடினர். மற்ற பெண்களை பார்த்து புருவம் உயர்த்தி ரவி, "சாரி...நீங்க....?"

சுதா அறிமுகப்படுத்தினாள்.

"உங்க முழு பெயர்?" கலாவுக்கு வாய் அரித்தது.

"ரவிஷாந்த் ஷர்மா கபூர்"

"நீங்க எப்படி இவ்வளவு நல்லா தமிழ் பேசுறீங்க?" காபி வித் அனு போல் கையில் கோக் வைத்து கொண்டு விஜி கேட்டாள்.

சிரித்தான் ரவி. "இல்லங்க... நாங்க இருக்குற ஏரியாவுல நிறைய தமிழ் மக்கள் இருக்காங்க... ப்ளஸ்.. மொழிகள பத்தி research பண்ணிகிட்டு இருக்கேன்... so i love languages... tamil is one of the ancient languages in the world. சின்ன வயசுலேந்தே தமிழ் தெரியும்"புன்னகையித்தான்.

சுதா கொஞ்சம் மயக்கத்திலேயே இருந்தாள்.

"சரிங்க...nice to meet you girls. i got to go. i have to attend a seminar today. so take care. keep in touch." விடைபெற்று கொண்டான் ரவி.

அவன் சென்றபிறகு, கலா சுதாவை பார்த்து, "உங்க அப்பா பிரகாஷ் ராஜ் மாதிரி அவுறத confirm."

சசி, "அப்ப இது புது படம்- சுதாவும் நானும்."

விஜி, "வாங்க கேர்ஸ்.... சப்பாத்தி மாவு வாங்கிட்டு போவோம். இப்பலேந்து நார்த் இந்தியன் சாப்பாடு எப்படி செய்யுறத கத்துக்கனும் பாரு...." கைகொட்டி சிரித்தாள்.

"அடுங்குங்க டி...." சுதா எச்சரித்தாள்.

"he said keep in touch. what does that mean?" சுதாவின் கண்களில் வெட்கம் மின்னியது.

"அப்படின்னா, உன் மாமியார் கால அமுக்கிவிடனும்னு அர்த்தம்." கலா கிண்டல் செய்தாள்.

" shut up idiot!" சுதா கத்தினாள்.

"அவரோட நம்பர வாங்கினீயா?" விஜி கேட்டாள்.

"இல்லையே.....ஓ ஷிட்!!!" முகத்தில் சோகம் பரவியது.

கலா ரொம்ப கூலா, "ஹாலோ அறிவுக்கு பொறாந்த அறிவுகளா... சுதா உன் வீட்டு ஃபோன்ல caller id இருக்குல... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே அவன் ஃபோன் பண்ணான்.... வீட்டுக்கு போய் நோட் பண்ணிக்கிச்சா போச்சு!"

"ஓ மை காட்!!!! எப்போதுமே எங்களுக்கு நீ தான் தலிவா!" சுதா கலாவை கட்டிபிடித்தாள்.

வீட்டை வந்து அடைந்ததும், சுதா ரவியின் நம்பரை நோட் செய்து கொண்டாள். தொலைக்காட்சி பார்த்தனர். கலா வேண்டுமென்றே ஹிந்தி சேனலுக்கு மாற்றினாள். சமையலறையிலிருந்த சுதாவின் அம்மா, "யாரடி அவ புரியாத மொழில டிவி பாக்குறது...." சத்தம் போட்டார்.

"இனிமே புரிஞ்சுக்க வேண்டிய மொழி ஆண்ட்டி....." கலா சத்தமாய் கூற, சுதா கலாவின் கையை கிள்ளினாள்.

"ஏன் கலா உலறுர.... மாத்தங்குடி சேனல... இப்போ சீரியல் நேரம்... மாத்துங்க மாத்துங்க..... " என்று கைகளை கழுவியபடி ஹாலுக்கு வந்தார் சுதாவின் அம்மா. மற்ற பெண்களுக்கு போர் அடித்ததால், சுதாவின் அறைக்குள் சென்றனர். அப்போது விஜியின் கைபேசி அலறியது, " ஹாய் மச்சிஸ், semester results are out. check them online." வகுப்பு தோழியிடமிருந்து மெசேஜ்.

அதை பார்த்து வாய் பிளந்தபடி விஜி, "ஓ ஷிட்.... results are out!!"
சசி, " இரண்டு வாரம் கழிச்சு தானே வரும்னு சொல்லியிருந்தாங்க...."
சுதா, "ஏய் சீக்கிரம் அந்த லெப்டாப்பை எடு...." மடிக்கணினி கலாவின் பக்கத்தில் இருந்தது!

அதை அறக்க பறக்க திறந்தாள்.......

(பகுதி 3)

10 comments:

gils said...

lovely lovely lovely :D chaaanceleenga....semma flow :) really awesome :)

அண்ணாமலையான் said...

ரைட் ரைட்...

இராஜ ப்ரியன் said...

ஒரே குல்பான்சா இருக்குது

viccy said...

மீ த வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் பார்ட்...

VISA said...

Gud flow.

சிம்பா said...

உக்காந்து யோசிப்பீங்களோ?

pappu said...

"அப்படின்னா, உன் மாமியார் கால அமுக்கிவிடனும்னு அர்த்தம்." கலா கிண்டல் செய்தாள்.
///
ஹா... ஹா...

Karthik said...

என்ன டைட்டில் இது? LOL.

ரெண்டு பார்ட் போய்டுச்சா? மறுபடி வரேன்...:))

Srivats said...

awesome writing going to next part

Thamizhmaangani said...

@gils, annamalai,priyan,visa,நன்றிங்கோ!
@simba, நின்னுகிட்டு யோசிப்போம்:)
@karthik, it is the 3rd line of the song 'daddy mummy veetil illai'.