Feb 4, 2011

மச்சி இதுக்கு பெயர் என்ன?- 2

முதல் பாகம்

அழகான பையனை பார்த்ததால், அகில உலகமே இயங்குவதை நிறுத்திவிட்டதுபோல் உணர்ந்தாள். இந்த எட்டவாது அதிசயத்தின் பெயர் என்ன? பதில் தெரியாமல் மனமும் மூளையும் அலைபாய்ந்தன.

எட்டாவது அதிசயம்- 5'8 உயரம். (அஞ்சலி கண்களாலே அளவு எடுத்தாள். பல வருட சர்வீஸ்!) எட்டாவது அதிசயத்திற்கு சுருட்ட முடியும் சிரித்த முகமும் அதிக வசீகரத்தை அளித்தது. அவன் மாநிறத்திற்கு அவன் போட்டிருந்த வெள்ளை சட்டையும் சில்வர் tieயும் எடுப்பாக இருந்தது. அளவான மீசை அழகான குட்டி குடைபோல் அவனுடைய மேல் உதட்டை எட்டி பார்த்தது. காக்க காக்க சூர்யாபோல் வலது கையில் சில்வர் காப்பு.

அவன் அந்த ஸ்டாப்பில் இறங்குவதற்கு தயார் ஆனான். அஞ்சலியின் மனம் படபடப்பில். அவன் பெயர் என்ன? அவனிடம் கேட்க தைரியம் இருந்தாலும், கூட்டம் அவர்கள் இடையில் பெரிய தடைக்கல்லாக இருந்தது.
********

பரபரப்புடன், அஞ்சலி ஆபிஸ்க்குள் நுழைந்தாள். அவள் கண்களில் ஒரு தேடல். ஒரு படபடப்பு. பக்கத்தில் இருந்த சந்தியாவுக்கும் ரம்யாவுக்கும் ஹாய் சொன்னாள் பரபரப்பாக இருந்த அஞ்சலி.

அருகில் இருந்த நாற்காலியை இழுத்தாள்.
அவசரமாய் லெப்டாப்பை எடுத்தாள்.

சந்தியாவுக்கும் ரம்யாவுக்கும் என்ன நடக்குது என்று புரியவில்லை.

சந்தியா, "ஹேய் அஞ்சலி, are you ok? what happened?

ரம்யா, "time என்ன தெரியுமா? thank god, boss is here not today."

அஞ்சலி ரம்யாவை பார்த்து புன்னகையித்தாள், "boss is not here today. then what are we doing in office today? let's go out!"

ரம்யா, "அட பாவி. நீ வந்ததே லேட்! ஆமா....ஏன் இந்த பரபரப்பு?"

அதற்குள் தனது லெப்டாப்பை switch on செய்து internet cableயை லெப்டாப்பிற்கு மாட்டினாள்.

சந்தியா, "usualலா ஆபிஸுக்கு வந்தா, முதல canteenக்கு தானே போவ. இன்னிக்கு என்ன அதிசயமா இருக்கு? திருந்திட்டீயோ?"

அஞ்சலி, " search பண்ணனும்."

சந்தியா, "yes di. boss told us to do a search on the statistics of these products and......" என்று சில முக்கியமான documentகளை காட்டினாள்.

அஞ்சலி அவற்றை தள்ளிவிட்டு, தனது லெப்டாப் keyboardல் தட்டினாள், "facebook.com"

ரம்யா வாய் பிளந்தாள், "அடி பாவி, இது தான் உங்க ஊருல researchஆ?"

அஞ்சலி, "இது research இல்ல. search. வேட்டை" சிரித்தாள். வேகமாக டைப் செய்தாள் இந்த பெயரை: ரஞ்சித். அந்த பெயரில் 132457 results தெரிந்தது. சந்தியாவும் ரம்யாவும் ஆர்வத்துடன் அவள் பக்கத்தில் அமர்ந்தனர். லெப்டாப்பை பார்த்தபடி சந்தியா, "who is this ranjith?"

அஞ்சலி, "காலையில பார்த்தேன்."

சந்தியா, "எங்க?"

அஞ்சலி அடுத்த பக்க result pageக்கு சென்றாள், "busல"

சந்தியா, "பெயர உடனே கேட்டுடீயா?"

அஞ்சலி, "இல்ல!"

ரம்யா, "ஹாலோ! ஹாலோ! என்ன உங்க ரெண்டு பேரு மனசுலையும் அடுத்த மணிரத்னம்னு நினைப்பா...அவர்கூட இந்த அளவுக்கு one word dialogue வச்சத்து இல்ல படத்துல...."

அஞ்சலி நடந்தவற்றை தெளிவாக கூறினாள் இருவரிடமும்.

"ஓ....அப்ப அவன் கையில் வச்சு இருந்த keychainல ரஞ்சித்னு இருந்திருக்கு... அது எப்படி மச்சி உன் கண்ணுல மட்டும் இப்படிலாம் மாட்டுது?" ரம்யா வினாவினாள்.

அஞ்சலி, "எத சொல்ற? பையனையா? keychainனையா?"

சந்தியா, "அடி பாவி! சரி.... அவன பத்தி தெரிஞ்சு என்ன பண்ண போற?"

அஞ்சலி, "கற்றது கைமணளவு. கல்லாதது உலகளவு."

ரம்யா, "அது சரி..."

அஞ்சலி, "too many results man!! how do I narrow down the choices?" மூளையை குழப்பினாள். மணி 12 மேல் ஆனது. பக்கத்து ரூமிலிருந்து வந்த ஆபிசர், "ladies, meeting at 12.30" என்று முறைத்துவிட்டு சென்றார்.

"இந்த பெரிசுக்கு சிரிக்கலாம் தெரியாதா?" அஞ்சலி சலித்து கொண்டாள். தொடர்ந்தாள், "இன்னும் 30 minutes தான் இருக்கு....அதுக்குல கண்டுபிடிக்கனும்." பதறினாள்.

சந்தியா, "ஏய்! இதுலாம் உனக்கு ஓவரா இல்ல?"

ரம்யா, " ranjith menon. ranjith kumar. ranjith gupta... இப்படி எதாச்சும் try பண்ணி பாரு?"

அஞ்சலி, "no! அது சரிப்பட்டு வராது. search off trackல போயிடும்!"

ரம்யா, "city. country. location.... இத வச்சு கண்டுபிடி மச்சி?"

அஞ்சலி, "great idea." ரம்யாவை செல்லமாக தட்டினாள். அரை மணி நேரம் அலசி ஆராய்ந்து பார்த்தார்கள். ஒன்றுமே சிக்கவில்லை! மறுபடியும் 'பெரிசு' வந்து மீட்டிங்க்கு நேரம் ஆகிவிட்டதை அறிவித்து சென்றார். 'வேட்டை' ஒருவகையில் தோல்வி அடைந்ததால் அஞ்சலி சோகத்தின் உச்சியில் இருந்தார்.

மீட்டிங் அறைக்கு வந்த சிலர் அஞ்சலியை பார்த்து, "ஏய் என்ன ஆச்சு. உனக்கு? ஏன் இந்த சோகம்ஸ்...."

அதற்கு ரம்யா, "சிங்கம் குகைக்குள்ளே சிங்கம் சிக்கவில்ல..." என்று அடுக்குமொழியில் பேசினாள். அனைவரும் சிரித்தனர். அந்நேரம் சீனியர் மேனேஜர் உள்ளே வந்தார். சிரிப்பு சத்தம் volume 0வுக்கு சென்றது. அனைவரும் சீரியஸ் முகத்துடன் காணப்பட்டனர். அப்படி இருந்தால் தான் சீனியர் மேனேஜருக்கு பிடிக்கும். அவர் பேச ஆரம்பித்தார். மற்ற அனைவரும் அவர்கள் தம் பிடித்த ஹீரோ/ஹீரோயின்களுடன் கனவு தேசத்தில் டூயட் பாட சென்றனர்.

எப்போதுமே மீட்டிங் நேரத்தில், கண் விழித்து கொண்டே கனவு காண்பாள் அஞ்சலி. அன்று மட்டும், கனவு வரவில்லை. கனவில் john abrahamமும் வரவில்லை. பத்து நிமிடங்களில் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை ஒன்றரை மணி நேரம் பேசி அறுத்தார் சீனியர் மேனேஜர்.

"ok team members...இன்னிக்கு ஒரு குட் நியூஸ்...நம்ம teamக்கு புது project member join பண்ண போறாரு..." என்று சொல்லிகொண்டே அவரின் fileயை தேடினார். fileயை பார்த்து, "yes...the new member- mr ranjith" என்றவர் fileயை மேசையில் போட்டார்.

"ranjith???" கத்தினாள் ரம்யா. சந்தியா வாய் பிளந்தாள். அஞ்சலிக்கு அதிர்ச்சி! மூவரும் ஒருவருக்கொருவர் முகங்களை பார்த்தனர்.

சீனியர் மேனேஜர் ரொம்ப எரிச்சலாய், "என்ன? ஏன் இப்ப இந்த சத்தம்?"

சமாளிப்பதற்காக, அஞ்சலி, "ஒன்னுமில்ல சார், lunch time ஆச்சுன்னா அவளுக்கு பல்லு வலி வந்திடும்..." என்றாள், lunch time ஆகிவிட்டதையும் நாசுக்காய் சொன்னாள்.

புரிந்துகொண்டவர், "இன்னும் 15 நிமிஷம் இருக்கு lunch timeக்கு...." சொல்லிவிட்டு மற்றவர்களிடம், "so any other matters to discuss?"

ரம்யா சந்தியா அஞ்சலி மூவரும் பக்கத்தில் அமர்ந்து இருந்ததால் வசதியாய் போயிற்று. ரம்யா சத்தமில்லாமல் மற்ற இருவரிடம், "மச்சி, i have a gut feeling it's that ranjith whom you saw in the bus. "

"how sure are you?" சந்தியா சந்தேகத்துடன்.

"it should be him. அவன் tie கட்டியிருந்தான். ஆபிஸ் attire right? நீ இறங்குற previous stopல தான் இறங்கியிருக்கான்..." ரம்யா திட்டவட்டமாய்.

"but why should he get down at the previous stop?" சந்தியாவிற்கு குழப்பம்.

"first time வரதுனால....address தெரிஞ்சு இருக்காது!" அஞ்சலி வெட்கத்துடன்.

ரம்யா புன்னகையித்தாள். சந்தியா சற்று சத்தமாய் சிரித்தாள்.

"hello ladies, what is the important conversation going on there? Could you please share it with everyone!" முறைத்தார் சீனியர் மேனேஜர்.

"nothing sir..." சமாளித்தனர் மூவரும்.

"I don't want you three ladies to sit together in the next meeting. " சீனியர் மேனேஜர் ஆர்டர் போட்டார்.

அப்போது சீனியர் மேனேஜரின் கைபேசி அலறியது.

"ok sure mr ranjith. I will send one of my team members." பதில் பேசிவிட்டு அஞ்சலி பக்கம் திரும்பினார்,

"அஞ்சலி, mr ranjith is here..waiting at the lobby. could you please welcome him and bring him to the conference room?"

ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மி கொட்டுங்களே!- பாடலின் இசையை அஞ்சலியின் ஒவ்வொரு ஆர்மோன்களும் ஆர்மோனி வாத்திய கருவியால் வாசித்து தள்ளின.

ரம்யாவும் சந்தியாவும் கண்களாளே ஆல் தி பெஸ்ட் சொன்னார்கள்.

lift எடுத்தாள். lift கீழே போனது. அவள் மனம் மேலே பறந்தது. lobbyக்கு சென்றாள். எல்லாரும் slow motionலில் நடப்பதுபோல் உணர்ந்தாள்.

தொண்டைக்கும் வயிற்றுக்கும் உலக உருண்டையே உருண்டது- ஆம், 'எட்டாவது அதிசயம்' அங்கு நின்று கொண்டிருந்தது. செய்தித்தாளை புரட்டி கொண்டிருந்தான். அஞ்சலி மெல்ல நடந்து சென்றாள். அவன் அவளை பார்த்தான்.

"ஏய்....அஞ்சலி! what are you doing here?" என்றான்.

அஞ்சலிக்கு ஒன்றுமே புரியவில்லை. இவனுக்கு எப்படி தன் பெயர் தெரியும் என்று குழம்பிபோனாள்.

"நீங்க...." அவளுக்கு வார்த்தை corporation குழாயில் வரும் காற்று போல் வந்தது.

அச்சமயத்தில், அங்கு வந்தார் executive manager அமலா. "ஏய் அஞ்சலி, wassup man?"

தொடர்ந்தாள் அமலா, "hi rahul, you are here too." என்றாள் 'எட்டாவது அதிசயத்தை பார்த்து.

அஞ்சலிக்கு மேலும் குழப்பம்- rahul???

அமலா, " hey anjali... this is rahul. my would be. and rahul... this is..."

ராகுல், "அஞ்சலி... i know. facebookல உங்க commentsலாம் செம்ம காமெடியா இருக்கும். நிறைய தடவ அமலா statusக்கு நீங்க அடிக்குற comments எல்லாம் ரொம்ப ரசிச்சு இருக்கேன்."

அஞ்சலி அவன் கையிலிருந்த keychainயை பார்த்து, "ranjith??"

ராகுல், "ஓ...இதுவா? நேத்திக்கு என் friend ranjith roomல இருந்தேன். மறந்துட்டு அவன் keyய எடுத்துட்டு வந்துட்டேன். return பண்ணனும்."

இஞ்சி திண்ண குரங்கு கஞ்சி திண்றதுபோல் நின்றாள் அஞ்சலி.
வடை போச்சே!!

"ok anjali...we are going out for lunch. see you later. " என்று சொல்லிவிட்டு அமலாவும் ராகுலும் கிளம்பினர். விடுகதையா இந்த வாழ்க்கை பாடலில் வரும் ரஜினிபோல் நிலைகுலைந்தவளாய் அஞ்சலி.

கொஞ்ச நேரத்தில் சந்தியாவும் ரம்யாவும் சந்தோஷமாக வந்தனர்.
"success?? success?? where is he?" இருவரும் பரபரப்புடன்.

நடந்தவற்றை கூறினாள் அஞ்சலி.

"oh my god!!! இவ்வளவு unluckyயா நீ?" சிரித்தாள் ரம்யா.

"shut up!" அஞ்சலி கோபித்து கொண்டாள்.

"wait... wait...அப்ப where is that real ranjith?" சந்தியாவின் கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்தது.

கழிவறையிலிருந்து வெளியே வந்த ஒருவன் இந்த மூன்று பெண்களிடம், "hi ladies. I am Mr ranjith. project powervalue teamல புதுசா சேர்ந்து இருக்கேன். சீனியர் மேனேஜர் என்னைய conference roomக்கு வர சொன்னார். where's the conference room?"

மூவரும் அவனை ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை 'scan' செய்தனர். சின்ன பொடி பையன் மாதிரி இருந்தான். அஞ்சலியைவிட ஐந்து வயது குறைவு தான் அவனுக்கு.

"சார்...conference room at the 2nd level." ரம்யா சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்.

"இந்த பொடி பையலுக்கா இந்த build up பண்ணேன் நான்!" தலையில் அடித்து கொண்டாள் அஞ்சலி.

"மச்சி...நல்ல யோசிச்சு பாரு. சச்சினோட wife anjali அப்படி நினைச்சுயிருந்தா??" சிரித்தாள் ரம்யா.

அஞ்சலியும் சிரித்தாள், "அப்படிங்கற?"

*****முற்றும்*******