Dec 21, 2012

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-22


இவர தான் இப்போது....
ஓ காட்!!!

இவர் இல்ல






இவர சொன்னோன். காடு மாதிரி தாடி இல்லாத விக்ரம் பிரபுவ சொன்னேன்.


அவர் ஒரு மாதிரியாய் sideல சிரிக்கும்போது செம்ம அழகாக இருக்கும். படத்தில் அப்படிப்பட்ட காட்சி இல்ல. இருந்தாலும், இந்த ஒன்னு ரெண்டு interviewல சிரிச்சு இருக்காரு!

சிறப்பு அம்சம்: புன்னகை

அடுத்தது....

sun music sam. ஐயோ ராமா! அப்படினு நீங்க சத்தம் போடுவது எனக்கு கேட்குது. இருந்தாலும் சொல்லுவேன். ஒரு மணி நேரம் நிகழ்ச்சியில 2 மணி நேரம் விளம்பரம் போட்டாலும், இவர் எப்ப வருவார்னு பார்ப்பதுண்டு.

சிறப்பு அம்சம்- சிரிப்பு மற்றும் கண்கள்


முந்தைய series

Dec 18, 2012

நடுவுல கொஞ்சம், கும்கி, கடல், எதிர்நீச்சல காணும்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்த பார்த்தேன். எனக்கு சந்தானம் வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது- "இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல"""

விழுந்து விழுந்து சிரிக்கும் காமெடி படம் அல்ல. (உள்ளத்தை அள்ளி தா, அவ்வை ஷ்ண்முகி, மகளிர் மட்டும் படங்களை விடவா இது பெரிய காமெடி படம்) அதுக்குனு படம் நல்லா இல்லேனு சொல்லிட கூடாது. ரெண்டாம் பாதியில் வரும் காட்சிகள் கண்டிப்பா சிரிப்பா இருந்ததுச்சு. முதல் பாதி சற்று மெதுவாய் சென்றது. ஏதோ, edit செய்ய படாத குறும்படம் போல் இருந்துச்சு.

எங்கள் அண்ணி ஆண்ட்ரீயா பாடிய பாடலை படத்தில் காட்டாமல் போனது மிக பெரிய வருத்தம் எங்களுக்கு!
- அகில உலக ஆண்ட்ரீயா ரசிகர் மன்றம்


படத்துக்கு ஓவர் build-up தான் தேவையில்லை என்று நினைக்க தோன்றியது (பாவம், அவங்களும் என்ன பண்ணுவாங்க.....marketing strategy) எனக்கு என்னமோ இந்த படத்துக்கு முன்னோடமாய் வந்த இந்த வீடியோ தான் செம்ம காமெடியாய் இருந்துச்சு

*************************************************************

கும்கி படம் கண்களுக்கு குளிர்ச்சி! அந்த மலை பகுதி, அருவி எல்லாம் செம்ம சூப்பர்! அழகா காட்டியிருந்தாங்க! சலிப்பு தட்டாமல் கதையை நகர்த்தியது சிறப்பு. தம்பி ராமய்யா தான் இந்த படத்துக்கு இரண்டாவது ஹீரோனு நினைக்குறேன். அவர் சொல்லும் ஒவ்வொரு வசனமும் முக பாவனையும் காமெடி கலாட்டா தான்!

அப்போ முதல் ஹீரோ யாரு? இமான் தான்!!!!!!!!!! பாடல்கள் எல்லாம் கேட்ட மாதிரி இருந்தாலும். இந்த படத்தில் வரும் locationகளுக்கு ஏற்றாற்போல் பாடல்கள்!

பிரபு பையன் விக்ரம் பிரபு நல்லாவே நடித்து இருந்தார் (அவரை பற்றி மேலும் தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள் பகுதியில் சொல்கிறேன்)
அந்த புள்ள லட்சுமி மேனன் பரவாயில்லாம நடிச்சு இருக்கு.

************************************************************

கடல் மற்றும் எதிர்நீச்சல் பாடல்களை கேட்டேன். ம்ம்ம்...ம்ம்ம்...

கடல் பாடல்களைவிட
எதிர் நீச்சல் பாடல்களை
விரும்புகிறது
இந்த பாழா போன மனசு

#ஆண்ட்ரீயா தொட்ட எதுவும் வெற்றியை தொடாமல் போனதில்ல#

எதிர்நீச்சல் பாடல் கொஞ்சம் புரியும் வண்ணம் இருப்பதால் என்னவோ. புதுசா எதுவும் இல்ல. ஆனா கேட்க நல்லாயிருக்கு. அதிகாமன ஆங்கிலம் கெட்ட வார்த்தைகளை (censor) செய்து இருக்கிறார்கள். இந்த மாதிரி கெட்ட வார்த்தை உபயோகம் தேவையில்ல. அது ஒன்னு தான் மைனஸ்.

கடல் பாடல்கள் ஒரு மாதிரியாய்...ஏதோ மாதிரி இருக்கு. ஏஆர் தீவிர ரசிகை என்றாலும் மனசு 'கடலை' தாண்டி 'எதிர்நீச்சல்' போட வைக்குது!அந்த மகுடி பாடல் பரவாயில்ல. இந்த கருத்தை சொன்னதற்கு, பொங்கி எழுந்த நண்பர்கள்

பாட்டு கேட்க கேட்க தான் புடிக்கும் என்றார்கள்.

சரி பார்ப்போம்....

பாடல்கூட பரவாயில்லனு தோணுது. ஆனா, கடல் teaser என்ற பெயரில் இதை வெளியிட்டதை தான் என்னால் மன்னிக்க முடியாது.  

மக்களை ''tease' பண்ணுறீங்களா? :(((((((((

Dec 17, 2012

கௌதம் மேனன் படம் செய்வது எப்படி?- சமையல் குறிப்பு

கௌதம் மேனன் படம் செய்வது எப்படி?- உங்களுக்கு தெரிய வேண்டிய முதல் விஷயம்- ஆங்கிலம்

1) locations சேர்க்கவும்- பொங்கலுக்கு வெள்ளை அடித்தாற்போல் ஒரு வீடு, மொட்டை மாடி, கேரளா, கரையோரம், bench, KFC, coffee cafe.

2) dialogues போடவும்- நான் அப்படியே காலி, நீ அவ்வளவு அழகு, I hate you, you don't deserve this, நான் இங்க ஏன் வந்தேன் தெரியுமா?, உனக்கு புரியல.

3) characters கிள்ளி போடுங்க- 37 வயதான பள்ளி மாணவர்கள், 47 வயதான காலேஜ் மாணவர்கள், அழகான ஹீரோயின், முகத்தை முழுதாய் shave பண்ணி மைதா மாவு கணக்கில் முகம் கொண்ட ஹீரோ,ஹீரோ கையில் பை, நடுத்தர குடும்பம் (7 காட்சிகளுக்கு அப்பரம் வசதியான பொன்நிறமான குடும்பமாக மாறனும்)

4) scenes கிளறவும்- பார்த்தவுடன் காதல், சண்டை, பிரிவு, மறுபடியும் காதல், சண்டை பிரிவு, காதல் என்ற பெயரில் ஹீரோயின் காலை தொடனும், மூக்கை தொடனும், பைக் அல்லது கார் ஓட்டனும், ஹீரோயினை கேரளா அல்லது வெளிநாடுகளில் தேடனும்.

இதை அனைத்தையும் செய்தால், உங்களுக்கு சுட சுட நீங்களே சூனியம் வைத்து கொள்ளலாம்!

***************************************************

உஷ்ஷ்ஷ்ஷ்!!! யப்பா! முடியல படத்த பார்த்தபிறகு, பக்க விளைவுகள் ஏராளம். நான் கௌதம் மேனனின் பெரிய ரசிகை. அதனால தான் அவர நம்பி, இந்த படத்துக்கு போனேன். ஆனா....ஐயோ சாமி!!!

VTV படத்தை அணு அணுவாய் ரசித்து எடுத்தவரா இப்படி ஒரு அணுகுண்டை கொடுத்து இருக்கிறாரு!! என்னமோ போங்க, உலகம் அழிய போகுதுனு சொன்னது உண்மையா போயிட போகுது.

 காதல் கதை என்ற பெயரில் எதை காட்டினாலும், ரசிப்பாங்கனு நினைச்சு over confidenceல உலறல் தான் இந்த படம்னு நினைக்குறேன்.

சந்தானம் சில காட்சிகளில் இல்லாத குறையை பார்வையாளர்கள் தீர்த்து வைத்தது தான் செம்ம ப்ளஸ் இந்த படத்துக்கு!

***************************************************
 நாங்கள் அடித்த சில கமெண்ட்கள்

1) ஜீவா அண்ணன்: எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. நல்ல சம்பளம், பெரிய வேலை, சனி ஞாயிறுகூட வேலை பாக்க தேவையில்ல.

நான்: இப்படி தான் எங்களுக்கும் சொன்னாங்க!

2) ஹீரோயின் benchல் உட்கார்ந்தபடி: நான் உன்ன பாக்க வந்தேன். ராதிகாவ பாக்க வந்தேன்.....something something blah blah...பாக்க வந்தேன்.....blah blah....பாக்க வந்தேன்.

நான்: ஐயோ நாங்ககூட தான் நல்ல படத்த தான் பாக்க வந்தோம்!

****************************************************

samantha அழகு. ஆனா, அவங்க குரல் 30 வினாடிக்கு மேல் கேட்க முடியல. ஏதோ hammam சோப் விளம்பர குரல் மாதிரி இருக்கு.

****************************************************

இசை: ஐயோ என்ன பெத்த ராசா, நீங்க மிகப் பெரிய மேதை தான். ஒத்துக்கிறேன். ஆனா, retirement வாங்கிக்கலாமே!! சில பாடல்கள் எல்லாம் தொடர்ந்தாற்போல் 47 நிமிஷத்துக்கு வரது பாருங்க...ஐயோ ரீலு அந்துபோச்சு டா சாமி!

யுவன் குரலில், பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா-னு பாட்டு வரும்போது...

யம்மா!!!!!!!!!! மண்டைக்குள்ள, ஏதோ 10,000 காட்டு யானை ஒரே நேரத்தில் இரும்பின மாதிரி ஒரு உணர்வு அதிர்வு!

*****************************************************

கௌதம் - கிழி கிழி கிழி!!!!!!!!!!!!!!

*****************************************************

இந்த படத்தை பார்க்காதவர்கள், கண்டிப்பா படத்தை பாருங்க! அப்படி பார்த்தால் தான், புரியும் உங்க பாஸ் எவ்வளவு தங்கமான மனுஷன்-னு. நம்ம வாழ்க்கைல வர துன்பம் எல்லாம் ஒன்னுமே இல்லேனு தோணும்.


நீதானே என் பொன்வசந்தம்- (கவுண்டமணி குரலில்) ஆமா ஆமா...நாங்க தான்! நாங்க தான்!

Dec 10, 2012

ஜஸ்ட் சும்மா (10/12/12)

'talaash' படம் பார்த்தேன். நேத்து இரவு படம் பாக்க போனால், இன்னிக்கு மதியம் தான் வெளியே வர முடிஞ்சது. அப்படி ஒரு slow படம். இரண்டு மணி நேரமாக இருந்தாலும், வேகம் ரொம்ப குறைவு. இருந்தாலும், படம் ஓரளவுக்கு பிடித்து இருந்தது. ஒரு முறை பார்க்கலாம். நல்ல கதை, திரைக்கதை ஓட்டத்தை வேகமாக்கி இருந்தால் இன்னொரு 'kahaani' பிறந்திருக்கும்.

படத்தில் பிடித்தது அமீர் தான். அது என்னமோ தெரியல, அவர் எந்த படத்தில் அழுதாலும், மனசு தாங்க மாட்டேங்குது!!:)))))))))))

அமீர் கானுக்கு நீச்சல் தெரியாது இதுவரைக்கும். ஆனால் இந்த படத்துக்காக அவர் கற்று கொண்டாராம்.


********************************************************************************
கொஞ்ச நேரம் முன்னாடி தான் 'நீயா நானா' நிகழ்ச்சியை பார்த்தேன். ஆங்கிலம் பற்றி தலைப்பு.

ஆங்கிலத்தால் நாம் படும் பாடும்
ஆங்கிலத்தை நாம் படுத்தும் பாடும்

ஐயோ ரொம்ப கஷ்டம்!!!

எனக்கு கமல் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது

"உங்க வீட்டில் எத்தன ஜன்னல் இருக்கிறதோ அத்தன மொழிகளை கற்று கொள்ளுங்க. வீட்டு நுழைவு வாசலாக மட்டும் தமிழாக வைத்து கொள்ளுங்க"

இது தமிழுக்காக மட்டும் இல்ல. அவங்கவங்க தாய்மொழியை கற்று கொள்ள வேண்டும். (ஆனா, இப்ப கலப்பு திருமண அதிகம் ஏற்படுவதால், இன்னும் சிக்கல். என்னுடன் பணி புரியும் ஒருத்தியின் தந்தை சீனர். அம்மா Philippines நாட்டை சேர்ந்தவர். ஆக, அவளுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியுமா? பாவமாக இருந்தது கேட்க!)

****************************************************************************

சமீபத்தில் ஒரு 10 நாள் சுற்றுலா போக வாய்ப்பு கிடைத்தது. இத்தாலி, சுவிட்ஸலாந்து மற்றும் france.

கடவுள் 'அழகானவர்களை' படைத்து மொத்தமாய் இத்தாலியை போட்டுவிட்டார் போலும். பெண்கள், ஆண்கள், பெரியவர்கள், சின்னவர், குழந்தை எல்லாருமே அழகா இருக்காங்கப்பா!!!:)))

சுவிட்ஸலாந்தில் பிடித்தது பனி. ஐயோ எனக்கு அழுகையே வந்துடுச்சு. இரண்டு வருடமாய் சம்பாதித்த சம்பளத்தில் சேர்த்து வைத்த பணத்தில் போனதால், ஒரு வித வலி கலந்த சந்தோஷம். ஒவ்வொரு முறையும் பனியை ஜன்னல் வெளியே பார்க்கும்போது, இரவு தூக்காமல் கிடந்த நாட்கள், தன்மானத்தை புதைத்து boss சொல்வதை கேட்ட வார்த்தைகள், கஷ்டப்பட்டு attend பண்ண meeting எல்லாமே ஞாபகத்துக்கு வந்தது. அந்த பனியை பார்த்து கொண்டே ஒரு கப் சூடா hot chocolate குடித்தால் தெரியும் பாருங்க சொர்க்கம்..priceless!!!:)))))))

franceல் ஒரு படம் பார்க்க போனோம். 'the impossible'- சுனாமியில் சிக்கி தவித்த ஒரு குடும்பத்தின் கதை. படம் ஆரம்பித்த 10 நிமிடத்தில் அழ ஆரம்பித்த நான் கடைசி காட்சி வரைக்கும் அழுகையை நிறுத்த முடியவில்லை. என்ன ஒரு நடிப்பு, சம்பவங்கள்...ச்சே...chanceஏ இல்ல. பக்கத்துல இருந்த french guys எல்லாம் அழ, ஒரே சோக பூமியா போச்சு. ஒவ்வொரு காட்சியிலும் மனசு பதறது, கைகால் உதறுது. படம் முடிந்து பார்த்தால், கழுத்தில் போட்டிருந்த scarf நனைச்சு போச்சு.

*********************************************************************************

Nov 22, 2012

jab tak hai jaan, துப்பாக்கி, போடா போடி:))

இரண்டு வாரங்களில், மூன்று படங்கள்! (உனக்கு வேலையில்லையா?)
ஆமா இருந்துச்சு, ஆனா படம் பார்ப்பதும் ஒரு கடமை!ஹிஹிஹி...

1) jab tak hai jaan- ஆப்பு நம்மில் மேல் வைக்குறான்!

80 வயதிலும் இயக்குனர் யாஷ்ஜி காதல் படம் எடுத்தது பாராட்டுக்குரியது. பாவம், அவர் போயிட்டார்! நல்ல படங்களை கொடுத்தவர். அவருக்கு மரியாதை செய்வது எல்லாம் சரி தான். அதுக்குனு அவர் எடுத்த எல்லா ஷாட்-களையும் படத்தில் வைத்து மூன்று மணி நேரம் கொடுமை செய்தது எல்லாம் தாங்க முடியல!! மூன்று மணி நேரம்....யப்பா...ஏதோ பாஸ் மீட்டிங்-ல இருந்த மாதிரி இருந்துச்சு. தலவலி தான் மிச்சம்:(((

ஏ.ஆர்!!!!!!!!! என்ன ஆச்சு!!?? ஒரு பாட்டு கூட மனசுல நிக்கல! அடங்க போங்க தல, உங்க மேல ரொம்ப வருத்தம்:(

படத்துல எதுக்கு சண்டை போட்டுக்கிறாங்க? அப்பரம் விபத்து...இரண்டாவது விபத்து....அதுக்கு அப்பரம் சாலை சீன் வரும்போதெல்லாம் மனசு 'பக் பக்' இருந்துச்சு! எங்க மறுபடியும் விபத்து சீன் வச்சு நம்மள ஓரே அடியாய் கொன்னுடுவாங்களோனு பயம்!!!

ஒன்னுமே சொல்றதுக்கு இல்ல! காட்சிகளில் ஒரு ஆழம் கிடையாது! படத்துக்கு ஒரே ஒரு ப்ளஸ்- அனுஷ்கா ஷர்மா. jab we met படத்தில் கரீனா கதாபாத்திரம் மாதிரி ஜாலி ரோல். நல்லா செய்து இருந்தாங்க அனுஷ்கா. bridge கீழே ஷாருக் வெடிகுண்டை அகற்றும்போது, அனுஷ்காவின் ஜாலி வசனங்கள் நல்லா இருந்துச்சு.

வெடிகுண்டு wire தான் கலர் கலரா இருந்துச்சு, மத்தபடி படத்தில் எந்தவித சுவாரசிய கலரும் கிடையாது!

jab tak hai jaan- பானி பூரி போச்சே!!!!!!!!!

2) துப்பாக்கி

35 மார்க் வாங்கும் பையன் 55 மார்க் வாங்கினால், அந்த வகுப்பு ஆசிரியருக்கும் என்ன மகிழ்ச்சி கிடைக்குமோ, அதே மகிழ்ச்சி தான் ஒரு ரசிகையாய் எனக்கு கிடைத்தது. இருந்தாலும், 100க்கு 100 மார்க் வாங்கும் பசங்களோடு தான், நிறைய பேர் ஒப்பிடுவாங்க.:((((((

பல தோல்வி, மொக்கை படங்களை கொடுத்திருந்தாலும், இந்த முறை முடிந்த அளவு நல்லா செய்து இருக்கிறார் விஜய்!வித்தியாசமா ஒன்னுமே பண்ணல. அடக்கி வாசித்து இருக்கிறார். அது போதுமே!
அழகாய் சிரிக்கிறார்,
அளவாய் ஆடுகிறார்,
அநியாயத்திற்கு இளமையாய் தெரிகிறார்.

பார்த்து புளிச்ச போன கதையாய் இருந்தாலும், சூர்யவம்சம் தேவையாணி இட்லியை வைத்து உப்புமா செய்துவதுபோல், முருகதாஸ் ஏதோ ஒரு மாதிரியாய் கலவை செய்து ரசிக்கும் வண்ணத்தில் படம் எடுத்து இருக்கிறார்.

விஜய் தொடர்ந்து இப்படியே நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். தப்பி தவறிகூட 'பிரபுதேவா' 'பேரரசு' போன்றவர்களை கனவிலும் நினைக்காமல் இருப்பது நல்லது!


துப்பாக்கி- பீரங்கி
(ps: google google பாடலுக்கு இன்னும் நல்லா நடனம் அமைத்திருக்கலாம்!)

3) போடா போடி

நிறைய பேருக்கு படம் பிடிக்கல. எனக்கு பிடிச்சு இருந்ததுச்சு. நான் சிம்பு ரசிகை அல்ல! இளமை துள்ளும் கதை களம், வசனங்கள், பாடல்கள் என்று பல ப்ளஸ்! முதல் பாதி கொஞ்சம் அருவையாக இருந்தாலும், ரெண்டாவது பாதி தூள்!

பிடிச்ச விஷயங்கள்

1) படம் 2மணி நேரம் தான்!

2) குழந்தை பிறக்கும் காட்சியில், சிம்பு துடித்து கண்ணீர் விடும் நடிப்பு- நல்லா இருந்துச்சு VTVல அந்த பெஞ்சல உட்கார்த்து அழுவும் காட்சி போல்.

3) ஹீரோயின் வரு- பார்க்கவும், சிரித்தாலும் நாட்டாமை போல் இருந்தாலும், துள்ளலான நடிப்பு பார்க்க கியூட்டா இருந்ததுச்சு. சண்டை போட்டு கொள்ளும் காட்சிகளில் பிச்சி வாங்கியிருக்கிறார்!! டான்ஸ் என்றால் என்ன தெரியுமா?நீ ஆடுற டப்பாங்குத்து கிடையாது என நாக்கை மடித்து நக்கல் செய்யும் விதம் அருமை.

4) படம் முடிந்தவிதம். டான்ஸ் போட்டியில் கோப்பையை வென்ற மாதிரி காட்டாமல் முடித்தவிதம் இயல்பு!

5) லண்டன்

6) தரணின் பின்னணி இசை

பிடிக்காத விஷயங்கள்:

1) வரு- கொஞ்சம் வேகத்தை குறைத்து பேசலாம். சில காட்சியில் ஒல்லியாக இருக்கிறார். சில காட்சியில் வேறு மாதிரி இருக்கிறார். continuity missing!!

2)முதல் பாதியின் திரைக்கதை ஓட்டம்

3) முதல் பாதியில் வரும் சிம்பு

4) வரு-வின் முடி அலங்காரம். காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலா பால்-கும் அதே ஸ்டைல். நான் ஈ படத்தில் ஈ-கும் அதே முடி ஸ்டைல்! 

போடா போடி- இளையர்களுக்கு பிடிக்கும் (அப்போ பிடிக்கலனா வயதானவர்களானு கேட்க கூடாது!!!)



Nov 6, 2012

உன்னைய, எனக்கு பிடிக்கல

சஷித்தாவிற்கு காலை முதல் கைகள் பயத்தால் நடுங்கி கொண்டிருந்தன. வீடு முழுதும் உறவினர்கள் கூட்டமும் சத்தமும் நிரம்பியிருந்தன. அலங்காரம் ஒரு புரம் நடந்தது, சமையல் ஒரு புரம் நடந்தது.


சஷித்தாவிற்கு பயம்.

சஷித்தா மோகனுக்கு குறுந்தகவல் அனுப்பினாள் - 'ஏதாச்சு பண்ணு? எனக்கு பயமா இருக்கு. கல்யாணத்த நிறுத்து. நான் உன்னைய பாக்கனும்.' விறுவிறு என்று குறுந்தகவல் அனுப்பினாள் விரல் நடுக்கத்தால் தவித்திருந்தபோதிலும்.

அறைக்குள் நுழைந்த அம்மா, "சஷி, சீக்கிரம் டி. ரெடியாகு. பூஜைய ஆரம்பிக்க போறாங்க." அவசரப்படுத்தினார். ஒவ்வொரு விஷயமும் மும்முரமாக நடக்க, அவளின் இதயத்துடிப்பு அதிகரித்தது. கல்யாணத்தை தானே நிறுத்திவிடலாமா என்று நினைத்து சஷி, "அம்மா....உங்ககிட்ட...நான்..." என்றாள்.

அம்மா, "என்ன சொல்லு?"

அம்மாவை ஒரு முறை பார்த்தாள் சஷித்தா.

அம்மா மறுபடியும், "என்ன டி சொல்லு?" அலமாரியில் இருந்த சேலையை எடுத்தாள்.

சஷித்தாவிற்கு பயம் உடம்பெல்லாம் பரவியது. சஷித்தா, "ஒன்னுமில்ல." பயம் அவளை பேசவிடாமலும் தடுத்தது.

அம்மா, "சரி சரி. ரெடியாகு சீக்கிரம்." என்று சொல்லிவிட்டு அறை கதவை மூடிவிட்டு சென்றாள். கதவை மூடிவிட்ட மறு வினாடி, ஓடி போய் மெத்தையில் உட்கார்ந்து தலையணை கீழ் ஒளித்து வைத்திருந்த கைபேசியை எடுத்து பார்த்தாள்.

மோகனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அவளுக்கு கோபமும் அழுகையும் ஒரே நேரத்திலும் வந்தது. கண்கள் சற்று குளமாகின. கண்களை துடைத்து கொண்டு சேலையை கட்டினாள். அம்மா அதற்குள் கதவை கடன்காரன் தட்டுவதுபோல் அதிரடியாய் தட்டி, "ஹேய் என்னடி பண்ணுற? சீக்கிரம் வா."

சேலையை சரியாக கட்ட முடியாமல் நின்று கொண்டிருந்த சஷித்தா, "இது சரியா வரமாட்டேங்குது!"

அம்மா நக்கலாய் சிரித்து கொண்டே, "ஐயோ ஐயோ!இதகூட கட்ட தெரியல...."

எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினார். இப்போது ஒரு எரிச்சல் கலந்த பயம் உண்டாகியது. நேராககூட நிற்காமல் அலச்சியமாய் நின்றாள் சஷித்தா. மெத்தையில் கிடந்த கைபேசியை சற்று எட்டி பார்த்தாள். மறுபடியும் ஏமாற்றம்.

அம்மா, "சரி சரி...இப்ப நல்லா இருக்கு. வா!" என்று சஷித்தாவை அழைத்து சென்றாள் பூஜை இடத்திற்கு. கூடி நின்ற அனைவரும் விளையாட்டாய் கிண்டலடித்தனர். புகைப்படம் எடுத்தனர். அவளுக்கு ஏதோ போல இருந்தது. கண்களிலிருந்து வழிய துடிக்கும் கண்ணீரை கஷ்டப்பட்டு தடுத்தாள்.

வீடியோ எடுத்து கொண்டிருப்பவர், "யம்மா பொண்ணு, கொஞ்சம் வெட்கப்படுற மாதிரி சிரிங்க." கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் கலகலப்பாய் சிரிக்க, சஷித்தாவிற்கு மட்டும் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் அவளைவிட்டு பிரிந்து போவதுபோல் உணர்ந்தாள். லேசாக மயக்கம் வந்தது.


மாப்பிள்ளை வீட்டார் அங்கே இருந்தனர்.நடக்க வேண்டிய பூஜைகள் முடிந்தன. ஒரு நொடி கூட, சஷித்தா சந்தோஷமாக இல்லை. புகை, கூட்டம், அதிக சத்தம் என அவளை மேலும் எரிச்சல் ஊட்டின. அங்கே அமைதியாய் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளையிடம் உண்மையை போட்டு உடைக்கலாம் என தோன்றியது அவளுக்கு. கூடியிருந்த கூட்டம் அவளுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை.


அறைக்குள் சென்று பார்த்தால், ஒரு குழந்தை பட்டாளமே விளையாடி கொண்டிருந்தது. அவளுக்கு சற்று ஓய்வு எடுக்க வேண்டும என தோன்றியது. குழந்தைகளை வெளியே போகுமாறு சொன்னாள். யாரும் கேட்காமல் ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த சித்தி, "யம்மா சஷி, பாப்பாவ பாத்துக்கோ" என்று கூறிவிட்டு கை குழந்தையை சஷித்தாவிடம் கொடுக்க, அவள்


"சித்தி, ப்ளீஸ்!! எல்லாரையும் வெளியே போக சொல்லுங்க. நான் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் பண்ணனும்?"

சித்தி கிண்டலாய் சிரித்து கொண்டே, "இதுக்கே இப்படினா? அப்பரம் நாளைக்கு நைட் எப்படி?" என்று கண் அடித்தபடி பிள்ளைகளை வெளியே போக சொன்னார். ஒரு வழியாக அனைவரும் வெளியே சென்றனர். மெத்தையில் படுத்தாள். ரொம்ப யோசித்தாள். தமிழ் படங்களில் ஓடிபோகும் காட்சிகள் அனைத்தும் கோர்வையாய் அவள் சிந்தனையில் ஓடின.

மோகனுக்கு ஃபோன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. இதய துடிப்பு அதிகரித்தது. மறுபடியும் ஃபோன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. தொடர்ந்தாற்போல் 27 missed call கொடுத்தாள். கடைசியாக ஒரு குறுந்தகவல் அனுப்பினாள்.


"நான் செத்தாகூட உனக்கு கவலையில்ல." என்று அனுப்பிவிட்டு அனாந்து படுத்தபடி இருந்தாள். அப்படியே தூங்கிவிட்டாள். அன்று முழுதும் சாப்பிடவில்லை. இரவு ஆனது. சொந்தக்காரர்கள் கூட்டம் இன்னும் அதிகமானது. அந்த நெரிசலிலும் எப்படியோ ஓடி ஒளிந்து மொட்டை மாடிக்கு சென்றாள். கைகளை கட்டியவாறு மறுபடியும் சிந்தனை ஓடியது. மொட்டை மாடியிலிருந்து கீழே பார்த்தாள்.

யாரோ ஒருவரின் கை அவள் தோள்பட்டையை தொட்டது. திரும்பி பார்த்தாள் சஷித்தா.

"மாப்பிள்ளையா அழகா எவ்வளவு அமைதியா உட்கார்ந்து இருந்தேன் இன்னிக்கு. நீ ஒன்னுமே சொல்லல!!" பெருமிதம் புன்னகையுடன் மோகன் கூறினான்.

சஷித்தா,"நமக்கு இந்த கல்யாணம் வேண்டாம்!!" என அவனை இறுக்க கட்டிபிடித்து கொண்டாள்.

அவன் ஆச்சிரியத்துடன், "ஏன்? என்ன ஆச்சு?"

அவள், "தெரியல. ஏதோ ஒரு பயம்."

அவன் புன்னகையித்து கொண்டு, "என்ன பயம்?"

சஷித்தா, "பயம் என்ன புயலா? புதுசா பெயர் வைக்க?"

அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

சஷி, "சிரிக்காத நீ. உனக்கு இன்னிக்கு எத்தன missed calls, sms அனுப்பியிருப்பேன்? ஏன் டா எடுக்கல?"

அவன், "சாரி மா. வீட்டுலே மறந்து வச்சுட்டு வந்துட்டேன். தம்பி இப்ப தான் எடுக்க போயிருக்கான்! ஆமா...எதுக்கு sms missed calls?"

அவள், "உன்கிட்ட பேச தான்?"

அவளின் மனக்குழம்பங்களை புரிந்து கொண்டான் மோகன். அவளது முடி காற்றில் பறக்க, அதை காது மடல்கள் பின்னாடி அழகாய் ஒன்று சேர்த்தபடி, அவன், " சஷி, புரியுது மா உன் பயம். this is a huge thing. ஆயிரம் பேர் சுத்தி நின்னாலும், பயமா தான் இருக்கும். பெரிய responsibility. life-changing moment. but you know what, we aren't going to feel like that. நம்ம தான் இத பத்தி நிறைய பேசி இருக்கோமே. we are going to be the best of best friends!"

அவளுக்கு சற்று குழம்பங்கள் நீங்கியது போல் தெரிந்தாலும் முழுதாய் சந்தோஷப்பட முடியவில்லை.

அவன் தொடர்ந்தான், "அந்த ஒரு பெரிய moment கடந்து போச்சுனு, that's it! அவ்வளவு தான் மா. it's easy. நான் தான் உன் பக்கத்துலே இருக்க போறேனே. அப்பரம் என்ன பயம். cheer up da!" என அணைத்தபடி நின்று கொண்டிருந்த சஷித்தா நெற்றியில் 'இச்' வைத்தான்.

அவன், "so now feeling better?"

அவள், " but..but..."

புருவங்களை சுருக்கி அவன் என்ன என்பதுபோல் தலை அசைத்து கேட்டான்.

அவள், " சித்தி வந்து...இதுக்கே tiredஆ போனா எப்படி நாளைக்கு நைட் அப்பரம் எப்படினு சொல்லிட்டு நக்கலா சிரிச்சுட்டு போனாங்க. செம கடுப்பா இருந்துச்சு!" என்று கூறிவிட்டு எரிச்சல் அடைந்தாள்.

அவனும் விளையாட்டாய், "ஆமா ஆமா.. ரொம்ப correct சித்தி சொன்னது. நீ tired அப்படிலாம் excuse சொல்ல முடியாது. நான் ஒத்துக்க மாட்டேன்!"


அவள் முறைத்தவாறு, "மேல கைய வச்சே, கொன்னுடுவேன் idiot!!" என்று அவனை தூர தள்ளிவிட்டாள்.

"எப்படி கொல்லுவே?" சில்மிஷ பார்வையுடன் கண் சிமிட்டினான்.

அவள், "உன்னைய, எனக்கு பிடிக்கல. போ டா!!!" என்று விளையாட்டாய் கூறி மறுபடியும் கட்டியணைத்து கொண்டாள்.

*முற்றும்*

Nov 5, 2012

எனக்கு பிடிச்ச tweets!!

இந்த டிவிட்டரில் வரும் காமெடி போஸ்ட் இருக்கே..ஹாஹாஹா... என்னதான் ஒரு வகையில் இந்த பேஸ்புக், டிவிட்டர் எல்லாம் நம்ம நேரத்தை வீணாக்கினாலும், நம்மை பல வகையில் புதுசாக சிந்திக்க வைத்துள்ளது.

140 characterல் நறுக்கனு டிவிட் போடுவது ஒரு தனி கலை!

சமீபத்தில் நான் படித்து ரசித்தவை

1) உங்களுக்கு ஈகோவும் பிடிவாதமும் அளவுக்கு மீறி உள்ளதா...கைய கொடுங்க.... நீங்க மேனேஜராக போறீங்க!!


















-@rocket_rajesh




2) ஓவரா படிச்சவன்கிட்டையும் பேச முடியாது, ஓவரா குடிச்சவன்கிட்டையும் பேச முடியாது.
- @thoatta

3)  மனைவி பிரசவ அறைக்குள் இருக்கும் போது எவனுமே முழு நாத்திகன் இல்லை.
-@thoatta

4) 'உ'ருவத்தையும், 'ஊ'த்தியத்தையும் பார்த்து காதல் செய்தால் கடைசியில்
உ,ஊ ஊ ஊ ஊ ஊ ஊ தான்!
- @RealBeenu

5) தனக்கு கொடுத்த வேலையை ஒழங்காக செய்யாதவர் பட்டியலில் முதலில் நிற்கிறார் கடவுள்
-@thoatta

6) பெண் பெயரில் ஆண் தான்,
உன் பெயர் என் அலைபேசியில்
- @arattaigirl

7) காதலிக்க கண்கள் போதும்
கன்டின்யூ பண்ணதான் காசு வேணும்.

- @arattaigirl



























Oct 19, 2012

கொஞ்சம் காதல், கொஞ்சும் காதல்- சிறுகதை

ஷாரன் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தான். களைப்பாக இருந்ததால் சோபாவில் விழுந்தான் ஷாரன். மதியம் முதல் அவன் மனதில் ஓடி கொண்டிருந்த சிந்தனை அவனுக்கு இன்னும் சோர்வை தந்தது. கண் மூடி சற்று நேரம் இருந்தான். சிறிது நேரம் கழித்து, கண்விழித்து பார்த்தான்.

ரேகா எங்குமில்லை. தனது அறை கதவை திறந்து கொண்டு சென்றான். ஏசி குளிர் காற்று அவனை வரவேற்றது. ரேகா கண்ணாடி மேசையில் முன்னாடி நின்று கொண்டிருந்து ஆபிஸ் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டே கைபேசியில் பேசி கொண்டிருந்தாள்.

"yes yes. ஆமா ஆமா...அந்த file தான்..." என்றவள், ஷாரன் வந்ததை பார்த்து 'ஹாய்' என கை சைகை செய்து புன்னகையித்தாள். tieயையும் கைகடிகாரத்தையும் கழட்டி கண்ணாடி மேசையில் வைத்தவன் ரேகாவை கண்கொட்டாமல் பார்த்தான்.

ஃபோனில் பேசிகொண்டிருந்ததால், ரேகா, 'என்ன' என்பதுபோல் விழிகளால் அவனை பார்த்து கேட்டாள். வாடிய முகத்துடன் இருந்த ஷாரன் 'ஒன்னுமில்ல' என்று தலையாட்டினான். பக்கத்தில் இருந்த துண்டை எடுத்து கொடுத்தாள் ஷாரனிடம்.

குளிக்கும்போது கூட அதே சிந்தனை ஷாரனுக்கு. ஏதோ ஒரு சின்ன குற்ற உணர்ச்சி அவனை வாட்டியது. குளித்து முடித்து வெளியே வந்தான்.

சட்டையை மாற்ற முற்பட்டபோது, தடுத்தாள் ரேகா.கைபேசியில் பேச்சை தொடர்ந்தவாறே, "ஆமா சார்...அத மாத்திடுங்க. change that to 2nd week of november." என்றவள் ஷாரனை பார்த்து புருவங்களை சுருக்கினாள்.

அவனை உட்கார வைத்து, அவன் மேனியில் இருந்த சின்ன சின்ன தண்ணீர் துளிகளை நன்கு துடைத்தாள். "சார்...don't forget to email the team. அப்பரம் அந்த logistics பத்தியும்..." துடைத்து முடித்துவிட்டு, புன்னகையித்தாள் ரேகா. மெத்தையில் இருந்த சட்டையை எடுத்து கொடுத்தாள் ரேகா.

"ஓகே...wait wait..i will check my laptop." என்றவள் கண்ணாடி மேசை அருகே சென்றாள்.  அவளே விழி மூடாமல் பார்த்தான் ஷாரன். கண்ணாடி மேசையில் முன்னாடி நின்று கொண்டிருந்த ரேகாவை பின்னாடியிலிருந்து அணைத்தான் ஷாரன்.

அவன் செயலை எதிர்பார்க்காத ரேகா, கண்ணாடியை பார்த்து புன்னகையித்தான். அவனும் சற்று சிரித்தான். இருந்தாலும், அவன் முகத்தில் தெரிந்தது ஏதோ ஒரு வாட்டம். அவள் இன்னும் ஆபிஸ் விஷயங்களை ஃபோனில் பேச, அவன் அப்படியே அவளது தோளில் முகம் சாய்த்தான்.பத்து நிமிடங்கள் அப்படியே கிடந்தான். ரேகாவும் பேசி முடித்து ஃபோனை 'கட்' செய்தாள்.

"oh man, finally this is done. sorry ஷாரன். இந்த project details இன்னிக்கு nightக்குள்ள அனுப்பி ஆகனும்." திரும்பி நின்று அவன் முகத்தை பார்த்து சொன்னாள்.

"it's ok ma." என்றான்.

"how was your day?" என்றவள் லேப்டாப்-பை சரி செய்து பைக்குள் போட்டாள்.

அவன், "நீ சந்தோஷமா இருக்கீயா?"

அவனது கேள்வி அவளுக்கு புரியவில்லை.  சிரித்தவள்,

"புரியல. என்ன கேட்குற?"

"do you still love me?"

அவள், "என்ன டா ஆச்சு?"

ஷாரனின் வாடிய முகத்தை பார்த்தவள், அவனது கன்னங்களில் கைவைத்து,

"you don't seem normal. office-ல problem ஆ?"

அவன், "இல்ல..."

அவள், "என் வீட்டு ஆளுங்கள வர வழியில பாத்தீயா?"

அவன், "இல்ல..."

அவள், "அப்பரம்?"

அவன், "இன்னிக்கு ஆபிஸ்ல ஒரு magazine படிச்சேன். are you a lovable husband??னு. அதுல test இருந்துச்சு. நான் செஞ்சு பாத்தேன். 20க்கு 4 மார்க் தான் கிடைச்சது. "

அதை கேட்டதும், அவள் வாய்விட்டு சத்தம் போட்டு சிரித்தாள்.

அவள், "இதுக்கு தான் இவ்வளவு சோகத்த புழியுறீயா?"

அவன் வருத்தத்துடன், "சிரிக்காத. உண்மைய சொல்லு. I am not a good husband, right?"

"ஹாஹாஹா!! இல்ல-னு சொன்னா என்ன பண்ணுவ? ஆமா-னு சொன்னா என்ன பண்ணுவ? எதிர் கேள்வி கேட்டாள்.

"உன் வீட்டுல சண்டை போட்டு வந்துட்ட. இந்த ரெண்டு வருஷத்துல உன்னைய சரியா பாத்துகிட்டேனானு தெரியல. இன்னிக்கு தான் வலிச்சது. பயமாக இருக்கு. நான் உன்னைய விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி இருக்கு." பேசியவாறு ஷாரன், ரேகாவின் விரல்களை பிடித்தான்.

ரேகா அவன் அருகே சென்று, தனது கைகளை அவன் கழுத்து பின்னாடி போட்டு, "என்னைய....அமெரிக்காவுல மைக்கல் ஜாக்சன் கூப்டாகோ, ஜாப்பானுல ஜாக்கி ஜான் கூப்டாகோ" என்றவள்,

அவளது மூக்கால் அவனது மூக்கை உரசி,

"என் கெர்ர்ர்ர்ரகம் உன்கிட்ட வந்து மாட்டிகிட்டேன்." என்று அவனது உதட்டில் இதழ் பதித்தாள்.

முத்தம் கொடுத்த உற்சாகம் அவனது கவலைகளை போக்கியது.  வெட்கம் படர்ந்த கண்களால், அவன், "என்ன சொல்ல வந்தேனு மறந்துட்டேன்." என புன்னகையித்தான்.

"லூசு, don't feel gulity da. and ரொம்ப நல்ல பையனா மாறாத. உனக்கு அந்த role suit ஆகாது!" என்றாள் அவனது கன்னங்களில் செல்லமாய் அடித்தவாறு.

"இப்ப போய் சாப்பிடு, செல்லம்" அவனது தாடையை பிடித்து கொஞ்சினாள்.

"அப்போ... நான் நல்ல husband தானே?" என மறுபடியும் கேட்க, ரேகா

"ஐயோ ராமா! என்னைய ஏன் இந்த மாதிரி களுசட பசங்களோட கூட்டு சேர வைக்குற!!!" என்றாள்.

மறுபடியும் ஷாரன் வாய்விட்டு சிரித்தான்.

ரேகா, "நீ இப்ப போய் சாப்பிட போறீயா? இல்லையா?"

ஷாரன், "வேண்டாம்."

அவள், "ஏன் வேண்டாம்?"

ஷாரன், "ஊட்டிவிடேன்?"

அவள், "ஐயாவுக்கு, ஓவர் romance கேட்குதா? nothing doing. இப்ப டைம் 9pm. viren-jeevika ஹிந்தி சீரியல்  பாக்குற நேரம். ஷாருக் கானே வந்து ஊட்டுவிட சொன்னாலும், நோ நோ நோ!!!"

தொடர்ந்தாள், "இப்ப நீயா கிச்சன்குள்ள போற. தட்ட எடுக்குற. சாப்பிட்டு எல்லாத்தையும் கழுவி வைக்குற." என்றவள் படுக்கையில் இருந்த தலையணைகளை சரிசெய்தாள்.

அவள், "ஆமா! அந்த 4 மார்க் வாங்கினேனு சொன்னீயே? எதுக்கு அந்த 4 மார்க் கிடைச்சது?"

அவன், "பொண்டாட்டி சொல்ற மொக்கை ஜோக்கு-களுக்கு சிரிப்பவரா நீங்கள்? 4 மார்க்ஸ்!!!"

அவள், "அட பாவி!!!" என்றவள் படுக்கையில் கிடந்த தலையணைகளை ஷாரன் மீது விளையாட்டாய் வீசினாள்.

*முற்றும்*

Oct 10, 2012

காதல் கவிதை-55





கோயிலில் நீ சாமிகும்பிட்டு
திரும்பி பார்க்கையில்
நான் உன்னையே பார்த்து கொண்டிருந்தபோது
'என்ன'? என்று உன் கண்கள் கேட்டன.


உன் காது அருகே சென்று

'நீ ரொம்ப அழகா இருக்கே'
என சொன்னபோது
வெட்கம் கலந்த முறைப்புடன்
நீ என்னை பார்த்தாய்
நான் சொர்க்கத்தை பார்த்தேன்!

Oct 8, 2012

இங்கிலிஷ் விங்கிலிஷ்



நிறைய சிரிப்பு, கொஞ்சம் புன்னகை, நிறைய கைதட்டல்கள், கொஞ்சம் கண்ணீர்- இங்கிலிஷ் விங்கிலிஷ் பார்க்கும்போது ஏற்பட்ட, நடந்த, உணர்ந்த விஷயங்கள். எங்க ஆரம்பிக்கறது எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியல.

மனசுக்கு சந்தோஷத்தையும் அதே சமயம் ஒருவித வலியையும் தந்த படம்! பெண் இயக்குனர் படம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் இதில் ஶ்ரீதேவி!!

ஶ்ரீதேவி- எனக்கு இந்த பெயரை டைப் பண்ணும்போதே சிலிர்க்கிறது! படத்தில் ஆரம்பக்காட்சியில் எழுந்து, காபி போட்டு, செய்தித்தாள் படித்து காமிரா முன்னாடி close-up ஷாட்-டில் தான் முகத்தை முதல் முதலில் காட்டுவார். அப்போது ஒரு பிண்ணனி இசை வரும் பாருங்க!! மெய்சிலிர்த்துவிட்டேன். 15 வருஷம் காத்திருந்தபின் கிடைத்த தவம்!

பிடித்த இடங்கள்

1) கணவர், bottleல் தண்ணீர் இல்லை என்று மேசையில் வைத்துவிட்டு, அதை சரியாக வைக்காமல் குளிர்சாதன பெட்டியிலிருந்து என்னொரு பாட்டிலை எடுத்து குளிர்சாதன பெட்டியை சரியாக மூடாமல் கைபேசியிலே பேசி கொண்டு போகும் நேரம், ஶ்ரீதேவி அவர் பின்னாடியே சென்று எல்லாத்தையும் சரி செய்வார்!!! class acting!!!

2) அமெரிக்காவில்,  சாப்பாடு வாங்க தெரியாமல் அழுது கொண்டே வெளியே ஓடி வந்து ஒரு பெஞ்சில் உட்கார்ந்து விரல்களும் உதடுகளும் நடுங்கி கொண்டே அழும் காட்சி.....class acting!!!

3) தான் ஒரு 'entrepreneur' என்று சொல்லி கொண்டே வீடு திரும்பும்போது கண்ணில் தெரியும் தன்னம்பிக்கை!!! class acting!!

4) கடைசில் ஆங்கில வகுப்பு தேர்வுக்கு செல்ல முடியாது, வீட்டில் இருக்கும் வேலையால். அப்போது ஶ்ரீதேவி, "புடிச்ச பாடத்துல fail ஆகி, இன்னொரு பாடத்துல pass ஆகி என்ன பயன்?" அப்படினு கேட்கும்போது முகத்தில் காட்டிய உணர்வு....class acting!!


இப்படி படம் முழக்க உலக தரத்தில் ஒரு நடிப்பு! ஶ்ரீதேவி மட்டும் அல்லாமல் மற்ற துணை நடிகர்கள் எல்லாருமே அற்புதம்!

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த வசனங்கள்.

1) ஆம்பள சமைத்தால் அது கலை. பொம்பள சமைத்தால் அது கடமை!!! (கை தட்டி ரசித்த வசனம்)

2) ஶ்ரீதேவி: உன்கூட நான் என்னைய french fries சாப்பிட சொல்றீயா?
french guy: french fries, french சாப்பாடு இல்ல. அது அமெரிக்காரன் கண்டு பிடிச்சது.

3) why india, not 'the india'? why america, 'the united states of america?' என்று நெத்தியடி வசனங்கள் படம் முழுக்க தூவி இருக்கிறார் இயக்குனர்!!

அப்பரம் படத்துல குறைகளே இல்லையா??

இருந்திருக்கலாம்.
காதலுக்கு கண்ணு இல்ல. குறைகளை பார்க்காது.
ஶ்ரீதேவி நடிப்பின் மேல் இருக்கும் காதல், என்னை எந்த குறைகளை பார்க்கவிடவில்லை. :)))))))))

நல்ல படத்த எத்தன தடவ வேணும்னாலும் பார்க்கலாம்!!

Sep 29, 2012

ஜஸ்ட் சும்மா (29/9/12)

போன சனிக்கிழம எனது பிறந்தநாள்.
விஷயம் என்னவென்றால் வேலை பார்க்கும் இடத்திலும் சரி, சில நண்பர்களும் சரி வாழ்த்து சொல்லாமல்

"gaya, you should grow up!" என்றார்கள்.

அதாவது நக்கல் நையாண்டி செய்யாமல், விளையாட்டத்தனமாய் இல்லாமல் இருக்கனுமாம். சரி, நானும் ரொம்ப சீரியஸா வாழ்க்கைல இருக்கனும் சொல்லி ஒரு மூனு நாள் ரொம்ப சீரியஸா இருந்தேன்.

அதாவது, கெக்கபெக்க என்று சிரிக்காமல், அளவோடு சிரித்தேன்.
facebookல் சீரியஸ் comments மட்டும் போட்டேன்.
காமெடி, நக்கல் எதுவும் செய்யாமல் பேசாமல் இருந்தேன்.

ஆனா, மூன்று நாளைக்கு அப்பரம் முடியல!!!
அட போங்கடா நீங்களும் உங்க சீரியஸ் வாழ்க்கையும்....

***********************************************************************************
heroine படம் பார்த்தேன். ரொம்ப புடிச்சு இருந்துச்சு! வசனங்கள் தான் டாப்!! kareena kapoorம் saif ali khanம் சேர்ந்து எழுதியோ கதையோ!!

***********************************************************************************
இந்த மாசம் புரட்டாசி விரதம். ஒரு மாதம் சைவம். முடியல!!! கோழி பிரியாணி கனவுல பறக்குது! ஒரு மிகப்பெரிய கோழி பிரியாணி பிரியராக இருந்தாலும் என் பிறந்த நாள் அன்று கோழி பிரியாணி சாப்பிட முடியாது. (புரட்டாசி மாதத்தில் தான் எப்போதுமே பிறந்த நாள் வரும்)

உலகத்தில் பசி பட்டனி தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு அடுத்ததாய் இந்த கொடுமையையும் சேர்த்து கொள்ளுங்கள்!

***********************************************************************************
இங்கிலீஷ் விங்லீஷ் படமும் 'ஐயா' இந்தி படமும் பார்க்க ரொம்ப ஆவலா இருக்கு. 'ஐயா' படத்தில் வரும் இரண்டு பாடல்களை பார்த்தேன்!

'ஐயா' என்பதற்கு பதிலாய் 'ஐயோ' அப்படினு வச்சு இருக்களாம்! குடும்பத்தோடு பார்த்தால் 'ஐயோ'னு தான் சொல்ல தோணும்.

********************************************************************************

இந்த வீடியோவை பாருங்க! ரொம்ப தன்னம்பிக்கை தரும் வீடியோ. இவர் பெயர் christine ha. masterchef US season 3யில் பங்கு பெற்ற பெண்.


Sep 7, 2012

காபி வித் கடவுள்

(இது சும்மா காமெடி போஸ்ட். இன்று காலையில் அதிசயமாய் கோயிலுக்கு போக நேர்ந்தது. அப்போது தோன்றிய வடிவம் தான் இது! இது யார் மனதையோ புண்படுத்த அல்ல, ரொம்ப நாள் சிரிக்காம இருப்பவர்களின் மனங்களை பண்படுத்தவே!! ச்சே...ஆரம்பமே அசத்தலா இருக்குல!:)))))


மழை சாரல் அடிக்க, நான் என் ஜன்னல் கதவை மூடினேன். அப்போது, திடீரென்று ஒரு ஒளி தெரிந்தது ஜன்னல் வெளியே. ஒரு உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்தது. பல படங்களில் அப்பா கதாபாத்திரத்தில் வருவாரே..ம்ம்.. அலைபாயுதே ஷாலினிக்கு அப்பாவாக நடித்தவர் போல் இருந்தது அந்த உருவம். அந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் அறைக்குள் வந்தது.

நான்: யோவ் யாரு மேன் நீ?

உருவம்(வெள்ளை ஒளி லேசாக மறைந்து சாதாரண மனிதனாய் தெரிந்தார்): நான் கடவுள்

நான்: என்ன ஆர்யாவுக்கு போட்டியா? ஆர்யாவுக்கு அப்பா மாதிரி இருந்துகிட்டு, கடவுளா கடவுள்!? எங்க, அந்த படத்துல ஆர்யா தலகீழா நிக்குமே அந்த மாதிரி நில்லு பார்ப்போம்?

கடவுள் (புன்னகையித்தார்): எந்த கடவுளும் தலகீழா நிக்காது. கடவுள்கிட்ட அருள் கேட்டு மனுஷன் தான் சில சமயத்துல தலகீழா நிப்பான்.

நான்: என்ன நக்கலா? சரி அதவிடு, எதுக்கு மழையில நனைஞ்சுகிட்டு வர?

கடவுள்: வாக்கிங் போய்கிட்டு இருந்தேன். மழை வந்துச்சு. அதான் இங்க ஒதுங்கிட்டேன்.

நான்: இன்னும் நம்ப முடியலய்யா?

கடவுள்:  எத?

நான்: நீ கடவுள்கிறத?

கடவுள்: ஏன்?

நான்: அம்மன் படத்துல வர ரம்யா கிருஷணன் மாதிரியும் இல்ல. பாளையத்து அம்மன் படத்துல் வர மீனா மாதிரியும் இல்ல.  அறை எண் 306ல வர பிரகாஷ்ராஜ் மாதிரியும் இல்ல. அப்பரம் எத வச்சு நான், உன்னைய கடவுள்னு நம்புறது?

கடவுள்: நம்ப வேண்டாம்.

நான்: கடவுளே, கடவுள நம்ப வேண்டாம்ங்குது! ஹாஹாஹா...காமெடி போ நீ.

கடவுள்: யார் அம்மன்? பாளையத்து அம்மன்?

நான்: எல்லாம் உன் சொந்தங்காரங்க தான்?

கடவுள்: சொந்தமா?

நான்: ஹாஹா...என்ன உனக்கும் சொந்தங்காரங்கனா அலர்ஜீயா?

கடவுள்: இல்ல, சத்தியமா எனக்கு சொந்தம் கிடையாது.

நான்: உன் பெயர் என்ன?

கடவுள் (மீண்டும் புன்னகை): ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கூப்பிடுவாங்க.

நான்: ஐயோ கடவுளே!!

கடவுள்: yes, speaking!!

நான்: நீ கமல்ஹாசன் fan தானே? உண்மைய சொல்லு!! செமயா குழப்புற.

கடவுள்: சாரி, நான் குழப்புல. பதில் சொன்னேன்.

நான்: சரி விடு. காபி குடிக்குறீயா?

கடவுள்: இல்ல வேணாம். மனஷன் கண்டுபுடிச்ச எல்லாத்திலும் ஒரு கெட்டது இருக்கும்.

நான்: நீ ஓவரா எங்கள கலாய்க்கிற. அப்பரம் விரதம், பால் ஊத்துறது, பூ போடுறது, இது எல்லாம் serviceயை நிறத்திடுவோம்.

கடவுள்: இதலாம் எனக்கு என்னிக்கு பண்ணியிருக்கீங்க?

நான்: அட பாவி!!! உலகமே தினமும் கோயில இத தானே பண்ணிகிட்டு இருக்கோம்!!

கடவுள்: கல்லுக்கு போடறது எல்லாம் கடவுளுக்கு தானு யார் சொன்னது?

நான்: தூணிலும் இருப்பார் துறம்பிலும் இருப்பார்-னு சொன்னாங்க!

கடவுள்: நான் சொன்னேனா??

நான்: நல்லா தான் பேசுற?? (என் laptopல் வேலையை பார்த்தேன்)

கடவுள்: என்ன செய்யுற?

நான்: வேலை தான்! அடுத்த வாரத்துக்குள்ள இத கொடுத்து ஆகனும்.

கடவுள்: உன் வேலை உனக்கு பிடிக்காதுல.

நான் (ஆச்சிரியத்துடன்): உனக்கு எப்படியா தெரியும்?

கடவுள்: உலகத்துக்கே தெரியுமே! உன் பேஸ்புக்-ல தினமும் இத தானே கொட்டி தீர்க்குற!

நான்: அட நீயும் பேஸ்புக் வச்சு இருக்கீங்களா? friend request அனுப்புறேன்?

கடவுள்: மனசாட்சிக்கு உண்மையா நடந்தா, friend request accept பண்ண மாதிரி தான்.

நான்: ஹாஹாஹா இது வேறயா! இப்பலாம் யார் மனசாட்சி படி நடக்குறாங்க. ஆபிஸ் வந்து பாரு!! நீ எமன பாத்து இருக்கீயா? பாஸ்-னு பேர்ல ஒரு எமன்!

கடவுள்: சிலர் அப்படி தான்.

நான்: நீ தான் படைச்ச. ஏன்? ஏன்? எல்லாத்தையும் நிறத்தனும்.

கடவுள்: ஹாஹா...நான் ஒன்னும் நாயகன் படம் வேலு நாய்க்கர் இல்ல.

நான்: ஜோக் அடிக்காத மேன். பதில் சொல்லு. ஏன் சிலருக்கு மூளையே இல்லாம படைச்ச.

கடவுள்: சில நேரத்துல நானும் தப்பு பண்ணுவேன்.

நான்: உண்மைய ஒத்துகிட்ட பாத்தியா!! GOD IS GREAT!

கடவுள்: மன கஷ்டபடுறவங்களுக்கு எப்படியாச்சு ஒரு வழியே தேடி கொடுப்பேன். GOD PROMISE!

நான்: பாப்போம் பாப்போம்! அந்த நம்பிக்கை எல்லாம் போச்சு. உலகத்துல எத்தனையோ பேர் கஷ்டம் படுறாங்க. சாப்பாடு இல்ல. வீடு இல்ல. நோய், வறுமை. the damage has been done. it's too late..

கடவுள்: மனுஷன தான் நான் படைச்சேன். தப்ப நீங்க தான் படைச்சுகிட்டீங்க.

நான்: என்னமோ போ! உலகம் அழிஞ்சு இன்னொரு உலகம் வர போறதுனு சொல்றாங்களே? உண்மையா?

கடவுள்: நீங்க செஞ்ச தப்புக்கு தண்டனை வேணுமா?

நான்: எதாச்சு செஞ்சு உலகத்த காப்பாத்து!

கடவுள்: உனக்கு இந்த உலகம் மேல அவ்வளவு அக்கறையா?

நான்: அப்படிலாம் ஒன்னுமில்ல.உலகம் அழியறத்துக்கு முன்னாடி எனக்கு ஒரே ஒரு ஆசை.

கடவுள்: என்னது?

நான்: இந்த கோச்சடையான் படத்த மட்டும் earlyயா release பண்ணிடேன்!!

கடவுள்: ஹாஹா உலகம் அழிஞ்சாலும், மனிதன் திருந்த மாட்டான்!

நான்: நாங்க திருந்திட்டா, உனக்கு வேலை இல்லாம போயிடுமே, கடவுள்!!

*முற்றும்*




Aug 28, 2012

Cocktail mix- மதுபான கடை, அட்டகத்தி, நான்!

மதுபான கடை, அட்டகத்தி, நான் ஆகிய படங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. (எப்படி மா உனக்கு நேரம் கிடைச்சதுலாம்னு கேட்க கூடாது!)

3) மதுபான கடை- கதையே இல்லாமல் மொக்கை படம் எடுப்பதைவிட, இந்த மாதிரி சுவாரஸ்சியமான படம் எடுப்பது ஒரு வகையில் நல்லா தான் இருக்கு. குடிக்காரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதுபோல் முற்றிலும் குடிக்காரர்களை பற்றி தான் படம். நையாண்டி, நக்கல், கிண்டல், அதில் கொஞ்சம் காதல் என படம் நகர்கிறது.

இந்த நீதிமன்றம் விஜித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது என பராசக்தி வசனம் போல் இப்படமும் பல விஜித்திர கதாபாத்திரங்களை கொண்டுள்ளன.

'என்னடா இது' கதையே இல்லாமல் போகுது என ஒரு சில இடங்களில் தோய்வு ஏற்பட்டாலும், சரி என்ன தான் நடக்குதுனு பார்த்து முடித்தேன்.  படத்திற்கே பலமே வசனங்கள் தான்.





DVDல பார்க்கலாம் படத்தை! anyway, tasmarc கடையலாம் மூட போறாங்களா? உண்மை செய்தியா, மக்களே!!?

2) அட்டகத்தி- படத்தில் ரொம்ப பிடித்த விஷயம் பாடல்கள்!!! 'ஆடி போன ஆவணி' பாடல் செம்ம சூப்பர் ரகம். வெங்கட் பிரபு உதவி இயக்குனர் என்பதினால் என்னவோ தெரியல இப்படத்திலும் கதை ஒன்றும் வலுவா இல்ல. நல்லா பொழுதுபோக்கு படம்.

பேருந்தில் காதல், கானா பாடல், காமெடி என படம் போகிறது. அவ்வபோது சென்னை 28 படம் ஞாபகத்திற்கு வந்துபோனது.

படம்- ஒரு முறை பார்க்கலாம் (2-in-1 dvdல)

1) நான் - பார்த்த மூனு படங்களிலேயே ரொம்ப பிடிச்ச படம். கதை, திரைக்கதை எழுதிய ஜீவா சங்கருக்கு முதல் பாராட்டு. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி சரியா இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தமைக்கு இன்னொரு பாராட்டு.

சும்மா, புரியாத வார்த்தையா போட்டு பாட்டு அமைக்கும் விஜ்ய் ஆண்டனி மேல் இப்போ தனி மரியாதையே வந்து இருக்கு. படத்தில் ஒரு கட்டத்தில் நண்பன் இறந்த பிறகு, அந்த இருள் நிறைந்த ஹாலில் அழுவார் பாருங்க.....செம்ம சூப்பர் நடிப்பு (இது என்ன பெரிய நடிப்பு, எங்க தனுஷ் கூட தான் பின்னி எடுப்பார்னு சொல்வோருக்கு....போங்க தம்பி போங்க...போய் புள்ள குட்டிங்கள படிங்க வையுங்க!!)

மயாக்கலா பாடலும் தப்பெல்லாம் தப்பே இல்லை பாடலும் அருமையிலும் அருமை!

நல்ல திரில்லர் கதையில் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு யோசிச்சு ஒருசில திருப்பங்களை சேர்த்து இருந்தால், இன்னும் நல்லா இருந்திருக்கும்னு தோனுது!

நான் - நாக்க மூக்க நாயகனின் மூக்கு மேல விரல் வைக்கும் ஒரு அற்புத படைப்பு!

(விஜய் ஆண்டனி தான் படத்தில் தயாரிப்பாளர்!)

Aug 18, 2012

போ டா!


விஷ்ணு சமையல் அறையிலிருந்து தான் சமைத்த உணவுகளை ஹாலில் இருக்கும் மேசையில் வைத்தான். மதியம் 2 ஆகியது. உடல் நலமில்லாத அமுதா அப்போது தான் எழுந்து வந்தாள். ஹாலில் விஷ்ணுவை பார்த்தவுடன்,

"ஹாலோ மிஸ்ட்டர்? யாரு நீ?" என்றபடி சோபாவில் மெல்ல உட்கார்ந்தாள்.

புன்னகையித்தபடி விஷ்ணு, " தலவலி போச்சா? " என்றான்.

"தலவலினு யாரு சொன்னா?" என்றாள் அமுதா.

"இல்ல மா...உனக்கு அடிக்கடி தலவலிக்குமே! உடம்பு சரியிலேனு சொன்னீயே...அதான்...." என இழுத்தான்.

"anyway, you have not answered my question. யாரு நீ-னு கேட்டேன்?" என கூறிவிட்டு அமுதா செய்தித்தாளை புரட்டினாள். மேசையை ஒரு முறை துடைத்துவிட்டு, சோபாவில் அவள் அருகே உட்கார்ந்தான் விஷ்ணு.

"என்ன கோபமா?"

"i don't like to talk to strangers." என்றாள் அமுதா அவனின் முகத்தை பார்த்து.

"நான் stranger ah? உன்ன தொடாம தாலி கட்டின ரொம்ப innocent husbandயா நான்!!" என்று சொல்லிவிட்டு வாய்விட்டு சிரித்தான். அவள் முறைத்துவிட்டு பேசாமல் இருந்தாள்.

விஷ்ணு, " ஜோக் கேட்டால் சிரிக்கனும். முறைக்க கூடாது."

அமுதா, "இன்னிக்கு ஆபிஸ் போகாம இங்க இருக்க?"

விஷ்ணு, "லீவு போட்டேன்."

அமுதா, "எதுக்கு?"

விஷ்ணு, " மேனெஜர்கிட்ட... ஆபிஸ் விஷயமா 3 நாள் வெளியூர் போயிருக்கேன் சார். வூட்டுல பொண்டாட்டிக்குகூட சொல்லாம போயிட்டேன். அவள சமாதானப்படுத்த atleast ஒரு வாரம் வேணும்னு தான் கேட்டேன். அந்த bulb-u தலையன் ரெண்டு நாள் தான் கொடுத்தான். so இன்னிக்கும் நாளைக்கும் உன்கூட தான்!"

அமுதா, "பரவாயில்ல நீ போ. உனக்கு முதல் பொண்டாட்டி உன் ஆபிஸ் தானே."

விஷ்ணு, "ஹாஹாஹா... அத கட்டிக்குறேன். உன்னைய வச்சுக்குறேன்!"

அமுதா, "shut up!"

விஷ்ணு அவள் மடியில் இருந்த கையை பிடித்து, "jokes apart...I'm really sorry. இனி இப்படி நடக்காது.... really sorry." என்றான்.

அமுதா, "இந்த sorryய எவன் கண்டுபுடிச்சான்? அவன முதல உதைக்கனும்!" கோபத்துடன் கையை விடுக்கென்று எடுத்தாள். சமையல் அறைக்கு சென்று juice போடலாம் என்று சென்றபோது, மேசையில் இருந்த flaskலிருந்து orange juiceயை அவளுக்கு எடுத்து கொடுத்தான் விஷ்ணு.

"உனக்கு இந்த பிங் கலர் coffee mug தானே ரொம்ப பிடிக்கும்..." என்று பேச்சை மாற்ற முற்பட்டான். அவன் கொடுத்த ஜூஸை வாங்கி கொண்டு அவனை  கண்டுகொள்ளாமல் balconyக்கு சென்றாள். மத்திய வேளையில் குளிர் காற்று இதமாய் வீசியது. மேகங்கள் மழையை தாங்கிபிடித்து கொண்டிருந்தன. வானத்தின் நிறம் அழகாய் தெரிய, coffee mugடன் நின்று கொண்டிருந்த அமுதாவை தனது கைபேசியில் படம் எடுத்து கொண்டான்.

புகைப்படத்தை பார்த்த விஷ்ணு, "ப்ச்....என் பொண்டாட்டி அழகு டா!" என்று புகை படத்துக்கு முத்தம் கொடுத்தான். வேண்டுமென்றே அமுதாவை வேறுபேத்தினான்.

அவன் செயலை கண்ட, அமுதா, "stop it, விஷ்ணு."

"ஓய்! உனக்கு என்ன வந்துச்சு? என் பொண்டாட்டிய நான் கிஸ் பண்றேன். இது என் பிறப்புரிமை. யாரும் ஒன்னும் கேட்க முடியாது!" என்றுவிட்டு இன்னொரு முறை முத்தமிட்டான் புகைப்படத்திற்கு.

அமுதா juice அருந்தியபடியே, "பைத்தியமா வாழலாம்...ஆனா..." ஒரு வினாடி அவனைப் பார்த்து,

"ஆனா...பைத்தியத்தோட வாழ முடியாது!" என்றாள்.

சிரித்தவன், "சரி atleast சாப்பிட்ட பிறகாவது சண்ட போடலாம் டா. பசிக்குது பா எனக்கு! ப்ளீஸ்....வா சாப்பிடலாம்." என்று கெஞ்சினான்.

"நீ சாப்பிடு. எனக்கு பசிக்கல."

"அது எப்படி முடியும்? நான் செஞ்சத நானே சாப்பிட்டு சாவ சொல்றீயா?" என்று சொன்னதை கேட்டு, அமுதா,

"உனக்கு நல்லதே பேச வராதா?"

விஷ்ணு, "நல்லது தானே? பேசிட்டா போச்சு...." என்றவன் அவள் அருகே சென்று அவள் கன்னங்களை  கைகளால் தாங்கியவாறு,

"I love you." என்றான்.

அதற்கு அமுதா, "இதுக்கு நீ, முன்னாடி சொன்னதே better!"

வாய்விட்டு சிரித்தவன், "அட போ மா!! உன்னைய இந்த காலத்துக்கு சமாதானப்படுத்த முடியாது... நீ சாப்பிடலனா நானும் சாப்பிடல. எல்லாத்தையும் எடுத்து fridgeல வச்சுடுறேன்." என்றான். fridgeல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அறைக்கு சென்றான். அலமாரியில் தினமும் செய்யவேண்டிய வீட்டுவேலைகளின் பட்டியல் இருந்தது. அதை பார்த்துவிட்டு விஷ்ணு, மெத்தை உரைகளை மாற்றினான்.

அவன் வேலை செய்து கொண்டிருந்ததை அறை கதவு அருகே கைகட்டி நின்று பார்த்து கொண்டிருந்த அமுதா, "விஷ்...."

விஷ்ணு, "என்ன?" என்றபடி தலையணை உரைகளை கழட்டினான். அவன் பக்கத்தில் சென்று அவனது கையை பிடித்தாள் அமுதா.

"ஒரு அழகான பையன் கைய புடிச்சு இழுக்குறீயே, பஞ்சாயத்த கூட்டவா?" என்றான் விஷ்ணு.

புன்னகையித்து கொண்டு அமுதா, அவனை இறுக்க அணைத்து கொண்டாள். மழை சாரல் பொழிந்தது. குளிர் காற்று வேகமாய் வீச, இன்னும் இறுக்கி கொண்டாள் விஷ்ணுவை. அவன் நெஞ்சில் முகம் சாய்த்தாள். சற்று தலை தூக்கினாள் அமுதா, அவள் உதடுகள் அவனது கழுத்தை எட்டி பார்த்தன.

"இச்" வைத்தாள் கழுத்தில்.

"ஓ....மேடம் என்ன திடீர்னு மாறிட்டாங்க?"

வெட்கம் கலந்த புன்னகையுடன் அமுதா, "உன்கிட்ட ஒன்னு சொல்லனும்?"

தொடர்ந்தாள் அமுதா, "டாக்டர பாத்தேன் நேத்திக்கு. நிறைய tablets கொடுத்தாங்க..ம்ம்...and.... நமக்கு பாப்பா பொறக்க போகுது!" என்று சொன்னவுடன் மீண்டும் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

ஆச்சிரியம் அடைந்த விஷ்ணு, அமுதாவை பக்கத்தில் இருந்த மெத்தையில் உட்கார வைத்தான்.

"டாக்டர் வேற என்ன சொன்னாங்க?" அவனது கண்களில் ஒருவித படபடப்பு தெரிந்தது.

"டேய்...are you ok?? உனக்கு சந்தோஷமில்லயா?" என்றாள் அமுதா.

"ஐயோ அப்படி இல்லமா...திடீரெனு சொல்லிட்டீயா...எனக்கு என்னமோ..அப்படியே உலகமே....ஒரு மாதிரியா போச்சு...சாரி மா..எப்படி react பண்றதுனு தெரியல...சாரி சாரி..."

புன்னகையுடன் அமுதா, அவனது தாடையை பிடித்து, "நீ அப்பா ஆக போற?"

விஷ்ணு, "அப்ப இனிமேல....ஜோக்-கெல்லாம் அடிக்க முடியாதுல..."

அமுதா, "ஹாஹாஹா...டேய்... என்ன டா ஆச்சு உனக்கு?"

விஷ்ணு, "தெரியலங்க..."

அமுதா, "என்னது? ங்கவா?"

விஷ்ணு, "அம்மா ஆக போறீங்க..அதான்...மரியாத!"

அமுதா, "oh my god! you're so cute, I tell you." என்று புன்னகையுடன் அவன் முடியை கோதிவிட்டாள்.

விஷ்ணு உற்சாகத்துடன், " இது அன்னிக்கு...... "

அமுதா புருவங்களை சுருக்கி, "என்ன அன்னிக்கு?"

விஷ்ணு, " அன்னிக்கு உன் ப்ரண்ட் birthday party முடிஞ்சு..... late night வந்தோமே.. இது birthday party night baby தானே!!"

அமுதா, "ச்சி போடா!"

*முற்றும்*

Aug 14, 2012

ஒலிம்பிக்கில் நான் ரசித்தவை

இந்த வருஷம் ஒலிம்பிக்ஸ் ரொம்ப ஸ்பெஷல். புதிய விளையாட்டுகளை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு, நிறைய அதிரடி ஆட்டங்கள், ரசிக்க வைத்த இறுதி போட்டி, சய்னா நேவால், மேரி கோம், மைக்கல் பெல்ப்ஸ் நீச்சல்....இப்படி எத்தனையோ!

 1) சய்னா நேவால்- இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். இந்த விளையாட்டுக்கே ஒரு புத்துணர்ச்சி தந்து இருக்கிறார். வெண்கல பதக்க போட்டியில், சீனா வீராங்கனை பாதியிலேயே போட்டியை விட்டு விலகியதால் சய்னாவுக்கு பதக்கம் கிடைத்திருந்தாலும், இந்த அளவுக்கு அவர் வந்து இருப்பது ஒரு இந்தியர் என்ற முறையில் எனக்கு பெருமை தான்!

 desktop wallpaper சய்னாவின் படம் தான்!! இவர் கொடுத்திருக்கும் அனைத்து பேட்டிகளையும் யூடியுப்பில் பார்த்தேன். ஒரு நாளுக்கு 8-9 மணி நேரம் பயிற்சியாம். 17 வயது வரைக்கும் வெளியே சென்று படம்கூட பார்த்தது இல்லையாம். தோழிகள் யாருமே இல்லை. காலை எழுந்து பயிற்சி, மதியம் பயிற்சி, மாலை பயிற்சி! வாழ்க்கையை விளையாட்டாய் எடுத்துக்க கூடாது என்பார்கள்....இவருக்கோ அந்து விளையாட்டு தான் வாழ்க்கை! இப்படிப்பட்ட வீராங்கனைகளை மீது பெரிய மரியாதை உண்டு.

 2) மேரி கோம்- இரண்டு குழந்தைகளுக்கு அம்மா. இந்தியர் என்றுகூட பலரால் ஏற்றுகொள்ளாதவராய் இருந்து, இன்று இந்தியாவுக்கு ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை தந்து இருக்கிறார். அரசாங்கம், ஜெயித்தால் தான் திரும்பி பார்க்கும். இன்று இவருக்கு பரிசு தொகை, வேலை, புதிதாய் பாக்ஸிங் பள்ளி தொடங்க இடம் ஒதுக்கீடு கொடுத்து இருக்கிறது அரசாங்கம். இதை முன்னாடியே செய்திருந்தால், இந்தியா பதக்கங்களை குவித்து இருக்கும்.

 (சித்தாப்பா பையனுக்கும் மச்சான் தம்பிக்கும் மட்டும் உதவி செய்தால், உலகிலேயேஅதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, இப்படியே போய்விடும்)

 3) mexico Vs brazil- ஆண்கள் காற்பந்து இறுதி ஆட்டத்தை பார்த்தேன். brazil தான் ஜெயிக்கும் என்று உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் தனது முதல் கோலை போட்டது mexico அதுவும் 36 வினாடியில். சரியாக ஆடாததால் தோற்றனர் brazil என்பதைவிட, mexico அணியினர் நம்பிக்கையோடு விளையாடியதே அதன் வெற்றிக்கு காரணம் எனலாம். 

எனக்கு இப்ப பில்லா வசனம் தான் ஞாபகத்துக்கு வருது "இது ஆசை இல்ல. பசி!!" mexicoவின் பசி!

 4) USA Vs Japan- பெண்கள் காற்பந்து இறுதி ஆட்டம். ஜப்பான் பெண்கள் அணியின் அதிரடி முன்னேற்றம் இன்னும் சில வருடங்களில் விஸ்வரூபம் எடுக்கும். எனக்கு தெரிந்த உள்ளூர் காற்பந்து பயிற்சியாளர் ஜப்பான் சென்று வந்திருக்கிறார். அவர் சொன்னது, " ஜப்பானியர்களுக்கு இருக்கும் சுய ஒழுக்கம் வேறு எந்த நாட்டிலும் காண இயலாது"

 அதாவது பயிற்சி முடிந்து அவர்களே இடத்தை சுத்தம் செய்வார்களாம். சொல்வதை கேட்டு கொள்வார்களாம். எல்லாருக்கும் மரியாதை கொடுப்பார்களாம். அதனால் தான் இன்று சிறப்பாய் விளையாட முடிந்தது. அமெரிக்கா ஜெயித்தாலும், ஜப்பானிய பெண்களின் விடாமுயற்சியை பாராட்ட வேண்டும்.

 5) மைக்கெல் பெல்ப்ஸ்- நீச்சலில் பல சாதனைகள். இத்துடன் நீச்சல் விளையாட்டிலிருந்து விலகி கொண்டார். கிட்டதட்ட retirement மாதிரி. வயது 27 ஆகுது!!

  (*ம்ம்....நானும் வேலையிலிருந்து இப்படி retirement வாங்கிகலாமானு பாக்குறேன்!!)

 கிடந்த சில நாட்களாய் ரசித்த ஒலிம்பிக் ஒரு முடிவுக்கு வருகிறது என்று நினைத்தால் கொஞ்சம் வருத்தமா இருக்கிறது. தொடர்ந்துகிட்டே போக இது என்ன ஆபிஸ் மீட்டிங்கானு நீங்க கேட்குறது புரியது!! அடுத்த ஒலிம்பிக்-காக ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

 anyway, இந்த வார இறுதியில், ஓட்டம், காற்பந்து, நீச்சல், badminton ஆகியவற்றில் ஈடுபட்டேன். thanks to olympics!! 4 வருஷத்துக்கு ஒரு முறை, நானும் உடற்பயிற்சி செய்தேன் என்று வரலாறு சொல்லட்டும்!

Aug 2, 2012

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-21


ஹீரோலாம் தாடி வச்சிகிட்டு, மூஞ்சி கழுவி 17 நாள் ஆன மாதிரி இருக்காங்க!! அதனால் என்னவோ வில்லன்களாவது அழகாய் காட்ட வேண்டிய கட்டாயம் வந்திருக்கு!

இப்பலாம் வில்லன் தான் அழகா இருக்காங்க. அதுக்கு ஒரு உதாரணம் தான் இவன்...சாரி இவர்! பில்லா படத்தில் வரும் வில்லன் - vidyut jamwal. இவர் 'force''எனும் ஹிந்தி படத்தில் வந்திருக்கிறார். இந்த french beardலாம் எல்லாருக்கும் பொருந்தாது! இவருக்கு..ம்ம்ம்...செம செம செம!! முகம் அமைப்பும் இவரின் சிறப்பு அம்சமாகும்!

இவரை மாதிரியே இன்னொருவர் இருக்கிறார். உலகத்தில் 7 பேர் ஒரே மாதிரி இருப்பது உண்மை தான் போலும்!


இவர் பெயர்- godfrey gao. taiwanese supermodel. இவரை பார்த்தவுடன் தோன்றிய பாடல்

"கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?" :))))))))))))))))))))))

Jul 11, 2012

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 9


பகுதி 8

வீட்டை பார்த்ததும் நால்வருக்கும் ஒன்றுமே புரியவில்லை. வீடே திருவிழா போல் இருந்தது. இரண்டு லாரி சொந்தக்காரர்கள் வீட்டிற்குள் இருந்தனர். வெளியே வந்த விஜியின் சித்தி,

"விஜி, வந்துட்டீயா? குட் குட். சரி get ready. அக்கா உனக்கு ஒரு சூப்பர் ரெட் சாரி எடுத்து வச்சு இருக்காங்க! சீக்கிரம் கட்டிக்கோ!" என்று சொல்லிவிட்டு, நின்று கொண்டிருந்த van driverரிடம் பணம் கொடுத்தார். உள்ளே நுழைந்த சித்தி, விஜியின் தோழிகளை பார்த்து,

"girls, நீங்களும் வாங்க!"

கலா, "எங்க?"

சித்தி, "பொண்ணு பார்க்குற function நடக்க போகுது." என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

*******************************************************
விஜி அன்று சொன்ன plan எல்லாருக்கும் ஞாபகம் வந்தது.

விஜி, "shhhhhhhhhhhh....." அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி, தனது  ஐடியாவை கொட்டினாள்.

சுதா, "என்ன ப்ளான்?"

விஜி, "நம்ம எதுக்கு probability படிக்கிறோம்?"

கலா, "அது தெரிஞ்சு இருந்தா எப்பவோ உருப்புட்டு இருப்பேனே?"

விஜி, "what is the probability of him saying yes?"

மற்றவர்கள் முழித்தனர். சசி பதில் அளித்தாள், "1"

விஜி, "yes."

மறுபடியும் அதே கேள்வியுடன் விஜி, "what is the probability of him saying no?"

சுதா, "அதே 1"

விஜி, "yes. so maths படி பார்க்க போனால், நம்ம ஏன் பயப்படனும்? அவனே வேணாம்னு சொல்றதுக்கு chance நிறைய இருக்கு. and என் வீட்டுல ஜாதகம் அது இதுனு நிறைய பார்ப்பாங்க. so ஒவ்வொரு proposalலா பாத்து ஓகே சொல்றதுக்குள்ள...விடிஞ்சிடும்..."

சசி, "அப்பரம்?"

கலா, "விடிஞ்சா...பல்லு விளக்கி மூஞ்சி கழுவு."

சசி, "அட ச்சே!"


விஜி, "and அதே சமயம்....அவனுக்கு பிடிக்காத மாதிரி நடந்துக்கனும். ஆனா நல்ல புள்ள மாதிரி இருக்கனும்"

கலா, "கிட்டதட்ட நம்ம சசி மாதிரி சொல்லு."

சசி கலாவின் காலை மிதித்தாள். 

************************************************************************************************

வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த கலா,

"இப்ப என்ன பண்ண போற? அடுத்த வாரம் அவன வெளியே கூப்பிட்டு பேசலாம்னு இருந்த. இப்ப....உன் வீட்டுலேயே.... this is going very dangerous." 

சுதா, "எனக்கு தலையே சுத்து-து."

சசி, "நீ maths. probability. ok சொல்ல மாட்டேன். அப்படி இப்படினு சொன்ன? ஆனால், போற போக்க பாத்தால், இன்னிக்கே நிச்சயதார்த்தம் முடிஞ்சு நாளைக்கே கல்யாணம் ஆயிடும் போல இருக்கே!"


கலா, "அப்ப உனக்கு நாளைக்கு first nightஆ டி?" என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு கேட்க, சசியும் சுதாவும் சிரித்தனர்.

விஜிக்கு சிரிப்பும் கோபமும் கலந்து வந்தது. 

கலா, "ஒகே கூல் கூல்.... விஜி நீ போய் ரெடியாகு." விஜியின் சித்தி வந்து உடனே அவளை அழைத்து கொண்டு சென்றாள். 

சசி, "நான் இப்படியே ஓடி போயிடுறேன். என்னால இந்த கொடுமையலாம் பாத்துகிட்டு இருக்க முடியாது!" என்றாள்.

சுதா, "அட பாவி, நீயெல்லாம் ஒரு friendaa?"

கலா, "என்ன நடக்குமோ அது கண்டிப்பா நடக்கும்?", சந்திரமுகி படத்தில் 'ரா'ரா' பாட்டுக்கு முன்னாடி வரும் ரஜினி, பிரபுவுக்கு ஆறுதல் சொல்வதுபோல் கலா சோகத்தை கொட்டினாள்.

வீடு முழுவதும் சொந்தக்காரர்கள் 'நான் ஈ' போல் பறந்துகொண்டிருந்தனர் ஒவ்வொருவரும் தனது வேலையை பார்த்தபடி. சினிமாவில் வருவதுபோல், ஒரு சின்ன குழந்தை ஓடி வந்து,

"மாப்பிள்ள வந்துட்டாரு!" என்று கத்தியபடி வீட்டை நோக்கி ஓடியது. 'தெய்வீக' முகத்துடன் மாப்பிள்ளை வந்து இறங்கினார். விஜியின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக கிணற்றில் விழுவதை தடுக்க முடியாமல் கலா, சசி, சுதா நின்று கொண்டிருந்தனர். விஜியின் அறைக்குள் ஓடினர்.  கலா உடனே அந்த அறைக்குள் இருந்த கழிவறைக்கு சென்று அதனை நோட்டமிட்டாள்.

விஜி, "என்ன டி பண்ணுற?"

கலா, "நீ படமெல்லாம் பார்த்தது இல்ல? toilet வழியா பொண்ணு தப்பிச்சு போறத?"

விஜி, "அடி பாவி!"

கலா, "இத தவிர வேற வழி தெரியுல!"

சசி, "லூசு மாதிரி பண்ணாத."

கலா, "விஜி லூசாகாம இருக்க, நான் இப்ப லூசுத்தனம் பண்ணியே ஆகனும்!" என்றதும் சுதா சிரித்தாள்.

விஜி, "ஐயோ கடவுளே!! stop confusing me. how's he?"

கலா, "அவர் ஆயிரத்தில் ஒருவராகவே இருக்கட்டும். இது நமக்கு வேண்டாம் டி. வேணாம் மச்சான் வேணாம்...." என்று பாடலை பாடினாள். அப்போது விஜியின் சித்தி அறைக்குள் நுழைந்து,

"வா விஜி. உன்ன கூப்பிடுறாங்க." 
விஜிக்கு போகவும் மனமில்லை. போகாமல் வேறு எப்படி தப்பிக்கலாம் என்றும் தெரியவில்லை. 

சசி, "வா நாமும் போவோம்." சுதா சசியை தடுத்தாள்.

கலா, "சசி, உனக்கு மனசுல ரோஜா படம் மதுபாலானு நினைப்பா??"

மூவரும் மாடியிலிருந்து எட்டி பார்க்க, விஜி கீழே சென்றாள். 

சசி, "காபி கொண்டு போகல நம்ம விஜி???"

சுதா, "ஏய் நீ என்ன இது படம்னு நினைச்சீயா?"

சசி, "படம் இல்லையா?"

கலா, "இல்ல, பாடம். சும்மா இரு! என்ன நடக்குதுனு மட்டும் வேடிக்கை பாரு."

சசி, "பாட்டு பாட சொல்லுவாங்களா?"

கலா, "இல்ல, கூட்டு வைக்க சொல்லுவாங்க!" சிரித்தாள் சுதா.

மாப்பிள்ளைக்கு சூர்யா என்று நினைப்பு. முதல் மூன்று பட்டன்களை போடவில்லை. அதை பார்த்த கலா, 

"ஓ...சட்டை மேல எவ்வளவோ பட்டன்ஸ்...." என வடிவேலு பாணியில் சொல்லி கிண்டல் அடித்தாள். கூட்ட நெரிசல் சத்தத்திலும், இவர்களின் சிரிப்பு சத்தம் கேட்க, விஜி மேலே ஒரு பார்வை வீசி முறைத்தாள்.

விஜியின் பாட்டி, "எல்லாருக்கும் சம்மதம் தானே?" என கேட்க, விஜி மறுபடியும் மேலே பார்த்தாள். மூவரும் அதற்குள் மேலே பார்த்து 'கடவுள் விட்ட வழி' என்று காட்டினர்.

மாப்பிள்ளையின் மாமா, "ரெண்டு பேரும்...கொஞ்சம் தனியா பேசிக்க சொல்லுங்க. இந்த காலத்து பிள்ளைங்களுக்கு நம்ம freedom கொடுக்கனும் பாருங்க...." என்று சொல்லிவிட்டு பெரிய சிரிப்பு சிரித்தார். வாழ்க்கையில் இது தான் பெரிய காமெடி என்பதுபோல் அக்கூட்டமே சிரித்தது.

சுதா, "இது தான் அவங்க ஊர்ல freedom ஆ?"

கலா, "அப்பரம் காந்தி தாத்தா கஷ்டப்பட்டு வாங்கினாரே..அதுக்கு பேரு என்ன?"

சசி, "அவங்க இப்ப எங்க போய் பேசுவாங்க?"

கலா, " 97 வருஷ தமிழ் சினிமா வரலாற்றில் இந்த மாதிரி சீன் எங்க வைப்பாங்க? மொட்ட மாடில தான்"

சசி, "இது படம் இல்லனு சொன்ன?"

கலா, "வாழ்க்கை தான் சினிமா, சினிமா தான் வாழ்க்கை."

சசி, "பசி மயக்கத்துல நீ உலறுர!"

மொட்ட மாடியில், மூவரும் தூணுக்கு பின்னால் ஒளிந்திருக்க, விஜியும் மாப்பிள்ளையும் டீ கடையில் 'பன்னு' வாங்கி திண்பதுபோல் எதிர் எதிரே நின்று கொண்டிருந்தனர். 

ஒளிந்திருந்த சுதா, "இன்னிக்குள்ள பேசிடுவாங்களா?"

கலா, "ம்ம்...according to medical institute of american society.....இன்னும் 48 மணி நேரம் கழிச்சு தான் எதுவானாலும் சொல்ல முடியும்." என்று நக்கல் செய்ய, சுதாவும் சசியும் சிரித்தனர்.

விஜி, "எங்க வேலை பாக்குறீங்க?" என்றாள் தயக்கத்துடன்.

தூணுக்கு பின்னால் நின்ற கலா, "அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?" அமைதியாய் இவர்களுக்குள் மட்டும் பேசிகொண்டனர்.

மாப்பிள்ளை, " inforile software company..." புன்னகைக்க முயற்சி செய்தாலும், புன்னகை வரவில்லை. அப்போது மாப்பிள்ளையின் கைபேசி ரிங்டோன் அடித்தது, "கண்ணழகா, காலழகா...."

சுதா, "ஓ...இவுக மூனு பட ஹீரோ தனுஷ் நினைப்பா?"

கலா, " பலான படத்துல வர பக்கத்துவீட்டுக்காரன் மாதிரி இருக்கான்...இவன் ஹீரோவா?"

சசி சற்று முழித்தாள், "ஆமா..நீ எப்போ அந்த மாதிரி படத்த பாத்த?"

கலா, "அட த்தூ...போஸ்டர பாத்தேன்.."

கைபேசியில் பேசிவிட்டு மாப்பிள்ளை விஜியிடம், "எனக்கு இது first time...."

கலா, "எங்களுக்கும் மட்டும் இது 150வது episodeஆ என்ன?"

விஜி, "ம்ம்..." என்றாள் பவ்வியமாய்.

கலா, " சாட்டை எடுத்து சாத்துவாள்னு பாத்தா...சாவித்திரி மாதிரி சாஞ்சிகிட்டு இருக்கா?"

சசி, "உனக்கு எல்லாமே கிண்டல் தான். அவ இடத்துல நீ நின்னு பாரு, அப்பரம் தெரியும்?"

கலா, "என்ன தெரியும்?....பக்கத்து portionல துணி காய போடுறதா?"

சுதா, "ஐயோ ராமா... கொஞ்ச நேரம் சும்மா இருங்க ரெண்டு பேரும்!"

மாப்பிள்ளை, " கல்யாணத்துக்கு அப்பரம் நீ வேலைக்கு எல்லாம் போக தேவையில்ல..."

சுதா, "அட பாவமே, அவ இன்னும் படிச்சே முடிக்கலையே?"

கலா, "மனசளவில் அவ இன்னும் ரெண்டாவது தான் படிக்குறா மிஸ்டர் மாப்பிள்ளை" 

மாப்பிள்ளை, "அப்பரம்...நான் கீழே போய் என்ன சொல்ல?"

கலா, "மொட்ட மாடில நிறைய வத்தல் காய வைக்கலாம்னு போய் சொல்லு."

விஜி, "எனக்கு தெரியல."

மாப்பிள்ளை, "தெரியலனா...என்ன அர்த்தம்?" என்று கொஞ்சம் அதட்டினான். சற்று திடுகிட்டு போனாள் விஜி.

கலா, "நான் அடிச்ச தாங்க மாட்டே...நாலு மாசம் தூங்க மாட்டே..." என்று சத்தமில்லாமல் பாடினாள்.

சுதா, "என்னய்யா இவன்...இப்பவே மிரட்டுறான்?"

மாப்பிள்ளை விறுவிறுவென்று கீழே போனான். அவன் போனபிறகு மூவரும் விஜி அருகே சென்றனர். விஜி அழ ஆரம்பித்தாள். 

விஜி, "நான் நினைச்ச ப்ளான் படி ஒன்னுமே பண்ணல!! i hate myself! i feel so disgusted. this saree...this arrangement...all this stupid nonsense...i hate it! i hate it!" என கத்தினாள். மூவரும் அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் அவள் கேட்பதுபோல் இல்லை. விஜியின் சித்தி மொட்டை மாடிக்கு வந்தார். 

சித்தி, "விஜி...girls...happy news. மாப்பிள்ள ஓகே சொல்லிட்டார். கீழே எல்லாருக்கும் சந்தோஷம். so happy for you" என்று சொல்லிவிட்டு கட்டி அணைத்துவிட்டு சென்றார்.  கலா, மொட்டை மாடியிலிருந்து கீழே எட்டி பார்த்தாள்.

கலா, "இங்கேந்து குதிச்சுடு விஜி."

விஜி, "என் விருப்பத்த யாரும் கேட்க மாட்டாங்களா?" 

சுதா, "we are indian girls. we are fated."

கலா, "ஹாஹா...இப்ப ஏன் எல்லாரும் அமீர் கான் showல வர மாதிரி பேசுறீங்க? relax...கண்டிப்பா நல்லது நடக்கும்."

விஜி, "கருமாதி தான் நடக்கும்." என்றாள் எரிச்சலுடன்.

சுதா, " விஜி...அப்படிலாம் சொல்லாத."

நால்வரும் கீழே சென்றனர். 

வாழ்க்கையில் ஃபோன் மாற்றலாம். ஆனா, அந்த ஃபோனே வாழ்க்கையை மாற்றினால்....

வீட்டு ஃபோன் ரொம்ப நேரம் அலற, யாரும் கவனிக்கவில்லை அதனை. விஜியின் பாட்டி அதனை எடுத்து பேசினார்.

"ஐயோ அப்பா!!!!!!!!!!!!" என்று அலறி கொண்டு மயங்கி கீழே விழுந்துவிட்டார். எல்லாருக்கும் அதிர்ச்சி. என்ன நடந்தது என்று யாருக்கும் புரியவில்லை. விஜி ஃபோனை எடுத்து பேசிவிட்டு, அனைவரையும் பார்த்து,

"கொள்ளு தாத்தா செத்துபோயிட்டாரு!" என்று சொல்லி முடிப்பதற்குள், அனைவரும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டனர்! திருவிழா போல இருந்த வீடு,  முற்றிலும் மாறியது ஒரு நொடியில். மாப்பிள்ளை வீட்டார் உடனே கிளம்பிவிட்டனர். விஜி சோகத்தை அடக்க முடியாமல் அவளது அறைக்குள் ஓடினாள். பின்னாடியே மூவரும் சென்றனர். அறை கதவை சாத்திய மறு வினாடியே விஜி, 

"செத்தாண்டா சேகர்!" என்று சொல்லிவிட்டு வாய்விட்டு கைகொட்டி சிரித்தாள். 

சசி, "என்ன டி இப்படி சொல்ற?"

விஜி, "ஆமா டி. இனி ஒரு வருஷத்து கல்யாணம் எதுவுமே நடக்க வாய்ப்பில்ல. and இந்த மாப்பிள்ள வந்த சகுனம் இப்படி ஆச்சுனு.. இந்த proposal will be rejected!!!!!!!!!! and i am the happiest girl in the world!!" என்று படி 'ஒத்த சொல்லால' பாடலை போட்டு ஆட ஆரம்பித்தாள்.  கூடவே அனைவரும் சேர்ந்து ஆடினர். மெத்தையில் கிடந்த போர்வையை எடுத்து இடுப்பில் மடித்தவாறு, போர்வை நுனியை வாயில் கடித்தவாறு கலா தனுஷ் போலவே ஆடினாள்.

 சுதா, "இதலாம் தப்பு இல்லையா?"

ஆடி கொண்டிருந்த கலா, "ஒருத்தன் செத்தால் தான் இன்னொருத்தனுக்கு வாழ்வு" என்றுவிட்டு நாக்கை மடித்து கொண்டு ஆட்டத்தை தொடர்ந்தாள். 

*முற்றும்*