Saturday, April 8, 2017

காற்று வெளியிடை- வெறும் காத்துத்தியேன் வருது!

படம் ஆரம்பிக்க 10 நிமிஷத்துக்கு முன்னாடியே திரையரங்கு இருக்கையில் உட்கார்ந்து ஐஸ் லமன் டீ குடிச்சுகிட்டு இருந்தேன்.

"சிநேகிதனே சிநேகிதனே" பாடல் ஒலிச்சது அரங்கில். புன்னகையித்தேன். ஆஹா வரவேற்பு பாடலே செம்மயா இருக்கே. "இன்னிக்கு தூக்கத்தில் ஒரே லவ் கனவு தான் போ காயு" என கன்னத்தில் கிள்ளாத குறையாய், சராட்டு வண்டியில் பாடலை முணுமுணுத்தபடி அமர்ந்து இருந்தேன். 

படம் ஆரம்பிச்சது. கார்த்தி சிறைல அடைக்கப்படும் காட்சி. வேறு ஒரு இருட்டு சிறைல ஒரு கைதி தண்ணிக்காக தலைய மட்டும், ரொம்ப ரொம்ப சின்ன துவாரம் வழியில நீட்டுவார். அதிகாரி ஆக்ரோஷமா நடந்து வந்து, அவரின் தலைய வலுகட்டாயமா தள்ளிவிட்டு ஜன்னலுக்கு பூட்டு போடுவார். 
செம்ம சீன் போ! வந்துட்டேனு திருப்பி சொல்லு-னு மணிரத்னம் கால் பதித்துவிட்டார் என நினைத்தேன். கார்கில் போர், ராணுவம், தீவிரவாதம், சிறை, தேசப்பற்று.  தீப்பற்றும் கொடி மேல நம்மை மறுபடியும் உருள செய்ய போகிறார் என மனதில் வீரத்துடன் தொடர்ந்து ரசித்தேன் படத்தை.


அதுக்கு அப்பரம் அடுத்த வினாடியிலே flashback. 'வான் வருவான்' பாடலுடன் லீலா அறிமுகம் காட்சி. படத்தின் ஹீரோ VC இல்ல. AC தான். Aniyaayathuku Cold. ஸ்ரீநகரை சும்மா சுத்தி சுத்தி வளையத்து வளையத்து மேகம், அருவி, சாலை, மலை, புது வெள்ளை மழை- அப்படினு ஒரே குளிர்பிரதசமா அணு அணுவா காட்டி தள்ளிட்டார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். 
ம்ம்ம்...கதை எதை நோக்கி போகுது மணி சார்?


மருத்துவமனையில் அடிப்பட்டு கிடந்த VC எழுந்து உட்கார்ந்து கவிதை பாடுகிறார். அபாஸ் ஒரு படத்துல பாரதி ரசிகனையாய் வந்து கவிதை பாடும் அபத்தமெல்லாம் பார்த்த தமிழ் சினிமாவில் VC கவிதை அரங்கேற்றம் மோசமா தெரியவில்லை என்றாலும், ஏன் எதுக்கு இந்த கவிதை?


கவிதை அரங்கேற்றம் முடிந்து, அடுத்த ஆடல் கலை நிகழ்ச்சி. 

வந்தவன், போனவன், லைட் மேன், எல்லாருமே tango ஆடுறாங்க. விமான படை பயிற்சியில் இதெல்லாமா சொல்லி தராங்கோ? லீலாகூட வந்த டாக்டர் தோழியும்  சேர்ந்து பாய்ந்து, குதித்து, எகுறி, ஏறி கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குகிறார். 

டெல்லி கணேஷ் லீலாவின் தாத்தா. அவர் வீட்டுக்கு முன்னாடி ஒரு கண்ணாடி வீடு. அவ்வளவு அழகு. ஆனால், அவரின் கதாபாத்திரம் அந்த கண்ணாடி வீட்டு அளவுகூட இல்லை என்பது மிக பெரிய வருத்தம். ஆர் ஜே பாலாஜியை வச்சு செய்து இருக்கிறார் போல (கடல் படம் விமர்சனத்துக்கு தான் நினைக்குறேன்)

"உனக்கு பெத்து போடனும்," என லீலா குமற, ஆண் ஆதிக்கம், பெண் அடிமைத்தனம் என  புதுசா ரசிக்கும் வண்ணம் காட்சிகளை நகர்த்தி கொண்டு போக நிறைய வாய்ப்பு இருந்தாலும், தான் எடுத்த முந்தைய படக்காட்சிகளை தான் மறுபடியும் எடுத்தே தீர்வேன் என கங்கணம் கட்டியிருக்கிறார் மணி சார். ஸ்ரீநகரில் இவர்களை தவிர வேறு யாருமே இல்லாதது போல் ஒரு உணர்வு. அது தான் படத்தின் நம்பகத்தன்மையை குறைத்து புதைத்துவிடுகிறது. ராவணன், கடல் போன்ற படங்களை தவிர்த்து, மற்ற மணிரத்னம் படங்களை சும்மா forward செய்து, play button  அழுத்தி பாருங்க. அந்த காட்சி ரொம்ப யதார்த்தத்திற்கு அருகாமையில் இருக்கும். 

ஒகே கண்மணி படத்தில், பிரகாஷ்ராஜ் சமையல் செய்துவிட்டு பாத்திரம் கழுவி வைப்பார்.  லீலா சாம்சன் "கடாய் அடிபிடிச்சு இருக்கு. நல்லா தேச்சு கழுவனும்" என்பார். 

யதார்த்தம். மிடில் கிளாஸ் குடும்ப யதார்த்தம். இதுபோன்ற யதார்த்தம் இல்லாததே மிக பெரிய குறை -காற்று வெளியிடை. 

துணைநடிகர்கள் அனைவரும் 'தெய்வம் தந்த வீடு' ஹிந்தி பதிப்பில் நடித்தவர்கள் போல் இருக்கிறார்கள். VCயின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி- அனைவரும்  'நம்மில் மேல் என்ன சொல்றான்' தமிழ் வாசம் வீசும் சேட்டு குடும்பம் போல் தெரிகிறார்கள். ஒரு கதாபாத்திரம்கூட மனதுக்கு ஒப்பவில்லை. 

அதிலும் அவரின் அம்மாவை லீலாவிடம்,  அறிமுகப்படுத்தி, "இவங்க அம்மா. பாரதியும் மீன் குழம்பு ஊட்டி வளர்த்தவங்க." என சொல்லும்போது, 

மணி சார், petromax lightஏ தான் வேணுமா சார்?அலைபாயுதே படத்துல பிரமிட் நடராஜான் சொல்வாரே, "அவ ஒரு இழு, இவ ஒரு இழு"

அந்த மாதிரி, லீலாவும் ஒரு பக்கம் கதையை இழுத்துகொண்டு போக, VC இன்னொரு பக்கம் இழுத்துகொண்டு போக, "yawn வருவான் வருவான்"னு பாடிகிட்டு இருந்தேன். 

அதித்தீ ராவ், ரொம்ப நல்லவே கதாபாத்திரத்துக்கு பொருந்தி இருந்தாங்க. ஆனா, படம் இரு கதாபாத்திரங்களை மட்டுமே மையப்படுத்தி இருப்பதால், இன்னும் அதிகமான அழுத்ததை கொடுத்திருக்கலாமோனு தோன்றியது. அப்பரம் நம்ம கார்த்தி. உங்களுக்கும் உங்க அண்ணனுக்கு இதுவே வேலையா போச்சு. உடம்ப குறைச்சால் நடிப்ப வரும்னு கம்பராமாயணத்துல சொல்லியிருக்காங்களா என்ன?காதல் காட்சிகளில் எல்லாம் நம்ம கார்த்தி, காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பாலயாவிடம் பேய் கதை சொல்லி பயம் காட்டுவாரே அந்த மாதிரி தென்பட்டார். 

ஆனா, கடைசி 15 நிமிடங்களில் கார்த்தியின் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும். 

படத்தில் மிகப்பெரிய ஆறுதலே ஏஆர் ரகுமான் தான்! 

வசனங்கள் என்ற பெயரில் permutation and combinationல் வரிகளை எழுதி இருக்கிறார். 


"நீ என்னைய விரும்புறத விட உன்னை அதிகமா விரும்புவேன்.
நீ என்னைய வெறுத்தாலும் விரும்புவேன்.
நீ என்னைய விரும்பலனாலும் விரும்புவேன். "கபி குபாம்
குபாம் கபி
கம்பிகும்பா
கும்பா கம்பி 
பிம்த்தகம்கு


தோழி ஒருத்தி கேட்டா, "அப்போ இனி மணிரத்னம் ரசிகையா இருக்க போறதில்ல நீ. அப்படி தானே?"


உயிரை எடுத்தாலும்,
காற்று வெளியிடை எடுத்தாலும்,


He is my man! 

Monday, March 27, 2017

கடுகு- சிறுத்தாலும் காரம் குறையாது .

"யாராச்சு நம்மகிட்ட ஹாய்...  சாப்பிட்டீயா? தூங்கினீயா?னு கேட்க மாட்டாங்களானு ஏங்குறோம். அதனால தான் இந்த facebook whatsappலலாம் அவ்வளவு கூட்டம்"

ஏன் என்று தெரியவில்லை. படத்தில் இந்த வசனம் வந்த மறுநொடியே என் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று வழிந்தது. இப்படி மனசை தொடும், வருடும் பல வசனங்களை தூவி விட்டு இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.
பிழைப்பதற்காக கிட்டதட்ட ஒரு எடுபிடி போல் காவலதிகாரியுடன் இன்னொரு ஊருக்கு வரும் புலிபாண்டி (ராஜ்குமார்) வாழ்க்கையில் என்ன நடக்கிறது என ஒரு வரியில் சொல்ல கூடிய கடுகு அளவு கதையில் மிக பெரிய பலமே இயக்குனர் தேர்வு செய்த நடிகர்கள் தான். இப்படி ஒரு நடிகர் தேர்வை கனவில்கூட எதிர்பார்த்து இருக்க மாட்டோம். ஆனா, இவர் தான் இதுக்கு பொருத்தமா இருப்பார் என்று அசூர அளவு நம்பிக்கை வைத்த இயக்குனர் விஜய் மில்டனை பாராட்ட வார்த்தை இல்லை.

'character-driven' கதையில் நடிகர்கள் கொஞ்சம் சொதப்பினால்கூட அவ்வளவு தான். அப்படி நேர்கோட்டில் பயணம் செய்த ராஜ்குமாரும் சரி, பரத்தும் சரி மிக துல்லியமாக தனது வேலையை பார்த்து இருக்கிறார்கள். ராஜ்குமார் நடித்த புலிபாண்டி கதாபாத்திரத்தில் வேறு யாரும் பொருந்தமா இருந்திருப்பார்களா என்ற கேள்வியை கேட்கும்படி அவரது நடிப்பு மிலிர்கிறது படத்தில்.

Image result for great acting quotes"ஏய்யா தப்பு பண்ணல தப்பு பண்ணல சொல்றதே பெரிய தப்பு தான்ய்யா!" என ராஜ்குமார் வாய்விட்டு அழும்போது, இவரையா நான் கிண்டல் செய்து எழுதியிருந்தேன் (திருமதி தமிழ் படத்திற்காக) என்று அறையாமல் அறைந்துவிட்டு சென்று இருக்கிறார்.  இயல்பு நடிப்பு என்பதே ஏதோ ஒரு வகையில் நமது உண்மையான சுபாவத்தை வெளிகொண்டு வருவது தான். அதனை கண்டு அறிந்து திரையில் விருந்து அளித்து இருக்கிறார் ராஜ்குமார்.


ஏதோ ஒரு விமர்சனத்தில் படித்தேன்- "புலிபாண்டி, இப்படியா ஒருத்தர் ரொம்ப நல்லவரா இருப்பார். அது தான் கொஞ்சம் நெருடலா இருக்கு."

எனக்கு ஆச்சிரியமா இருந்தது. நல்லவனை அதுவும் புலிபாண்டி போல் நல்லவனை இருப்பதுகூட இவ்வுலகில் அதிசயமா போயிவிட்டதா?  பரத் கதாபாத்திரம் போல் சூழ்நிலை கைதியாய் வாழும் அனைவருக்கும் புலிபாண்டி ஒரு அதிசயம் தான்.பரத்- காதல் படத்திற்கு அப்பரம், ஒரு நல்ல படம். இந்த மாதிரி நடிங்க பாஸ்! உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

எனக்கு மிகவும் பிடிச்சு இன்னொரு விஷயம், விஜய் மில்டன் இசைவெளியிட்டு விழாவில், எளிய மனிதர்களை வரவழைத்து அவர்களை பேச வைத்தது தான்.


இன்று காலையில் கலாய்த்து வந்த ஒரு டிவிட் படித்தேன் - "பாலா படத்த விக்ரமன் எடுத்த மாதிரி இருக்கு கடுகு"

நம்மூரில் ஒரு நல்ல படம் எடுத்தாலும், கிண்டல் செய்யும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து நல்ல சினிமாவை கொடுக்க விரும்பும் ஒரு சில இயக்குனர்களில் விஜய் மில்டனும் இப்போது வந்துவிட்டார்.

இப்படி மக்களுக்காகவும், மக்களின் மனதிற்கு பிடித்த மாதிரி படம் எடுத்த இந்த குழுவுக்கு, கடுகளவு இல்லை, கடலளவு நன்றி!


Tuesday, March 14, 2017

மொட்ட சிவா கெட்ட சிவா டா- இவன் முத்துராமலிங்கத்தோட அப்பா டா

(இன்று முதல் உங்கள் Makkal Reviewer என்று பெயரில் பதிவுகள் எழுதப்படும்!)

டூயட் படத்துல ஒரு காட்சி வரும். பிரபுவிற்கு ஹீரோயின் தான் கடிதம் அனுப்பி இருக்கிறார் என்று நினைத்து கொண்டு, எழுத்துக்களை 'வாசி வாசி' என்று, பிரபு வரிசைப்படுத்தி இருப்பார். ஆனா, அது வாசி வாசி, இல்ல 'சிவா சிவா' என்று அவரின் சித்தி சீதாம்மா விளக்குவார்.

அது போல  மக்கள் சூப்பர்ஸ்டார் ராகவா லாரண்ஸ் நடித்த இப்படம், வெறும்  சிவா சிவா என பொருள் எடுத்து கொள்ளக் கூடாது. அதையும் தாண்டி ஒன்னு இருக்கு. காதல் காட்சிகளால் நம்  Oxytocin எனும் love hormoneனை தீண்டி இருக்கிறார். சண்டை காட்சிகளால் நம்  neurotransmittersயை நோண்டி இருக்கிறார். நடன காட்சிகளால் நம் இதயத்தில் பாண்டி ஆடியிருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளால் நம் உள்ளத்தை இரண்டாய் பிளந்து இந்த பக்கமும் அந்த பக்கமும் தாண்டி விளையாடி இருக்கிறார்.

ஹீரோ intro காட்சியில், மக்கள் சூப்பர்ஸ்டார் ஜீப்பில் வருகிறார். அப்போது 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடல் ரேடியோவில் ஒலிப்பரப்பாகிறது. தனது அரசியல் ஆசையை தெரிவிக்க இதைவிட ஒரு சிறந்த வழி யாராலும் கண்டுபிடித்து இருக்க முடியாது.  இலைகள் பறக்க, காற்று திசை மாற, அருவி கொட்ட, slow motionல அவர் நடந்து வர, ஐம்பூதங்களும் எப்படி அவருக்கு அடிமை ஆகிறதோ அப்படியே நாமும் ஐம்புலன்களையும் அவர் காலடியில் வைக்கிறோம் படம் ஆரம்பித்து 10 நிமிடங்களில். உலகத்தை மறந்து இப்படத்தை ரசிக்க தொடங்குகிறோம்.

காவல் அதிகாரியாக சேர்ந்தவுடன் முதல் கடமையாக hero introduction பாடலுக்கு செவ்வனே ஆடி முடிக்கிறார். முடித்தவுடன், நாட்டுக்கு ரொம்ப அவசியமான அடுத்த கடமையை செய்கிறார். காதல் வயப்படுகிறார் ஹீரோயின் மேல. காமெடியன் சதீஷ், "அப்படியே ஒரு மணிரத்னம் frame போட்டு வெயிட் பண்ணா, பொண்ணு வந்திட போகுது." என்று கூறுகையில் ஹீரோவுக்கு ஒரு நல்லது நடந்துவிடதா என்று மனம் ஏங்குகிறது. திருப்பதிக்கு வந்து மொட்ட போட்டு கொள்கிறேன் சாமி! என்று நம் மனம் பிரத்தனையில் ஈடுபடுகிறது.


நம் பிரத்தனை உடனே நிறைவேற்றி வைக்கிறார் நம்மை கைவிடாத ராகவேந்திரா சாமி. 30 வினாடிகளில் காதலில் விழுவது எப்படி என்று புத்தகத்தையே இயக்குனர் எழுதி இருப்பார் போலும். நிக்கி கல்ராணி ஓடி வருகையில் ராகவா லாரண்ஸுக்கு காதல் வந்துவிடுகிறது. "என்னைய காப்பாத்துங்க" என நிக்கி பயந்து அழ, மறுபடியும் ராகவாவிற்கு  காதல். காமத்துபால் அனைத்தையும் அள்ளி பருகும் விதமாக ஒரு பிண்ணனி இசை வரும் பாருங்க. அதை கேட்டதும், உங்களுக்கு எந்த காதல் உணர்ச்சியும் ஏற்படவில்லை என்றால், நீங்கள் ஒரு ஜடம்.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை கண்ணாடி

என்று கண்ணாடி இப்படத்தில் 2nd heroவாக வளம் வந்து இருக்கிறது. கடைசி வரைக்கும் கண்ணாடி, ஹீரோவிடமிருந்து எக்காரணத்துக்கும் பிரிந்து செல்லவில்லை. அதிலும் ஒரு புதுமையை இயக்குனர் புகுத்தியிருக்கிறார் பாருங்க. ஹீரோவின் உள்பனியன் வண்ணத்திலே கண்ணாடி! அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பனியனின் கலர் கண்ணாடியில் தெரியும் என பழமொழியையே மாற்றி அமைத்திருக்கிறார் மக்கள் இயக்குனர் சாய் ரமணி.

கண்ணாடிக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? அத்தனைக்கும் ஆசைபடவில்லையா?

இசையமைப்பாளர் அமரேஷ் வீட்டின் வெளியே பாவமாய் கிடந்தன மென்மையான இசை கருவிகளான புல்லாங்குழல், வைலீன் ஆகியவை. drums சிவமணிக்கே சவால் விட்ட மாதிரி இசை முழுக்க 'டக்கு டக்கு டண்டனக்கா டக்கு டக்கு டண்டனக்கா' என்று தான் இருந்தது. ஒரு கட்டத்தில், என் கபாலத்தில் தான் யாரோ இசை மீட்டுகிறார்கள் என்று நினைத்துவிட்டேன். இசை நெஞ்சை தழுவலாம், இங்கே மண்டையே போட்டு தழுவியது.

'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பது தான் சுகம் சுகம்' பாடலை கேட்டு சமாதியிலிருந்து எம் ஜி ஆர் ஆத்மாவே வெளியே வருவதாக திடிகிடும் தகவல்கள் பல. பாடல் ஆரம்பிக்கும்போது, 'பொழட்சி' என ஒரு சொல் வரும். எந்த இலக்கியவாதியும் பயன்படுத்தாத சொல். இதுக்கு என்ன அர்த்தம் என்று ஆராய்ச்சி செய்கையில் தான் புரிந்தது 'புரட்சி' என்பதை தான் அப்படி பாடியிருக்கிறார் பாடகர். சுக்விந்தர் சிங்-க்குகே சுறுக்குனு குத்தியிருக்கும்.

தொட்டு ஆடலாம். ஆனால், இங்க மக்கள் சூப்பர்ஸ்டார், ஹீரோயினை அடித்து ஆடியிருக்கிறார். அவர் அடித்த அடிகளுக்கு, நிக்கி கல்ராணிக்கு பதில், கொஞ்ச மாவும் தண்ணீரும் வைத்திருந்தால், 547 பூரிகள் நமக்கு கிடைத்திருக்கும்.

கதை திரைக்கதை, காட்சியமைப்பு, நடிப்பு என்று அனைத்தும் ராகவா நடனம் போல் வழுக்கினே போகுது. அதை தொடர்ந்து நாமும் செல்ல, கடைசியில் நமக்கு என்ன ஆகிறது? என்பது தான் இப்படம் நம் அறிவை எட்டி உதைத்து கற்று தந்த பாடம்.

'காருக்கு எதுக்கு அச்சாணி' என வடிவேலு சொன்னதுபோல், இப்படத்துக்கு சத்தியராஜ், கோவை சரளா, சதீஷ், தேவதர்ஷினி என காமெடி பட்டாளம் எதுக்கு? humorக்கே tumor வந்ததுபோல் இருந்த நகைச்சுவைக்கு தான் சமாதி கட்டி, அதுக்கு முன் நாம் அனைவரும் தியானம் செய்வோமாக!Sunday, March 5, 2017

தமிழ் படம் (குற்றம் 23) ஈரானிய படம் (the salesman)
குற்றம் 23:

கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணனையை போல் விஜயகுமார் appointment order கடிதத்துடன் பிறந்தவர் போல. எந்த காவல் அதிகாரி வந்தாலும், கடிதத்தை  நீட்டி, "நீங்க தான் இந்த கேஸ எடுக்கனும்." என சொல்கிறார். 

என்ன சம்பவம்? ஏன் இந்த கொலை நடக்குது? சொந்த அண்ணியே இதில் பாதிக்கபட்டு இருக்கிறார் என்றால்? என்ன நடந்து இருக்கும் என்பதையெல்லாம் காவல் அதிகாரி அருண்விஜய்  கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பதே medical crime thriller 'குற்றம் 23' படத்தின் கதை.

பேய் படங்கள் சீசன் முடிஞ்சு இப்போ crime thriller  படங்கள் சீசன் மாதிரி தெரியுது. வரிசையாய் நல்ல படங்கள்- தனி ஒருவன், துருவங்கள் 16. அந்த வரிசையில் ஒரு நல்ல படம். பயங்கரமான திருப்பங்கள் இல்லை என்றாலும், விறுவிறுப்பா நகர்கிறது படம்.

 கிரைம் திரில்லர் வல்லுநர் ராஜேஷ் குமாரின் கைவண்ணத்தில் வந்தது. இப்போதான் கூகல் செய்து பார்த்தேன். 1700 கதைகள் எழுதி இருக்காராம். 450 கதைகள் மட்டும் பாக்கெட் நாவல்களாம். 'குற்றம் 23' படம் பார்க்கும்போது படித்தால் கிடைக்கும் சுவாரஸ்சியம் அப்படியே தெரிந்தது. கதையை, திரைக்கதையாக மாற்றிய இயக்குனர் அறிவழகனுக்கு சபாஷ்! இப்படத்தை 'decent film' என்ற பிரிவில் வகைப்படுத்தலாம். அதிகம் யூகிக்க வேண்டிய காட்சிகள் இல்லை என்றாலும் அவ்வபோது 'அட' என்ற போட வைத்துள்ளார்.

Image result for kuttram 23 scene

அருண் விஜய் ஒரு மொட்டை மாடி காட்சியில் கோபத்துடன் ஒரு மாதிரியா கண்கலங்கி நிப்பார் பாருங்க. அருண் விஜய்க்கு இனியாவது நல்ல படம் வரட்டும், வெற்றி வரனும். கதாநாயகி, காக்க காக்க மாயா போல் இருந்தாலும் (இங்கயும் ஆசிரியர் தான், ஹீரோவிடம் லவ் சொல்வார் ஜீப் பக்கத்தில் நின்று கொண்டு)

அமித், அமிநயா நடிப்பெல்லாம் பிரமாதம். எந்த குறையுமே சொல்ல முடியாத அளவுக்கு நடிகர்களின் தேர்வு.

 பொதுவா லூசு ஹீரோயின்களை தான் தமிழ் படங்களில் பார்ப்போம். லூசு போலீஸ் என்று ஒரு பிரிவு இருக்குதுனா அதுக்கு காரணம் தம்பி ராமய்யா! நகைச்சுவை என்ற பெயரில் முடிந்தவரை சிரிக்க வைக்கிறார்.

கிளைமெக்ஸ் நெருங்கும்போது வரும் 'evidence evidence  சொல்லிதான் இவனுங்களையெல்லாம் விட்டு வைக்குறோம். எதுக்கு?"னு கத்தி ஆவேசப்படும்போது, செம்மயா இருந்துச்சு. ஆனா, வில்லன் ஏன் கொலை பண்றான்னு இன்னும் அழுத்தமா சொல்லியிருக்கலாம். அப்பரம் சில இடத்துல நிறைய 'telling'. கதை எழுதும்போது வாசகர்களுக்கும் சரி, படம் பார்ப்பவர்களுக்கும் 'don't tell. show!' அப்படினு ஒரு விஷயம் இருக்கு.

'குற்றம் 23' என்னதான் சில இடங்களில் பிரமாதமாய் 'show' இருந்தாலும், பாதி நேரம் விசாரணை என்ற பெயரில் வசனம் பேசி கொண்டே இருப்பதால், சற்று சலிப்பு வருவதை தடுக்க முடியவில்லை.

இருப்பினும், 'குற்றம் 23'- படத்தை பார்த்தால், நிச்சயம் ரசிப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை.

அப்பர்ம, இந்த படத்தின் promo.************************************************************************

The salesman:

வேறு மொழிகள் திரைப்படங்கள் பிரிவில் இவ்வருடத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்ற ஈரானி படம் தான் 'The salesman.' எழுத்து இயக்கம்- Asghar Farhadi. மொத்தமே 11 படங்கள் தான் எடுத்து இருக்கிறார். அதில் இரண்டு படங்கள் ஆஸ்கர் விருது பெற்றவை (விருது பெற்ற இன்னொரு படம் separation- 2011)

குற்றம் 23 போலவே இதிலும் ஹீரோ குற்றவாளியை தேடி போகிறார். ஹீரோ அவ்வூரில் ஒரு ஆசிரியர். பகுதி நேரமாக மேடை நாடக நடிகராக இருப்பார். அவரது மனைவி ஒரு மேடை நாடக நடிகை. இருவரும் புது வாடகை வீட்டுக்கு செல்வார்கள். ஒரு நாள், ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துவிடும்.

ஹீரோ வெளியே சென்றுவிடுவார். கதவு ஒலி கேட்கும். கணவன் தான் வந்துவிட்டார் என கதவை லேசாக திறந்துவிட்டு,  குளிக்க போவார். யாரோ ஒருவர் வீடு புகுந்துவிட்டு, அந்த நபர் குளியலறைக்கு சென்றுவிடுவார்.
Image result for the salesman iran film
என்ன நடந்தது என்பதை கொடூரமான காட்சிகளால் காட்டாமல்விட்ட இயக்குனருக்கு ஆஸ்கர் விருது கொடுத்ததில் எந்த ஆச்சிரியமும் இல்லை. 'she was assaulted' என்று தான் குற்றவாளியை கண்டுபிடிக்கும்வரை இருக்கும். பாதிக்கப்பட்டவருக்கு தலையிலும் அடி. அதற்கு பிறகு வரும் காட்சிகளில், இவருக்கு என்ன தான் உண்மையில் நடந்து இருக்கும் என படம் பார்ப்பவர்களுக்கு தெரியும். கதாபாத்திரங்களுக்கும் தெரியும். ஆனா, அதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அந்த ஒரு உணர்வு பாலம்- அற்புதமான திரைக்கதை.

 ஈரானிய படங்கள், பல, ரொம்ப மெதுவா நகரும். பிண்ணனி இசை எதுவுமே இல்லாமல் இருக்கும்.

Image result for the salesman scene
இந்திய படங்களை பார்த்து கெட்டு போன மனசும் புத்தியும், இந்த இடத்துல பிண்ணனி இசையை போட்டிருக்கும்னு வேதாந்தம் பேசியது.  'queen' இந்தி படத்தில் Kangana Ranaut Parisல் இருக்கும்போது இத்தாலிய உணவில் மிளகாய் காரம் சேர்ப்பார். அதற்கு கடைக்காரர் கத்துவார்- எல்லாத்தை இந்திய உணவாய் மாற்றுவது ஏன்?

அப்படி தான் எனக்கு இருந்துச்சு. இசையில்லாமல் படம் எடுப்பது ஈரானிய படம் பாணி. அப்படி இசையே இல்லாம இருந்ததது தான் 'the salesman' படத்தின் வெற்றி. காட்சிகள் பலவும் மனதை பதைபதைக்க வைத்தது. கடைசியில் குற்றவாளியை கண்டு பிடித்துவிடுவார் கணவர். அதில் ஒரு சின்ன திருப்பம்.
இவரா குற்றவாளி என தெரிந்தது எந்த கூச்சலும் இல்லை கத்தலும் இல்லை. ஆனா, படம் பார்ப்பவர்களுக்கும் கட்டாயம் கோபம் வரும் குற்றவாளி மேல். கூடவே பரிதாபம் ஏற்படும்.

இப்படிதான் நடிப்பு, கதையமைப்பு, காட்சிகள், முக்கியமா வசனங்கள் (subtitles) அனைத்தும் உலக சினிமா வரலாற்று பக்கத்தில் கட்டாயம் இடம்பெறும்.

Sunday, February 12, 2017

சிங்கம் 3-ஓரளவுக்கு தான் பொறுமை காக்க முடியும்

சீ.டி வித்த சசிகலாவா இருந்தாலும் சரி
சிங்கம் பார்த்த ரசிகர்களாக இருந்தாலும் சரி,

"ஓரளவுக்கு தான் பொறுமை காக்க முடியும்!"

238 பக்க டயலாக் கொண்ட 2.5 மணி நேரம் படம். அதில் கிட்டதட்ட 237 பக்கத்துக்கு சிங்கம் மட்டுமே கத்திகிட்டு இருக்கு. சிட்னி போய் வில்லன சுடுவதற்குள், பதில் இங்க சுட்ட தோசைக்கு சட்னி அரைச்சு இருந்திருக்கலாம். #dosachallenge


தாலி செண்டிமெண்ட் காட்சி ஒன்னு விமான நிலையத்தில். இவ்வளவு சீக்கிரமா ஆர்போர்ட்-ல செக் பண்ணிவிட்டுடுவாங்களா? அதுவும் சிட்னி போறத்துக்கு. ஆஸ்திரேலியா சமீபத்தில் தான் போயிட்டு வந்தேன். பெட்டிக்குள்ள இருக்கும் சாப்பாட்டு பொருட்களை ஒவ்வொன்றாய் செக் பண்ணுவாங்க. அப்படியும் ஒன்னும் இல்லை என்று சொன்னாலும், தனி வழியில் செல்ல வேண்டும். அங்கேயும் மறுபடியும் செக், காவல் நாய் ஒன்னு வந்து பெட்டிகளை மொப்பம் பிடிக்கும்.

இது போக, தாலிய எடுக்க முடியாதுனு சொல்லும் அனுஷ்கா, அதுக்கு ஒரு செண்டிமெண்ட் டயலாக், பின்னாடி ஓஓஓஓ ஒரு மியுசிக் வேற. கலாச்சாரத்த காப்பாத்திட்டாங்களாம்! படத்தின் முதல் பாடல், அதுவும் ஐட்டம் சாங், இந்த பாட்டு எந்த விதத்தில் கலாச்சாரத்தை காப்பாத்தியதுனு சொல்லுங்க, சிங்கத்தின் சிங்கங்களே!!

சூரி, வில்லன், ஸ்ருதி- இதில் யார் சிறந்த காமெடியன் என்ற பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி ஒரு நடிப்பு. சும்மா வெட்டியா பேஸ்புக்ல இருக்கறவனே செம்ம காமெடியா எழுதுகிட்டு இருக்கான்! இன்னும் ரைமிங் வசனம் தான் காமெடினு நினைச்சு....ச்சே!

ஸ்ருதி- சரி விடுங்க! நான் எதும் சொல்றதுக்கு இல்ல.

வில்லன்- பாதி நேரம் உடற்பயிற்சி பண்ணிகிட்டு இருக்கு. அதுக்கு பின்னாடி, ஜூஸ் கொடுக்கும் பெண்கள். எங்க தலைவர் செய்த காமெடி காட்சியை அப்படியே உள்ள வாங்கி செய்து இருக்கார்.இயக்குனர் ஹரி- அடுத்த சிங்கம் 4 எடுப்பார் என்ற தகவல். சூர்யாவ நிஜம் சிங்கமா ஆக்காம விட மாட்டார் போல.

Saturday, February 11, 2017

சிங்கப்பூரில் தைப்பூசம் 2017.


 வருஷம் வருஷம் பிரமாண்டமாய் நடக்கும் விழா. பல ஆயிரம் தமிழ் மக்களும் சில சீனர்களும் காவேடி தூக்கி, வழிபாடு செய்யும் விழா. இதை பார்க்கவே வெளிநாட்டினர் வந்து குவியும் விழா.

சின்ன பிள்ளையா இருக்கும்போது, மாலையில் காவெடி பார்க்க போவது வழக்கம். நாற்காலி அல்லது செய்திதாளை விரித்து கிட்டதட்ட பிக்கினிக் போல தான் காவெடி பார்க்க போவோம். அந்த வழக்கம் கல்லூரி முடிந்த பிறகு, போச்சு. கடந்த 10 ஆண்டிகளுக்கு மேல் ஆச்சு. ஆனா, வருஷம் வருஷம் பால் குடம் தூக்கிட்டு போவோம். (நான் பால் கூஜா தூக்குவேன். நம்ம பக்தில கொஞ்சம் வீக் தான்!)

தைப்பூசம் அன்று, விடுமுறை கிடையாது, மலேசியா போல். ஆக, லீவு எடுக்க வேண்டும் ஆபிசில். லீவு எடுப்பது பெரும்பாடு. கிட்டதட்ட அம்மன் பட ரம்யாகிருஷணன் போல் டான்ஸ் எல்லாம் ஆடி காட்ட வேண்டியிருந்தது. எப்படியோ லீவு கொடுத்துவிட்டார்கள் கடைசியில். 'யப்பா சாமி, ரொம்ப நன்றி!' -என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

 வார நாளில் ஒரு நாள் லீவு கிடைப்பதே முருகன் ஆசி கொடுத்துவிட்டார் என்று தான் அர்த்தம். இதுவே பெரிய சாதனை தான். வியாழக்கிழமை விடியற்காலையில், பால் கூஜா தூக்கி சென்றேன். பெருமாள் கோயிலிருந்து, கிட்டதட்ட 3.6கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தேங் ரோட் முருகன் கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும். இதற்காக, ஒதுக்கப்பட்ட ரோடு உண்டு. வழி முழுதும், போலீஸ் பாதுகாப்பு, மற்ற தொண்டூரிழயர்களும் உண்டு. களைப்பு தெரியாமல் இருக்க, மோர், காபி, சாப்பாடு என அனைத்து ஏற்பாடுகளும் இருந்தன.

எப்போதும் போல கூட்டம். முருகன் கோயிலை அடைவதற்கு ஒரு 500 மீட்டர் இருக்கும் தருவாயில், வழி இரண்டாக பிரிந்தது. குடும்பம், பெரியவர்களுக்காக ஒரு தனி வழியும் மற்றவர்களுக்கு தனி வழியும். ஒவ்வொரு பகுதியிலும் கிட்டதட்ட 5 நிமிடங்கள் நிற்க வேண்டும். எப்படி பார்த்தாலும், இட்டதட்ட 2 மணி நேரம் காத்திருக்க வேண்டும். பக்தியில் கொண்டாடியவர்கள் ஒரு புரம் இருந்தாலு, "ஐயோ மணி ஆச்சே, நான் வேலைக்கு லீவு எடுக்கல, 6 மணிக்குள்ளே கிளம்பியாகுனுமே" என்று திண்டாடியவர்கள் ஒரு புரம்.

'நல்ல வேள!' நான் லீவு எடுத்து வைத்திருந்தேன். இல்லை என்றால் எனக்கும் 'குமரனுக்கு குன்றத்திலே கொண்டாட்டம்' தான். வேண்டுதலை நிம்மதியாக செய்திருக்க முடியாது. சமந்தா-சைத்தன்யா நல்லா இருக்கனும், அமெரிக்கா நல்ல இருக்கனும், தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் கிடைக்கனும் என பல side வேண்டுதல்கள் உட்பட முக்கியமான வேண்டுதல் ஒன்னு இருக்கு அதையும் சொல்லி, பாலை ஊற்றிவிட்டு வெளியே வந்தேன்.

வந்து நல்லா தூங்கிவிட்டேன். பால் குடம், பால் காவெடி முடிந்து, பெரிய காவெடிகளை காலை 7 மணி முதல் ஆரம்பித்தார்கள். சரி என்ன தான் நடக்குது என்று பார்க்க ஒரு காலை 10 மணி அளவில் சென்று பார்த்தேன்.

 ஆங்காங்கே, இசைக்காக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. களைப்பு தெரியாமல் இருக்கு, இசை ரொம்ப முக்கியம்.

பிறகு, மாலையிலும் இன்னொரு முறை காவேடி பார்க்க சென்றேன், கல்லூரி தோழியுடன். ஆக மொத்தமாக, மூன்று முறை நடந்து இருக்கேன். செஞ்ச பாவங்களையும், செய்ய போக பாவங்களையும் இப்படியாவது தீர்ப்போமே!
video

Sunday, January 15, 2017

பைரவா- எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு

அந்த காலத்துல கொத்தடிமைகளா வச்சு வேலை வாங்கி துன்புறத்தப்பட்ட தான் கூலி வேலை செஞ்சாங்க நிறைய பேர் . அது ரொம்பலாம் மாறல இன்னைக்கும். ஆபிஸுக்கு போய் பார்த்தா, நம்மள எப்படிலாம் டிசைன் டிசைனா டார்ச்சர் பண்ண முடியுமா அப்படி 'செஞ்சி' தான் வீட்டுக்கே அனுப்புறான். இப்படி தான் என்னை போன்ற பல கொடி மக்கள் வேலைக்கு போயிட்டு இருக்காங்க.

அப்பவும் சரி இப்பவும் சரி, நாங்க நிம்மதி தேடும் ஒரு சில விஷயங்களில் படம் பார்த்தும் ஒன்னு. ரெண்டு மணி நேரம் உலகத்தை மறந்து, சந்தோஷமா இருக்கனும். அந்த சந்தோஷம் என்பது வெறும் நாலு பாட்டு, கிரிக்கெட் மட்டை சண்டை, சைக்கிலில் பறந்தால் வந்திடும்னு நினைச்சா அது மிக பெரிய தப்பு. துரோகம்.

ரசிகர்களுக்காக தான் படம் பண்ணுறேன்- சொல்லும்  பாணியே முதல தப்பு. யார் ரசிகன்? உன் 100அடி கட்-அவுட்டுக்கு மாலை போட்டு, பால் அமிஷேகம் பண்ணி, நீ முதல் காட்சியில் slow motionல பறக்கும்போதோ, குதிக்கும்போதோ, பாயும்போதோ கத்துறானே அவனா?

அவன் நீ சேர்த்து வச்சுருக்கும் தொண்டன். அவ்வளவுதான்.

நான் ரசிகன். ரசிகன் வேற தொண்டன் வேற. நீ, ரசிகனுக்கு எப்போதுமே துரோகம் தான் பண்ணிக்கிட்டு இருக்கே.

சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் ஒரு கருத்த ஆணித்தரமா சொல்லியிருந்தார் - "இங்க படம் பார்க்கும் கூட்டம் வேற, படத்தை தயாரிக்கும் கூட்டம் வேற."

ரெண்டு பேருமே எதிர்ப்பார்ப்பது வேறு. தயாரிப்பாளனுக்கு மட்டும் படம் பண்ணா, இப்படி தான் இருக்கும்,தலைவா.

வாழ்க்கை ஒரு வட்டம்னு சொன்ன நீயே அந்த வட்டத்துக்குள்ள சிக்கி கஷ்டப்படுற, எங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்துற. typewriter கால பழைய கதை, யூகிக்க கூடிய திரைக்கதை, வலுவற்ற பாட்டு, அதையும் தாண்டி ஒரு விக்கு. இது தான் பைரவா!

மரண மாஸ் கதை தான் தனக்கு பலம்.

முப்பது வருஷமா கோலம் போட்டவங்க கூட எந்திரிச்சு போயிட்டாங்க, ஆனா இன்னும் அதே சைக்கிள்ல வர? இது மரண மாஸா?


கதை- ஆவூனா, மக்கள காப்பத்துறேன். ஊர காப்பத்துறேனு சொன்ன காலமெல்லாம் இருக்கட்டும் தலைவா. காப்பத்தியது எல்லாம் போதும். இப்போ உன் திறமை என்ன? இப்ப உள்ள காலகட்டதுக்கு படம் பண்ண ஏன் இவ்வளவு தயக்கம்? மக்களுக்கு படம் பண்ண வேண்டாம், அந்த மக்களில் ஒருவனாய் இருந்தால், என்ன பண்ணவ? அது மட்டும் போதும் என் போன்ற ரசிகனுக்கு.

பலம்- உன் பலமே உன் பலவீனமா போச்சு.

பைரவா படம் எனக்கு சுத்தமா பிடிக்காததற்கு காரணம் இயல்புதன்மை அற்ற ஒரு ஓட்டம். அனைத்து காட்சிகளுமே செட்-க்குள்ளே நடக்குது, சென்னையாக இருந்தாலும் சரி, திருநெல்வேலியாக இருந்தாலும் சரி. அதிலும் ஒரு பைக் காட்சி. ரேமோ படத்திலிருந்து டாக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பின்னாடி உட்கார்ந்து போகும் காட்சி. அதுகூட வெளிபுற காட்சியாக அமைக்க முடியாத ஒரு சூழல். உன்னைய வச்சு வெளிபுற காட்சி எடுக்க முடியாத ஒரு உயரத்தில் நீ இருக்க, தரையில் நடுக்கும் உண்மை நிலை உன் கண்ணுக்கு தெரியல.


பல பேட்டிகளில் விஜய் சட்டைய பத்தி பேச்சு. புள்ளி வச்சு சட்டையாம்?

விஜய் சூப்பரா காசை வச்சு கையில் வித்தை காட்டுறாரு- இது தான் நீ கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கும் விதமா?

"சிறப்பு...மிக சிறப்பு" 

அப்படி என்ன மாதிரி தான் படத்துல நடிக்கனும்?

1) துருவங்கள் பதினாறு- செம்ம படம் தலைவா!! உனக்கு பிடிச்ச போலீஸ் கதாபாத்திரம் தான். நிதானமா, திரைக்கதை அவ்வளவு புத்திசாலித்தனமா இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு கதையில் நீ தோன்ற வேணும்.  ஆனா தலைவா, இதலயும் போய் ரைம்ஸ் சொல்வேனு அடம்பிடிக்க கூடாது.


2) காதலும் கடந்து போகும்- உனக்கே உரிய காமெடி ரோல். ரொம்ப ரொம்ப சதாரணமான கதை. ஆனா, உனக்குள் இருக்கும் நடிகன் நிச்சயமா அனைவருக்கும் பிடித்திருக்கும். 

3) கொடி- ரெட்டை வேடத்தில் கலக்கியிருக்கலாம். இதுவும் கிராமத்தை காப்பத்தும் கதை தான். ஆனா, நிறைய சுவாரஸ்சியம் கலந்த கதை. தம்பியாகவும் அண்ணனாகவும் நடித்து கொடியை உச்சத்தில பறக்கவிட்டு இருக்கலாம்.

4) 24- அறிவியில் சார்ந்த கதை. குழந்தைகளுக்காக ஆட்டம் ஆடும் நீ, இதுல அறிவுபூர்வமா நிறைய விஷயங்களை உன்னை ரசிக்கும் குழந்தைகளுக்காக செய்து இருக்கலாம். 'புலி' குழந்தைகளுக்கான படம் இல்ல.

இப்படி ஏகப்பட்ட படங்களில் உன் அவதாரத்தை பார்க்க ஆவலா இருக்கேன்.


சமீபத்தில், தோழிகளுடன் பேசி கொண்டிருக்கும்போது உன் பேச்சு வந்துச்சு.

நான்: விஜய் பழைய மாதிரி படங்கள நடிக்கனும். you know...like ok kanmani!

தோழி: என்ன விளையாடுறீயா? living together relationshipல விஜ்யா?


இன்னோரு தோழி: கண்டிப்பா முடியாது! அதலாம் முடியாது.

நான்: டுல்கர் சல்மான் ரோல் பத்தி பேசுல. பிரகாஷ் ராஜ் ரோல நடிக்கலாம்னு சொல்றேன். 

ஆச்சிரியத்தில் வாய்பிளந்து தோழிகளுக்கு மயக்கம் வந்தது.பைரவா படத்துல நீ , 'நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்ட்ட்ட்ட பழக்கம் என் கிட்ட இருக்கு!"

உன் உண்மை ரசிகையாய் எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு-

"இந்த மாதிரி படத்துல எப்படி விஜய்'னு இந்த உலகத்தையே ஆச்சிரியத்தில் முழ்கடிக்க வைக்கும் படத்தில் நீ நடிச்சுருவேனு நம்பிக்கையோட வாழ்றது"

Sunday, January 1, 2017

துருவங்கள் பதினாறு- 2017 படைக்க வருது வரலாறு

துருவங்கள் பதினாறு. இப்படி  தரமான படங்களை மட்டும் தமிழ் சினிமா 2017ல் கொடுக்க முன்வந்தால், யாரலையும் அடிச்சுக்க முடியாது நம்மை! நல்ல சினிமாவை பார்க்க துடிக்கும் அனைவருக்கும், துருவங்கள் 16 ஒரு புத்தாண்டு பரிசு தான் போங்க!துருவங்கள் 16- என்னய்யா இப்படி கலக்கி இருக்கான் பையன் என்று வாய் பிளந்தேன் நான். இயக்குனர்- கார்த்திக் நரேன். இப்போது தான் 22 வயதாம். படம் ஆரம்பிக்கும் போது 21 வயது. அப்போ நினைத்து பாருங்க, இக்கதைய யோசிச்சு இருக்கும்போது 20 வயதுகூட முழுசா ஆகி இருக்காது. இருந்தும், இக்கதைய யோசிச்சு திரைக்கதையை பிரமாதமாய் அமைத்ததற்கு, கார்த்திக் நரேன் அவர்களே, hats off bro!!

ஒரு கொலை, இல்ல இல்ல இரண்டு கொலைகள் நடக்கின்றன ஒரே நாளில் கிட்டதட்ட ஒரே இடத்தில்- கொலையை யார் பண்ணியிருப்பா? இதற்கு காரணம் என்ன? இது தான் கதை. இந்த மாதிரி கதையெல்லாம் ஜெய் சங்கர் காலம் முதல் நாம் பார்த்து பழகி இருந்தாலும், து.16 தனியா தனித்து கம்பீரமாய் நிற்கிறது.

முடிவு எனக்கு அவ்வளவு திருப்தியாக இல்லாவிட்டாலும், படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து கடைசி வரைக்கும், என்னை நகர விடாமல் செய்தன- காட்சியமைப்பு, நடிப்பு, பிண்ணனி இசை.

non-linear narrative- கதை கேட்ட ரகுமானே, முழு படத்தை பார்த்தபிறகு தான் அவருக்கே படம் புரிந்ததாம். ஆனாலும், இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். படம் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக 'chronological order'ல் சம்பவங்களை கூறுவார் காவல் அதிகாரி ஒருவர் ஒரு காட்சியில். ரொம்பவே ரசித்தேன். "உலக சினிமா என்று நான் எந்த ஒரு வெங்காயத்தை எடுத்தாலும், அதை நீ பார்த்தே ஆகனும்." என வீராப்பு பேசும் இயக்குனர்கள் நிறைந்த சினிமாவில், ரசிகனையும் அரவணைத்து அவனுக்கு புரியும்படி காட்சிகள் வைத்தது, மிக சிறப்பு.

ஒரு இடத்தில், காவல அதிகாரி சாட்சி ஒருவரை காவல் நிலையத்திற்குள் அழைத்து செல்வார். அப்போது அழைத்து செல்லும்போது, அந்த அதிகாரி அங்கு சுத்தம் செய்து கொண்டிருக்கும் ஒருத்தியிடம், "பின்னாடி போய் கிளின் பண்ணுங்க. இலையெல்லாம் நிறைய கிடக்குது" என்பார். சொல்லிகொண்டே சாட்சியை உள்ளே அழைத்து போவார். ரொம்பவே யதார்த்தமான வசனம், கதை போக்கு. இயல்பு நிலைக்கு அப்படியே ஒட்டிய ஒரு ஓட்டம். இப்படி நிறைய காட்சிகள், "backdrop movements and characters"; நிரம்பி இருக்கும். 


ரகுமான் கதாபாத்திரத்தில் எத்தனையோ நடிகர்கள் பண்ணியிருக்கலாம். ஆனா, ரகுமான் மாதிரி வராது. விசாரணை நடக்கும் ஒரு வீட்டில். வாகனத்தில் என்ன இருக்கு என்று கான்ஸ்டபல் ஒருவரை பார்க்க சொல்வார். ஆனால், கான்ஸ்டபல் வண்டி பூட்டி இருக்கு என்பார். அதற்கு, ரகுமான், "அப்படியா?" என்று கூறியபடி வாகனத்தில் கதவை திறப்பார். "அதான் திறந்துகிடக்குதே" என்பதை முகபாவத்தில் காட்டுவார் பாருங்க.....செம்ம செம்ம செம்ம ஜீ!! 

படத்தில் எனக்கு பிடித்த என்னொரு விஷயம்- பிண்ணனி இசை. டமால் டுமீல் என்று இசையை இறைச்சலாய் அமையும் இந்த மாதிரி காவல் அதிகாரி கதைகள். பீரை மோராய் குடிக்கும் அதிகாரிகள், சிங்கம், புலி, சிறுத்தை, பல்லி, ஓனாய் போன்ற சத்தங்களும் நிறைந்தால் தான் ஒரு போலீஸ் கதை வெற்றி பெரும் என்ற காலம் போய் இப்படி ரொம்ப சாந்தமான நீரோட்டத்துடன் ஒரு போலீஸ் கதை!! இசை தனியாக இல்லாமல், திரைக்கதையை 'அலேக்கா' தூக்கி கொண்டு போய் இருக்கிறது. 


கிட்டதட்ட 2 மணி நேரத்திற்குள் ஒரு நாவல் படித்த, அதுவும் ஒரு நல்ல சுவாரஸ்சியமான நாவல் படித்த திருப்தி!! 

இயக்குனர் பல இடங்களில் கதை சொல்லி இருக்காராம். ஆனால், தயாரிப்பாளர் தயாராக இல்லையாம். ஆக, தனது அப்பாவுக்கு ஃபோன் போட்டு சொல்லியிருக்காராம். அவரும் நமே படத்தை எடுப்போம் என்று நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்! அப்படி எடுக்கப்பட்ட படம் தான் 'துருவங்கள் 16'.

எங்க வூட்டுல எல்லாம் படம் டிக்கேட் எடுக்கவே உதவி செய்ய மாட்டாங்க! கார்த்திக், உங்களுக்கு நல்ல support system அமைந்திருக்கு! விடாமல், இது போன்ற நல்ல படங்களை மட்டும் தாங்க, bro!! 


துருவங்கள் 16- கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.