Dec 8, 2010

மச்சி, இதுக்கு பெயர் என்ன?-1

காலை மணி 9.

"another boring day. the same office. the same old-looking fellows. I'm bored!" அலுத்து கொண்டாள் சந்தியா.

"same here..." பெருமூச்சுடன் ரம்யா, தனது ஆபிஸ் கேபினில் உள்ள கணினியில் இமெயில் பார்த்தபடியே சந்தியாவுடன் கூறினாள்.

சந்தியா ரம்யாவிடம், " ஏய் where's anjali?"

***
அன்று காலை மணி 5. அஞ்சலி எழுந்தாள். அனைவரும் எழுவதற்கு முன் எழுவது அவள் பழக்கம். அவள் எழுந்துவுடன் செய்யும் முதல் வேலை முருகன் பக்தி பாடல்களை போடுவது. பாடல்களை கேட்டு கொண்டே வீட்டு வேலைகளை செய்து முடித்தாள். வீட்டில் உள்ளவர்களுக்கு காலை உணவு சமைத்து மேசையில் வைத்தாள். தங்கையின் கைசெலவுக்காக சிறிது தொகையை அவளது கை பையில் திணித்துவிட்டு தங்கையை எழுப்பினாள்.

அஞ்சலிக்கு சேலை அணிய தான் பிடிக்கும். பிங் நிற சேலையை அணிந்து கொண்டு ஹாலுக்கு வருகையில் அப்பா எழுந்து வந்தார்.

அப்பா, "என்னமா கிளம்பிட்டீயா?"

அஞ்சலி, " ஆமா பா.... ஏன் பா இவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சுட்டீங்க..? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே பா?"

அப்பா சிரித்துகொண்டே, "இருக்கட்டும் மா..." என்றவர் செய்தித்தாளை எடுத்தார்.

"நீ சாப்ட்டீயா?" கேட்டார் அப்பா அஞ்சலியிடம்.

பூஜை அறையிலிருந்து அஞ்சலி, "பூஜைய முடிச்சுட்டு வந்திடுறேன் பா!"

அஞ்சலி காலையில் 20 நிமிடங்களாவது பூஜை செய்வாள். சிறு வயதிலிருந்தே அவள் அம்மா கற்றுகொடுத்த பாடம் இது. அஞ்சலியின் அம்மா சமையலறையிலிருந்து சூடான இட்லியை எடுத்து வந்து மேசையில் வைத்தார்.

பூஜை முடித்த அஞ்சலி, " ஏன் மா... நான் எடுத்துட்டு வருவேன்ல...நீங்க ஏன் கஷ்டபடுறீங்க?"

அம்மா புன்னகையித்தபடி, " சரி நீ முதல சாப்பிடு!" என்று அஞ்சலியிடம் கூற, அதற்கு அஞ்சலி,

"இல்ல மா...போன வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போய் இருந்தப்ப அய்யர் சொன்னார்...அடுத்த 9 வாரத்துக்கு வெள்ளிக்கிழம வெள்ளிக்கிழம விரதம் இருந்தா நல்லதுனு.... நான் ராத்திரி வந்து சாப்பிட்டுக்கிறேன்...நீங்க சாப்பிடுங்க?" என்றபடி லெப்டாப்பை எடுத்து கொண்டு ஆபிஸுக்கு செல்லும்போது மணி 8.

அஞ்சலி வீட்டிலிருந்து ஆபிஸுக்கு போக அரை மணி நேரமாகும். 8.30 மணிக்கே ஆபிஸில் இருந்திருக்க வேண்டும். 11 மணி ஆகியும் அஞ்சலி அங்கு இல்லை.

என்ன நடந்திருக்கும்?
பஸ் விபத்தா?
சாலை மறியலா?
அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லையா? (காலையிலிருந்து ஒன்னும் சாப்பிடவில்லையே, அஞ்சலி!)

ஏன் அஞ்சலி ஆபிஸில் இல்லை?

ஏன்னா நம்ம அஞ்சலி இப்படிப்பட்ட அஞ்சலியே இல்லை!! இந்த மாதிரி பொண்ணுங்கள venusலயும் marsலயும் பார்க்கலாம் தவிர earthல பாக்க முடியாதே!

உங்களது கடந்த இரண்டு நிமிடங்களை கொஞ்சம் rewind பண்ணுங்க....
***
சந்தியா ரம்யாவிடம், " ஏய் where's anjali?"

அன்று காலை மணி 8 ஆகியும் அஞ்சலி இன்னும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. நேற்று தோழியின் 'break up' partyக்கு சென்றுவிட்டு இரவு....அதாவது விடியற்காலை 3 மணிக்கு தான் வீட்டிற்கே வந்து சேர்ந்தாள்.

அஞ்சலியின் அப்பா, " அஞ்சலி....ப்ளீஸ் எழுந்திரி. ஆபிஸுக்கு நேரமாச்சு உனக்கு. தினமும் காலையில உன்னைய எழுப்புறதே என் வேலையா போச்சு!! உங்க அம்மா... நீ இன்னும் எழுந்திரிக்கலையான்னு சத்தம் போட்டுகிட்டு இருக்கா...."

போர்வையை விலக்கியபடி சோம்பல் முறித்த அஞ்சலி, "good morning dad!" அப்பாவை கட்டிபிடித்தாள்.

"சரி சரி... சீக்கிரம் போய் கிளம்பு. உங்க அம்மா அங்க கத்திகிட்டு இருக்கா..." அப்பா அஞ்சலியை அறையை விட்டு அனுப்பினார்.

செய்தித்தாளை புரட்டினார் அப்பா. அவரை பார்த்து சிரித்து கொண்டே அஞ்சலி, "dad, உங்க வயசு பசங்க எல்லாம் இந்த டைம் பீச்ல walking போறாங்க. நீங்க ஏன் சும்மா வீட்டுல இருக்கீங்க?" என்றாள் 'பசங்க' என்ற வார்த்தையை கிண்டலாய் சொல்லிகொண்டே.

சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்மா, "shut up anjali. is this how you talk to your dad?"

அஞ்சலி, "அப்பாகிட்ட தான் மா இப்படிலாம் பேச முடியும். பக்கத்துவீட்டுக்காரனோட இப்படி பேசுனா.... அவர் பொண்டாட்டி சந்தேகப்பட மாட்டாங்களா?" என்று நக்கல் அடித்தபடி குளிக்க சென்றாள்.

அஞ்சலிக்கு ஜீன்ஸ் ப்ளாக் ஷ்ர்ட்டுதான் பிடிக்கும். அதை அணிந்துவந்தாள். மேசையில் இருந்த bread toastயை ஒரு கடி கடித்தாள்.

அம்மா, "anjali, இன்னிக்கு வெள்ளிக்கிழம. why can't you wear something traditional. punjabi suit or that pink saree that i bought last week?"

அஞ்சலியிடம் யாரோ அவளின் கிட்னியை தானமாக கேட்டதுபோல் அப்படி ஒரு ஷாக் முகத்தில்.

"எப்படி மா...உங்களால இப்படி சொல்ல முடியது? அதுக்கு நீங்க என்னைய நாலு கெட்ட வார்த்தையால திட்டி இருக்கலாம். me, wearing a saree?? no way, mom! என் கல்யாணத்துக்கே நான் ஜீன்ஸ்ல தான் இருப்பேன்!" அஞ்சலி இன்னொரு கடி கடித்தாள் bread toastஐ.

ஷு மாட்டிக்கொண்டிருந்த அஞ்சலியின் தங்கை, " ஓ உனக்கு கல்யாண ஆசை வேற இருக்கா? அம்மா... எப்படியாச்சு இவள எங்கயாவது தள்ளிவிட்டுடுங்க!"

தங்கையின் கைசெலவுக்காக மேசையில் வைத்திருந்த பணத்தை எடுத்தாள் அஞ்சலி.

தங்கை, "அம்மா, இங்க பாருங்கம்மா...இவள...."

அஞ்சலி, "அம்மா பாருங்க என்னைய....ரொம்ப அழகா இருக்கேன்ல!"

தங்கை, "oh shut up anjali! that was soooooooo lame!"

அஞ்சலி, "you loser!!"

அஞ்சலி லெப்டாப்பை எடுக்க அறைக்கு சென்றாள். லெப்டாப்பை எடுத்தபடி, "bye sweethearrrrrrrrrt!" என்று சுவரில் ஒட்டப்பட்ட john abraham படத்திற்கு முத்தம் கொடுத்தாள்.

மணி 10.15. ஆபிஸில் 9 மணிக்கு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட 'உழைப்பாளிகள்' இருந்தால் நாடு கண்டிப்பா முன்னேறும்.....reverseல!

அஞ்சலி பஸில் ஏறியதும் ஒன்றை கண்டாள்....ஒருவனை கண்டாள்....எட்டாவது அதிசயம் பஸ்ல இருக்கு, மச்சி!

அஞ்சலியின் மனம், "oh my god! he's dammmmmmmn cute!"

பாகம் 2

Dec 1, 2010

எவன் டி உன்ன பெத்தான், கையில் கிடச்சா செத்தான்!

தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்காரர், நாம் தேடினாலும் கிடைக்காத ஒரு முத்து, உலக எழுதி வாங்க முடியாத சொத்து, சிவப்பு வைரமுத்து, தாடி வைக்காத வாலி, இலக்கணம் பிடிக்காத பா.விஜய், இலக்கியம் அறியாத நா.முத்துக்குமார் (உஷ்ஷ்ஷ்....இதுக்கு மேல என்னால முடியல...)

தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்கார் உங்கள் சிம்பு! அவர் நடித்து (அப்படின்னு நினைக்குறேன்...) வெளிவரும் படம் 'வானம்'. அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் உள்ள வரிதான் இது 'எவன் டி உன்ன பெத்தான், பெத்தான், பெத்தான், கையில கிடச்சா செத்தான் செத்தான் செத்தான்!'

பாடலை கேட்டவுடன், எனக்கு 'குபீர்'னு சிரிப்பு வந்துவிட்டது. பேஸ்புக்கில் இந்த பாடலின் யூடியுப் லிங்கை போட்டேன், அதற்கு நண்பர்கள் கொடுத்த கருத்துகள் அதைவிட காமெடி. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிட்டு.

சிம்பு கதைக்கு வருவோம்.....ஏன் பா ராசா, உன்னையெல்லாம் இப்படி எழுத சொல்லி யாரு கத்துகொடுக்கறது?? அப்பாவா?

என்னமோ போ...சிரிப்பு போலீஸ் மாதிரி...சிரிப்பு கவிஞர் மாதிரி தான் நீ எனக்கு தெரியுற! என்ன இருந்தாலும், பாடலின் வெற்றி உறுதி! நானே 100 முறை கேட்டுவிட்டேன்! (சிரிச்சு ரொம்ப நாளாச்சு பா!!!)


Nov 22, 2010

GUZAARISH- எல்லாருக்கும் பிடிக்காது

சஞ்சய் படம் என்றாலே கொஞ்சம் சர்ச்சை இருக்கும். நிறைய தில் வேணும் சில காட்சிகளை எடுக்க. சென்சார் போர்ட் ஆட்களை சமாளிக்க வேணும். ஏன் நான் அப்படி சொல்றேனா.... இந்த படத்தில் அப்படி ரெண்டு மூனு காட்சி வருது. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்க.

கதை- euthanasia பற்றி. வாழ்க்கையை தானே முடித்துகொள்வது என்று அர்த்தம். தற்கொலை என்று அதை என்னொரு விதமாகவும் சொல்லலாம். ஆனால், இது சட்டரீதியாக அனுபதி கேட்பது. நிறைய 'நச்' வசனங்கள் இப்படத்தில்.

மொத்த படத்திற்கு பலம் ஹ்ர்த்திக் ரோஷனின் நடிப்பு- யோவ், இத்தன நாளா எங்கய்யா ஒலிச்சு வச்சு இருந்த இந்த மாதிரி நடிப்ப???

பிரமாதம்!!!! பல இடங்களில் என்னை அறியாமலேயே சத்தமாக கைதட்டினேன்.
கண்டிப்பா அடுத்த வருஷம், விருது உண்டு உமக்கு!

படம்- எல்லாருக்கும் பிடிக்காது! கொஞ்சம் art film மாதிரி இருக்கும். இரண்டாம் பாதி முதல் பாதியைவிட மெதுவாய் செல்கிறது.

இருப்பினும், நல்ல நடிப்பிற்கும் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்திற்கும் இப்படத்தை பார்க்கலாம். நிச்சயமாக பார்க்கலாம்:)

Nov 9, 2010

I don't care. நான் இன்னிக்கு எழுதியே தீருவேன்!

ஒவ்வொரு நாளும் ஏதாச்சு பத்தி எழுதனும்னு தான் ஆசை. ஆனா வீட்டுக்கு வந்துட்டா.... படுக்கையில் படுத்து தூங்குவதை தவிர வேறும் எதுவும் உருபடியா செய்றதுல்ல. காலேஜ் நாட்களில் நிறைய நேரம் கிடைக்கும். தினமும் எழுத முடிந்தது. ஆனா... எழுத ஆசை இருந்தாலும் மூட் இல்ல.

நிறைய விஷயங்கள் ஒரே சமயத்தில் நடக்குது வாழ்க்கையில். வேலை!- எவண்டா இத கண்டுபிடிச்சது???

adults world is dangerous. வேலை இடத்தில் கற்று கொண்ட பாடம். எல்லார்கிட்டயும் நல்ல பெயர் வாங்க முடியாது. கொஞ்சம் வெற்றி ஏணியில் ஏற வேண்டும் என்றால் ஒரு சிலரை கீழே தள்ளி தான் ஆக வேண்டும். புதுசா வேலைக்கு வந்தவர்களை வாட்டி எடுக்கும் விதம்- உஷ்ஷ்ஷ்ஷ்....ஒரு சின்ன குழந்தைய போய் (அட அது நான் தாங்க......) இப்படி இந்த மாதிரி 'உலகத்தில்' தள்ளி வீட்டீங்களே?? இந்த பாவம் சும்மா விடுமா?

காலேஜ் நாட்களில் புலம்பவது கூட ஜாலியா இருக்கும். (ப்ளாக்கில் நிறைய எழுதியுள்ளேன்) ஆனால், இப்போது புலம்பவதற்கு கூட நேரம் இல்லை!!

ஒவ்வொரு மனிதனுக்கும் சில கோட்பாடுகள் இருக்கும். அதன் படி நடக்கு முற்படுவான்! ஆனால் அதற்கு முரணாக செயல்பட வேண்டும், குறிப்பா வேலை இடத்தில் பிடிக்காத பலவற்றை செய்ய வேண்டும் என்றால்....எரிச்சலை தவிர வேறு என்ன வரும்??

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!! சரி அத விடுங்க!

எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். வா, குவாட்டர் கட்டிங்- படம் பார்க்கலாமா? (யாருச்சும் சொல்லங்களேன்?)

Oct 9, 2010

நல்ல வேள நான் மனுஷனா பிறக்கல!

பிறந்த குழந்தை கையில தூங்கினா மாதிரி ஒரு ஃபீலிங்- இரண்டு மணி நேரம் காத்திருந்த எந்திரன் டிக்கெட் கையில் கிடைத்தபோது!!! சந்தோஷம் தாங்கமுடியல. எத்தன நாளா/வருஷமா காத்திருந்தோம். வந்தது. சரவெடி தான் போங்க.

பலபேர் அலசி ஆராய்ந்து இருப்பாங்க இப்படத்தை பத்தி. சுருக்கமா சொல்லிடுறேன் - படம் படு சூப்பர்!!! திருப்பி இன்னொரு முறை பாக்க போறேன் அடுத்த வாரம்.

ரஜினி ரொம்ப காலத்துக்கு பிறகு கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார்! கலாநிதி மாறன் வீட்டு தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் வருதா இல்ல காசு வருதான்னு தெரியல. ஒவ்வொரு frameமிலும் காசை அள்ளி தெளித்த இருக்கிறார். வசனங்கள் நச்!

"நல்ல வேளை நான் மனுஷனா பிறக்கல" என்று கடைசியில் ரோபோ சொல்லும்போது எழுந்து நின்று கை தட்டினேன்!!!

ரகுமான் பாடல்கள் கேட்டவுடனே பிடிக்காது. கேட்க கேட்க தான் பிடிக்கும்! ஐஸ்வர்யாவின் நடிப்பு பரவாயில்ல. ஆனால் முகத்தில் வயதான தோற்றம் கொஞ்சம் தெரிந்தது.

படத்தின் இன்னொரு ஹீரோ- graphics!!!!!!!!!!!! படத்தின் கடைசி 20 நிமிடங்கள் வாவ்! (இருந்தாலும் கொஞ்சம் இன்னும் எடிட் செய்து இருக்கலாம்)

மொத்தத்தில் படம் அருமையிலும் அருமை! தமிழில் ஒரு sci-fic படம், பார்க்கமா இருக்காதீங்க!

(கொசுறு: எனக்கு ஒரு மிகப் பெரிய கேள்வி இருக்கு? படத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியை எத்தன தடவ கிஸ் பண்ணுனாங்க!!??! அவ்வ்வ்வ்வ்வ்வ்... சும்மா சும்மா! ஹிஹிஹிஹி....)

Sep 15, 2010

ஜஸ்ட் சும்மா (16/9/10)

பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்த்தேன். ஹாஹாஹா... அந்த படம் தலைப்ப சொன்னாலே எனக்கு சிரிப்பு வருது! கதை....அப்படின்னு ஒன்னுமில்ல! ஆனா...காமெடி.....அது தாங்க படத்த தூக்கி நிக்க வைக்குது! முக்கியமா சொல்ல போனா படத்தின் வசனங்கள்!

இப்போ அடிக்கடி நான் சொல்லுறது 'நண்பேன்ன்ன்ன் டா' என்று தான். இந்த படத்துல இத அடிக்கடி சொல்லுவாங்க!!

சந்தானம்+ ஆர்யா= சூப்பர்!!!!!!!
------------------------------------------------------------------------------------------

எந்திரன் படம் இந்த மாசம் 30ஆம் தேதி வர போகுது ஒரு பேச்சு! உண்மையா இருந்தா ரொம்ப சந்தோஷம்!!!! எப்படா வரும்னு இருக்கு இந்த படம்!!!

-----------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாள், முதலீடு பத்தி (investment) பத்தி ஒரு யோசனை. இதை பத்தி தெரிந்தவர்கள் இருந்தா சொல்லுங்க! எந்த மாதிரி முதலீடு, நல்லது? சிலர் stocks, commodities நல்லதுனு சொல்றாங்க. சிலர் bank investment ஓகேனு சொல்றாங்க. சிலர் real estate தான் பேஸ்ட்னு சொல்றாங்க.
---------------------------------------------------------------------------------------

சமூக சேவையில் கொஞ்ச நாளா ஈடுபடும் வாய்ப்பு கிடைச்சது. இந்தியாவில் இருக்கும் halimayar villageக்கு வர வாய்ப்பு கிடைச்சு இருக்கு. ஊட்டியிலிருந்து 5 மணி நேரம் பயணம் என்று கேள்விபட்டேன். அங்கு இருக்கும் கிராம பள்ளியில் வசதிகளை செஞ்சு கொடுக்க இந்த குழு போகும். அதில் நானும் இருப்பேன்!!! :))
--------------------------------------------------------------------------------------

Sep 1, 2010

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-13

அப்பாவும் மகனும் இப்படி ஒரே மாதிரியா இருக்காங்க. சொல்ல போனால் அப்பா மகனைவிட இன்னும் இளமையா தெரிகிறார். அட நம்ம முரளியையும், ஆதர்வாவையும் பத்தி தான் பேசுறேன். இந்த வயசுலையும் முரளி ரொம்ப இளமையா இருக்காரு.

ஆனா, சைட் அடித்தது அவர் மகனை தான். அட கண்கள் இரண்டும் ஆயிரம் பேசுதுங்க..... சூப்பர்!!!! குரலில் அப்படி ஒரு கம்பீரம் (காபி வித் அனு பார்த்தேன்)

மயக்க வைக்கும் சிரிப்பு!!

அடுத்தது, சைட் அடித்தது நம்ம இந்தியன் ஐடல் 5ல் வென்ற ஸ்ரீராமனை தான். என்ன ஒரு குரல். என்ன ஒரு தன்னடக்கம்! ராம்...ம்ம்ம்ம்.... கலக்குங்க!


Aug 3, 2010

காதல் அணுக்கள்

ஜன்னல் வழியே மழை சாரல் சஞ்ஜனாவின் முகத்தில் பட்டது. சோம்பல் முறித்த சஞ்ஜனா படுக்கையில் படுத்தவாறே ஜன்னல்களை மூடினாள். பக்கத்தில் இருந்த அஜிஷின் கைகடிக்காரத்தை பார்த்தாள்.

காலை மணி 10.30. வெளியே பெய்து கொண்டிருந்த மழையை ரசித்தாள். வானம் தியெட்டர் இருளில் இருந்தது. ஞாயிற்றுகிழமைக்கு ஏற்ற ஒரு சூழல்! போர்வையை இழுத்து போத்தியவாறு அஜிஷ் அவள் கழுத்தில் இதழ் பதித்தான்.

அவன் பக்கம் திரும்பி புன்னகையித்தபடி சஞ்ஜனா, "எந்திரிச்சுட்டீயா?"

"weather is awesome, சஞ்ஜு!"

"yes, just like what you did last night" குறும்பு பார்வையுடன் கண் சிமிட்டினாள்.

சிரித்தவாறு, "மேடம், இன்னும் romantic மூட்ல தான் இருக்காங்க போல இருக்கு."

"romantic mood, angry mood....எதுவா இருந்தாலும் இந்த ஒரு நாள் தான் உன்னைய பாக்க முடியுது." சஞ்ஜனா செல்ல கோபத்துடன்.

"சாரி சஞ்ஜு...... ஓவர் டைம் பாக்காம இருக்க முடியாது. சனிக்கிழமையும் வேலை பாத்தே ஆகனும். ஆசைப்பட்டு வாங்குன வீடு, கார்....இதுக்கெல்லாம் லோன் திருப்பி கட்டனுமே........"

"நானும் வேலைக்கு போனா, உனக்கு அவ்வளவு கஷ்டம் இருக்காதுல...." சஞ்ஜனாவின் கைவிரல்கள் அவன் கன்னங்களை தடவின.

"போக கூடாதுன்னு இல்லமா.... உனக்கு ஏன் வீணா stress, office pressure? அதுக்கு தான்... but உனக்கு இஷ்டம்னா போ...but if you feel stressed about work, please do tell me... எந்த காரணத்துக்கும் நீ கஷ்டப்பட கூடாது. உங்க அப்பாகிட்ட நான் promise பண்ணியிருக்கேனே." புன்னகையித்தான் அஜிஷ்.

"thank you, அஜிஷ்!! you're extremely sweeeeeeeet!" அவன் உதடுகளில் 'இச்' வைத்தாள் சஞ்ஜனா.

"என் ஆபிஸ்ல வேணும்னா வேலை கேட்டு பாக்கவா?"

"இல்லடா. நம்ம வித்யா ஆபிஸ்ல ஒரு போஸ்ட் இருக்குனு சொல்லியிருக்கா, அங்க try பண்ணி பாக்குறேன்."

"ஓ that's nice.... சரி மா எனக்கு ரொம்ப பசிக்குது. என்ன breakfast இன்னிக்கு?" அஜிஷ் தனது துணிகளை எடுக்கு முற்பட்டபோது சஞ்ஜனா அவற்றை தூக்கி தூரம் எறிந்தாள்.

"சஞ்ஜு!!!!! stop playing. எனக்கு வேலை இருக்குடா. ரிப்போர்ட் அனுப்பனும்."

"hello mr ajeesh, இப்ப தானே சொன்னேன். i don't care. you're only mine today!" சஞ்ஜனா அவனை அணைத்து கொண்டாள்.

"இல்ல சஞ்ஜு... just ஒரு 30 minutes." அவன் கெஞ்சினான் அவளது தாடையை பிடித்து.

"no!"

"ஒரு 20 minutes..."

"no!"

"ஒரு 10 minutes"

சஞ்ஜனா, "இன்னிக்கு என்ன day?"

அஜிஷ், "sunday!"

சஞ்ஜனா, "sunday means family day. so you should spend every second of the day with me."

அஜிஷ், "சரி மா, atleast breakfast சாப்பிடுவோம்."

"உனக்கு இது போதும்." என்று சஞ்ஜனா அவனது விரல்களை அவளது உதடுகள் மீது வைத்தாள்.

சிரித்தான் அஜிஷ்.

"அப்பரம் உனக்கு பசிக்கலையா?" அஜிஷ் கேட்டான்.

"எனக்கு இந்த kitkat chocolate போதும்." என்று சஞ்ஜனா அவனது 6-pack வயிற்றில் கைவைத்தாள்.

இருவரும் சிரித்தனர்.

*******

மணி 12 ஆனது.

அஜிஷ் கோழி துண்டுகளை கழுவி கொண்டிருந்தான். சஞ்ஜனா தக்காளியை நறுக்கி கொண்டிருந்தாள். வானொலியில் எந்திரன் பாடல் ஒலித்து கொண்டிருந்தது.

"காதல் அணுக்கள்...."

"பாட்டு... செம்ம பாட்டுல. AR rahman is simply superb man." என்று தக்காளியை நறுக்கி கொண்டிருப்பதை தொடர்ந்தாள். அஜிஷ் எந்த பதிலும் சொல்லவில்லை.

"என்ன அஜிஷ்..........." என்று திரும்பி பார்த்தாள். அவன் அவளையே கவனித்து கொண்டிருந்தான்.

"what?" என்று கண்களாலே கேட்டாள் சஞ்ஜனா.

"ரொம்ப அழகா இருக்கே!" அவன் கூறினான்.

புன்னகையித்தபடி அவள், "you're crazy.... quick. get the chicken pieces here quick."

அஜிஷ் அவளை சுவர் ஓரமாய் இழுத்தான்.

"ஹேய் அஜிஷ்....என்ன பண்ணுற? look, don't play.... டைம் ஆச்சு டா!"

"இன்னிக்கு என்ன day?" அவன் கேட்டான்.

"எனக்கே வா?" என்பதுபோல் உதடுகளை சுழித்தாள்.

"சொல்லு" விடவில்லை அஜிஷ்.

"sunday" என்றவள் அவன் பிடியிலிருந்து விலக முற்பட்டாள்.

"sunday means....?" என்று வினாவினான் அஜிஷ்.

"family day." என்று முடித்தாள் சஞ்ஜனா.

"no. familyய உருவாக்குற day!" என்றபடி அவளை தூக்கினாள் சோபாவிற்கு.

Jul 27, 2010

ஆர்யாவும் நந்தாவும்

ஆர்யா நடித்த மதாராஸபட்டினம் படத்தையும் நந்தா நடித்த அனந்தபுரத்துவீடு படத்தையும் பார்த்தேன்.

இரண்டும் வித்தியாசம். ஆர்யா....ம்ம்ம்ம்........ அவருக்காகவே படத்தை இன்னொரு தடவ பார்க்கலாம். படம்- நம்ம ஊரு டைட்டானிக் போல இருந்தாலும் பார்க்க சுவாரஸ்சியமாக இருந்துச்சு. அப்பரம் அந்த புள்ள- ஏமி ஜெக்சன், என்ன ஒரு நடிப்பு! பின்னிட்டாங்க போங்க.

நந்தா நடித்த அனந்தபுரத்துவீடும் நல்லா இருந்துச்சு! நந்தா- செம்ம அழகுங்க!!

(இயக்குனர் சங்கர் அடுத்து 3 இடியஸ்ட்ஸ் படத்தை தமிழில் எடுக்க போகிறார். அதுல விஜயும் சிம்புவும் நடிக்க போவதாக செய்தி!! எனக்கு லேசா இதயம் வெடித்தது)

Jul 11, 2010

மனநிறைவு

எனக்கு மனநிறைவு கொடுக்குற விஷயங்கள் ரொம்ப குறைவு (சிக்கன் பிரியாணி, கரண் ஜோகர் படங்களை தவிர்த்து). எனக்கு இந்த தொண்டூழியம் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. நிறைய மக்களை சந்திக்க நல்ல வாய்ப்பு. அப்படி ஒரு மனநிறைவு நாளாக அமைந்தது சனிக்கிழமை.

காப்பக விடுதியில் 20 பசங்க இருக்காங்க. 7 வயது முதல் 18 வயது உடையவர்கள். இந்த விடுதி இவர்களின் அனைத்து தேவைகளையும் பார்த்து கொள்கிறது. சிலர் குடும்ப பிரச்சனை காரணமாக விடுதியில் இருக்கிறார்கள். சிலருக்கு பெற்றோர்கள் இல்லை. இப்படி ஒவ்வொரு பசங்களுக்கும் ஒரு பிரச்சனை. ஆனால் இந்த 20 பசங்க வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து இருந்தாலும், விடுதியில் அவர்கள் ஒரு குடும்பம் போல் இருப்பதை கண்டு வியந்தேன்.

அதில் ஒரு சின்ன பையன் இருக்கான். 7 வயது தான். பயங்கர சுட்டி! அவனுடைய சொந்த அண்ணன்களும் இந்த விடுதியில் தான் இருக்கிறார்கள். அந்த 7 வயது சுட்டி எப்போதுமே இன்னொரு பையன்கூட தான் இருப்பான். நான் நினைத்தேன் அவன் தான் அவனுடைய அண்ணன் என்று.

அவர்களிடம் பேசி பார்த்தபோது தான் தெரிந்தது, அவன் சொந்த அண்ணன் இல்லை என்று. 7 வயது சுட்டி தான் அங்க ரொம்ப சின்ன வயது பையன். ஆதலால் தன் சொந்த தம்பி போல் பார்த்து கொள்வதாக என்னிடம் சொன்னான். எனக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசம் காட்ட ஒரு மனசு வேணும். அந்த மனசு அவன்கிட்ட இருந்தது.

அவனிடம் தொடர்ந்து பேசினேன். அவனுக்கு வயது 14 தான். ஆனால் அவன் சுட்டியை பார்த்து கொண்ட விதம்..... சொல்ல வார்த்தை இல்லை! இவனுக்கு காற்பந்தாட்ட வீராக வர ஆசை. தேசிய அளவிலான குழுவில் சேர வாய்ப்பு கிடைத்தும் போக முடியவில்லை. காரணம்- படிப்பில் அவ்வளவு சிறப்பாக செய்யாததால்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை! ஒரு நல்ல திறமையான விளையாட்டாளரை இந்த நாடு இழந்துவிட்டது.

அவர்களிடம் பல நடவடிக்கைகளை நடத்தினோம். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது.....

Jun 22, 2010

உலக கிண்ணமும் ராவணனும்

உலக கிண்ண காற்பந்து போட்டி ஆரம்பிச்சு திருவிழா மாதிரி போய்கிட்டு இருக்கு. இங்கு சிங்கையில் இதற்காகவே நிறைய பேர் ஒரு மாதம் லீவு போட்டு இருப்பதாக செய்தி வந்துச்சு. சிங்கையில் காற்பந்து பிரியர்கள் ஏராளம். நான் நேத்து portugal vs north korea போட்டியை பார்க்க சென்றேன் வீட்டு பக்கத்தில் இருக்கும் சமூக நிலையத்தில்.

செம்ம கூட்டம். கிட்டதட்ட 400 பேர் வந்து இருப்பாங்க. portugal ஆட்டம் அபாரம்! எதிர் அணியை வீழ்த்தி தள்ளியது. ஒவ்வொரு முறையும் கோல் போடும்போது கூட்டமே அலறியது!! நான் வடகொரியாவை தான் ஆதரித்தேன். ஏன் என்றால் முன்பு நடந்த போட்டியில், வடகொரியா உலகத்தில் முதல் நிலையில் இருக்கும் பெரிசிலை ஒரு கை பார்த்தது.

ஆனால் நேற்று போட்டியில், ரொம்ப சுமாராக விளையாடி தோல்வியை சந்தித்து!:(( portugal 7 கோல்கள் போட்டது. இதுவரை நடந்த போட்டியில் இது தான் ஆக அதிகமான கோல் எண்ணிக்கை.

உலகமே இப்படி விழாக்கோலமாக இருக்க, நம்ம சும்மா இருப்போமா? நானும் களத்தில் இறங்கிவிட்டேன். நாளை நண்பர்களுடன் காற்பந்து விளையாட போகிறேன். :)))
--------------------------------------------------------------------------------------

ராவன்/ ராவணன்- தமிழ் இந்தி ஆகிய இரண்டிலும் பார்த்துவிட்டேன். என் விமர்சனம்- மணி சார், என்னைய இப்படி ஏமாத்திவிட்டீங்களே!!!

படம் ஒன்னும் புரியலை. ராமாயணம் கதை மாதிரி இருக்கு. அது புரியது. அதை இந்த காலத்திற்கு ஏற்ப எடுத்து இருக்கலாம். காடு, காட்டுமிரண்டித்தனமான நடிப்பு, அழுத்தமில்லாத காதல்- இப்படி அனைத்தையும் தவிர்த்து இருக்கலாம். அட போங்க சார்....உங்க மேல ரொம்ப கோபம்!!

ஆவூன்னா, இதிகாசங்களை வச்சு படம் பண்றீங்க! நானும் பண்றேன் -remake of பாட்டி வடை சுட்ட கதை (ஓ...இது இதிகாசம் இல்லையா?)

May 28, 2010

என்ன மாமா சௌக்கியமா?

(பருத்திவீரன் கார்த்தி போல் சொல்லவும்)- என்ன மாமா சௌக்கியமா??

நான் - என்ன ப்ளாக், சௌக்கியமா?

அம்புட்டு நாளா ஆச்சு இந்த ப்ளாக் பக்கம் வந்து, மற்ற ப்ளாக்குகளை படிக்கவும் நேரமில்லை. வெற்றிகரமா வேலைக்கு சேர்ந்து முதல் வாரத்தை ஓட்டிவிட்டேன். போஸ்ட்டர் அடிச்சு ஒட்டாத குறை. மற்றபடி டிரீட் வச்சு கொண்டாடியாச்சு.

ப்ளாக் உலகில் என்ன புதுசா நடக்குது?

எனக்கு தெரிந்த சில ப்ளாக்கர்களும் அவர்களது ப்ளாக்கில் எந்த புது போஸ்ட்களை போடவில்லை போலும். ம்ம்ம்...எல்லாரும் பிஸினு நினைக்குறேன்.

வேலைக்கு சேர்ந்த முதல் வாரத்திலேயே கற்று கொண்ட முதல் பாடம் - உலகம் நம்ம நினைக்குற மாதிரி இல்ல பா! ரொம்ப கஷ்டமான மோசமான உலகம். நம்ம ஏதோ சின்ன குழந்தை மாதிரி, வெளுத்தது எல்லாம் பால்னு நினைச்சுகிட்டு இருந்துவிட்டோம்.

இப்ப நம்மள கடல புடிச்சு தள்ளிவிட்டாங்க. நீந்தி கரை சேர ரொம்ம்ம்ம்ப கஷ்டமா இருக்கபோகுது... பார்ப்போம்!:)

May 13, 2010

ஜஸ்ட் சும்மா(13/5/10)

10 வாரம் வேலை பயிற்சி முடிஞ்சாச்சு! அது முடிஞ்சு பெரிய பார்ட்டியே வச்சு செம்ம கொண்டாட்டம். இன்னும் கொஞ்ச நாள்ல , graduate ஆயிடுவேன். மே 24ஆம் முதல் வேலை ஆரம்பம். 4 வருஷம் படிப்பு எப்படி ஓடி போனுச்சுனு தெரியல. காலேஜ்ல என்ன தான் வேலை பளு அதிகம் இருந்தாலும், காலேஜ் போல வருமா?



இந்த ஆபிஸ், வேலை, காலையில சீக்கிரமா எழுந்திருப்பது, ஆபிஸ் பாலிட்டிக்ஸ், உயர் அதிகாரியை சமாளிப்பது... எப்படி ஏகப்பட்ட விஷயங்களை சமாளிக்கனுமே! நினைத்தாலே வயிறு கலங்குது. நான் இன்னும் ஒரு சின்ன குழந்தை போல தான் என்னையே நான் நினைச்சுகிறேன். i am not ready for this big stuff yet!! :(((



********************************************************************



இந்த வாரம் ஒரு வாரம் லீவு. பல ப்ளான்ஸ் போட்டாச்சு! வேலை ஆரம்பித்தால், பலவற்றை செய்ய நேரம் கிடைக்குமானு தெரியல. முக்கியமா, இந்த ப்ளாக் பக்கம் வரமுடியுமானு தெரியல. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மிஸ் பண்ண போறேன் இந்த ப்ளாக்கை.

********************************************************************

இந்த வருஷம் முழுக்க, ஏகப்பட்ட கல்யாண விருந்து, reception, engagement ceremony இருக்கு. ஐயோ ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் புது துணி வாங்கியே செலவு எக்கசக்கமா போகுது! உஷ்ஷ்ஷ்ஷ்....யப்பா முடியல! தோழி (வட நாட்டு பொண்ணு) அண்ணன் கல்யாணம் அடுத்த மாசம். அதுக்கு அவங்க அம்மா 150 பெட்டிகள் நிரம்பிய சேலைதுணிமணிகளை வாங்கி வந்துள்ளார். அதை அழகாய் pack பண்ண வேண்டும் என அவங்க வீட்டுக்கு போய் இருந்தேன் நேற்று (வீடுன்னு அது தான் வீடு....அவ்வளவு அழகா இருந்துச்சு)

வடநாட்டு கலாச்சாரமே வேறு என்பது நன்கு புரிந்தது நேற்று. :))) எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தது. இந்த மாதிரி வெவ்வேறு கலாச்சாரம்/பண்பாடுகளை பற்றி கவனிப்பதே ஒரு சுகம்!

*****************************************************************************

திவ்யாபிரியா அக்காவுக்கு கல்யாணமாம். congrats akka! all the best:))

May 3, 2010

விண்ணை தாண்டி வந்தாளே-5

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

ice-3 cafe க்குள் நுழைந்தோம். அஞ்சலி banana split icecream float ஆர்டர் செய்தாள். நான் ஒரு வெண்ணிலா+ சாக்லெட் ஐஸ்கீரிம் ஆர்டர் செய்தாள்.

"அடிக்கடி இங்க வருவீயா, அஞ்சலி? மெனு கார்ட் பார்க்கம ஆர்டர் செஞ்சுட்டே?"

"ம்ம்.. இந்த கடையோட branch நிறைய இடத்துல இருக்கு. நிறைய தடவ போய் இருக்கேன். you should try the fruity fiesta. awesome, you know?"

நான் சிரித்தபடி, "ஒரு மாசத்துக்கு உன் சாப்பாட்டு செலவே ரொம்ம்ம்ம்ப ஆகும்னு நினைக்குறேன்."

"ஏய், வளர குழந்தை மேல கண்ணு வைக்காதே. இந்த மாதிரி restaurants, treat எல்லாம் சொந்த செலவுல போறது கிடையாது. friends' birthday party, அப்பரம் ஃபிரண்டுக்கு புதுசா boyfriend கிடைச்சா அதுக்கு ஒரு ட்ரீட். break-up ஆனா கூட ட்ரீட் கேட்டு இப்படி ஒவ்வொரு cafe, restaurantக்கு போய் சாப்பிட வேண்டியது தான்!" ஐஸ்கீரிம் அவள் உதட்டோரம் லேசாக சிந்த அதை tissue paperல் துடைத்தாள்.

அவள் ஐஸ்கீரிம் கிண்ணத்தை என்னிடம் நீட்டி, " try this. soooooo yummy!"

அஞ்சலி, "வேற spoon கேளு."

நான், "பரவாயில்ல. உன் spoon போதும்." என்றேன். அச்சமயம் எங்களது வெட்கங்கள் பக்கத்தில் நின்று எங்களது கன்னங்களை சீண்டின. நான் அவளை ரொம்ப நேரம் அப்படியே பார்த்தது அவளுக்கு ஒரு மாதிரியாய் உணர, "excuse me. i need to go the ladies." என்றாள்.

கொஞ்சம் நேரம் கழித்து ஓடி வந்தாள் பரபரப்புடன், "oh no! i'm dead."

"என்ன ஆச்சு?"

அவள் எதற்கும் பதில் சொல்லவில்லை. அவசர அவசரமாய் மேசையில் கிடந்த அவளது கைபேசி, டைரி, பேனா ஆகியவற்றை பையில் போட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது ஒரு சின்ன குழந்தை அஞ்சலியின் கையை பிடித்து,

" அத்தே!!!" என்றது.

அஞ்சலியின் அண்ணி கழிவறையிலிருந்து வெளியே வர, "அஞ்சலி, ஏன் என்னைய பாத்து ஓடி வந்த?" என்றவர், என்னை கவனித்தார்.

எனக்கு புரிந்துவிட்டது.

நான் எழுந்து நின்றேன், "ஹாலோ" இஞ்சி திண்ண குரங்கு போல் காட்சியளித்தேன்.

"what is all this?" கத்தினார். அஞ்சலி பயத்துடன், "அண்ணி கத்தாதீங்க! அஜய மீட் பண்ணலாம்னு...." இழுத்தாள்.

"அப்போ வீட்டுல பொய் சொல்லிட்டு வந்திருக்க? கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி ஊர் சுத்துறது கொஞ்சம்கூட நல்லா இல்ல." என்று அறிவுரை கூற ஆரம்பித்தார். அங்கு இருந்தவர் அனைவரும் டிவியில் மெகா சீரியல் பார்ப்பதுபோல் எங்களையே பார்த்து கொண்டிருந்தனர்.

அஞ்சலி கெஞ்சினாள்,"அண்ணி, ப்ளீஸ்... வாங்க வீட்டுக்கு போகலாம். அப்பரம் பேசிக்கலாம். சாரி அஜய்."

அஞ்சலி, அவள் அண்ணி, குழந்தையுடன் காரில் ஏறி சென்றாள். அண்ணி ஏசுவதை நிறத்தவே இல்லை. பாவம் அஞ்சலி! வீட்டில் அவளுக்கு கெட்ட பெயர் என்னால்.

நான் வீடு திரும்பினேன். பைக்கில் சென்று கொண்டிருந்தபோது என் கைபேசி அலறியது. அஞ்சலி தான் என்று நினைத்து ஓரமாக நிறுத்தினேன் பைக்கை.

"ஹலோ!" மறுமுனையில் பேசியவரின் வார்த்தைகளை கேட்டு நான்,

"what!!?? என்ன சொல்றீங்க? எந்த ஹாஸ்பிட்டல்?"

பைக் பறந்தது கே.ஜி மருத்துவமனைக்கு. நான் பார்த்த காட்சி என் மனதை பிளந்தது.

அம்மா பிணமாய் ICU வார்ட்லிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார். நெஞ்சில் அடித்து அழுது கொண்டிருந்த அப்பாவிற்கு ஆறுதல் சொல்லிகொண்டிருந்தார் சித்தப்பா. சொந்தக்காரர்கள் சிலர் கதறி அழுதனர். என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என்ன நடந்தது? ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நேரம் முன்னால் சந்தோஷமாக இருந்த நான், இப்ப எனக்கு...

தலையே சுற்றியது. உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.

அப்பா ஒரு பக்கம் அழ, அம்மா இறந்துகிடக்க- எனக்கு மயக்கம் வந்தது.

(இரண்டு நாள் கழித்து வீட்டில்)
அம்மாவின் படத்திற்கு மாலை, பக்கத்தில் ஊதுபத்தி. அதை பார்க்க பார்க்க துக்கம் தொண்டையை அடைத்தது. வந்தவர்களிடம் என்ன நடந்தது என்று அப்பா சொன்னார்.

" ரோட் ஓரமா தான் நடந்துவந்தா. வேகமா வந்த ஒரு லாரி balance பண்ண முடியாம... அவள மோதிட்டு. பக்கத்துள்ள கம்பி கிடந்து இருந்துச்சு... அதுல போய் அவ விழுந்துட்டா... மண்டைல பெரிய அடி.... ஹாஸ்பிட்டலுக்கு..கொண்டு போறதுக்குள்ள..." அதற்கு மேல் அப்பாவால் பேச இயலவில்லை. ஒவ்வொரு முறையும் வந்தவர்களிடம் இதை சொல்லி சொல்லி அவருக்கு துயரம் அதிகமானது. வந்தவர்களை சித்தப்பா கவனிக்கட்டும் என்று சொல்லிவிட்டு அப்பாவை வேற இடத்தில் உட்கார சொன்னேன்.

இரவு ஆனது. எல்லாரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

a house is made of bricks but a home is made of love. ஒரு வீடு இல்லமாக மாறுவது ஒரு பொண்ணு கையில். அது எவ்வளவு உண்மை என்பதை அம்மா இல்லாத போது தான் உணர்ந்தேன். வீட்டில் ஒரே அமைதி. அந்த அமைதி என்னை வாட்டியது. என் அறை ஜன்னல் பக்கமாய் நின்று கொண்டிருந்தேன். யாரோ என் அறை கதவை திறப்பது போல் இருந்தது. திரும்பி பார்த்தேன்.

அஞ்சலி.

என் அருகே வந்தாள். "அஜய்..ஐ எம்.. சாரி" என்றதும் என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவளை கட்டிபிடித்து அழுதேன்.

அவள் என்னை கொஞ்ச நேரம் அழவிட்டாள். படுக்கையில் உட்கார வைத்தாள்.

"cry to your heart's content. அழது முடிச்சுடு. அப்ப தான் பாரம் குறையும். but இனிமேலு அங்கிளுக்கு நீ தான் huge supportஆ இருக்கனும். your support, confidence and your smile should bring him back to normal."

நான், "என்னால முடியல அஞ்சலி. எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச வேலை போச்சு. அப்பரம் என்னோட best friend மாதிரி பழகின அம்மாவும் போய்ட்டாங்க." தேம்பி தேம்பி அழுதேன்.

"i feel like dying, anjali."

"அஜய்!! ப்ளீஸ்..." என் கண்ணீரை துடைத்தாள்.

மௌனமாக இருந்தோம்.
ஹாலுக்கு அழைத்து சென்றாள் என்னை. அப்பா dining tableல் உட்கார்ந்திருந்தார். அஞ்சலி வாங்கி வந்த சாப்பாடு மேசையில். எங்கள் இருவரையும் சாப்பிட சொல்லி கெஞ்சி கேட்டாள். அப்பாவுக்கும் எனக்கும் சாப்பிட மனமில்லை. ரொம்ப நேரம் கெஞ்சி பார்த்தாள் அஞ்சலி.

அஞ்சலி, "அப்பா, நீங்க இப்ப சாப்பிடலன்னா? நான் அப்பரம் உங்கள பாக்க வரவே மாட்டேன்!" என்றாள்.

அஞ்சலி 'அப்பா' என்று அவரை அழைத்ததும் அவருக்கு ஆச்சிரியமாய் இருந்தது. அடுத்த நொடியே அப்பா அஞ்சலி சொன்னதை செய்தார். அப்பா கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு மாறினார். அஞ்சலியும் அப்பாவும் ரொம்ப நேரம் பேசினார்கள். அப்பா அவ்வபோது புன்னகையித்தார். எனக்கு அவரை பார்க்க சந்தோஷமாக இருந்தது.

நேரம் ஆகிவிட்டால் அஞ்சலி கிளம்பினாள்.

அப்பா, "அஞ்சலி, நீ தப்பா நினைக்கலன்னா.... இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போ மா. அஜய்க்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்."

அஞ்சலி, "எனக்கும் இருக்க ஆசை தான் பா. ஆனா, வீட்டுல நிறைய பிரச்சனை ஓடிகிட்டு இருக்கு. இன்னிக்கே ஏதோ பொய் சொல்லிட்டு தான் வெளியே வந்து இருக்கேன்... but அப்பா, you don't worry. இனிக்கு இல்லன்னா என்ன. இனி வாழ்க்கை fullaa இங்க தானே இருக்க போறேன்." என்றதும் எனக்கு ஆச்சிரியமாய் இருந்தது.

அஞ்சலி வீட்டில் கடைசி வரைக்கும் ஒத்து கொள்ளவில்லை.

(ஒரு வருடம் கழித்து...)

"Two hearts that beat as one.
one soul inhabiting two bodies
two lives entwined together forever."

love-Actually Copyrights 2007

என்றது எங்களது திருமண வாழ்த்து அட்டை. நான் ஆரம்பித்த சொந்த நிறுவனம் தான் love-actually. அதில் அச்சடிக்கப்பட்ட முதல் வாழ்த்து அட்டை எங்களது. திருமணம் பிரமாண்டமாய் நடத்தப்படவில்லை. அஞ்சலி வீட்டில் யாரும் வரவில்லை. நண்பர்கள் மற்ற ஒருசில சொந்தக்காரர்கள் முன்னிலையில் நடந்த திருமணம்.

அவளுக்கு நான் கொடுத்த முதல் பரிசு தான் - மோதிரம்.

***

நான் அவள் மோதிர விரலை தொட்டு பார்த்து கொண்டிருந்தேன். எனது நினைவு அலைகள் கரையோரமாய் சேர, நான் சற்று நிமிர்ந்து பார்த்தேன்,அஞ்சலி இன்னும் தனது லெப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு புதிதாய் ஒரு இமெயில் வர, மகிழ்ச்சி அடைந்தாள்.

அஞ்சலி, "ஏய் அஜய் இங்க பாரு. அப்பாகிட்டலேந்து இமெயில் வந்து இருக்கு."

அப்பா தற்போது அமெரிக்காவில் இருக்கும் சித்தாப்பா வீட்டில் இருக்கிறார். அப்பாவின் இமெயிலை படித்தவுடன் அஞ்சலி அவருக்கு பதில் எழுதினாள்:

helloooooooooo appa!!!!!!! great to see your email at this time. I'm still awake trying to finish up some report here. I'm sOooooo Dead TIRED! How I wish you were here to make your sweet lassi! i miss your sweet lassi, pa! We MISS you so much pa. ajay, nivi and nisha are doing great. you take care of yourself and enjoy your stay at america! don't jollufy too much with the vellaikaaris there! hahahaha:)) appa, come back soon for summer holidays!

with love,
anjali, ajay, nivi and nisha

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, அஞ்சலி, "யப்பா... finally."லெப்டாப்பை மூடினாள். என்னை பார்த்தாள். கடிகாரத்தை பார்த்தாள்.

அஞ்சலி, "மணி இப்ப 3.30 am. நீ தூங்கி இருந்திருந்தா இந்நேரம் கனவுல தீபிகா படுகோன்கூட டூயட் பாடிகிட்டு இருந்திருக்கலாம்." என்றாள் சிரித்து கொண்டே.

நான், "ஐ லவ் யூ, அஞ்சலி."

அவள், " it's 3.30 am now. you are crazy, i tell you."சிரித்தாள்.

இருவரும் ரொம்ப நேரம் பேசினோம் காலை மணி 6 ஆனதுகூட தெரியாமல்.

*முற்றும்*

Apr 30, 2010

விண்ணை தாண்டி வந்தாளே- 4

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

அவள் சொன்னது ஒன்றுமே எனக்கு புரியவில்லை. புருவங்களை உயர்த்தி குழப்பமான முகத்துடன் "what???"

அவள் மறுபடியும், "i said i like you." சிரித்தாள். வெட்கப்பட்டு சிரித்தாள்.

என்னை பிடித்து இருக்கிறது என்று சொல்ல சொல்ல அடிவயிற்றில் சந்தோஷம் பொங்கியது அதே சமயம் மண்டையில் குழப்பங்கள் கபடி ஆடின.
என் சூழ்நிலையை புரிந்து கொண்ட அஞ்சலி,


" நீ என்கிட்ட ஐ லவ் யூ சொன்ன பிறகு ரொம்ப கோபம் வந்துச்சு. ஆனா வீட்டுக்கு போய் யோசிச்சு பாத்தேன். பையன் பரவாயில்லனு தோணுச்சு." சிரித்தாள்.

தொடர்ந்தாள், " என்னைய எவ்வளவு தடவ ஏமாத்தி இருப்ப. அதான் உடனே சொல்லல. but right now I'm really sorry about your situation. கவலைப்படாதே. கண்டிப்பா we shall do something about your job."



இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியலை. நான் ரொம்ப சாதாரணமா ஐ லவ் யூனு சொன்னேன். அதுக்கு டென்ஷன் ஆன பொண்ணு இப்ப சீரியஸா வேலை போச்சுனு சொல்லியிருக்கேன் அத போய் இப்படி சாதாரணமா எடுத்துகிறா. இந்த பொண்ணுங்க எப்படி எந்த நேரத்துல எத யோசிப்பாங்கனு தெரிய மாட்டேங்குது. ஒன்னு மட்டும் உண்மை- பொண்ணுங்க இருக்கிறதுனால என்னவோ உலகம் இன்னும் அழியாம அழகா இருக்கு!

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மறுபடியும் கேட்டேன்,

"so பிடிச்சு இருக்குனா? கல்யாணம் பண்ணிக்க ஓகேவா?"

அவள் என்னை ஒரு மடையன் என்று நினைத்து இருப்பாள். அவள் புன்னகையித்தபடி, "yes, you idiot!"

"உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா? மாப்பிள்ளைக்கு வேலை இல்லேனு தெரிஞ்சா கல்யாணத்துல பிரச்சனை வராதா? ஜாதகம் சரியில்ல அது இதுனு காரணம் சொன்னாங்கன்னா. என்ன பண்றது?" படபடப்புடன் நான்.

"கை ஜோசியத்தை நம்பி எதிர்காலத்தை நிர்ணயிக்காதே. கை இல்லாதவனுக்கு எதிர்காலம் உண்டு- அப்படினு எங்கயோ படிச்ச ஞாபகம். எனக்கு இந்த ஜோசியம், ஜாதகம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல. வீட்டுல கண்டிப்பா எதாச்சு சொல்லுவாங்க.ம்ம்ம்... சமாளிக்கனும் அஜய். எப்படியாச்சும் சமாளிக்கனும்!" அவள் பேசியதில் தெரிந்த நம்பிக்கை எனக்கு புத்துணர்ச்சியை தந்தது. என் முகத்தில் தெரிந்த புன்னகையை கண்டு கொண்ட அஞ்சலி,

" so, happy now?"

ஆம் என்பதுபோல் தலையாட்டினேன். நேரம் ஆகிவிட்டதால் அஞ்சலி கிளம்பிவிட்டாள்.

கொஞ்ச நாட்களாக வீட்டில் சரியாக நான் பேசவில்லை. அம்மா என்னிடம் பல முறை கேட்டாலும் நான் பதில் அளிக்காமல் இருந்தேன். இன்று அஞ்சலி ஒரு முடிவு சொன்னபிறகு தான் கொஞ்ச நிம்மதியாக இருந்தது. ஆனால் வேலை போனது, அஞ்சலியிடம் நான் சொன்னவை, அஞ்சலி என்னிடம் சொல்லிய விஷயங்கள் அனைத்தையும் வீட்டில் கொட்டினேன். அம்மாவுக்கு நான் பழைய அஜயாக மாறியதை கண்டு சந்தோஷப்பட்டார்.

இருந்தாலும், வேலை போனதில் அவருக்கு வருத்தம். அப்பாவுக்கும் தான்.

அப்பா, "என்னடா அஜய். இப்படி நடந்து போச்சு. பொண்ணு வீட்டுல இத சொல்லாம இருந்தா தப்பா போயிடும். நம்ம நேர்மையா இருக்குறது தான் நல்லது." ரொம்ப குழப்பத்துடன் காட்சியளித்தார்.

அம்மா, "ஆமா அஜய். நம்ம அவங்கிட்ட சொல்லிடலாம்!"

நான், "இல்லமா, அஞ்சலி கொஞ்ச நாள் வேட் பண்ண சொன்னா... அவ ஒரு வேலை தேடி தரானு சொல்லியிருக்கா. சோ கொஞ்சம் வேட் பண்ணி பாப்போம்...."

இருவருக்கும் வேலை போன விஷயத்தை மறைப்பதில் அவ்வளவாக ஈஷ்டமில்லை இருப்பினும் எனக்காக ஒத்துகொண்டனர். மறுநாள் சனிக்கிழமை அதே காபி ஷாப்பில் நானும் அஞ்சலியும்...

மேசையில் லேப்டாப், பக்கத்தில் நிறைய print-outs. அவளுக்கு தெரிந்த கம்பெனிகளிலிருந்து application forms கொண்டு வந்திருந்தாள். எல்லாவற்றிலும் என் detailsகளை எழுத சொன்னாள். இணையத்தில் சில கம்பெனிகளுக்கும் இமெயில் அனுப்பினாள். கிட்டதட்ட ஒரு 50 கம்பெனிகளுக்கு application போட்டிருப்போம். அஞ்சலியின் ஃபோன் ஒலித்தது.

"ஓ அப்படியா? great great. thank you so much dude." அவள் பேசி முடித்ததும் என் பக்கம் திரும்பினாள்.

"அஜய், happy news. ரஞ்ஜன் என் ஃபிரண்ட். நான் நேத்திக்கு அவன்கிட்ட உன்னைய பத்தி சொன்னேன். அவன் கம்பெனில executive manager post இருக்காம். நல்ல job scope, reasonable salary. அவன் உன்னைய வந்து பாக்க சொல்றான். next week monday 10 am. ok?"

நான் சரி என்றேன். அவள் உடனே மெசேஜ் அனுப்பினாள் ரஞ்ஜனுக்கு.

"anyway, நம்ம இன்னும் ஒரு நாலு இடத்துக்கு application போடுவோம். the more we apply, the higher the probability of getting a job soon." மும்முரமாக தனது லெப்டாப்பில் வேலையை தொடர்ந்தாள். தன்னுடைய சொந்த பிரச்சனை போல் விழுந்து விழுந்து அஞ்சலி வேலை பார்ப்பதை கண்டு எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளையே கொஞ்ச நேரம் கண்சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.

"thanks anjali." என்றேன். புன்னகையித்தாள்.

"உன் வீட்டுல தெரியுமா நீ எனக்கு...." என்று நான் சொல்லி முடிப்பதற்குள்.

அஞ்சலி, "ஓ நோ! வீட்டுல எதுவுமே தெரியாது. உனக்கு வேலை போன விஷயம் தெரிஞ்சுதுன்னா அவ்வளவு தான்! கல்யாணம் stop தான். அதுக்கு தான் இன்னும் இரண்டு வாரத்துல நம்ம எப்படியாவது ஒரு வேலைய தேடி கண்டுபிடிக்கனும். அப்பரம் சொல்லிக்கலாம்....மாப்பிள்ளக்கு transfer கிடைச்சுதுனால புது கம்பெனிக்கு போயிட்டாருனு." அவள் பேச பேச அவளது விரல்கள் வேகம் வேகமாக டைப் செய்தன.

girls are multi-taskers. அது நூற்றுக்கு நூறு உண்மை!

"அப்பரம் நீ என்னைய மீட் பண்றது எல்லாம் உன் வீட்டுல...." நான் கேள்வி மேல் கேள்வி கேட்டேன்.

"ஏய் சத்தமா சொல்லாத ப்ளீஸ். என் வீட்டுல எதுவுமே தெரியாது. நான் உன்னைய ஒரே ஒரு தடவ தான் பாத்து இருக்கேன். அதுவும் நம்ம நிச்சயதர்த்தம் முன்னாடி வெளியே போனோமே-இது தான் என் வீட்டுக்கு தெரியும். அதுக்கு அப்பரம் நம்ம மீட் பண்ணது. எதுவுமே தெரியாது. தெரிஞ்சுது!! அப்பரம் தோரணம் ஆயிரம் ஆயிடுவேன் நான்.... இன்னிக்குகூட பாரு ஃபிரண்ட்வோட குழந்தைக்கு காது குத்து அப்படின்னு சொல்லிட்டு தான் வெளியே வந்தேன்." அஞ்சலி பேசியதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்துச்சு.

" காது குத்துக்கு எதுக்கு லெப்டாப்புன்னு கேட்கலையா?" சிரிப்பை அடக்க முடியவில்லை எனக்கு.

"ஓய், என்ன நக்கலா? i brought my laptop in this big zara bag. பாத்தீயா.... நான் போட்டிருக்கும் சுடிதாருக்கும் கொண்டு வந்த bagக்கும் ஒரு matching இல்லாம இருக்கு. all because of you." செல்ல கோபத்துடன் சலித்து கொண்டாள்.

என்னை சுட்டிகாட்டி, "இந்த match வேணும்னு matching இல்லாம handbag போட்டு வரதுல ஒன்னும் தப்பு இல்ல." என்றேன்.

அவள், "நல்லாவே பேசுற, அஜய்." அவள் கவனம் மறுபடியும் லெப்டாப்பிற்கு சென்றது.

அவள் சுடிதார் என்று சொன்னபிறகு தான், அவள் போட்டிருந்த வெள்ளை சுடிதாரை கவனித்தேன். அவள் மாநிறத்திற்கு வெள்ளை..ம்ம்ம்..அசத்தலா இருந்துச்சு!

அனைத்து வேலைகள் முடிந்துவிட்ட தருவாயில், எனக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது.

"அஞ்சலி, படம் பார்க்க போலாமா? if you don't mind...." என்றேன். அவள் என்னை பார்த்து முறைப்பாள் என்று நினைத்தேன். மாறாக, அவள் "ஓ என்ன படம், அஜய்?"

அவளுக்கு ஹிந்தி நடிகர் ஷர்மன் ஜோஷியை ரொம்ப பிடிக்கும் (இந்த தகவலை அவள் ஃபேஸ் புக்கில் ஒரு முறை பார்த்து இருக்கிறேன். வாழ்க ஃபேஸ் புக்!)

அவள் வாயை பிளந்து சந்தோஷத்தில், "ஓ மை காட்! yessss we should go then. " என்றாள்.

(சினிமா தியெட்டரில்)

"actually why do you like sharman joshi?" என்று கேட்டதற்கு நான் என்னமோ அவள் கிட்னியை தானமாக கேட்பதுபோல் சீறி பாய்ந்தாள்.

"what nonsensical question is that? how can you not like sharman? just look at his well-shaped sharp nose...oh my god. நாள் முழுக்க அத தொட்டு பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு." பக்கத்தில் ஒட்டப்பட்ட அவரது (அவனது) படத்தில் கைவைத்து சொன்னாள். பாப்கார்ன் வாங்க அவள் சென்றாள். பின்னாடி நின்ற நான் சுற்றும்முற்றம் பார்த்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லை. அஞ்சலியும் என்னை பார்க்கவில்லை. அந்த கேப்பில் என் மூக்கை தொட்டு பார்த்தேன்.

சின்ன புள்ளையிலிருந்து நாண் சாப்பிட்டு இருந்தால் ஒரு வேள மூக்க ஷார்ப்பா வந்து இருக்குமோ என்னவோ என்றது மனசாட்சி! நான் ஏன் இந்த படத்துக்கு கூட்டிகிட்டு போனேன்? காரணம் உண்டு. படம் செம்ம மொக்கை என்று தெரியும். மொக்கை என்பதால் அஞ்சலிக்கு ரொம்ப போர் அடிக்கும், தூக்கம் வரது என்பாள், அப்படியே தோள்ல சாய்ந்து கொள்வாள் என்று எதிர்பார்த்தேன். ஒரு 'touching touching'!

வேலை போச்சு, உனக்கு இந்த நேரத்துல வெட்டியா ரோமேன்ஸ் கேட்குதா என்று நினைக்கலாம். ஆனால், என்னால் control பண்ண முடியல. அஞ்சலி பக்கத்துல இருக்கும்போது மனசு அநியாயத்திற்கு அலைபாயுது.

படம் ஆரம்பித்து 10 நிமிடம் தான் இருக்கும். செம்ம மொக்கை! ஆனால், அஞ்சலி இந்த மொக்கை படத்தையே ரசித்து ரசித்து பார்த்தாள். என் ஆசை எல்லாம் நாணுக்கு போடுகிற பட்டர் மாதிரி கரைஞ்சு போச்சு! அஞ்சலி தோளில் சாய்ந்து கொள்வாள் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு வந்த தூக்கத்திற்கு இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்து இருந்த பாட்டி மாடியில் விழுந்துவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது.

படம் முடிந்து வெளியே வந்தோம். அஞ்சலி, "ஓ மை காட், awesome film rite? i just love it!" என்றாள். மாடிப்படியில் இறங்கியபோது அவள் கால் தடுக்கிவிட்டது. கீழே விழாமல் இருக்க, என் கையை பிடிச்சா பாருங்க!!!! அந்த ஒரு 'grip'- சான்ஸே இல்ல! 150 வயலின்கள் இசை ஒரு நேரத்தில் கேட்டது எனக்கு. அப்படி ஒரு ஃவீலிங். கடவுள் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான். என்னை பொருத்தவரை கடவுள் மாடிபடியில் இருக்கிறார்.

"சாப்பிட போவோமா?' என்றாள்.

"உனக்கு லேட்டா ஆகலையா?" என்றேன்.

"பரவாயில்ல சொல்லிக்கலாம்." என்றாள். என்கூட நேரம் செலவழிப்பது அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதை அவள் கண்களிலிருந்து வீசிய வெட்கம் கலந்த ஆனந்தம் என் மனம் சுவாசித்தது.

(பகுதி 5)

Apr 27, 2010

ஜஸ்ட் சும்மா(27/4/10)

கதை எழுதவேண்டும் என்றால் மனசு சந்தோஷமா இருக்கனும். அப்ப தான் கதையும் கொஞ்சம் சுவாரஸ்சியமா போகும். 'விண்ணை தாண்டி வந்தாளே' கதை எழுதி ரொம்ம்ம்ம்ப காலமா போய்கிட்டு இருக்கு. ஒவ்வொரு பாகம் ஒரு மாசம் கழிச்சு வெளியிடும் வகையில் இருக்கு. அதுக்கு காரணம் மூட் இல்ல (வெளிப்படையா சொல்ல போனால்)

நான் இப்போது வேலை பார்க்கும் (அதாவது training செய்யும் இடத்தில் எனக்கு பல தலவலி) அதுவும் பிடிக்காத வேலையில் எத்தனை நாள் தான் குப்பை கொட்ட போறேனோ என்ற கவலையிலேயே பாதி நாள் ஓடி போகுது அப்பரம் கதை எழுத எங்க மூட் வரும்? ஆக, வாசகர்களுக்கு சாரி சொல்லிகிறேன் ரொம்ப தாமதமா ஒவ்வொரு பகுதியை வெளியிடுவதற்கு. முடிந்தவரை சீக்கிரம் போட பாக்கிறேன்.

********************************************************************

பையா பார்த்தேன். இருக்கிற புண்ணுல பூசணிக்காயை உடைத்ததுபோல் இருந்துச்சு. படத்தில் காரின் நடிப்பு தான் சூப்பர்! கார்த்தி இனிமேல் அவங்க அப்பாகிட்ட யோகா கத்துகிட்ட யோகா மையம் ஆரம்பிக்கலாம். அப்பரம் என்னங்க இனிமேல படத்துல வாய்ப்பு எல்லாம்...ம்ஹும்....சரி விடுங்க!

மன்னிக்க முடியாத குற்றம்: அடடா மழை பாட்டு கேட்க அற்புதம். பார்க்க, ஐய்யோ என்னால சொல்ல முடியல. ஒரு அழகான பாடலை அதைவிட அழகாய் காட்சி அமைத்து இருக்கவேண்டாமா, ராஜுசுந்தரம்!
***********************************************************************

சுறா சுறா சுறா!!! வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக போகுது. அதன் முன் ஏற்பாடாக ஒரு வாரமாக சுறா புட்டு, சுறா கறி சாப்பிட்டு வருகிறேன். ஹாஹா ஹா..சும்மா சும்மா!!
**********************************************************************

Apr 20, 2010

விண்ணைத் தாண்டி வந்தாளே- 3

பகுதி 1)

பகுதி 2

பயத்தை கட்டுப்படுத்தி கொண்டு தைரியத்தை அழைத்தேன். வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. அவள் கால்களை கவனித்தேன். செம்ம high heels போட்டு இருந்தாள்.
'இத வச்சு அடிச்சா, கண்டிப்பா தாங்காது!' என்று மனம் எச்சரித்தது. இருப்பினும், அதையும் தாண்டி உண்மையை சொல்ல வாயை திறந்தேன்.

"அஞ்சலி, உங்கிட்ட ஒரு உண்மைய சொல்லனும். actually I like you. நமக்கு engagement நடந்தபோது நம்ம மொட்ட மாடில நின்னுகிட்ட இருந்தோம்ல, அப்ப தான் i decided you are the one for me. பாத்த உடனே புடிச்சு போனதுனு சொல்ல மாட்டேன். உன்னோட straightforwardness, sense of humour, நீ நீயா இருக்குற தெரியுமா... அந்த quality. i really like it. i didn't fall in love with you instantly, but just grew in love as days went by."

அவளுக்கு அதிர்ச்சி! சிலைபோல் நின்றாள்.

நான் தொடர்ந்தேன், " i know this might be a shock for you. i'm sorry. ரொம்ப நாளா சொல்லிடனும்னு தான் இருந்தேன். but பயமா இருந்துச்சு. இன்னும் 4 மாசம் தான் இருக்கு கல்யாணத்துக்கு. அதுக்கு முன்னாடி சொல்லிடனும்னு தான் இருந்தேன். look i am really really sorry."

அவள், "so, இத்தன நாளா நீ கொடுத்த ப்ளான் எல்லாம்?"

நான் சிரித்து கொண்டேன், " flop ஆகும் plans தான். ஆனா, successful plans பத்தி யோசிக்குறதவிட மொக்கையான ப்ளான்ஸ் பத்தி யோசிக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?"

என் சிரிப்பு அவளுக்கு எரிச்சலை தந்ததுபோலும், முறைத்தாள்.

" i didn't expect this from you. i feel cheated."

"hey i am sorry. sorry." எனக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"உன்னைய ரொம்ப நல்ல ஃபிரண்டா நினைச்சு இருந்தேனே. இப்படி பொய் சொல்லி ஏமாத்திட்டீயே?" என்று அவள் சொல்லாமல் சொன்னாள் அவளது கண்களால். அந்த கண்களில் தெரிந்த ஏமாற்றம், கோபம், சோகம் என் மனசாட்சியை குத்தியது.

அவள் மௌனமாக இருந்தாள். கொஞ்சம் நேரம் கழித்து, " i am disappointed. you have betrayed. I feel cheated.bye." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். அவளது கையை பிடித்து தடுக்க முயன்றபோது, அவள்

"please don't touch me. you cheap fellow" முகத்தில் கோபம் தெரிந்தது. என்னை அருவருப்பாக பார்த்தாள்.

"ப்ளீஸ்.. அஞ்சலி! i am sorry. really really sorry. i didn't mean to hurt you. கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் சொல்லிடனும்னு நினைச்சு தான் உங்கிட்ட சொன்னேன்." என்று மன்றாடினேன். அவள் ஏதையும் கேட்பதாக இல்லை. சென்றுவிட்டாள். பாரம் குறைந்ததுபோல் இருந்தாலும் தேவையில்லாமல் அவள் மனதை புண்படுத்திவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி என்னை வாட்டியது.

அன்று இரவு ஃபோன் செய்தேன் அவளுக்கு. ஆனால் அவள் ஃபோனை எடுக்கவில்லை. இப்போது நாலு மாச தான் இருக்கு கல்யாணத்துக்கு, அஞ்சலிக்கு பிடிக்கவில்லை. அவளால் வீட்டிலும் சொல்ல முடியாது. விருப்பம் இல்லாத கல்யாணத்திற்கு அவளை நானே தள்ளிவிட்டேன். நிம்மதியாக அவளால் எப்படி இந்த கல்யாணத்தை.... என் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம நானும் அவளை காயப்படுத்திவிட்டேன்.....

i hate myself!!!! என்று பேனாவினால் 1000 முறை கிறுக்கினேன் ஒரு தாளில். தூங்க முற்பட்டேன் ஆனால் இயலவில்லை. தலையணை பக்கத்தில் கிடந்த கைபேசியை 100 முறை பார்த்தேன் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், அவள் ஃபோன் செய்ய மாட்டாளா என்று. நடு இரவில் எழுந்து அவள் பேஸ்புக்கில் எழுதினேன் - sorry!

மறுநாள் அவள் ஆபிஸுக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். அவள் ஆபிஸை அடைந்ததும், என் கைபேசி மணி அழைத்தது. எனக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. அஞ்சலி தான் என்று நினைத்து கைபேசியை பார்த்தபோது அதில் தெரிந்தது என் ஆபிஸ் மேனேஜரின் நம்பர்.

"அஜய், நீங்க இப்ப எங்க இருக்கீங்க?"

நான், "ஒரு முக்கியமான ஃபிரண்ட்ட பாக்க வந்தேன்."

"ஓ sorry to disturb you. can you come to office now? urgent matter..."

எனக்கு ஒன்னும் புரியவில்லை. மேனேஜர் இப்படி தயக்கத்துடன் பேசி நான் பார்த்தது இல்லை. ஆக அஞ்சலியை பார்க்கவில்லை. நேராக என் ஆபிஸுக்கு கிளம்பினேன்.

மேனேஜர் என்னை பார்த்து, "sorry அஜய். I don't know how to tell you but I have to say this. உங்களுக்கு வேலை போச்சு. recession timeல இப்படி தான்...." அவருக்கு கஷ்டமாய் போனது.

இடி விழுந்ததுபோல் நின்றேன்! ஏன்? எப்படி? எதனால்? ஏன் நான்? என்று கேள்விகள் மனதில் ஓடின ஆனால் அவரிடம் கேட்கவில்லை. கேட்க சக்தி இல்லை. உடலில் வலிமை இழந்ததுபோல் உணர்ந்தேன். மேனேஜர் ஆறுதல் வார்த்தை பேசினார். எதுவும் என் காதுகளில் விழவில்லை. நல்ல போஸ்ட்டுல தானே இருந்தேன். ஏன் நான்? ஏன் நான்?

கல்யாணம் வேற இன்னும் 4 மாசத்துல நடக்க போகுது... இப்போ என் நிலைமை என்ன? அஞ்சலி வீட்டுல என்ன சொல்லுவாங்க. அஞ்சலி என்ன நினைப்பா? வேலை போனது, அஞ்சலி ஃபோன் செய்யாமல் இருந்தது- எனக்கு தலையே சுற்றியது. கோபம் வந்தது எனக்கு. உடனே அஞ்சலிக்கு ஃபோன் செய்தேன். இந்த முறை அவள் பேசினாள்!

அவள், "ஹாலோ!"

நான், " அஞ்சலி. உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி. எனக்கு வேலை போச்சு. இப்போ உன் வீட்டுல சொல்லிடு- மாப்பிள்ளைக்கு வேல இல்ல. அவன் ஒரு வேஸ்ட் fellow. உனக்கு பிடிக்கலனு சொல்லிடு. are you happy? இப்போ நிம்மதியா இருக்கா உனக்கு? thanks. bye."

ஃபோன்னை கட் செய்தேன். கோபத்தில் பேசியது கொஞ்ச நேரம் கழித்து தான் முட்டாள்தனமாக தோன்றியது. 10 நிமிடங்கள் கழித்து அவளே ஃபோன் செய்தாள்.

அஞ்சலி, " are you okay? where are you now?" அவள் அமைதியாய் பேசினாள். அவள் அமைதி என் முட்டாள்தனத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தியது. நான் சாந்தமாய், "ம்ம்... at my office."

(என் ஆபிஸ் எதிரில் உள்ள காபி ஷாப்பில்)

"என்ன ஆச்சு?" அஞ்சலி ஆறுதலாய் கேட்டாள்.

"தெரியல்ல..." ஒற்றை வார்த்தைகளுக்கு மேல் என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

"எத்தனையோ plans சொல்லியிருப்பேன். i think this is the best plan that god has created for you. உன் வீட்டுல சொல்லிடு. உனக்கு இனிமே problem இருக்காது."

அவள், "என்ன problem இருக்காது?" நான் சொன்னது புரியாததுபோல் கேட்டாள்.

"அஞ்சலி, உனக்கு என்னைய பிடிக்கல. இந்த கல்யாணத்தலயும் இஷ்டம் இல்ல. எனக்கு தெரியும். இப்ப ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கு. மாப்பிள்ள பிடிக்காம போறதுக்கு ஒரு நல்ல காரணம் கிடைச்சு இருக்கு. make use of it. be happy anjali. வேல இல்லாதவன எப்படி கல்யாணம் பண்ணிப்ப நீ? உன் medicure, pedicure, massage, spa, entertainment செலவுகளுக்கு எல்லாம் என்னால ஒன்னும் கொடுக்க முடியாது. எல்லாத்தையும் உன் வீட்டுல சொல்லிடு. you are escaped from this, anjali." மனதில் பட்டதை கொட்டினேன்.

அவள் அமைதியாய், " பரவாயில்ல nail cutter வச்சு சமாளிச்சுக்கிறேன்." புதிர் போடுவது போல் பேசினாள். எனக்கு சுத்தமாய் ஒன்னும் புரியவில்லை.

தொடர்ந்தாள் அஞ்சலி, " i think i like you."

(பகுதி 4)

Apr 18, 2010

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்- 12


life mein kabhi kabhi, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், pyaar impossible போன்ற படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த dino morea தான்...இப்போது... நான்...
. முதன் முதலில் அவரை பார்த்தபோது, இவர் பார்ப்பதற்கு இத்தாலியர் மாதிரி இருக்காரேனு நினைச்சேன். என் கணக்கு தப்பா போகவில்லை. இவரை பத்தி இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவலே இது- இவரின் அப்பா இத்தாலியர், அம்மா இந்தியர். மாடலிங் செய்பவர்.

அன்று pyaar impossible படம் பார்த்தபோது தான் இவரை சைட் அடிக்க ஆரம்பித்தேன்.
சிறப்பு அம்சம்: இவரின் பொலிவான முகம்




Apr 4, 2010

விண்ணைத் தாண்டி வந்தாளே- 2

(பகுதி 1)
ஆபிஸ் அடைந்ததும், முதல் வேலையாக இமெயிலை பார்த்தேன். என் ஆபிஸ் இமெயிலை. பிறகு, நிறைய வேலைகள் இருந்ததால், என் personal இமெயிலையை திறக்கவில்லை. வீட்டிற்கு செல்லும் போது தான் ஞாபகம் வந்தது. வீட்டிற்கு வந்ததும் பார்த்து கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால், வந்தவுடன் மும்முரமாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். 'அவளை' சுத்தமா மறந்துட்டேன்.

அம்மா, "டேய் அந்த பொண்ணு இமெயில் பண்ணுச்சா?"

பதில் சொல்லாமல் உடனே லெப்டாப்பில் எனது இமெயிலை பார்த்தேன். புதிதாய் ஒரு முகவரி "அஞ்சலி தேவன்".

மனதில் ஒரு முறை எழுதி பார்த்தேன்: அஞ்சலி அஜய்.

"ம்ம்ம்.... பரவாயில்லை." என்று மனம் சொல்லியது. அவளது இமெயிலை படிக்க தொடங்கினேன்,
"ஹாய் மிஸ்டர் அஜய். நான்.. அஞ்சலி. வீட்டுல எல்லாரும் சொல்லியிருப்பாங்கன்னு நினைக்குறேன்.
எனக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவு உடன்பாடு இல்ல. ஐ மின் தப்பா நினைக்காதீங்க. உங்கள சொல்லல.
basically i'm not prepared. I think we should not get stuck in this formula or concept or institution whatever they say just because everyone forces us. நீங்க என்னோட... i don't even keep count on the number of proposals i have gotten so far. ரொம்ப போர் அடிச்சு போச்சு. anyway,நம்ம மீட் பண்ணனுமாம். வீட்டுல தொல்லை தாங்கல. ஒரு தடவ மீட் பண்ணிடுவோம். அப்பரம் பிடிக்கலன்னு சொல்லிடுவோம். ஓகே? hope you understand. thanks mr ajay. i'll be back from my vacation soon . அப்பரம் வந்து ஃபோன் பண்றேன். "

யப்பா! இவ்வளவு straightforward பொண்ணு? கொஞ்சம் ஆச்சிரியமா இருந்துச்சு. அவள் சொன்ன வார்த்தைகளில் அவளுக்குள் இருக்கும் தைரியம் ரொம்ப நல்லாவே தெரிஞ்சுது.

அம்மா என் அறைக்குள் வந்தார். "என்ன அஜய், அவ இமெயில் பார்த்தீயா?"

"ம்ம்..காலையிலே பாத்துட்டேன். vacationல இருக்காளாம். வந்தவுடனே ஃபோன் பண்றேன்னு சொன்னா."

அம்மாவுக்கு இன்னும் தகவல் வேண்டும் என்பதுபோல் முழித்தாள், "அதுக்கு அப்பரம் என்ன சொன்னா? கல்யாணத்த பத்தி..."

"மா!!! யாராச்சும் முதல் தடவ பேசிக்கும் போது இத பத்தி பேசுவாங்களா? ரொம்ப casualஆ தான் இமெயில் இருந்துச்சு. மீட் பண்ணிட்டு முடிவு எடுக்களாம்னு சொன்னா." ரீமோர்ட்டை எடுத்து சத்த அளவை அதிகப்படுத்தினேன்.

"என்னமோ போடா....இந்த காலத்த புள்ளைங்கள..." சலித்து கொண்டார். கையில் கொண்டு வந்த வாழைக்காய் பஜ்ஜியை வாயில் திணித்துவிட்டு சென்றார்.

ஏன் இப்படி செய்தேன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ஆவல். அவள் இமெயில் ஐடியை கொண்டு ஃபேஸ்புக்கில் டைப் அடித்தேன். அவள் எப்படி இருப்பாள் என்ற தெரிந்து கொள்ள ஒரு ஆசை. வயிற்றுக்குள் ஏதோ ஒரு சின்ன அதிர்வு. எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனா அந்த உணர்வு கொஞ்சம் பிடிச்சு இருந்தது.

அஞ்சலி தேவன் படத்தை கிளிக் செய்தேன். பார்த்தவுடனே பிடித்து போவது போல் தாஜ்மகால் அழகு இல்லை. ரொம்ப சாதாரணமான ஒரு பொண்ணு மாதிரி தான் இருந்தாள். அவளுக்கு ஒரு மெசேஜ் எழுதினேன் -

ஹாலோ, நான் தான் அஜய்.

எழுதிவிட்டு ஃபேஸ்புக்கில் மற்றவற்றை செய்து கொண்டிருந்தேன். உடனே அஞ்சலியிடமிருந்து ஒரு பதில் வந்தது-

ஓ மை காட்! you are stalking me! haha.

என்னை 'சேர்த்து' கொண்டேள். அட, ஃபேஸ்புக்கில் add பண்ணினாள்னு சொல்ல வந்தேன். பிறகு கொஞ்சம் நேரம் பேசினோம் chatல். ஃபிரண்ட் போல் ரொம்ப இயல்பாய் பழகினாள். எனக்கு அந்த குணம் பிடித்து இருந்தது. ஒரு வாரம் கழித்து ஒரு காபி ஷாப்பில் சந்தித்து கொண்டோம்.

"ஃபோட்டோவுல இன்னும் smartஆ தெரிஞ்சீங்க...." வெளிப்படையாய் பேசினாள் அஞ்சலி. அப்படியே அம்மா மாதிரி ரொம்ப ஓபன் டைப்.

சிரித்து கொண்டே நான், "நீங்க நேர்ல இன்னும் நல்லா இருக்கீங்க" என்றேன் கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல். சற்று முறைத்தாள்.

"ஐயோ நீங்க சொன்னத்துக்கு நான் திருப்பி சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க."

புன்னகையித்தாள்.

"சரி, உங்களுக்கு ஏன் கல்யாணம் வேண்டாம்னு நினைக்குறீங்க?" என்றேன் நான்.

அஞ்சலி, " தெரியல. ஒரு definite answer இல்ல. ஆனா இப்போதைக்கு வேண்டாம்னு நினைக்குறேன். அது கொஞ்சம் அதிகமான responsibilites கொண்ட விஷயம். பெரிய commitment. இப்ப இருக்குற மாதிரி கல்யாணத்துக்கு அப்பரம் ஜாலியா வெளியே சுத்த முடியாது. ஃபிரண்ட்ஸ்கூட டூர் போக முடியாது. male friendsகூட வெளியே போக முடியாது. ஏதோ நம்மள ஒரு boundaryக்குள்ள பூட்டி வச்ச மாதிரி ஒரு ஃபீல். அப்பரம்.... ஓ yes! காலையில சீக்கிரம் ஏந்திரிச்சு வீட்டு வேலை பாக்கனும். எனக்கு விவரம் தெரிந்த நாள்லேந்து நான் சொந்தமா எந்திரிச்ச பழக்கம் கிடையாது. அம்மா இல்லேன்னா வீட்டுல வேலை பாக்குற ஆயா தான் எழுப்பிவிடுவாங்க..." என்று மனதில் பட்டதை போட்டு உடைத்தாள்.

அவள் சொன்ன விதம் ரொம்ப கியூட். கண்களில் தெரிந்தது ஒரு innocence.

அவள் சொல்ல சொல்ல நான் சிரித்தேன்.

"சமையகட்டு பக்கம் போனா செய்யும் ஒரு காரியம் சமைச்சு வச்சு இருக்குறத எடுத்து சாப்பிடுறது தான். காபிகூட போட தெரியாது. மாசத்துக்கு ஒரு 4 தடவ படம் பார்ப்பேன். every friday night should be spent outside. dinners, lunch outings, medicure, pedicure, threading, spa இப்படினு ஏகப்பட்ட செலவு ஆகும் என்னைய வச்சு maintain பண்ண. வரவன் இதுக்கு எல்லாம் செலவு பண்ண ரெடியா இருக்கனும்." அவள் மேலும் பேசினாள்.

புன்னகையித்தபடி அஞ்சலி, "ஆமா உங்களுக்கு... ஐ மின் உனக்கு ஏன் கல்யாணம் பிடிக்கல."

அவள் உங்களுக்கு என்பதிலிருந்து உனக்கு என்று சொன்னது எனக்கு சற்று ஆச்சிரியமாய் இருந்தது. அவள் உடனே, "சாரி சாரி...உனக்குனு சொன்னா தப்பில்லையே?"

தப்பில்லை என்பதுபோல் தலையாட்டினேன்.

நான், "எனக்கும் அதே ஃபீலிங் தான். ரொம்ப restrictedஆ ஃபீல் இருக்கும். unless the girl is extremely an open-minded girl, then i will consider. if not, no way to marriage man! நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம். வர பொண்ணுக்கும் கிரிக்கெட் பிடிக்கனும்னு எதிர்ப்பார்க்க முடியாது. வீக்கெண்ஸ்ல பார்ட்டிஸ் போவேன். வர பொண்ணு கோயில் குளம்னு சுத்த சொன்னா, செம்ம டென்ஷன் ஆயிடுவேன். ஒரு கெமிஸ்ட்ரி வோர்க் அவுட் ஆகனும். அது இல்லேன்னு ரொம்ப கஷ்டமா போயிடும்."

அவள் தொடர்ந்தாள் "ம்ம்ம்.... ஒகே கூல். வீட்டுல போய் பிடிக்கலைனு சொல்லிடலாம். very simple. காரணம் கேட்டாங்கன்னா?"

நான், "பொண்ணுக்கு காபி போட தெரியாதுனு சொல்லிடுவேன்."

அவள், "அட பாவி!"

நான், "உன்னைய கேட்டா?"

அவள், "பையனுக்கு தண்ணி அடிக்குற பழக்கம் இருக்குனு சொல்லிடுவேன்."

நான், "ஐயோ தண்ணி அடிப்பேன் எப்போ சொன்னேன்?"

அவள், "பார்ட்டிஸ் போய் அப்பரம் என்ன பண்ணுவாங்க? பாத்திரம் கழுவுவாங்களா?"

குபீர்னு சிரித்துவிட்டேன்.

"that's not called தண்ணி அடிக்குறது. social drinkers."

"ஏய் வீட்டுல இது பெரிய விஷயமா நினைப்பாங்க. என்னைய பொருத்தவரைக்கும் அதுல ஒன்னும் தப்பில்ல. நானே நிறைய தடவ drink பண்ணியிருக்கேன்." என்று சிரித்து கொண்டே சொன்னாள்.

"ஆஹா! இது காபி மேட்டரவிட மோசமா இருக்கே." என்றேன்.

"ஏன்? நீங்க அடிக்கலாம். நாங்க அடிக்க கூடாதா? it was just vodka mixed with coke. not at all strong and i didn't go wild drinking it!" புருவங்களை உயர்த்தி சொன்னாள்.

அவளை அவள் வீட்டில் விட சென்றேன். கேட் அருகே அவள் அப்பா நின்று கொண்டிருந்தார்.

அவர், "வாங்க மாப்பிள்ள. வீட்டுக்குள்ள வந்துட்டு போங்க." என்றார். நானும் அஞ்சலியும் முழித்தோம்.

அவர் மாப்பிள்ள என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் வந்த ஆச்சிரியம் அது. மரியாதைக்காக வீட்டிற்குள் நுழைந்தேன். உள்ளே சென்று பார்த்தால், ஒரு பட்டாளமே உட்கார்ந்து இருக்கிறது. அதில் என் அம்மா அப்பா இருந்தனர். என்ன நடக்கிறது என்று எனக்கும் அஞ்சலிக்கும் ஒன்றும் புரியவில்லை.

அம்மா, "சாரி டா அஜய். உனக்கு தெரியமா... இன்னிக்கு உன் நிச்சயதார்த்தம்!"

என்னால் அம்மா சொல்வதை நம்ப முடியவில்லை. அஞ்சலி அவள் அப்பாவிடம், "என்ன பா இது?"

அவள் அப்பா, " actually, நாங்க ஏற்கனவே பேசி வச்சு இருந்தோம். ரெண்டு குடும்பத்துக்கே இந்த சம்மந்தம் பிடிச்சு இருந்தது. அதுனால தான் இந்த ஏற்பாடு. am sure u like ajay. we all like him!" என்று சந்தோஷத்தில் சிரித்தார். அவர் கடைசி பல் கூட தெரிந்தது.

அஞ்சலிக்கு கோபம். எனக்கு அதற்கு மேல். இப்படி குடும்பமே சேர்ந்து விளையாடிவிட்டனர் எங்களது வாழ்க்கையில். கீழே ஒரே பாட்டும் கூத்தும் நடக்க, நானும் அஞ்சலியும் மொட்டை மாடியில். தேர்வில் ஒரு மார்க்கில் failஆன மாணவன் போல் நின்றோம்.

"i hate it!! i hate this!! i hate my family!"கோபம் பொங்கியது அஞ்சலிக்கு.

அவள் கோபம் அழகாய் இருந்தது. அவளை ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை பார்த்தேன்.

"உனக்கு பிடிச்ச மாதிரி தானே இருக்கா? straightforward, great sense of humour." என்று மனசாட்சி என்னிடம் சொல்ல, நான் அதற்கு தலையாட்டினேன். அதுவரை இருந்த கோபம் கொஞ்சம் தணிந்தது.

"பரவாயில்ல அஞ்சலி... என்ன பண்றது?" என்றேன் நான்.

"ஹாலோ, என்ன நீயும் கட்சி மாறீட்டீயா? என்னமோ no way to marriage. one way to marriage. ஆவூனு சொன்னே அப்போ...." அவள் கத்தினாள்.

"ஏய் கூல் கூல்... we shall work out something." என்றேன் நான்.

" என்ன வொர்க் அவுட்? ஜிம்லயா இருக்கோம்!" கோபத்திலும் காமெடியாய் பேசினாள். எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

"சரி plan பண்ணுவோம்!" என்றேன். அவள் தனது தோழிக்கு ஃபோன் செய்து புலம்ப ஆரம்பித்தாள். நான் அவளை ரசிக்க ஆரம்பித்தேன். நாட்கள் செல்ல செல்ல அவள் மேல் உள்ள அன்பு அதிகமானது. ஆனால், இது அவளுக்கு தெரியாது. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு plan பத்தி பேசனும் என்று ஃபோன் செய்து அவளிடம் பேசுவேன். plan தவிர்த்து மற்றவற்றை பற்றி தான் அதிக நேரம் பேசுவோம்.

ஆனால் கடைசிவரைக்கும் அவளுக்கு இதில் விருப்பமில்லை. நானும் விருப்பம் இல்லாததுபோல் நடித்தேன். ஒரு கட்டத்திற்கு பிறகு, உண்மையை சொல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அஞ்சலிக்கு ஃபோன் செய்தேன்

"ஹாலோ அஞ்சலி, இனிக்கு evening freeya? மீட் பண்ணலாமா?"

"ஏன்? ஏதாச்சு பெரிய மாஸ்ட்டர் ப்ளான் வச்சு இருக்கீயா?"

"கிட்டதட்ட அப்படி தான்!"

"oh my god! thank uuuuuu ajay. எப்படியாச்சும் என்னைய காப்பாத்திடு! உனக்கு ஒவ்வொரு தெருவுக்கும் சிலை வைக்க ஏற்பாடு பண்ணிடுறேன்." அஞ்சலி சிரித்தாள். எனக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது. எனக்கு அவளை பிடித்து இருந்தது என்று சொன்னாள் அவள் அதை அப்படி எடுத்து கொள்வாள் என்ற பயம்.


சந்தித்தோம். ஹாலோ கூட சொல்லாமல் அஞ்சலி பேசிய முதல் வார்த்தை, "என்ன ப்ளான்? என்ன ப்ளான்?" அவள் கண்களில் ஒரு படபடப்பு தெரிந்தது.

(பகுதி 3)

Mar 19, 2010

விண்ணை தாண்டி வந்தாளே- 1

தொலைக்காட்சியில் கார்ட்டூன் ஓடி கொண்டிருந்தது. மணி இரவு 11 ஆகிவிட்டது. சோபாவிலேயே நிஷாவும் நிவேதிதாவும் தூங்கிவிட்டனர். அவர்களை தூக்கி கொண்டு அவர்களது அறையில் படுக்க வைத்தேன்.

இருவரும் என் 3 வயது இரட்டை தேவதைகள்.

நிஷாவுக்கு பிங் கலர் போர்வை, நிவேதிதாவிற்கு ஊதா கலர் போர்வை- இருவருக்கும் பிடித்த நிறங்கள். அந்த கலர் போர்வை இல்லை என்றால் இருவருமே அழ ஆரம்பித்துவிடுவார்கள். ரொம்ப சுட்டி!

போர்வையை சரி செய்துவிட்டு அவர்களை ஒரு முறை பார்த்தேன். ஜன்னல் வழியே வந்த நிலா வெளிச்சத்தில் இருவரும் தூங்கும் அழகை ரசிக்க இரு கண்கள் போதவில்லை. அப்படியே அவங்க அம்மா மாதிரி, அவ்வளவு அழகு!

அறை வழியே எட்டி பார்த்தேன் தேவதைகளின் அம்மா ரொம்ப மும்முரமாக லெப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள். ஹாலில் இருக்கும் மேசையில் அவளது ஆபிஸ் fileகள் பரப்பி இருந்தன. ஒரு வாரத்தில் முக்கியமான ரிப்போர்ட் ஒன்னு செய்து முடிக்க வேண்டுமாம். இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்தாள். இரண்டு வாரமா ரொம்ப பிஸி, தேவதைகளின் அம்மா!

நான் அவள் அருகே சென்று உட்கார்ந்தேன்.

அவள் முகம் ரொம்ப வாடி போய் இருந்தது. உடனே ஒரு கப் சூடா காபி செய்து அவளிடம் கொடுத்தேன். காபியை பார்த்தவுடனே அவளது முகம் மலர்ந்தது.

அவளுக்கு காபி என்றால் உயிர்.

"thanks so much pa" என்னை பார்த்து புன்னகையித்தாள். மறு வினாடி பார்வை லெப்டாப்பிற்கு சென்றது.

அவள் புன்னகையை ஒரு வினாடிக்கு மேல் ரசிக்க முடியவில்லையே. லெப்டாப் மீது பொறாமை பொங்கியது எனக்கு.

காபி அருந்தியபடி, " ம்ம்... coffee is so addictive!"

நான், "yes, just like love."

என்னை பார்த்து முழித்தாள்.

புன்னகையித்தாள்.

கொஞ்சம் சிரித்தாள்.

"என்ன பா, இன்னும் தூங்கலையா?"

"ம்ஹும்... தூக்கம் வரல." என்றேன் நான். அவள் வேலையை அவள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள். என் வேலையை நான் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன் - அவள் அழகை ரசிப்பது என் வேலை.

ஜன்னல் வழியே வீசிய காற்று அவ்வபோது அவள் கூந்தலை கலைத்தது. மேசையில் இருந்த band ஒன்றை எடுத்து அவள் முடியை கட்டினேன். கட்டியபிறகு, மறுபடியும் என் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். புன்னகையித்தபடி அவள்,

"ஐயாவுக்கு என்னென்னமோ செய்ய தோணுது... ஆனா ஒன்னும் செய்ய முடியல... "

சிரித்து கொண்டே நான், " அப்படிலாம் ஒன்னுமில்ல. உன்கிட்ட நல்லா பேசியே 2 வாரம் ஆச்சு."

அவள், "ஹேய் சாரி டா. கொஞ்சம் பிஸியா போயிட்டேன். இந்த ரிப்போர்ட் முடிக்கனும். அப்பரம் ஒரு presentation. அதுக்கு அப்பரம் i'll be free. ok?"

நான், "then, you'll be all mine."

வெட்கப்படுவதை மறைக்க, " ஏய் நிஷாவும் நிவேதிதாவும் தூங்கிட்டாங்களா?" என்றாள். அவள் வெட்கப்படுவதை அவளது கண்கள் காட்டி கொடுத்துவிட்டன.

"ம்ம்ம்...." நான் அவளது கண்களையே பார்த்து கொண்டிருந்தேன். இரவு மணி 12 மேல் ஆகியது. அதிக நேரம் வேலை செய்து கொண்டிருந்ததால் அவளுக்கு கழுத்து சற்று வலிக்க, கழுத்தில் கை வைத்து தேய்த்தாள்.

என்னை அறியாமலேயே எனது கைகள் அவளது கையை விலக்கியது என்றால் அது பொய். தெரிந்தே தான் செய்தேன். அவள் கழுத்தில் இதழ் பதித்தேன். சற்றும் எதிர்பாராத அவள்,

"ஓய்!!" என்று அதட்டினாள்.

"hello my dear husband, i think you better go to bed right now." பிள்ளைகளை கண்டிப்பதுபோல் கண்டித்தாலும் அவளின் புன்னகை இன்னும் மறையவில்லை. அவளது விரலில் மின்னியது நான் அவளுக்கு முதன் முதலாய் கொடுத்த பரிசு- மோதிரம். ஐந்து வருடங்களுக்கு முன்பு...

***

"அஜய் சொல்றத கேளு. அவள ஒரு தடவ பாத்துட்டு வா. பிடிக்கலன்னு சொன்னா... விட்டுடுலாம். போகாம இருந்தா நல்லா இருக்காது." அம்மா எனக்கு பொண்ணு பார்க்கும் படலத்தை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.

"அப்பா, could you please tell amma that I'm not interested in any of these stuff. நான் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கேனு ப்ளீஸ்...." கெஞ்சினேன் நான். இந்த பொண்ணு பார்க்கும் சீசன் ஆரம்பித்து 6 மாதங்கள் ஆச்சு. பல பெண்களை பார்த்தாச்சு. ஒருவரும் என்னை impress பண்ணவில்லை.

அப்பா, " ஹாஹா... உங்க அம்மா முன் வச்ச கால பின் வைக்க மாட்டா! நீ வேணும்னா u-turn பண்ணிகிட்டு escape ஆயிடு!"

அம்மா அப்பாவை பார்த்து முறைத்தார். மீண்டும் அம்மா, " ram, can you please don't brainwash him! அவன்கிட்ட நல்லதா எடுத்து சொல்லுங்க..."

அப்பாவின் கிண்டல் தொடர்ந்தது, " பெத்தவங்க permissionனோட dating மாதிரி தான் இது. enjoy பண்ணாம..நீ என்னடான்னா.... என்னைய விட்டா நான் கிளம்பி போயிடுவேன் தெரியுமா!

அம்மா சிரித்துகொண்டே, "stop your lameness, ram!"

அம்மா என் பக்கம் திரும்பி, "ஒகே. this is final. இந்த பொண்ண பிடிக்கலைனா, அப்பரம் நாங்க உன்னைய disturb பண்ண மாட்டோம்."

அப்பா உடனே, " dealaa no dealaa?"

சிரித்தபடியே நான், "deal."

அவள் எனக்கு ஒரு இமெயில் அனுப்பியிருப்பாள் என்று அம்மா சொன்னார். ஆபிஸ் போய் தான் பார்க்க வேண்டும்....

(பகுதி 2)

Mar 17, 2010

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-11





இரண்டு பேரும் வேற வேற ஆளுனு நினைக்காதீங்க. இரண்டும் ஒரே ஆளு தான்! குண்டாக இருந்தபோது, இரண்டாவது படம் உடம்பு இளைத்தபிறகு எடுத்த படம்.
biggest loser asia என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று இரண்டாவது நிலையில் வந்தவர். philipphines நாட்டை சேர்ந்த, கார்லோ(அவர் பெயர்). இவர் 14 வருடமாக சமையல் துறையில் வேலை பார்க்கிறார்.

சைட் அடிக்க பல காரணங்கள் இருந்தாலும். எனக்கு பிடித்தது அவரின் விடாமுயற்சியும், இது போட்டி என்றாலும் சக போட்டியாளர்களுக்கு பெரும் உதவி செய்த மனப்பான்மை தான்!

அப்பரம் சொல்லவே வேண்டாம்....... he's extremely extremely looking hot!! :)
ஆக இவரை தான் தற்போது.... அட போங்க எனக்கு ரெம்ம்ம்ப வெட்கமா இருக்கு :)

மற்ற 'சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்' பட்டியல்.

Mar 11, 2010

வேலை என்பது ஒரு கெட்ட வார்த்தை

வேலை என்பது ஒரு கெட்ட வார்த்தை! அத கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் புரிஞ்சுகிட்டேன். 10 வாரம் work attachmentல இருக்கேன். கண்ணு முழி பிதுங்குது டா சாமி! தினமும் 12 மணி நேரமாவது வேலை இடத்தில். இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வந்தபிறகு, குளிச்சுட்டு, சாப்பிட்டு 8 மணிக்கெல்லாம் தூக்கம். அதிகாலை 1 மணிக்கு எழுந்தரிச்சு, முடிக்க வேண்டிய வேலையை முடிப்பேன். அந்த plan இந்த plan அப்படினு 1008 plan இருக்கு! அத செய்யனும், அப்பரம் மீட்டிங் preparation. அதற்குள் காலை 6 மணி ஆகிவிடும். குளித்துவிட்டு, வேலைக்கு கிளம்ப வேண்டியது.

இது தான் கடந்த 3 வாரமா நான் பண்ணிகிட்டு இருக்கும் நாய் பிழப்பு! முடியல என்பது ரொம்ப சின்ன வார்த்தை. அதையும் தாண்டி ஒரு வார்த்தை இருந்தால் சொல்லுங்கப்பா!!

வேலை என்பதை கண்டுபிடித்தவனை நான் தீவிரமா கண்டுபிடித்து கொண்டிருக்கிறேன்.

கஷ்டப்பட்டு செய்யாதீங்க, இஷ்டப்பட்டு வேலையை செய்யுங்க அப்படினு மட்டும் யாரும் சொல்லாதீங்க!! (நான் காண்டா மிருகமா ஆயிடுவேன்)

ஆனால் ஒரு சின்ன சந்தோஷம்- அடுத்த வாரம் லீவு! ஆண்டவன் ஒரு கதவை முடினால், ஒரு சின்ன ஜன்னலையாவது திறந்து வைப்பான்! வேலை கஷ்டமா இருந்தாலும், இந்த ஒரு வாரம் லீவு வரபிரசாதம்!

Mar 7, 2010

என் முத்த மெசேஜ்களை

என் முத்த மெசேஜ்களை
உன் உதட்டு இன்பாக்ஸில்
போட்டுவிட்டேன்.
என் இன்பாக்ஸ்
காலியாக தான் இருக்கு.
உன் அவுட்பாக்ஸ்
ஏன் சும்மா இருக்கு?

உன் மௌனமே
ஆயிரம் சொல்லும்போது
உன் உதட்டிலிருந்து
உதிரும் வார்த்தைகள்
தேவையில்லையடி எனக்கு!

நாம் இருவரும் பேசிகொண்டிருக்கையில்
திடீரென்று முத்தம் வைக்கிறாய்
கன்னத்தில்
எப்படிடா உன்னால் மட்டும்
எதுவுமே நடக்காததுபோல்
மறுபடியும் பேச்சை தொடங்கமுடிகிறது?,
கள்ளசிரிப்பழகா!

Feb 28, 2010

நம்மள போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும்.என்ன அடிச்சது அந்தக் காதல்

முதல் தடவ 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் trailerயை பார்த்தபோது, இந்த வரிகள்(போஸ்ட்டின் தலைப்பு) என்னை ரொம்ப கவர்ந்திடுச்சு. படம் கொஞ்சம் கொஞ்சம் வாரணம் ஆயிரம் சாயலில் இருக்கே என்று நினைத்து இது ஒன்னும் தேராதுனு நினைச்சேன்.

படத்த நேத்திக்கு பார்த்தேன்.

"என்னை போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும்."

உண்மையில் என்னை தாக்கியது, என்னை தலைகீழாய் திருப்பியது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை புன்னகையித்தபடியே இருந்தேன். படம், அவ்வளவு அழகு! கௌதம், கௌதம், கௌதம்..... எனக்கு என்ன சொல்றதுனு தெரியல்ல. காதல் சொட்ட சொட்ட ஒரு படத்த கொடுத்து இருக்கீங்க- உங்க மனைவி ரொம்ப லக்கி!!:)

கௌதம் அவர்களின் சொந்த வாழ்க்கை பயணம் தான் இப்படம். அவர் கடந்த காலத்தை பற்றி நிறைய நேர்முக பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆக, அவரால் காட்சிகளை அவ்வளவு இயல்பாய் திரைக்கு கொண்டு வந்து உள்ளார்.

இசை, பாடல்கள், நடிப்பு, இயல்பான வசனங்கள்- அனைத்தும் படத்தின் வெற்றிக்கு வழி வகுத்து உள்ளன.

திரிஷாவுக்கு சிம்புக்கும் சண்டை ஏற்பட, மறுநாள் திரிஷா எதுவுமே நடக்காததுபோல் போவார் ஒரு புன்னகையுடன், அப்போ ஒரு வசனம் வரும் (narration)

"அவ சிரிப்பு கவிதையா இருந்துச்சு. எனக்கு கோபமா வந்துச்சு"

கௌதம்...எப்படிய்யா இப்படிலாம்... அட போங்க! எனக்கு பாராட்ட இன்னொரு புது மொழி வேண்டும்!

விண்ணைத் தாண்டி வருவாயா- என்னை தாண்டி போனுச்சு, என்னைய தாக்கிட்டு போச்சு!

Feb 25, 2010

ஜஸ்ட் சும்மா (25/2/10)

10 வாரம் work attachment இருப்பதால், தலைக்கு மேல வேலை வந்தாச்சு!
---------------------------------------------------------------------------
விண்ணை தாண்டி வருவாயா, கார்த்திக் காலிங் கார்த்திக் (ஹிந்தி) ஆகிய படங்கள் இந்த வார இறுதியில் வெளியாகவுள்ளன. விண்ணை தாண்டி வருவாயா பார்க்க போலாம்னு இருக்கேன்:)
--------------------------------------------------------------------------

நேற்று சச்சின் இரட்டை சதம் அடித்து சாதித்து காட்டிவிட்டார். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமாக இருந்துச்சு. இங்கு சிங்கையில் கிரிக்கெட் அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும், சச்சின் யார் என்று பலருக்கு தெரியும். சச்சின் ஒரு இந்தியன். நானும் ஒரு இந்தியன். அந்த வகையில் தனிப்பட்ட வகையில் இன்னும் அதிக சந்தோஷம். எனது இமெயில் ஐடியை கவனித்தால் தெரியும், அதில் 1973 என்று இருக்கும். காரணம்- சச்சின் பிறந்த வருடம் அது. அந்த அளவுக்கு சச்சின் மீது ஒரு பெரிய மதிப்பு, மரியாதை. ரொம்ப பிடிக்கும்!! இந்தியா கிரிக்கெட்டில் தோல்வி அடையும்போதும், சச்சின் சிலநேரங்களில் டக் அவுட் ஆகும்போது, கிண்டல் செய்யும் பலரும் இப்போது கொண்டாடுகின்றனர் அவரது சாதனையை பார்த்து. எது வந்தாலும், யாரு என்ன சொன்னாலும், தான் ஒரு கிங் என்பதை நிருபித்து காட்டிவிட்டார்! சச்சின், hats off man!!
------------------------------------------------------------------------------
ஒரு கதை எழுதும்னு ஆசையா இருக்கு. ஆனா, நேரம் கிட்டவில்லை.
-----------------------------------------------------------------------------

ஒரு ஆங்கில ப்ளாக் ஆரம்பித்துவுள்ளேன். www.smashingbangles.blogspot.com

நேரம் இருக்கும்போது எட்டி பாருங்க!

Feb 20, 2010

4 வருஷம் படிப்பு முடிஞ்சாச்சு!

4 வருஷம் காலேஜ் படிப்பு முடிஞ்சாச்சு. வர திங்கட்கிழமை 10 வாரம் work attachment. அதுக்கு அப்பரம் graduation ceremony. அப்பரம், வேலை! ஓ மை காட்!!! என்னால நம்ப முடியல. இன்னும் எனக்குள் இருக்கும் சின்ன பிள்ளை விளையாடி கொண்டிருக்கிறது சந்தோஷமாக.

சொந்த காலில் நிற்க வேண்டும் என்பது எல்லோரின் ஆசை தான். இருந்தாலும், காலம் இவ்வளவு வேகமா சுற்றுகிறேது என்று நினைக்கும்போது கொஞ்ச பயமா இருக்கு. காலேஜ் படிக்கும்போது அந்த வேலை இருக்கு, இந்த பரிட்சை இருக்கு. ரொம்ப stressஆ இருக்கு- என்று நிறைய புலம்பி இருக்கேன்!!! இப்போ, மிஸ் பண்றேன் நண்பர்களை, காலேஜ் கேண்டினை, கார்பார்க்கை! காலேஜ் கடைசி நாள் வெளியே சிரித்து கொண்டிருந்தேன். ஆனால், உள்ளுக்குள் அழுகையோ அழுகை.

ஒவ்வொரு நண்பரின் பேச்சு/செயல்/ஜோக்ஸ் எல்லாமே மிஸ் பண்ண போறேன். :(((

Feb 15, 2010

ஜஸ்ட் சும்மா (16/2/10)

கோவா படம் பார்த்தாச்சு. வெங்கட் பிரபுவின் முதல் படம் தான் மாஸ்! கதை இல்லாமல் எத்தனை நாளைக்கு தான் ஓட்ட முடியும்! இருந்தாலும், கோவா படத்தை அதன் நகைச்சுவையாக கண்டிப்பா பார்க்கலாம். அதுவும் ஜெய் இங்கிலீஷ் பேசும் விதம், படம் முழுக்க நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். படத்தை பார்த்து வெளியே வந்ததும், தோழிகள் அனைவரும் ஒரு சபதம் எடுத்து கொண்டோம்.

"நம்ம கண்டிப்பா இந்த வருஷம் langakwi போக வேண்டும்."

படம் கோவாவில் கொஞ்சம் தான் எடுத்தார்கள். மற்றபடி லங்காவியில் தான் முக்கால்வாசி படத்தை எடுத்து இருக்கிறார்கள். சூதாட்ட மையத்தி்ல் என்ன தான் இருக்குனு பார்க்க ஆசையா இருக்கு!:)
----------------------------------------------------------------------------------

'my name is khan' படத்தை இரண்டு தடவ பார்த்தேன். அவ்வளவு பிடிச்சு இருந்துச்சானு கேட்காதீங்க. முதல் நாள் ஷோவை ஒரு குரூப் தோழிகள்/தோழர்களுடன் பார்த்தேன். அப்பவே படம் எனக்கு போர் அடிச்சு போச்சு. மறுநாளே, இன்னொரு குரூப் தோழிகளுடன் பார்க்க வேண்டிய சூழ்நிலை. என்னால முடியல! கரண் ஜோகரை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். அவருடைய பலம்- குடும்பம், டான்ஸ், பாட்டு! மற்றபடி சீரியஸான விஷயங்களை பற்றி அவர் இனிமேல் எடுக்க வேண்டாம் என்பதை அவரிடம் யாரேனும் சொல்லுங்களேன்.

படம் ரொம்பவே மெதுவாக நகர்கிறது. fanaa, new york, kurbaan என்று தீவிரவாதம் பற்றி பல படங்கள் வெளிவந்துவிட்டன. ஆகவே ரொம்பவே சலிப்பு தட்டிவிட்டது! ஷாருக்கானிடம் ஒரு அசாதாரனமான ஒரு தைரியம் இருக்கு. இப்படிப்பட்ட ஒரு ரோலில் நடிக்க நிறைய துணிச்சல் தேவை. அதற்கு அவரை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், பல இடங்களில் அவரால் இயல்பாய் நடிக்கவரவில்லை. asperger's syndrome கொண்ட ஒரு ஆளாக தெரியவில்லை. ஷாருக் தெரிகிறார் தவிர அந்த குறைபாடு கொண்ட மனிதர் தென்படவில்லை.

பாடல்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. ஓபாமா போன்ற தலைவர்கள் போல் இருக்கும் ஒருவரை காட்டி, செம்ம காமெடி செய்துவிட்டார் கரண்.

வசனங்கள் தான் திரைக்கதைக்கு பலம் சேர்த்துவுள்ளது.
-----------------------------------------------------------------------------------

இரண்டு நாட்களாகவே மனதில் ஒரு சிந்தனை ஓடிகொண்டிருக்கிறது- i want to publish a novel. and that too in english.
அதை எப்படி ஆரம்பிப்பது? என்ன செய்வது என்று புரியவில்லை?
-----------------------------------------------------------------------------------

அனைவருக்கும் அன்பர் தின வாழ்த்துகள்!!
-----------------------------------------------------------------------------------

இப்ப வர வர என்னுடைய பதிவின் அளவு குறைந்து கொண்டே வருகிறது! ஹிஹிஹி... அப்ப நாங்க ரொம்ப பிஸினு அர்த்தம்:)))

Feb 11, 2010

மன்னிப்பாயா

இது அமுதாவிற்கு பிடிச்ச கடற்கரை. அதிகம் கூட்டம் இருக்காது. சுற்றுலா பயணிகள் சிலர் பேர் வருவார்கள். மற்றபடி பெரிய அளவில் கூட்டம் இல்லாத ஒரு அழகான இடம். அழகான பெண்களுக்கு அழகான இடம் பிடிப்பது ஒன்றும் அதிசயமில்லை.

ரோஷன் மணலில் விளையாடி கொண்டிருந்தான். நானும் அமுதாவும் ஒரு மரத்தடி நிழலில் உட்கார்ந்து இருந்தோம். அவள் என் தோளில் சாய்ந்து கொண்டாள். கொஞ்சம் காலமாகவே நான் அதிகம் பேசுவதை குறைத்து கொண்டேன். யார் மேலையும் கோபம் இல்லை. கோபம் எல்லாம் எனக்கு என் மேலே தான்.

மடியில் வைத்திருந்த என் கையை அவள் பிடித்தாள். அவள் கைவிரல்களும் எனதும் சங்கமம் ஆயின. சாய்ந்தபடியே அவள், " ராம், ஏன் ரொம்ப அமைதியா இருக்க?"

நான், "ம்ம்..ஒன்னுமில்லமா.."

அவளது விரல்கள் என் விரல்களோடு விளையாடி கொண்டிருந்தன. நான் அதை கவனித்தேன்.ரசித்தேன். என் பார்வை மட்டும் மேகம்,கடல், அலைகள், மணல், ரோஷன் என மாறி மாறி சென்றன. கொஞ்ச நேரம் கழித்து அமுதா,

"do you want something?"

நான், "இல்லமா..i am fine. do you want anything?"

சாய்ந்து கொண்டிருந்த அமுதா எழுந்தாள். என் முகத்தை திருப்பினாள் அவள் முகத்திற்கு நேராக.

"yes" என்றாள்.

"what மா?" சாந்தமாய் கேட்டேன்.

"kiss me" என்றாள் உதட்டோரம் ஒரு சின்ன சினுங்கலுடன்.

"what!!!" இம்முறை what என்பது ஆச்சிரியக்குரியுடன் போனது. அவள் கண்களை பார்த்தேன். ஆண்களை வெட்கப்பட வைக்கும் சக்தி/திறமை பெண்களின் கண்களுக்கு உண்டு.

"வேணுமா? வேண்டாமா?" கேள்விபதில் புதிர் போட்டி நடத்தினாள் என் கூச்சத்துடன்.

"அமு... this is a public place மா." சுற்றும்முற்றும் பார்த்தேன்.

அவளது ஆள்காட்டி விரல் என் உதடுகள் மேல் படர்ந்தபடி, "this is not a public place. this belongs only to me." என பதில் அளித்தாள். வெட்கம் கலந்த புன்னகையுடன் நான் அவளது முகத்தை பார்த்தேன்.

தூரத்தில் ரோஷன் மணலுடன் விளையாடிய படி இருந்தான். எங்களை கவனிக்கவில்லை. அமுதாவின் உதடுகளுக்கும் எனது உதடுகளுக்கும் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. சிறிது நேரம் உதடுகள் டென்னிஸ் ஆட்டம் ஆடின.

நினைவுகள் பின்னோக்கி சென்றன.நான் செய்த துரோகம், தவறு, முட்டாள்தனம் நினைவில் மிதந்தன. நிச்சயக்கப்பட்ட திருமணம். திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களில் வேலையிலிருந்து நீக்கம். மன உளைச்சல். போதைக்கு அடிமை. போதை பொருள் விற்றல். குடும்பத்தை சரியாக கவனிக்காமல் போக, பல பண பிரச்சனையிலும், ரவுடி கும்பலிலும் மாட்டிகொண்டேன். அமுதா கர்பமாக இருக்க, நான் சிறையில் இருந்தேன். ஏமாற்றம், துரோகம், என்னையே நம்பி வந்தவளை ஏமாற்றிவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி என்னை கொஞ்சம் கொஞ்சமாய் உலுகியது.

சிறையில் கற்றுகொண்டவை ஏராளம். தியானம், மனதை கட்டுப்பாடுடன் வைத்து கொள்ளுதல் என்று என்னை புதிதாய் பிறக்க செய்தது என் 5 வருட சிறை வாழ்க்கை. வெளியே வந்ததும் என்னை ஏற்றுபாளா என்று தெரியவில்லை. ஒற்றை பெற்றோராக ரோஷனை வளர்த்த விதம், தன் நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக வர அவளின் உழைப்பு என அனைத்தையும் கண்டு வியந்தேன்.

"அப்பா, am so happy to see you back." என்று ரோஷன் என்னை பார்த்து முதன் முதலாக சொன்ன போது யாரோ என்னை சாட்டையால் அடித்ததுபோல் உணர்ந்தேன். முதல் குழந்தை. முதல் பிரசவம். அப்போது அமுதா பக்கத்தில் நான் இல்லை என்பது என்னை மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. நான் வெளியூர் போய் வந்ததாக ரோஷனிடம் சொல்லிவைத்திருந்தாள் அமுதா.

பழையதை பற்றி எதுவும் கிண்டவில்லை. நான் என்னமோ பக்கத்து தெருவிற்கு போயிட்டு வந்ததுபோல் ரொம்ப சாதாரணமாக பழகினாள் என்னிடம். நான் வெளியே வந்த முதல் நாள், அன்று இரவு அமுதா என்னிடம்,

"ராம், நீ எத பத்தியும் நினைக்காத. கெட்ட கனவு நினைச்சு எல்லாத்தையும் மறுந்துடு.நானும் மறுந்துடுறேன். மறந்துட்டேன். புதுசா ஆரம்பிப்போம்." நம்பிக்கை தந்தாள்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அழுகை வந்தது. ஏன்? அதுவும் புரியவில்லை. அதற்கு பிறகு, முடிவு எடுத்தேன். வாழ்க்கை இனி அமுதாவிற்கும் ரோஷனுக்கும் மட்டுமே சொந்தம். அவர்கள் தான் என் உலகம். ஒரு வேலையில் சேர முயற்சி செய்தேன். சிறை கைதிக்கு என்ன தருவார்கள்? இது வரைக்கும் 124 வேலை இடங்களில் கேட்டு பார்த்துவிட்டேன். ஒன்றும் கைகூடவில்லை. அமுதாவின் கம்பெனியில் வேலை பார்க்க கூப்பிட்டாள் அமுதா. நான் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்னால் அவளுக்கு கஷ்டம் எதுவும் வேண்டாமே.

நான் இனி ஒரு வேஸ்ட் என்று அமுதாவின் அப்பா அவளிடம் பலமுறை சொல்லியிருக்கிறார், அமுதாவிற்கும் எனக்கும் விவாகரம் செய்ய முயற்சி செய்தியிருக்கிறார். ஆனால், ஒருபோதும் என்னை விட்டுகொடுத்தது இல்லை அமுதா. இதனாலேயே அடிக்கடி சண்டை அவர்கள் இருவருக்கும். அமுதாவின் இத்தனை அன்பை பெற நான் என்ன செய்து இருக்கிறேன்? என்ன செய்ய போகிறேன்?

விளையாட்டு திடலில் இருந்து விலக மனமில்லாத குழந்தைபோல் மெதுவாய் அவளின் இதழ்கள் என் இதழ்களிலிருந்து பிரிந்து சென்றன. எச்சில் முழுங்கினேன் நான். எங்களுக்கு பின்னால்,அவ்வழியே சென்ற வயதான வெள்ளைக்கார தம்பதியினர், "that was a good one!" சத்தம்போட்டு கூறினர் எங்களை பார்த்து. பின்னாடி திரும்பி பதிலுக்கு அமுதா,

"thanks dude! have a great day with your lady too!" சிரித்தாள்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வெட்கம் என் உறுப்புகளில் ஊடுருவியது. மறுபடியும் அமுதா என்னை பார்த்தாள். நான் அவளது கண்களை பார்ப்பதை தவிர்த்தேன். தவிர்ப்பதுபோல் நடித்தேன். சற்று முன் நடந்ததை எண்ணி புன்னகையித்தேன். கவனித்துவிட்டாள் அமுதா. அவளது வலது கையை என் கன்னத்தில் வைத்து,

"நீ எப்போதுமே இப்படியே சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருக்கனும். அடிக்கடி ஒரு முகத்துல ஒரு சோகம் தெரியுது டா. அப்படி உன்னய பாக்கும்போது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு டா. எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு...ம்ம்..சரியா.." கன்னத்தை தடவி விட்டாள்.

அச்சமயம், ரோஷன் தூரத்தில் இருந்து சத்தம்போட்டு கூப்பிட்டான், "அம்மா, இங்க வாங்களேன். i need your help to build this castle."

அமுதா, "i'll back sweety." என் காது அருகே மெதுவாய் சொல்லிவிட்டு சென்றாள்.

இப்படி அளவுக்கு அதிகமான காதலை என் மேல் கொட்ட நான் தகுதியானவனா? எதையும் எதிர்பார்க்காமல் வருவதற்கு பெயரோ காதல்?

அமுதாவும் ரோஷானும் மணலுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருப்பதை கண்கொட்டாமல் பார்த்தேன்.

ரோஷன், வளரும் குழந்தை.
அமுதா, வளர்ந்த குழந்தை.

(happy valentine's day wishes to all)

Feb 1, 2010

ஜஸ்ட் சும்மா (1/2/10)

இந்த வருஷத்தின் முதல் மாதம் முடிவடைந்து விட்டது. அதுக்குள்ள ஒரு மாசம் ஓடிபோச்சான்னு நினைக்க தோணுது. இந்த ஒரு மாசத்துல நீ என்ன கிழிச்சேன்னு கேட்காதீங்க. தினம் தேதியகூட கிழிச்சபாடில்லை.
-------------------------------------------------------------------------------------------------
கோவா படம் இன்னும் சிங்கையில் ரிலீஸ் ஆகல. சென்ற வாரம் ரிலீஸ் ஆயிடும்னு ரொம்ப எதிர்பார்த்தேன். இந்த வாரம் கண்டிப்பா வெளிவர வேண்டும்!!! படம் எப்படி இருந்தாலும் பார்த்தே ஆகவேண்டும். வெங்கட் பிரபுவிற்கு தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இங்கே ஆவலுடன் வேட்டிங்!!:)
-------------------------------------------------------------------------------------------------

நேற்று பார்த்திபனின் காபி வித் அனு நிகழ்ச்சியை பார்த்தேன் (சிங்கையில் ஒரு வாரம் கழித்து தான் போடுவான்). நடிகர் பார்த்திபன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் என்னை அவ்வளவாக கவரவில்லை. ஆனால், ஒரு தந்தை பார்த்திபனாக உச்சத்தில் உட்கார்ந்து இருக்கிறார். ஒரு அப்பா இப்படி தான் இருக்கவேண்டும் என்று அவர் சாதித்து காட்டியிருக்கிறார். பிள்ளைகளை பற்றி பேசும்போது அவர் கண்களில் தெரிந்த மகிழ்ச்சி, ஒரு பெருமிதம், பெருமை அப்படியே தெரிந்தது. பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எது செய்தாலும் நம் பிள்ளை நம் பிள்ளை தான், அவன்/அவள் எந்த துறையில் இருந்தாலும் அது அவனுக்கு/அவளுக்கு நல்லது என்று பார்த்திபன் போல் நினைக்கும் பெற்றோர்கள் மிகவும் குறை.

அந்த வகையில், பார்த்திபன் சார், நீங்க உண்மையாகவே ஆயிரத்தில் ஒருவன் தான் சார்!
-----------------------------------------------------------------------------------------

பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் முடிவை சில பெற்றோர்களே அனுபதி கொடுக்கிறார்கள். பெற்றோர்களுக்கு ஒருவித பயம், பாசம் என்றே சொல்லலாம். ஆனால், கையிலேயே பட்டாம்பூச்சியை வைத்து அழகு பார்ப்பதைவிட, அதை பறக்கவிட்டு அழகு பார்ப்பதே உண்மையான மகிழ்ச்சி.

நேற்று நீயா நானா நிகழ்ச்சியை கொஞ்சம் நேரம்தான் பார்த்தேன். பார்த்த பத்து நிமிடங்களில் கோபி சொன்ன கருத்து ரொம்ப பிடிச்சு இருந்தது. பேசுவதை பற்றி சொன்னார். புரட்சிகரமான பேச்சு, சமுதாயத்தை சீர்திருத்தம் செய்யும் பேச்சு பற்றி சொன்னார். பெரிய அளவிளான பேச்சு மட்டும் அல்ல, வீட்டிலேயோ, பிள்ளைகளிடமோ, பக்கத்துவீட்டுக்காரிடமோ பேச வேண்டும். அதற்கு ஒருவர், updated speakerராக இருக்க வேண்டும்.

பலவற்றை படிக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்க வேண்டும். நாட்டு நடப்பு பற்றி அறிந்து இருக்க வேண்டும். இசை, சினிமா, விளையாட்டு ஆகியவற்றை பற்றி கொஞ்சமாவது தெரிந்து இருக்கவேண்டும்.

கோபி சொன்ன கருத்து, "பிள்ளையிடம் போய் பேச வேண்டும். டோனி கேப்டனா இருக்கறது நல்லதா, சச்சின் விளையாட்டுலேந்து ஓய்வு எடுக்கனுமா? 20-20 கிரிக்கெட்ட பத்தி நீ என்ன நினைக்குற? இப்படி பேச வேணும். ஆனா அத எல்லாம் விட்டுபுட்டு கிரிக்கெட் பார்த்து நீ என்ன செய்ய போற? என்று கேட்க கூடாது." என்றார்.

எனக்கு இந்த கருத்து தான் ரொம்ப பிடிச்சு இருந்தது. நீ இத ஏன் செய்யுற? என்ற கேள்வி, ஒரு உறவு தொடராம இருப்பதற்கு காரணமாய் அமைந்துவிடுகிறது. ஏன் என்றால் அந்த கேள்வி கேட்ட பிறகு, பதில் பேச தோணாது. பிடிக்காது. பேச்சு ரொம்ப முக்கியம். தொழில் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசாமல், பலவற்றை பேச வேண்டும். அதை பெற்றோர்களும் பிள்ளைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------

நேற்று இந்த ஆங்கில பாடலை கேட்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த பாடலில் பிடித்த வரிகள்

"They say time is a healer
It's more like a concealer for a scar
Cause it never really leaves us"


அருமை அருமை அருமை!! பாடிய விதமும் அதைவிட அருமை. இந்த வரிகளை பார்த்த பிறகு, எனக்கும் பொங்கியது வார்த்தைகள்.


Words hurt
Pricks your heart
cheers fallen apart

i'm miles away from the world
smiles are gone ice cold
a broken mirror, a torn kite,a crumbled paper
If you had feel like either one,
you had lived a life.
If you're feeling like all three,
you're living my life!

எப்படிங்க இருக்கு??
----------------------------------------------------------------------------------------------

Jan 24, 2010

ஆயிரத்தில் ஆயா

காமெடி போஸ்ட் எழுதுவதற்கு சரக்கு(அட தப்பா நினைக்காதீங்க...) எதுவுமே இல்லன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்போது தான் செல்வாராகவன், கார்த்தி, ரீமா ஞாபகம் வந்துச்சு. உடனே கிளம்பி போனேன்...அப்படின்னு நினைக்காதீங்க! அவங்க இப்போ வேலவெட்டி இல்லாம தான் இருக்காங்க...ஆக மெதுவாக தான் கிளம்பி போனேன்.

செல்வா வீட்டு ஹாலில் நிறைய வரலாறு குறிப்பு புத்தகங்கள், ஆங்கில பட டிவிடிகள் மேசையில் கிடந்தது. செல்வா, கார்த்தி, ரீமா உட்கார்ந்து இருந்தாங்க.
நான் உள்ளே நுழைந்தேன்.

நான்: வணக்கம் கார்த்தி, ஹாய் செல்வா, ஹாலோ ரீமா.
(மூவரும் சிரித்தனர். சிரிப்பதுபோல் முறைத்தனர். )

நான்: என் வலைப்பூவுக்கு ஒரு காமெடி போஸ்ட் தேவை. அதான் உங்கள பாக்க வந்தேன்.

செல்வா: எங்கள பார்த்தா எப்படி இருக்கு? (கண்ணாடியை சரிசெய்து கொண்டார்)

நான் ஒரு முறை அவரை மேலும் கீழும் பார்த்தேன்.

நான்: ஆயிரத்தில் ஒருவன் மாதிரி தெரியுறீங்க சார். (ஐஸ் வைத்தேன்...படத்தின் தலைப்பை சொன்னதும் சாந்தம் ஆனார்)

நான்: ஆமா....சார்...நீங்க ஏன் இந்த படத்துக்கு ஆயிரத்தில் ஒருவன்னு தலைப்பு வச்சீங்க? அது அர்த்தம் என்ன?

கார்த்தி: நானும் நிறைய தடவ கேட்டேன். அவர் எம் ஜி ஆர் ரசிகர்...அதான் அப்படி வச்சேன்னு சொன்னாரு.

நான்: ஓ...நான்கூட நினைச்சுட்டேன்...இந்த படம் ஆயிரத்தில் ஒருத்தனுக்கு மட்டும் தான் புரியும்னு!

கார்த்தி: ஏங்க..இப்படி எடுக்குமுடுக்கா கேட்டா நாங்க என்ன பண்றது?

நான்: சரி அடுத்த கேள்வி உங்களுக்கு கார்த்தி.... அது என்ன படத்துல ஆவூன்னா...பாத்த உடனே முடிவு பண்ணிட்டேன் உங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றீங்க. சரி ரீமாவுக்கு பதிலா ஒரு கிழவி அங்க நின்னு இருந்தா...ஏன் ரீமாவே மேக்-கப் போடாம அங்க நின்னு இருந்தா... அப்படி தான் சொல்லியிருப்பீங்களா?

கார்த்தி: இது முழுக்க முழுக்க செல்வாவோட கற்பனை! அவர் தான் இதுக்கு பதில் சொல்லனும்...

நான்: இப்படி எஸ்கேப் ஆனா எப்படி சார்?

(நான் ரீமாவை கிண்டல் பண்ணியது கொஞ்சம் நேரம் கழிச்சு தான் அவருக்கு புரிஞ்சுது...அவர் பாய்ந்தார்...)

ரீமா: hey what are you thinking of me man? u *&($&$^$##&***.

நான்: இந்தா தாயீ.... லண்டன்ல பொறந்து வாஷிங்டன்ல வாய் கொப்புளிச்ச மாதிரி இங்கிலீஷ் பேசினா...நான் ஒன்னும் பயப்புட மாட்டேன்!

ரீமா: i'll shoot you!
நான்: தீபாவளி துப்பாக்கி உங்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா? எனக்கும் தான் கிடைக்கும்.

(என் டம்மி துப்பாக்கிய தூக்கி காட்டியதும் பயந்துட்டார்)

ரீமா: ok ok cool yea...what were u asking me?

நான்: தமிழ் தமிழ்...

ரீமா: (ஆங்கிலம் கலந்த தமிழில்) இந்த படத்துல ஏண்டா நடிச்சேன்னு நினைச்சேன் ஆரம்புத்துலே... அப்பரம் விளங்கிச்சு செல்வா என்ன எதிர்பார்க்குறார்ன்னு.

நான்: படம் பார்க்க போன நாங்களும் அப்படி தான்...ஏண்டா படத்துக்கு வந்தோம்னு ஆச்சு!

கார்த்தி: ஏன் படம் பிடிக்கலையா?

நான்: அட என்ன ஒரு படம். என் வாழ்க்கையவே திருப்பி போட்ட படம்!

செல்வா: (சந்தோஷம் அடைந்தார்) அப்படியா? ஏன்?

நான்: இந்த படத்த பார்த்தே ஆகனும்னு ஒத்த கால்ல நின்னேன் முதல் நாள் முதல் ஷோவுக்கு. குடும்பத்தோட பார்க்க போனோம். அடுத்த நாள் காலையில எனக்கு டிபன் கட். மதியம் சாப்பாடு இல்ல! என்னைய கொலவெறியோட பாக்குறாங்க என் குடும்பம். இப்படி என் வாழ்க்கை திசைதிருப்பி போனதற்கு காரணம் இந்த படம் தான்!

செல்வா: உங்களுக்கு புரியலைன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது? வரலாறு புரிஞ்சா இது புரியும். (குதித்தார்)

நான்: வரலாறு மட்டும் போதுமா? இல்ல...தமிழும் தெரிஞ்சு இருக்கனுமா? ரெண்டாவது பகுதில எனக்கு தமிழ் படத்துக்கே தமிழ் subtitles தேவைப்பட்டுச்சு!

கார்த்தி: கொஞ்சம் சுத்த தமிழா போச்சு.

நான்: தமிழ் சுத்தமா இருந்து என்ன பயன்? படம் சுத்தமா இல்லையே?

கார்த்தி:(தலையை தொங்க போட்டார்)

நான்: சரி பருத்திவீரன் படத்துல ஒரு மாதிரியா நடிச்சீங்க. சரி ஏத்துகிட்டோம். அதே மாதிரி மறுபடியும் இந்த படத்துல நடிச்சு போர் அடிக்க வச்சுட்டீங்களே. இந்த சாக்லெட் பாய், அமெரிக்கா மாப்பிள்ள, பொண்ணு பின்னாடி ஓடுற பையன், காலேஜ் பசங்க ரோல்.... இந்த மாதிரி எல்லாம் நடிக்க வராதா?

கார்த்தி: அப்பா சொல்லியிருக்கார்.....

நான்: என்னென்னு? அழுக்கு ரோல தான் நடிக்கனும்னா...

கார்த்தி: அது இல்லங்க...

செல்வா: முதல அவருக்கு நல்ல கோட் சூட் போட்ட கதாபாத்திரம் தான் கொடுத்தோம்... அவரு தான் செண்டிமெண்ட் காரணத்துக்காக...அதெல்லாம் கழட்டி போட்டு கருப்பு மண்ண எடுத்து தேச்சிகிட்டாரு.

நான்: ஓ...அப்படி போகுதா கதை....செல்வா சார் உங்ககிட்ட இன்னொரு கேள்வி.. இத படத்துல பார்த்திபன் சார காமெடி பண்ண வைக்கனும்னு எப்படி தோணிச்சு?

செல்வா: யோவ்...அவர் பண்ணது ராஜா ரோல். காமெடி ரோல் கிடையாது.

நான்: ஹாஹாஹா...எது அதுவா? ஆடிகிட்டே ஒரு சீன்ல வருவாரே...அது காமெடி கிடையாதா உங்க ஊர்ல??? ஹாஹாஹா...ஐயோ ஐயோ... தியெட்டர்ல அந்த சீனுக்கு என்ன மாதிரி ஒரு சிரிப்பு வெடி வெடிச்சுது தெரியுமா? ஹாஹா...போங்க சார்...நீங்க தான் செம்ம காமெடியா பேசுறீங்க (எனக்கு சிரிப்பு தாங்க முடியல)

(ரீமாவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் தமிழில் பேசியதால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள கார்த்தியிடம் சென்றார்.)

செல்வா: அந்த காலத்துல ராஜா இப்படி தான் இருந்தாரு!!

நான்: அப்போ எல்லாம் ராஜாவும் பெரிய டான்சர்னு சொல்லுங்க...(எனக்கு பார்த்திபன் ஆடிய சீன் கண்ணு முன்னால வர...மீண்டும் சிரித்தேன்.)

செல்வா: தமிழ் சினிமாவ அடுத்த லெவுலுக்கு எடுத்துகிட்டு போக இந்த மாதிரி படம் தேவை.

நான்: ஆமா சார். சரியா சொன்னீங்க. சன் டிவில இங்கிலீஷ் படத்த தான் தமிழ்ல டப் பண்ணி போட்டுகிட்டு இருந்தான். இந்த மாதிரி படம் வந்துச்சுனா, அவன் தமிழ் படத்தையே தமிழ்ல டப் பண்ணி போடனும்! இத எவ்வளவு பெரிய முன்னேற்றம்!! அடுத்த லெவுல் தாங்கோ!!

ரீமா: where is andrea?

(செல்வா பதில் சொல்லவில்லை)

நான்: செல்வா சார் எங்க அவங்க?

செல்வா: வீணா எங்கிட்ட கேள்விகேட்டு என்னைய மாட்டிவிடாதீங்க! நான் ஏதாச்சு சொல்ல போக...செல்வாவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ...அப்படி ஏதாச்சு கிசுகிசு எழுதுவீங்க... எதுக்கு வீண்பேச்சு...

நான்: ஆஹா... சூப்பரா ஐடியாவ அள்ளிவீசுறீங்க! அடுத்த கிசுகிசு அது தான்.

கார்த்தி: இண்டர்வியூ முடிஞ்சுதா?

நான்: இதே மாதிரி படத்துல நடிச்சீங்கன்னா, உங்க கதை தான் சார் முடிஞ்சு போகும்.

கார்த்தி: அடுத்த படத்துல ரொம்ப யூத்வுல்லா வறேன்.

நான்: எனக்கு நம்பிக்கை இல்ல சார்.

கார்த்தி: அட நம்புங்கப்பா!

நான்: இன்னொரு முக்கியமான கேள்வி செல்வா சார்.... அடுத்த படம் என்ன?

செல்வா: இப்போதைக்கு ஒரு passport size photo கூட எடுக்க போறது இல்ல. எத எடுத்தாலும், உங்கள மாதிரி ஆளுங்க ஏதாச்சு குறை சொல்லிகிட்டு இருப்பீங்க!

நான்: அட நீங்க இந்த மாதிரி கண்டிப்பா எடுக்கனும். அப்பரம் இல்லேன்னு ப்ளாக் எழுதுற எங்கள மாதிரி ஆளுங்க புழைப்பு என்ன ஆகுறது? ரீமா...உங்க அடுத்த படம்?

ரீமா: ஹாலிவுட்ல இரண்டு மூனு படம் பேசிகிட்டு இருக்காங்க....

நான்: இது உலக நடிப்புடா சாமி! கார்த்தி நீங்க...?

கார்த்தி: செஞ்ச பாவங்கள கழிக்க இமயமலைக்கு போக போறேன்...

நான்: ஹாஹா...ஒரே ஒரு கேள்வி. நீங்க திடீரென்னு கலரா மாறிடுறீங்க...அப்பரம் கருப்பா இருக்கீங்க படத்துல...சோப்பு போட்டு குளிப்பீங்களா இல்ல தங்க பிஸ்கேட் போட்டு குளிப்பீங்களா?

கார்த்தி: ஐயோ...எனக்கும் அதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல. அண்ணன் பிரச்சனை அது. அது தங்கம்கூட இல்லங்க...நாய் பிஸ்கேட் அடிக்கி வச்சு இருந்தோம்...அத போய் தங்கம் பிஸ்கேட்னு சொல்லிட்டாங்க இந்த இன்கம்டெக்ஸ் ஆபிசர்.....

நான்: நிசமாவா? இந்த உலகம் இன்னுமா நம்பிகிட்டு இருக்கு!!

Jan 23, 2010

ஜஸ்ட் சும்மா (24/1/10)

இப்போது எழுதி கொண்டிருக்கும் 'விளையாடுவோமா உள்ள' தொடர் கதைக்கு ஒரு சின்ன பிரேக் கொடுக்கலாம்னு இருக்கேன். மண்டையில ஒரு மண்ணும்( மண்டைல அது மட்டும் தானே இருக்கு. அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது) தோண மாட்டேங்குது. அதனால், அந்த தொடர் இப்போதுக்கு தொடர வாய்ப்பில்ல. ஆனா, அதுக்கு வலைப்பூ எழுதுறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினைக்க வேண்டாம். மத்த மொக்கைகள் எப்போதும் போலே தொடரும்.
--------------------------------------------------------------------------------------

ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். அந்த படம் பார்த்ததாக நானும் மறந்துடுறேன். வரலாறும் மறந்துடனும். இந்த படத்த பத்தி பேசி, நண்பன் ஒருவர் ரொம்ம்ம்ப கோச்சிகிட்டாரு!! (எனக்கு சுத்தமா பிடிக்கல. அவருக்கு ரெம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு)
---------------------------------------------------------------------------------

இயக்குனர் பாலாவிற்கு 'நான் கடவுள்' படத்திற்காக தேசிய விருது கிடைச்சு இருக்கு. வாழ்த்துகள்! (படம் எனக்கு பிடிக்கவில்லை...இருந்தாலும் ஒரு தமிழன் முன்னேறுவதை பார்த்து இன்னொரு தமிழன் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதே என் கொள்கை!! யாருப்பா அங்க...எனக்கு சிலை வைக்கனும்னு பேசிகிறது?) ஹிந்தி படத்திற்காக பிரியங்கா சோப்ராவுக்கு தேசிய விருது கிடைத்து இருக்கு!:)
------------------------------------------------------------------------------------

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் ட்ரெல்லரை பார்த்தேன். வாரணம் ஆயிரம் படத்துல வெட்டுப்பட்ட காட்சிகள ஒன்றா சேர்த்து போட்ட மாதிரி தோணுச்சு. எப்படி இருந்தாலும், படத்த பார்க்கனும்...atleast for gowtham menon!:) hehe.
------------------------------------------------------------------------------------

வரும் ஏப்ரல் மாதம் படிப்பு முடிய போகிறது. (படிப்பு என்னைய ஒரு வழியா முடிச்சிடும்). அத நினைச்சா, துக்கம் தொண்டைய அடைக்குது. காலேஜ் டீச்சர்கள் மேல உள்ள பாசம் இல்ல...பிரண்ட்ஸ், காலேஜ் கேண்டீன், கார்பார்க், லீவு நாட்கள் இத நினைச்சு தான் கவலை. இனி வாழ்க்கைல இது எல்லாம் திரும்பி வருமா? (எனக்கு இப்ப ஒரு சைக்கிள் வேணும்... ஆட்டோகிராப் சேரன் மாதிரி ஃவீல் பண்ணிகிட்டே போக...)

வேலைக்கு போயிட்டா அப்பரம் அம்புட்டு தான்....... அதுவும் பிடிக்காத வேலை என்றால்...சுத்தம்!!!

மனுஷனுக்கு தன்னம்பிக்கை குறையும் போது தான் கடவுள் நம்பிக்கை அதிகமாகும்னு சொல்வாங்க...எனக்கு இப்போ கடவுள் நம்பிக்கை அதிகமா போய்கிட்டு இருக்குதுங்கோ!
---------------------------------------------------------------------------------------------

Jan 14, 2010

ஜஸ்ட் சும்மா(14/1/10)

அனைவருக்கும் பொங்கல், மாட்டு பொங்கல் வாழ்த்துகள்!! இதை எழுதி கொண்டிருக்கும் வேளையில் டிவியில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் ஓடி கொண்டிருக்கு! ஐயப்பா சாமீமீமீமீ..... தலைவலி டா!! ஒரு நல்ல நாள்னு ஆவூனு இத போட்டுடுறான். 15 வருஷமா நாலே நாலு தலைப்ப வச்சுகிட்டு ஓட்டிகிட்டு இருக்காங்க! திருந்துங்கப்பா!!!!

***************************************************************************

விண்ணை தாண்டி வருவாயா பட பாடல்களை கேட்டேன். 'ஹோசோனா' பாட்டு மட்டும் கேட்குற மாதிரி இருக்கு. மத்த பாடல்கள் ஒன்னும் அவ்வளவா மனதில் பதியவில்லை. மறுபடி மறுபடி கேட்க வேண்டும்!! படம் பிப்ரவரி 14 ரீலீஸ்!! டைரில குறிச்சு வச்சு இருக்கோம்ல!!
**************************************************************************

2 states புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன். சேத்தன் என்னமா கிண்டல் பண்ணியிருக்கிறார் இந்தியர்களை!! செம்ம காமெடி. ஆனா, காதல் காட்சிகள், வேலை, படிப்பு- இது எல்லாம் அவரின் முந்தைய கதைகளில் படித்துவிட்டதால், கொஞ்சம் போர்!!! முழுசா படிச்சுட்டு வரேன்!
****************************************************************************

நாணயம், ஆயிரத்தில் ஒருவன் படங்களை பார்க்கனும்!! ரொம்ப ஆவலா இருக்கு.
***************************************************************************

'merchants of bollywood' (http://www.merchantsofbollywood.com.au/aus/) என்னும் ஒரு musical நிகழ்ச்சி. 2 மணி நேரம் நிகழ்ச்சி: ஆட்டம் ஆட்டம் ஆட்டம்! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல இருந்துச்சு! மறக்க முடியாத அனுபவம்! சீனர்கள், வெள்ளைக்காரர்கள் நிறைய பேர் எழுந்து நின்று ஆட தொடங்கியது தான் highlight!!
***********************************************************************

Jan 7, 2010

daddy mummy வீட்டில் இல்ல (series 3)- பகுதி 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

carlo cafeயில் சுதா, கலா, விஜி. சசி மட்டும் வரவில்லை. ஆளுக்கு ஒரு காபி ஆர்டர் செய்தனர்.

" சசிக்கு என்ன ஆச்சு? is she alright?" சுதா கேட்க, அதற்கு கலா,

"ஏதாச்சு ஒரு கோயில மாவிளக்கு போட்டுகிட்டு இருக்கும்."

விஜி, "நான் மெசேஜ் பண்ணி பாத்தேன்.. ஆனா அவ ஒன்னும் ரிப்ளை பண்ணல. அவ வீட்டுக்கும் ஃபோன் பண்ணி பாத்தேன் எடுக்கல. வீட்டுக்கு போய் பாக்கலாம்ன்னா....அவ வீட்டு நிலவரம் எப்படி இருக்குனு தெரியல.... ஐயோ... இந்த பரிட்சைய எவன் கண்டுபிடிச்சானோ? அவன கண்டிப்பா கடிச்சு கொதறி வைக்க போறேன்...."

கலா, "விடு விடு, கோபத்துல இருப்பா சசி. கொஞ்ச நாள்ல சரியா போயிடும். திருப்பி நம்மகிட்ட தான் வந்தாகனும். உன் வீட்டுல என்ன ஆச்சு சுதா?"

சுதா, "நீ சொன்ன மாதிரியே சோகமா இருந்தேன். நம்புவாங்கன்னு பாத்தா... கொஞ்சம் ஓவரா ஆக்டிங் விட்டுடேன்னு நினைக்குறேன். படிக்கும்போது புத்தி இல்லையா..இந்த சோகமா இருக்குற மாதிரி நடிப்புலாம் வேணாம். நல்ல புள்ளையா இருந்தா ஆரம்பத்துலேந்து நல்லா படிச்சு இருக்கனும். 24 மணி நேரமும் இண்டர்நெட், ஃபோன் பேசுறது...இப்படி இருந்தா எங்க உருபட முடியும். இப்படி என்னனெமோ சொல்லிட்டாங்க. அம்மா கொஞ்சம் சப்போர்ட் பண்ணுவாங்கன்னு பாத்தா... அவங்களும் இந்த தடவ கட்சி மாறிட்டாங்க!" சோகமாக கூறினாள்.

விஜி, "அது ஏன் மேன், எல்லா அப்பா அம்மாவும் இதே மாதிரியே திட்டுறாங்க. no creativity at all. இதே தான் என் வீட்டுல சொன்னாங்க. ச்சே..... உனக்கு படிக்குறது மட்டும் தான் வேலை. வேற என்ன வேலைன்னு கேக்குறாங்க. ஏய்... படிக்குறது எவ்வளவு கஷ்டம்னு அவங்களுக்கு ஏன் மேன் புரிய மாட்டேங்குது. it takes so much of time and effort to understand a mathematical theory. we have millions of them to memorise. and that too with understanding, we have to remember that. some don't even make sense to me. so i have to put 200% effort to understand it just for the sake of exams. என் மூளை எவ்வளவு தான் தாங்குறது..." அலுத்து கொண்டாள்.

கலா, "ஹாஹா.... when our mums were pregnant, all our fathers went to the same course on how to scold and torture their kids. that's the reason why all behave the same way towards their kids." கைகொட்டி சிரிக்க ஆரம்பித்தாள். தொடர்ந்தாள்,

"சரி விடுங்க. நம்ம சட்டுபுட்டுன்னு படிப்ப முடிச்சுட்டு, சேர்ந்து ஒரு நல்ல business venture ஆரம்பிப்போம்! பெரிய ஆள வந்தபிறகு, அப்பரம் நம்ம யாருன்னு இந்த உலகம் புரிஞ்சுக்கும்." முகத்தில் ஆனந்தம் பொங்க கூறினாள்.

"வாட்????!!! business?? you kidding? stable jobக்கு தான் என் வீட்டுல விடுவாங்க." சுதா பொங்கினாள்.

"இங்க பாரு சுதா, நீ சொந்த கால்ல நின்னு பத்து பேருக்கு வேலை கொடுக்கனும். அது தான் நமக்கு பெருமை. come on babe, we are born leaders!!"சுதாவின் தோள்பட்டையை தட்டினாள். இவர்கள் பேசுவதை கவனித்துகொண்டே, கண்ணாடி கதவை நோக்கியது விஜியின் பார்வை.

விஜி உடனே மணிரத்னம் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் மெல்லிய குரலில் பேசினாள். "ஏ மெதுவா பாருங்க. டக்கென்னு பாக்காதீங்க. பலே பலே ரவி வருது. he is at the carpark. " விஜி சொன்னதை மற்ற இருவரும் கேட்கவில்லை. பரபரப்புடன் திருப்பி, எங்கே அவன் வருகிறான் என்று தேடினர்.

"stupid girls. i told you all not to make it obvious. idiots! he might see us." விஜி கூறினாள். ரவி வருவதை பார்த்துவிட்டனர் மற்ற இருவரும். சுதாவின் முகத்தில் மகிழ்ச்சி, வெட்கம், அளவில்லா புன்னகை என்று பல உணர்ச்சிகள் பொங்கியது. விஜி இருவரை இழுத்து கொண்டு restroomக்கு ஓடினாள்.

"ஓ மை காட்!!!!! எனக்கு ஒரு மாதிரியா இருக்கு!" சுதாவின் முகத்தில் அசடு வழிந்தது.

" கக்கூஸ் போ!" கலா நக்கல் அடித்தாள்.

"கலா....ப்ளீஸ்... நான் இப்ப என்ன பண்ண? போய் பேசவா....ஓ மை காட்!! i feel like a small kid now!" கவுத்துபோட்ட கறுப்பான்பூச்சி போல் குதித்தாள்.

விஜி கண்ணாடியை பார்த்து தலைமுடியை சரிசெய்து கொண்டாள். சுதா விஜியின் கைபையை பிடிங்கி, "விஜி, லிப் ஸ்டிக் வச்சு இருக்கீயா?" என்றவாறு அவளது பையில் தேடினாள். இருந்த லிப் ஸ்டிக்கை எடுத்தாள் சுதா. கூடவே eyelinerம் போட்டாள்.

சுதா, " கலா, நீயும் ஏதாச்சு போட்டுக்கோ. we shall look good infront of him."

கலா, "எங்களுக்கெல்லாம் அழகு மனசுல இருக்கு!" என்றதும் சுதா ஒரு வினாடி தான் செய்வதை நிறுத்தினாள். விஜி குபீர் என்று சிரித்தாள்.

விஜி, "டைம்மிங் காமெடி சூப்பர் கலா!!"

சுதா, "oh girls, shut up!!"விறுவிறுப்பாக தன்னை அலங்காரம் செய்து கொண்டாள். மூவரும் வெளியே வந்தனர். ஏற்கனவே உட்கார்ந்து இருந்த இடத்திற்கு மீண்டும் சென்றனர். சுற்றி பார்த்தாள் சுதா, அவன் எங்கேயும் தென்படவில்லை. கலா தேவையில்லாமல் திடீரென்று சிரித்தாள்.

கலா, "அங்க பாருங்க மச்சிஸ் அவன."

வாடிக்கையாளர்களுக்கு காபி கொடுத்தான்.

விஜி, "சர்வர் வேலை பாக்குறாய்யா....அன்னிக்கு பொய் சொல்லியிருக்கான்னு நினைக்குறேன்."

கலா, " languages பத்தி research பண்ணுறாராம்?? ஹிஹிஹி...." சத்தம் போட்டு சிரித்தாள். சுதாவின் முகம் வாடியது. ரவி மேல் கோபம் வந்தது. இவர்களை கண்டு கொண்ட ரவி கை காட்டினான். விஜி மட்டும் பதிலுக்கு கையாட்டினாள். இவர்களின் மேசையை நோக்கி வந்தான்.

"ஹாய் கேர்ள்ஸ், what a pleasant surprise? how are you people?" புன்னகை மாறா முகத்துடன் பேசினாள்.

கலா, " we are good. நீங்க? உங்க language research இங்க தான் நடக்குமா?" சிரிப்பை அடக்கிகொண்டாள்.

ரவிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவன் அப்பாவித்தனமாய், "இல்ல அது college library or research centreல தான் நடக்கும். anyway என்ன ஆர்டர் பண்ணுறீங்க? first time இந்த cafe வந்து இருக்கீங்களா?"

கலா, "ஓ நீங்க ரொம்ப வருஷம் சர்வீஸா இங்க?" கேள்விகளை கேட்க கேட்க சுதாவின் முகம் கோபத்தில் வெடிக்க தொடங்கியது.

ரவி, "சுதா are you alright?ஏன் ஒன்னுமே பேசாம இருக்கீங்க?"

'நீங்க ஏன் பொய் சொன்னீங்க? சர்வர்ன்னு சொல்லியிருக்கலாமே!' கேட்கலாம் என்று வாய் திறந்தாள் சுதா. ஆனால் அச்சமயம் கோட் சுட் போட்ட ஒருவர் cafe kitchenலிருந்து வந்தார்.

"ரவி, everything is fine. good job. next week we'll start the new promotional package. sign the contract with that korean company. alrite. " என்றார். இந்த பெண்களுக்கு ஒன்னுமே புரியவில்லை.

"great, dad. i'll take care." என்றான் ரவி. தொடர்ந்தான் அவன், " anyway dad, இவங்க என்னோட நியூ friends...sutha, viji, kala."

"hello girls, hi hi. how r you? nice to meet you young ladies. anyway sorry girls i have to really rush off now. ஆனா, நல்லா சாப்பிட்டு போங்க. ரவி, look after them well. catch up with you girls soon. bye. take care." என்றவர் ரவியை கட்டிபிடித்து,

"take care beta." என்றார்.

விஜி, " அவர் உங்க அப்பாவா? அவர் ஏன் cafe kitchenலேந்து வந்தாரு?" குழப்பமாய்.

"ஏன்னா, இது அவரோட cafe. நான் இங்க அடிக்கடி வந்து கவனிச்சுபேன். he's always busy. he has about 18 such outlets in the city. என்னால முடிஞ்ச அளவு அவருக்கு ஹேல்ப் பண்ணுவேன்." குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்!

விஜி, கலா, சுதா ஆகியோரின் 6 கண்கள் பார்வையாலே பேசிகொண்டன "பணக்கார வீட்டு பையன் மச்சி!"

ரவி, "எங்க...உங்க இன்னோரு ஃபிரண்ட் சசி?"

விஜி, "வயத்துவலி அவளுக்கு."

ரொம்ப நேரம் பேசினர். சிரித்தனர். நல்ல உபசரித்தான். கவனித்துகொண்டான். சுதா அவனை மட்டுமே கவனித்தான். வீடு திரும்பியது அன்று இரவு சுதா ரவிக்கு குறுந்தகவல் அனுப்பினாள்: " food was great. great concepts in your cafe. love it!" என்று அனுப்பினாள்.

அதை படித்த ரவி உடனே சுதாவிற்கு குறுந்தகவல் அனுப்பவில்லை, ஃபோன் செய்தான்.

(தொடரும்)