May 31, 2009

மன்மதன் - ஒரு நிமிட கதை

இரவு உறக்கம் வரவில்லை. என்ன செய்வதென்று யோசித்தான் மதன். தொலைக்காட்சி பார்க்க தன் அறையிலிருந்து ஹால்லுக்கு வந்தான். எந்த விளக்கையும் ‘ஆன்’ செய்யவில்லை. இருட்டில் டிவி பார்க்க தொடங்கினான். தொலைக்காட்சியில் ‘சிநேகிதனே சிநேகிதனே’ பாடல் வந்தபோது சற்று உற்சாகமடைந்தான். பாடலை ரசிக்க தொடங்கினான். அவனும் சேர்ந்து அப்பாடலை முணுமுணுத்தான். பையிலிருந்த தனது கைபேசியை எடுத்து பார்த்தான் – மணி 11.45 என்று காட்டியது.

“ஐ லவ் யூ டியர்” அனுப்பினான் குறுந்தகவலை மாலா, கீதா, சதா, சுதா, லீனாவிற்கு…….

May 30, 2009

ஜஸ்ட் சும்மா(30/5/09)

இன்று என் keyboard grade 1 தேர்வை எழுதினேன். எனக்கு தேர்வு என்ற வார்த்தையை பார்த்தாலே பயம் கவ்வி கொள்ளும்(கொல்லவும் செய்யும்)! இன்று காலை 1030 தேர்வு நடந்தது. ஏசி அறையாக இருந்தாலும் வேர்த்து கொட்டியது. ஏதோ ஓரளவுக்கு செய்தேன். தேர்வின் ஒரு பகுதி இசை கருவிகளை அடையாளம் காட்டுதல். ஒன்றை சுட்டி காட்டி இது என்ன என்று கேட்டார்.

நான் "......ம்ம்ம்....." தலையை சொறிந்தேன். அது என்ன என்று தெரியும். ஆனால் mental block ஆயிடுச்சு. என்ன சொல்றதுன்னு தெரியல்ல.

அவர் சற்று முறைத்தவாறு, " this is கஞ்சீரா!"

நான் புன்னகையித்தேன். அசடு வழிந்த புன்னகை. "you are such an idiot." என்றது மனசாட்சி. தேர்வின் முடிவுகள் வியாழக்கிழமை தெரியும். தேர்வு முடிந்தவுடன், "குட்" என்றார். ஆனால் இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாமோன்னு தோணிச்சு!:(
--------------------------------------------------------------------------------

நம்ம வானவில் வீதி தம்பி கார்த்திக்கை ரொம்ப நாளா ஆள காணும். எங்கப்பா இருக்கிற? chatல் அடிக்கடி வருவார். இப்போ அதுகூட இல்ல! நல்ல புள்ளையா மாறிட்டாரா என்ன?
--------------------------------------------------------------------------------

கந்தசாமி பட பாடல்களை கேட்டேன். 8 பாடல்களில் விக்ரமே நான்கு பாடல்களை பாடி இருக்கிறார். பாடல் பல ரொம்ப இளமை துள்ளலோடு இருக்கு. excuse me kandasamy என்னும் பாடல் என்னை ரொம்ப கவர்ந்து இழுத்துவிட்டது. காரணம் பாடல் வரிகள். ஆனால் பாடல் காட்சிகளை பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரியா தான் இருக்கு. இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாமோ. வெளிநாடுகளில் பாடல்களை காட்சி அமைத்து பணத்தை வாரி கொட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி ஸ் தானு. அங்கிள், ஆட்டோல போறத்துக்கு காசு இருக்கா?

இத்தனை பொருட்செலவு அவசியமா? சரி இதுக்கே இப்படின்னா, அங்க யாரோ ஒரு பாடல்களுக்கு 100 கெட்-டப்புல வருகிறாராம். உஷ்,........முடியல ராகவேந்திரா சாமி!
----------------------------------------------------------------------------------

சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள் என்ற புத்தகத்தை படித்து முடித்தேன் நேற்று. கதை எப்படி எழுதுவது என்பதை பற்றி நிறைய செய்திகள் அப்புத்தக்கத்தில் இருந்தன. 2 வார்த்தைகளில்கூட கதை எழுதலாமாம்!

what!! 2 words??- இது தான் என் முதல் reaction. தொடர்ந்து படித்தேன். ரொம்ப சுவாரஸ்சியமா இருந்துச்சு. பக்கம் பக்கமா எழுதுற எனக்கு 2 வார்த்தைகளில் எழுதுவது என்பது சிரமமே! ஆனால் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்...
------------------------------------------------------------------------------------

நேற்று ஒரு சின்ன புதிய சாதனை. இந்த வலைப்பூவின் followers ஐம்பது ஆகிவிட்டது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 50வது நம்பர் சுரேஷ் குமார். நன்றிங்கோ!

தங்க சங்கிலி, ஒரு பிரியாணி பொட்டலம் அவருக்கு கொடுக்கலாம் என்ற ஆசை தான். ஆனால், உலக பொருளாதாரம் சற்று மந்தமான நிலையில் இருப்பதால், அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் அது சேர்க்கப்படும்!:)

May 28, 2009

Book Tag

தொடர் பதிவு இது. படித்த புத்தகங்கள் பத்தி எழுதுனுமா....வலைப்பூ நண்பர் ஸ்ரீ என்னைய tag பண்ணியிருக்காரு. ஐயோ வாழ்க்கையில் நான் என்னத்த படிச்சேன் tag பண்ண?( நான் வாழ்க்கையை படிச்சவள்....ஐயோ தமிழ், நீ கலக்குற மச்சி...தாக்கு தாக்கு!)

சரி விஷயத்திற்கு வந்துவிடுவோம். குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் இப்படி படித்தது தான் ஞாபகம். பள்ளி காலத்துல புத்தகங்கள் எனக்கு தாலாட்டும் பாடும் கருவி. .. திறந்தவுடனே தூ(து)க்கம் வந்து விடும். மூணு இல்ல நாலு மாசத்துக்கு முன்னாடி தான் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்துச்சு. என் அக்கா நிறைய படிப்பாங்க. அவங்க ஒரு புத்தகத்த கையில கொடுத்து இத படின்னு சொன்னாங்க. அதுக்கு அப்பரம் தான் ஓரளவு படிக்கும் பழக்கம் வந்துடுச்சு.

one book that changed your life:

ஆமா....அந்த அளவுக்கு இன்னும் ஒன்னும் பெரிசா படிக்கவில்லை. ஒரே ஒரு சின்ன மாற்றம், நல்ல பழக்கம் வந்துச்சு. நான் சொன்ன மாதிரி இந்த வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கியது என் வாழ்க்கையில்- one night at the call centre.

The book you have read more than once:

ஆஹா...ஒரு தடவ படிக்கவே ரொம்ப கஷ்டம். இதுல மோர் தென் ஒன்ஸா?சத்தியம் அப்படி எதுவும் இல்ல.

one book you would want on dessert island:
"நான் வித்யா" புத்தகத்தை படிக்கவேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நம்ம வலைப்பூ தோழி living smile வித்யா எழுதிய புத்தகம்.

one book that made me laugh:
five point someone- இப்புத்தகத்தில் வரும் பல காலேஜ் சம்பவங்கள் அப்படியே என் வாழ்க்கையில் நடந்து இருக்கு. நிறைய இடங்களில் சிரித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

one book that made me cry:

children of war- ஈராக்கில் உள்ள குழந்தைகள் போரை பற்றி தங்களது ஆதங்கத்தை கொட்டுகிறார்கள். அவர்களின் சிறு பேட்டிகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். படிக்க படிக்க கண்ணு கலங்கிடுச்சு. கொடுமையான வாழ்க்கை அவர்களது! ஐயோ நினைச்சு பார்க்கவே முடியல...:(

one book you wish you had written:
சர்வதேச அளவில் விருது பெற்ற எல்லா புத்தகங்களையும் தான்! ஹாஹா...

one book you wish had never been written:

ம்ம்ம்ம்....இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான்! ம்ம்ம்...அப்படி எதுவும் எனக்கு தெரியல்ல...

books that you are currently reading:

jasvinder sanghera எழுதிய 'shame' மற்றும் சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள்

books that you have meaning to read:

self-made man(இது உண்மை கதை. ஒருத்தி ஒரு வருடம் ஆணாக இருந்து பிறகு மறுபடியும் பெண்ணாக மாறுகிறாள்.)
மற்றும்
six suspects

அடுத்ததாக அண்ணன் பிரேம்குமாரை அழைக்கிறேன்.

May 25, 2009

சும்மா அரட்டை-5

ஞாயிற்றுக்கிழமை இரவு எங்க ஊர் வசந்தம் ஒளிவழியில் 'முதல் மரியாதை' படத்தை போட்டான். நான் பார்த்து கொண்டிருந்தபோது தோழனின் குறுந்தகவல்கள்...

தோழன்: are u watching முதல் மரியாதை now?

நான்: yep yep...நீ?

தோழன்: yea man!!!! செம்ம படம். எத்தனையோ தடவ பாத்து இருக்கேன், ஆனா ஒவ்வொரு தடவையும் ரொம்ப ரொம்ப வித்தியாசமா தெரியுது. i think ராதா is damn cute!!

நான்: ஹாஹா....நல்லா எஞ்சாய் பண்ணு!

தோழன்: ஏய், எனக்கு ஒரு பொண்ணு பாரேன்...அப்படியே ரவிக்கை இல்லாத ராதா மாதிரி!

நான்: அட உன் வீட்டுல நல்லா இருந்துட்டு போவ...இந்த எடுப்பட்ட பய மூஞ்சிக்கு ராதா மாதிரி பொண்ணு கேட்குதா?? ஹாஹா....:)

தோழன்: ஹாஹா...சும்மா சும்மா! ஆமா, நீ ஏன் வடிவுக்கரசி மாதிரி பேசுற??

நான்: படத்துல ஐக்கியம் ஆயிட்டேன்:)ஹிஹிஹி.... hey you know that sevili character...she was a singaporean...she studied in christchurch sec sch.now i think she is in america.

தோழன்: அப்படியா? உனக்கு எப்படி தெரியும்?

நான்: அம்மா சொல்லிகிட்டு இருந்தாங்க..hey for ratha's voice, rathika dubbed for her. அதுக்கு ராதிகாவே நடிக்கவிட்டு இருக்கலாம்!

தோழன்: நோ...நோ.... எனக்கு ராதா தான் வேணும்! she is the best!

நான்: ஆஹா... நீ அடங்க மாட்டீயா? ஏய் இப்ப இருக்காங்க பாரு ராதா...ரொம்ப weight போட்டு குண்டா தெரியுறாங்க.

தோழன்: என்ன தான் நீ இனிக்கு பிரியாணி சாப்பிட்டாலும், நேத்து வச்ச மீன் குழம்புக்கு தனி ருசி இருக்கும்!! ஹிஹி.... என் ராதாவும் அப்படி தான்!

நான்: டேய் நீ அடங்கவே மாட்டீயா? உஷ்...யப்பா!!!!!!

--------------------

முந்தைய அரட்டைகள்

May 24, 2009

மனசுக்குள் மத்தாப்பூ அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இன்று நம்ம மனசுக்குள் மத்தாப்பூ திவ்யாவிற்கு பிறந்தநாள். என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், திவ்ஸ் குருவே!

அவரை நான் திவ்ஸ் என்று தா அழைப்பேன்.:) அவரின் கதைகளை படித்து தான் நானே கதை எழுத ஆரம்பித்தேன். நிறைய விஷயங்களில் அவர் தான் எனக்கு inspiration. ஆக, இந்த பொன்னாளில் அவருக்கு என் வாழ்த்துகள். ஒரு பாட்டு அவருக்கு dedicate பண்ணுறேன்....

May 21, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-7

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்- upen patel.
அன்று 'namastey london' என்னும் ஹிந்தி படத்தை பார்த்தேன். அதில் இவர் நடித்தார். பார்த்தவுடனே, "wow...not bad!" என்றேன்.

பிறந்து வளர்ந்தது லண்டனில். நிறைய விளம்பரங்களில் வந்தவர். zee டிவியின் supermodel hunt பரிசை 2002ல் வென்றவர்.

attractive feature- smile.:)

இவருக்கு வயது 29! ஆனால், பார்த்தால் ஏதோ 21 வயது பையன் மாதிரி இருக்காரு!! ஹிஹிஹி...:)

May 19, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-3

பகுதி 1

பகுதி 2

குழந்தைகள் பெயர் பட்டியல் கொண்ட இணையத்தளத்தை பார்த்து கொண்டிருந்தாள். சில பெயர்கள் ரொம்ப புதுசா இருந்தாலும் சிரிப்பா இருந்தது. அதை பார்த்து சிரித்தேன்.

"ஏய் இப்ப எதுக்கு சிரிக்கிற?"

"உனக்கு ரொம்ப ஆர்வம் தான் போ. இப்ப தான் கல்யாணமே முடிஞ்சு ஒரு மாசம் ஆயிருக்கு. அதுக்குள்ள குழந்தைகளுக்கு பெயர் வைக்குற அளவுக்கு போயிட்டீயா..." அவள் தோளில் சாய்ந்து கொண்டேன்.

"இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள நமக்கு குழந்தை இருக்கும். அப்போ என்ன பெயர் வைக்கலாம்னு டென்ஷன் ஆக கூடாது பாரு. அதுக்கு தான்... இப்பவே... இங்க பாரு.. இந்த பெயர் நல்லா இருக்குல.." ஒரு பெயரை சுட்டி காட்டினாள்.

"பொண்ணு பொறந்தா..ஷாமினி....பையனா இருந்தா ஷாமன். பிடிச்சுருக்கா?" என்னிடம் கேட்டாள். புன்னகையை சம்மதமாய் அளித்தேன்.

"பொண்ணுங்க எப்ப ரொம்ப அழகா இருப்பாங்கன்னு தெரியுமா?" என்றேன். தெரியாது என்று தலையசைத்தாள்.

"அமெரிக்காவுல ஆராய்ச்சி செஞ்சு இருக்காங்களாம்."

"என்னென்னு?"

"பொண்ணுங்க pregnantஆ இருக்கும்போது தான் ரொம்ப அழகா தெரிவாங்கன்னு.."

"அதுக்கு?"

"உன்னைய ஒவ்வொரு வருஷமும் அழகா காட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்."

"ச்சீ...." அனிதா என் நெஞ்சில் முகம் புதைத்து வெட்கப்பட்டாள். தொடர்ந்தாள்,

"அப்போ ரெண்டு பேரு போதாதே?"

இருவரும் சிரித்து மகிழ்ந்தோம்.

"சார்..." மருத்துவமனையில் தாதி என்னை அழைத்தார். இன்னொரு பேப்பரை நீட்டி,

"இதுல இன்னொரு கையெழுத்து போடுங்க" என்றாள்.

"எதுக்கு..." நான் கேட்பதற்குள் டாக்டர் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தார்.

"அனிதாவுக்கு கொஞ்சம் சீரியஸா இருக்கு. she is in a critical condition. குழந்தை இல்ல அனிதா... யாராச்சு ஒருத்தரை தான் காப்பாத்த முடியும்." என்றார் டாக்டர்.

எனக்கு யார் வேண்டும் என்பேன்? உருகி உருகி காதலித்த மனைவியா? இல்லை ஆண்டுகளாய் ஆசைப்பட்ட குழந்தையா? வேதனை என்னை கொஞ்சம் கொஞ்சமாய் திண்றது. மரணம்- இந்த வார்த்தை என் வாழ்க்கையில் கேட்க போகிறேன் இரண்டாவது முறையாக.

முதன் முறை....

"அண்ணா, எப்படி இருக்கீங்க? அமெரிக்காவுல இப்ப climate எப்படி இருக்கு?" என்றேன்.

"ஓ..it's good." என்றார் அவர்.

"அம்மா அப்பா எங்க?"

"......."

"அண்ணா, இருக்கீங்களா? ஹாலோ ஹாலோ.... அப்பா எங்க? அப்பாகிட்ட கொஞ்சம் கொடுங்க...பேசி ரொம்ப நாளாச்சு?"

"........."

"அண்ணா, அப்பா எங்க?"

"சாரி.... அப்பா இறந்து 2 மாசம் ஆச்சு."

"what!!!??!! ஏன்....என்கிட்ட......"

"அம்மா தான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க."

தலையில் கைவைத்து உட்கார்ந்து இருந்தேன். அண்ணாவிற்கு ஃபோன் செய்த சம்பவம், அப்பாவின் மரண செய்தி- இவை யாவும் மருத்தவர் அனிதாவின் நிலைமை பற்றி சொன்ன பிறகு என் மனதில் வந்துபோனது. ஆம், அப்பாவின் மரணத்திற்கு பிறகு, என் வாழ்க்கையில் இன்னொரு முறை ஒரு மரணம். இம்முறை மனைவியாக இருக்கலாம் அல்லது குழந்தையாக இருக்கலாம்.

ச்சே....எந்த ஆண்ணுக்கும் வரகூடாத நிலைமை.

என் மனதிற்குள்ளே, "அப்பா, நீங்க தான் இவங்கள காப்பாத்தனும். உங்க ஆசிர்வாதம் தேவைப்பா....ப்ளீஸ் பா.... ப்ளீஸ் பா.... எனக்கு ஒரு பையன் பொறக்கனும்.... நீங்க மறுபிறவி எடுத்து வரனும். இல்லேன்னா உங்க குணம் இருக்கிற ஒரு பொண்ணு பொறக்கனும். எப்படியாச்சு அனிதாவையும் காப்பாத்துங்க பா ப்ளீஸ் பா...." மனம் சிறுபிள்ளை போல் அழுதது.

உள்ளே ஒரு பயங்கரமான அலறல் சத்தம். அனிதாவின் குரல். அதற்குபிறகு எந்த சத்தமும் இல்லை. என் உயிர்நாடி நின்று போனதுபோல் உணர்ந்தேன். மருத்தவர்களும் தாதியர்களும் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தனர். எந்த செய்திக்கும் தயாராக இருந்தேன் நான். மருத்துவரின் முகத்தை பார்க்க தைரியம் இல்லை.

என் தோளை தொட்டு, "god is great. it is a miracle. அனிதாவும் குழந்தைகளும் நல்லபடியா இருக்காங்க. by the way...உங்களுக்கு twins பொறந்திருக்கு. " சிரித்து கொண்டே சொன்னார். உயிர் மீண்டும் வந்தது எனக்கு.

"தேங்கஸ் டாக்டர்...." என்னால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. நான் அனிதாவையும் குழந்தைகளை பார்க்க அறை கதவை திறந்தேன்.

மருத்துவர் அவர் அறைக்குள் சென்றபோது நிறைய trainee மருத்துவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்,

"டாக்டர், இது எப்படி சாத்தியமாச்சு? இப்படி உள்ள பொண்ணுங்களுக்கு pregnancy ரொம்ப complicationsஎ தராதா?"

அதற்கு டாக்டர், "ஆம்.. கொஞ்சம் complicated தான். அனிதா ஒரு physically disabled person. அவங்களுக்கு ஒரு கால் இல்லாம இருந்தாலும், அவங்க mentally ரொம்ப strong. நிறைய நம்பிக்கை இருந்துச்சு அவங்களுக்குள்ள... so she was able to cooperate with us better. " என்று சொல்லியவர் தன் கணினியில் உள்ள விளக்கப்படம் மூலம் மற்றவற்றை விளக்கினார்.

அனிதா மயக்கத்தில் இருந்தாள். அவள் பக்கத்தில் இரண்டு குழந்தைகள்- ஒரு பையன், ஒரு பொண்ணு. என் ஆள் காட்டி விரலால் அவர்களின் விரல்களை தொட்டேன். இருவரும் என் விரலை பிடித்து கொண்டு சிரித்தனர்.

என்னையும் அறியாமல் வாய்விட்டு அழுதேன்!

*முற்றும்*

May 18, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-2

பகுதி 1

அப்போது தான் அனிதாவை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்தவுடனே மனதில் ஒரு மின்னல். கண்களுக்கு மட்டும் அல்லாமல் மனதிற்கும் அழகாய் தெரிந்தாள். அவளிடம் சென்று

"ஹாலோ, நான் பக்கத்து ஆபிஸிலிருந்து...." என்று சொன்னவுடனே புரிந்து கொண்டாள்.

"ஓ யெஸ் யெஸ்.... பாஸ் சொல்லியிருந்தாங்க..." என்று கூறிகொண்டே ஒரு கோப்பை நீட்டி அதில் உள்ளதை விளக்கினாள். அவள் சொல்வது எதையுமே கவனிக்கவில்லை, ஆனால் நான் அவளை மட்டுமே கவனித்து கொண்டிருந்தேன். அவளின் குரல், அவள் பேசிய விதம், வேலைகளை சரிவர பார்த்த விதம்- இப்படி அனைத்தையுமே சேர்த்து ரசித்தேன். அன்று முதல் என் ஆபிஸிலிருந்து அவள் ஆபிஸுக்கு போக வேண்டிய கோப்புகளை அனைத்தையுமே நானே கொண்டு சென்றேன். அவளை பார்க்கும் வாய்ப்புகளை அதிகரித்து கொண்டேன்.

வேலை விஷயங்களையும் தாண்டி, ஒரு நல்ல நட்பு உருவானது. என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஒரு நாள் மதியம், அவள் ஆபிஸுக்கு சென்றேன். மதிய உணவு நேரம். அவள் சாப்பிட்டு கொண்டிருந்தாள் அவள் தோழிகளுடன். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை எனக்கு பொறுமையில்லை.

"அனிதா..உன்கிட்ட கொஞ்ச தனியா பேசனும்..." என்றேன்.

"சார் தனியா பேசனும்னு...நடுகடல்ல நின்னு தான் பேசனும்.." என்றாள் அவளின் தோழி ஒருத்தி. அனைவரும் சிரித்தனர். என் நிலைமை புரியாமல் அனைவரும் ஜோக் அடித்து சிரித்தது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது.

"நான் வரேன்." என்று கோபத்துடன் கிளம்பினேன். என் கோபத்தை புரிந்து கொண்டவள் என் பின்னாடியே என் பெயரை கூவி கொண்டு வந்தாள்.

"ஏய்...நில்லுப்பா... ஏன் இவ்வளவு கோபம்? என்ன ஆச்சு? என்ன பேசனும்? any problem?" என்றாள்.

"ஆமா...ஒரு முக்கியமான விஷயம்..." வார்த்தைகளின் வேகம் குறைந்தது.

" அனிதா, எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது. எப்போ உன்னைய முத தடவ பாத்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்...நீ தான் என் மனைவின்னு. பாத்தவுடனே ஐ லவ் யூ சொன்னா...அது நல்லா இருந்திருக்காது... அதான் நல்லா பழகின பிறகு... உன்னைய கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்." என்றேன்.

நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. எதையுமே பேசமால் ஆபிஸைவிட்டு வெளியேறினாள். இரண்டு நாட்கள் ஆபிஸுக்கு வரவில்லை. உடல் நலம் சரியில்லை என்று ஆபிஸில் கூறி இருந்தாள். எனக்கும் மட்டும் தான் தெரியும், சரியில்லாமல் கிடப்பது அவளது மனம் என்று.

அந்த இரண்டு நாட்கள் அவளுக்கு பல முறை ஃபோன் செய்து பார்த்தேன். அவள் எடுக்கவில்லை. பிடிவாதக்காரி! பல்லாயிரம் மேசேஜ்கள் அனுப்பினேன்! எதுக்குமே பதில் இல்லை. மூன்றாவது நாள் அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றேன். விடுதிக்கு வெளியே நின்று ஃபோன் செய்தேன். என் காதல் தோற்குமா என்ன? அவள் ஃபோன்னை எடுத்தாள்.

தழுதழுத்த குரலில் அவள், "ம்ம்ம்...சொல்லு?"

நான்,
" சாப்பிட்டீயா?" எதுவுமே நடக்காததுபோல் நான் பேசினேன்.

"இன்னும் இல்ல... " என்றாள்.

"எத்தன நாளா...சாப்பிடாம இருந்த?" என் குரலில் சற்று அதிகாரம் உயர்ந்தது. மறுமுனையிலிருந்து பதில் வரவில்லை.

"நான் உன்னைய உடனே பாக்கனும்.... உன் ஹாஸ்டல் பக்கத்துல தான் இருக்கேன்.. உள்ளே அழகான பசங்கள விடமாட்றாங்க...சோ..இங்க பக்கத்துல இருக்கிற சன்ஹன் பார்க்கிற்கு வா..." நான் சொன்னதை கேட்டு கண்டிப்பா புன்னகையித்து இருப்பாள்.

வரமாட்டாள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் வந்தது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. என் கையில் இருந்த உணவு பொட்டலத்தை கொடுத்து அவளை சாப்பிட சொன்னேன். என் முகத்தை சரியாக பார்க்கவில்லை. பொட்டலத்தை வாங்கி வைத்து கொண்டாள். சாப்பிடவில்லை. இரண்டு நாட்களாக அவள் சரியாக தூங்கவில்லை. அவள் முகத்தில் தெரிந்தது சோர்வு.

அவள் கண்முன் விழுந்த முடியை எடுத்த அவள் காதுக்கு பின் சொரிகியபடி,
"நான் என்ன கேட்டேன்னு... நீ இப்படிலாம் பண்றே?" என்றேன்.

"இதலாம் சரியா வருமா?" என்றாள் கண்ணீருடன்.

அவள் சொன்ன விதத்தில் இருந்து நான் புரிந்து கொண்டேன்- அவளுக்கும் என்னை பிடித்து இருந்தது. கல்யாணம் வரை போகாமல் காதல் வெறும் காதலாக போய்விடுமோ என்ற அச்சம் தான் அவளுக்கு.

"ஓ... அப்போ உனக்கும் ஓகே தான்னு சொல்லு! ஐயோ.. நான் நினைச்சேன் நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி.. ஒரு ஃபிரண்டா தான் நினைச்சு பழகினேன்னு சொல்லுவே... நம்மளும் துரத்தி துரத்தி... லவ் பண்ணி அப்பரம் ஒகேன்னு சொல்ல வைக்கலாம்னு இருந்தேன்... இப்படி சப்புன்னு முடிச்சிட்டீயா..." என்று முகத்தை விளையாட்டுக்காக பாவமாய் வைத்திருந்தேன்.

நான் சொன்னதை கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் கண்களை துடைத்தபடி.

நாட்கள் கடந்தன. நிறைய பேசினோம். நிறைய சிரித்தோம். அனிதாவுக்கு புத்தகங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு தெரிந்த எல்லாம் புக்-ஷாப்புக்கும் அழைத்து சென்றேன். நீண்ட நேரம் கடற்கரையில் உட்கார்ந்து பேசினோம். நிறைய சந்தோஷம், அவ்வபோது சின்ன சின்ன சண்டை. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு- in this world, you might be someone but to someone, you might be the world. இவ்வாறு அவளது உலகம் நானாகவும் என் உலகம் அவளாகவும் வாழ்ந்தோம்!

"சனியன் சனியன்...மூணாவதும் பொட்ட புள்ளையா பெத்துருக்கா உன் பொண்டாட்டி. சனியன் பிடிச்சவ..." என்று மருத்துவமனையில் கத்தி கூச்சல் போட்டாள் ஒருத்தி. ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்த நான் பக்கத்திலுள்ள நாற்காலியில் உட்கார்ந்தேன். அவளது மகனின் சட்டையை பிடித்து கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு கொண்டிருந்தாள்.

"இந்த எழவு பிடிச்சவள உனக்கு கட்டிவச்சது என் தப்பு தான்..." தலையில் அடித்து கொண்டாள். பிறந்த குழந்தையை கையில் வைத்துகொண்டிருந்தாள் தாதி. அக்குழந்தை கத்தியவளின் மூன்றாவது பேத்தி.

"அந்த சனியன் பிடிச்சவளுக்கு பொறந்த இந்த சனியன எடுத்துட்டு போயிடு!" மறுபடியும் கத்தினாள். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை- அது ஏன் எல்லா மாமியார்கள் தனது மருமகள்களை சனியன் என்று திட்டுகிறார்கள்?

என் அம்மாவும் அப்படி தான்!

"சனியன்... என்ன ஜாதியோ, என்ன மதமோ? அவள கட்டிக்க போறீயா? உனக்கு என்ன கேடு வந்துச்சு?" என் அம்மா ஒரு நாள் பூகம்பத்தை ஆரம்பித்துவிட்டார்.

நானும் அனிதாவும் பீச், புத்தககடைகளில் சுற்றியது அனைத்துமே என் பெற்றோர்களுக்கு தெரிந்துவிட்டது. நான் உறுதியாக நின்றேன். என் அப்பா என் பக்கம். ஆனால், அம்மாவை மீறி அப்பாவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"அவன் ஆசைப்படுறான்...அவன் விருப்பபடி நடக்கட்டுமே!" அப்பா முயன்றார்.

"என்ன ஆசைப்படுறான்? நீங்க எதும் பேசாதீங்க... அவனுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து வச்சுருக்கீங்க?" அம்மா பாய்ந்தார்.

"அம்மா, அனிதா ரொம்ப நல்ல பொண்ணு. அவ அனாதை இல்லத்துல வளர்ந்ததுனால கெட்ட பொண்ணுனு ஆயிடாது? அவங்க அம்மா அப்பா செஞ்ச தப்பு... அவ என்ன பண்ணுவா? ப்ளீஸ் மா... நீங்க ஒரே ஒரு தடவ அவகிட்ட பேசி பாருங்க..." காலில் விழாத குறையாய் அம்மாவிடம் கெஞ்சினேன். பிச்சை எடுத்தேன் என்றுகூட சொல்லலாம்.

அம்மா பிடிவாதத்தை விடவில்லை. அப்பா எடுத்து சொன்னார். ஆனால் கேட்கவில்லை.எத்தனை முறை போராடி பார்த்தேன். என் அம்மா சம்மதம் தரவில்லை.

"ஓடி போய் கல்யாணம் பண்றது, திருட்டு கல்யாணம் அப்படி இப்படின்னு ஏதாவது செஞ்சு வச்சே.... என்னை உயிரோட பாக்க முடியாது." அம்மா மிரட்டினார். எல்லா அம்மாக்களும் பயன்படுத்தும் emotional blackmail இது. அம்மாவின் பிடிவாதம் சில நாட்களில் சாந்தம் ஆகம் என்று நினைத்து அனிதாவும் நானும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டோம்.

அம்மாவுக்கு தெரியவந்தது. கோபத்தில் குதித்தார். அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு அம்மாவும் அப்பாவும் கிளம்பி சென்றனர். என் முகத்தில் இனி முழிக்க மாட்டேன் என்று சபதம் போட்டார் என் அம்மா. ஆனால், அப்பா அமெரிக்கா கிளம்பும் முன் எங்களை வந்து பார்த்தார் எங்களது புது வீட்டில்.

"வீடு ரொம்ப நல்லா இருக்கு. கச்சிதமா இருக்கு...very good selection." அப்பா பாராட்டினார்.

"அனிதா தான் பா select பண்ணா."

"அதான் ரொம்ப extra ordinaryயா இருக்கு. வெரி குட் மா." மாமனார் மருமகளை பாராட்டுவதை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

"அத்தையும் வந்திருந்தா நல்லா இருக்கும். எங்க மேல உள்ள கோபத்துல நீங்க அங்க போறது எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கு மாமா." என்றாள் அனிதா.

"நான் என்ன மா பண்ண முடியும். உங்க அத்தை அப்படி தான். காச்சுமூச்சுன்னு கத்துவா. அவ அப்படி தான். நாளைக்கே உங்களுக்கு குழந்தை பொறந்த செய்தி கேட்டா, உடனே ஓடி வந்திடுவா..."அப்பா சிரித்தார். அனிதா என்னை பார்த்து புன்னகையித்தாள். புன்னகை கலந்த வெட்கம் அது.

ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்தேன். நாற்காலியில் உட்கார்ந்து இருந்த நான் கடிகாரத்தை கவனித்தேன். மருத்துவமனைக்கு வந்து இரண்டு மணி நேரம் ஆனது. மருத்தவர்களிடமிருந்து எந்த செய்தியும் வந்தபாடு இல்லை. என் எதிரே இருந்த சுவரில் குழந்தைகள் சிரிப்பதுபோல் படம் ஒட்டியிருந்தது.

அனிதாவிற்கு குழந்தைகள் என்றால் ரொம்ப ஈஷ்டம்.

ஒரு நாள் மெத்தையில் உட்கார்ந்து மடிகணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்த நான் அவள் அருகே சென்று அவள் அனுமதியின்றி அவள் கழுத்தோரத்தில் இதழ் பதித்தேன்.

பிடிக்காதவளாய் அவள், "ஐயோ... என்னது..ச்சீ..." செல்ல கோபத்துடன் என்னை தள்ளினாள்.

"ஆமா நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கே?" நான் எனது பார்வையை அவள் மடிகணினி மீது செலுத்தினேன். அதை பார்த்தபிறகு சிரிப்பு வந்தது...

(பகுதி 3)

May 15, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-1

அனிதாவின் கதறல் சத்தம் எனக்கு வேதனையை தந்தது. வீட்டிலிருந்து மருத்துவமனை போகும் வரை அழுகை. வலி தாங்க முடியவில்லை. தல பிரசவம் அப்படி தான் இருக்குமாம். மருத்துவர்கள் அவளை அவசர சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். நேற்று வரைக்கும் தைரியமாக இருந்தவளின் முகத்தில் பயம் படர்ந்ததை கவனித்தேன்.

மருத்துவமனை வாசலில் ஒரு பிள்ளையார் சிலை. பார்த்தேன். கும்பிடவில்லை. கொஞ்ச காலம் வரை இருந்த கடவுள் நம்பிக்கை, ஒரு கால கட்டத்திற்கு பிறகு முற்றிலுமாக இல்லை. காரணம் உண்டு.

என் மனதில் சுத்தியலால் யாரோ அடித்தார்கள். இல்லை, அடித்தது மனசாட்சி.

என்னால் தானே இப்படி...
ஏதோ ஒரு 5 நிமிஷம் சுகத்திற்காக...
ஆனால் குழந்தைகள் தானே கல்யாண வாழ்க்கையை முழுமை பெற செய்கிறார்கள்...
அவளுக்கு ஒன்னும் நடக்காது...
ஒரு வேளை அவளுக்கு ஏதேனும்....
குழந்தைக்கு ஏதேனும்...

ச்சே...தேவையில்லாத சிந்தனைகள் என்னை வாட்டி வதைத்தது. மருத்தவர்கள் ஒரு பக்கம் பரபரப்புடன் சிகிச்சை அறைக்கு ஓடினர். தாதி ஒருத்தி வந்தாள்,

"formalities.....நீங்க தானே mrs anithaவோட கணவர்....இந்த form fill up பண்ணுங்க" ஒரு பேப்பரை நீட்டினாள்.

படித்து பார்க்க மனமில்லை. கையெழுத்து போட்டேன்.

"அனிதாவுக்கு...ஒன்னும்...." துக்கம் தொண்டையை அடைத்தது. கட்டுபடுத்தி கொண்டேன்.

"we are trying our level best." அவசரமாக சென்றாள்.

தமிழ் சினிமாவில் பிரசவம் காட்சி வந்தால் மழை வரும். அப்போது எல்லாம் கிண்டல் செய்து இருக்கிறேன். ஆனால், அன்று வெளியே பெய்த கொண்டிருந்த மழை என்னை சாந்தப்படுத்தியது. ஜன்னல் வழியே எட்டி பார்த்தேன். மழை, மின்னல்!

உள்ளே அனிதா கதறி கொண்டிருந்தாள். அவள் ஒவ்வொரு முறையும் துடித்து கத்தும்போது, மனதில் இடி.

ஜன்னல் வழியே காற்றும் சாரலும் என் நினைவுகளை 8 மாதங்களுக்கு பின் இழுத்து சென்றன.

"வந்துட்டீயா அனிதா...எப்படி போனுச்சு office day rehearsal. நாளைக்கு show success தான் சொல்லு." படுக்கையில் படுத்து இருந்தேன். தூக்க கலக்கத்தில் எழுந்தேன்.

அனிதா ஒரு ஆபிஸில் கிளார்க் வேலை பார்க்கிறாள். அப்போது தான் அனிதா வீடு திரும்பினாள். இரவு மணி 10.30.

"ஓகே பா...நல்லா போனுச்சு....hope it turns out to be a successful show."என்றாள். என் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் போட்டிருந்த மஞ்சள் சுடிதார் எனக்கு பிடிக்கவில்லை. காலையிலே சொன்னேன். ஆனால் அவள் கேட்கவில்லை. கைகளை மடக்கி என் தலைக்கு பின்னால் வைத்தவாறு,

"இந்த டிரஸ் உனக்கு suitஆ இல்ல. கழட்டி போட்டுடு. நான் வேணும்னு help பண்ணவா" என்று எழுந்தேன்.

"ச்சீ....ஜொள்ளா..." என்னை தள்ளினாள். புன்னகையித்தேன்.

"நீ சாப்பிட்டீயா?" என்றேன்.

"இன்னும் இல்ல...." என்றாள். அவள் இன்னும் சாப்பிடாமல் இருந்தது எனக்கு கோபத்தை உண்டாக்கியது.

"அனிதா, உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன்... சரியான நேரத்துக்கு சாப்பிடனும்னு...இவ்வளவு நேரம் ஆயிட்டு... இன்னும் நீ...."

"இல்லடா... rehearsal பாத்துகிட்டே இருந்துட்டோம்... நேரம் போனது தெரியல்ல..."

"ஆமா... எப்ப பாத்தலும் ஒரு பதில் வச்சிருப்ப...."

" சாரி சாரி...." கெஞ்சினாள். அவள் விரல்களால் என் நெற்றியில் கிடந்த முடியை விலகிவிட்டு முத்தமிட்டாள். சிரித்தாள். கோபம் பஞ்சாய் பறந்தது.

"சரி சாப்பாடு ரெடி பண்றேன்... எத்தன தோசை வேணும்?" என்றேன்.

"ஒன்னு போதும்"

அவள் குளித்து முடித்து வருவதற்குள் நான் இரண்டு தோசைகளுடன் அறைக்குள் சென்றேன்.

"டேய், நானே வந்து சாப்பிட்டுகிறேன்... நீ எதுக்கு ரூம் வரைக்கும்..." அவள் முடிப்பதற்குள், அவளை படுக்கையில் அமர வைத்தேன்.

"இந்தா..." தோசையை சிறியதாய் பிய்த்து ஊட்டிவிட்டேன்.

"ஐயோ நானே சாப்பிட்டுகிறேன்..." என் கையை தடுத்தாள்.

நான் தொடர்ந்து ஊட்டிவிட்டேன். அடம்பிடிக்காமல் உண்டாள்.

"நீ சாப்பிட்டீயா?" என் தொடையில் கைவைத்து கேட்டாள்.

"ம்.." ஒற்றை சொல்லில் பதில். ஆனால் உண்மையில் அன்று நான் சாப்பிடவில்லை. மனசு சரியில்லை. ஒரு மாதிரியா இருந்துச்சு.

போர்வையை போர்த்தியபடி படிப்பதற்கு புத்தகத்தை கையில் எடுத்தாள்."சாரி டா... தூங்கிட்டு இருந்த நீ... உன் தூக்கத்த கெடுத்துட்டேன்ல..."

"ம்ம்...ஆமா...எப்ப உன்னைய முதல் தடவ பாத்தேனோ அப்பவே."

"ஐயோ...ச்சே...நீ ரொம்ப மோசம்." சிரித்தாள். தூங்கும் முன் கொஞ்சம் நேரம் புத்தகம் படிக்கும் பழக்கம் அவளுக்கு. அவள் படித்து கொண்டிருந்தாள். நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். புத்தக்கத்தில் அடுத்த பக்கத்தை திருப்பினாள், என்னை பார்க்காமலேயே,

"ஏய் ஜொள்ளா...என்ன இங்கயே பாத்துகிட்டு இருக்கே?"

"உன் மடியில கொஞ்சம் நேரம் சாஞ்சிக்கவா?"

மனசு சரியில்லாதவர்கள் தண்ணி அடிக்க போகிறார்கள். அவர்களுக்கு பொண்டாட்டி இல்லையா? மனைவியின் மடியில் தலை வைத்துப்படுக்கும் இன்பம் தெரிந்தவன் எவனும் தண்ணி அடிக்க போகமாட்டான்.

"என்ன ஆச்சு?" என் தலைமுடியை கோதியபடி கேட்டாள்.

"நாளான்னிக்கு மெடிக்கில் செக்-கப்ல...positiveஆ தானே வரும்?..." அவள் வயிற்றில் கைவைத்தேன். வெட்கப்பட்டாள்.

நாங்கள் நினைத்தபடியே மருத்தவர், "வாழ்த்துகள்! அனிதா, you are pregnant."
எங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"ஐயோ...அம்மா!" அனிதா அவசர சிகிச்சை அறையில் கத்தினாள். ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த நான் திடிக்கிட்டு போனேன். சுயநினைவுக்கு வந்தேன். பக்கத்தில் யாரோ ஒருவர் என் தோளை தட்டி,

"சார்... எனக்கு பையன் பிறந்து இருக்கான்....சுவீட் எடுத்துக்குங்கோ..." என்றார். நான் மறுத்தேன். அவர் வற்புறுத்தினார்.

சுவீட் கையில். என் வாழ்க்கை சுவீட் ஆனாதே அனிதா வந்தபிறகே.

ஐந்து வருடங்களுக்கு முன்னால்.....

அவள் வேலை செய்த ஆபிஸ் அருகே தான் என் ஆபிஸ். நான் அந்த ஆபிஸில் சேர்ந்து கொஞ்ச காலம் கழித்து தான் பக்கத்தில் ஆபிஸுக்கு ஒரு வேலை விஷயமாக போக நேரம் கிடைத்தது.

அப்போது தான் அனிதாவை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்தவுடனே மனதில் ஒரு மின்னல். கண்களுக்கு மட்டும் அல்லாமல் மனதிற்கும் அழகை தெரிந்தாள். அவளிடம் சென்று....

(பகுதி 2)

biggest loser-எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்?-3

உடற்பயிற்சியுடன் டையட்டும் முக்கியம். மூன்று இட்லிகள் சாப்பிடும் நேரத்தில் இரண்டை சாப்பிட ஆரம்பித்தேன். இப்படி பாதி அளவு சாப்பாட்டை குறைத்தேன். ஆரம்ப காலங்களில் கஷ்டமாக தான் இருந்துச்சு. chocolates, pepsi, coke, ice cream, biscuits, snacks, முறுக்கு, மற்ற பலகாரங்களை முற்றிலும் தவிர்த்தேன். அந்த நேரங்களில் தான் வீட்டில் உள்ளவர்கள் kfc, macdonald's, pizza, burger இப்படி ஏதாச்சு வாங்கி வருவார்கள். ஆனால், எதையும் தொட மாட்டேன். சில சமயங்களில் ஏக்கம் வரும்.

இவர்கள் வாங்கி கொண்டு வரும் நேரம் குறிப்பா இரவு நேரங்களில் தான் இருக்கும். ஏக்கத்தை தவிர்ப்பதற்கே நான் இரவு 7 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். முழித்து இருந்தால், அவற்றை சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம். இரவு நேரங்களில் சாதம் சாப்பிடுவதை முற்றிலுமாக கைவிட்டேன். நாம் அதிகபடியாக சாதம் சாப்பிடுவதே நம் உடல் பருமனாக இருக்க காரணம். இரவு நேரங்களில், பழங்கள் அல்லது சப்பாத்தி என்று உணவு பழக்கம் மாறியது. சாப்பிடும்போது பாதி வயிறு நிரம்பும் வரை தான் சாப்பிட வேண்டும்.

பின்னர், aerobics, hip hop வகுப்புகளுக்கு சென்றேன். பயிற்சிவிப்பாளர் ஆடும்போது அது ஹிப்-ஹாப், அதே ஸ்டப்புகளை நம்ம போடும்போது, ஏதோ டப்பாங்குத்து மாதிரி இருக்கும். ஆமா.. சரியா ஆடி நம்ம என்ன உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சிக்கா போக போறோம். கை கால்களை அசைத்து, வேர்வை வெளியாகி, caloriesகளை குறைப்பதே எனது நோக்கம்.

இப்படி செய்ய, 9 மாதங்களில் 66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு வந்தேன். பெரிய பெரிய சாதனை. பார்த்தவர்கள் நிறைய பேர், ரொம்ப இளைச்சுட்டே என்று சொல்லும்போது என்னுள் எழுந்த பெருமிதம் வானளவு!
காலேஜில் நிறைய பேர், "ஏய் என்னடி... செஞ்சே...you look good...you lost so much of weight.." என்று பாராட்டினர்.

போட முடியாத சட்டைகள் பல அதற்கு அப்பரமும் போட முடியவில்லை.
காரணம்?
அவை இப்போது பெரியாதாய் இருந்தன.ஹாஹாஹா.... நிறைய உடைகளை alter செய்து தான் போட்டுகொண்டேன்.

வீட்டில் ஒரு digital weighing machine வாங்கினேன். அதில் தினமும் காலையில் எடை பார்த்தபிறகு தான் மறுவேலை நடக்கும்.

எனக்கு ஒரு ஆசை, பேராசைகூட வைத்து கொள்ளலாம். 53 கிலோவில் இருக்கும் நான், 50க்கு வர வேண்டும் என்பதே! எல்லாரும் 50 கேஜி தாஜ்மகால்ன்னு சொல்றாங்களே, அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பதே ஒரு முறை உணர்ந்து பார்க்க வேண்டும்.

சிரமம் எடையை குறைப்பது என்றால் அதைவிட சிரமம் 53விலே maintain செய்வது.

பரிட்சையில் தோல்வி அடைந்தவன் வெற்றி பெற்றுவிடுவான் அடுத்த முறை. ஆனால் இந்த 99 மார்க் வாங்கினவன் 100 மார்க் எடுக்க ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவான். இந்த நிலைமையில் தான் நான் இருக்கிறேன். 9 மாதங்களில் 53க்கு வந்த நான், 53லிருந்து 50க்கு வர ரொம்ப கஷ்டமாக இருக்கு!:)

May 14, 2009

biggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன் - 2

பகுதி 1

நீச்சல் வகுப்பில் நானும் இன்னொரு சீன பெண் தான். அவங்க சீனியர். பல வித ஸ்டைல்கள் தெரியும். நான் beginner. பயிற்சிவிப்பாளர் வந்தார். புகைப்பிடிப்பவர். புகை நாற்றம் வயிற்றை பிரட்டியது. வாந்தி வருவது போல் இருந்தாலும் கட்டுபடுத்தி கொண்டேன். முதல் வகுப்பு என்பதால் ரொம்ம்ப பேசினார். lecture அடித்தார்.

'பொதுவா இந்தியர்களுக்கு நீச்சல் வராது." என்றார். முறைத்தேன்.

"இல்ல இல்ல...அவர்கள் ஓடுவதில் தான் experts" என்று சமாளித்தார்.

பக்கத்தில் 2, 3 வயது குழந்தைகள் சுலபமாக நீந்துவதை பார்த்து பொறாமை வந்தது. சின்ன வயதிலேயே நீச்சல் கற்று இருக்கலாமே என்ற ஏக்கம். அப்போது வசதி இல்லை, பெற்றோர்கள் அழைத்து செல்வதற்கு நேரம் இல்லை.

முதல் வகுப்பு முடிந்தது. எப்படி float செய்வது என்பதை கற்றேன். ஒவ்வொரு செவ்வாய்கிழமை தான் வகுப்பு. இருந்தாலும், அடுத்த செவ்வாய் வருவதற்கு முன்னாலே மூன்று அல்லது நான்கு முறை நானாகவே நீச்சல் குளத்திற்கு சென்று பயிற்சி செய்தேன். அதன் காரணமாக மூன்றாவது வகுப்பிலேயே முதன் முதலாக 50 மீட்டர் நீந்தினேன் எந்த இடத்திலும் நிறுத்தாமல்! வாழ்க்கையில் நான் செய்த ஒருசில சாதனைகளில் இதுவும் ஒன்று. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"நீ ரொம்ப வேகமா கத்துக்கிற" என்றார் பயிற்சிவிப்பாளர்.

நான்காவது வகுப்பு முடிந்த பிறகு, வகுப்பிற்கு போவதை நிறுத்திவிட்டேன். நீச்சல் தெரிந்தவுடன் நானாகவே சென்று 10 laps அல்லது 20 laps(கிட்டதட்ட 1 km) நீந்தினேன்.உடல் எடையை குறைப்பதற்காக இந்த முயற்சி. நீச்சல் செய்தால் thigh fats குறையும்.

இப்படி ஒரு பக்கம் சென்றது.

வீட்டின் கீழ் தாளத்தில் உடற்பயிற்சி செய்ய சின்ன இடம் இருக்கிறது. காலை நேரங்களில் சென்று skipping செய்தேன். 100 முறை ஸ்கிப் செய்துவிட்டு 13 மாடி ஏறுவேன். மறுபடியும் கீழே வந்து இன்னொரு 100 முறை ஸ்கிப் செய்வேன். மறுபடியும் மாடி ஏறுவேன். இப்படி 5 முறை செய்வேன். வேர்த்து கொட்டும். கால்களிலுள்ள தசைகள் வலிக்கும். உயிர் போவது போல் இருக்கும்.

ஆனால், என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான் - உடம்பை குறைக்க வேண்டும்!

உடம்பை குறைப்பது என்பது....
it is not a struggle in the body. it is the battle between the heart and the mind!

இது போதாது என்று, ஜிம்மிற்கு போக ஆரம்பித்தேன். முதன் முதலாக ஜிம் போகும்போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அங்கே உள்ளவர்கள் நம்மை பார்ப்பார்களோ, என்ன நினைப்பார்களோ என்று பல சிந்தனைகள். அங்கு சென்று பார்த்தபிறகு ஒரு புதிய தன்னம்பிக்கை.

வயது 40, 50 இருக்கும் பெண்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக பயிற்சி செய்வதை பார்த்து எனக்கு பெருமையாக இருந்தது. அவர்களை பார்த்து நிறைய கற்றுகொண்டேன்.

முதன் முதலாக ஆரம்பித்த போது threadmill 10 நிமிடங்கள் நடக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும். stamina பத்தாது! பத்தி நிமிடங்கள் நடந்தவுடன் உட்கார்ந்து கொள்வேன். இப்படி பயிற்சி செய்து என்னிக்கு நம்ம உடம்ப குறைப்பது என்ற சோகம்! சில சமயங்களில் சோர்ந்து நொந்து போயிவிடுவேன். ஆனால், ஏதோ ஒன்று மனதில் சொல்லும்-உன்னால் முடியும் என்று!

staminaவை முன்னேற்றி கொண்டாலே போதும்! அதற்கு தொடர்ந்து ஜிம்-மிற்கு சென்றேன்.
threadmillலில் 20 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்து, பிறகு ஓட ஆரம்பித்தேன்.
mini-weights தூக்கினேன்.
cycling machineலில் 25 நிமிடங்கள் பயிற்சி செய்தேன்.

ஒவ்வொரு முறையும் நான் அன்று ஜிம்மில் என்ன செய்தேன், எவ்வளவு calories குறைத்தேன் என்பதை டைரியில் எழுதினேன். 100 caloriesலில் ஆரம்பித்து, உச்சகட்டமாக 1200 calories வரையிலும் சென்றுள்ளேன். அதாவது ஒரு நாளில் 1200 calories குறைப்பது என்பது கிட்டதட்ட மூன்று மணி நேர உழைப்பு!

அங்குள்ள weighing machineலில் எடையை பார்த்தபோது, ஒவ்வொரு வாரமும் குறைந்து கொண்டே வந்தது. சந்தோஷம் தாங்க முடியவில்லை. கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே....

என் சூழ்நிலைக்கு ஒத்துவராத பொன்மொழி!

பயிற்சி செய்தால் மட்டும் போதாது, சாப்பாட்டின் அளவையும் குறைக்க வேண்டும்...

ஆனால்...

(தொடரும்)

May 13, 2009

biggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்?-1

biggest loser நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தபோது, பழைய நினைவுகள் என்னை தீண்டின.

2007 மே மாதம்.

காலேஜ் முதலாம் ஆண்டு முடியும் வேளை. காலேஜ் வாழ்க்கையில் settle ஆக ரொம்ப கஷ்டப்பட்டேன். படிப்பு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நிறைய தேர்வு, assignment. பள்ளி நண்பர்களிடம் பேச கூட நேரம் இல்லை. வெளியே போகவில்லை. கிட்டதட்ட பைத்தியம்போல் இருந்த காலம். அதிகபடியான மன உளைச்சலால் நிறைய சாப்பிட ஆரம்பித்தேன். அதன் விளைவு. obesity பிரச்சனை! என் உயரத்திற்கு நான் 49-52.9 கிலோக்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் 66 கிலோ இடையில் இருந்தேன். மருத்தவர் எச்சரித்தார், "நீங்க இப்படியே போய்கிட்டு இருந்தீங்கன்னா, சின்ன வயசுலே diabetics, heart problem வர வாய்ப்பு இருக்கு."

அப்போதுகூட நான் அதை சீரியஸாக எடுத்துகொள்ளவில்லை. அதற்கு அப்பரம் நடந்த இரண்டு சம்பவங்கள்.

1) என் மாமா மகள், வயது 5 தான் இருக்கும். அவர்கள் வீட்டில் ஃபோட்டா எடுத்தோம் ஒருநாள். ஃபோட்டாவில் நான், அக்கா, அவள். ஃபோட்டாவை பார்த்து அவள் என்னிடம் சொன்னாள், "நீங்க ஏன் இவ்வளவு பெரிசா இருக்கீங்க? ஃபோட்டா முழுசா நீங்க தான்..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள்கூட சேர்ந்து சிரிப்பதா. இல்ல, ஒரு சின்ன புள்ள நம்மள பாத்து சொல்லிட்டேன்னு அழுவதான்னு ஒன்னும் புரியல்ல....மனசுக்குள் ஒரு மணி அடித்தது.

2) இன்னொரு முறை, நானும் என் அப்பாவும் மின்தூக்கிக்காக காத்திருந்தபோது, அவர் என்னை பார்த்து ஒன்று சொன்னார். (ரொம்ப மோசமான கமெண்ட்...அதை இங்கே சொல்ல முடியாது.) என்னடா இது இவர் இப்படி நம்மை பார்த்து சொல்லிட்டாரேன்னு அன்று இரவு முழுசும் ஒரே கவலை. நம்ம என்ன அப்படி குண்டாவா இருக்கிறோம் என்று மனம் நொந்து போனது.

கண்ணாடியில் பார்த்தேன். உண்மை சுட்டது! என்னிடம் ஒரு பத்து சட்டைகள் இருந்தால், அதில் இரண்டு மட்டுமே போட முடியும். அந்த அளவுக்கு நிலைமை இருந்தது. உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு முடிவு எடுத்தேன். உடல் இடை குறைக்கும் ஒரு நிறுவனத்திற்கு சென்றேன். அங்கே ஒரு கணிசமான தொகையை செலுத்தி, இயந்திரங்கள் உதவியால் beltகளை வயிற்று பகுதி, கால் பகுதியில் சுற்றி வைப்பார்கள்.

அரை மணி நேரத்திற்கு அவை உடம்போடு ஒட்டி இருக்கும். ஆனால், அதிலிருந்து சூடு வரும். அந்த சூட்டினால் உடல் இடை குறையுமாம்! நானும் நம்பி போனேன். சொல்ல முடியாத வலி! அரை மணி நேரம் முடியும் முன்னே கத்திவிட்டேன். என்னை விட்டுவிடும்படி சொல்லி கிளம்பிவிட்டேன். அதுக்கு அப்பரம் நடக்கவே முடியல.

வாத்துக்கு piles வந்தா எப்படி நடக்குமோ, அப்படி நடந்தேன். கட்டடத்தின் கீழ் தளத்தில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுது இருப்பேன். சூட்டினால் ஏற்பட்ட வலி, உடல் பருமனாக இருக்கிறேனே என்ற வலி, மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களே என்ற வலி, நமக்கு பிடித்த ஆடைகளை போட முடியவில்லையே என்ற வலி, இந்த சின்ன வயசுல ஏன் எனக்கு இந்த கஷ்டம் என்ற வலி....என்று வலிகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

அழுது முடித்தேன். இந்த இடத்திற்கு மீண்டும் வந்தால் என்னை உயிரோடு சமாதிகட்டிவிடுவார்கள். பணத்தை கட்டிவிட்டோம், அப்பணம் பழனி உண்டியலில் போட்டதாக நினைத்து கொண்டேன். ஆக, சொந்த முயற்சியில் இறங்கினேன். அம்மா என்னை நீச்சல் வகுப்பில் சேர்த்துவிட்டார்.

நீச்சல் வகுப்பில்.....

(பகுதி 2)

ஜஸ்ட் சும்மா(13/5/09)

காலேஜ் இருக்கும்போது, அம்புட்டு வேலை இருக்கும். ஆனா எழுதுறதுக்கு 1008 விஷயங்கள் தோணும். இப்போ லீவு தானே.. ஆனா இந்த (மர)மண்டையில ஒரு மண்ணும் தோண மாட்டேங்குது... அது ஏன்னு தெரியல.... லீவுல தான் நிறைய எழுதுறதுக்கு நேரம் கிடைக்கும்.ஆனா ஒன்னுமே எழுத தோணல...எழுத வரல...அதான் இப்படி ஜஸ்ட் சும்மா....

ஆனந்த தாண்டவம் படத்தில் இடம்பெற்ற கனா காண்கிறேன் பாடலை ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல கேட்குறேன். சமீப காலத்தில் வந்த பாடல்களில் என்னை கவர்ந்த ஒரு பாடல் இதுவே!! பாடல் வரிகள் ரொம்ம்ப நல்லா இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------

biggest loser என்ற அமெரிக்கா நிகழ்ச்சி ஒன்று, அதை தினமும் பார்த்து கொண்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சி குண்டா இருப்பவர்கள் 15 வாரங்களில் எப்படி தங்களது இடையை குறைக்கிறார்கள் என்பதை பற்றி. ஒவ்வொரு ஆளும் எடுக்கும் முயற்சியை பார்க்கும்போது ரொம்ம்ப வியப்பா இருக்கும். என்னையே நான் பார்த்த மாதிரி ஒரு உணர்வு... ஏன் என்றால் ஒரு காலத்தில் நானும் குண்டா இருந்து, நிறைய கஷ்டப்பட்டு 13 கிலோ குறைத்தேன். அந்த 'இரத்த கண்ணீர்' கதையை விரைவில் எழுதுகிறேன்:(
----------------------------------------------------------------------------------------

1988 ஆம் ஆண்டு சச்சின் 10வது வகுப்பு தேர்வில் தோல்வி. ஆனால் 2008 பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முதல் பாடமே சச்சினை பற்றி தான்! முயற்சியே பலம்- இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது. அன்றே சச்சின்- ஒரு சுனாமியின் சரித்திரம் என்னும் புத்தகத்தை இரவல் வாங்கி படித்தேன். ஓ மை காட்ட்ட்ட்ட்ட்ட்ட், சச்சின் இஸ் சிம்பிலி சூப்ப்ப்ப்ப்ப்ர்ப்ப்!! எத்தன சங்கடங்கள், சோதனைகள், சாதனைகள், கஷ்டங்கள், கேப்டனாக தோல்வி, சக விளையாட்டர்களின் பொறாமை, பகைமை, கிரிக்கெட் வாரியம் செய்தவை.... அவரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியது அப்புத்தகம். அதை படித்தவுடன் ஏதோ ஒரு புத்துணர்ச்சி!!
-------------------------------------------------------------------------------------

நேற்று சன் டிவில காதல் படத்த போட்டான். நானும் அக்காவும் பார்த்து கொண்டிருந்தோம். சந்தியாவின் வண்டி கோளாறு ஆனவுடன் பரத் கடைக்கு எடுத்து செல்வார்கள். அப்போது சந்தியாவின் தோழி, "வண்டிய நீங்க தான் பாக்கனுமா? வண்டி ஆசைப்படுது." என்பாள். ஆனால் நேற்று 'வண்டி ஆசைப்படுது' என்ற ஷாட்டை கட் செய்துவிட்டான்.
நான் உடனே, "அக்கா, ஒரு டயலாக்க கட் பண்ணிட்டான் பாவி பய."

அக்கா ஒரு மாதிரியாய் என்னை பார்த்து, "ஆமா.. நீ எத்தன தடவ இந்த படத்த பாத்துருக்க... இவ்வளவு கரெக்ட்டா சொல்றே."

நான் அசட்டு சிரிப்பு சிரித்தேன்:)
---------------------------------------------------------------------------------------
பசங்க படத்தை பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா எங்க ஊர்ல இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆன்லைனிலும் தேடி பார்த்தேன். ஒன்றும் சரியா கிடைக்கவில்லை.:(
---------------------------------------------------------------------------------------

குறிப்பு: அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)

May 10, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-6



தற்போது...தற்போது...தற்போது.... சரி மேட்டருக்கு வரேன்.... தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர் நம்ம ஆனந்த தாண்டவன் படத்தின் ஹீரோ சித்தார்த் வேணுகோபால்!

attractive feature- தாடி, புன்னகை, கண்கள்
இவர பத்தி அதிகமா அலசி ஆராய்ந்துவிட்டேன் சும்மா அரட்டையில். ஆக, அடுத்த நபரை பத்தி பார்ப்போம்(ஓ... ஓ.... சன் டிவி டாப் டென் பாத்த பாதிப்பு..சரி ஃவிரியா வுடுங்க.

rock on படத்தை பார்க்கவும்னு என் சின்ன தம்பி வானவில் வீதி கார்த்திக் சொன்னார். ஆனா ஒன்னே ஒன்னு சொல்லவில்ல... அந்த படத்தில் எம்புட்டு அழகான பசங்க இருப்பாங்கன்னு... படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 4 வாலிபர்கள். அதுல ரெண்டு பேரு...ம்ம்ம்.... செம்ம கியூட்ட்ட்ட்ட்!

farhan aktar


Purab kohil


இவர்களுக்காகவே படத்தை மூன்று முறை பார்த்தேன். படம் செம்ம...டாப்! ரொம்ம்ப யதார்த்தமான வசனங்கள்! அப்பரம் பசங்க...சொல்லவே வேண்டாம்...அசத்து அசத்துன்னு அசத்திட்டாங்க!! rock on man!!:)

May 7, 2009

சும்மா அரட்டை-4

வெட்டியாக இருந்த நானும் என் தோழியும் அடித்த அரட்டை...(குறுந்தகவல்கள் வழி...)

தோழி: ஏய் ஆனந்த தாண்டவம் படம் பாத்தீயா? 2nd half ரொம்ப மொக்கை.அந்த ஹீரோ not bad...i like.. haha...

நான்:பாத்தேன் பாத்தேன். நல்ல கதை தான். ஆனா.. எங்கேயோ ஆரம்பிச்சு... எங்கேயோ போன மாதிரி இருக்கு.... கடைசில முடியல....செம்ம சொதப்பல்ஸ். ஆனா.. i liked that hero's dad's role. wish all fathers in the world are like that. and oh god.. that hero looking dammmnnn cute!

தோழி: ஏய் ஆமா... அவன் details கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லேன்...

நான்: ஹாஹா..24 hrs டைம் கொடு.. கண்டுபிடிச்சு சொல்றேன்.

தோழி: ஆஹா... நீ தான் என் சினிமா encyclopedia!

(கொஞ்சம் நேரம் கழித்து..)

நான்: கண்டுபிடிச்சுட்டேன்...i saw his interview online... ஏய் நம்ம ஊர் ஆளு தான்.. i thought he was a north indian fellow! அழகா தமிழ் பேசுறேன் மேன்..கோய்ம்பத்தூர். engineering படிச்சவன். சென்னையில் software engineer வேலை ஒரு வருஷமா. இப்போ படத்துல.

தோழி: அப்போ...அவனுக்கு என்ன வயசு இருக்கும்?

நான்: ம்ம்...27 ப்ளஸ்...

தோழி: so old?? am so sad...

நான்: ஏய்... 27 உனக்கு வயசு அதிகமா? 27 is still young di!

தோழி: ஹாஹா... ஆமா... அதுவும் உண்மை தான்... சரி பரவாயில்ல.. adjust பண்ணிக்கலாம். மத்த details?

நான்: மத்த டீடேள்ஸ் என்ன வேணும்? அடுத்து அவன் ஜாதகத்த தான் தேடனும்..ஹாஹா...

தோழி: ஹாஹா... கடைசி வரைக்கும் அந்த மொக்கை படத்த பாத்தது அவனுக்காக தான்!

நான்: ஏய் மச்சி...வேட்...வேட்...அவனோட இன்னொரு பேட்டி பாத்தேன்... அவன் சொன்னான்...வெயில் படம் ரிலீஸ் ஆகும்போது அவன் காலேஜ் படிச்சுகிட்டு இருந்தான்னு! அப்போ...வெயில் படம் வந்தது 2006ல. சோ...அவன் காலேஜ் 1st இயரா இருக்க முடியாது. 2nd இயராகவும் இருக்க முடியாது. இஞ்சினியர்ங் 4 வருஷம் படிப்பு. சோ...2006 அவன் ஒன்னு 3rd இயர் or 4th இயர் இருக்கும்! ஆக...அவன் 2006... 20 அல்லது 21 வயசு தான் இருக்கும்! ஆக...இப்ப அவனுக்கு 23 அல்லது 24 தான் டி இருக்கும்!!!!!!!!

தோழி: ஐயோ முடியல! ஹாஹா...அப்போ ரொம்ப நெருங்கிட்டான்! u made my day!

நான்: நெங்கிட்டானா? அட பாவி...oh my god...oh my god... he is in facebook also... go and add him!!

தோழி: இந்த நேரம் பாத்து நான் வெளியே இருக்கேனே... சரி சரி..வீட்டுக்கு போனவுடனே add பண்ணிடுறேன்:)

நான்: நம்ம வெட்டியா இருக்கோம்னு இதுலேந்தே தெரியுது! we are slacking too much...


தோழி: பசங்களுக்கு திரிஷா ஸ்ரேயான்னா...நமக்கு இந்த மாதிரி! ஒன்னும் தப்பில்ல! பரவாயில்ல... லீவுல எஞ்ஜாய் பண்ணாம அப்பரம் எப்போ?அப்படியே cycle gapல சைட் அடிப்போம்.

நான்: cycle gap தானே? நோ....எனக்கு full time job அதுவே!

தோழி: அத தான்.... நான் கொஞ்சம் decentஆ சொன்னேன் :)

முந்தைய சும்மா அரட்டைகள்

May 5, 2009

மலர்களே மலர்களே, இது என்ன கனவா-2

பகுதி 1

"எதுக்குடா அப்பரம் அவள கூப்பிட்ட.... பேச வேண்டியது தானா! சும்மா அமைதியாவே உட்கார்ந்து இருக்கீயே... எதுக்கு? நீயெல்லாம் சரியான....த்தூ...." என்று கண்ணாடியில் பார்த்து தன்னையே திட்டினான் செல்வம். ஒரு நிமிடம் கண்களை மூடி மறுபடியும் திறந்தான், பெருமூச்சு விட்டான். கண்ணாடியில் பார்த்து,

"இங்க பாரு... நீ இப்ப போற. பேசுற!" தனக்கு தைரியத்தை வரவழைத்து கொண்டு சென்றான். அஷ்விதா புன்னகையித்தாள். உட்கார்ந்தான் செல்வம்.

"ம்ம்...நான்..ம்ம்.." இழுத்தான் செல்வம். மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்த அஷ்விதா ஆரம்பித்தாள்,

"இங்க பாரு செல்வம்.... வோட்கா விலை என்னமா ஏறிபோச்சு? கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, பாதி விலையா தான் இருந்துச்சு?"

செல்வத்திற்கு ஆச்சிரியமாக இருந்தது. எப்படி இவளுக்கு எதெல்லாம் தெரியும் என்ற குழப்பம்.

"இந்த பொண்ணுக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறீயா?"

"நான் யோசிச்சது எப்படி உனக்கு....?" மறுபடியும் குழம்பினான்.

'உன் மனசுல ஓடுறது தான் நேரடி ஒளிப்பரப்பா உன் முகம் காட்டி கொடுத்துட்டே?" என்று சொல்லி சிரித்தாள். அவனும் சிரித்தான்.

"காலேஜ் முதல் வருஷம் படிச்சப்போ.. முதல் செம்மஸ்ட்டர்... எல்லாம் பரிட்சையும் ஊத்திகிச்சு. என் குரூப்ல ஒருத்திகூட பாஸ் பண்ணல்ல. ரொம்ம்ப சோகமா போச்சு." என்று வருத்தமாக பேசினாள்.

தொடர்ந்தாள், "என்ன செய்யுறதுன்னு தெரியல.... மனசே விட்டு போச்சு... யாருக்கும் தெரியாம...." என்றவள் சுற்றுமுற்றும் பார்த்தவிட்டு செல்வத்தை அருகே வர சொன்னாள், அமைதியான குரலில்,

"எல்லாரும் வோட்கா அடிச்சிட்டோம்!" என்று சொல்லி சிரித்தாள். அவள் கலகலப்பாக பேசியதும் உண்மையை சொன்ன விதமும் அவள் மீது இருந்த ஆசையை அதிகப்படுத்தியது.

"ஆனா.. இந்த கருமத்த எப்படி தான் குடிக்கிறாங்களோ... குடிச்ச மறுநாளே, எங்க குரூப்ல எல்லாருக்கும் வாந்தி, பேதி... மயக்கம்னு ஒரு வாரம் தவிச்சு போயிட்டாம்... ஆமா... நீ தண்ணி அடிப்பீயா?" என்று திடீரென்று கேட்டவுடன் மிரண்டுவிட்டான் செல்வம்.

மிரண்டவன்," ஐயோ... எனக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாது. இது வரைக்கும் எந்த பரிட்சையிலும் fail ஆனது இல்ல ." என்றான். அவன் சொன்னதை கேட்டு மறுபடியும் சிரித்தாள் தனது வெண்மையான பற்கள் தெரியும்படி. சிரிக்கும்போது கண்களில் ஒரு வசீகரம் வீசியது. 'oh man, she looks so cute' என்றது செல்வத்தின் மனம். அவளின் சிரிப்பு அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது, முதன் முதலாக கேள்வி கேட்டான்.

"நீ இன்னிக்கு வந்தது உங்க வீட்டுல...." என்று கேள்வியை முடிப்பதற்குள், தண்ணீரை குடித்து கொண்டிருந்தவள்,

"ஓ நோ... தெரிஞ்சுதுன்னா அவ்வளவு தான்!" தண்ணீர் லேசாக சிந்தியது. துடைத்து கொண்டே,

"எங்க வீட்டுல அப்பரம் அவ்வளவு தான்.... எங்க அம்மா ஒரு மெகா சீரியலே ஓட்டிடுவாங்க..." என்றாள். ஆஹா பொண்ணு நம்மை போலவே தான் என்ற ஒரு எண்ணம் வந்தது.

"அப்பரம் என்ன சொல்லிட்டு வந்த?"

" mrs claire retire ஆக போறாங்க. அவங்க கடைசி நாள் ஆபிஸுல. அவங்களுக்கு farewell partyன்னு சொன்னேன்."

"யாரு அவங்க?"

"யாருக்கு தெரியும்... ஏதோ வாய்க்கு வந்த ஒரு பெயர்!" என்று சொல்லி சிரித்தாள். அவள் பேச்சு செல்வத்திற்கு ரொம்ப பிடித்து இருந்தது. இன்னும் சகஜமானான். இருவரும் நிறைய பேசினர். சாப்பாடு வந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் மேசையில் இருந்த செல்வத்தின் ஃபோன் ஒலித்தது. எடுத்து பார்த்தான் வாசுவிடமிருந்து மெசேஜ்

டேய், பரிச கொடுத்தீயா இல்லையா?

பார்த்துவிட்டு கடுப்பானான் செல்வம். பதில் எதுவும் அனுப்பவில்லை. மறுபடியும் தன்னை உசுபேத்திவிட்டானே என்ற கோபம் செல்வத்திற்கு.

"are you alright selvam?" மேசையிலிருந்த செல்வத்தின் கையின் மீது கை வைத்து கேட்டாள். அக்கணம் அவனுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. அந்த மாதிரி உணர்வு இதற்கு முன்னால் ஏற்பட்டதில்லை. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உணர்வு. ஒரு வழியாய் சமாளித்து கொண்டவன்,

"i am ok. i am ok...." என்றான். புன்னகையித்தவள் அவள் கையை எடுத்தாள்.

'ஐயோ.. இவ்வளவு சீக்கிரம் கையை எடுத்துவிட்டாளே!" என்று அவன் மனம் ஏங்கியது.

"சரி டைம் ஆச்சு, போலாமா?" என்றாள்.

"வா... உன் வீட்டுக்கிட்ட drop பண்றேன்?" என்றான் செல்வம்.

"இல்ல இல்ல.... பரவாயில்ல. நான் பஸுல போய்டுவேன்..."

"mrs selvam இனிமேல பஸுலலாம் போக கூடாது."

புன்னகையித்தபடி அவன் பின் தொடர்ந்தாள். கார் அருமையாக உள்ளது என்பதை பற்றியும் செல்வம் நல்ல கார் ஓட்டுகிறார் என்பதை பற்றியும் பேசி கொண்டு வந்தாள். செல்வத்திற்கு சந்தோஷமாக இருந்தது. அவள் வீட்டு அருகே வந்தனர். கார் ஒரு மரத்திற்கு பக்கத்தில் நின்றது.

"தேங்கியூ செல்வம்.. thanks for the treat too!" என்றபடி காரிலிருந்து இறங்கி சென்றாள்.

செல்வம் பின்னாடியிலிருந்து கூப்பிட்டான் அவளை. யாரும் இல்லாத தெரு. வெளிச்சம் அதிகம் இல்லை. அவள் அருகே சென்றான்.

"என்ன செல்வம்? ஏதாச்சு சொல்லனுமா?"

"இல்ல... ஒன்னு கொடுக்கனும்?"

"என்ன?" முழித்தாள்.

"இன்னிக்கு முதன் முதலா வெளியே போயிருக்கோம்... பேசியிருக்கோம்..." சொல்ல முடியாமல் தவித்தான்.

"ம்ம்....சோ?" என்றாள்.

"பரிசு ஒன்னு கொடுக்கனும்னு ஆசைப்படுறேன்...." என்றவன் முன்னால் சற்று சாய்ந்து அவளது வலது கன்னம் அருகே தன் முகத்தை கொண்டு சென்றபோது,

"செல்வம்... what are you trying to do man?" என்று அஷ்விதாவிற்கு கோபம் வர, செல்வத்தின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டாள்.

கார் பயங்கரமான சடன் பிரேக்குடன் நின்றது.

"என்ன ஆச்சு செல்வம்...are you ok?" பதற்றமாய் கேட்டாள் அஷ்விதா. சுயநினைவுக்கு வந்த செல்வத்தின் முகத்தில் அதிர்ச்சி. தான் கண்டது எல்லாம் நனவு இல்லை என்ற நிம்மதி ஒரு பக்கம் இருந்தாலும், பயம் இன்னொரு புரம் இருந்தது.

"ஐ எம் ஓகே...." ஏதோ சமாளித்தான்.

கார் அதே போல் ஒரு மரத்திற்கு பக்கத்தில் நின்றது. தான் விடைபெற்று கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு நடந்து சென்றாள். யாரும் இல்லாத அதே தெரு. வெளிச்சமும் இல்லை. செல்வம் சத்தம் போடாமல் கூப்பிட்டான்,

"அஷ்விதா...."

அஷ்விதா திரும்பி பார்த்து மீண்டும் கார் அருகே வந்தாள். செல்வமும் காரைவிட்டு இறங்கி நின்றான். அதே படபடப்பு

"அஷ்விதா... thanks."

"எதுக்கு செல்வம்?"

"இல்ல... இன்னிக்கு.. நீ வந்தது... அதான்... thanks." உளறினான் செல்வம்.

"ஏய் இதுக்கு போய்.. எதுக்குப்பா நன்றிலாம் சொல்லிகிட்டு..." புன்னகையித்தாள்.
தொடர்ந்தாள்,

"ஏ.. சுத்தமா மறுந்துட்டேன்... உனக்கு ஒரு பரிசு கொடுக்கனும்னு ஒன்னு வாங்கி வச்சு இருந்தேன்..." என்றவள் தனது கைபையில் பரிசை தேடினாள். அவள் தேடுவதை செல்வம் பார்த்து கொண்டிருந்த வேளையில்,

"இச்!" கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள் அஷ்விதா.

செல்வத்திற்கு 150 அடி பூமிக்குள் போய், பிறகு வானத்திற்கு போவதுபோல் இருந்தது. கிறங்கடிக்க வைத்தது. அவனது கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

*
*
*
*

கொஞ்சம் நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். அஷ்விதா என்ன செய்வது என்று தெரியாமல் மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்தாள். செல்வத்திற்கு..ம்ஹும்ம்... சொல்லவே தேவையில்லை. நிறைய பேச வேண்டும் என்று நினைத்து வந்தவன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். தனது கைபேசியை மேசையில் வைத்துவிட்டு,

"excuse me..." என்றுபடி கழிவறைக்கு சென்றான் செல்வம்.

அச்சமயம் செல்வத்தின் கைப்பேசி ஒலித்தது. அதை எடுத்து பேசலாமா வேண்டாமா என்று யோசித்தாள் அஷ்விதா. ஒலி அளவுக்கு அதிகமாக இருந்ததால், அதை 'கட்' செய்தாள். மறுபடியும் கைப்பேசி ஒலித்தது. அதை எடுத்து பார்த்தாள், 'வாசு' என்று மின்னியது. 'கட்' செய்தாள். மறுபடியும் ஒலித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் எடுத்து பேசவதற்குள் மறுமுனையில் வாசு,

"டேய் மச்சி சொல்ல மறந்துட்டேன் டா.... நீ கிஸ் கொடுக்கும்போது வெளிச்சமான ஏரியாவுல இருக்கும்போது கொடுத்து தொலைச்சிடாத...atmosphere lighting கொஞ்சம் மங்கலா இருக்கனும். இந்த கிஸ பரிசா கொடுத்து அவள் அசத்தனும்.. சரியா... என்னடா பேச்ச காணும்... ஓ ஓ.. அவ முன்னாடி உட்கார்ந்து இருக்காளா? ஓகே மச்சி.... i shall not disturb you. enjoy machi!" என்று சொல்லி முடித்தான்.

அஷ்விதாவிற்கு புரிந்தது. கைபேசியை பார்த்து புன்னகையித்தபடி அதை மேசையில் வைத்தாள்.
*
*
*
"ம், இத கொடுக்க இவ்வளவு வெட்கம்.... அதுக்கு இவ்வளவு டென்ஷனா?" செல்வத்தின் மூக்கை செல்லமாக அசைத்தாள்.

"anyway, வாசுக்கு thanks சொல்லிடு... good night" என்று சொல்லிவிட்டு சென்றாள். அவள் சொன்னது எதுவுமே செல்வம் காதுகளில் விழவில்லை. மயக்கத்திலே இருந்தான்......

*முற்றும்*

May 4, 2009

மலர்களே மலர்களே, இது என்ன கனவா-1

அவளை தனியாக பார்த்து பேச வேண்டும் என்ற ஆவல். சந்திக்க முடியுமா என்று குறுந்தகவல் அனுப்பினான் செல்வம். ஆனால், அனுப்பி வைத்த பிறகு தான் பயம் வந்தது. அவள் தவறாக எண்ணிவிடுவாளோ, கல்யாணத்திற்கு முன் இப்படி சந்திப்பது தவறு என்ற நினைப்பாளோ என்ற பயம் கவிகொண்டது. ரொம்ப டென்ஷனாக இருந்தான் செல்வம்.

அஷ்விதாவிடமிருந்து பதில் வந்தது.

'ஒகே செல்வம், மீட் பண்ணலாம். 7pm @ taaksha point."

படித்து முடித்தவுடன் தான் உயிர் வந்தது போல் இருந்தது. குறுந்தகவலை பார்த்து புன்னகையித்தபடி தனது பாக்கேட்டில் போட்டான் கைபேசியை. சந்தோஷ ரேகைகள் செல்வம் முகத்தில் பரவ, அதை கவனித்த வாசு,

"என்னடா மச்சி, ஆபிஸ் வந்தப்ப ஒரு மாதிரியா இருந்த.. இப்ப சந்தோஷமா இருக்க... இனிக்கு பாஸ் ஆபிஸுக்கு வரலையா என்ன?" என்று பாஸின் அறையை எட்டி பார்த்தான்.

"ஒன்னுமில்ல டா, அஷ்விதாவ தனியா பார்த்து பேசனும்னு நினைச்சேன். கல்யாணத்துக்கு முன்னாடி இதலாம் வேண்டாம்னு... என்னைய தப்பா நினைச்சுடுவாளோன்னு பயந்தேன்.. ஆனா ஒகேன்னு சொல்லிட்டா டா.. அதான்...." அசடு வழிந்தான் செல்வம்.

"ஆஹா... நிச்சயதார்த்தம் பண்ணி இப்ப தான் 3 வாரம் ஆகுது... அதுக்குள்ள இப்படி போகுதா கதை? ஏன்... நிச்சயதார்த்தம் அன்னிக்கு பேசவிடலையாக்கும்? வீட்டுல தெரியுமா இன்னிக்கு மீட் பண்ண போற விஷயம்? " சிரித்தான் வாசு. மடிகணினியை திறந்து தனது இமெயிலை பார்த்து கொண்டே பதில் அளித்தான் செல்வம்,

"ம்ஹும்.... எங்க பேசுனோம்? கொஞ்சம் நேரம்.. அதுவும் 5 நிமிஷம் தான்... அவ்வளவு கூட்டம்... ஒன்னும் ஃபிரியா பேச முடியல்ல...வீட்டுக்கு? ஐயோ... எங்க அம்மா ஒரு மெகா சீரியலே ஓட்டிடுவாங்க. போககூடாது, கட்டுபாடு, கலாச்சாரம், மத்தவங்க பாத்தா என்ன நினைப்பாங்க... அது இதுன்னு சொல்லி என்னையும் சேத்து குழப்பிடுவாங்க" சொல்லிகொண்டே தேவையில்லாத இமெயில்களை டிலிட் செய்தான்.

"ஓ... அப்ப...திருட்டுத்தனம் இப்பவே ஆரம்பிச்சுட்டீயா. வெரி குட். இப்படி தான் எல்லாம் ஆரம்பிக்கும். எஞ்ஜாய் மச்சி! அப்பரம்.. என்ன gift கொடுக்க போற?" வினாவினான் வாசு.

"யாருக்கு?" முழித்தபடி வாசுவின் முகத்தை பார்த்தேன் செல்வம்.

"டேய்.. இன்னிக்கு அஷ்விதாவ முதன் முதல வெளியே கூப்பிட்டு இருக்க...அவள பாக்க போற... பரிசு ஒன்னும் வாங்கி வைக்கலையா?" வாசு பதில் அளித்தான்.

"டேய்... சுத்தமா மறந்துட்டேண்டா... இப்ப என்ன செய்ய?" மறுபடியும் டென்ஷன் ரேகைகள் அவன் முகத்தில் மின்னல்கள் போல் தோன்றியது. தொடர்ந்தான் செல்வம்,

"flower bouquet வாங்கிட்டு போவா? how about chocolates... or.... why not just a simple card?" செல்வத்தின் உளறல்களை பார்த்து ரசித்தான் வாசு.

"ஓய்... நிறுத்து. என்னது சாக்கெலட்டா? .. இன்னிக்கு சுதந்திர தினமா என்ன? டேய் மச்சி... இந்த பூ கொடுக்குறது... கார்ட் கொடுக்குறது எல்லாம் ஒன்னாவது போற பசங்களே செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம ரேஞ்சுக்கு... சூப்பரா ஒன்னு செய்யனும் மேன்?" உட்கார்ந்து இருந்த செல்வத்தின் தோளை தட்டினான்.

"நீயே சொல்லேன்...?"

"ஒரு நிமிஷ வேட் பண்ணு.." என்று சொல்லிவிட்டு வாசு தனது கேபினுக்குள் சென்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வந்தான்.

செல்வம் நெற்றியில் கைவைத்து என்ன பரிசு வாங்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தபோது, புத்தகத்தை செல்வம் மேசையில் வைத்தான். "girls & fantasies" என்று எழுதியிருந்தது.

எதிரில் நின்று கொண்டிருந்த வாசு, "பக்கம் 27க்கு திருப்பு, அதுல மூணாவது paragraphஅ படி." கடகடவென்று படித்த செல்வம்,

"ஓ மை காட்.... what nonsense is this vasu? bullshit!" புத்தகத்தை மூடி வாசுவின் கையிலேயே திணித்தான்.

"ஏய்... கூல் டவுன் கூல் டவுன். எதுக்கு இந்த ஓவர் ரியேக்சன்? அதுல போட்டுருக்க மாதிரி செய்... the best unforgettable gift! நானும் இப்படி செஞ்சு தான் என் மனைவிய impress பண்ணேன்!" வாய்விட்டு சிரித்தான் வாசு.

"ஏய்.... நான் யாருக்கும் தெரியாம அவள பாக்குறதே அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ... அதுல... இப்படி செஞ்சா? நல்ல ஐடியா கொடுத்த போ... கல்யாணம் ஆகாமலே எனக்கு divorce வாங்கி கொடுத்துடுவ போல...." சலித்து கொண்டான் செல்வம்.
செல்வம் பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியை இழுத்து அவன் எதிரே உட்கார்ந்தான் வாசு. மெல்லிய குரலில் வாசு, "it's just a kiss. what's wrong? இது தான் மச்சி, தி பெஸ்ட்டா இருக்க முடியும்?"

"என்ன ராங்கா? போடா போங்கு!!? நீயும் உன் ஐடியாவும்.... நான் எதாச்சும் மல்லிப்பூவோ அல்வாவோ வாங்கிட்டு போறேன். உன் ஐடியா ஒன்னும் வேணாம்?" மறுபடியும் தனது பார்வையை மேசையில் இருந்த கோப்புகளின் மீது திருப்பினான் செல்வம்.

அவனை தன் பக்கம் இழுத்தான் வாசு.

"என்னது மல்லிப்பூவும் அல்வாவுமா?? ஹாஹாஹா...." சத்தம் போட்டு சிரித்தான் வாசு. தொடர்ந்தான் தனது நக்கல் பேச்சை,

"டேய்... அதலாம் சின்ன வீடு வச்சுருக்குறவன் வாங்கிட்டு போற ஐட்டம் டா... ஹாஹா.... நீ மட்டும் அத அஷ்விதாகிட்ட கொடுத்தே... அவ்வளவு தான் உனக்கு ஒரு சின்ன வீடு இருக்குன்னு confirm பண்ணிடுவா... ஹாஹா.."

"ஐயோ.... என்னைய என்னடா செய்ய சொல்ற?

"just listen to me. sweet decent கிஸுக்கு நாலு இடம் இருக்கு. கை,நெத்தி, கன்னம்,லிப்ஸ். கையில....நோ நோ.. அது சரிபட்டு வராது... ஏதோ சின்ன புள்ளத்தனமா இருக்கும். நெத்தில கொடுக்குறது.... அது after marriage! லிப்ஸ்....ம்ம்ம்....." யோசித்தவாறு செல்வத்தை ஒரு முறை தலை முதல் கால் வரை பார்த்தான்.

வாசு, "ஹாஹா... லிப்ஸ்...ம்ஹும்... நீ ரொம்ப பயந்துடுவே! so, cheek is the only option."

தொடர்ந்தான், "rightல கொடு...அதான் girls' psychology படி தி பெஸ்ட்."

"டேய்... எனக்கு பயமா இருக்குடா?" மழையில் நனைந்து கோழி போல் உதறினான் செல்வம்.

"பயமா இருந்தா இப்பவே practice பண்ணிக்கோ... நம்ம கிளார்க் அஞ்சல ஆண்ட்டிகிட்ட!" என்று கிண்டல் செய்தான்.

"டேய்... ஏண்டா நீ வேற!" ஆழ்ந்த சிந்தனையில் செல்வம்.

"it is not merely an innocent display of affection. It is a display of passion machi! இங்க பாரு...கிஸ் பண்ணும்போது, நமக்குள்ள இருக்கும் neurotransmitters ரிலீஸ் ஆகி மூளைக்கு போகும். அப்படி போகும்போது, நமக்குள்ள ஒரு புத்துணர்ச்சி வரும். அந்த புத்துணர்ச்சி 'இவன் என்னுடையவன்; இவனுக்கு என்னை பிடிச்சுருக்கு' அப்படின்னு அவள் மூளைக்கு மெசேஜ் போகும். இந்த biological processல உங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல chemistry work out ஆகும். அப்படி ஆச்சுன்னா...for every action, there is an equal and opposite reaction நடக்கும். அஷ்விதாவும் மறுபடியும் உனக்கு கொடுப்பா. அதுக்கு வாய்ப்பு இருக்கும். இது physics! இப்படி biology, chemistry, physicsனு.... டேய் மச்சி, எஞ்ஜாய் டா!" சிரிக்க ஆரம்பித்தான் வாசு.

"இந்த ஆர்வத்த நீ உன் வேலையில காட்டியிருந்தே... உனக்கு எப்போவோ promotion கொடுத்து இருப்பாங்க?" வாசுவின் lectureயை கேட்டவிட்டு சொன்னான் செல்வம்.

"அட போ டா... வேலை கிடக்குது. எனக்கு என் நண்பன் வாழ்க்கை தான் முக்கியம்." புன்னகையித்தான் வாசு. அச்சமயம் ஆபிஸுக்குள் பாஸ் நுழைந்ததால், வாசு தனது கேபினுக்குள் ஓடுவதற்குள் செல்வத்தின் காது அருகே, "டேய் நான் சொன்ன மாதிரி செய். ஆல் தி பெஸ்ட்"

அன்று முழுவதும் செல்வம் சற்று குழப்பத்துடன் இருந்தான். மாலை 6 மணி ஆனது. வாசு வீட்டிற்கு செல்வதற்கு முன் செல்வத்திடம் "டேய் மச்சி, results என்னான்னு இன்னிக்கு நைட் ஃபோன் பண்ணி சொல்லு!" கண் சிமிட்டியபடி கண்ணாடி கதவை திறந்து வீட்டிற்கு புறப்பட்டான்.

செல்வம் 6.45pm சொன்ன இடத்தில் காத்திருந்தான். கொஞ்சம் பயம், கொஞ்சம் பரபரப்பு,கொஞ்சம் சந்தோஷம், வெளியே காட்டி கொள்ளாமல் இருந்த அதிகபடியான வெட்கம் என்று பல உணர்ச்சிகளால் செல்வம் நின்று கொண்டிருந்தான். தனக்கு பிடித்த வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வருவாள் என்று கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான்.

அஷ்விதா வந்தாள். பிங் நிறத்தில் ஒரு சட்டை, சாதாரண ஜீன்ஸில். தனது கற்பனை நனவாகவில்லை என்று சற்று ஏமாற்றம் அடைந்தான் செல்வம்.

கையசைத்தபடி அவனை நோக்கி வந்தாள் அஷ்விதா. அவன் முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தை கண்டு கொண்டவள் புன்னகையித்தபடி,

"என்ன ஆச்சு செல்வம்? யாரடி நீ மோகினி படத்துல நயன்தாரா introduction scene மாதிரி...வெள்ளை சுடிதார்ல வருவேன்னு நினைச்சீங்களா..நினைச்சீயா?" என்றாள்.

அவள் வெளிப்படையாக பேசியது அவனின் ஏமாற்றத்தை போக்கியது. புன்னகையித்தான். ஒரு உற்சாகம் பிறந்தது. அவள் இயல்பாய் 'நினைச்சீங்களா' என்பதிலிருந்து 'நினைச்சீயா' என்று மாற்றியது, உரிமை எடுத்து கொண்டது செல்வத்திற்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. அவர்களுக்கிடையே இருந்த இடைவெளி குறைந்ததுபோல் உணர்ந்தான்.

தொண்டைக்குள் வார்த்தைகள் பிறந்து தவிழ ஆரம்பித்தது செல்வத்திற்கு, "ஹாய்.. ஓ அப்படி ஒன்னுமில்ல!" எச்சில் முழுங்கினான்.

"சரி செல்வம், இப்ப எங்க போகலாம்? this place is really big ah?" என்று சுற்றும்முற்றும் பார்த்தாள் அஷ்விதா. அவள் இவ்வளவு நெருக்கத்தில் இருந்தது அவன் வயிற்றுக்குள் பறந்த பட்டாம்பூச்சிகளுக்கு புதிதாய் மீசை முளைத்ததுபோல் உணர்ந்தான்.

"எங்காச்சும்...உன் விருப்பம்?" அவன் பதில் அளித்தான்.

"சரி... இங்க நிறைய restuarants இருக்கு. அங்க போவோம்?" என்று சொல்லியபடி நகர்ந்தார்கள்.

"பரிச கொடுக்க மறந்துடாத!" மனசாட்சிக்கு பதில் வாசுவின் குரல்தான் செல்வத்துக்குள் ஒலித்தது. "சரி சரி.." என்று தனக்குள்ளே சொல்லி கொண்டான் செல்வம்.

தம்ரானா நார்த் இந்தியன் உணவகத்திற்குள் சென்றனர். கஸல் இசை ஒலிக்க, வெளிச்சம் அதிகமாய் இல்லாமல், நிறைய இந்திய ஓவியங்கள், சிற்பங்கள், அலங்காரங்கள் என உணவகம் ஒரு ரம்மியமான சூழலில் இருந்தது. ஓர் இடத்தில் உட்கார்ந்தார்கள்.

"நீ என்ன சாப்பிடுற?" அஷ்விதா கேட்டாள்.

மெனு கார்ட்டை பார்த்தபடி செல்வம்,

"ம்ம்... cheese naan with butter masala chicken."

"nice choice.." என்று புன்னகையித்தாள்.

"ஆம். உன்னைய மாதிரியே." என்று சொல்ல தைரியம் இல்லாமல் ஒரு புன்னகை மட்டும் வீசினான்.

தனது ஆர்டரை கொடுத்தாள் அஷ்விதா,

"plain naan with chilli prawns.... and one glass of lime juice....mm..2 glasses please." என்று கண்களாலே செல்வத்திற்கு தண்ணீர் வேண்டுமா என்று கேட்டு இரண்டு கிளாஸ் ஆர்டர் செய்தாள்.

கொஞ்சம் நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். அஷ்விதா என்ன செய்வது என்று தெரியாமல் மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்தாள். செல்வத்திற்கு..ம்ஹும்ம்... சொல்லவே தேவையில்லை. நிறைய பேச வேண்டும் என்று நினைத்து வந்தவன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். தனது கைபேசியை மேசையில் வைத்துவிட்டு,

"excuse me..." என்றுபடி கழிவறைக்கு சென்றான் செல்வம்.

(பகுதி 2)