Jun 26, 2011

அப்பரம் இன்னிக்கு என்ன plan?- 5

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4


சந்தோஷ் சொன்னது அவளுக்குக் கேட்டது. இருப்பினும் அதற்கு பதில் சொல்லவில்லை. menu cardயைப் பார்த்து கொண்டிருந்தாள். சந்தோஷின் முகத்தைப் பார்க்கவில்லை. சந்தோஷும் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அச்சமயம் சர்வர் வந்தான். அவர்களது ஆர்டராக காத்திருந்தான். மாயா மெனு கார்ட்டையே பார்த்து கொண்டிருந்தாள். சர்வருக்கும் பதில் அளிக்கவில்லை. அவளது மௌனம் சந்தோஷுக்குச் சற்று பயத்தைத் தந்தது.

சர்வரிடம் அப்பரம் வருமாறு சொல்லி அனுப்பிவைத்தான் சந்தோஷ். கூட்டம் அக்கடையில் வர தொடங்கியது. "மாயா.." என்றான் சந்தோஷ்.

"are you ok? I am sorry.... i just...." என்று சிக்கி விக்கி வெளியே வந்து விழுந்தன அவனது வார்த்தைகள்.

மாயா நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்தாள். அதில் தெரிந்தது ஒருவித வியப்பு, பயம், சோகம். நல்ல நட்பைக் கலங்கப்படுத்திவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவனது மனசாட்சியை கொஞ்சம் கொஞ்சமாய் திண்றது.

"எனக்கு இதலாம் தெரியாது. i don't know...." அவளது மனம் படபடவென்றது. வேர்த்துகொட்டியது அவளுக்கு. சுற்றிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால், அவளால் ஒன்றும் சொல்லவும் முடியவில்லை. எழுந்தாள். கடையைவிட்டு வெளியேறினாள். ஒன்றும் புரியாத சந்தோஷும் அவளைப் பின் தொடர்ந்தான். கார் நிறத்தும் இடத்திற்குச் சென்றனர். ஒரு தூண் பின்னல் இருவரும். யாருமே அங்கு இல்லை.

நெற்றியில் கைவைத்து யோசித்தாள். அவளது வலது கை சற்று நடுக்கத்துடன் இருந்ததைக் கவனித்த சந்தோஷ் அவளது நடுக்கிய கையைப் பிடித்து, " yes or no. ஏதாச்சு சொல்லேன். what's stopping you?" அவனது கைப்பிடியிலிருந்து கையை எடுத்தாள் மாயா.

"நான் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல, சந்தோஷ்?" என்றாள்.

"what?" ஆச்சிரியம் அடைந்தான் சந்தோஷ்.

"normal girls மாதிரி இல்ல. வேலைக்கு போயிட்டு. வீட்டுக்கு வந்து சமையல் வேலை பாத்துகிட்டு... என்னால அப்படி இருக்க முடியாது. நான் அப்படி இல்ல. i have an ambition, சந்தோஷ்." என்று அவனுக்கு புரிய வைத்தாள் மாயா.

சிரித்தான் சந்தோஷ். புருவங்களைச் சுருக்கி மாயா, "ஏன் சிரிக்குற?"

"இல்ல. நீ normal girls மாதிரி இல்லேனு சொன்னீயே, நான் என்னமோ நினைச்சுட்டேன் நீ fire படத்துல வர பொண்ணுங்க மாதிரினு..." என்று சொல்லி மறுபடியும் சிரித்தான். சீரியஸா போய் கொண்டிருக்கும் பேச்சு இடையே அவன் செய்த நகைச்சுவையும் ரசித்தவளாய் சின்னதாய் ஒரு புன்னகை வீசினாள் மாயா.

மாயா, "நான் இப்ப செஞ்சிகிட்டு இருக்குற வேலை பிடிக்கல. i want to be a professional football player. அது தான் என் ஆசை. சின்ன வயசுலேந்து எனக்கு அது தான் ஆசை. வீட்டுல ஒத்துக்கல. i wanted to study sports science. அத படிச்சு என்ன கிழிக்க போறேன்னு சொல்லி என்னைய business adminstration படிக்க வச்சாங்க. இப்ப செய்யுற வேலை என் parentsக்காக தான் பாத்துகிட்டு இருக்கேன். நான் ஒவ்வொரு வாரமும் football practice பண்ண போறப்பெல்லாம் வீட்டுல போக கூடாதுனு சொல்வாங்க. அதையும் தாண்டி, திட்டு வாங்கிகிட்டு, சண்டை போட்டு தான் போனும். சொல்ல போனால், i have not lived my life at all!" என்று சொல்லும்போது மாயாவின் கண்கள் குளமாகின.

தொடர்ந்தாள், "ஒரு நாள்கூட எனக்கு பிடிச்ச மாதிரி நான் வாழ்ந்தது இல்ல. அப்படி இருக்கும்போது என் வாழ்க்கைல இன்னொருத்தர் வந்து... அவரையும் கஷ்டப்படுத்த விரும்புல." என்று முடித்தாள். அழுகையை தடுக்க முயன்றாலும் அவளால் முடியவில்லை. தேம்பி தேம்பி அழுதாள்.

"when do you want to live your life then?" என்றான் சந்தோஷ்.

"எனக்கு தெரியல. நிறைய பேர கஷ்டப்படுத்திட்டேன். வீட்டுல என்னால எப்போதுமே பிரச்சன. என்னால இனி யாரும் கஷ்டப்பட வேண்டாம்." என்று தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினாள்.

அவளது இரு கைகளையும் பிடித்த சந்தோஷ், " இங்க பாரு மாயா! look at me."
அவள் பார்க்க மறுத்தாள். ஆனால் அவனது கைபிடியிலிருந்து அவள் விலக வில்லை. அந்த பிடி அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

"என்னைய பாரேன். please..."என்று மறுபடியும் கெஞ்சினான். பார்த்தாள்.

"எனக்கும் normal girls வேணாம். உன்னைய மாதிரி extraordinary பொண்ணு தான் வேணும். சமையல் வேலை பாக்க தேவையில்ல. இனி உன் ஆசை தான் என் ஆசையும். let us live the life that you wanted to!" என்று நம்பிக்கையுடன் பேசினான். அவனது பிடியிலிருந்து விலகிய மாயா,

"உனக்கு புரிய மாட்டேங்குது சந்தோஷ்? கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாரும் இப்படி தான் சொல்வாங்க...."

"எத்தன தடவ கல்யாணம் பண்ணியிருக்க?" நக்கல் அடித்தான் சந்தோஷ். முழித்தாள் மாயா.

மாயா, "ஐயோ சந்தோஷ். please! என்னைய புரிஞ்சிக்கோ!" மன்றாடினாள். இவர்கள் பேசி கொண்டிருக்கும்போது மாயாவின் கைபேசி அலறியது. எடுத்து பேசினாள்,

"மா, வந்துட்டேன். தெரியும் மா! நான் வரேன். கிளம்பிட்டேன். புரியது. எத்தன தடவ சொல்றது?? நான் வந்துகிட்டு இருக்கேனு," கோபமாக பேசி முடித்தாள்.

சந்தோஷ், "அத்தையா?" என்றான்.

மாயா, "சந்தோஷ், i got to go."

சந்தோஷ், "நான் lift தரவா?"

தான் சமாளித்து கொள்வதாகக் கூறி சிட்டாய் பறந்து சென்றாள். காதலை சொன்னால் மன சுமை குறையும் என்று நினைத்தவனுக்கு அவளது பதில், சுமையை அதிகரித்தது. இருந்தாலும், காதல் குறையவில்லை. அவள் சொன்ன மாதிரி அவள் சாதாரண பெண் இல்லை. அவளது லட்சியத்தை எண்ணி பெருமை அடைந்தான். அவள் பறந்து விரைந்து செல்வதைப் பார்த்து தனக்குள் சொல்லி கொண்டான், " maya, எனக்கு நீ வேணும்!"

நடந்து எல்லாவற்றையும் ரவியிடம் கூறினான் அன்றிரவு.

"what???" பதறி போனான் ரவி. சந்தோஷ், "எதுக்கு இந்த பதற்றம்?"

"பின்ன என்ன டா. opening batsmanஆ சச்சின் இல்லாம sreeshantத்த பாத்தா பதறாம எப்படி இருக்க முடியும்?" என்றான் ரவி.

தொடர்ந்தான் ரவி, "என்னமோ போ. அவளுக்கு உன் மேல வெறுப்பு வராம பாத்துக்கோ." அறிவுரை கொடுத்தான்.

ஏதேனும் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறாளா என்று சந்தோஷ் தனது கைபேசியை அவ்வபோது பார்த்து கொண்டான். facebookல் தனது statusயை update செய்தான்

இது சரியா தவறானு தெரியல. ஆனா, இந்த வலி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.

(தொடரும்)

Jun 20, 2011

அப்பரம் இன்னிக்கு என்ன plan?-4

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

நாளை வெளியிட வேண்டிய ரஜினி படம் ஒரு வாரம் தள்ளி போனால் எப்படி மனம் வலிக்குமோ அப்படி வலித்தது சந்தோஷுக்கு. அவன் கனவுகள் எல்லாம் compoundக்கு வெளியே அடித்த கிரிக்கெட் பந்து போல் அவனைவிட்டு பறந்து போனது. கைப்பேசியை மெத்தையில் தூக்கி போட்டான். ஜன்னல் வழியே வானத்தை ஆனாந்து பார்த்தான். வருத்தம், கோபம், அவளைத் திட்ட வேண்டும் என மனம் துடித்தது. மனசாட்சி அவனை உதைத்து, "அங்க என்ன நடந்திருக்கும்னு தெரியாம, நீ பாட்டுக்கு கடந்து குதிக்காதே!" என்றது.

ரவிக்கு விஷயத்தை சொன்னான். ரவி, "ஹாஹாஹா.....," சிரிப்பை அடக்க முடியவில்லை.

சந்தோஷ், "நான் இப்ப உன் வீட்டுக்கு வந்தேன்... எதுக்கு டா சிரிக்குற?" கோபத்தை அடக்க முடியவில்லை.

ரவி, " காதல்னு வந்துட்டா மட்டும், ஏன் டா எல்லாரும் ஓவர் emotional ஆகுறீங்க? இப்ப என்ன நடந்துடுச்சுனு கடந்து குதிக்குற? session cancelled அவ்வளவு தானே. எல்லாத்தையும் positiveஆ பாரு மச்சான். listen, அவளுக்கு ஃபோன் பண்ணி பேசு." என்றான் 'ஐடியா மணி'

"நானா?"

"இல்ல இல்ல...விஜய் டிவி கோபிநாத்த பேச சொல்லவா!? நீ தான் மச்சான். இங்க பாரு. session cancelled ஆனது ஒரு வகையில நல்லது தான். உனக்கு அவகிட்ட பேசனும். இது ஒரு நல்ல வாய்ப்பா நினைச்சிக்க." என்றதும் சந்தோஷை பயம் கலந்த ஆனந்தம் கவி கொண்டது. ரவி சொன்னதில் உள்ள உண்மை புரிந்தது. சாதாரண விஷயம் தான் - ஒரு ஃபோன் செய்வது, ஆனால், அப்போது சந்தோஷுக்கு ஏதோ அகில உலக சாதனையை செய்வதுபோல் இருந்தது.

இரவு மணி 10 ஆனது. இந்த நேரத்தில் ஃபோன் செய்யலாமா என்று மனதில் போராட்டம். காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற எவ்வளவு போராட்டங்களை எதிர் கொண்டாரோ அதனையும் தாண்டி பல 'மனப் போராட்டங்களை' சந்தித்தன சந்தோஷின் மனமும் மூளையும். ஒரு வழியாக மனதை தேத்தி கொண்டு கைபேசியை எடுத்தான். contact listக்கு சென்றான், மாயா பெயரைத் தேடினான், 'call' பட்டனை அழ்த்தினான். ரிங் போனது.

ரிங் சென்றகொண்டிருக்கும்போது, lineயை அவனே 'கட்' செய்துவிட்டான். ஏன் அப்படி செய்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. பேச துடித்தது மனம், என்ன பேசுவது என்று தெரியாமல் திண்டாடியது மூளை. மறுபடியும் தைரியத்தை வரவழைத்து கொண்டு 'call' செய்தான்.

மறுமுனையிலிருந்து மாயா, "ஹாலோ! சந்தோஷ்?" என்றதும் அவன் அடிவயிறு ஒரு 'roller coaster ride' சென்று வந்ததுபோல் உணர்ந்தான். அவனது வார்த்தைகள் சென்னை corporation குழாயிலிருந்து வெளியே வர துடிக்கும் தண்ணீர் போல் சிக்கி தவித்தன.

எச்சில் முழுங்கியபடி, " மாயா," ஒற்றை வார்த்தையை அமைதியாய் கூறினான்.

மாயா, "சொல்லு சந்தோஷ்..எப்படி இருக்க?"

மௌனமாக இருந்தான் சந்தோஷ்.

தொடர்ந்தான் மாயா, "ஹாலோ, சந்தோஷ்? என்ன ஆச்சு? are you there?"

"ஏன் training session cancelled?" கேள்வி கேட்டான் சந்தோஷ்.

மாயா, "ஓ, அதுவா? சாரி சந்தோஷ். நாளைக்கு training court not available. but அடுத்த வாரம் கண்டிப்பா இருக்கும். i will message you. ஆமா, நீங்க guys எல்லாம் எங்க train பண்ணுவீங்க?"

சந்தோஷ், " weekdaysல தான், every wednesday evening yetrin football courtல. வரீயா?" தைரியம் இல்லாமல் பேச தொடங்கிய சந்தோஷ், இப்போது டாப் கியரை போட்டு ஏறி சென்றான் 'காதல் மலை'யில்.

மாயா, "weekdays முடியாது சந்தோஷ். வேலை lateஆ முடியும்.anyway thanks for the invite" என்று தொடங்கிய பேச்சு காற்பந்து, பிடிச்ச காற்பந்து குழு, வேலை, boss, colleauges, friends, facebook என்று நாட்டு முன்னேற்றித்திற்கு தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசி மகிழ்ந்தனர். மணி 11 ஆனது.

கொட்டாவி விட்ட மாயா, "சந்தோஷ், எனக்கு தூக்கம் வரது. shall we end our conversation?"

சந்தோஷ், "நான் பேசறது அவ்வளவு boringஆ இருக்கா?" என்றான்.

மாயா, "ஐயோ. no no! நான் அப்படி சொல்லல. நிஜமாவே எனக்கு தூக்கம் வரது. ரொம்ப tiredஆ இருக்கு, சந்தோஷ்." என்றாள். மாயா தூங்க சென்றாள். சந்தோஷுக்கு தூக்கம் கதவு வழியே வந்து ஜன்னல் வழியே பறந்து போனது. பையன அம்புட்டு சந்தோஷ்த்துல மிதந்து கொண்டிருந்தான்.

கைகளை தலைக்கு பின்னாடி மடிக்கியவாறு தலையணையில் தலை வைத்து படுத்தான். ceilingயை பார்த்தபடி புன்னகையித்தான். ஏதோ ஒரு பனிமலையை தாண்டிய மகிழ்ச்சி அவனுக்குள் புகுந்து உடல் முழுவதும் ஒரு புத்துணர்ச்சியை தந்தது. அவள் பேசிய ஒவ்வொன்றையும் நினைவுகூர்ந்து பார்த்து மறுபடியும் தனக்குள்ளே சிரித்து கொண்டான். தூக்கம் அவனது கண்களை தொட்டு பார்த்தாலும், அதை தூக்கி வெளியே போட்டான்.

மறுநாள் காலையில் கைபேசியை பார்த்தான். ஒரு குறுந்தகவல் வந்து இருந்தது மாயாவிடமிருந்து

சாரி சந்தோஷ். நேத்திக்கு உண்மையாவே எனக்கு தூக்கம் வந்துட்டு. hope you didn't get offended. :) take care and have a nice day.

புன்னகையித்தான் சந்தோஷ். அவள் நம்பரை 'maya' என்ற பெயரில் save செய்து இருந்ததை 'maya darling' என்று மாற்றி வைத்தான்.

சந்தோஷ் வழக்கம்போல் facebook பக்கத்திற்கு சென்றான். அவனுக்கு ஒரு 'event invitation' வந்து இருந்தது. முந்தைய அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவரின் அக்கா மகள் திருமண அழைப்பிதழ் அது. 'not attending' என்ற பட்டனை அழ்த்தலாம் என்று யோசித்தபோது, மாயாவின் chat box open ஆனது

மாயா: are you going for the wedding?

சந்தோஷ்: which wedding?

மாயா: சந்தியா's wedding. i saw your name on the guest list.

சந்தோஷ்: உனக்கு எப்படி சந்தியாவ தெரியும்?

மாயா: அவங்க அம்மாவும் என் அம்மாவும் friends. ஆனா, அம்மாவால போக முடியாது. அவங்க வேற ஒரு கல்யாணத்துக்கு போறாங்க. so, என்னைய போக சொன்னாங்க. i need a company and thank god, i saw your name.

சந்தோஷ்: sure. sure. நானும் போறேன். i will see you there at the wedding.

இது விதி என்பதா? இல்ல வேற என்பதா? சந்தோஷுக்கு மாயாவை சந்திக்கும் வாய்ப்பு அடிக்கடி ஏற்பட்டது.

கல்யாணம் முடிந்து மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர்.
சந்தோஷ், " எனக்கு ஒரு help தேவை." என்றவன் தன் தங்கைக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வாங்க மாயா உதவ வேண்டும் என்றான்.

தொடர்ந்தான், "உனக்கு free இல்லேன்னா, பரவாயில்ல? i will manage" என்றான்.

மாயா சற்று யோசித்தாள். கைகடிகாரத்தை பார்த்து, "ம்ம்..ஓகே. ஆனா 5 மணிக்கு நான் கிளம்பிடனும். office work கொஞ்சம் pending." என சிரித்தாள். கடை கடையாய் ஏறி இறங்கினர். ஆனால், எதுவுமே அமையவில்லை.

தங்கைக்குத் தான் பிறந்தநாள் முடிஞ்சு பல மாதங்கள் ஆகிவிட்டதே! சும்மா தான், சந்தோஷ் பொய் சொல்லியிருக்கான். மாயா ஒவ்வொரு பொருளை பார்த்து ரசித்து அது அவனுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்கும்போதெல்லாம் அவனுக்குள் 'ஒரு புதிய சந்தோஷ் பிறப்பதாய்' உணர்ந்தான்.

ரொம்ப களைப்பாக இருந்ததால், சந்தோஷ், " juice சாப்பிட போலாமா?"

protein shake juice shopக்குள் நுழைந்தனர்.

மாயா, "சந்தோஷ், இங்க juice எல்லாம் protein shake மிக்ஸ் பண்ணது. very good for sportspeople. இந்த orange mix try பண்ணி பாக்குறீயா? என்றாள் menu cardயை திருப்பியபடி.

சந்தோஷ், "மாயா, i love you."

(பகுதி 5)

Jun 18, 2011

அப்பரம், இன்னிக்கு என்ன plan?-3

பகுதி 1
பகுதி 2

அலுவலகத்தில் சந்தோஷ் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த ரவி, "என்ன தம்பி, இங்க ஜெஸ்சி ஜெஸ்சின்னு சொல்லுதா?" என்று கிண்டல் செய்தான் சந்தோஷின் நெஞ்சில் அடித்து.

"அட போடா! காலைலேந்து சாப்பிடாம வயிறு பசி பசிங்குது டா." என்றான் பசி மயக்கத்துடன் சந்தோஷ். இருவரும் நடையை கட்டினர் பக்கத்து தெரு காபி ஷாப்பிற்கு.

இரண்டு cappuccino குவளையை மேசையில் வைத்தான் சர்வர். அதை குடித்தபடி ரவி, "இங்க பாருடா மச்சான். don't worry. உனக்கு கண்டிப்பா success தான். விதி பச்சை கொடி காட்டிடும்."

சந்தோஷ், "எத வச்சு சொல்ற?"

ரவி," விண்ணை தாண்டி வருவாயா படத்துல காலங்காத்தால திரிஷா தெருவுல நடந்து வந்ததுனால சிம்புவுக்கு பாத்தவுடனே லவ் வந்துடுச்சு. திரிஷாவுக்கு பதில் அன்னிக்கு பால் பாக்கெட் போடுற ஆயா வந்து இருந்துச்சுன்னா, கதையே மாறியிருக்கும் மச்சான்!" காபியை குடித்தபடி சொன்னான்.

சிரித்தான் சந்தோஷ்.

"hangover??" என்றான் சந்தோஷ்.

"இல்ல டா, விண்ணை தாண்டி வருவாயா?" பதில் அளித்தான் ரவி.

"அது இல்ல... நேத்திக்கு தண்ணி அடிச்சீயா? அதான் hangoverல உலறிகிட்டு இருக்கீயா?" சிரிப்பை அடக்க முடியாமல் சந்தோஷ்.

"ஹாலோ! அதலாம் ஒன்னும் இல்ல. listen to me. திரிஷா correct timeக்கு வந்தது தான் விதி! அது தான் உன் வாழ்க்கையிலும் நடந்து இருக்கு. எத்தனையோ போட்டிக்கு போய் இருக்கோம். ஏன் போன போட்டியில மட்டும் அவள பாக்கனும். உனக்கு புடிச்சு போகனும்? இது தான் டா விதி!" விளக்கினான் ரவி.

அலுவலகம் அடைந்ததும் சந்தோஷின் கேபினுக்குள் சென்றார்கள் இருவரும். facebookல் புது notification வந்து இருந்தது.

"ரவி!!!!!! அவ accept பண்ணிட்டா டா!" என்று சந்தோஷ் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்தான். அவளுடைய profileயையும் wall postகளையும் அலசி ஆராய்ந்தனர் தேவையான அந்த 3 கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்க. பதில்களும் சந்தோஷுக்கு சாதகமாக அமைந்தன.

"இப்ப என்ன டா பண்றது? அவகிட்ட ஐ ல்வ் யூ சொல்லிட வா!" ஆனந்தத்தில் மிதந்தான் சந்தோஷ்.

சந்தோஷின் தோளில் கை வைத்த ரவி, "மச்சான், straw இல்லாத ஊரில் juice குடிக்க கூடாது."

முழித்தான் சந்தோஷ்.

"அந்த பொண்ணு single and available. அது மட்டும் தான் தெரியும். அத மட்டும் தெரிஞ்சுகிட்டு you cannot progress on the love track." புரிய வைத்தான் ரவி.

"அப்பரம் எப்படி டா?"

தொடர்ந்து விளக்கினான் ரவி. அவளை பற்றி மேலும் தெரிந்து கொண்டு அவளின் நம்பிக்கையை பெற்ற பிறகு தான் அவன் மனதில் இருப்பதை சொல்ல வேண்டும் என்றான். ரவி சொன்னதில் உள்ள நியாயம் புரிந்தது. மதியம் 12 மணி ஆனது. வேலைகளை வேண்டா வெறுப்பாக செய்து கொண்டிருந்தான். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவளின் profileயை பார்த்தான். இவ்வாறு செய்து கொண்டு இருக்கும் வேளையில் ஒரு புது chat window open ஆனது- மாயாவின் chat box அது.

மாயா: ஹாய் சந்தோஷ்! how are you?

என்று எழுதியதும் அவனுக்கு விண்ணை தொட்ட பரவசம் ஏற்பட்டது.

சந்தோஷ்: ஹாய். எப்படி இருக்கீங்க?

மாயா: how is your day?

சந்தோஷ்: as usual boring.

மாயா: :)))))

சந்தோஷ்: உங்களுக்கு?

மாயா: same here. anyway cut the 'வாங்க போங்க' formality:)))

சந்தோஷ்: :))) அப்பரம்... என்னிக்கு football training உனக்கு?

மாயா: இந்த sunday.... வறீங்களா?

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இனிய சிலிர்ப்பாய் அவனை வருடியது.
கொஞ்ச நேரம் அவளது கேள்வியையே ரொம்ப நேரம் பார்த்து கொண்டிருந்தான்.

மாயா: சந்தோஷ், are you there?

சந்தோஷ்: sorry sorry, was busy.

மாயா: hey sorry. ஏன் நீங்க busyயா இருக்கீங்கன்னு சொல்லலே? நான் உங்கள disturb பண்ணியிருக்க மாட்டேன். sorry. you carry on with your work. bye. take care.

அவள் தனது chat boxயை மூடிவிட்டு offline சென்றாள். தான் தவறுதலாக 'busy' என்று சொல்லி பேசி கொண்டிருந்ததை தானே கெடுத்துவிட்டேனே என்று வருத்தத்துடன் நெற்றியில் அடித்து கொண்டான். ரவியிடம் நடந்ததை சொல்லி புலம்பினான்.

ரவி, "hahahaha யானைக்கும் அடி சறுக்கும். ஷங்கருக்கும் படம் தோற்கும்"

சந்தோஷ், "அட போடா, நானே கவலையா இருக்கேன். நீ வேற, காமெடி பண்ணிகிட்டு, " முகம் வாடி இருந்தது.

ரவி, "ஏன் டா கெட்ட விஷயத்த பத்தி நினைக்குற. நல்லத பத்தி யோசிக்கவே மாட்டீயா? she has asked you to join in her training session."

சந்தோஷ் மறுபடியும் நம்பிக்கையை பிறந்ததுபோல் உணர்ந்தான். தொடர்ந்தான் ரவி, "இங்க பாரு, facebook chatலேந்து அடுத்தது ஃபோன் chatக்கு promotion வாங்கனும்."

சந்தோஷ் புருவங்களை சுருக்கி, "எப்படி?"

"so simple. அவளுக்கு ஒரு facebook message அனுப்பு. உன் ஃபோன் நம்பர கொடுத்து training session பத்தி ஸ் எம் ஸ் அனுப்புங்க. ஏனா, நான் அவ்வளவா facebook பக்கம் போறது இல்லனு சொல்லு," ரவி சந்தோஷுக்கு ஐடியாக்களை அள்ளிவீசினான்.

"ரவி, எப்படி மச்சான்? உனக்கு மட்டும் இப்படிலாம் தோணுது. you are great!" கட்டிபிடிக்காத குறையாய் சந்தோஷ். சந்தோஷும் உடனே ரவி சொன்னதை செய்தான். கொஞ்ச நேரத்தில் சந்தோஷுக்கு ஒரு புதிய குறுந்தகவல் வந்தது.

குறுந்தகவல்- training sessions this sunday 9-11am at sunshine stadium. - maya

இப்படி ஒரே நாளில், மாயாவைப் பற்றி facebookல் தெரிந்து கொண்டு, அவளிடம் பேசி, அவளின் ஃபோன் நம்பரை வாங்கிவிட்டோம் என பெருமிதத்தில் பெருமையாய் நின்றான் சந்தோஷ்.

சந்தோஷ், "எனக்கு ஒரு doubt. இப்படி உடனுக்குடன் அவளும் message அனுப்புறாளே? ஒரு வேளை அவளுக்கும் என் மேல லவ் இருக்குமோ?" என்று ரவியை பார்த்து கேட்டான்.

ரவி, "ஆமா டா, உனக்கு லவ் வந்தா, உலகத்தில இருக்குற எல்லாருமே லவ் பண்றாங்கன்னு சொல்வீயே. இத ஔவை பாட்டி கேட்டாங்கன்னா எவ்வளவு feel பண்ணுவாங்க தெரியுமா?

சனிக்கிழமை இரவு 9 மணி ஆனது. சந்தோஷுக்கு தூக்கம் வரவில்லை. மறு நாள் காலையில் அவளை சந்திக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் பறந்து கொண்டிருந்தான். அவள் நம்பர் அவனிடம் இருந்தாலும் அவன் அதை வைத்து எதையும் செய்யவில்லை. காதலில் பொறுமை ரொம்ப தேவை என்பது கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்தது அவனுக்கு. படுக்கையில் படுத்தவாறு அவளின் நம்பரை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.

ஒரு குறுந்தகவல் வந்தது- sorry guys, tmr's training session cancelled. - maya.

(பகுதி 4)

Jun 16, 2011

அப்பரம் இன்னிக்கு என்ன plan?- 2

பகுதி 1

மாயாவும் தன் குழு விவரத்தாளை நீட்டி, "silent tiger's team captain. for registration." என்றாள்.

"அந்த பிரச்சன தான் இங்க ஓடிகிட்டு இருக்கு." என்றான் சந்தோஷ் சற்று சோகத்துடன்.

"ஹாலோ. உங்களுக்கு எல்லாம் ஒரு தடவ சொன்னா புரியாதா? டைம் முடிச்சு போச்சு. no more registration." எல்லா தாட்களை அள்ளி தூக்கிப்போட்டார் ஏற்பாட்டாளர்.

" is this how an officer behaves? announcement one minuteக்கு முன்னாடி தான் சொன்னாங்க. so இன்னும் டைம் இருக்கு. moreover, if the time-off is at 9.15am, for your information it's still 9.14am. உங்க rules பேப்பரில், இந்த டைம்க்குள்ள தான் register பண்ணனும்னு ஒன்னும் போட்டு இல்லையே. ஒரு வாரத்துக்கு முன்னாடியே, என்னனென்ன குழுவோட விளையாடனும்னு ஒரு இமெயில் அனுப்புவீங்கன்னு சொன்னீங்க...அதுவும் வரல. right or not?" மாயா பொங்கி எழுந்தாள், தனது கடைசி கேள்விக்கு சந்தோஷ் பக்கம் திரும்பி கேட்டாள்.

"ஆமாங்க, we didn't receive any email." என்றான் சந்தோஷ் பவ்வியமாய்.

"ஒரு tournament நடக்கும்போது scoreboard ரெடியா இருக்கனும். where is it? ambulance standbyல இருக்கனும். where is it? சார்...முதல rules சரியா follow பண்ணுங்க நீங்க...அப்பரம் குத்தம் கண்டுபிடிக்கலாம்!" என்றாள் நக்கலாய் மாயா.

குழு ஏற்பாட்டாளருக்கு வேர்த்துவிருவிருத்து போய்விட்டது. இவ்வளவு கம்பீரமாய் பேசிய மாயாவின் பேச்சுக்கு, பதில் சொல்ல முடியாமல் திக்கமுக்காடினார்.

"சரி சரி... இனிமேலு இப்படி நடக்காம பாத்துக்குங்க." சமாளித்தார் ஏற்பட்டாளர்.

"நீங்க இந்த மாதிரி நடந்துக்காம பாத்துக்குங்க," சொல்லிவிட்டு ஏற்பட்டாளர் stamp குத்திய registration formயை வெடுக்கென்று எடுத்து கொண்டு சென்றாள் மாயா.

"thanksங்க." பின் தொடர்ந்த சந்தோஷ மெல்லிய குரலில் நன்றி கூறினான்.

"no problem." என பதில் அளித்தாள்.

காற்பந்தாட்டங்கள் ஆரம்பித்தன. ஒவ்வொரு ஆட்டம் 45 நிமிடங்கள். பல குழுக்கள் தங்களின் திறமையை காட்டின. சந்தோஷின் குழு கால் இறுதி சுற்றுவரை முன்னேறி தோல்வி அடைந்தது. தோல்வி அடைந்த நிலையில், "மச்சான், இனிமேலு இந்த guys விளையாடுறத்த பாத்து என்ன ஆக போகுது? அந்த side ladies விளையாடுறத போய் பாக்கலாம் டா" என்றான் சந்தோஷின் நண்பன், ரவி.

அப்போது மாயாவின் பெயர் கூட தெரியாத சந்தோஷும் அவள் விளையாடுவதை பார்க்க வேண்டும் என ஒரு சின்ன ஆவல் இருந்தது. இருவரும் நடையைக் கட்டினர் பெண்கள் திடலுக்கு. அப்போது விளையாடி கொண்டிருந்தது மாயாவின் குழு. திடல் ஓரத்தில் அமைந்திருந்த scoreboardல் பெயரை பார்த்தான் சந்தோஷ். 'silent tigers' captain maya என்பதை பார்த்து அவள் பெயரை அழகாய் தனக்குள் உச்சரித்தான், "மாயா".

half time முடிந்தது. கோபத்துடன் வெளியேறினர் மாயாவின் குழு. ஒரு தண்ணீர் பாட்டிலை திறந்தபடி மாயா, "who the hell invited the referee? this is atrocious." கடிந்துகொட்டினாள். சரியாக referee முடிவுகளை எடுக்காமல் விட்டார். எதிர் குழுவுக்கு சாதகமாக பணியாற்றினார்.

தொடர்ந்தாள் மாயா தன் தோழிகளிடம், "ராதா, you play right midfielder. shilpa, you become the centre defender. this opposition is playing rough and breaking all the rules. referee எதுக்கு தான் அங்க சும்மா நிக்குதோ தெரியல. By right, we should never play aggressive but we have no choice now. let's go all out!" என்றாள் ஆக்ரோஷமாக.

மறுபடியும் விளையாட தொடங்கியது மாயாவின் குழு. எதிர் குழு வேண்டுமென்றே மாயாவின் குழு உறுப்பினர்களை தள்ளிவிட்டனர். எதிர் குழுவில் ஒருத்தி வேண்டுமென்றே வேகமாகப் பந்தை உதைத்தாள். பந்து மாயா குழு கோல்கிப்பர் முகத்தில் பட்டது. முகத்தில் ரத்தம் வடிய, அவள் வெளியேற்றப்பட்டாள். striker positionல் விளையாடி கொண்டிருந்த மாயா கோல்கிப்பர் இடத்திற்கு வந்து விளையாட தொடங்கினாள். ஆட்டம் 2-1 என்ற நிலையில் முடிந்தது. மாயாவின் குழு தோற்றது.

திடலில் விளையாடிய எதிர் குழு மாயாவின் குழு பக்கமாய் வந்து, "சின்ன பொண்ணுங்க எல்லாம் விளையாட வந்துட்டாங்க..." என்று நக்கலுடன் சிரித்தனர்.

கோபம் அடைந்த ஷில்பா, "ஹாலோ, காட்டுமிராண்டி மாதிரி விளையாடுறவங்க நல்ல பொண்ணுங்கள பத்தி பேசகூடாது." என்ற பதிலை வீசினாள். ஷில்பாவுக்கும் எதிர் அணிக்கும் வாக்குவாதம் எரிமலையாய் வெடித்தது. ஒரு கட்டத்தில் ஷில்பாவை தள்ளிவிட்டாள் எதிர் அணி தலைவி. பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களின் சண்டையை தடுக்க முயன்றனர். அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த சந்தோஷும் அவன் தோழனும் ஆச்சிரியத்தில் உரைந்துபோனார்கள்.

மாயா, "ஷில்பா, stop it. விடு விடு! you are making a scene out of nothing." சாந்தப்படுத்தினாள்.

ஷில்பா, " நீ தானே அவங்க aggressiveஆ விளையாடுறங்கன்னு சொன்னே. they started the fight not me." சீறினாள்.

"இல்ல ஷில்பா. listen. அது விளையாடும்போது நம்ம வெறிய காட்டனும். ஆனா, முடிஞ்ச பிறகு, விட்டுடனும். cool down ஷில்பா!" மாயா அமைதியாய் ஆறுதலாய் சொன்னதை பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ்.

அருகில் வந்த சந்தோஷ், " girls, நீங்க ரொம்ப நல்லா விளையாடினீங்க. very talented team. அவங்க செஞ்ச தப்பு தான். நீங்க போய் organiserகிட்ட ஒரு complain report கொடுங்க. they might help you." என்றான்.

"ஒரு மண்ணும் வேணாம். i am leaving this place!" ஷில்பா கோபத்துடன் கிளம்ப, அவளை தொடர்ந்து மற்ற தோழிகளும் சென்றனர்.

"hey girls, award ceremony இருக்கு. நம்ம participation certificates வாங்கனும். கொஞ்சம் வேட் பண்ணுங்க." அவர்களை தடுத்தாள் மாயா.

"நீயே வேட் பண்ணி வாங்கிட்டு வா!" பைகளை தூக்கி கொண்டு நடையைக் கட்டினர். சலிப்புடன் மாயா உட்கார்ந்து தனது காலணிகளை மாற்றினாள். சந்தோஷ் அவளிடம் பேச்சு கொடுத்தான். அவளது குழு திறமையை பற்றி பாராட்டு மழை பொழிந்தான். சந்தோஷ், ரவி, மாயா ஆகிய மூவரும் ரொம்ப நேரம் காற்பந்து பற்றி பேசினர், அவர்களது வேலையை பற்றி பேசினர். அந்த கொஞ்ச நேரத்திலேயே நண்பர்கள் ஆகினர்.

கோக் வாங்க சென்றனர் சந்தோஷும் ரவியும். coca cola vending machine அருகே நின்று கொண்டிருந்தான் சந்தோஷ்.

அந்த அழகிய காட்சியை பார்த்தபிறகு, அவனுக்குள் ஏதோ ஒரு புத்துணர்ச்சி பிறந்தது போல் இருந்தது.

4 வயது குட்டிபொண்ணு மாயாவிடம் சென்று ஒரு சின்ன பந்துடன் விளையாடி கொண்டிருந்தது. அவளிடம் பந்தை போட்டு விளையாடிய அந்த அழகிய காட்சி அவனுக்குள் என்னமோ ஒரு உணர்வை ஏற்படுத்தியது. மாயா அந்த சிறு குழந்தையை தூக்கி கொஞ்சுவது அவளின் கன்னங்களில் முத்தம் வைத்ததும் அவனை என்னமோ செய்தது. தூரத்தில் நின்று இதனை கவனித்த அவனுக்குள் ஒரு அழகிய மின்னல் வெட்டியது.

அதே சமயம், வானத்திலும் மின்னல் இடி.மழை பெய்ய தொடங்கியது. இயற்கையாய் வருவது காதல்! சந்தோஷுக்கு இயற்கையோடு வந்தது காதல். அந்த மழை சாரலும், அந்த குளிர் காற்றும் அவனை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றது.

அன்று இரவு முழுவதும், மாயா கம்பீரமாய் ஏற்பாட்டாளரிடம் பேசிய பேச்சு, ஆக்ரோஷமாய் விளையாடிய விளையாட்டு, திறமையை வெளிபடுத்திய விதம், தோழிகளுக்கு ஆதரவாய் பேசிய முறை, கொஞ்ச நேரத்திலேயே நண்பராய் பழகிய விதம், குழந்தையோடு கொஞ்சிய குணம்- அனைத்தும் அவனது மனத்திரையில் ஆயிரம் முறை ஒளிப்பரப்பாகியது.

இது காதலா? வேற என்ன? சும்மா ஒரு நாளில் பார்த்தவுடன் வந்துவிடுமா காதல்? இல்ல இது சும்மா ஒரு attractionஆ என்று தெரியாமல் குழம்பினான் சந்தோஷ்.

இரவு மணி 1145.

தோழனுக்கு ஃபோன் செய்தான்.

"மச்சான், i think i like maya." ஹாலோ கூட சொல்லாமல் சந்தோஷ் கூறிய வார்த்தைகளை கேட்ட ரவி தூக்க கலக்கத்திலிருந்து விழித்து கொண்டான்.

"மச்சான், என்ன சொல்ற?" மறுபடியும் கேட்டான் ரவி.

"தெரியலடா, ஒரு மாதிரியாவே இருக்கு. அவ நினைப்பாவே இருக்கு." சந்தோஷ் பாவமாய் அமைதியான குரலில் சொல்ல,

"மச்சான், பொண்ணுங்க விஷயத்துல ஒரு முடிவு பண்ணறதுக்கு முன்னாடி 3 கேள்விகள கேட்கனும். number 1 அவளுக்கு கல்யாணம் ஆச்சா? ஏனா, இப்ப உள்ள பொண்ணுங்க ரொம்ப health conscious. கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைங்க இருந்தாலும் ரொம்ப fit and trimஆ இருப்பாங்க. number 2 அவளுக்கு நிச்சயதார்த்தம் ஆச்சா? number 3 அவள் வேற யாராச்சயும் காதலிக்குறாளா? இந்த கேள்விகளுக்கு இல்லன்னு பதில் வந்தா, மச்சான் உனக்கு jackpot!!!" இரவு 12 மணிக்கு வாழ்க்கை பாடம் நடத்திகொண்டிருந்தான் ரவி.

குழப்பத்தில் இருந்த சந்தோஷ் ஒரு ஐடியா தோன்றியது, "இத கண்டுபிடிக்குறது ரொம்ப simple. facebook எதுக்கு இருக்கு?" என்றவன் உடனே ஃபோன்னை கட் செய்தான்.

மாயா என்ற பெயரில் பல்லாயிரம் profileகள் இருந்தன. silent tigers football team என்று டைப் செய்து பார்த்தான். அப்படி ஒரு பக்கம் இருந்தது. வெற்றி! வெற்றி!

அவளின் accountயை கண்டுபிடித்தான். ஆனால் என்ன பயன்? மாயா தனது profileலை private settingல் வைத்திருந்தாள். உடனே ஒரு friend request அனுப்பினான்.

வைதேகி காத்திருந்தாள் விஜய்காந்த் போல் சந்தோஷ் காத்திருந்தான் மாயாவின் பதிலுக்காக....

(பகுதி 3)

Jun 13, 2011

இப்போதைக்கு சினிமா காலியா தான் இருக்கு!

producer-director kaamedy series

தயாரிப்பாளரின் மேசையில் எந்த டிவிடிகளுமே இல்லை. அச்சமயம், நம்ம இயக்குனர் பாரதி கௌதம் உள்ளே வருகிறார்.

இயக்குனர்: என்ன சார் காலியா இருக்கு மேசை. படம் எடுக்க போறது இல்லையா சார்?

தயாரிப்பாளர்: அட போயா? இப்போதைக்கு சினிமா காலியா தான் இருக்கு.

இ: ஏன் சார் அப்படி சொல்றீங்க?

த: எல்லாரும் கிரிக்கெட் விளையாட போயிட்டா அப்பரம் நான் யார வச்சு படம் எடுக்குறது?

இ: ஹாஹாஹா...ஐயோ சார் அதான் இந்த சோகமா!? இவங்க போனா என்ன? நம்ம கிரிக்கெட் வீரர்கள் தான் இப்போ டான்ஸ் போட்டி, பல்பொடி விளம்பரம் அப்படினு நடிக்க வந்துட்டாங்களே! இவங்கள வச்சு படம் எடுப்போம் சார்!

த: நீ சொல்றது உண்மை தான்! நம்ம virat kohli நல்லா அழகா smart இருக்குறார்... அவர வச்சு ஒரு படம் பண்ணலாமா பாரதி?

இ: ஹிந்தி படம் எடுக்க போறீங்களா?

த: இல்ல, தமிழ் படம் தான்!

இ: தமிழ் படத்துல நடிக்கறதுக்கு எதுக்கு சார் இவ்வளவு அழகு தேவை? இங்க பாருங்க இவர.... இவர் நடிச்சாருன்னா...படம் செம்ம ஹிட்!
(ஒரு ஃபோட்டோவை நீட்டுகிறார்!)

(ஃபோட்டோவை வாங்கி பார்த்து, முகம் சுழிப்புடன்)

த: யோவ்! யாருய்யா இது? shave பண்ணி 10 வருஷம் ஆனா மாதிரி! முடி என்னய்யா...விளக்கமாறு மாதிரி இருக்கு!

இ: என் தெருவுல இருக்கும் வளரும் ரவுடி.

த: வளரும் ரவுடியா???

இ: வளரும் கலைஞன் மாதிரி, வளரும் ரவுடி!!

த: இந்த மூஞ்சிய எப்படிய்யா படத்துல காட்டுறது!

இ: சார், என்ன சார் புரியாம பேசுறீங்க! இப்ப உள்ள trendஏ உங்கள தெரியாதா!? இந்த ரவுடி செம்ம ஹிட் ஹீரோவா வருவார் பாருங்க!

த: எப்படிய்யா சொல்றீங்க??

இ: சார், இந்த ஃபோட்டோவ படம் புடிச்சு உங்க மனைவிக்கும் பொண்ணுக்கும் mms அனுப்புங்க? அவங்க reaction பாத்த பிறகு நீங்களே சொல்வீங்க!

(இயக்குனர் சொன்ன படி செய்தார் தயாரிப்பாளர். சற்று நேரத்தில் இருவரிடமிருந்து பதில் வந்தது)

மனைவி: ஆபிஸ் நேரத்துல, இப்படி பயம் காட்டுற மாதிரி ஃபோட்டோ அனுப்புற?? வீட்டுக்கு வா, உங்க அம்மா ஃபோட்டோவ காட்டி பயம் காட்டுறேன் பாரு!

இ: என்ன சார்? உங்க மனைவி செம்ம டென்ஷனா ஆயிட்டாங்க போல!

த: யோ! என்னய்யா வம்புல மாட்டிவிட பாக்குறீயா?

இ: சார், பொறுங்க. உங்க பொண்ணு ஸ் எம் ஸ படிங்க

பொண்ணு: டாடி!! omg! who is this? so hot! so cute! semma rowdy look! awesome! super! you better fix him for your next movie. I'm going to share this picture with my collegemates!

த: (ஆச்சிரியத்துடன்) என்னய்யா நடக்குது?

இ: நான் தான் சொன்னேன்ல. எந்த ஒரு ஹீரோ முகம் ஆண்ட்டிஸ்க்கு பிடிக்காம, அவங்க பொண்ணுங்களுக்கு பிடிக்குதோ, அந்த ஹீரோ தான் டாப் ஹீரோ!

த: என்னமோ போயா! இது எல்லாம் சரியா வருமானு தெரியல!

இ: சார், இவர் நல்ல கிரிக்கெட் ஆடுவாரு சார்! தமிழ் படம் ஹீரோவுக்கு இதவிட வேற என்ன தகுதி வேணும்!?

த: (சலிப்புடன்) புதுசா எதாச்சு செய்யுவோம்? ஒரு reality tv show பண்ணா என்ன?

இ: பின்னீட்டீங்க சார்! இப்ப அது தான் hot business.

த: என்ன நிகழ்ச்சி பண்ணலாம்?

இ: பாட்டு போட்டி! airtel வழங்கும் cute singer இம்முறை உலகத்தையும் தாண்டி!

த: நல்லா தான் இருக்கு!

(ஒரு வாரம் சென்றது, நிகழ்ச்சி தேர்வு சுற்று நடந்தது. தேர்வு சுற்று அறையில், இயக்குனரும் தயாரிப்பாளரும் காத்து கொண்டிருந்தனர்)

த: உன்னைய நம்பி இதுல இறங்குறேன், பாத்து பண்ணுய்யா!!

இ: கவலைய விடுங்க! தேர்வு சுற்றே 15 episode காட்டலாம்! அப்பரம் டாப் ஹீரோ சுற்று, மொக்கை ஹீரோ சுற்று, மொக்கை ஹீரோக்களின் லவ் டூயட்ஸ், மொக்கை ஹீரோயின்களின் solo சுற்று, wildcard round 1, wildcard round 2, wildcard round 3, mega wildcard round, semi final 1, semi final version 2.0...இப்படி ஒவ்வொரு episode கணக்கு பண்ணாலே, பல கோடிய அள்ளிடலாம் சார்!

த: ஆமா, நமக்கு என்னமோ பாட்டு தெரிஞ்ச மாதிரி judge பண்ண வந்துட்டோமே, உனக்கு ஏதாச்சு சங்கீதத்த பத்தி தெரியுமா?

இ: மத்தவங்க பொண்டாட்டிய பத்தி நான் பேச மாட்டேன் சார்?

த: பொண்டாட்டியா????

இ: பாடகர் கிரீஷ் பொண்டாட்டி தானே சங்கீதா? அவங்கள பத்தி எனக்கு ஒன்னு தெரியாது சார்!

த: யோ! சங்கீதா இல்லையா? சங்கீதம்!!!!!!!

இ: (சிரித்து கொண்டே) அத பத்தி தெரியாம இருக்குமா? நான் எப்படி judge பண்றேன் மட்டும் பாருங்க!

(முதல் போட்டியாளர் வந்தார். பாடினார்)

இ: நீங்க பாடின மூன்றாவது வரில அந்த ரெண்டாவது வார்த்தையல கொஞ்சம் landing note தப்பா போயிட்டு!

த: (இயக்குனர் காது அருகே சென்று, மெதுவாய்) அவர் பாடினதே இரண்டு வரி தான். நீ என்னத்த மூன்றாவது வரிய கண்டு பிடிச்ச?

இ: (சமாளித்து கொண்டு) ஓகே, சார்! நீங்க அடுத்த ரவுண்டுக்கு selected.

(அடுத்த போட்டியாளர் பாடி முடித்தார்)

இ: சூப்பர்! சூப்பர்! இந்த சின்ன வயசுல....(கண் கலங்கினார்)

த: (இயக்குனரிடம் மறுபடியும் காது அருகே சென்று) அநியாயம் பண்ணாத டா! இவருக்கு 55 வயசு ஆச்சு! இது உனக்கு சின்ன வயசா? நல்லாவே பாடுல...reject him.

இ: (அமைதியான குரலில் தயாரிப்பாளரிடம்) சார், நல்லாவே பாடாம இருக்கறவங்கள தான் choose பண்ணனும். அது தான் புது rule.

(வெளியே வாக்குவாதம் நடந்தது. அதை சமாளிக்க ஓடினர் இருவரும்)

ஒரு அம்மா: எங்க புள்ள பாடனும்.

த: இல்ல மேடம். இது பெரியவங்க நிகழ்ச்சி.

ஒரு அம்மா: என் புள்ள, சின்னபுள்ள, இப்ப தான் 6 வயசு ஆகுது. சும்மா ஒரு guest appearance மாதிரி பண்ண வைங்க.

இ: மேடம், கவலைய விடுங்க! அடுத்த seasonல உங்க பையனுக்கு சான்ஸ் இருக்கு.

த: அடுத்த seasonக்குள்ளவா? இப்ப தான் பையனுக்கு 6 வயசு.

இ: சார், நம்ம ஒரு சீசன முடிக்கறதுக்குள்ள பையன் வயசுக்கு வந்து மேஜர் ஆயிடுவான் சார்.

(பிரச்சனையை சமாளித்த உற்சாகத்தில் உள்ளே வந்தனர் இருவரும். அடுத்த போட்டியாளர் பாடி கொண்டு இருக்கும் வேளையில்...)

இ: நிறுத்துங்க! (கத்தினார்)

த: (ஆச்சிரியம் அடைந்தார்)

இ: என்னங்க பண்றீங்க?? (போட்டியாளர் மிரண்டு போயிட்டார்)

த: (இயக்குனரிடம்) யோ! what's happening?

இ: அவர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?

போட்டியாளர்: சாரி சார்! நான்....மறுபடியும் பாடவா?

இ: நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்!

(அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில். யாருக்குமே என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். போட்டியாளரின் சித்தி உள்ளே நுழைந்தார் கையில் ஒரு கேக். அனைவருக்கும் அப்போது தான் புரிந்தது. அனைவரும் கை தட்டினர்.)

சித்தி: இன்னிக்கு celebration time! எங்க கொள்ளு தாத்தா ஒருத்தர் இருந்தாரு. அவரோட நினைவு நாள் இன்னிக்கு. அதான்...(சிரித்து கொண்டே உள்ளே நுழைந்தார்கள் போட்டியாளரின் மொத்த குடும்பத்தினரும். இயக்குனரும் சேர்ந்து கொண்டார் கொண்டாடத்தில். கேமிரா மேன் ஒவ்வொரு angleலாய் படம் எடுத்தார்!)

த: (கோபத்துடன்) என்னய்யா நடக்குது!!! எல்லாரும் ஓடி போயிடுங்க!

(அனைவரையும் விரட்டினார்!!!)

இ: சார்... என்ன சார்?

த: நீ பேசாதய்யா!!??

இ: (புன்னகையித்து கொண்டே) சார், அங்க பாருங்க சார்?

த: என்ன?

இ: இப்ப பாடினாரே அவர் காதுல எத்தன தோடு போட்டு இருந்தார் தெரியுமா?

த: அவர சித்தியவிட அவருக்கு தான் நிறைய இருந்திருக்கும். அதுக்கு இப்ப என்ன?

இ: சார், ஒரு ஐடியா சார்? why not we start 'நம்ம வீட்டு காது குத்து' show?

த: உனக்கு இன்னிக்கு கும்மாங்குத்து தாண்டா!!! (விரட்டி கொண்டு ஓடினார் இயக்குனரை பிடிக்க!)

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-15




sp சரண்!!!! எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு??? 8 மாதங்களில் 30 கிலோ குறைத்து இருக்கிறார்! அப்பரம் என்னங்க பண்ணறது....சைட் அடிக்காம!!

இவர் வயசுக்கு இந்த மாதிரி இருப்பது simply great! இந்த வயசல இப்படி ஒரு மிகப்பெரிய முயற்சி எடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும். பலருக்கும் inspiration.. எனக்கும் தான்!


ஆஹா!!! பாத்துகிட்டே இருக்கலாம் போல!:))))))))))))

உடல்வாகு சிறிதாய் போனாலும், காது அருகே இருக்கும் நரை ம்ம்...attractive!:)

Jun 9, 2011

அப்பரம், இன்னிக்கு என்ன plan?- 1

சோம்பல் முறித்த சந்தோஷ் படுக்கையில் புரண்டு வலம் பக்கம் திரும்பினான். குளியலறையின் கதவில் நீரின் வெப்பம் ஒழுகியது. கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் மாயா. அவளின் வாசம், சோப்பின் மணம் அனைத்தும் சோம்பலில் இருந்த சந்தோஷுக்கு புத்துணர்ச்சியை தந்தது. தலைமுடியை துவட்டியபடி மெத்தையில் அமர்ந்தாள். சந்தோஷ் அவளையே பார்த்தான் கண்கொட்டாமல்.

"எழுந்திரு சந்தோஷ், it's 7.15am now." அவன் பக்கம் திரும்பி கூறினாள். தலைமுடியிலிருந்து இரண்டு சொட்டு நீர் சந்தோஷின் கன்னங்களில் விழுந்தன.

அவன், " தேவதை குளித்தத் துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்....அன்பே அன்பே கொல்லாதே" ஜீன்ஸ் பட பாடலை பாடினான்.

சிரித்தபடி மாயா, "ஸ்ருதி தப்பா இருக்கு!" என்று கிண்டலடித்தாள்.

"சாரி, ஸ்ருதினு எந்த பொண்ணும் எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்ச ஒரே பொண்ணு, மாயா தான். அவ ரொம்ப அழகா இருப்பா...especially after her shower." காலையிலேயே ரோமெண்டிக் மூட் வந்தது சந்தோஷுக்கு.

புன்னகை மாறாத மாயா, "ஹாலோ மிஸ்டர் சந்தோஷ், enough of your nonsense. you're getting late for work. quick, get up! breakfastக்கு என்ன வேணும்?"

"it's friday. இன்னிக்கு... வேலைக்கு போகனுமா?" வேண்டாம் வெறுப்பாக எழுந்தான்.

காலை உணவு உண்ண சந்தோஷ் dining tableக்கு வந்தான். மாயா செய்து இருந்த sandwich எடுத்து ஒரு சிறு கடி கடித்தான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த மாயா, அவனுக்கு ஆரஞ்சு ஜுஸ் ஊற்றினாள்.

"ம்ம்ம்....அப்பரம் இன்னிக்கு என்ன plan?" என்றான் சந்தோஷ்.

சமையலறைக்குள் சென்ற மாயா, "என்ன plan?" என்று முழித்தாள்.

"ஏர்டெல் விளம்பரத்துல கார்த்தி சொன்னா மட்டும் புரியுது?" என்று கிண்டலடித்தான். ஆரஞ்சு ஜுஸ் குவளையை சமையலறையில் வைத்துவிட்டு திரும்பிய மாயாவை, சுவர் அருகே மடக்கினான் சந்தோஷ். அவளின் சோப்பு மணமும் shampooவின் மணமும் அவனையை அவளிடம் இன்னும் ஈர்த்தது. மணம் நுகர்ந்தபடியே அவள் கழுத்தை நோக்கி சென்றது அவனது முகம்.

அவனின் குறும்பு செயலை தடுத்தபடி, "ஹாலோ my dear santhosh, ஆபிஸுக்கு லேட் ஆயிட்டுனு கொஞ்சும்கூட பயம் இல்லையா!?"

சந்தோஷ் புன்னகையுடன், "அழகான மனைவி இருந்தா, ஆபிஸுக்கு லேட்டா போகலாம். தப்பில்ல!" என்று கண் சிமிட்டினான்.

"ஐயோ சந்தோஷ்! ப்ளீஸ்! என்னையவிட...." வெட்கங்களை அள்ளிகொண்டு அவன் பிடியில் இருந்து தப்பிக்க முயன்று தோற்று போனாள் மாயா.

"tie கட்டிவிடு!" என்றான் சந்தோஷ்.

"ஏன் உனக்கு தெரியாதா?" என்றாள் மாயா.

"தெரியாத விஷயங்கள மட்டும் தான் சொல்லி தருவீயா?? நேத்திக்கு ராத்திரி மாதிரி." சில்மிஷ பார்வையுடன் அவன்.

வெட்கங்கள் அவளின் உதடுகளை முட்ட, "சந்தோஷ்!!!! stop it!!"

"hahaha..ok ok. just kidding. please.... tie கட்டிவிடேன்." கெஞ்சினான் சந்தோஷ்.

"இப்படி கிட்ட நின்னா...எப்படி?" என்றபடி அவள் இடுப்பில் இருந்த அவனது கைகளை தள்ளிவிட்டு tie கட்டினாள். tieயை சரிசெய்தாள். சற்று கலைந்திருந்த அவனது முடியை தனது விரல்களால் அழகாய் கோதிவிட்டாள்.

ரொம்ப smartஆ தெரிந்தான். அவன் நெற்றியில் இதழ் பதித்தாள் மாயா.

முத்தம் கொடுத்த உற்சாகத்தில், மறுபடியும் தன் வசம் இழுத்து கொண்டான் மாயாவை.

"நெத்தில மட்டும் தானா!?" என்று கொஞ்சினான்.

அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் மாயா.

"right cheekல மட்டும் தானா?" மறுபடியும் கெஞ்சல்.

முறைத்தாள் செல்ல கோபத்துடன். செய்ய வேண்டியதை செய்தாள்.

"left cheekல மட்டும் தானா?" அவனும் விடவில்லை.

"quota finished! இதுக்கு மேல கேட்டே...அப்படியே இந்த tieயால கொல பண்ணிடுவேன்." அவனது tieயை இழுத்தாள்.

"நீ என்னைய என்னவேணாலும் பண்ணு. ஆனா the weapon must be your lips!" சிரித்தான் சந்தோஷ்.

"santhosh...please da. அடம்பிடிக்காதே! டைம் ஆச்சு! இன்னும் ஒரு secondல நீ கிளம்புல அப்பரம் இன்னிக்கு no plans for tonight" என்றதும் சந்தோஷ்,

"noooooooooo! சரி சரி, i better leave." என்று கிளம்புவதற்கு முன் ஒரு முறை மாயாவை கட்டி அனைத்து,

"take care, dear" என்றான்.

அவன் காரில் ஏறி செல்வதை ஜன்னல் வழி பார்த்தாள். அச்சமயம், பக்கத்துவீட்டு குட்டிபையன் பள்ளிக்கு செல்லும் தருவாயில், "அம்மா, இன்னிக்கு football match இருக்கு. late-aa ஆகும்."

********
2 வருடங்களுக்கு முன்...

"அம்மா, இன்னிக்கு football match இருக்கு. late-aa ஆகும்," சொல்லிகொண்டே தனது shoe பையில், gloves, knee pad, knee shield, boots ஆகியவற்றை எடுத்து கொண்டாள் மாயா.

'goalfest carnival- boys&girls' என்ற வரவேற்பு பலகையை படித்தவாறு ஸ்டென்லி விளையாட்டு அரங்கிற்குள் நுழைந்தாள் மாயா. இந்த 'goalfest carnival' வருடம்தோறும் நடக்கும் ஒரு காற்பந்து விளையாட்டு விழா. இதில் ஆண்கள் பெண்கள், சிறு குழந்தைகள் என மூன்று பிரிவுகள் உண்டு. சில வருடங்கள் காற்பந்து விளையாட்டிய அனுபவம் இருந்தாலும், மாயாவிற்கு இந்த விழாவில் கலந்து கொள்வது முதன் முறை.

கோயில் திருவிழா போல் அரங்கம் முழுவதும் மக்கள். காலை 10 மணிக்கு தான் வெவ்வேறு திடலில் ஆட்டம் நடைபெறும். அப்போது 9 மணி தான். warm up உடற்பயிற்சிகளை தனது குழு தோழிகளிடம் சேர்ந்து செய்தாள். அவளின் தோழி ஷில்பா,

"மச்சி, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு!"

மாயா, "don't be nervous! let's do our best!"

ஷில்பா அதற்கு, "அது இல்ல டி! ஒரே நேரத்துல இந்த அழகான பசங்கள பார்க்க நான் கொடுத்து வச்சு இருக்கனும்! எனக்கு சந்தோஷத்துல...அழுக அழுகையா வருது மச்சி!"

மாயா சலித்துகொண்டாள், "oh god! நீங்கலாம் திருந்த மாட்டீங்க! please stay focus!"

"i am going through a குவ்வியமில்லா காட்சி பேழை moment di!!!" சத்தம் போட்டு சிரித்தாள் இன்னொரு தோழி ராதா. மற்ற தோழிகளும் சிரித்தனர். சிரிப்பு சத்தம் இடையே ஒரு அறிவிப்பு வந்தது.

அறிவிப்பாளர், " இன்னும் 3 டீம் register பண்ணல்ல. 5 minutes தான் இருக்கு கடைசி registrationக்கு. registration will be closed after that and teams without official registration forms would be disqualified." என்றார்.

ராதா, "மச்சி, we have yet to register." என்றார் திடீரென்று.

மாயா, "what!!?? நான் தான் நேத்திக்கு சொன்னேன்ல. சீக்கிரமா வந்தவங்க first போய் register பண்ணுங்கன்னு." எரிச்சலாய் சொன்னாள்.

ஷில்பா, "sorry babe. got distracted by handsome dudes." என்று தனது நக்கல்பேச்சுடன் அவசர அவசரமாய் கிளம்பினாள் registration counterக்கு. கூடவே, மாயாவும் போனாள்.

அங்கே ஏற்கனவே, இருவர் குழு ஏற்பட்டாளரிடம் வாக்குவாதம் நடத்திகொண்டு இருந்தனர். ஏற்பட்டாளர், " மிஸ்டர் சந்தோஷ், look here. 9.15amக்குள்ள registration பண்ணியிருக்கனும். now it's 9.16am. registration over."

சந்தோஷ், "but sir, it's only 9.12am." தனது கடிகாரத்தை நீட்டி காட்டினான்.


(பகுதி 2)

Jun 1, 2011

love excel (ஜொள்ளு நல்லது)

தமிழில் ஜொள்ளு. ஆங்கிலத்தில் flirting.

ஐயோ என்ன இந்த மாதிரி எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க அப்படின்னு பதற வேண்டாம், கதற வேண்டாம். surf excel கறை நல்லது போல் ஜொள்ளு விடுவதும் நல்லது ஒரு வகையில்.

பொதுவாக எப்போது ஜொள்ளுவிடுவோம் என்பதை ஆராய்ந்தால்....

1) சைட் அடிப்பது முதல் stage: ஒரு பெண்ணையோ அல்லது ஆண்மகனையோ பார்த்து , "மச்சி, he's soooooo cute!" என்பது சாதாரண சைட் அடித்தல். அதை நல்ல குடிமகன்கள் ஆகிய நாம், நல்ல குடிமகள்கள் ஆகிய நாம் தினமும் செய்து கொண்டிருக்கிறோம்.

இதனால் உடலுக்கு என்ன ஆகும்? இயற்கை அழகை ரசித்தால் என்ன ஒரு சந்தோஷம் கிடைக்குமோ அதே சந்தோஷம் சாதாரண சைட் அடித்தல் மூலம் கிடைக்கும்.

ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்- சைட் அடித்தல் அவனுக்கோ/அவளுக்கோ தெரியாமல் செய்வது தான் சரி! இந்த விசில் அடிப்பது, அப்பரம் நடந்து போகும்போது ஸ்ருதி தப்பா பாடுவது, டபுள் மீனிங் டையலாக் அடிப்பது போன்றவை பொரிக்கித்தனம். இவற்றை தவிர்த்து, ஆரோக்கியமான சைட் அடித்தலில் ஈடுபடுவது அவளின் செருப்புக்கும் உங்கள் உடலுக்கும் நல்லது!

2) நேரடியாக ஜொள்ளு விடுவது (flirting in person): நிறைய ஆபிஸில் இது நடப்பது தான். ஆனால், இந்த கள்ள காதல், நொள்ள காதல் வகையில் இதை தயவுசெய்து சேர்க்க வேண்டாம். இதை ஆங்கிலத்தில் harmless flirting என்று கூறுவோம். இதுவும் மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்- தன்னம்பிக்கை, self-esteem அதிகமாகும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்- நீங்கள் flirt செய்கிறீர்கள் என்று உங்கள் மனதுக்கு 100% தெரிந்து இருக்க வேண்டும், எந்த நபரை flirt செய்கிறீர்களோ அவருக்கும் அது புரிந்து இருக்க வேண்டும். அன்று அவர் அணிந்து வந்த சட்டையோ, அல்லது அவள் போட்டு இருந்த சுடிதாரோ நல்ல இருந்துச்சுன்னா, அதை பார்த்து அவரிடமே comment அடிப்பது 'mild flirting.'

இருவருக்கும் ரொம்ப நல்ல office chemistry இருந்தால் மட்டுமே
"hey dude, you look extremely hot whenever you wear that white specs." என்று ஒரு படி மேலே போகலாம்.

mutual consent ரொம்ப முக்கியம். இந்த flirting ஆபிஸ் அளவில் மட்டும் வைத்து கொள்ள வேண்டும். அந்த கட்டுபாடு தெரிந்தவர்களுக்கு மட்டுமே flirting செய்ய முழு license உண்டு!

3) facebook, smsல் flirting: இது ரொம்ப ரொம்ப சகஜம்!

facebookல்,

A:i can cook and do much more =-) winks!//
B: hahahahaha omg!!! love all your one-liners! naughty naughty!!! u shld collate all your beautiful one liners. anyway how have u been? how were ur holidays?
A: bad! anyway what were u thinking when i said that? you are the naughty one.

B:I was thinking abt what you want me to think abt! *winks* haha



4) காதலில்/திருமண வாழ்க்கையில் flirting: நிறைய பேருக்கு இது தெரிவதில்லை. இல்ல, flirting என்றால் தவறு என்று நினைக்கிறார் போலும். ஐந்து வருடம் கழித்து, அதே காதலியை அல்லது காதலனை பார்த்து பார்த்து போர் அடித்து இருக்கும், அச்சமயத்தில் அவரிடம் நீங்கள் flirt செய்வது உங்கள் உறவை மேன்படுத்தும்! நீங்கள் இளமையாய் feel செய்வீர்கள்.

எதுவாக இருந்தாலும், நீங்கள் flirt செய்கிறீர்கள் என்று அவனுக்கு/அவளுக்கு தெரிந்தால் மட்டும் flirting (point 2,3,4) சுவாரஸ்சியமாக இருக்கும். இன்னொரு முக்கிய குறிப்பு, எல்லாரிடமும் இதை செய்து கொண்டிருக்க முடியாது. (உங்களை sj surya பெரியப்பா என்று நினைத்துவிடுவார்கள்.) யாரிடம் நீங்கள் comfortableஆக நடந்து கொள்ள முடியுமோ, அவரிடம் மட்டும் ஜொள்ளு விடுங்கள்!

முக்கியம்: flirting செய்யும்போது physical contact சுத்தமாய் இருக்க கூடாது. பேச்சு பேச்சோட தான் இருக்கனும்!

ஜொள்ளு விடுவதால், நல்ல விஷயம் நடக்கும் என்றால்

ஜொள்ளு நல்லது!!:))))))))))