Jul 13, 2015

பாகுபலியும் காக்கா முட்டையும்



இரண்டு படங்கள்.
ஒன்று 250 கோடிகளில் உருவாக்கப்பட்டது.
இன்னொறு வெறு 2 கோடியில்.

ஆனால் இரண்டுமே தமிழ் சினிமாவை அடுத்த இடத்துக்கு கொண்டு போய் உள்ளன. தமிழ் சினிமா ரசிகையாய், எவ்வளவு பெருமையாக இருக்கு என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.


காக்கா முட்டை- ரெண்டு பசங்க பிட்சா சாப்பிட ஆசைப்படும் கதை.

பாகுபலி- பழிவாங்கும் கதை.




ஒற்றை வரி கதையை எப்படி இப்படி பிரமாண்டமாய் எடுத்து இருக்காங்க! இரண்டுமே ஒரு வகையில் பிரமாண்டம் தான்.

காட்சி அமைப்பும் சரி, வசனங்களும் சரி அருமையிலும் அருமை. ரெண்டு படங்களையும் பார்த்து ரசித்து விட்டு தோன்றிய சிந்தனை....

 "ஒரு படத்துக்கு ரொம்ப முக்கியம் திரைக்கதையும் நடிகர் நடிகைகளும் தான்."

காக்கா முட்டை: அந்த ரெண்டு பசங்களும்.... யப்பா!!! அவர்களின் அம்மாவாக நடித்தவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பாகுபலி: யார் நடிப்பை பற்றி நான் பாராட்டி எழுதுவது? ஒவ்வொரு நடிகை நடிகரும் வெளுத்து வாங்கி இருக்காங்க! ரொம்ப நாளைக்கு அப்பரம் ஒரு படத்தில் நடித்தவர்களின் ரசிகையாய் மாறிவிட்டேன்.

இரண்டு படங்களிலும் பிடித்த இன்னொரு விஷயம்: தமிழ்.

இரண்டு தமிழுமே அழகு தான்!!

இரண்டு படங்களையும் இந்தியர்கள் அல்லாத வேறு இனத்தவர்கள் பார்த்து ரசித்து செல்வதை பார்க்கும்போது, ஆனந்த கண்ணீரை தவிர்க்க முடியவில்லை.


இது போன்று இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும் என சொல்ல மனசு வருவில்லை. இது போதும் எனக்கு! இந்த சந்தோஷம் அப்படியே மனதில் நீண்ட நாள் இருக்கட்டும்!!