Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Mar 22, 2016

ஆட்டோக்காரன் நான் ஆட்டோக்காரன்- amazing auto driver அண்ணாதுரை

ஆட்டோக்காரன் நான் ஆட்டோக்காரன் என பாடலை கம்பீரமாக, இந்தியாவில் பாட தகுதி உள்ளவர் ஒருவர் என்றால் அது அண்ணாதுரையாக தான் இருக்க முடியும்.

தனது ஆட்டோவில், மாத இதழ், செய்திநாள், லாப்டாப், wifi, ஆசிரியர்களுக்கு இலவசம், குழந்தைகள் தினம் அன்று குழந்தைகளுக்கு இலவசம். அப்துல் கலாம் தினம் அன்று சலுகை என எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அசர வைக்கும் இவரது தொழில் பக்தி.

அவரிடம் கேட்டபோது, அவர் சொன்னது, "customers தான் எனக்கு தெய்வம். அதனால தான் நான் சாம்பாதிக்கும் பணத்த, அவங்களுக்கு செய்யனும்னு ஆசைபடுறேன்." என்றார்.

இவ்வளவு வசதிகள் இருந்தும், அதே கட்டணம் தான். கிட்டதட்ட மாதம் 10,000 வரை செலவு ஆகிறது, வீட்டில் இதனை செய்ய அவ்ளளவு ஊக்குவிப்பு இல்லை என்றபோதிலும், அண்ணாதுரை தொடர்ந்து செய்கிறார் அவரது பணியை.

இப்போது புதிதாக அவரது 'app' ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அண்ணா, கண்டிப்பா நீங்க பெரிய ஆளாக வருவீங்க! வாழ்த்துகள் அண்ணா!


Dec 10, 2015

இந்த மாதிரி பேரிடர் நடந்து இருக்கு, எத பத்தி எழுதுறது?

ஒரு வார காலமாக பேஸ்புக் பக்கமெல்லாம் பேரிடர் நடந்த செய்திகளும், படங்களும் வந்த வண்ணம் இருக்கிறது.

மனம் அழுதது. நிறையவே பதறியது.



சிங்கை என் தாய்நாடாக இருந்தாலும், சென்னையில் சில வருடங்கள் இருந்திருக்கிறேன். அந்த நினைவுகளை அசை போட்ட படி இருக்க, பேரிடர் செய்திகள் பல சமயம் நெஞ்சை உலுக்கியது.

நமக்கு தெரிந்த செய்திகள் இது என்றால், தெரியாமல் போன செய்திகள் எத்தனையோ! கெட்டதிலும், ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்றால், அது சென்னைவாசிகளின் மனங்களைப் பற்றி இவ்வுலகத்திற்கு தெரியவந்தது தான்.

எல்லாம் நல்லதுக்கே என்று சாதாரணமாக சொல்லி முடிப்பதா இப்பதிவை என்று தெரியவில்லை. ஆனால்,சென்னையில் இருப்பவர்கள் பல அசாதாரணமான மக்கள் என்பதால் அவ்வாறே முடித்து கொள்கிறேன்.

நான் பேஸ்புக்கில் பார்த்து, பகிர்ந்து கொண்ட சில படங்கள், இதோ: