Jan 24, 2010

ஆயிரத்தில் ஆயா

காமெடி போஸ்ட் எழுதுவதற்கு சரக்கு(அட தப்பா நினைக்காதீங்க...) எதுவுமே இல்லன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்போது தான் செல்வாராகவன், கார்த்தி, ரீமா ஞாபகம் வந்துச்சு. உடனே கிளம்பி போனேன்...அப்படின்னு நினைக்காதீங்க! அவங்க இப்போ வேலவெட்டி இல்லாம தான் இருக்காங்க...ஆக மெதுவாக தான் கிளம்பி போனேன்.

செல்வா வீட்டு ஹாலில் நிறைய வரலாறு குறிப்பு புத்தகங்கள், ஆங்கில பட டிவிடிகள் மேசையில் கிடந்தது. செல்வா, கார்த்தி, ரீமா உட்கார்ந்து இருந்தாங்க.
நான் உள்ளே நுழைந்தேன்.

நான்: வணக்கம் கார்த்தி, ஹாய் செல்வா, ஹாலோ ரீமா.
(மூவரும் சிரித்தனர். சிரிப்பதுபோல் முறைத்தனர். )

நான்: என் வலைப்பூவுக்கு ஒரு காமெடி போஸ்ட் தேவை. அதான் உங்கள பாக்க வந்தேன்.

செல்வா: எங்கள பார்த்தா எப்படி இருக்கு? (கண்ணாடியை சரிசெய்து கொண்டார்)

நான் ஒரு முறை அவரை மேலும் கீழும் பார்த்தேன்.

நான்: ஆயிரத்தில் ஒருவன் மாதிரி தெரியுறீங்க சார். (ஐஸ் வைத்தேன்...படத்தின் தலைப்பை சொன்னதும் சாந்தம் ஆனார்)

நான்: ஆமா....சார்...நீங்க ஏன் இந்த படத்துக்கு ஆயிரத்தில் ஒருவன்னு தலைப்பு வச்சீங்க? அது அர்த்தம் என்ன?

கார்த்தி: நானும் நிறைய தடவ கேட்டேன். அவர் எம் ஜி ஆர் ரசிகர்...அதான் அப்படி வச்சேன்னு சொன்னாரு.

நான்: ஓ...நான்கூட நினைச்சுட்டேன்...இந்த படம் ஆயிரத்தில் ஒருத்தனுக்கு மட்டும் தான் புரியும்னு!

கார்த்தி: ஏங்க..இப்படி எடுக்குமுடுக்கா கேட்டா நாங்க என்ன பண்றது?

நான்: சரி அடுத்த கேள்வி உங்களுக்கு கார்த்தி.... அது என்ன படத்துல ஆவூன்னா...பாத்த உடனே முடிவு பண்ணிட்டேன் உங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றீங்க. சரி ரீமாவுக்கு பதிலா ஒரு கிழவி அங்க நின்னு இருந்தா...ஏன் ரீமாவே மேக்-கப் போடாம அங்க நின்னு இருந்தா... அப்படி தான் சொல்லியிருப்பீங்களா?

கார்த்தி: இது முழுக்க முழுக்க செல்வாவோட கற்பனை! அவர் தான் இதுக்கு பதில் சொல்லனும்...

நான்: இப்படி எஸ்கேப் ஆனா எப்படி சார்?

(நான் ரீமாவை கிண்டல் பண்ணியது கொஞ்சம் நேரம் கழிச்சு தான் அவருக்கு புரிஞ்சுது...அவர் பாய்ந்தார்...)

ரீமா: hey what are you thinking of me man? u *&($&$^$##&***.

நான்: இந்தா தாயீ.... லண்டன்ல பொறந்து வாஷிங்டன்ல வாய் கொப்புளிச்ச மாதிரி இங்கிலீஷ் பேசினா...நான் ஒன்னும் பயப்புட மாட்டேன்!

ரீமா: i'll shoot you!
நான்: தீபாவளி துப்பாக்கி உங்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா? எனக்கும் தான் கிடைக்கும்.

(என் டம்மி துப்பாக்கிய தூக்கி காட்டியதும் பயந்துட்டார்)

ரீமா: ok ok cool yea...what were u asking me?

நான்: தமிழ் தமிழ்...

ரீமா: (ஆங்கிலம் கலந்த தமிழில்) இந்த படத்துல ஏண்டா நடிச்சேன்னு நினைச்சேன் ஆரம்புத்துலே... அப்பரம் விளங்கிச்சு செல்வா என்ன எதிர்பார்க்குறார்ன்னு.

நான்: படம் பார்க்க போன நாங்களும் அப்படி தான்...ஏண்டா படத்துக்கு வந்தோம்னு ஆச்சு!

கார்த்தி: ஏன் படம் பிடிக்கலையா?

நான்: அட என்ன ஒரு படம். என் வாழ்க்கையவே திருப்பி போட்ட படம்!

செல்வா: (சந்தோஷம் அடைந்தார்) அப்படியா? ஏன்?

நான்: இந்த படத்த பார்த்தே ஆகனும்னு ஒத்த கால்ல நின்னேன் முதல் நாள் முதல் ஷோவுக்கு. குடும்பத்தோட பார்க்க போனோம். அடுத்த நாள் காலையில எனக்கு டிபன் கட். மதியம் சாப்பாடு இல்ல! என்னைய கொலவெறியோட பாக்குறாங்க என் குடும்பம். இப்படி என் வாழ்க்கை திசைதிருப்பி போனதற்கு காரணம் இந்த படம் தான்!

செல்வா: உங்களுக்கு புரியலைன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது? வரலாறு புரிஞ்சா இது புரியும். (குதித்தார்)

நான்: வரலாறு மட்டும் போதுமா? இல்ல...தமிழும் தெரிஞ்சு இருக்கனுமா? ரெண்டாவது பகுதில எனக்கு தமிழ் படத்துக்கே தமிழ் subtitles தேவைப்பட்டுச்சு!

கார்த்தி: கொஞ்சம் சுத்த தமிழா போச்சு.

நான்: தமிழ் சுத்தமா இருந்து என்ன பயன்? படம் சுத்தமா இல்லையே?

கார்த்தி:(தலையை தொங்க போட்டார்)

நான்: சரி பருத்திவீரன் படத்துல ஒரு மாதிரியா நடிச்சீங்க. சரி ஏத்துகிட்டோம். அதே மாதிரி மறுபடியும் இந்த படத்துல நடிச்சு போர் அடிக்க வச்சுட்டீங்களே. இந்த சாக்லெட் பாய், அமெரிக்கா மாப்பிள்ள, பொண்ணு பின்னாடி ஓடுற பையன், காலேஜ் பசங்க ரோல்.... இந்த மாதிரி எல்லாம் நடிக்க வராதா?

கார்த்தி: அப்பா சொல்லியிருக்கார்.....

நான்: என்னென்னு? அழுக்கு ரோல தான் நடிக்கனும்னா...

கார்த்தி: அது இல்லங்க...

செல்வா: முதல அவருக்கு நல்ல கோட் சூட் போட்ட கதாபாத்திரம் தான் கொடுத்தோம்... அவரு தான் செண்டிமெண்ட் காரணத்துக்காக...அதெல்லாம் கழட்டி போட்டு கருப்பு மண்ண எடுத்து தேச்சிகிட்டாரு.

நான்: ஓ...அப்படி போகுதா கதை....செல்வா சார் உங்ககிட்ட இன்னொரு கேள்வி.. இத படத்துல பார்த்திபன் சார காமெடி பண்ண வைக்கனும்னு எப்படி தோணிச்சு?

செல்வா: யோவ்...அவர் பண்ணது ராஜா ரோல். காமெடி ரோல் கிடையாது.

நான்: ஹாஹாஹா...எது அதுவா? ஆடிகிட்டே ஒரு சீன்ல வருவாரே...அது காமெடி கிடையாதா உங்க ஊர்ல??? ஹாஹாஹா...ஐயோ ஐயோ... தியெட்டர்ல அந்த சீனுக்கு என்ன மாதிரி ஒரு சிரிப்பு வெடி வெடிச்சுது தெரியுமா? ஹாஹா...போங்க சார்...நீங்க தான் செம்ம காமெடியா பேசுறீங்க (எனக்கு சிரிப்பு தாங்க முடியல)

(ரீமாவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் தமிழில் பேசியதால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள கார்த்தியிடம் சென்றார்.)

செல்வா: அந்த காலத்துல ராஜா இப்படி தான் இருந்தாரு!!

நான்: அப்போ எல்லாம் ராஜாவும் பெரிய டான்சர்னு சொல்லுங்க...(எனக்கு பார்த்திபன் ஆடிய சீன் கண்ணு முன்னால வர...மீண்டும் சிரித்தேன்.)

செல்வா: தமிழ் சினிமாவ அடுத்த லெவுலுக்கு எடுத்துகிட்டு போக இந்த மாதிரி படம் தேவை.

நான்: ஆமா சார். சரியா சொன்னீங்க. சன் டிவில இங்கிலீஷ் படத்த தான் தமிழ்ல டப் பண்ணி போட்டுகிட்டு இருந்தான். இந்த மாதிரி படம் வந்துச்சுனா, அவன் தமிழ் படத்தையே தமிழ்ல டப் பண்ணி போடனும்! இத எவ்வளவு பெரிய முன்னேற்றம்!! அடுத்த லெவுல் தாங்கோ!!

ரீமா: where is andrea?

(செல்வா பதில் சொல்லவில்லை)

நான்: செல்வா சார் எங்க அவங்க?

செல்வா: வீணா எங்கிட்ட கேள்விகேட்டு என்னைய மாட்டிவிடாதீங்க! நான் ஏதாச்சு சொல்ல போக...செல்வாவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ...அப்படி ஏதாச்சு கிசுகிசு எழுதுவீங்க... எதுக்கு வீண்பேச்சு...

நான்: ஆஹா... சூப்பரா ஐடியாவ அள்ளிவீசுறீங்க! அடுத்த கிசுகிசு அது தான்.

கார்த்தி: இண்டர்வியூ முடிஞ்சுதா?

நான்: இதே மாதிரி படத்துல நடிச்சீங்கன்னா, உங்க கதை தான் சார் முடிஞ்சு போகும்.

கார்த்தி: அடுத்த படத்துல ரொம்ப யூத்வுல்லா வறேன்.

நான்: எனக்கு நம்பிக்கை இல்ல சார்.

கார்த்தி: அட நம்புங்கப்பா!

நான்: இன்னொரு முக்கியமான கேள்வி செல்வா சார்.... அடுத்த படம் என்ன?

செல்வா: இப்போதைக்கு ஒரு passport size photo கூட எடுக்க போறது இல்ல. எத எடுத்தாலும், உங்கள மாதிரி ஆளுங்க ஏதாச்சு குறை சொல்லிகிட்டு இருப்பீங்க!

நான்: அட நீங்க இந்த மாதிரி கண்டிப்பா எடுக்கனும். அப்பரம் இல்லேன்னு ப்ளாக் எழுதுற எங்கள மாதிரி ஆளுங்க புழைப்பு என்ன ஆகுறது? ரீமா...உங்க அடுத்த படம்?

ரீமா: ஹாலிவுட்ல இரண்டு மூனு படம் பேசிகிட்டு இருக்காங்க....

நான்: இது உலக நடிப்புடா சாமி! கார்த்தி நீங்க...?

கார்த்தி: செஞ்ச பாவங்கள கழிக்க இமயமலைக்கு போக போறேன்...

நான்: ஹாஹா...ஒரே ஒரு கேள்வி. நீங்க திடீரென்னு கலரா மாறிடுறீங்க...அப்பரம் கருப்பா இருக்கீங்க படத்துல...சோப்பு போட்டு குளிப்பீங்களா இல்ல தங்க பிஸ்கேட் போட்டு குளிப்பீங்களா?

கார்த்தி: ஐயோ...எனக்கும் அதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல. அண்ணன் பிரச்சனை அது. அது தங்கம்கூட இல்லங்க...நாய் பிஸ்கேட் அடிக்கி வச்சு இருந்தோம்...அத போய் தங்கம் பிஸ்கேட்னு சொல்லிட்டாங்க இந்த இன்கம்டெக்ஸ் ஆபிசர்.....

நான்: நிசமாவா? இந்த உலகம் இன்னுமா நம்பிகிட்டு இருக்கு!!

Jan 23, 2010

ஜஸ்ட் சும்மா (24/1/10)

இப்போது எழுதி கொண்டிருக்கும் 'விளையாடுவோமா உள்ள' தொடர் கதைக்கு ஒரு சின்ன பிரேக் கொடுக்கலாம்னு இருக்கேன். மண்டையில ஒரு மண்ணும்( மண்டைல அது மட்டும் தானே இருக்கு. அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது) தோண மாட்டேங்குது. அதனால், அந்த தொடர் இப்போதுக்கு தொடர வாய்ப்பில்ல. ஆனா, அதுக்கு வலைப்பூ எழுதுறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினைக்க வேண்டாம். மத்த மொக்கைகள் எப்போதும் போலே தொடரும்.
--------------------------------------------------------------------------------------

ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். அந்த படம் பார்த்ததாக நானும் மறந்துடுறேன். வரலாறும் மறந்துடனும். இந்த படத்த பத்தி பேசி, நண்பன் ஒருவர் ரொம்ம்ம்ப கோச்சிகிட்டாரு!! (எனக்கு சுத்தமா பிடிக்கல. அவருக்கு ரெம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு)
---------------------------------------------------------------------------------

இயக்குனர் பாலாவிற்கு 'நான் கடவுள்' படத்திற்காக தேசிய விருது கிடைச்சு இருக்கு. வாழ்த்துகள்! (படம் எனக்கு பிடிக்கவில்லை...இருந்தாலும் ஒரு தமிழன் முன்னேறுவதை பார்த்து இன்னொரு தமிழன் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதே என் கொள்கை!! யாருப்பா அங்க...எனக்கு சிலை வைக்கனும்னு பேசிகிறது?) ஹிந்தி படத்திற்காக பிரியங்கா சோப்ராவுக்கு தேசிய விருது கிடைத்து இருக்கு!:)
------------------------------------------------------------------------------------

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் ட்ரெல்லரை பார்த்தேன். வாரணம் ஆயிரம் படத்துல வெட்டுப்பட்ட காட்சிகள ஒன்றா சேர்த்து போட்ட மாதிரி தோணுச்சு. எப்படி இருந்தாலும், படத்த பார்க்கனும்...atleast for gowtham menon!:) hehe.
------------------------------------------------------------------------------------

வரும் ஏப்ரல் மாதம் படிப்பு முடிய போகிறது. (படிப்பு என்னைய ஒரு வழியா முடிச்சிடும்). அத நினைச்சா, துக்கம் தொண்டைய அடைக்குது. காலேஜ் டீச்சர்கள் மேல உள்ள பாசம் இல்ல...பிரண்ட்ஸ், காலேஜ் கேண்டீன், கார்பார்க், லீவு நாட்கள் இத நினைச்சு தான் கவலை. இனி வாழ்க்கைல இது எல்லாம் திரும்பி வருமா? (எனக்கு இப்ப ஒரு சைக்கிள் வேணும்... ஆட்டோகிராப் சேரன் மாதிரி ஃவீல் பண்ணிகிட்டே போக...)

வேலைக்கு போயிட்டா அப்பரம் அம்புட்டு தான்....... அதுவும் பிடிக்காத வேலை என்றால்...சுத்தம்!!!

மனுஷனுக்கு தன்னம்பிக்கை குறையும் போது தான் கடவுள் நம்பிக்கை அதிகமாகும்னு சொல்வாங்க...எனக்கு இப்போ கடவுள் நம்பிக்கை அதிகமா போய்கிட்டு இருக்குதுங்கோ!
---------------------------------------------------------------------------------------------

Jan 14, 2010

ஜஸ்ட் சும்மா(14/1/10)

அனைவருக்கும் பொங்கல், மாட்டு பொங்கல் வாழ்த்துகள்!! இதை எழுதி கொண்டிருக்கும் வேளையில் டிவியில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் ஓடி கொண்டிருக்கு! ஐயப்பா சாமீமீமீமீ..... தலைவலி டா!! ஒரு நல்ல நாள்னு ஆவூனு இத போட்டுடுறான். 15 வருஷமா நாலே நாலு தலைப்ப வச்சுகிட்டு ஓட்டிகிட்டு இருக்காங்க! திருந்துங்கப்பா!!!!

***************************************************************************

விண்ணை தாண்டி வருவாயா பட பாடல்களை கேட்டேன். 'ஹோசோனா' பாட்டு மட்டும் கேட்குற மாதிரி இருக்கு. மத்த பாடல்கள் ஒன்னும் அவ்வளவா மனதில் பதியவில்லை. மறுபடி மறுபடி கேட்க வேண்டும்!! படம் பிப்ரவரி 14 ரீலீஸ்!! டைரில குறிச்சு வச்சு இருக்கோம்ல!!
**************************************************************************

2 states புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன். சேத்தன் என்னமா கிண்டல் பண்ணியிருக்கிறார் இந்தியர்களை!! செம்ம காமெடி. ஆனா, காதல் காட்சிகள், வேலை, படிப்பு- இது எல்லாம் அவரின் முந்தைய கதைகளில் படித்துவிட்டதால், கொஞ்சம் போர்!!! முழுசா படிச்சுட்டு வரேன்!
****************************************************************************

நாணயம், ஆயிரத்தில் ஒருவன் படங்களை பார்க்கனும்!! ரொம்ப ஆவலா இருக்கு.
***************************************************************************

'merchants of bollywood' (http://www.merchantsofbollywood.com.au/aus/) என்னும் ஒரு musical நிகழ்ச்சி. 2 மணி நேரம் நிகழ்ச்சி: ஆட்டம் ஆட்டம் ஆட்டம்! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல இருந்துச்சு! மறக்க முடியாத அனுபவம்! சீனர்கள், வெள்ளைக்காரர்கள் நிறைய பேர் எழுந்து நின்று ஆட தொடங்கியது தான் highlight!!
***********************************************************************

Jan 7, 2010

daddy mummy வீட்டில் இல்ல (series 3)- பகுதி 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

carlo cafeயில் சுதா, கலா, விஜி. சசி மட்டும் வரவில்லை. ஆளுக்கு ஒரு காபி ஆர்டர் செய்தனர்.

" சசிக்கு என்ன ஆச்சு? is she alright?" சுதா கேட்க, அதற்கு கலா,

"ஏதாச்சு ஒரு கோயில மாவிளக்கு போட்டுகிட்டு இருக்கும்."

விஜி, "நான் மெசேஜ் பண்ணி பாத்தேன்.. ஆனா அவ ஒன்னும் ரிப்ளை பண்ணல. அவ வீட்டுக்கும் ஃபோன் பண்ணி பாத்தேன் எடுக்கல. வீட்டுக்கு போய் பாக்கலாம்ன்னா....அவ வீட்டு நிலவரம் எப்படி இருக்குனு தெரியல.... ஐயோ... இந்த பரிட்சைய எவன் கண்டுபிடிச்சானோ? அவன கண்டிப்பா கடிச்சு கொதறி வைக்க போறேன்...."

கலா, "விடு விடு, கோபத்துல இருப்பா சசி. கொஞ்ச நாள்ல சரியா போயிடும். திருப்பி நம்மகிட்ட தான் வந்தாகனும். உன் வீட்டுல என்ன ஆச்சு சுதா?"

சுதா, "நீ சொன்ன மாதிரியே சோகமா இருந்தேன். நம்புவாங்கன்னு பாத்தா... கொஞ்சம் ஓவரா ஆக்டிங் விட்டுடேன்னு நினைக்குறேன். படிக்கும்போது புத்தி இல்லையா..இந்த சோகமா இருக்குற மாதிரி நடிப்புலாம் வேணாம். நல்ல புள்ளையா இருந்தா ஆரம்பத்துலேந்து நல்லா படிச்சு இருக்கனும். 24 மணி நேரமும் இண்டர்நெட், ஃபோன் பேசுறது...இப்படி இருந்தா எங்க உருபட முடியும். இப்படி என்னனெமோ சொல்லிட்டாங்க. அம்மா கொஞ்சம் சப்போர்ட் பண்ணுவாங்கன்னு பாத்தா... அவங்களும் இந்த தடவ கட்சி மாறிட்டாங்க!" சோகமாக கூறினாள்.

விஜி, "அது ஏன் மேன், எல்லா அப்பா அம்மாவும் இதே மாதிரியே திட்டுறாங்க. no creativity at all. இதே தான் என் வீட்டுல சொன்னாங்க. ச்சே..... உனக்கு படிக்குறது மட்டும் தான் வேலை. வேற என்ன வேலைன்னு கேக்குறாங்க. ஏய்... படிக்குறது எவ்வளவு கஷ்டம்னு அவங்களுக்கு ஏன் மேன் புரிய மாட்டேங்குது. it takes so much of time and effort to understand a mathematical theory. we have millions of them to memorise. and that too with understanding, we have to remember that. some don't even make sense to me. so i have to put 200% effort to understand it just for the sake of exams. என் மூளை எவ்வளவு தான் தாங்குறது..." அலுத்து கொண்டாள்.

கலா, "ஹாஹா.... when our mums were pregnant, all our fathers went to the same course on how to scold and torture their kids. that's the reason why all behave the same way towards their kids." கைகொட்டி சிரிக்க ஆரம்பித்தாள். தொடர்ந்தாள்,

"சரி விடுங்க. நம்ம சட்டுபுட்டுன்னு படிப்ப முடிச்சுட்டு, சேர்ந்து ஒரு நல்ல business venture ஆரம்பிப்போம்! பெரிய ஆள வந்தபிறகு, அப்பரம் நம்ம யாருன்னு இந்த உலகம் புரிஞ்சுக்கும்." முகத்தில் ஆனந்தம் பொங்க கூறினாள்.

"வாட்????!!! business?? you kidding? stable jobக்கு தான் என் வீட்டுல விடுவாங்க." சுதா பொங்கினாள்.

"இங்க பாரு சுதா, நீ சொந்த கால்ல நின்னு பத்து பேருக்கு வேலை கொடுக்கனும். அது தான் நமக்கு பெருமை. come on babe, we are born leaders!!"சுதாவின் தோள்பட்டையை தட்டினாள். இவர்கள் பேசுவதை கவனித்துகொண்டே, கண்ணாடி கதவை நோக்கியது விஜியின் பார்வை.

விஜி உடனே மணிரத்னம் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் மெல்லிய குரலில் பேசினாள். "ஏ மெதுவா பாருங்க. டக்கென்னு பாக்காதீங்க. பலே பலே ரவி வருது. he is at the carpark. " விஜி சொன்னதை மற்ற இருவரும் கேட்கவில்லை. பரபரப்புடன் திருப்பி, எங்கே அவன் வருகிறான் என்று தேடினர்.

"stupid girls. i told you all not to make it obvious. idiots! he might see us." விஜி கூறினாள். ரவி வருவதை பார்த்துவிட்டனர் மற்ற இருவரும். சுதாவின் முகத்தில் மகிழ்ச்சி, வெட்கம், அளவில்லா புன்னகை என்று பல உணர்ச்சிகள் பொங்கியது. விஜி இருவரை இழுத்து கொண்டு restroomக்கு ஓடினாள்.

"ஓ மை காட்!!!!! எனக்கு ஒரு மாதிரியா இருக்கு!" சுதாவின் முகத்தில் அசடு வழிந்தது.

" கக்கூஸ் போ!" கலா நக்கல் அடித்தாள்.

"கலா....ப்ளீஸ்... நான் இப்ப என்ன பண்ண? போய் பேசவா....ஓ மை காட்!! i feel like a small kid now!" கவுத்துபோட்ட கறுப்பான்பூச்சி போல் குதித்தாள்.

விஜி கண்ணாடியை பார்த்து தலைமுடியை சரிசெய்து கொண்டாள். சுதா விஜியின் கைபையை பிடிங்கி, "விஜி, லிப் ஸ்டிக் வச்சு இருக்கீயா?" என்றவாறு அவளது பையில் தேடினாள். இருந்த லிப் ஸ்டிக்கை எடுத்தாள் சுதா. கூடவே eyelinerம் போட்டாள்.

சுதா, " கலா, நீயும் ஏதாச்சு போட்டுக்கோ. we shall look good infront of him."

கலா, "எங்களுக்கெல்லாம் அழகு மனசுல இருக்கு!" என்றதும் சுதா ஒரு வினாடி தான் செய்வதை நிறுத்தினாள். விஜி குபீர் என்று சிரித்தாள்.

விஜி, "டைம்மிங் காமெடி சூப்பர் கலா!!"

சுதா, "oh girls, shut up!!"விறுவிறுப்பாக தன்னை அலங்காரம் செய்து கொண்டாள். மூவரும் வெளியே வந்தனர். ஏற்கனவே உட்கார்ந்து இருந்த இடத்திற்கு மீண்டும் சென்றனர். சுற்றி பார்த்தாள் சுதா, அவன் எங்கேயும் தென்படவில்லை. கலா தேவையில்லாமல் திடீரென்று சிரித்தாள்.

கலா, "அங்க பாருங்க மச்சிஸ் அவன."

வாடிக்கையாளர்களுக்கு காபி கொடுத்தான்.

விஜி, "சர்வர் வேலை பாக்குறாய்யா....அன்னிக்கு பொய் சொல்லியிருக்கான்னு நினைக்குறேன்."

கலா, " languages பத்தி research பண்ணுறாராம்?? ஹிஹிஹி...." சத்தம் போட்டு சிரித்தாள். சுதாவின் முகம் வாடியது. ரவி மேல் கோபம் வந்தது. இவர்களை கண்டு கொண்ட ரவி கை காட்டினான். விஜி மட்டும் பதிலுக்கு கையாட்டினாள். இவர்களின் மேசையை நோக்கி வந்தான்.

"ஹாய் கேர்ள்ஸ், what a pleasant surprise? how are you people?" புன்னகை மாறா முகத்துடன் பேசினாள்.

கலா, " we are good. நீங்க? உங்க language research இங்க தான் நடக்குமா?" சிரிப்பை அடக்கிகொண்டாள்.

ரவிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவன் அப்பாவித்தனமாய், "இல்ல அது college library or research centreல தான் நடக்கும். anyway என்ன ஆர்டர் பண்ணுறீங்க? first time இந்த cafe வந்து இருக்கீங்களா?"

கலா, "ஓ நீங்க ரொம்ப வருஷம் சர்வீஸா இங்க?" கேள்விகளை கேட்க கேட்க சுதாவின் முகம் கோபத்தில் வெடிக்க தொடங்கியது.

ரவி, "சுதா are you alright?ஏன் ஒன்னுமே பேசாம இருக்கீங்க?"

'நீங்க ஏன் பொய் சொன்னீங்க? சர்வர்ன்னு சொல்லியிருக்கலாமே!' கேட்கலாம் என்று வாய் திறந்தாள் சுதா. ஆனால் அச்சமயம் கோட் சுட் போட்ட ஒருவர் cafe kitchenலிருந்து வந்தார்.

"ரவி, everything is fine. good job. next week we'll start the new promotional package. sign the contract with that korean company. alrite. " என்றார். இந்த பெண்களுக்கு ஒன்னுமே புரியவில்லை.

"great, dad. i'll take care." என்றான் ரவி. தொடர்ந்தான் அவன், " anyway dad, இவங்க என்னோட நியூ friends...sutha, viji, kala."

"hello girls, hi hi. how r you? nice to meet you young ladies. anyway sorry girls i have to really rush off now. ஆனா, நல்லா சாப்பிட்டு போங்க. ரவி, look after them well. catch up with you girls soon. bye. take care." என்றவர் ரவியை கட்டிபிடித்து,

"take care beta." என்றார்.

விஜி, " அவர் உங்க அப்பாவா? அவர் ஏன் cafe kitchenலேந்து வந்தாரு?" குழப்பமாய்.

"ஏன்னா, இது அவரோட cafe. நான் இங்க அடிக்கடி வந்து கவனிச்சுபேன். he's always busy. he has about 18 such outlets in the city. என்னால முடிஞ்ச அளவு அவருக்கு ஹேல்ப் பண்ணுவேன்." குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்!

விஜி, கலா, சுதா ஆகியோரின் 6 கண்கள் பார்வையாலே பேசிகொண்டன "பணக்கார வீட்டு பையன் மச்சி!"

ரவி, "எங்க...உங்க இன்னோரு ஃபிரண்ட் சசி?"

விஜி, "வயத்துவலி அவளுக்கு."

ரொம்ப நேரம் பேசினர். சிரித்தனர். நல்ல உபசரித்தான். கவனித்துகொண்டான். சுதா அவனை மட்டுமே கவனித்தான். வீடு திரும்பியது அன்று இரவு சுதா ரவிக்கு குறுந்தகவல் அனுப்பினாள்: " food was great. great concepts in your cafe. love it!" என்று அனுப்பினாள்.

அதை படித்த ரவி உடனே சுதாவிற்கு குறுந்தகவல் அனுப்பவில்லை, ஃபோன் செய்தான்.

(தொடரும்)