Mar 19, 2010

விண்ணை தாண்டி வந்தாளே- 1

தொலைக்காட்சியில் கார்ட்டூன் ஓடி கொண்டிருந்தது. மணி இரவு 11 ஆகிவிட்டது. சோபாவிலேயே நிஷாவும் நிவேதிதாவும் தூங்கிவிட்டனர். அவர்களை தூக்கி கொண்டு அவர்களது அறையில் படுக்க வைத்தேன்.

இருவரும் என் 3 வயது இரட்டை தேவதைகள்.

நிஷாவுக்கு பிங் கலர் போர்வை, நிவேதிதாவிற்கு ஊதா கலர் போர்வை- இருவருக்கும் பிடித்த நிறங்கள். அந்த கலர் போர்வை இல்லை என்றால் இருவருமே அழ ஆரம்பித்துவிடுவார்கள். ரொம்ப சுட்டி!

போர்வையை சரி செய்துவிட்டு அவர்களை ஒரு முறை பார்த்தேன். ஜன்னல் வழியே வந்த நிலா வெளிச்சத்தில் இருவரும் தூங்கும் அழகை ரசிக்க இரு கண்கள் போதவில்லை. அப்படியே அவங்க அம்மா மாதிரி, அவ்வளவு அழகு!

அறை வழியே எட்டி பார்த்தேன் தேவதைகளின் அம்மா ரொம்ப மும்முரமாக லெப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள். ஹாலில் இருக்கும் மேசையில் அவளது ஆபிஸ் fileகள் பரப்பி இருந்தன. ஒரு வாரத்தில் முக்கியமான ரிப்போர்ட் ஒன்னு செய்து முடிக்க வேண்டுமாம். இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்தாள். இரண்டு வாரமா ரொம்ப பிஸி, தேவதைகளின் அம்மா!

நான் அவள் அருகே சென்று உட்கார்ந்தேன்.

அவள் முகம் ரொம்ப வாடி போய் இருந்தது. உடனே ஒரு கப் சூடா காபி செய்து அவளிடம் கொடுத்தேன். காபியை பார்த்தவுடனே அவளது முகம் மலர்ந்தது.

அவளுக்கு காபி என்றால் உயிர்.

"thanks so much pa" என்னை பார்த்து புன்னகையித்தாள். மறு வினாடி பார்வை லெப்டாப்பிற்கு சென்றது.

அவள் புன்னகையை ஒரு வினாடிக்கு மேல் ரசிக்க முடியவில்லையே. லெப்டாப் மீது பொறாமை பொங்கியது எனக்கு.

காபி அருந்தியபடி, " ம்ம்... coffee is so addictive!"

நான், "yes, just like love."

என்னை பார்த்து முழித்தாள்.

புன்னகையித்தாள்.

கொஞ்சம் சிரித்தாள்.

"என்ன பா, இன்னும் தூங்கலையா?"

"ம்ஹும்... தூக்கம் வரல." என்றேன் நான். அவள் வேலையை அவள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள். என் வேலையை நான் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன் - அவள் அழகை ரசிப்பது என் வேலை.

ஜன்னல் வழியே வீசிய காற்று அவ்வபோது அவள் கூந்தலை கலைத்தது. மேசையில் இருந்த band ஒன்றை எடுத்து அவள் முடியை கட்டினேன். கட்டியபிறகு, மறுபடியும் என் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். புன்னகையித்தபடி அவள்,

"ஐயாவுக்கு என்னென்னமோ செய்ய தோணுது... ஆனா ஒன்னும் செய்ய முடியல... "

சிரித்து கொண்டே நான், " அப்படிலாம் ஒன்னுமில்ல. உன்கிட்ட நல்லா பேசியே 2 வாரம் ஆச்சு."

அவள், "ஹேய் சாரி டா. கொஞ்சம் பிஸியா போயிட்டேன். இந்த ரிப்போர்ட் முடிக்கனும். அப்பரம் ஒரு presentation. அதுக்கு அப்பரம் i'll be free. ok?"

நான், "then, you'll be all mine."

வெட்கப்படுவதை மறைக்க, " ஏய் நிஷாவும் நிவேதிதாவும் தூங்கிட்டாங்களா?" என்றாள். அவள் வெட்கப்படுவதை அவளது கண்கள் காட்டி கொடுத்துவிட்டன.

"ம்ம்ம்...." நான் அவளது கண்களையே பார்த்து கொண்டிருந்தேன். இரவு மணி 12 மேல் ஆகியது. அதிக நேரம் வேலை செய்து கொண்டிருந்ததால் அவளுக்கு கழுத்து சற்று வலிக்க, கழுத்தில் கை வைத்து தேய்த்தாள்.

என்னை அறியாமலேயே எனது கைகள் அவளது கையை விலக்கியது என்றால் அது பொய். தெரிந்தே தான் செய்தேன். அவள் கழுத்தில் இதழ் பதித்தேன். சற்றும் எதிர்பாராத அவள்,

"ஓய்!!" என்று அதட்டினாள்.

"hello my dear husband, i think you better go to bed right now." பிள்ளைகளை கண்டிப்பதுபோல் கண்டித்தாலும் அவளின் புன்னகை இன்னும் மறையவில்லை. அவளது விரலில் மின்னியது நான் அவளுக்கு முதன் முதலாய் கொடுத்த பரிசு- மோதிரம். ஐந்து வருடங்களுக்கு முன்பு...

***

"அஜய் சொல்றத கேளு. அவள ஒரு தடவ பாத்துட்டு வா. பிடிக்கலன்னு சொன்னா... விட்டுடுலாம். போகாம இருந்தா நல்லா இருக்காது." அம்மா எனக்கு பொண்ணு பார்க்கும் படலத்தை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.

"அப்பா, could you please tell amma that I'm not interested in any of these stuff. நான் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கேனு ப்ளீஸ்...." கெஞ்சினேன் நான். இந்த பொண்ணு பார்க்கும் சீசன் ஆரம்பித்து 6 மாதங்கள் ஆச்சு. பல பெண்களை பார்த்தாச்சு. ஒருவரும் என்னை impress பண்ணவில்லை.

அப்பா, " ஹாஹா... உங்க அம்மா முன் வச்ச கால பின் வைக்க மாட்டா! நீ வேணும்னா u-turn பண்ணிகிட்டு escape ஆயிடு!"

அம்மா அப்பாவை பார்த்து முறைத்தார். மீண்டும் அம்மா, " ram, can you please don't brainwash him! அவன்கிட்ட நல்லதா எடுத்து சொல்லுங்க..."

அப்பாவின் கிண்டல் தொடர்ந்தது, " பெத்தவங்க permissionனோட dating மாதிரி தான் இது. enjoy பண்ணாம..நீ என்னடான்னா.... என்னைய விட்டா நான் கிளம்பி போயிடுவேன் தெரியுமா!

அம்மா சிரித்துகொண்டே, "stop your lameness, ram!"

அம்மா என் பக்கம் திரும்பி, "ஒகே. this is final. இந்த பொண்ண பிடிக்கலைனா, அப்பரம் நாங்க உன்னைய disturb பண்ண மாட்டோம்."

அப்பா உடனே, " dealaa no dealaa?"

சிரித்தபடியே நான், "deal."

அவள் எனக்கு ஒரு இமெயில் அனுப்பியிருப்பாள் என்று அம்மா சொன்னார். ஆபிஸ் போய் தான் பார்க்க வேண்டும்....

(பகுதி 2)

Mar 17, 2010

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-11





இரண்டு பேரும் வேற வேற ஆளுனு நினைக்காதீங்க. இரண்டும் ஒரே ஆளு தான்! குண்டாக இருந்தபோது, இரண்டாவது படம் உடம்பு இளைத்தபிறகு எடுத்த படம்.
biggest loser asia என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று இரண்டாவது நிலையில் வந்தவர். philipphines நாட்டை சேர்ந்த, கார்லோ(அவர் பெயர்). இவர் 14 வருடமாக சமையல் துறையில் வேலை பார்க்கிறார்.

சைட் அடிக்க பல காரணங்கள் இருந்தாலும். எனக்கு பிடித்தது அவரின் விடாமுயற்சியும், இது போட்டி என்றாலும் சக போட்டியாளர்களுக்கு பெரும் உதவி செய்த மனப்பான்மை தான்!

அப்பரம் சொல்லவே வேண்டாம்....... he's extremely extremely looking hot!! :)
ஆக இவரை தான் தற்போது.... அட போங்க எனக்கு ரெம்ம்ம்ப வெட்கமா இருக்கு :)

மற்ற 'சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்' பட்டியல்.

Mar 11, 2010

வேலை என்பது ஒரு கெட்ட வார்த்தை

வேலை என்பது ஒரு கெட்ட வார்த்தை! அத கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் புரிஞ்சுகிட்டேன். 10 வாரம் work attachmentல இருக்கேன். கண்ணு முழி பிதுங்குது டா சாமி! தினமும் 12 மணி நேரமாவது வேலை இடத்தில். இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வந்தபிறகு, குளிச்சுட்டு, சாப்பிட்டு 8 மணிக்கெல்லாம் தூக்கம். அதிகாலை 1 மணிக்கு எழுந்தரிச்சு, முடிக்க வேண்டிய வேலையை முடிப்பேன். அந்த plan இந்த plan அப்படினு 1008 plan இருக்கு! அத செய்யனும், அப்பரம் மீட்டிங் preparation. அதற்குள் காலை 6 மணி ஆகிவிடும். குளித்துவிட்டு, வேலைக்கு கிளம்ப வேண்டியது.

இது தான் கடந்த 3 வாரமா நான் பண்ணிகிட்டு இருக்கும் நாய் பிழப்பு! முடியல என்பது ரொம்ப சின்ன வார்த்தை. அதையும் தாண்டி ஒரு வார்த்தை இருந்தால் சொல்லுங்கப்பா!!

வேலை என்பதை கண்டுபிடித்தவனை நான் தீவிரமா கண்டுபிடித்து கொண்டிருக்கிறேன்.

கஷ்டப்பட்டு செய்யாதீங்க, இஷ்டப்பட்டு வேலையை செய்யுங்க அப்படினு மட்டும் யாரும் சொல்லாதீங்க!! (நான் காண்டா மிருகமா ஆயிடுவேன்)

ஆனால் ஒரு சின்ன சந்தோஷம்- அடுத்த வாரம் லீவு! ஆண்டவன் ஒரு கதவை முடினால், ஒரு சின்ன ஜன்னலையாவது திறந்து வைப்பான்! வேலை கஷ்டமா இருந்தாலும், இந்த ஒரு வாரம் லீவு வரபிரசாதம்!

Mar 7, 2010

என் முத்த மெசேஜ்களை

என் முத்த மெசேஜ்களை
உன் உதட்டு இன்பாக்ஸில்
போட்டுவிட்டேன்.
என் இன்பாக்ஸ்
காலியாக தான் இருக்கு.
உன் அவுட்பாக்ஸ்
ஏன் சும்மா இருக்கு?

உன் மௌனமே
ஆயிரம் சொல்லும்போது
உன் உதட்டிலிருந்து
உதிரும் வார்த்தைகள்
தேவையில்லையடி எனக்கு!

நாம் இருவரும் பேசிகொண்டிருக்கையில்
திடீரென்று முத்தம் வைக்கிறாய்
கன்னத்தில்
எப்படிடா உன்னால் மட்டும்
எதுவுமே நடக்காததுபோல்
மறுபடியும் பேச்சை தொடங்கமுடிகிறது?,
கள்ளசிரிப்பழகா!