Apr 30, 2010

விண்ணை தாண்டி வந்தாளே- 4

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

அவள் சொன்னது ஒன்றுமே எனக்கு புரியவில்லை. புருவங்களை உயர்த்தி குழப்பமான முகத்துடன் "what???"

அவள் மறுபடியும், "i said i like you." சிரித்தாள். வெட்கப்பட்டு சிரித்தாள்.

என்னை பிடித்து இருக்கிறது என்று சொல்ல சொல்ல அடிவயிற்றில் சந்தோஷம் பொங்கியது அதே சமயம் மண்டையில் குழப்பங்கள் கபடி ஆடின.
என் சூழ்நிலையை புரிந்து கொண்ட அஞ்சலி,


" நீ என்கிட்ட ஐ லவ் யூ சொன்ன பிறகு ரொம்ப கோபம் வந்துச்சு. ஆனா வீட்டுக்கு போய் யோசிச்சு பாத்தேன். பையன் பரவாயில்லனு தோணுச்சு." சிரித்தாள்.

தொடர்ந்தாள், " என்னைய எவ்வளவு தடவ ஏமாத்தி இருப்ப. அதான் உடனே சொல்லல. but right now I'm really sorry about your situation. கவலைப்படாதே. கண்டிப்பா we shall do something about your job."



இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியலை. நான் ரொம்ப சாதாரணமா ஐ லவ் யூனு சொன்னேன். அதுக்கு டென்ஷன் ஆன பொண்ணு இப்ப சீரியஸா வேலை போச்சுனு சொல்லியிருக்கேன் அத போய் இப்படி சாதாரணமா எடுத்துகிறா. இந்த பொண்ணுங்க எப்படி எந்த நேரத்துல எத யோசிப்பாங்கனு தெரிய மாட்டேங்குது. ஒன்னு மட்டும் உண்மை- பொண்ணுங்க இருக்கிறதுனால என்னவோ உலகம் இன்னும் அழியாம அழகா இருக்கு!

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மறுபடியும் கேட்டேன்,

"so பிடிச்சு இருக்குனா? கல்யாணம் பண்ணிக்க ஓகேவா?"

அவள் என்னை ஒரு மடையன் என்று நினைத்து இருப்பாள். அவள் புன்னகையித்தபடி, "yes, you idiot!"

"உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா? மாப்பிள்ளைக்கு வேலை இல்லேனு தெரிஞ்சா கல்யாணத்துல பிரச்சனை வராதா? ஜாதகம் சரியில்ல அது இதுனு காரணம் சொன்னாங்கன்னா. என்ன பண்றது?" படபடப்புடன் நான்.

"கை ஜோசியத்தை நம்பி எதிர்காலத்தை நிர்ணயிக்காதே. கை இல்லாதவனுக்கு எதிர்காலம் உண்டு- அப்படினு எங்கயோ படிச்ச ஞாபகம். எனக்கு இந்த ஜோசியம், ஜாதகம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல. வீட்டுல கண்டிப்பா எதாச்சு சொல்லுவாங்க.ம்ம்ம்... சமாளிக்கனும் அஜய். எப்படியாச்சும் சமாளிக்கனும்!" அவள் பேசியதில் தெரிந்த நம்பிக்கை எனக்கு புத்துணர்ச்சியை தந்தது. என் முகத்தில் தெரிந்த புன்னகையை கண்டு கொண்ட அஞ்சலி,

" so, happy now?"

ஆம் என்பதுபோல் தலையாட்டினேன். நேரம் ஆகிவிட்டதால் அஞ்சலி கிளம்பிவிட்டாள்.

கொஞ்ச நாட்களாக வீட்டில் சரியாக நான் பேசவில்லை. அம்மா என்னிடம் பல முறை கேட்டாலும் நான் பதில் அளிக்காமல் இருந்தேன். இன்று அஞ்சலி ஒரு முடிவு சொன்னபிறகு தான் கொஞ்ச நிம்மதியாக இருந்தது. ஆனால் வேலை போனது, அஞ்சலியிடம் நான் சொன்னவை, அஞ்சலி என்னிடம் சொல்லிய விஷயங்கள் அனைத்தையும் வீட்டில் கொட்டினேன். அம்மாவுக்கு நான் பழைய அஜயாக மாறியதை கண்டு சந்தோஷப்பட்டார்.

இருந்தாலும், வேலை போனதில் அவருக்கு வருத்தம். அப்பாவுக்கும் தான்.

அப்பா, "என்னடா அஜய். இப்படி நடந்து போச்சு. பொண்ணு வீட்டுல இத சொல்லாம இருந்தா தப்பா போயிடும். நம்ம நேர்மையா இருக்குறது தான் நல்லது." ரொம்ப குழப்பத்துடன் காட்சியளித்தார்.

அம்மா, "ஆமா அஜய். நம்ம அவங்கிட்ட சொல்லிடலாம்!"

நான், "இல்லமா, அஞ்சலி கொஞ்ச நாள் வேட் பண்ண சொன்னா... அவ ஒரு வேலை தேடி தரானு சொல்லியிருக்கா. சோ கொஞ்சம் வேட் பண்ணி பாப்போம்...."

இருவருக்கும் வேலை போன விஷயத்தை மறைப்பதில் அவ்வளவாக ஈஷ்டமில்லை இருப்பினும் எனக்காக ஒத்துகொண்டனர். மறுநாள் சனிக்கிழமை அதே காபி ஷாப்பில் நானும் அஞ்சலியும்...

மேசையில் லேப்டாப், பக்கத்தில் நிறைய print-outs. அவளுக்கு தெரிந்த கம்பெனிகளிலிருந்து application forms கொண்டு வந்திருந்தாள். எல்லாவற்றிலும் என் detailsகளை எழுத சொன்னாள். இணையத்தில் சில கம்பெனிகளுக்கும் இமெயில் அனுப்பினாள். கிட்டதட்ட ஒரு 50 கம்பெனிகளுக்கு application போட்டிருப்போம். அஞ்சலியின் ஃபோன் ஒலித்தது.

"ஓ அப்படியா? great great. thank you so much dude." அவள் பேசி முடித்ததும் என் பக்கம் திரும்பினாள்.

"அஜய், happy news. ரஞ்ஜன் என் ஃபிரண்ட். நான் நேத்திக்கு அவன்கிட்ட உன்னைய பத்தி சொன்னேன். அவன் கம்பெனில executive manager post இருக்காம். நல்ல job scope, reasonable salary. அவன் உன்னைய வந்து பாக்க சொல்றான். next week monday 10 am. ok?"

நான் சரி என்றேன். அவள் உடனே மெசேஜ் அனுப்பினாள் ரஞ்ஜனுக்கு.

"anyway, நம்ம இன்னும் ஒரு நாலு இடத்துக்கு application போடுவோம். the more we apply, the higher the probability of getting a job soon." மும்முரமாக தனது லெப்டாப்பில் வேலையை தொடர்ந்தாள். தன்னுடைய சொந்த பிரச்சனை போல் விழுந்து விழுந்து அஞ்சலி வேலை பார்ப்பதை கண்டு எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளையே கொஞ்ச நேரம் கண்சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.

"thanks anjali." என்றேன். புன்னகையித்தாள்.

"உன் வீட்டுல தெரியுமா நீ எனக்கு...." என்று நான் சொல்லி முடிப்பதற்குள்.

அஞ்சலி, "ஓ நோ! வீட்டுல எதுவுமே தெரியாது. உனக்கு வேலை போன விஷயம் தெரிஞ்சுதுன்னா அவ்வளவு தான்! கல்யாணம் stop தான். அதுக்கு தான் இன்னும் இரண்டு வாரத்துல நம்ம எப்படியாவது ஒரு வேலைய தேடி கண்டுபிடிக்கனும். அப்பரம் சொல்லிக்கலாம்....மாப்பிள்ளக்கு transfer கிடைச்சுதுனால புது கம்பெனிக்கு போயிட்டாருனு." அவள் பேச பேச அவளது விரல்கள் வேகம் வேகமாக டைப் செய்தன.

girls are multi-taskers. அது நூற்றுக்கு நூறு உண்மை!

"அப்பரம் நீ என்னைய மீட் பண்றது எல்லாம் உன் வீட்டுல...." நான் கேள்வி மேல் கேள்வி கேட்டேன்.

"ஏய் சத்தமா சொல்லாத ப்ளீஸ். என் வீட்டுல எதுவுமே தெரியாது. நான் உன்னைய ஒரே ஒரு தடவ தான் பாத்து இருக்கேன். அதுவும் நம்ம நிச்சயதர்த்தம் முன்னாடி வெளியே போனோமே-இது தான் என் வீட்டுக்கு தெரியும். அதுக்கு அப்பரம் நம்ம மீட் பண்ணது. எதுவுமே தெரியாது. தெரிஞ்சுது!! அப்பரம் தோரணம் ஆயிரம் ஆயிடுவேன் நான்.... இன்னிக்குகூட பாரு ஃபிரண்ட்வோட குழந்தைக்கு காது குத்து அப்படின்னு சொல்லிட்டு தான் வெளியே வந்தேன்." அஞ்சலி பேசியதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்துச்சு.

" காது குத்துக்கு எதுக்கு லெப்டாப்புன்னு கேட்கலையா?" சிரிப்பை அடக்க முடியவில்லை எனக்கு.

"ஓய், என்ன நக்கலா? i brought my laptop in this big zara bag. பாத்தீயா.... நான் போட்டிருக்கும் சுடிதாருக்கும் கொண்டு வந்த bagக்கும் ஒரு matching இல்லாம இருக்கு. all because of you." செல்ல கோபத்துடன் சலித்து கொண்டாள்.

என்னை சுட்டிகாட்டி, "இந்த match வேணும்னு matching இல்லாம handbag போட்டு வரதுல ஒன்னும் தப்பு இல்ல." என்றேன்.

அவள், "நல்லாவே பேசுற, அஜய்." அவள் கவனம் மறுபடியும் லெப்டாப்பிற்கு சென்றது.

அவள் சுடிதார் என்று சொன்னபிறகு தான், அவள் போட்டிருந்த வெள்ளை சுடிதாரை கவனித்தேன். அவள் மாநிறத்திற்கு வெள்ளை..ம்ம்ம்..அசத்தலா இருந்துச்சு!

அனைத்து வேலைகள் முடிந்துவிட்ட தருவாயில், எனக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது.

"அஞ்சலி, படம் பார்க்க போலாமா? if you don't mind...." என்றேன். அவள் என்னை பார்த்து முறைப்பாள் என்று நினைத்தேன். மாறாக, அவள் "ஓ என்ன படம், அஜய்?"

அவளுக்கு ஹிந்தி நடிகர் ஷர்மன் ஜோஷியை ரொம்ப பிடிக்கும் (இந்த தகவலை அவள் ஃபேஸ் புக்கில் ஒரு முறை பார்த்து இருக்கிறேன். வாழ்க ஃபேஸ் புக்!)

அவள் வாயை பிளந்து சந்தோஷத்தில், "ஓ மை காட்! yessss we should go then. " என்றாள்.

(சினிமா தியெட்டரில்)

"actually why do you like sharman joshi?" என்று கேட்டதற்கு நான் என்னமோ அவள் கிட்னியை தானமாக கேட்பதுபோல் சீறி பாய்ந்தாள்.

"what nonsensical question is that? how can you not like sharman? just look at his well-shaped sharp nose...oh my god. நாள் முழுக்க அத தொட்டு பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு." பக்கத்தில் ஒட்டப்பட்ட அவரது (அவனது) படத்தில் கைவைத்து சொன்னாள். பாப்கார்ன் வாங்க அவள் சென்றாள். பின்னாடி நின்ற நான் சுற்றும்முற்றம் பார்த்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லை. அஞ்சலியும் என்னை பார்க்கவில்லை. அந்த கேப்பில் என் மூக்கை தொட்டு பார்த்தேன்.

சின்ன புள்ளையிலிருந்து நாண் சாப்பிட்டு இருந்தால் ஒரு வேள மூக்க ஷார்ப்பா வந்து இருக்குமோ என்னவோ என்றது மனசாட்சி! நான் ஏன் இந்த படத்துக்கு கூட்டிகிட்டு போனேன்? காரணம் உண்டு. படம் செம்ம மொக்கை என்று தெரியும். மொக்கை என்பதால் அஞ்சலிக்கு ரொம்ப போர் அடிக்கும், தூக்கம் வரது என்பாள், அப்படியே தோள்ல சாய்ந்து கொள்வாள் என்று எதிர்பார்த்தேன். ஒரு 'touching touching'!

வேலை போச்சு, உனக்கு இந்த நேரத்துல வெட்டியா ரோமேன்ஸ் கேட்குதா என்று நினைக்கலாம். ஆனால், என்னால் control பண்ண முடியல. அஞ்சலி பக்கத்துல இருக்கும்போது மனசு அநியாயத்திற்கு அலைபாயுது.

படம் ஆரம்பித்து 10 நிமிடம் தான் இருக்கும். செம்ம மொக்கை! ஆனால், அஞ்சலி இந்த மொக்கை படத்தையே ரசித்து ரசித்து பார்த்தாள். என் ஆசை எல்லாம் நாணுக்கு போடுகிற பட்டர் மாதிரி கரைஞ்சு போச்சு! அஞ்சலி தோளில் சாய்ந்து கொள்வாள் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு வந்த தூக்கத்திற்கு இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்து இருந்த பாட்டி மாடியில் விழுந்துவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது.

படம் முடிந்து வெளியே வந்தோம். அஞ்சலி, "ஓ மை காட், awesome film rite? i just love it!" என்றாள். மாடிப்படியில் இறங்கியபோது அவள் கால் தடுக்கிவிட்டது. கீழே விழாமல் இருக்க, என் கையை பிடிச்சா பாருங்க!!!! அந்த ஒரு 'grip'- சான்ஸே இல்ல! 150 வயலின்கள் இசை ஒரு நேரத்தில் கேட்டது எனக்கு. அப்படி ஒரு ஃவீலிங். கடவுள் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான். என்னை பொருத்தவரை கடவுள் மாடிபடியில் இருக்கிறார்.

"சாப்பிட போவோமா?' என்றாள்.

"உனக்கு லேட்டா ஆகலையா?" என்றேன்.

"பரவாயில்ல சொல்லிக்கலாம்." என்றாள். என்கூட நேரம் செலவழிப்பது அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதை அவள் கண்களிலிருந்து வீசிய வெட்கம் கலந்த ஆனந்தம் என் மனம் சுவாசித்தது.

(பகுதி 5)

Apr 27, 2010

ஜஸ்ட் சும்மா(27/4/10)

கதை எழுதவேண்டும் என்றால் மனசு சந்தோஷமா இருக்கனும். அப்ப தான் கதையும் கொஞ்சம் சுவாரஸ்சியமா போகும். 'விண்ணை தாண்டி வந்தாளே' கதை எழுதி ரொம்ம்ம்ம்ப காலமா போய்கிட்டு இருக்கு. ஒவ்வொரு பாகம் ஒரு மாசம் கழிச்சு வெளியிடும் வகையில் இருக்கு. அதுக்கு காரணம் மூட் இல்ல (வெளிப்படையா சொல்ல போனால்)

நான் இப்போது வேலை பார்க்கும் (அதாவது training செய்யும் இடத்தில் எனக்கு பல தலவலி) அதுவும் பிடிக்காத வேலையில் எத்தனை நாள் தான் குப்பை கொட்ட போறேனோ என்ற கவலையிலேயே பாதி நாள் ஓடி போகுது அப்பரம் கதை எழுத எங்க மூட் வரும்? ஆக, வாசகர்களுக்கு சாரி சொல்லிகிறேன் ரொம்ப தாமதமா ஒவ்வொரு பகுதியை வெளியிடுவதற்கு. முடிந்தவரை சீக்கிரம் போட பாக்கிறேன்.

********************************************************************

பையா பார்த்தேன். இருக்கிற புண்ணுல பூசணிக்காயை உடைத்ததுபோல் இருந்துச்சு. படத்தில் காரின் நடிப்பு தான் சூப்பர்! கார்த்தி இனிமேல் அவங்க அப்பாகிட்ட யோகா கத்துகிட்ட யோகா மையம் ஆரம்பிக்கலாம். அப்பரம் என்னங்க இனிமேல படத்துல வாய்ப்பு எல்லாம்...ம்ஹும்....சரி விடுங்க!

மன்னிக்க முடியாத குற்றம்: அடடா மழை பாட்டு கேட்க அற்புதம். பார்க்க, ஐய்யோ என்னால சொல்ல முடியல. ஒரு அழகான பாடலை அதைவிட அழகாய் காட்சி அமைத்து இருக்கவேண்டாமா, ராஜுசுந்தரம்!
***********************************************************************

சுறா சுறா சுறா!!! வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக போகுது. அதன் முன் ஏற்பாடாக ஒரு வாரமாக சுறா புட்டு, சுறா கறி சாப்பிட்டு வருகிறேன். ஹாஹா ஹா..சும்மா சும்மா!!
**********************************************************************

Apr 20, 2010

விண்ணைத் தாண்டி வந்தாளே- 3

பகுதி 1)

பகுதி 2

பயத்தை கட்டுப்படுத்தி கொண்டு தைரியத்தை அழைத்தேன். வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. அவள் கால்களை கவனித்தேன். செம்ம high heels போட்டு இருந்தாள்.
'இத வச்சு அடிச்சா, கண்டிப்பா தாங்காது!' என்று மனம் எச்சரித்தது. இருப்பினும், அதையும் தாண்டி உண்மையை சொல்ல வாயை திறந்தேன்.

"அஞ்சலி, உங்கிட்ட ஒரு உண்மைய சொல்லனும். actually I like you. நமக்கு engagement நடந்தபோது நம்ம மொட்ட மாடில நின்னுகிட்ட இருந்தோம்ல, அப்ப தான் i decided you are the one for me. பாத்த உடனே புடிச்சு போனதுனு சொல்ல மாட்டேன். உன்னோட straightforwardness, sense of humour, நீ நீயா இருக்குற தெரியுமா... அந்த quality. i really like it. i didn't fall in love with you instantly, but just grew in love as days went by."

அவளுக்கு அதிர்ச்சி! சிலைபோல் நின்றாள்.

நான் தொடர்ந்தேன், " i know this might be a shock for you. i'm sorry. ரொம்ப நாளா சொல்லிடனும்னு தான் இருந்தேன். but பயமா இருந்துச்சு. இன்னும் 4 மாசம் தான் இருக்கு கல்யாணத்துக்கு. அதுக்கு முன்னாடி சொல்லிடனும்னு தான் இருந்தேன். look i am really really sorry."

அவள், "so, இத்தன நாளா நீ கொடுத்த ப்ளான் எல்லாம்?"

நான் சிரித்து கொண்டேன், " flop ஆகும் plans தான். ஆனா, successful plans பத்தி யோசிக்குறதவிட மொக்கையான ப்ளான்ஸ் பத்தி யோசிக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?"

என் சிரிப்பு அவளுக்கு எரிச்சலை தந்ததுபோலும், முறைத்தாள்.

" i didn't expect this from you. i feel cheated."

"hey i am sorry. sorry." எனக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"உன்னைய ரொம்ப நல்ல ஃபிரண்டா நினைச்சு இருந்தேனே. இப்படி பொய் சொல்லி ஏமாத்திட்டீயே?" என்று அவள் சொல்லாமல் சொன்னாள் அவளது கண்களால். அந்த கண்களில் தெரிந்த ஏமாற்றம், கோபம், சோகம் என் மனசாட்சியை குத்தியது.

அவள் மௌனமாக இருந்தாள். கொஞ்சம் நேரம் கழித்து, " i am disappointed. you have betrayed. I feel cheated.bye." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். அவளது கையை பிடித்து தடுக்க முயன்றபோது, அவள்

"please don't touch me. you cheap fellow" முகத்தில் கோபம் தெரிந்தது. என்னை அருவருப்பாக பார்த்தாள்.

"ப்ளீஸ்.. அஞ்சலி! i am sorry. really really sorry. i didn't mean to hurt you. கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் சொல்லிடனும்னு நினைச்சு தான் உங்கிட்ட சொன்னேன்." என்று மன்றாடினேன். அவள் ஏதையும் கேட்பதாக இல்லை. சென்றுவிட்டாள். பாரம் குறைந்ததுபோல் இருந்தாலும் தேவையில்லாமல் அவள் மனதை புண்படுத்திவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி என்னை வாட்டியது.

அன்று இரவு ஃபோன் செய்தேன் அவளுக்கு. ஆனால் அவள் ஃபோனை எடுக்கவில்லை. இப்போது நாலு மாச தான் இருக்கு கல்யாணத்துக்கு, அஞ்சலிக்கு பிடிக்கவில்லை. அவளால் வீட்டிலும் சொல்ல முடியாது. விருப்பம் இல்லாத கல்யாணத்திற்கு அவளை நானே தள்ளிவிட்டேன். நிம்மதியாக அவளால் எப்படி இந்த கல்யாணத்தை.... என் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம நானும் அவளை காயப்படுத்திவிட்டேன்.....

i hate myself!!!! என்று பேனாவினால் 1000 முறை கிறுக்கினேன் ஒரு தாளில். தூங்க முற்பட்டேன் ஆனால் இயலவில்லை. தலையணை பக்கத்தில் கிடந்த கைபேசியை 100 முறை பார்த்தேன் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், அவள் ஃபோன் செய்ய மாட்டாளா என்று. நடு இரவில் எழுந்து அவள் பேஸ்புக்கில் எழுதினேன் - sorry!

மறுநாள் அவள் ஆபிஸுக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். அவள் ஆபிஸை அடைந்ததும், என் கைபேசி மணி அழைத்தது. எனக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. அஞ்சலி தான் என்று நினைத்து கைபேசியை பார்த்தபோது அதில் தெரிந்தது என் ஆபிஸ் மேனேஜரின் நம்பர்.

"அஜய், நீங்க இப்ப எங்க இருக்கீங்க?"

நான், "ஒரு முக்கியமான ஃபிரண்ட்ட பாக்க வந்தேன்."

"ஓ sorry to disturb you. can you come to office now? urgent matter..."

எனக்கு ஒன்னும் புரியவில்லை. மேனேஜர் இப்படி தயக்கத்துடன் பேசி நான் பார்த்தது இல்லை. ஆக அஞ்சலியை பார்க்கவில்லை. நேராக என் ஆபிஸுக்கு கிளம்பினேன்.

மேனேஜர் என்னை பார்த்து, "sorry அஜய். I don't know how to tell you but I have to say this. உங்களுக்கு வேலை போச்சு. recession timeல இப்படி தான்...." அவருக்கு கஷ்டமாய் போனது.

இடி விழுந்ததுபோல் நின்றேன்! ஏன்? எப்படி? எதனால்? ஏன் நான்? என்று கேள்விகள் மனதில் ஓடின ஆனால் அவரிடம் கேட்கவில்லை. கேட்க சக்தி இல்லை. உடலில் வலிமை இழந்ததுபோல் உணர்ந்தேன். மேனேஜர் ஆறுதல் வார்த்தை பேசினார். எதுவும் என் காதுகளில் விழவில்லை. நல்ல போஸ்ட்டுல தானே இருந்தேன். ஏன் நான்? ஏன் நான்?

கல்யாணம் வேற இன்னும் 4 மாசத்துல நடக்க போகுது... இப்போ என் நிலைமை என்ன? அஞ்சலி வீட்டுல என்ன சொல்லுவாங்க. அஞ்சலி என்ன நினைப்பா? வேலை போனது, அஞ்சலி ஃபோன் செய்யாமல் இருந்தது- எனக்கு தலையே சுற்றியது. கோபம் வந்தது எனக்கு. உடனே அஞ்சலிக்கு ஃபோன் செய்தேன். இந்த முறை அவள் பேசினாள்!

அவள், "ஹாலோ!"

நான், " அஞ்சலி. உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி. எனக்கு வேலை போச்சு. இப்போ உன் வீட்டுல சொல்லிடு- மாப்பிள்ளைக்கு வேல இல்ல. அவன் ஒரு வேஸ்ட் fellow. உனக்கு பிடிக்கலனு சொல்லிடு. are you happy? இப்போ நிம்மதியா இருக்கா உனக்கு? thanks. bye."

ஃபோன்னை கட் செய்தேன். கோபத்தில் பேசியது கொஞ்ச நேரம் கழித்து தான் முட்டாள்தனமாக தோன்றியது. 10 நிமிடங்கள் கழித்து அவளே ஃபோன் செய்தாள்.

அஞ்சலி, " are you okay? where are you now?" அவள் அமைதியாய் பேசினாள். அவள் அமைதி என் முட்டாள்தனத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தியது. நான் சாந்தமாய், "ம்ம்... at my office."

(என் ஆபிஸ் எதிரில் உள்ள காபி ஷாப்பில்)

"என்ன ஆச்சு?" அஞ்சலி ஆறுதலாய் கேட்டாள்.

"தெரியல்ல..." ஒற்றை வார்த்தைகளுக்கு மேல் என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

"எத்தனையோ plans சொல்லியிருப்பேன். i think this is the best plan that god has created for you. உன் வீட்டுல சொல்லிடு. உனக்கு இனிமே problem இருக்காது."

அவள், "என்ன problem இருக்காது?" நான் சொன்னது புரியாததுபோல் கேட்டாள்.

"அஞ்சலி, உனக்கு என்னைய பிடிக்கல. இந்த கல்யாணத்தலயும் இஷ்டம் இல்ல. எனக்கு தெரியும். இப்ப ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கு. மாப்பிள்ள பிடிக்காம போறதுக்கு ஒரு நல்ல காரணம் கிடைச்சு இருக்கு. make use of it. be happy anjali. வேல இல்லாதவன எப்படி கல்யாணம் பண்ணிப்ப நீ? உன் medicure, pedicure, massage, spa, entertainment செலவுகளுக்கு எல்லாம் என்னால ஒன்னும் கொடுக்க முடியாது. எல்லாத்தையும் உன் வீட்டுல சொல்லிடு. you are escaped from this, anjali." மனதில் பட்டதை கொட்டினேன்.

அவள் அமைதியாய், " பரவாயில்ல nail cutter வச்சு சமாளிச்சுக்கிறேன்." புதிர் போடுவது போல் பேசினாள். எனக்கு சுத்தமாய் ஒன்னும் புரியவில்லை.

தொடர்ந்தாள் அஞ்சலி, " i think i like you."

(பகுதி 4)

Apr 18, 2010

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்- 12


life mein kabhi kabhi, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், pyaar impossible போன்ற படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த dino morea தான்...இப்போது... நான்...
. முதன் முதலில் அவரை பார்த்தபோது, இவர் பார்ப்பதற்கு இத்தாலியர் மாதிரி இருக்காரேனு நினைச்சேன். என் கணக்கு தப்பா போகவில்லை. இவரை பத்தி இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவலே இது- இவரின் அப்பா இத்தாலியர், அம்மா இந்தியர். மாடலிங் செய்பவர்.

அன்று pyaar impossible படம் பார்த்தபோது தான் இவரை சைட் அடிக்க ஆரம்பித்தேன்.
சிறப்பு அம்சம்: இவரின் பொலிவான முகம்




Apr 4, 2010

விண்ணைத் தாண்டி வந்தாளே- 2

(பகுதி 1)
ஆபிஸ் அடைந்ததும், முதல் வேலையாக இமெயிலை பார்த்தேன். என் ஆபிஸ் இமெயிலை. பிறகு, நிறைய வேலைகள் இருந்ததால், என் personal இமெயிலையை திறக்கவில்லை. வீட்டிற்கு செல்லும் போது தான் ஞாபகம் வந்தது. வீட்டிற்கு வந்ததும் பார்த்து கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால், வந்தவுடன் மும்முரமாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். 'அவளை' சுத்தமா மறந்துட்டேன்.

அம்மா, "டேய் அந்த பொண்ணு இமெயில் பண்ணுச்சா?"

பதில் சொல்லாமல் உடனே லெப்டாப்பில் எனது இமெயிலை பார்த்தேன். புதிதாய் ஒரு முகவரி "அஞ்சலி தேவன்".

மனதில் ஒரு முறை எழுதி பார்த்தேன்: அஞ்சலி அஜய்.

"ம்ம்ம்.... பரவாயில்லை." என்று மனம் சொல்லியது. அவளது இமெயிலை படிக்க தொடங்கினேன்,
"ஹாய் மிஸ்டர் அஜய். நான்.. அஞ்சலி. வீட்டுல எல்லாரும் சொல்லியிருப்பாங்கன்னு நினைக்குறேன்.
எனக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவு உடன்பாடு இல்ல. ஐ மின் தப்பா நினைக்காதீங்க. உங்கள சொல்லல.
basically i'm not prepared. I think we should not get stuck in this formula or concept or institution whatever they say just because everyone forces us. நீங்க என்னோட... i don't even keep count on the number of proposals i have gotten so far. ரொம்ப போர் அடிச்சு போச்சு. anyway,நம்ம மீட் பண்ணனுமாம். வீட்டுல தொல்லை தாங்கல. ஒரு தடவ மீட் பண்ணிடுவோம். அப்பரம் பிடிக்கலன்னு சொல்லிடுவோம். ஓகே? hope you understand. thanks mr ajay. i'll be back from my vacation soon . அப்பரம் வந்து ஃபோன் பண்றேன். "

யப்பா! இவ்வளவு straightforward பொண்ணு? கொஞ்சம் ஆச்சிரியமா இருந்துச்சு. அவள் சொன்ன வார்த்தைகளில் அவளுக்குள் இருக்கும் தைரியம் ரொம்ப நல்லாவே தெரிஞ்சுது.

அம்மா என் அறைக்குள் வந்தார். "என்ன அஜய், அவ இமெயில் பார்த்தீயா?"

"ம்ம்..காலையிலே பாத்துட்டேன். vacationல இருக்காளாம். வந்தவுடனே ஃபோன் பண்றேன்னு சொன்னா."

அம்மாவுக்கு இன்னும் தகவல் வேண்டும் என்பதுபோல் முழித்தாள், "அதுக்கு அப்பரம் என்ன சொன்னா? கல்யாணத்த பத்தி..."

"மா!!! யாராச்சும் முதல் தடவ பேசிக்கும் போது இத பத்தி பேசுவாங்களா? ரொம்ப casualஆ தான் இமெயில் இருந்துச்சு. மீட் பண்ணிட்டு முடிவு எடுக்களாம்னு சொன்னா." ரீமோர்ட்டை எடுத்து சத்த அளவை அதிகப்படுத்தினேன்.

"என்னமோ போடா....இந்த காலத்த புள்ளைங்கள..." சலித்து கொண்டார். கையில் கொண்டு வந்த வாழைக்காய் பஜ்ஜியை வாயில் திணித்துவிட்டு சென்றார்.

ஏன் இப்படி செய்தேன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ஆவல். அவள் இமெயில் ஐடியை கொண்டு ஃபேஸ்புக்கில் டைப் அடித்தேன். அவள் எப்படி இருப்பாள் என்ற தெரிந்து கொள்ள ஒரு ஆசை. வயிற்றுக்குள் ஏதோ ஒரு சின்ன அதிர்வு. எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனா அந்த உணர்வு கொஞ்சம் பிடிச்சு இருந்தது.

அஞ்சலி தேவன் படத்தை கிளிக் செய்தேன். பார்த்தவுடனே பிடித்து போவது போல் தாஜ்மகால் அழகு இல்லை. ரொம்ப சாதாரணமான ஒரு பொண்ணு மாதிரி தான் இருந்தாள். அவளுக்கு ஒரு மெசேஜ் எழுதினேன் -

ஹாலோ, நான் தான் அஜய்.

எழுதிவிட்டு ஃபேஸ்புக்கில் மற்றவற்றை செய்து கொண்டிருந்தேன். உடனே அஞ்சலியிடமிருந்து ஒரு பதில் வந்தது-

ஓ மை காட்! you are stalking me! haha.

என்னை 'சேர்த்து' கொண்டேள். அட, ஃபேஸ்புக்கில் add பண்ணினாள்னு சொல்ல வந்தேன். பிறகு கொஞ்சம் நேரம் பேசினோம் chatல். ஃபிரண்ட் போல் ரொம்ப இயல்பாய் பழகினாள். எனக்கு அந்த குணம் பிடித்து இருந்தது. ஒரு வாரம் கழித்து ஒரு காபி ஷாப்பில் சந்தித்து கொண்டோம்.

"ஃபோட்டோவுல இன்னும் smartஆ தெரிஞ்சீங்க...." வெளிப்படையாய் பேசினாள் அஞ்சலி. அப்படியே அம்மா மாதிரி ரொம்ப ஓபன் டைப்.

சிரித்து கொண்டே நான், "நீங்க நேர்ல இன்னும் நல்லா இருக்கீங்க" என்றேன் கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல். சற்று முறைத்தாள்.

"ஐயோ நீங்க சொன்னத்துக்கு நான் திருப்பி சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க."

புன்னகையித்தாள்.

"சரி, உங்களுக்கு ஏன் கல்யாணம் வேண்டாம்னு நினைக்குறீங்க?" என்றேன் நான்.

அஞ்சலி, " தெரியல. ஒரு definite answer இல்ல. ஆனா இப்போதைக்கு வேண்டாம்னு நினைக்குறேன். அது கொஞ்சம் அதிகமான responsibilites கொண்ட விஷயம். பெரிய commitment. இப்ப இருக்குற மாதிரி கல்யாணத்துக்கு அப்பரம் ஜாலியா வெளியே சுத்த முடியாது. ஃபிரண்ட்ஸ்கூட டூர் போக முடியாது. male friendsகூட வெளியே போக முடியாது. ஏதோ நம்மள ஒரு boundaryக்குள்ள பூட்டி வச்ச மாதிரி ஒரு ஃபீல். அப்பரம்.... ஓ yes! காலையில சீக்கிரம் ஏந்திரிச்சு வீட்டு வேலை பாக்கனும். எனக்கு விவரம் தெரிந்த நாள்லேந்து நான் சொந்தமா எந்திரிச்ச பழக்கம் கிடையாது. அம்மா இல்லேன்னா வீட்டுல வேலை பாக்குற ஆயா தான் எழுப்பிவிடுவாங்க..." என்று மனதில் பட்டதை போட்டு உடைத்தாள்.

அவள் சொன்ன விதம் ரொம்ப கியூட். கண்களில் தெரிந்தது ஒரு innocence.

அவள் சொல்ல சொல்ல நான் சிரித்தேன்.

"சமையகட்டு பக்கம் போனா செய்யும் ஒரு காரியம் சமைச்சு வச்சு இருக்குறத எடுத்து சாப்பிடுறது தான். காபிகூட போட தெரியாது. மாசத்துக்கு ஒரு 4 தடவ படம் பார்ப்பேன். every friday night should be spent outside. dinners, lunch outings, medicure, pedicure, threading, spa இப்படினு ஏகப்பட்ட செலவு ஆகும் என்னைய வச்சு maintain பண்ண. வரவன் இதுக்கு எல்லாம் செலவு பண்ண ரெடியா இருக்கனும்." அவள் மேலும் பேசினாள்.

புன்னகையித்தபடி அஞ்சலி, "ஆமா உங்களுக்கு... ஐ மின் உனக்கு ஏன் கல்யாணம் பிடிக்கல."

அவள் உங்களுக்கு என்பதிலிருந்து உனக்கு என்று சொன்னது எனக்கு சற்று ஆச்சிரியமாய் இருந்தது. அவள் உடனே, "சாரி சாரி...உனக்குனு சொன்னா தப்பில்லையே?"

தப்பில்லை என்பதுபோல் தலையாட்டினேன்.

நான், "எனக்கும் அதே ஃபீலிங் தான். ரொம்ப restrictedஆ ஃபீல் இருக்கும். unless the girl is extremely an open-minded girl, then i will consider. if not, no way to marriage man! நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம். வர பொண்ணுக்கும் கிரிக்கெட் பிடிக்கனும்னு எதிர்ப்பார்க்க முடியாது. வீக்கெண்ஸ்ல பார்ட்டிஸ் போவேன். வர பொண்ணு கோயில் குளம்னு சுத்த சொன்னா, செம்ம டென்ஷன் ஆயிடுவேன். ஒரு கெமிஸ்ட்ரி வோர்க் அவுட் ஆகனும். அது இல்லேன்னு ரொம்ப கஷ்டமா போயிடும்."

அவள் தொடர்ந்தாள் "ம்ம்ம்.... ஒகே கூல். வீட்டுல போய் பிடிக்கலைனு சொல்லிடலாம். very simple. காரணம் கேட்டாங்கன்னா?"

நான், "பொண்ணுக்கு காபி போட தெரியாதுனு சொல்லிடுவேன்."

அவள், "அட பாவி!"

நான், "உன்னைய கேட்டா?"

அவள், "பையனுக்கு தண்ணி அடிக்குற பழக்கம் இருக்குனு சொல்லிடுவேன்."

நான், "ஐயோ தண்ணி அடிப்பேன் எப்போ சொன்னேன்?"

அவள், "பார்ட்டிஸ் போய் அப்பரம் என்ன பண்ணுவாங்க? பாத்திரம் கழுவுவாங்களா?"

குபீர்னு சிரித்துவிட்டேன்.

"that's not called தண்ணி அடிக்குறது. social drinkers."

"ஏய் வீட்டுல இது பெரிய விஷயமா நினைப்பாங்க. என்னைய பொருத்தவரைக்கும் அதுல ஒன்னும் தப்பில்ல. நானே நிறைய தடவ drink பண்ணியிருக்கேன்." என்று சிரித்து கொண்டே சொன்னாள்.

"ஆஹா! இது காபி மேட்டரவிட மோசமா இருக்கே." என்றேன்.

"ஏன்? நீங்க அடிக்கலாம். நாங்க அடிக்க கூடாதா? it was just vodka mixed with coke. not at all strong and i didn't go wild drinking it!" புருவங்களை உயர்த்தி சொன்னாள்.

அவளை அவள் வீட்டில் விட சென்றேன். கேட் அருகே அவள் அப்பா நின்று கொண்டிருந்தார்.

அவர், "வாங்க மாப்பிள்ள. வீட்டுக்குள்ள வந்துட்டு போங்க." என்றார். நானும் அஞ்சலியும் முழித்தோம்.

அவர் மாப்பிள்ள என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் வந்த ஆச்சிரியம் அது. மரியாதைக்காக வீட்டிற்குள் நுழைந்தேன். உள்ளே சென்று பார்த்தால், ஒரு பட்டாளமே உட்கார்ந்து இருக்கிறது. அதில் என் அம்மா அப்பா இருந்தனர். என்ன நடக்கிறது என்று எனக்கும் அஞ்சலிக்கும் ஒன்றும் புரியவில்லை.

அம்மா, "சாரி டா அஜய். உனக்கு தெரியமா... இன்னிக்கு உன் நிச்சயதார்த்தம்!"

என்னால் அம்மா சொல்வதை நம்ப முடியவில்லை. அஞ்சலி அவள் அப்பாவிடம், "என்ன பா இது?"

அவள் அப்பா, " actually, நாங்க ஏற்கனவே பேசி வச்சு இருந்தோம். ரெண்டு குடும்பத்துக்கே இந்த சம்மந்தம் பிடிச்சு இருந்தது. அதுனால தான் இந்த ஏற்பாடு. am sure u like ajay. we all like him!" என்று சந்தோஷத்தில் சிரித்தார். அவர் கடைசி பல் கூட தெரிந்தது.

அஞ்சலிக்கு கோபம். எனக்கு அதற்கு மேல். இப்படி குடும்பமே சேர்ந்து விளையாடிவிட்டனர் எங்களது வாழ்க்கையில். கீழே ஒரே பாட்டும் கூத்தும் நடக்க, நானும் அஞ்சலியும் மொட்டை மாடியில். தேர்வில் ஒரு மார்க்கில் failஆன மாணவன் போல் நின்றோம்.

"i hate it!! i hate this!! i hate my family!"கோபம் பொங்கியது அஞ்சலிக்கு.

அவள் கோபம் அழகாய் இருந்தது. அவளை ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை பார்த்தேன்.

"உனக்கு பிடிச்ச மாதிரி தானே இருக்கா? straightforward, great sense of humour." என்று மனசாட்சி என்னிடம் சொல்ல, நான் அதற்கு தலையாட்டினேன். அதுவரை இருந்த கோபம் கொஞ்சம் தணிந்தது.

"பரவாயில்ல அஞ்சலி... என்ன பண்றது?" என்றேன் நான்.

"ஹாலோ, என்ன நீயும் கட்சி மாறீட்டீயா? என்னமோ no way to marriage. one way to marriage. ஆவூனு சொன்னே அப்போ...." அவள் கத்தினாள்.

"ஏய் கூல் கூல்... we shall work out something." என்றேன் நான்.

" என்ன வொர்க் அவுட்? ஜிம்லயா இருக்கோம்!" கோபத்திலும் காமெடியாய் பேசினாள். எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

"சரி plan பண்ணுவோம்!" என்றேன். அவள் தனது தோழிக்கு ஃபோன் செய்து புலம்ப ஆரம்பித்தாள். நான் அவளை ரசிக்க ஆரம்பித்தேன். நாட்கள் செல்ல செல்ல அவள் மேல் உள்ள அன்பு அதிகமானது. ஆனால், இது அவளுக்கு தெரியாது. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு plan பத்தி பேசனும் என்று ஃபோன் செய்து அவளிடம் பேசுவேன். plan தவிர்த்து மற்றவற்றை பற்றி தான் அதிக நேரம் பேசுவோம்.

ஆனால் கடைசிவரைக்கும் அவளுக்கு இதில் விருப்பமில்லை. நானும் விருப்பம் இல்லாததுபோல் நடித்தேன். ஒரு கட்டத்திற்கு பிறகு, உண்மையை சொல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அஞ்சலிக்கு ஃபோன் செய்தேன்

"ஹாலோ அஞ்சலி, இனிக்கு evening freeya? மீட் பண்ணலாமா?"

"ஏன்? ஏதாச்சு பெரிய மாஸ்ட்டர் ப்ளான் வச்சு இருக்கீயா?"

"கிட்டதட்ட அப்படி தான்!"

"oh my god! thank uuuuuu ajay. எப்படியாச்சும் என்னைய காப்பாத்திடு! உனக்கு ஒவ்வொரு தெருவுக்கும் சிலை வைக்க ஏற்பாடு பண்ணிடுறேன்." அஞ்சலி சிரித்தாள். எனக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது. எனக்கு அவளை பிடித்து இருந்தது என்று சொன்னாள் அவள் அதை அப்படி எடுத்து கொள்வாள் என்ற பயம்.


சந்தித்தோம். ஹாலோ கூட சொல்லாமல் அஞ்சலி பேசிய முதல் வார்த்தை, "என்ன ப்ளான்? என்ன ப்ளான்?" அவள் கண்களில் ஒரு படபடப்பு தெரிந்தது.

(பகுதி 3)