Showing posts with label லீவு. Show all posts
Showing posts with label லீவு. Show all posts

Apr 24, 2009

எக்ஸாம் முடிஞ்சபிறகு வரும் ஆசைகள்!

3rd year 2nd semester கடைசி பரிட்சையை(வெற்றிகரமா) முடித்துவிட்டேன். இனி 2 மாதம் லீவு. இரண்டு வாரம் உடல் சுகமில்லை. அப்படி இருந்தும் தேர்வை எப்படியோ போட்டு அடிச்சு முடிச்சுட்டேன். நல்லா இருக்கும்போது எழுதினாவே, ம்ஹும்.... இப்ப இந்த நிலைமையில் தேர்வு முடிவுகள் எப்படியோ! உங்கள் ஆசிர்வாதமும் பிராத்தனைகளும் ரொம்ம்ப தேவைங்கோ! இப்போ வரும் ஆசைகள்...
எனக்காக தனஷ் பேசுகிறார்.



தனஷ்: இது என் கனவு திவ்யா.சின்ன வயசுல ஒன்னாவது படிக்கும்போது mathsல 100% வாங்கினேனே, அது மாதிரி. இதலாம் கிடைக்காதா கிடைக்காதான்னு எவ்வளவு நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா. இதோ இதோ இந்த செவத்தலாம் கேட்டு பாரேன். எத்தன நாள் இது முன்னாடி நின்னு அழுது இருக்கேன்னு சொல்லும்.

எனக்கு இதாண்டா பிரச்சனை. எனக்குன்னு வரும்போது எதுவுமே நடக்குறது இல்ல. அப்படி நான் என்ன பெரிசா கேட்டேன். நீங்கலாம் வாங்குற மாதிரி சாதாரண ஒரு distinction. அது ஏன் எனக்கும் மட்டும் கிடைக்க மாட்டேங்குது. ஏன் எனக்கும் மட்டும் தப்பாவே நடக்குது. நான் என்ன பாவம் பண்ணேன் திவ்யா??

Jan 4, 2009

நாளைக்கு ஸ்கூல்!

நாளைக்கு 3வது வருஷத்தின் 2வது semester. அவ்வ்வ்வ்வ்...இரண்டு மாசமா லீவு. நாளைக்கு காலேஜ் ஆரம்பிக்க போகுதுன்னு நினைச்சா அழுவாச்சியா வருதுப்பா!

லீவுல என்ன பண்ணலாம்னு நினைச்சு அத செய்யுறதுக்கு முன்னாடியே லீவு முடிஞ்சுட்டே...

அவ்வ்வ்வ்வ்.....

Jun 21, 2008

அம்மா, நான் schoolக்கு போகல...

இரண்டு மாசம் லீவு முடிஞ்சு திங்கள் கிழமை காலேஜ் ஆரம்பிக்க போகுது. ஐயோ மறுபடியும் காலேஜ் ஆரம்பிக்க போகுதேனு நினைச்சாவே, எனக்கு அழுகாச்சியா வருது. (இந்த வயசுல போய்.. ச்சி..உனக்கு அசிங்கமா இல்ல அப்படினு நீங்க சொல்றது என் காதுல கேட்குதுங்க..)

இருந்தாலும் என்ன பண்ண... அம்புட்டு assignments, projects, weekly tests, surprise quizzes, exams மறுபடியும் வர போகுதுன்னு நினைச்சா, எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரியாவே இருக்கு!! இந்த ஒன்னாவது படிக்கற பசங்க, 'நான் ஸ்கூலுக்கு போகலனு" சொல்றது போல என் மனமும் அடம்பிடிக்கிறது. பரவாயில்ல... சமாளித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கு.

இந்த லீவுல நான் 4 புதிய விஷயங்களை கத்துக்கனும்னு ஆசைப்பட்டேன். அதுல இரண்டு விஷயம் ஓரளவுக்கு நல்லாவே வந்துட்டு.

1) musical keyboard கத்துக்கனும்னு நினைச்சேன். இப்ப 6 lessons போயிட்டேன். எனக்கு திடீரென்னு ஆசை வந்தது ar rehman பேட்டிய பாத்த பிறகுதான். தமிழ் புத்தாண்டு அன்று 'காபி வித் அனு' நிகழ்ச்சியில் பேசிய போது பாத்தேன். ரொம்ப inspirational போச்சு!! உடனே முடிவு பண்ணேன். பக்கத்துல உள்ள musical schoolல இப்ப keyboard கத்துகிறேன். 6 lesson போனபிறகு, ஏதோ ஏ ஆர் ரகுமானுக்கே நம்ம தான் குரு மாதிரி ஒரு ஃபீல்.(ஹிஹி.. இந்த build-upக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...)

உருப்படியா கத்துக்கிட்ட முதல் விஷயம் இது. தினமும் வீட்டிலும் பயிற்சி செய்வேன்.


2) இரண்டாவதா hip-hop dance கத்துகிட்டேன். ( நிறைய பேரு விழுந்து விழுந்து சிரிக்குற சத்தம் எனக்கு கேட்குது...hoi!!)

ரொம்ப நாளா எங்க பாட்டி சொல்வாங்க, மாவு ஆட்ட கத்துக்கோன்னு. அவங்க சொல்றத நான் இப்ப செய்றேன். நான் hip-hop டான்ஸ் ஆடுறது மாவு ஆட்டுற மாதிரியே இருக்கும். நமக்கு கையும் காலும் ஒரே நேரத்தில் coordination வராது. நான் போய் டான்ஸ் ஆடிட்டாலும்....ம்ஹும்... ஏதோ கையும் காலையும் குளிர்ஜொரம் வந்த மாதிரி அசைச்சுகிட்டு வந்துடுவேன்.

சும்மா டைம் பாஸுக்காக போனேன். அவ்வளவுதான்!

3) சமைக்க கத்துக்கிட்டேன்.(இல்ல இல்ல.. அப்படி ஆசைப்பட்டேன்.)

அம்மா அடிக்கடி சொல்வாங்க "சமையல் கத்துக்கோ, சமையல் கத்துக்கோ! போற இடத்துல இதுகூட சொல்லி தரலியானு என்னை தான் சொல்வாங்க...".

என்னது போற இடமா?? அப்படின்னா? என்று நான் கேட்பேன்( பதில் தெரிந்திருந்தும்..ஹிஹி..) அம்மா பதில் சொல்லமாட்டாங்க... அதுக்கு எல்லாம் இன்னும் நிறைய வருஷம்ம்ம்ம்ம் இருக்கு. இருந்தாலும் டைம் பாஸுக்காக சமையலறைக்குள்ளே புகுந்து என் வேட்டையை ஆரம்பித்தேன்..

முதல் நாளே mutton fry, ரசம்! சாப்பிட்டோம்! அதுக்கு அப்பரம் எனக்கு 4 நாள் mouth ulcer வந்துட்டு! உணவினால் வந்த பிரச்சனையா? இல்ல..சும்மா coincidenceஆ நடந்ததானு தெரியல.. அதுக்கு அப்பரமும் நான் என் வேட்டையை நிறுத்தல. புறப்பட்டாள் காயத்ரி கோழி குழம்பு செய்ய. ஓரளவுக்கு நல்லா வந்துச்சு. இப்படி இரண்டே நாள் தான் சமைத்தேன். ஆனா, ரொம்ப bore அடித்துவிட்டது. நிறுத்திவிட்டேன்.

4) ஹிந்தி மொழி கத்துக்க நினைத்தேன். நிறைய ஹிந்தி படம் பார்த்தேன் (with english subtitles) ஹீரோக்களை ரசித்து பார்த்தேனே தவிர ஹிந்தி கற்று கொள்ள முடியவில்லை.

இப்படி ஏதோ என் லீவு 'லீவு' எடுத்து கொண்டது!! அவ்வ்வ்.... இந்த பதிவ எழுதும்போதுகூட என் மனம் "i don't wanna go college." என்கிறது.