Dec 25, 2006

இதுவா காதல்?

மேகத்திலிருந்து நீர் வந்தால் மழை என்கிறார்கள்
மலையிலிருந்து நீர் வந்தால் அருவி என்கிறார்க்ள்
ஜில்லுனு நீர் வந்தால் குளம் என்கிறார்கள்
அலையில்லாமல் நீர் வந்தால் ஆறு என்கிறார்கள்
கண்களிலிருந்த நீர் வந்தால் அதை மட்டும் ஏன்

காதல்
என்கிறார்கள்?

இனியும் காதலிப்பேன்

ஒரு முறை தொட்டுப்
பார்த்தேன்
எட்டி உதைத்து விட்டது
முதல் காதல்
இனியும் காதலிப்பேன்
நான் தேடி கொள்ளும்
காதலனை அல்ல.
என் அம்மா எனக்குப்
பார்க்கும்
அவளுடைய
மருமகனை

முத்தங்கள்

இதயத்தில்
வளர்ந்த வர்ணஜாலம்
இதழால் இட்ட
இனிய கோலம்

கல்யாண வாழ்த்துகள்

கல்யாண வாழ்த்துகள்

நிலவு நண்பனுக்கு
இன்று ஒரு நிலவுதோழி கிடைக்கபோகும்
பொன் நாள்

வசந்தத்தின் வாசலில்
நின்று இனி
வரவேற்கும் வருங்காலம்
தன்னால்...

உங்கள் கனவுகளுக்கு
ஓர் அர்த்தம் பிறக்கபோகிறது
என்று சொன்னால்..

அது மிகையில்லை
என்ற பதில் வந்துவிடும்
உங்கள் கண்ணால்...

நேரடியாக வந்து வாழ்த்த
முடியவில்லை
என்னால்...

இருப்பினும் இந்த வாழ்த்துகளை
சமர்ப்பிக்கிறேன்
உங்கள் முன்னால்..


பிரியமுடன்
தமிழ்மாங்கனி

ஜோல்லு கவிதை

மூஞ்சிக்கு க்கீரிம் போட்டுருக்கேன்
கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும்

ஏன் டார்லிங் க்கீரிம் போடாத இடம்
எத்தனையோ இருக்கே!

ச்சீ ரொம்ப மோசம்டா நீ!

Dec 24, 2006

தொடரும் காதல்

துபாய் மாப்பிள்ளை
சிங்கப்பூர் மாப்பிள்ளை
லண்டன் மாப்பிள்ளை
என்ற பட்டியலில்
எனக்கு வந்ததோ ஒரு
ஜப்பான் மாப்பிள்ளை

பார்த்தவுடனே மனசுக்குள்
அலை பாயுதல்!
அழகிய நிறம்
வசீகரிக்கும் தோற்றம்
அதனாலேயே
ஏற்பட்டது உள்ளத்தில்
ஒரு மாற்றம்.


பிகு:- இந்த கவிதை நான் எனது toyota carக்கு சமர்ப்பிக்கிறேன். haha

என் உயிர் நீதானே..

கண்டவுடன் காதலில்
உடன்பாடு இருந்ததில்லை
உன்னை பார்க்கும்வரை
கண்ட நாள் முதல்
கனவுகளில் உலா வருகிறாய்
பகலிலும் நிலா தருகிறாய்

சூராவளி சுனாமி
இரண்டும் ஒரே நேரத்தில்
என்னை தாக்கின
உன் விழிகள் வழி...

காத்திருக்கிறேன் நீ
வரும் நாளுக்காக
கனவு கண்ணாளனை
கை பிடிக்கும் நாளுக்காக
காத்திருப்பேன்
காலமெல்லாம்....

முத்தம்

நீ கழுத்தோரம் கொடுத்த
முத்தம் குளிருதே
இது என்ன
தமிழ் முத்தமா?
நீ உதட்டோடு கொடுத்த
முத்தம் சுடுதே
இது என்ன
இங்கிலீஷ் முத்தமா?

காதலே

இயக்குனர்களே
என்னை
வித்தியாசமாக
காட்டுங்கள் என்றது
காதல்!

அது ஏன்?

சார்ந்தன
காதல், கண்களின் மொழியைச்
சார்ந்தன
படித்தேன் அந்த மொழியை
அறிந்தேன் காதலின் இலக்கணத்தை


இணைத்தாய் என்னை
உன்னுடன்.
சாதாரண செய்தியாக தோன்றியது


பிரித்தாய் என்னை
உன்னிடமிருந்து.
சரித்திரமாக தோன்றுகிறது.
அது ஏன்?

சொல் நீ...

சொல்நீ தோழியே
காலையிலிருந்து மாலை வரைக்கும்
உன் நெற்றியில்
அழகாய் இருக்கும்
பொட்டை
இரவு வேலை முடிந்து
வீட்டிற்கு வந்து
முகம் கழுவும்போது
கண்ணாடியின் ஓரத்தில் ஒட்டிவைக்கிறாய்!
அந்த பொட்டும் நானும் ஒன்றுதான் பெண்ணே
மறுபடியும் உன்னிடம் சேர துடிக்கும்
அந்த பொட்டும் நானும் ஒன்றுதான் பெண்ணே
விடியலுக்காக காத்திருக்கும்
உன் காதலனும் நானே!

மழை

வந்துவிடு வந்துவிடு
இன்றே வந்துவிடு
என்னோடு விளையாட
வெப்பத்தை வேட்டையாட
குழந்தைகள் கொண்டாட
வந்துவிடு


உன்னைக் கண்டு ஆகிவிட்டன
பல நாட்கள்
நீ எங்கே என கேட்கின்றனர்
பல ஆட்கள்


உன் முகவரியை மறுபடியும் காட்டிவிடு
கேட்கும் மக்களின் வாயைப் பூட்டிவிடு
நீ வரவே மாட்டாய் என்ற எண்ணத்தை ஓட்டிவிடு
உன் புன்னகையை இந்தப் பூமியில் கொட்டிவிடு


உன் அமைதியான அம்மா வானவிலோடு
உன் முரட்டு அண்ணன் மின்னலோடு
உன் கண்டிப்பான அப்பா இடியோடு
வந்துவிடு வந்துவிடு
இன்றே வந்துவிடு
எங்களுக்கு இன்பத்தைக் கொடுத்துவிடு!!

கவிதை என்றால்?

காலை நேரத்தில் தரையில்
போடும் கோலங்களும் கவிதை
மாலை நேரத்தில் மறையும்
சூரியனும் கவிதை
இரவு நேரத்தில் வானில்
பூக்கும் நட்சத்திரங்களும் கவிதை


காதலில் முளைக்கும் விதையும் கவிதை
கடலில் கிடைக்கும் முத்தும் கவிதை


மனித பார்வையில்
எது அழகாக தென்படுகிறதோ
அதை அழகு மொழியில்
தேன் பாட வைப்பதே
கவிதை!!

காதல் என்பது காவியமானால்...

காதல் உள்ளத்தில் தீட்டப்படும் ஓவியம்
சிலருக்கு அது வெறும் ஓவியம்
சிலருக்கோ அது பெருங்காவியம்


இனிக்கும் விருந்தாகத் தெரிந்த காதல்
கசக்கும் வேப்பங்கொழுந்தாக மாறுவதுண்டு!
காதலிக்கத் தெரிந்தவர்களுக்குக் காதல்
என்பது கடைசிவரைகூடவே வாழும் காவியம்
காதலிக்கத் தெரியாதவர்களுக்குக் காதல்
காற்றில் பறக்கவிடும் காகிதம்


என் காதல் வெற்றிப் பெற்ற காவியமாகியிருந்தால்
நான் வெறும் காதலியாகத்தான் இருந்திருப்பேன்
காவியம் தோற்றதனால்தான்
இன்று பலர் போற்றும் கவிஞர் ஆனேன்!!

happy new year

புது வருடத்தை நோக்கினேன்
தோழன் அனுப்பிய
நோக்கியா செல்போன்
குறுந்தகவல் வழி..


குறும்புத்தனமாக வாழ்ந்த
வாழ்க்கைக்கு ஒரு முட்டுக்கட்டை
குறிக்கோளுடன் எடுத்து
வைக்கப் போகிறேன் ஒவ்வொரு படிக்கட்டை


எனது அலட்சியங்கள்
இறந்தன போன வருடத்தில்
எனது இலட்சியங்கள்
பிறந்தன புது வருடத்தில்


கல்வியின் அடுத்த அத்தியாயத்தில்
வெற்றி பெற புறப்பட்டுவிட்டேன்
சாதிக்க முடியுமா என சிந்தித்தேன்
சிந்தினையில் விழந்தது இந்த கவி தேன்..

நேற்று இன்று நாளை

நேற்று என் தோழன்
இன்று என் காதலன்
நாளை யாரோ
ஒருத்திக்குக்
கணவன்!

ஏக்கம்

நான்கு வயது பிள்ளையை
முன்னால் நடக்கவிட்டு
அதன் மூன்று வயது தம்பியை
பக்கத்தில் நடக்கவிட்டு
கைகுழந்தையை கையில் தூக்கிக் கொண்டு
வயிற்றில் இன்னொரு குழந்தையைச் சுமந்து
சென்றவளைப் பார்த்து
மனவேதனை அடைந்தது
திருமணமாகி ஏழு வருடங்களாகியும்
குழந்தை பிறக்காத ஒருத்திக்கு!

பெண்

தரையில் போட்ட
கோலத்தை ரசித்தாள்
அன்றைய பெண்
திரையில் போடும்
' கோலங்களை' ரசிக்கிறாள்
இன்றைய பெண்!

கொல்லாதே

நான் ஒரு அகிம்சைவாதி
என்று சொல்லும் நீ,
ஏன்னடா
என்னை இப்படி
கொல்கிறாய்?

வெயில்

வீட்டைவிட்டு வெளியே வந்தேன்
காரணமில்லாமல்
பின் தொடர்ந்தது.
சரி போகட்டும் என விட்டுவிட்டேன்.

ஒரு நொடிகூட ஓய்வு எடுக்காமல்
என்னையே குறிவைத்தது.
நானும் பலியானேன்
மற்றவர்களோடு சேர்ந்து!


தப்பிக்க ஏதேதோ
செய்தோம்!
ஒன்றும் முடியவில்லை


எங்களை சுட்டு
எரித்தது
ஆகாயத்தின் துப்பாக்கி- "வெயில்"

காதல் ரயில்

தடம் புரளாத
காதல் இரயிலில்
இடம் மாறி கொள்கின்றன
இரு இதயங்கள்

ஐம்பூதக் காதல்

வானத்தில் வேகதடை இல்லாமல்
போகும்
காற்றின் வேகம்
என் காதலின் வேகம்


குளிர்கின்ற உடலுக்கு
நெருப்பின் வெப்பம் சுகும்
தவிக்கின்ற என் மனத்திற்கு
என் காதல் சுகும்


ஆகாயத்தில் பார்த்ததுண்டு
வானவில்லை
என் காதல் வானத்தில்
திடீரென்று
வந்தது தொல்லை


பூகம்பம் நேர்ந்தால்
பிளவுபடும் பூமி
என் காதல் இறந்தவுடன்
தேடிச் சென்று பார்த்தேன்
கோயிலில் சாமி


கோபத்தில் எல்லாவற்றையும்
சொல்ல நினைத்தேன்
கடவுளைக் கண்டதும்
கடகடவென்று வந்ததோ
வெறும் கண்ணீர்!!

எண்ணங்கள்

பலமுறை வேண்டி கொண்டேனே!
என் பிராத்தனைக்குப் பலன்
இவ்வளவுதானா?
நினைத்தது நடக்கவில்லை
நடந்ததை கனவில்கூட
நினைத்துப் பார்க்கவில்லை


இது எதை சோதிக்கிறது?
மனிதனின் அறிவை அல்ல
அவனுடைய அகத்தை..
எதுவாக இருந்தாலும்
ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவன்தான்
உண்மையான வெற்றியாளன்!


தோல்விகூட தொலைவில் நிற்கும் வெற்றிதான்!
கடந்துவந்த பாதை சோதனை காலம்
கடக்கபோகும் பாதை சாதனை காலம்
இன்று வீழ்ந்தவர்கள்
நாளை "வின்னர்கள்"!
அது மட்டும் நிச்சயம்


படித்தவன் வாங்கும் பட்டமும் காகிதம்தான்
படிக்காதவன் விடும் பட்டமும் காகிதம்தான்
காகிதம் நம்மை
நிர்ணயிக்கப் போவதில்லை
நீ யார்? என்ற கேள்விக்கு
உன் மனமே பதில்!


நான் சொல்லும் அனைத்தும் உண்மை
ஏன் என்றால்
ஜெயிச்சவன் சொல்லும் கருத்தைவிட
தோற்றவன் சொல்லும் கருத்தில்தான்
ஆழமான அர்த்தம் உண்டு
அது கல்வியாக இருந்தாலும் சரி
காதலாக இருந்தாலும் சரி!!

நான் நியூட்டனா? புத்தனா?

காதல் என்னும் மரத்தடியில்
நான் நியூட்டனா?
இல்லை
புத்தனா?


உன் கண்களில்
கண்டுப்பிடித்தேன்
என்னை இழுக்கும்
புவி ஈர்ப்பு சக்தியை
நேற்றுவரை நான் என்னைக்
குழந்தை என்று நினைத்தேன்
இன்றுதானே உன் கண்களில்
என் வயதை அறிந்தேன்


திடீரென்று என்ன நடந்தது
உனக்கு
என்னைப் பிடிக்கவில்லை
என்றாய்
அழுதேன்
புரண்டேன்
முடிவு எடுத்தேன்


காதல் என் மேல்
விழுந்தபோது
நியூட்டன் ஆனேன்
காதலன் என்னைவிட்டுப்
பிரிந்தபோது
புத்தன் ஆனேன்!!

ஒரு வருடம்

365 நாட்கள் கடந்த
சென்றுவிட்டன
எத்தனை அனுபவங்கள்
எத்தனை இன்பங்கள்
எத்தனை வலிகள்
எத்தனை சாதனைகள்
எத்தனை சோதனைகள்


வெற்றி கனிகளைச்
சுவைத்ததுண்டு
நாவில் மட்டுமே சுவை
மனதில் சுமை
வெளி இன்பங்கள் சில
உள் துன்பங்கள் பல


உறுதியாக நின்ற எனக்கு
கிடைத்த பெயரோ
பிடிவாதக்காரி!
ஆணவக்காரி!
அடங்காபிடாரி!


கேட்டபோது சிரிப்பு வந்தது
இவற்றைக் கூறியது யார் என
தெரிந்தபோது
அழுகை வந்தது!


விழி ஓரத்தில்
நீர்த்துளிகள்
துளிகளின் ஆழத்தில்
கிடைப்பதோ
அந்த ஒரு வருடம்!!

மலரும் நினைவுகள்

குதுகலமான வகுப்புகள்
கும்மாளமான நேரங்கள்
குஷியான விளையாட்டுகள்
குத்தடித்த ஆட்டங்கள்


எட்டிப் பார்த்தேன்
குவித்த கோப்பைகளை
ஆபிஸ் ஜன்னல் வழி.
உதட்டின் ஓரத்தில் ஒரு
புன்னகை,
கண்கள் ஓரத்தில் ஒரு
நீர்துளி.


அருகில் சென்று
கோப்பைகளைத் தொட்டுப்
பார்த்தேன்
வாங்கிய அடிகளின் ஞாபகம்
காதோரம் கேட்டுப்
பார்த்தேன்
கிடைத்த அவமானங்களின்
எதிரொலி


தூரம் நின்று
கோப்பைகளை ரசித்துப்
பார்த்தேன்
கண்களில் தெரிந்தன
குவிந்த பாராட்டுகளின்
காட்சிகள்
நெஞ்சில் பூத்தன
மலரும் நினைவுகளின்
சாட்சிகள்


அழுகை வரும்
சிரிப்பு வரும்
நினைத்துப் பார்த்தேன்
இரண்டுமே கலந்து வந்தது

கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்

மனம் என்னும் எனது
தோட்டத்தில்
காதல் என்னும் பூ
முதன்முதலாகப்
பூத்தது!!


விதையைப் போட்டவன் அவன்
விளைகிறது என் உள்ளத்தில்
இப்போது!
அந்த காதல் பூ மலர்கிறது
மணம் பரப்புகிறது!
நெஞ்சம் எல்லாம் காதல்
தென்றல்
வீசுகிறது!


ஜில்லென தென்றல் காற்று
மனதை
மெல்ல வருடுகிறது!
அய்யோ. . . . அதை எப்படி
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியும்?
அதை சொல்ல எந்த மொழியிலும்
வார்த்தைகள் கிடையாதே. . .


கடவுளின் விரல் எழுதிய
சிறுகதை
என் காதல் கதை.
அவனைப் படைத்த இவ்வுலகில்
என்னையும் படைத்த
கடவுளுக்கு நன்றி
சொல்கிறேன்!

காதல் வளர்த்தேன்

அந்த மூன்று எழுத்து
வார்த்தை
நெஞ்சில் புகுந்தது.
சொல்ல முடியாத இன்பம் !!


தொண்டைக்கும்
வயிற்றுக்கும்
உருவமில்லாத உருண்டை
உருளுதடி என்று
வைரமுத்துவின்
பாடலைப் கேட்டபோது
அர்த்தம் புரியவில்லை.
அனுபவபூர்வமாக
உணர்ந்தபோது
சுகம் தாங்கமுடியவில்லை!


காதல் நோயால்
தாக்கப்பட்டேன்!
நினைவு எல்லாம் அவன்.
உள்ளம் அவனை மட்டும்
சிந்திக்கிறது
உதடு அவன் பெயரை மட்டும்
உச்சரிக்கிறது.
ஏன் வந்தது? எப்படி வந்தது?
தெரியவில்லை!


புரிந்துகொண்டேன். . .
காதலுக்குக்
காரணமிருக்காது
அப்படி காரணம் இருந்தால்
அது
காதலாக இருக்காது!


காதல் என்னைப்
பைத்தியமாக்கியது.
அவன் மேல்
பைத்தியமாக்கியது.
அதிசயமாக இருந்தது.
காதல் எட்டாவது அதிசயமாகத்
தெரிந்தது.


என்னுள் உள்ள பெண்மையை
எனக்கே தெரியாமல்
எனக்கு அறிய வைத்தான்.
நாணத்தால் வெட்கப்பட்டேன்
என்னை அறியாமலேயே!!


என் இதயத்தைத் திருடியவன்
அவன்
தண்டனையை அனுபவிப்பவள்
நான்.
காதல் என்பது ஆயுள்
தண்டனையா?
இல்லை இல்லை
அது மரண தண்டனை!

தமிழன்

யாரும் செல்லாத வாழ்க்கை
பாதையில்
செல்ல அஞ்சுபவன் தமிழன்
குண்டு சட்டியில் குதிரை
ஓட்டுபவன்
இன்னும் அதே சட்டியில்தான்
குதிரை ஓட்டிக்
கொண்டிருக்கிறான்.


யாரும் போக முடியாது என்று
நினைத்த நிலாவில்
காலடி வைத்தான்
வெள்ளைக்காரன்
தமிழனோ நிலாவைப் பார்த்து
சோறு ஊட்டிக்
கொண்டிருக்கிறான்.
ஆகாயத்தில் வரும் நிலாவைக்


காட்டுவதற்குப் பதிலாக
இன்று
'அன்பே ஆருயிரே' நிலாவைக்
காட்டி
சோறு ஊட்டும் அளவிற்குத்
தமிழன்
“பின்னேறிவிட்டான்”!


ஆட்டுக்குட்டி தன் தாயை
“அம்மா”
என்று அழகாக அழைக்கிறது.
பச்சை தமிழனோ “மம்மீ ’
என்கிறான்.
மொத்தத்தில் தமிழன்
இன்னும் “தமிழனாக”வில்லை.

பெண் தேவதாஸ்

நாணயத்திற்கு இரு
பக்கங்கள்
என் காதலுக்கு ஒரே ஒரு
பக்கம்.
ஒரு தலை ராகம்
இல்லை இல்லை
தலையே இல்லாத ராகம்.


அறியாத வயதில்
புரியாத புதிர்
காதல்!


அது புதிர் அல்ல
அது ஒரு பயங்கர புதர்!


காதலர்கள் இறந்தாலும்
காதல் மட்டும் வாழும்
என்பார்கள்.


எனது காதல் கதையிலோ,
காதலியின் மனம்
மண்ணுக்குள் புதைந்த
கல்லறையாக
அவள் கண்ட காதல்
மண்ணில்
விழுந்த சில்லறையாக
அவள் நினைத்த காதலன்
நிம்மதியாக
அவளோ நிர்கதியாக....


வாழ்கிறேன் தாடி இல்லாத
பெண் தேவதாஸாக!

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்
நினைத்தேன்
ஆனால்
கசக்கிறதே

உடைந்தபோன கண்ணாடி

திரிந்தோம் நண்பர்களாய்
பிரிந்தோம் எதிரிகளாய்
தவறை எடுத்துக் கூறியது
தவறா?
உன் நலம் நினைத்துச்
சொன்னேன்
அதைக் குற்றம் என்று
சொன்னாய்
உடைந்து போனேன்
செய்யாத தவறுக்கு
நான் கேட்ட மன்னிப்புக்ள்
உதறப்பட்ட போது
சுக்குநூறாய் ஆனேன்
மனதில் ஊசி குத்திய வலி
கூடவே கண்ணீர்
இப்போதும் பார்க்கிறோம்
ஒரு புன்னகைக்குக் கூட உன்
உதடு மறுக்கிறது
நாட்கள் கடந்ததில்
காயம் மறைந்தது
ஆனால், வலிகள் மட்டும்
எப்போதும் என்னுடன்
மறப்போம் மன்னிப்போம்
எல்லாவற்றையும்
மறக்கிறேன்
உன்னையும் சேர்த்தே!!!!

அன்னை

வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்!!

மௌனத்தை கலைத்தேன்

சண்டை போட்டுக் கொண்டு
ஒரு வாரம் பேசாமல் இருந்தோம்
ஒரு வாரம் கழித்து
பார்க்கில் சந்தித்தோம்
மௌனமாய் புல் தரையை மூன்று
மணி நேரமாய் தடுவி கொண்டிருந்தாய்
மௌனமாய் நான் உன்னை மட்டும்
பார்த்து கொண்டிருந்தேன்.
"அட பேசுங்களேன்" என்று பரிதாபமாய்
கெஞ்சியது நம் காதல்.
சற்று உன் அருகே வந்தேன்
மௌனத்தை கலைத்தேன்
ஆசையாய் உன் கன்னத்தில்
இட்ட முத்தத்தால்....

கருவேப்பிலை

உன் வாழ்க்கைக்கு
மனம் சேர்க்கும்
காதலி நானோ
என்னை கருவேப்பிலையாய்
ஒதுக்குவது
ஏனோ!!

பட்டியல்

உலகம் என்னும் நாடகமேடையில்
வாழ்க்கை என்னும் நாடகத்தில்
நடித்துக் கொண்டிருக்கும்
ஒவ்வொருவரும் நடிகர் திலகம்
இதை அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
திண்டாடுகிறது இவ்வுலகம்!

போயிட்டு வறேன் மா

5 வயதில் முதன் முதலாக
பள்ளிக்கு போனபோது
இல்லாத பயம்
இப்போது வருகிறது
18 வயதில்
கல்லூரிக்கு போகும்போது...


விழிகள் 'திறக்க மாட்டேன்'
என்று அடம்பிடிக்கும்
காலை நேரம்,
நானும் அதுவும் போடும்
குட்டி சண்டை
ஜில்லென தண்ணீரில் குளியல்
அம்மா கொடுக்கும் காபியை
ருசித்து குடிக்க முடியாமல்
இரயிலுக்காக என்னை ஓடவைக்கிறது
என் கைகடிகாரம்!


கூட்டத்தில் முட்டி மோதினேன்
நிற்பதற்கே ஓர் இடம் பிடிக்க.
இரயில் பயணத்தின் முடிவில்
மீண்டும் பரபரப்பு
அடுத்த பேருந்து பயணத்திற்காக.
கூட்ட நேறிசலில் களைத்துபோனது
என் உடலும் மனமும்!


அவசர அவசரமாக
அறக்க பறக்க
அலை பாய்ந்தது நேரம்.
அலைந்தன எனது கால்கள்
ஒரு வகுப்பறையிலிருந்து
மற்றோன்றுக்கு!
காலச்சக்கரத்தில் சுழன்று
கொண்டிருக்கும் எனக்கு
சிரிக்கவும் நேரமில்லை
அழுகவும் நேரமில்லை.


சுமைகளை சுமந்து கொண்டு
இரவு வீடு திரும்பும்போது
என்னிடம் மிஞ்சி இருப்பதோ
கண்களில் சொக்கும் தூக்கம் மட்டும்தான்!
அடுத்த நாள் காலையில்
மீண்டும் அதே வாசகம்
"போயிட்டு வறேன் மா".


இரயில் பயணத்தில் ஆரம்பமானது
ஒரு வாழ்க்கை பயணம்...

நிதானம் வேண்டும்

புறப்படபோகும் பேருந்தில் ஏற,
தூரத்திலிருந்து அறக்க பறக்க ஓடி
வந்த இளைஞன்,
ஒரு நொடியில் அதில் ஏறும் வாய்ப்பை
நழுவ விட்டதுபோல்
மூச்சு வாங்கி நின்றது எனது காதல்!

காதல் கவிதை

வளர்ந்தபிறகு
வெட்டப்பட்டது
என் நகம் மட்டும் அல்ல
என் காதலும் தான்!

காதல் கனவு

காதல் ஒரு கனவு
என்று தெரியாமல்
பல நாட்கள் ரசித்தேன்


திடீரென்று ஒரு நாள்
விழித்துக் கொண்டேன்
கனவும் கலைந்தது
காதலும் கலைந்தது!


பொதுவாக கனவுகள்
நீண்ட நாள் மனதில்
நிற்பதில்லை.
ஏனோ அந்த கனவு மட்டும்
இன்றுவரை என்னைவிட்டு
பிரியவில்லை.


கல்வியில் நான் முதல் மாணவன்
காதலில் நான் இன்னும் மாணவன்!

கத்தி

மனதைச் சுற்றிவலைத்தன
நூறு கத்திகள்!
ஒவ்வொன்றும் குத்தியது
வெவ்வேறு பக்கமாய்
வழிந்தது இரத்தம் அல்ல
கண்ணீர்.
அது கத்தி அல்ல
நீ கடைசியாக என்னிடம்
கத்திய வார்த்தைகள்!

தோழிக்கு ஒரு கவிதை

இயக்குனர் இறைவனுடைய
புதிய கதை
உன் வாழ்க்கையின்
என்னொரு அழகிய
பக்கம்


கதாநாயகி நீயே
புதுமுகத்துடன்
கதாநாயகன் அவரோ
அறிமுகத்துடன்


கல்யாண வானில்
காதல் வானவில்
அன்பான நதியில்
அற்புதமான நீரோடை


உன் வாழ்க்கையில்
இனி சோலைவனம்
இனிமையான மலர்வனம்!

மழைத்துளியே

தானே விழுந்தது
என்னால் தடுக்க முடியவில்லை
என்மீது இருந்த
அந்த ஒரு நொடி சுகம் போதுமே,
என் இனிய மழைத்துளியே!!

என் நிழலே

இருட்டினில் எனக்கு
துணையாக இல்லாத நீ
வெளிச்சத்தில் மட்டும்
ஏன் என்னுடன்
இருக்கிறாய்?

புது மனசு

சாலையில்
தான் வாங்கிய
புது வாகனத்தை
ஓட்டிச் சென்றவன்
ஏளனமாகச் சிரித்தான்,
தெருவில் நடந்து
சென்று கொண்டிருப்பவர்களைப்
பார்த்து....

முயற்சி

"உங்கள் சாய்ஸ்" உமாவிடம்
பேச பல முறை
முயன்ற நான்,
"என் சாய்ஸ்" நீ
உன்னிடம் பேச
ஒரு முறைகூட
முயலவில்லையே!!

சங்கடம்

திருமண மேடையில்
பெண் தலை குனிந்து நின்றாள்
வெட்கத்தால் அல்ல
அவள் வரதட்சணையாக
அணிந்திருந்த
பத்து பவுன்
தங்க சங்கிலியால்....

அவள்

நேற்றுவரை
பாலைவனம்
இன்றுமுதல்
சோலைவனம் !

என் வாழ்வின்
இனிய நாள்!
பார்த்தோம்
பழகினோம்!
சிரித்தோம்
ரசித்தோம்!

வண்டுக்குப்
பூ அழகு!!
எனக்கு
அவள் மட்டுமே அழகு!

அவள் புன்னகைக்கு
மலர்களே மயங்கும்!
பார்வைக்கு சூரியனே
சுருண்டுவிடும்!


அவளுக்குள் ஒரு தாய்
அவளுக்குள் ஒரு தந்தை
அவளுக்குள் ஒரு சகோதரி


அவளே எல்லாம் எனக்கு
எனக்கு எல்லாம் அவளே


இனிய நினைவுகள்
பல கோடி!
அவளே என் உயிர்த்தோழி!

காதல் பேரிடர்

அன்பே நீ ஒரு கவி தேன்
உன்னை நான் கவிதையாய் கவித்தேன்!
என் மனதில் பெய்த காதல் மழை நீ
என் உடலைத் தாக்கிய காதல் புயல் நீ
என்னுள் எழுந்த காதல் எரிமலை நீ
என் உள்ளம் நடுக்கத்தால் ஏற்பட்ட காதல் பூகம்பம் நீ
மொத்தத்தில்
என்னை வேதனைப் படுத்திய காதல் பேரிடர் நீ!!!

குட்டி கவிதை

மனதில் பூசப்பட்டது குழப்ப சாயம்
எதோ எழுந்தது பருவ மாயம்
உள்ளத்தில் விழுந்தது காதல் தாயம்
சில நாட்களில் வந்தது மறையாத காயம்!

கண்டதாலும் கேட்டதாலும்

கண்டதாலும் கேட்டதாலும்
கற்றுக் கொண்டேன்
கல்வெட்டாக பதிந்த
வாழ்க்கை பாடங்களை


ஆனந்த கண்ணீராலும்
அவஸ்தை கண்ணீராலும்
அன்பான வார்த்தைகளாலும்
ஆத்திரமான வார்த்தைகளாலும்
அறிந்து கொண்டேன்


கண்டேன் வாழ்க்கை பாதையை
கேட்டேன் விதியின் பரதத்தை....

அழகிய அசுரா

அழிக்க போவது எதை?
உன்னிடம் இருக்கும்
கர்வத்தை


அளிக்க போவது எதை?
என்னிடம் இருக்கும்
இதயத்தை


அழகும் ஆணவமும்
கொட்டிக்கிடக்கும்
உன்னிடம்
நான் ஈர்க்கப்பட்டது எதனால்?


அதற்கு கீழே மறைந்துகிடக்கும்
யார்க்கும் தெரியாத உன்
உண்மையான உன்னதமான
உள்ளத்தைக் கண்டு......

சந்தனமா? சாக்கடையா?

ஒரு கூட்டுக் கிளியாக
வாழ்ந்தோம்
கூட்டிலிருந்து
பறவைகளாகப் பிரிந்தோம்!
பற்ற வைத்தனர் அந்நாளில்
பற்றிக் கொண்டு எரிகிறது
இந்நாள் வரை
ஏன்?


சிந்தித்தோம்! சாதித்தோம்!
ஆனால் யாருமே நம்பிக்கை
வைக்கவில்லை
மனம் உடைந்து போனது.


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கள்
அனைவரும் தாழ்வு
என்பதைப் புத்தக்கத்தில்
படித்தபோது
அர்த்தம் அறியவில்லை
அனுபவபூர்வமாக
உணர்ந்தபோது
வேதனை தாங்கமுடியவில்லை


விதியின் விளையாட்டு
என்பதா?
கடவுளின் கட்டளை என்பதா?
காலத்தின் கட்டாயம்
என்பதா?


பிரச்சனைக்கு மேல்
பிரச்சனை
உள்ளத்தில் காயங்கள் உண்டு
அதைநான் மறைக்கிறேன்
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க
வெளியே சிரிக்கிறேன்
ஆனால் உள்ளே அழுது
கொண்டிருக்கிறேன்


தூணாக இருக்க
வேண்டியவர்கள்
இன்று தூலாக
இருக்கின்றனர்!


வெளியே நின்று பார்த்தால்
சந்தனம்
உள்ளே புகுந்து பார்த்தால்
சாக்கடை


கடைசியில் என்ன ஆகும்?
காலமெல்லாம்
காத்திருக்கிறேன்
பதிலுக்காக...

Dec 21, 2006

என்ன இது?

5 வயதில்
முதன் முதலாகப்
பள்ளிக்குப் போகும்போது
தாத்தாவுடன் சென்றேன்


16 வயதில்
முதன் முதலாகக்
கல்லூரிக்குப் போகும்போது
அண்ணனுடன் சென்றேன்


21 வயதில்
முதன் முதலாக வேலைக்காகப்
போகும்போது
அப்பாவுடன் சென்றேன்


25 வயதில்
திருமணம் என்ற பந்தத்தில்
போகும்போது
யாரோ ஒருவனுடன்
செல்கிறேனே?


என்ன இது?

இன்பத்திலிருந்து துன்பம்

பாடத்தைப் படிக்க
ஆரம்பித்தால்
படிப்பு வருவில்லை
கவிதை வருகிறது


எல்லாவற்றையும் மறக்க
துடிக்கும் எனக்கு
நினைவு அலைகள்
என் மனம் என்னும்
கடற்கரையை
மீண்டும் மீண்டும்
தாக்குகின்றன


அலைகள் கொந்தளித்தால்
சுனாமி என்கிறார்கள்
மனம் கொந்தளிக்கின்றதே
இதை என்னவென்று சொல்வது?


செய்த தவறுக்கும் செய்யாத
தவறுக்கும்
மனச்சிறையில்
ஆயுள்தண்டனையை
அனுபவிக்கும் எனக்கு
விடுதலை உண்டோ?


இன்பமாக இருந்ததை எண்ணி
ஆச்சிரியப்பட்டேன்
கடைசியில்தானே புரிந்தது
இன்பம் என்னும் சொல்லில்
ஒரு எழுத்தை
மாற்றினால் அது துன்பமாக
மாறும் என்று
அந்த ஒரு எழுத்து என்
தலைஎழுத்து!

Farewell

கேலி செய்த கணக்கு
வாத்தியார்
முதன் முதலில்
அறிவுரை கூற
அவரைப் பற்றிய எண்ணம் மாற
அவர் சொன்ன ஒவ்வொரு
சொல்லும்
நெஞ்சை வருட
கண்ணீர் துளிகள் வழிய
அக்டோபர் 14 ஆம் தேதி
நடந்தது பிரியாவிடை


கல்லூரி வாழ்க்கை இதுதானோ!
குழந்தையாக நுழைந்த என்னை
குமரியாக மாற்றிய
கல்லூரிக்குச்
சொல்கிறேன் பிரியாவிடை
இரண்டு வருடங்கள் வாழ்க்கை
இரண்டு நொடிகள்போல்
மறைந்துவிட்டன
இதில் கற்ற வாழ்க்கை
பாடங்கள்
உயிர் நாடிக்குள்
கலந்துவிட்டன


கூத்தடித்த கூட்டங்கள்
இன்பமாகத் திரிந்த இளசுகள்
வெறும் கானல்நீர்!
கடைசி வரைக்கும்
உண்மையாக இருக்கும்
நண்பர்கள்
ஒரு சிலரே


வகுப்பாசிரியர் செய்த உதவி
உள்ளத்தில் நினைக்க
அவருக்காவது தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும்
என எண்ணம் மனதில் ஓட
நிற்கிறேன் கண்ணீருடன்


சொல்ல துடித்த காதல்
சொல்லப்படாத காதல்
ஒரு தலைராக காதல்
எனக்குள் பிறந்தே
எனக்குள் இறந்தது
என்னை மனிதனாக்க
காதல் தெய்வமாகியது
கல்லூரி கோயிலானது!


பிரிவு
இது முடிவுல்ல
இது அடுத்த அத்தியாயத்தின்
தொடக்கம்
கல்லூரி
அத்தியாயத்திற்குப்
பிரியாவிடை
இனி
கண்ட கனவுகளை நிறைவேற்ற
இன்னொரு தொடர்கதை


எல்லாவற்றையும்
நினைத்துப் பார்த்தேன்
வார்த்தைகள் மௌனமாகின
கண்ணீர் துளிகள்
சப்தமாகின.

Happy birthday priyan

அன்புள்ள விக்கிக்கு,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


உன்னைப் படைத்த அந்த
இறைவனுக்கு நன்றி
உன்னைப் எனக்கு அடையாளம்
காட்டிய நமது நட்புக்கு நன்றி!


அன்பைக் காட்டினாய் ஒரு சகோதரனாய்
ஆதரவாய் நின்றாய் ஒரு நண்பனாய்
அன்பின் சிகரமாய்
நட்புக்கு இலக்கணமாய்
நீ வந்தாய்!


பரிசுகள் வாங்க பணமில்லை
விலைமதிக்க முடியாத உன் அன்பிற்கு
விலைமதிப்பற்ற இந்த கவிதை உனக்கு!


பிரியமுடன்
தமிழ்மாங்கனி

Posted by தமிழ்மாங்கனி

Dowry

*வரதட்சணை*
விபச்சாரியிடம் பணத்தைக் கொடுக்கிறான்
பத்தினியிடம் பணத்தை வாங்குகிறான்!!