Showing posts with label விஜய் சேதுபதி. Show all posts
Showing posts with label விஜய் சேதுபதி. Show all posts

Apr 2, 2019

குறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்


குறியீடு சினிமா.



“பின்னாடி நிக்கிற ஆயம்மா வரைக்கும் நல்ல நடிக்கிறாங்க” இந்த சின்ன பையன் ஒவ்வொரு வார்த்தையும் புலங்காகிதம் அடைஞ்சு உணர்ச்சி போங்க பேசுறாரு.

அந்த 7வது காட்சில 5வது ஷாட்ல ஒரு பச்சை கலர் துணி ஏன் காத்துல ஆடுது தெரியுமா? இப்படினு ஆரம்பிச்சு குறியீடு, metaphor, வாழ்வின் ரகிசயம், அந்த பச்சை கலர்ல global warming பத்தி சொல்றாருனு சொல்லி என்னை போன்ற வெகுஜனங்ககிட்ட, தான் எவ்வளவு பெரிய அறிவு ஜீவி என காட்டி கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கு.

அது தான் சினிமா ரசிக்கும் அளவுகோல் என்றால் நான் சாதாரணமான ரசிகையாகவே இருந்துட்டு போயிடுறேன்.

குறீயிடு சினிமாவின் இன்னொரு அபத்தம் அபாயம் ஒன்னு இருக்கு. இதுக்கு முன்னாடி வந்த எந்த படமும் உருபடி இல்லை என சொல்ல வைப்பதே.

ஒரு மண்ணும் குறீயிடு இல்லாமல் ஜெயித்த “முதல் மரியாதை” படத்துல சிவாஜி ராதாவ பாத்து,

“உனக்கு வயசு இருக்கு. பொளப்ப கெடுத்துக்காத”னு சொல்லிட்டு நடந்து போகும்போது,
நான் தேம்பி தேம்பி அழுது இருக்கேன். அப்போ எனக்கு வயசு எட்டு தான். என்ன புரிஞ்சி இருக்கும் எனக்கு? இல்ல புரியாம தான் அழுதேனு தெரியல. ஆனா, “இந்த அங்கிளும் ஆண்ட்டியும் ஒன்னு சேரனும்” அப்படினு நினைச்சுது மட்டும் ஞாபகம் இருக்கு.

Plastic bagகளை தரையில் சிதறாமல் எடுத்த படம் தான் “மேற்கு தொடரச்சி மலை”. அதுல மலை ஏறும் ஒருவர் ஒரு சின்ன கல்லை எடுத்து பையில் போட்டு நடப்பார். அதுக்கு விளக்கம் கொடுக்கும்போது, “இந்த கல்லு தான் எங்க நம்பிக்கை. உயிரோடு மல உச்சிய அடையனும்னு இந்த மரத்த வேண்டிகிட்டு இந்த கல்ல இங்க போடுவோம்”

இக்காட்சிய பார்க்கும்போது என்னை அறியாமலேயே ஒரு மாதிரி போனது மனசு.

நான் பார்த்து ரசிக்கும் சினிமா என் மனசையும் அறிவையும் பக்குவப்படுத்தனும்.

“உனக்கு இது கூட தெரியலையானு” மத்தவங்கள புண்படுத்தகூடாது.
அப்படி தான் சினிமா எடுக்கனும்னா, எடுத்துக்கோ.

அப்படி தான் சினிமாவ ரசிக்கனும்னா, ரசிச்சிக்கோ.

குறியீடு சினிமா, எங்கள மஞ்ச துணில சுத்தி ரயில் வண்டில தூக்கிபோட்ட குழந்தையாகவே வாழ்ந்து கொள்கிறோம்.

Jan 15, 2017

பைரவா- எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு

அந்த காலத்துல கொத்தடிமைகளா வச்சு வேலை வாங்கி துன்புறத்தப்பட்ட தான் கூலி வேலை செஞ்சாங்க நிறைய பேர் . அது ரொம்பலாம் மாறல இன்னைக்கும். ஆபிஸுக்கு போய் பார்த்தா, நம்மள எப்படிலாம் டிசைன் டிசைனா டார்ச்சர் பண்ண முடியுமா அப்படி 'செஞ்சி' தான் வீட்டுக்கே அனுப்புறான். இப்படி தான் என்னை போன்ற பல கொடி மக்கள் வேலைக்கு போயிட்டு இருக்காங்க.

அப்பவும் சரி இப்பவும் சரி, நாங்க நிம்மதி தேடும் ஒரு சில விஷயங்களில் படம் பார்த்தும் ஒன்னு. ரெண்டு மணி நேரம் உலகத்தை மறந்து, சந்தோஷமா இருக்கனும். அந்த சந்தோஷம் என்பது வெறும் நாலு பாட்டு, கிரிக்கெட் மட்டை சண்டை, சைக்கிலில் பறந்தால் வந்திடும்னு நினைச்சா அது மிக பெரிய தப்பு. துரோகம்.

ரசிகர்களுக்காக தான் படம் பண்ணுறேன்- சொல்லும்  பாணியே முதல தப்பு. யார் ரசிகன்? உன் 100அடி கட்-அவுட்டுக்கு மாலை போட்டு, பால் அமிஷேகம் பண்ணி, நீ முதல் காட்சியில் slow motionல பறக்கும்போதோ, குதிக்கும்போதோ, பாயும்போதோ கத்துறானே அவனா?

அவன் நீ சேர்த்து வச்சுருக்கும் தொண்டன். அவ்வளவுதான்.

நான் ரசிகன். ரசிகன் வேற தொண்டன் வேற. நீ, ரசிகனுக்கு எப்போதுமே துரோகம் தான் பண்ணிக்கிட்டு இருக்கே.

சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் ஒரு கருத்த ஆணித்தரமா சொல்லியிருந்தார் - "இங்க படம் பார்க்கும் கூட்டம் வேற, படத்தை தயாரிக்கும் கூட்டம் வேற."

ரெண்டு பேருமே எதிர்ப்பார்ப்பது வேறு. தயாரிப்பாளனுக்கு மட்டும் படம் பண்ணா, இப்படி தான் இருக்கும்,தலைவா.

வாழ்க்கை ஒரு வட்டம்னு சொன்ன நீயே அந்த வட்டத்துக்குள்ள சிக்கி கஷ்டப்படுற, எங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்துற. typewriter கால பழைய கதை, யூகிக்க கூடிய திரைக்கதை, வலுவற்ற பாட்டு, அதையும் தாண்டி ஒரு விக்கு. இது தான் பைரவா!

மரண மாஸ் கதை தான் தனக்கு பலம்.

முப்பது வருஷமா கோலம் போட்டவங்க கூட எந்திரிச்சு போயிட்டாங்க, ஆனா இன்னும் அதே சைக்கிள்ல வர? இது மரண மாஸா?


கதை- ஆவூனா, மக்கள காப்பத்துறேன். ஊர காப்பத்துறேனு சொன்ன காலமெல்லாம் இருக்கட்டும் தலைவா. காப்பத்தியது எல்லாம் போதும். இப்போ உன் திறமை என்ன? இப்ப உள்ள காலகட்டதுக்கு படம் பண்ண ஏன் இவ்வளவு தயக்கம்? மக்களுக்கு படம் பண்ண வேண்டாம், அந்த மக்களில் ஒருவனாய் இருந்தால், என்ன பண்ணவ? அது மட்டும் போதும் என் போன்ற ரசிகனுக்கு.

பலம்- உன் பலமே உன் பலவீனமா போச்சு.

பைரவா படம் எனக்கு சுத்தமா பிடிக்காததற்கு காரணம் இயல்புதன்மை அற்ற ஒரு ஓட்டம். அனைத்து காட்சிகளுமே செட்-க்குள்ளே நடக்குது, சென்னையாக இருந்தாலும் சரி, திருநெல்வேலியாக இருந்தாலும் சரி. அதிலும் ஒரு பைக் காட்சி. ரேமோ படத்திலிருந்து டாக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பின்னாடி உட்கார்ந்து போகும் காட்சி. அதுகூட வெளிபுற காட்சியாக அமைக்க முடியாத ஒரு சூழல். உன்னைய வச்சு வெளிபுற காட்சி எடுக்க முடியாத ஒரு உயரத்தில் நீ இருக்க, தரையில் நடுக்கும் உண்மை நிலை உன் கண்ணுக்கு தெரியல.


பல பேட்டிகளில் விஜய் சட்டைய பத்தி பேச்சு. புள்ளி வச்சு சட்டையாம்?

விஜய் சூப்பரா காசை வச்சு கையில் வித்தை காட்டுறாரு- இது தான் நீ கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கும் விதமா?

"சிறப்பு...மிக சிறப்பு" 

அப்படி என்ன மாதிரி தான் படத்துல நடிக்கனும்?

1) துருவங்கள் பதினாறு- செம்ம படம் தலைவா!! உனக்கு பிடிச்ச போலீஸ் கதாபாத்திரம் தான். நிதானமா, திரைக்கதை அவ்வளவு புத்திசாலித்தனமா இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு கதையில் நீ தோன்ற வேணும்.  ஆனா தலைவா, இதலயும் போய் ரைம்ஸ் சொல்வேனு அடம்பிடிக்க கூடாது.


2) காதலும் கடந்து போகும்- உனக்கே உரிய காமெடி ரோல். ரொம்ப ரொம்ப சதாரணமான கதை. ஆனா, உனக்குள் இருக்கும் நடிகன் நிச்சயமா அனைவருக்கும் பிடித்திருக்கும். 

3) கொடி- ரெட்டை வேடத்தில் கலக்கியிருக்கலாம். இதுவும் கிராமத்தை காப்பத்தும் கதை தான். ஆனா, நிறைய சுவாரஸ்சியம் கலந்த கதை. தம்பியாகவும் அண்ணனாகவும் நடித்து கொடியை உச்சத்தில பறக்கவிட்டு இருக்கலாம்.

4) 24- அறிவியில் சார்ந்த கதை. குழந்தைகளுக்காக ஆட்டம் ஆடும் நீ, இதுல அறிவுபூர்வமா நிறைய விஷயங்களை உன்னை ரசிக்கும் குழந்தைகளுக்காக செய்து இருக்கலாம். 'புலி' குழந்தைகளுக்கான படம் இல்ல.

இப்படி ஏகப்பட்ட படங்களில் உன் அவதாரத்தை பார்க்க ஆவலா இருக்கேன்.


சமீபத்தில், தோழிகளுடன் பேசி கொண்டிருக்கும்போது உன் பேச்சு வந்துச்சு.

நான்: விஜய் பழைய மாதிரி படங்கள நடிக்கனும். you know...like ok kanmani!

தோழி: என்ன விளையாடுறீயா? living together relationshipல விஜ்யா?


இன்னோரு தோழி: கண்டிப்பா முடியாது! அதலாம் முடியாது.

நான்: டுல்கர் சல்மான் ரோல் பத்தி பேசுல. பிரகாஷ் ராஜ் ரோல நடிக்கலாம்னு சொல்றேன். 

ஆச்சிரியத்தில் வாய்பிளந்து தோழிகளுக்கு மயக்கம் வந்தது.



பைரவா படத்துல நீ , 'நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்ட்ட்ட்ட பழக்கம் என் கிட்ட இருக்கு!"

உன் உண்மை ரசிகையாய் எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு-

"இந்த மாதிரி படத்துல எப்படி விஜய்'னு இந்த உலகத்தையே ஆச்சிரியத்தில் முழ்கடிக்க வைக்கும் படத்தில் நீ நடிச்சுருவேனு நம்பிக்கையோட வாழ்றது"

Mar 20, 2016

கூடமேல கூட வச்சு பாடலை PARIS நகரத்தில் காட்சியமைக்கப்பட்டிருந்தால்......

இந்த வாரம் முழுக்க லீவு என்பதால் கிட்டதட்ட வாழ்க்கையையே facebookகிலும் youtubeலும் அர்பணித்துவிட்டேன். அதில் என்னை கவர்ந்த 3 வீடியோக்களின் தொகுப்பு தான் இது.

1) குறும்படம்: ஜீ-பூம்-பா

இயக்குனர் பாலாஜியே (காதலில் சொதப்புவது, மாரி படம் இயக்குனர்) இப்படத்தில் குறும்படத்தின் நாயகன். என்ன தான் கதைனா பார்த்தா?

அட இப்படம் short and sweet  என சொல்ல வைத்தது. வீட்டில் பார்த்த மாப்பிளையை காபிஷாப்பில் பார்க்கும் செல்கிறாள் நாயகி. அங்க என்ன நடக்குது தான் கதை. இதில் என்னொரு சுவாரஸ்சியம் என்னவென்றால், முழு நீள படத்தின் ஒரு காட்சியாம் இக்குறும்படம்! அப்படி செதுக்கி இருக்கார் இயக்குனர் விக்னெஷ் விஜய்குமார்.

2) கூடமேல கூட வச்சு பாடலை parisல் எடுத்திருந்தா....

தமிழ் சினிமாக்களில் வெளிநாட்டு படபிடிப்பு பாடல்கள் ரொம்ப சாதாரணமா போச்சு. ஆனா சில பாடல்கள் எந்த லொக்ஷ்னலில் எடுத்தாலும், அழகாக தான் இருக்கும். நாம் அனைவருக்கும் பிடித்த "கூட மேல கூட வச்சு" பாடலை, பாரிஸ்சில் வசிக்கும் இக்காதல் ஜோடி இப்பாடலுக்கு மேலும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த வீடியோ


3) குறும்படம்: husBANned.

செம்ம ஜாலியான ஒரு குறும்படம். கணவர்களின் கஷ்டங்களை புட்டு புட்டு வைக்கும் படம்.

எனக்கு பிடித்த வசனம்.

கணவர்: sunday வராத வாரம் இருக்கலாம். ஆனா சண்டையே வராத வாழ்க்கை கிடையாது.

அவரது நண்பன் (கல்யாணம் ஆக போகும் நண்பன்): செத்து போச்சு!

க: என்னது?

ந: உங்க sense of humor

க: அதான் married life!


Mar 19, 2016

நான் , விஜய் சேதுபதிய heavyயா லைக் பண்ண காரணம் என்ன?

ஏற்கனவே, விஜய் சேதுபதி (வி. சே) பத்தி தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் ல எழுதியிருக்கேன்.

  • வி.சே என்ற நடிகர் எப்போ எனக்கு தெரிய வந்தார். "thuru" குறும்படம் பார்த்த போது, எனக்குள் தோன்றியது "அட இவர் ரொம்ப நடிக்குறார் பா!"

அன்று சொன்னது போல் தான், முதலில் அவர் சிரிப்பு! புன்னகை.

ஏதோ ஒன்னு பண்ணது!


  • மக்களுக்கு பிடிச்ச மாதிரி....சரி சரி....எனக்கு பிடிச்ச மாதிரி திரையில் வரும் விஜய் சேதுபதி. நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் அவர் நடிக்கும் விதம் ஏதோ ஒன்னு பண்ணது! 


  • அவர் கொடுக்கும் பேட்டிகளிலும் சரி, அவரை பற்றி மற்றவர் பேசும்போதும் சரி, வி.சே ரொம்ப 'shy type' ஆளு. ஆனா, அந்த பழக்கத்தை மாற்ற தான் நடிக்க வந்ததாக சொன்னார்கள். இதுவும் இன்னொரு காரணம். basically i am a shy type girl என்பதால் வி.சே போன்றவர்களை ரொம்ப பிடிக்கும்.

  • வித்தியாசமான முக பாவனைகள். சமீபத்தில் வந்த காதலும் கடந்து போகும் படத்தில், இரண்டு காட்சிகளில் இதை பார்த்தேன்.
"ஏதா பண்ணுண்ணா!" என்று சொல்லும் modulation....க க க போ!! 




"நாயா?" என்று பதில் சொன்ன விதமும்.......ப்பா!!!!!!!!!



  • கூட மேல கூட வச்சு பாடல்:  இப்பாடல் யூடியுப்ல மட்டும் கிட்டதட்ட 55 லட்சம் வீயுஸ் கிடைச்சுருக்கு. அதில் பாதி என்னால தான் இருக்கும்னு நினைக்குறேன். ஏனா, இப்பாடலை எடிட்டு செய்தவரைவிட, நான் இப்பாடலை அதிக முறை பார்த்து இருப்பேன். இப்பாடலும் இன்னொரு காரணம்.

    வி.சே பிறந்த நாளுக்கு கவிதை கூட எழுதியிருக்கேன் பாருங்க....

    காட்டு தாடி உன் அழகில்லை
    சேட்டு பையன் கலர் இல்லை
    இருந்தும் கனவுகள் முழுதும் 
    நீ வராத நாள் இல்லை.

    நீ ம்ம் என்று சொல்லி பார்
    உன் கூடவே வருவேன்.
    என் எடை ஒத்துழைத்தால்
    அந்த கூடலூர் 
    கூடையில்கூட
    வருவேன்!