Dec 26, 2013

என்றென்றும் dhoom பிரியாணி இன் கல்யாண சமையல்



ஒரு மாதம் விடுமுறை முடிந்து நாளை வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்தாலே துக்கம் தொண்டையை அடைக்கிறது.

பரவாயில்ல விடுங்க!! என் சோகம் என்னோடு போகட்டும்!

1) கல்யாண சமையல் சாதம்.

இரண்டு மணி நேரத்தில் சொல்ல வந்த கதையை ஓரளவுக்கு வித்தியாசமாய் சொல்லியிருக்கிறார்கள்.

கப் சூப்பர், காபி சுமார் ரகம் தான் இந்த படம். கடைசியில் பீச் கல்யாணம், அப்பரம் நடுவே சறுக்கிய திரைக்கதை சுமார். ஆனால் சில நச் வசனங்களும், நடிகர்களின் தேர்வும், கதையும் வித்தியாசம்.

2) பிரியாணி.

யப்பா கார்த்தி!!!!!!!! கீழே விழுமா நல்ல படியாய் சுதாரிச்சுகிட்டு மேலே வந்துட்ட! வெரி குட்!! ஜாலியாய் போக படத்தில் வெங்கட்குரிய பாணியில் டிவிஸ்ட் கலந்த படம். வெங்கட் படம் என்பதால் அந்த டிவிஸ்ட்டே யூகிக்க முடிந்தது ஓரளவுக்கு.

இருந்தாலும், திரைக்கதை சுவாரஸிசயமாக போனது.
இருந்தாலும், இந்த கடைசி 20 நிமிடங்களுக்கும் டிவிஸ்ட்டை 'narration'  வழியே ரசிகர்களுக்கு சொல்வதை அடுத்த படத்தில் மாத்திக்கலாம்! visualலாய் காட்டினால் நல்லா இருக்கும்!

3) dhoom 3



என்னத்த சொல்ல? first day first show போய் பார்த்தேன்....
என்ன உண்மையில் நடந்தது என்றால்....

எடிட்டர்: டைரக்ட்டர் சார், படத்த எப்படி கட் பண்ணனும்?

இயக்குனர்: அமீர் பறக்குது. பைக் பறக்குது. பணம் பறக்குது. கத்ரீனா பறக்குது. அமிஷேக் பறக்குது. உதேய் சோப்ரா பறக்குது.

எடிட்டர்: சார் எல்லாத்தையும் சேர்த்தால் ஒரு மணி நேரம் தான் படம் போகும். நீங்க மூன்று மணி நேரம்னு சொன்னீங்க?

இயக்குனர்: ம்ம்ம்...எல்லாத்தையும் slow motionல போடு.

*dhoom machle dhoom machle*

4) என்றென்றும் புன்னகை

பார்த்த படங்களிலே எனக்கு பிடிச்ச படம். trailerல் காட்டிய சில காட்சிகளும் வசனங்களும் படத்தில் இல்லை. ரொம்ப நாளைக்கு அப்பரம் ரொம்ப அடிக்கி வாசித்து இருக்காரு சந்தானம். கதை புதுசு இல்ல. ஆனா காட்டிய விதம் ரசிக்கும்படி இருந்துச்சு. சில காமெடி வசனங்களும், இயல்பாய் வந்த வசனங்களும் அழகாய் இருந்துச்சு.

பசங்க அடிக்கடி 'கல்யாணம் பண்ணாதே' என்று சொல்லும்போது எல்லாம் பாவமாய் இருந்துச்சு:)))




இயக்குனர் மீது கோபம் எனக்கு,

அநியாயத்துக்கு திரிஷாவை அழகாய்
காட்டிவிட்டு
ஆண்ட்ரியாவுக்கு மொக்கை சீன் கொடுத்தமைக்கு!




Dec 24, 2013

2013 ஒரு அலசல்- துவைத்து காய போடலாம்!

2013 எப்படி போனுச்சு இவ்வுலகில்.....
அது சத்தியமா தெரியாது.

ஆனா என் 2013 எப்படி போனுச்சுன்னா....இப்படி தான்!



ரொம்ப நொந்த நிலைமை தான்! வேலை, வேலை வேலை.... ஷ்ஷ்ஷ்ப்பா!!!
வேலையை விட்டு விடலாம் என்று பார்த்தால், 'வாழ்க்கைல சோறு ரொம்ப முக்கியம்' என்பதால் முடியவில்லை! இருக்கும் விலைவாசிக்கு, பரதேசியாக இருக்க முடியாது பாருங்க.

வலைப்பூ பக்கமும் அதிகம் வர முடியவில்லை. காரணம் வேலை என்று ஒரு புரமாக இருந்தாலும். இந்த facebook, twitter, whatsapp ஆகியவை ரொம்ப ஊடுறுவி விட்டது வாழ்க்கையில். இவை விட்டு விலகி மறுபடியும் வலைப்பூ பக்கத்தில் நிறைய எழுத வேண்டும் என்பதே 2014 ஆண்டின் ஆசை.

கிட்டதட்ட twitter  பக்கம் போகவில்லை கடந்த 2 வாரமாய். கைபேசியில் இருந்து twitter applicationயை தூக்கிவிட்டேன். facebookயை அதே போல் செய்தேன். ஆனா, மறுபடியும் பதிவு இரக்கம் செய்துவிட்டேன். ப்ச்.. சரி விட்டு புடிப்போம்.



facebook பக்கம் மூலம் செய்திகள் தெரிந்தாலும், வர வர மத்தவங்க வாய் சும்மா இருப்பதில்லை. ஏதாச்சு அவங்க போட, அதுக்கு நம்ம பதில் சொல்ல....ஷ்ஷ்ஷ்ப்பாபா முடியல!

அப்பரம் whatsapp வந்த பிறகு, நல்ல தூங்க முடியவில்லை!!

ஆக 2014 ஆண்டில் நல்ல உறக்கம் வேண்டும் என்பதால், ஒரு முடிவு எடுத்துள்ளேன்.

வலைப்பூ பக்கத்தில் கடந்த சில பதிவுகள் எல்லாம் வெறும் சினிமா பத்தி தான். சுத்த ஃபோர் அடித்துவிட்டது. ஆக, அறிவுபூர்வமாக....

ஹிஹிஹிஹிஹிஹாஹாஹா...ஐயோ மச்சி, அறிவுபூர்வமாக என்றவுடன் எனக்கே சிரிப்பு தாங்கல! சரி சரி, எனக்கு அதலாம் வராது. எனக்கு வருவதை எழுத முற்படுகிறேன்.

ஆனா, இந்த facebook பக்கம் மட்டும் போக மாட்டேன்....

அப்பரம்....

கொஞ்சம் wait...கைபேசில ஏதோ facebook notification வந்து இருக்கு.

Dec 22, 2013

எனக்கு பிடித்த குறும்படம்-1

பிரியாணி எப்படி எல்லாருக்கும் சாப்பிட பிடிக்குமோ, அதே போல் இந்த 3 குறும்படங்கள் எனக்கு பிடித்திருந்தது.


1) அகவிழி

அழகான தமிழ் பெயர் கொண்ட ஒரு குறும்படம். என்னது ஆங்கில படம் போல் கொஞ்சம் புரியாம கதை போகுதே என்று நினைக்கலாம். இருந்தாலும் பார்ப்பவர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும் படம் என்பதால் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.


2) சரியா தவறா

முந்தைய படத்தில் இருக்கும் அதிகபடியான technical விஷயங்கள் இல்லாமல், ரொம்ப சாதாரண முறையில் எடுத்த ஒரு ரசிக்கும் படியான குறும்படம். நகைச்சுவையும் படத்தில் நடித்தவர்களின் நடிப்பும் சபாஷ்!!! குட்டி பையன் கலக்கிட்டான் போங்க!!!


3) crosstalk

படம் என்றால் பார்க்கனும். ஆனா, இது கேட்கும் படம்!!! visuals இல்லாமல் ஒரு படம். வசனங்களும், voice modulationலயும் கலக்கி இருக்காங்க!!!!